மித்ரா அதிர்ச்சியாக..”அப்பா!” என்க..
‘இவருக்கு தெரிஞ்சிருக்கு! அப்போ ஏன் வேற மாப்பிள்ளை பாக்குறாரு? அப்போ அப்பாக்கு தேவை பிடிக்கலையா?’ என்று மனதிற்குள் நினைத்தாள் ரியா ..
“ஆமாம் .உங்களை இதுக்கு முன்னாடியே ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து என் பிரண்டோட பையன் சொன்னேனே உனக்கு பேசணும்னு அவன் பார்த்து இருக்கான் ..அவன் தான் என்கிட்ட வந்து சொன்னான், அவங்க அப்பா கிட்ட கூட சொல்லல ,என்கிட்ட தான் சொன்னான் நேரடியா வந்து , மாமா மித்ராவையும், ரியாவையும் நான் மித்ரா வேலை செய்ற ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்க ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்தேன்.ஒரு பையனோட பேசிட்டு இருந்தாங்க, எனக்கு தெரிஞ்சி மித்ராவும் அந்த பையனும் விரும்புறாங்கன்னு நினைக்கிறேன். நான் அவங்க ரெண்டு பேரோட கண்ணுலையும் காதலை பார்த்தேன். ரியா சாதாரணமா பேசி சிரிச்சு பேசிட்டு இருந்தா, நீங்களே என்னன்னு பேசி சீக்கிரம் அந்த பையனை மித்ராவுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லி இருந்தான். அதனால தான்..” சரி” என்று நானும் நீயா சொல்லலை என்றால், ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்து, அவனை உனக்கு பேசி முடிக்கலாம் என்று இருக்கேன்னு சொன்னேன். அப்போவாது உன் விருப்பத்தை சொல்லுவ என்று, நான் நேத்தே உன்கிட்ட இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்த்தேன் மித்ரா”
“இ..இல்லப்பா அ..அது “.
“புரியுது. நீயா ஒரு நாள் டைம் எடுத்துக்கிட்டதும் ஏதோ காரணமா தானே!”
” அப்படி இல்லப்பா. நீங்க அன்னைக்கு கேட்டதும் உண்மை தானப்பா. நான் எனக்கானதை தைரியமா நான் பேசாதப்ப வேற யாரும் பேசிடவும் முடியாது. நான் பேசாம அமைதியா இருந்தா என் மேல சுமத்த படுற ஒவ்வொரு பழியும் உண்மையா ஆகிடும். இந்த இடத்தில் எனக்காக நான் தானே பேசணும். சப்போஸ் நீங்க இப்ப கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் நான் சொல்லும் போது, அவர் என்கிட்ட வாய் வார்த்தையா அவர் விருப்பத்தை சொல்லமா இருந்தா ,நீங்க என்கிட்ட இவ்வளவு கேக்கும்போது என்கிட்ட ஒரு தடுமாற்றம் இருந்திருக்கும் இல்லையா ப்பா.என் அப்பா கிட்ட என் வாழ்க்கையை பத்தி அதுவும் என் வாழ்க்கையோட முக்கியமான முடிவு பத்தி பேசும்போது எந்தவித தடுமாற்றமும் என்கிட்ட இருக்கக் கூடாது.. அப்படி தடுமாற்றம் இருந்தால் கோழையா ? அவளோட விருப்பத்தை பெத்தவங்க கிட்ட கூட சொல்ல முடியாத தைரியம் இல்லாத பொண்ணா வளர்த்து இருக்கோம் என்ற எண்ணம் உங்க மனசுல இப்போ இல்ல எப்பவும் இனி வர விட மாட்டேன்.. வரக்கூடாது ப்பா.. உங்க பொண்ணு எப்பவும் தைரியமா இருப்பா,எந்த தடுமாற்றம் இல்லாம நான் உங்க கிட்ட சொல்லணும்னா அவர்கிட்ட நான் முதல்ல இதை பத்தி பேசி இருக்கணும் இல்லையா ?அதனாலதான் இப்ப கூட அவர் வந்து பேசறதா சொன்னாரு! நான் தான் முதல்ல நான் பேசிட்டு சொல்றதா சொன்னேன்”
“சரி வந்து பேச சொல்லு”என்றார் பட்டென்று,
“அ..அப்பா. அவர் வீட்டில் இன்னும் அவர் சொல்லல என்று நினைக்கிறேன்”
சிரித்தவர்.” சரி பேசிட்டு வரட்டும்”.
