Loading

மித்ரா அமைதியாக அவனைப் பார்க்க.

 

“ப்ளீஸ்! ஓகே சொல்லு” என்று கண்களால் கெஞ்சினான். அதன் பிறகு ,அனைவரையும் பார்த்தவள்  “எனக்கு சம்மதம் “என்றாள் வாய் திறந்து. 

 

தேவ் ஆசைப்பட்டது போல் ஒரு வாரத்தில் நிச்சயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கடகடவென ஆரம்பித்தது..

 

  நிச்சயதார்த்தத்திற்கு பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை. நெருங்கிய ஒரு சில உறவினர்களை மட்டும் இரு பக்கமும் அழைத்து இருந்தார்கள். திருமணத்திற்கு அனைவரையும் அழைத்துக் கொள்ளலாம் என்று..

 

மித்ரா வீட்டில் சிம்பிளாக நிச்சயதார்த்த ஏற்பாடு நடைபெற்றது.. நல்ல நேரத்தில் தேவ் குடும்பமும் இங்கு வந்து இறங்கி இருக்க.

 

மஞ்சள் கலர் புடவையில் சிம்பிளாக ரியாவின் கைவண்ணத்தில்  இன்று மலர்ந்த ரோஜாவாக ஜொலித்தாள்..மித்ரா..நம் நாயகனின் ராட்சசி..இம்சை ராட்சசி..

 

அவளை பார்த்தவுடன் தேவுக்கு வானில் பறப்பது போன்ற உணர்வு..தினமும் அவளை புடவையில் தான் பார்க்கிறான்..ஆனால், இன்றோ ,அவளை பார்க்கும் பொழுது அவனது உடலில் வேதியல் மாற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை..அவனது ராட்சசி இதயத்தில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டு உள்ளுக்குள்  ஏதோ இம்சை செய்ய..

 

கண் எடுக்காமல் அவளை பார்வையால் வருடினான்.. தன் தம்பியின் தோளில் கை போட்ட வேலு தான்.. “ரொம்ப வழியுது துடைச்சிக்கோ.. நம்ப அப்பா,அம்மா … அவங்க அப்பா ,அம்மா இருக்காங்க.. அது இல்லாமல்,கொஞ்சம் சொந்த பந்தமும் இருக்கு , பார்த்துடா மானத்தை கப்பல் எத்திடாதா!” என்று வேறெங்கோ பார்த்து பேசுவது போல் கன்னத்தை தேய்த்தபடி அவன் சொல்ல ..

 

அதன் பிறகே.. சுற்றும் உணர்ந்தவன்..” சாரி” என்று  அசடு வழிய.

 

“போதும் !போதும்! பார்க்க சகிக்கல “என்று அவன் காலை வாரினான்..

 

இங்கு அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு சிரித்து பேசி கொண்டு இருக்க..

 

” மிஸ்! மிஸ்!” என்று குகன் மித்ராவின் பின்னாடியே சுற்ற…

 

“இன்னும்  என்னடா மிஸ்னு சொல்லிட்டு இருக்க, உன்னோட சித்தப்பாவை கல்யாணம் பண்ணிக்க போற ,அவளை சித்தின்னு கூப்பிடு” என்றார் சத்யா,

 

“சித்தியா?” என்று பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்..

 

“ஏன்?அப்புறம்  வேற எப்படி கூப்பிடுவ?”என்றார்.

 

அவன் தேவை பார்க்க ,”உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ? அப்படி கூப்பிடு!”என்றான் சிறு புன்னகையுடன் ..

 

மித்ராவை பார்த்தான் ..அவளும் கண் சிமிட்டி “உனக்கு எப்படி தோணுதோ ?அப்படி கூப்பிடு டா. ஸ்கூல்ல, கிளாஸ் ரூம்ல மட்டும் மிஸ்ணு கூப்பிட்டா போதும் !”

 

ஒரு சில நொடி கன்னத்தில் கை வைத்து யோசித்த பொடியன்.. “மிதுனு கூப்பிடவா ?”என்றான் குதூகலமாக..

 

அவளும் கண்சிமிட்டி சிரித்து அவன் நெற்றியோடு நெற்றி முட்டி கன்னத்தில் முத்தம் வைத்தவள்.. “ஓகே!” என்றாள்..