” அப்பா உங்களுக்கு ஓகேவா?”இவ்வளவு நேரம் தைரியமாக பேசி விட்டாள். ஆனால், இப்போது சிறிது கலக்கமும் ,பதற்றமும் உண்டாகியது..
” இவ்வளவு பேசின பிறகு, என்னடி ஓகே வான்னு உங்க அப்பா கிட்ட கேட்டு நிக்கிற ?”என்றார் சத்யா.
“அம்மா உனக்கு”.
“எனக்கு உங்க சந்தோஷம் தாண்டி முக்கியம். இப்பவும் நீ எங்ககிட்ட சொல்லலைன்னு தாண்டி வருத்தம். மற்றபடி ஒன்னும் இல்லடி, என் புள்ளைங்கள தப்பா வளர்க்கல என்ற எண்ணம் எனக்கு இப்ப இல்ல எப்பவும் இருக்கும்” என்றவர் தன் இரு மகளையும் கட்டிக் கொண்டார்.
தேவ் தான் மாலை ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.
“என்னடா குட்டி போட்ட பூனை மாதிரி அலைஞ்சிட்டே இருக்க” என்றார் தனம்.
“என்னம்மா .இன்னைக்கு அண்ணி இன்னும் காணோம்”
” அவளுக்கு என்ன வேலையோ? எனக்கு மட்டும் எப்படிடா தெரியும்?”
” போன் பண்ணா போனை கூட எடுக்க மாட்றாங்க ?”என்று முனகி கொண்டிருந்தான் .
அப்பொழுது தான் வித்யா ,வேலு இருவரும் ஒன்றாகவே ஒன்றன்பின் ஒன்றாக அவர்களது வண்டியில் வந்து இறங்க.
” இவ்ளோ நேரம் எங்க அண்ணி போனீங்க? போன் பண்ணா கூட எடுக்க மாட்டீங்களா ?”என்றான் இருவரும் வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே வந்ததும் வராததுமாக ,
இருவரும் ஒன்றும் புரியாமல் , அவனை புருவ முடிச்சுடன் கேள்வியாக பார்த்தார்கள்.
ஸ்கூட்டி டிக்கியில் போன் வைத்திருந்ததாள் வித்யா.அதனால் போனை கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை.
வித்யா திரும்பி வேலுவை பார்க்க. அவன் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் தோல்களை குலுக்கினான் .
“என்னடா ?”என்று கேட்டுக் கொண்டே இருவரும் வர..
“அண்ணி கொஞ்சம் பேசணும்”என்றான் படபடப்பாக..
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“சரி நீ அவ கிட்ட பேசிட்டு இரு. நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன்” என்று வேலு தனது ரூமுக்குள் நுழைய போக .
“டேய் நீயும் தான். எல்லார்கிட்டயும் நான் பேசணும்! சீக்கிரம் வா என்றவன் வித்யாவின் புறம் திரும்பி நீங்களும் போய் பிரஷ் ஆகிட்டு வாங்க அண்ணி”என்றான்.
” சரி “என்று ரூமுக்குள் நுழைய,
வேலு இங்கிருந்து போன வேகத்தில் பாத்ரூமில் நுழைந்து இருந்தான். அவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வரவும்..வித்யா அடுத்த நொடி உள்ளே சென்று இருந்தாள்.
இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வர,
குகனின் அருகில் உட்கார்ந்து அவனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு, “அப்படி என்ன டா விஷயம் ?”என்றான் வேலு தன் மகனிடம்…
உதட்டை பிதுக்கியவன்..” எனக்கு தெரியல ப்பா” என்றான்.