 

” என்னடி? பேர் சொல்லி கூப்பிட சொல்ற?”

 

” விடுமா! சின்ன பையன் தான அவன் அப்படி கூப்பிடறதால என்ன வந்துச்சு ?”

 

தனம் தான் முறைத்தார் ..”ஏற்கனவே என்ன, இவனை என்று தேவை கை காண்பித்தார்  பேர் சொல்லி கூப்பிடறது பத்தல இப்ப இதுவுமா?” ..

 

“அம்மா உன்னை எத்தனை வருஷமா கூப்பிடுறான் .இதுவரை அதுக்கு ஏதாவது அப்ஜக்ஷன் பண்ணியா? இப்போ இதுக்கு மட்டும் ஏன் ?”

 

“டேய் என்ன கூப்பிடுறது வேற .ஆனா,”..

 

” அப்போ என்ன தனியா பிரிச்சு பாக்கறீங்களா அத்தை” என்றாள் மித்ரா ..

 

” அப்படி சொல்லல மித்ரா..ஊர் உலகத்துல இருகவங்க தப்பா பேசுவாங்க!”

 

“இவ்வளவு நாள் யோசித்தீர்களா ?இல்ல தான ?அப்புறம் என்ன ?அவன் என்ன அப்படி கூப்பிடுவதில்  எனக்கு எதுவும் பிரச்சனை இல்லத்தை விடுங்க !”என்றாள்.

 

“சரி” என்று அமைதியானார்..

 

  இதய வடிவில் , உள்ளுக்குள்… ஒருவர் விரலை இன்னொருவர் பற்றி மோதிரம் மாற்றுவது போல, உள்ள மோதிரத்தை ரியாவும் ,வித்யாவும் தான் தேர்ந்தெடுத்து இருக்க.

 

அதை தான் இருவரும் மாற்றிக் கொண்டார்கள்.

 

தேவ் மோதிரம் போடுவதற்கு முன்பு ,ஒரு சில நொடி அவள் கண்களை உற்று நோக்கினான்.அவள் கண் மூடி திறக்க ,அவள் கையில் நடு விரலில் லேசாக அழுத்தம் கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டே போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் கண் அடித்தான்.

 

மித்ராவும் அவன் கையில் மோதிரத்தை போட்டுவிட்டு உள்ளங்கையில் லேசாக கிள்ளி இருக்க, துள்ளினான். சுற்றி இருப்பவர்கள்  “அவனை என்ன டா?” என்று கேட்க..அசடு வழிய,” ஒன்னும் இல்லை” என்றான்.

 

இவர்களின் சேட்டைகளை பார்த்துக் சிறியவர்கள் சிரித்து கொண்டார்கள்.

 

“டேய் ஒழுங்கா இங்க பாரு டா ” என்றான் வேலு சிரித்தமுகமாக..அவனது போனில் நிழற்படமாக எடுக்கப்பட்டது அவர்களின் சின்ன சின்ன செல்ல சீண்டல்கள் கூட..

 

 

ஒருவரை ஒருவர் மாற்றி கலாய்த்து கொண்டும், சிரிப்பும் ,கேலியுமாக நிச்சயதார்த்தம் இனிதே நல்லமுறையில் முடிந்தது.அன்றைய தினம் விழாவிற்கு வந்த உறவினர்களின் கூட்டமும் விழாவை சிறப்பித்து கொடுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கலைந்திருந்தது.. 

 

வீட்டு ஆட்கள் மட்டும் கூடி இருந்தார்கள். தேவ் குடும்பத்தினரும் கிளம்ப போக ,மதிய சாப்பாடு சாப்பிட்டு சாயங்காலமா பொறுமையா போகலாம் என்று கூறியிருந்தார்கள் மிதிறாவின் பெற்றவர்கள்..ஒரு சில நொடி யோசித்தவர்களும்” சரி “என்று சம்மதித்திருக்க , வெயில் தார மாலை போகலாம் என்று அங்கே இருந்து கொண்டார்கள். 

 

 

அப்போது ஆண்கள் அனைவரும் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, பெண்கள் வீட்டிற்குள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது, ரியா தான் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் ..தன்னுடைய சந்தேகத்தை வித்யாவிடம் கேட்டாள் .