“என்கிட்ட மட்டும் எதும் சொல்லிடாதீங்க. நீயும் அவனும் உங்க அம்மா கிட்ட தானே எல்லாத்தையும் முதல்ல சொல்லுவீங்க? நான் கேட்டா வாயை திறந்துடாதீங்க ,அவன் கூட தான சுத்துவ உனக்கா தெரியாது?”என்று அவன் தலையில் கொட்ட ..
“தேவ் “என்றான் வேகமாக..
“பாவி மகனே இப்ப கூட தேவாம்” என்று முனக..
“இப்போ எதுக்குடா அவனை நெண்டிக்கிட்டு இருக்க?” என்று முறைத்தான் தேவ் வேலுவை ..
“அண்ணி வாங்க” என்று வித்யா கையை பிடித்துக் கொண்டு வந்து உட்கார வைத்தவன்.. அவள் மடியில் படுத்துக்கொள்ள,
அவள் அமைதியாக அவனை பார்க்க.
அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்தான். அவளும் மெதுவாக தலையை வருடி விட …
“என்னடா விஷயம் ?” என்றான் வேலு முந்திக்கொண்டு,
அவனை முறைத்து விட்டு ,தனது அண்ணியின் முகத்தை பார்த்தான் .அவளும் கண் மூடி திறக்க,
” நான் ராங்கி கிட்ட என்னோட மனச வெளிப்படுத்திட்டேன் அண்ணி. எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்றான் புன் சிரிப்புடன்..
அவள் கண்கள் மென்னியது.. அவளது சந்தோஷம் கண்களில் வெளிப்பட்டது ..ஆனால் வாய் திறக்கவில்லை.
வேலு உட்கார்ந்த இடத்திலிருந்து “ஹேய்!”என்று எகிறி குதித்த படி..
” என்னடா சொல்ற ? உன்னோட லவ் சொல்லிட்டியா ?ப்ரொபோஸ் பண்ணிட்டியா ?” என்றான் குதூகலமாக.
தனது பெரிய மகனை எழில் ,தனம் இருவரும் முறைக்க.
தலையை சொரிந்த படி,” சாரிப்பா” என்று உட்கார்ந்து கொண்டான்.
தேவ் தனது அப்பா ,அம்மாவை பார்க்க ,இருவரும் அவன் கூற வருவதை கேட்பதற்கு அமைதியாக இருந்தார்கள்.
வேலு தான் பொறுக்க மாட்டாமல்,”பதில் சொல்லுடா ?” என்று குதித்தான்.
” கொஞ்ச நேரம் அமைதியா இருங்க! சொல்லிட்டு தானே இருக்கான்” என்ற வித்யா அவனது தலையை கோதியபடி அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.
மாலை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒரு சில விஷயங்களை மட்டும் மறைத்து மேலோட்டமாக சொல்ல..
“இப்போ நம்ம அவங்க வீட்ல போய் பேசலாமா டா?”என்றார் வேகமாக தனம்.
தன் தாயின் கேள்வியில், வித்யா மடியில் இருந்து எழுந்தவன் தனது அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து அவர் கையை பிடித்து,
“அப்பா. நான் தப்பு பண்றேன்னு நினைக்கிறீங்களா ? உங்க வளர்ப்பு “என்று அவன் பேசும்போதே,
அவனது கையில் அழுத்தம் கொடுத்து,” நீ தப்பு பண்ணுவன்னு நாங்க இப்போ இல்ல.எப்பயும் சொல்ல மாட்டோம் தேவ். எங்களுக்கு உன்ன பத்தி தெரியாதா? நாங்க பெத்தவங்கடா எங்களுக்கு எங்க பையனை தெரியும். ஆனா,உன் கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்குனு உன் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.அவளுக்கு மட்டும் இல்ல எங்க எல்லாருக்குமே கஷ்டம்தான். உன் வயசுல இருக்க எல்லாருக்கும் குழந்தை குட்டி இருக்குடா ,உன் ஃப்ரண்ட்சையே எடுத்துக்கோ “என்றவர் அமைதியாக இருக்க.
தன் தாயைப் பார்த்தான். அவரோ கண்கள் கலங்க உட்கார்ந்து இருக்க ,
“தனம் !”என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“போடா! நானும் எத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன். ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்றியா?”என்றார் மனக்குமுறலாக,
“நானே இன்னைக்கு தானே தனம் ராங்கி “என்றவன்.. அந்த வார்த்தையை நிறுத்தி, அந்த பொண்ணு கிட்ட சொன்னேன்” என்றான்.