 

“அக்கா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் தப்பா எடுத்துக்காதீங்க ?” 

 

அவளும் சிரித்துக் கொண்டே, “கேளு ரியா. ஏன் ?என்கிட்ட தேவ் இவ்வளவு க்ளோசா இருக்கான், அட்டாச்மென்ட்டா இருக்கான்னு கேட்கணுமா ?”என்றவுடன் ..

 

“அச்சோ அப்படி எல்லாம் இல்ல கா.. அதை ஏன் நான் கேட்க போறேன்” என்று சொல்லிக்கொண்டு இருக்க..அப்போது  அங்கு தனம் வந்தார்..

 

” என்னமா என்ன  பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி,

 

” இல்லத்தை நான் அக்கா கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் அதான்”

 

” என்னடி கேட்க போற ?”என்று கேட்டுக் கொண்டே,சத்யாவும் வந்து உட்கார,

 

” அ..அது “என்று ஒரு சில நொடி தயங்க ..

 

மித்ரா தான் ,”என்னடி உனக்கு சந்தேகம்? அமைதியா இரு” என்றாள். எங்கு வித்யாவின் மனம் சங்கடப்படும் படியாக ஏதாவது கேட்டு விடுவாளோ ?என்று பயந்து ,

 

“அப்படி என்ன ரியா உனக்கு சந்தேகம் ?” என்றாள் புன்னகை மாறாமல் வித்யா..

 

“இல்ல கா. உங்களுக்கும் ,மாமாவுக்கும் லவ் மேரேஜ் என்று தெரியும்.ஆன,இந்த நிச்சயத்துக்கு உங்க அப்பா, அம்மா யாருமே வரலையே? உங்க வீட்டுல ஒத்துக்கலையா ? இதுக்கு முன்னாடி நீங்க கல்யாணத்தை பத்தி பேச வரும்  போது ,தேவையில்லை. ஆனா, இப்போ என்கேஜ்மென்ட் தான இதுக்கு வந்திருக்கணும் இல்லையா? ஆனா ,அவங்க இல்லையே?” என்றவுடன்…..

 

வித்யாவுக்கு கண்கள் கலங்க.. தனம் அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டார். சத்யா எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, தன் மகளை முறைத்தார் .

 

“நான் என்னம்மா தப்பா கேட்டுட்டேன்”

 

” உன்கிட்ட சொல்லாம விட்டது என் தப்பு தான்டி. ஆனா, அதுக்கு இப்படித்தான் கேட்பியா ?”

 

“அண்ணி எதுக்கு இப்போ சின்ன புள்ள கிட்ட இப்படி பேசுறீங்க? அவளுக்கும் சொல்ல வேண்டியது நம்ப கடமை தானே!”என்றார் தனம்.

 

  மித்ரா ஒன்றும் தெரியாமல் முழித்தாள்.

 

“என்ன பிரச்சனை கா ?இன்னும் உங்க வீட்ல ஒத்துக்கலையா?..  சாரி நீங்க எதுவும் சொல்ல வேணாம் “என்றாள் வருத்தமாக ரியா.

 

தன் கண்களை துடைத்துக் கொண்டு “இல்ல ரியா சொல்லணும். ..அதுவும் முக்கியமா சொல்லியாகணும்.. மித்ராவுக்கும் தெரியணும். எப்படியும் இதுவரை தேவ் சொல்லி இருக்க மாட்டான்னு நினைக்கிறேன். இல்லன்னா, உனக்கு இந்த கேள்வி இப்ப  வந்திருக்காது இல்ல ,ஒருவேளை அவன் கல்யாணத்துக்கு அப்புறம் மித்ரா கிட்ட சொல்லலாம் என்று நினைச்சி இருக்கலாம்” என்றாள்.

 

ஒன்றும் புரியாத புதிராக இருக்க ரியாவும் ,மித்ராவும் குழப்பமாக வித்யாவை பார்த்தார்கள்.

 

தனம் தான் கூறுவதாக சொன்னார் .”இல்லத்தை நான் சொல்றேன்” என்று தன்னை சமன் செய்து கொண்டவள் ..நேராக உட்கார்ந்து கொண்டு தன் அத்தையின் கையை பிடித்துக் கொண்டு கூற ஆரம்பித்தாள்..

 

தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை ..”என்னோட அப்பா ,அம்மா இப்போ இல்ல ரியா”

 

” புரியல கா”.

 

தனம் தான் ,”அவங்க ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க”

 

” என்ன ?”என்றார்கள் அக்கா, தங்கை இருவரும் அதிர்ச்சியாக ..

 

“ஆமாம்” என்று வித்யா தலையாட்டியவள்.”குகனுக்கு 9 மாசம் இருக்கும்போது அவனுக்கு குலதெய்வக் கோவிலில் வைத்து காது குத்துறதுக்காக கிளம்பிட்டு இருந்தோம். எங்களுக்கு வீட்ல இருந்து கோவில் கொஞ்சம் பக்கம் என்றதால அத்தையும் ,மாமாவும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு ஆட்டோவில் கிளம்பிட்டாங்க.. தேவ் பைக்ல வரதா சொன்னான்.ஏதாவது பொருள் வாங்கணும்னா ஆத்திர அவசரத்துக்கு  பைக் தான் கரெக்டா இருக்கும்னு, நானும் அவரும் குகனை கூட்டிட்டு அப்பா,அம்மா கூட கார்ல வரதா இருந்துச்சு,அப்பா,அம்மா வீட்ல இருந்து கிளம்பி எங்களை அழைச்சிட்டு கார்ல கோயிலுக்கு போயிட்டு இருந்தோம். கொஞ்சம் கோவில் பக்கத்துல வந்துட்டோம்,அப்போ தம்பி(குகன்) ரொம்ப அழுதுட்டு இருந்தான், பசி வேற அவனுக்கு… கார்ல வச்சு என்னால ஃபீட் பண்ண முடியாது போக ,கீழே இறங்கி இருந்தேன். ஆனா ரொம்ப அழுதுட்டே இருந்ததால, அவரும் என் கூட கீழே இறங்கி வந்தாரு, ஒரு மரத்துக்கு அடியில தான் உட்கார்ந்து ஃபீட் பண்ணிட்டு இருந்தேன். அவரும் என் கூட நின்னு பேசிட்டு இருந்தாரு.. எங்களுக்கு கொஞ்சம் தள்ளி தான் கார் நிறுத்தி இருந்தோம். அப்பா ,அம்மா, தம்பி மூணு பேரும் காருக்குள்ள உட்க்கார்ந்து இருந்தாங்க.. பிரேக் பிடிக்காம, பின்னாடி ஒரு லாரி வர ,அந்த லாரி மோதி என்றவளுக்கு தொண்டை அடைத்தது.. வார்த்தை வராமல் தடுமாற.. கண்களும் கலங்கியது.. தனம் அவள் கையில் அழுத்தம் கொடுத்தவர்.. தான் கூற ஆரம்பித்தார் . அந்த லாரிக்காரன் கார்ல மோதிட ,அங்கவே மூணு பேரும் இறந்துட்டாங்க..”என்றார் அழுகையுடன்..சத்யா தன் மடியில் சாய்த்துக் கொண்டார் வித்யாவை.. தன் தாயை இருவரும் அதிர்ச்சியாக பார்க்க..

 

” இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் டி. ஏற்கனவே அண்ணியும் ,அண்ணனும் அன்னைக்கு வீட்டுக்கு பேச வந்த அன்னைக்கே நீங்க வெளியே தோட்டத்துல இருந்தப்ப சொல்லிட்டாங்க.. வேலு தம்பி தான் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லா விஷயத்தையும் எங்களுக்கு சொல்லணும்னு சொல்லி, சொல்லி இருக்காரு. ஆனா,மித்ரா கிட்ட நாங்க சொல்றதை விட மாப்ள சொன்னா கொஞ்சம் சரியா வரும்னு சொன்னாங்க..அதனால தான்  உங்க கிட்ட அன்னைக்கு சொல்லல..”  

 

அனைவரும் பேசி கொண்டு இருக்க..தேவ் குகனுக்கு தண்ணீர் எடுக்க வந்தவன். தன் அண்ணி அழுவதை பார்த்தவுடன்” என்ன ஆச்சு ?”என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர ..