” இன்னும் என்ன டா.. அந்த பொண்ணு ,இந்த பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு இருக்க.. சரி, நம்ம அவங்க வீட்ல போய் பேசலாமா ?நாளைக்கு “என்றார் கண்கள் மின்ன.
எழில் தான்” தனம் என்ன பண்ற?”.
” இல்லங்க .அது”
” அதுக்குன்னு அவசர அவசரமா வா கொஞ்சம் பொறு”.
” இன்னும் என்னங்க “
” நம்ம சட்டு புட்டுட்டுனு போய் நிக்க முடியாது தனம். அந்த பொண்ணு அவங்க வீட்ல பேசணும் இல்ல. அப்புறம் அவங்க அப்பா ,அம்மாவுக்கு நம்மளோட வளர்ப்பு தப்போ என்ற பயம் வந்துரும். நாம சொல்லாம கொள்ளாம போய் அவங்க வீட்டுல நின்னுட்டா .அந்த பொண்ணு அவங்க வீட்ல பேசிட்டு சொல்லட்டும். எப்படியும் இவன் கிட்ட பேசி இருக்கிறது வச்சு பார்த்தா வீட்டுல இன்னைக்கு பேசிடும்னு நினைக்கிறேன். நம்ம ஒரு நல்ல நாள் பார்த்து போகலாம். அப்படி இல்லனாலும் ,வர ஞாயிற்றுக்கிழமை போகலாம். அப்பதான் அவங்க வீட்டுல எல்லாரும் இருக்க மாதிரி இருக்கும்.நமக்கும் சௌகரியப்படும் மூன்று பேருமே இங்க வேலைக்கு போறாங்க, அங்க எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணோட தங்கச்சியும் படிக்கிற மாதிரி இருக்கு, அந்த பொண்ணு நம்ப குகனுக்கு டீச்சர் அதுவும் வேலைக்கு போகுது. அவங்க அப்பாவும் எப்படியும் வேலைக்கு போவாங்க, அந்த அம்மா தெரியல? அதனால நம்ம ஏன் ஒர்க்கிங் டேஸ்ல போயிட்டு, லீவ் நாள் பாத்து போவோம், அதான் எல்லாருக்கும் வசதியா இருக்கும், முதல்ல அந்த பொண்ணு அவங்க வீட்ல பேசட்டும்”என்றார்.
வித்யா ,வேலு இருவருக்குமே அதுதான் சரி என்று பட ,
“ஆமாம் அத்தை. இப்ப உடனே வேணாம். அவ பர்ஸ்ட் அவங்க வீட்ல பேசட்டுமே” என்றாள் வித்யா.
” சரி “என்றவர் ஒரு மனதாக ஒற்றுக்கொள்ள.
” அப்புறம் ஏன் அத்தை ஒரு மாதிரி இருக்கீங்க? அவன் தான் அவகிட்ட இவனோட விருப்பத்தையும் சொல்லிட்டான்ல அப்புறம் என்ன ?”
“சொல்லிட்டான் தான் .ஆன இப்போ வரை எனக்கு அவன் அந்த பொண்ணோட மூஞ்சிய காட்டலையே?” என்றார் சோகமாக..
வேலு சிரித்து விட்டான். பிறகு, “எனக்கு கூட தான் அவன் ராங்கி போட்டோவை காட்டல ?”
வித்யா, தேவ் இருவரும் முறைக்க ,குகனும் “அப்பா எங்க மிஸ்ஸை ராங்கினு சொல்லாதீங்க?” என்றான்.
“பாரு டா.. வரதுக்கு முன்னாடியே ராங்கிக்கு இந்த வீட்ல இவ்ளோ சப்போர்ட் “என்று புன்னகைத்தான்.
தேவும்,புன்னகையுடன்.. “என்கிட்ட அவ போட்டோ இல்லம்மா. ஆனா “என்று தனது போனை எடுத்து கேலரியை ஓபன் செய்து ,ஒரு போட்டோவை காட்டி சுடிதார் போட்டு இருக்கிறது அவளோட தங்கச்சி பேரு பிரியா.புடவை கட்டி இருக்கிறது தான் அவ “என்றான்.
தனம், தனக்கு இரண்டாவது மருமகளாக வர போறவளை கண் இமைக்காது ஒரு சில நொடி பார்க்க.
” என்னத்தை உங்க மருமக நல்லா இருக்காளா ?”என்று வித்யா புன்னகைத்தபடி தலைசாய்த்து கேட்க..
“நீ நேர்லயே பார்த்துட்ட தானே! என்றவர்..அவ மட்டும் இல்ல, நீயும் என்னோட மருமக தான். ரெண்டு பேரும் எனக்கு மக மாதிரி தான்” என்று அவளை கன்னம் வழித்து நெற்றி முறித்தவர். தன் கணவனிடம் காட்ட ..
அவரும் அமைதியாக பார்த்துவிட்டு கொடுக்க. வேலு வேகமாக வந்து பிடுங்க. அவன் கையில் இருந்து போனை உறுவியவன் ..
“ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கலாம்” என்றான் வேகமாக..
“நாளைக்கு நான் என் பையனை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் அப்ப நேர்ல பார்ப்பேன் டா அப்போ என்ன பண்ணுவ?” என்றான் புன்னகையுடன்..
தேவ் வேலுவை முறைக்க.
வித்யாவோ, “என்னங்க இப்போ தான் சின்ன பிள்ளைன்னு நினைப்பா” என்று பற்களை கடித்த படி கேட்க..
” சரி! போடா சீன் போடாதீங்க! சோறு போடுவீங்களா ?மாட்டீங்களா ?ஏற்கனவே நேரமாச்சு “என்று வயிற்றை தடவினான்..
உண்மையாகவே அவனுக்கு பசி தான். “சாரி..இருங்க!” என்று அவள் வேகமாக கிச்சனுக்குள் நுழைய போக..
“வித்யா இவனும் குட்டி போட்ட பூனை போல உன்ன தேடி அலைஞ்சான்..உன்ன எப்படியும் நகர விட மாட்டான்னு தெரியும்.நீயும் வரதுக்கு லேட் ஆனதால், நானே எல்லா வேலையும் முடிச்சுட்டேன்.வந்து உட்காருங்க சாப்பிடலாம் “என்று அனைத்து உணவு பதார்த்தங்களையும் எடுத்துக் கொண்டு வந்து வைக்க.
சாப்பிட்டுவிட்டு தேவ் குகனுடன் ரூமுக்கு சென்று இருந்தான். குகனை படிக்க வைத்து கொண்டிருக்க .
அப்போது அவன் போன் அலறியது.ரியா தான் போன் செய்திருந்தாள். வேகமாக அட்டென்ட் பண்ணியவன்.
” சொல்லு ரியா?”என்றான் ஆர்வமாக..
அவளும் வீட்டில் நடந்ததை சொல்ல..
“என்ன சொல்லுற? உங்க அப்பா அம்மா எதுவும் சொல்லலையா ?ஓகே சொல்லிட்டாங்களா?”என்று கேட்டான் சந்தோஷமாக,
“ஆமாம் தேவ்” என்று அவளும் புன்னகையுடன் குதுகலிக்க….
“இப்போ அவ எங்க ?”
“அவ கிச்சன்ல இருக்கா”
” ஓ! சரி சரி பரவால்ல என் ராங்கி இவ்வளவு தைரியமா பேசிட்டா பாரேன்” என்று சிலாக்கித்தான்.
“தேவ்! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நீ அவளுக்கு செல்லமா பெயர் வச்சிருக்க மாதிரி அவளும் உனக்கு செல்லமா ஒரு பேரு வச்சு இருக்கா”
“என்ன?”என்றான் இன்ப அதிர்வாக.. மனதிற்குள் மென் சாரல் வீச ..
“ஆமாம் தேவ்! எனக்கும் தெரியும் !எனக்கும் தெரியும்!” என்று இங்கு குகன் குதுகலித்தான்.