 

அவளோ தன் கண்களை வேகமாக துடைத்து விட்டு ,”ஒன்னும் இல்ல தேவ்” என்று எழுந்து உட்கார,

 

” அம்மா என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் சற்று குரலை உயர்த்தி,

 

“ஒன்னும் இல்லடா அது” என்று அவர் சொல்ல ..

 

 

“ஒன்னும் வேணாம்”என்றவன் மித்ராவை முறைப்புடன் பார்த்துவிட்டு , “அண்ணி நீங்க எழுந்து  வாங்க” என்றான்.

 

“இல்லடா அது சும்மாதான் பேசிட்டு இருந்தோம்” என்று சொல்லும்போதே, 

 

சத்தம் கேட்டு அங்கு வந்து வேலு “உனக்கு என்னடா பொம்பளைங்க பேசிட்டு இருக்க இடத்தில் வேலை.வா டா வெளிய போகலாம்” என்று அழைத்தான். 

 

” கொஞ்சம் அமைதியா இருக்கியா?” என்று வேலுவை முறைத்தான் .. 

 

“நீங்க அவனை கூட்டிட்டு போங்க” என்றாள் வித்யா..

 

அவனும் வரமாட்டேன் என்பவனை கைபிடித்து இழுத்து கொண்டு சென்றான் ..

 

போகும்போது மித்ராவை தான் முறைத்து கொண்டு சென்றான் தேவ்.

 

மித்ரா தான் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். ‘இப்போது ,எதற்காக இவர் என்னை முறைத்துக் கொண்டே செல்கிறார்’ என்று எண்ணினாள் ஆனால் ஏன் என்று தான் அவளுக்கு புரியவில்லை.  ஆனால் ,அதன் பிறகு வித்யா சொல்வதில் கவனத்தை செலுத்தினாள். 

 

தனம் அதன் பிறகு நடந்ததை சொல்ல ஆரம்பித்தார். “வேலு தான் கோவிலில் இருந்த எங்களுக்கு போன் பண்ணி சொன்னான். நாங்களும் அடிச்சு பிடிச்சு வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்…ஆன,அங்க ஏற்கனவே உயிர் போயிடுச்சுன்னு சொன்னதுக்கு அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போனோம்.. வேலு தான் மூணு பேருக்கும் இறுதி காரியம் செய்தான். 

 

ஆனா, அப்போ வித்யா சுயநினைவில் இல்லை. தன்னோட அப்பா ,அம்மா ,தம்பி  இப்படி எல்லோரையும் ஒரே நேரத்தில் தன் கண் முன்னாடி பறிக்கொடுத்ததில் சுற்றி நடப்பது  எதுவும் தெரியாது இருந்தாள். அப்போதைக்கு அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று எண்ணி நாங்களும் விட்டு விட்டோம். 

 

இரண்டு நாட்கள் ஆகியது குகன் அழுவது கூட அவள் காதில் விழவில்லை அதைக் கூட அவள் உணரவில்லை.. அவ சோகத்தில் சாப்பிடல குழந்தைக்கு பசியாத்தனும் என்று சொல்லி நான் தான் இரண்டு நாட்கள் ஊட்டி விட்டேன். ஆனா நான் ஊட்டி விடுவதையும் உணராமல் ,சாப்பாட்டை கீழே துப்பினாள்.வேலு  குழந்தையா இருந்த குகனையும் , இப்படி சுத்தி நடக்குற எதுவுமே உணராமல் இருக்க தன்னோட பொண்டாட்டியையும் வச்சிட்டு ரொம்ப கஷ்டப்பட்டான் ..

 

மனசளவுல உடைஞ்சு போயிட்டான் வேலு.வேலைக்கு போகமா வீட்ல இருந்து ரெண்டு பேரையும் கவனிச்சான்… அவளுக்கு தேவையானதை நானும் கூட இருந்து பார்த்தேன். குழந்தை பசியாற்ற மட்டும் இவளிடம் அழைத்து சென்றேன். ஆனா இவள் சுயநினைவு இல்லாமல், குகனையும் தட்டி விட்டா.. 

 

பால் குடிக்காம அவன் பசியில ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்தான். குழந்தையோட அழுகுரல் கேட்டு கூட இவளிடம் கொஞ்சம் கூட மாற்றமில்லை..நானே பால்  கொடுக்க வசதியா எல்லாம் பண்ணி பால் குடிக்க வச்சாலும் பால் கிடைக்கல,அவன்  பசியில் துடிக்க இவ அதை உணராமல் இருக்கவும்,வேலு இவளை அடிச்சிட்டான் ஆற்றாமையில் ,

 

பெத்த புள்ள  பசியில அழுவது  கூட தெரியாத  அளவுக்கு அப்படி என்னடி ? என்று சொல்லி வேகமா அடிச்சிட்டான் .. அப்பவும் அவளிடம் அசைவு இல்லாமல் இருக்க , இரண்டாவது முறை அடிக்க கை ஓங்கும் போது தேவ் தான் அவளை அடிக்காத மாறி, இவன் கைய பிடிச்சுட்டு, நீ அண்ணியை மட்டும் பாரு . குகனை நான் பாத்துக்குறேன்னு சொன்னான்.. 

 

கண்ணு முன்னாடியே பெத்தவங்களை பறிகொடுத்ததால அதுல இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும் வேலு.. பத்து மாசம் கூட ஆகாத குகன் அழுவுறான்னு ஒரு அப்பனா நீ துடிக்கும் போது, 20, 25 வருஷம் கண்ணுல பொத்தி வளர்த்த பெத்தவங்களை ஒரே நேரத்துல மூணு பேரையும் பறிகொடுத்து இருக்காங்க.. சோ அவங்களோட வலி எந்த அளவுக்கு இருக்கும்..

 

அதுக்காக அண்ணி இப்படி இருக்கிறது  உனக்கு வலிக்கலைன்னு நான் சொல்லல.. இப்போ நீ அண்ணியை அடிச்சது கூட ஒரு அப்பனா குகன் அழுவுற ஆதங்கத்தில் மட்டும் இல்லைன்னு எனக்கு தெரியும். அண்ணியை அதிலிருந்து வெளியே கொண்டு வர நீ எவ்வளவு முயற்சி பண்ற என்பதை நானும் பாத்துட்டு தான் இருக்கேன். அண்ணியையும் பார்க்க முடியாம ,குகனையும் பார்க்க முடியாம தடுமாறுற.. முழுசா நீ அண்ணியை மட்டும் பாரு .குகனை என்கிட்ட ஒப்படைச்சிடு ..

 

“டேய் அவன் கை குழந்தைடா .”

 

“புரியுது அம்மா ,அப்பாவும் கூட இருக்காங்க.. நான் தனியா பார்க்க போறது இல்ல,நாங்க மூணு பேரும் அவனை பார்த்துக்கிறோம்.நீ  உன்னுடைய முழு கவனத்தையும் அண்ணி மேல மட்டும் வை . குகனோட பொறுப்பு இனி என்னோடது..

 

இப்போ முழுக்க முழுக்க அண்ணிக்கு உன்னோட சப்போர்ட் தான் தேவை.. உன்னோட அருகாமை தேவை..உன்னால மட்டும் தான் அவங்கள இதிலிருந்து கொண்டு வர முடியும்”..என்றான்..

 

அப்போ இருந்து இப்ப வரைக்கும் தேவ்  தான் குகனை பாத்துக்குறான்.. அதனாலதான் ரெண்டு பேருக்குள்ளேயும் அப்படி ஒரு பாசபிணைப்பு.. ஒன்பது மாச குழந்தையா அவன்  கைக்கு போனவன் ..இப்போ அவனுக்கு என்ன தேவைன்னாலும் முழுக்க முழுக்க தேவ் கிட்ட தான் போய் நிப்பான்.. அவனுக்கு என்ன வேணும் என்பதை அவன் வாய்விட்டு கேட்பதற்கு முன்பாகவே அவனுக்கு தேவையான அனைத்தையும் அவனது பார்வையில் உணர்ந்து அதை செய்து முடிப்பான். “

 

“அவனுக்கு மட்டும் இல்ல,எனக்கு என்ன தேவைன்றதையும் அவன்தான் பார்க்கிறான்”என்றாள் வித்யா இடை மறித்து.

 

வித்யா பேசுவது புரியாமல் அக்கா, தங்கை இருவரும் அவளைப் பார்த்தார்கள்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. தேவ் எல்லாம் சரி மித்ரா தெரியாது அவளை முறைக்கிறது டூ மச்