“என்னடா சொல்ற ?குள்ள வாண்டு.நீ என்கிட்ட சொல்லவே இல்ல?”
” மறந்துட்டேன் தேவ். உனக்கு ஃபீவர் இருந்திச்சில்ல, அன்னைக்கு தான் எனக்கே தெரியும் “
“எப்படிடா ? சரி என்ன பேர் சொல்லு”
” நான் தான் சொல்லுவேன் , நான் தான் சொல்லுவேன் “என்று இருவரும் போட்டி போட,
“யாரோ ஒருத்தவங்க சொல்லுங்க? ரெண்டு பேரும் எதுக்கு இப்போ போட்டி போட்டுட்டு இருக்கீங்க ?”..
“மிஸ் போன்ல உன் நம்பர “என்று இங்கு குகன் சொல்ல… “வசியக்காரன் “என்றாள் வேகமாக ரியா.
“நானு”என்று உதட்டை வளைத்து அழும் குரலில் குகன் சொல்ல..
“சரி விடு டா குகன் குட்டி.. நீ சொன்னா என்ன? நான் சொன்னா என்ன ? உங்க மிஸ் அப்படித்தானே சேவ் பண்ணி வச்சிருக்காங்க “என்று சிரித்தாள்.
“என்ன ?” என்றான் ஆனந்த அதிர்ச்சியாக ..அந்த பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி பார்த்தான்…வசியகாரன்..
“ரியா உனக்கு ஒன்னு தெரியுமா?” என்றான் குகன்..
” என்னடா?”
” எங்க மிஸ் மட்டும் இல்ல. தேவும் மிஸ்சோட நம்பர வேற மாதிரி தான் சேவ் பண்ணி இருக்கு”
“என்ன ராங்கினா டா “
“இல்ல இல்ல அது “…
“சொல்லுடா “என்றாள்.
“டேய்! வாய மூடுடா! என்று அவனை அடக்கியவன்..” எப்படா பார்த்த”என்றான் ஹஸ்கி குரலில்,
“உனக்கு ஃபீவர் இருந்தப்ப தான். உன் போன் அடிச்சிட்டே இருந்துச்சா? லைட் எரிஞ்சு எரிஞ்சு ஆஃப் ஆச்சு அதான் பார்த்தேன். அப்போதான்”
“குகன்..சொல்லு டா..பேச்சையே காணோம்” என்றாள் ரியா.
“வேணாம். கம்முனு இருடா”என்று கெஞ்சினான்..தேவ்
“இல்ல நான் சொல்லுவேன்” என்று குதுகலித்தவன்..
“ரியா என்ன பேர் கேட்க மாட்டியா?”
“டேய் ! நான் ரொம்ப நேரமா கேட்கிறேன். நீ தான் இன்னும் சொல்லல.. சொல்லுடா ?” ..
அவனோ, புன்னகையுடன் “ராட்சசி “என்றான் வேகமாக..
“என்ன?” என்ற குரலுடன்.. “யாரு டா ராட்சசி “என்று கேட்டுக்கொண்டே மித்ரா ரூமுக்குள் நுழைந்து இருந்தாள்.
இங்கு தேவும் ஃபோன் ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருந்தான். அங்கு ரியாவும் போன் ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டிருக்க, குகன் சொன்ன ராட்சசி என்ற வார்த்தையை கேட்டவள்.. வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள்..
திரும்பவும்..”யார் டா ராட்சசி”என்று கேட்க..
குகன் வாய் பொத்தி சிரித்தான்.. ரியாவும் சிரிக்க..
“தேவ்..என்ன இது? யாரு ராட்சசி நானா ராட்சசி” என்று பொங்கினாள்.
“ஆமா நீ தான் ராட்சசி “என்றான் அவனும் மென் புன்னகையுடன் சட்டென்று,
“தேவ்”…
“ஆமா.. நீதான் ராட்சசி என்ன தினமும் தூங்க விடாம, எந்த வேலையும் செய்ய விடாமல் இம்சை பண்ற ,என்னுடைய இம்சை ராட்சசி”என்றான் குரலிலும் ஆனந்தத்தை தேக்கி,
அழகு.