Loading

தேவ் குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்து இருந்தான்.

 

மேக்சிமம் குகனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்டான். விசிங் ப்ராப்ளம் இருப்பதால், கூலிங்கான பொருட்களையும் பெரிதாக வாங்கி தர மாட்டான்.பார்த்து பார்த்து தான் எதுவும் வாங்கித் தருவான். ஆனால், இன்று அவன் அடம் பிடித்ததற்காகவும், ரியா கேட்டுக் கொண்டதற்காகவும் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்ததை நினைத்து உள்ளுக்குள் குற்ற உணர்வாக இருக்க, அமைதியாக இருந்தான்.

 

” என்னடா அமைதியா இருக்க?” என்றாள் வித்யா.

 

” இல்ல  அண்ணி” என்று அவன் ஏதோ சொல்ல வர..

 

அவன் காலை மிதித்த குகன் “வேண்டாம் “என்று தலையாட்டினான்.

 

அவனை முறைத்து விட்டு வித்யாவை பார்த்தான்.

 

” சரிடா போய்  பிரஷ் ஆகுங்க, வந்தவுடனே, இவர் நிக்க வச்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார் “என்றாள்.

 

” சரி “என்றான்.

 

வேலு,வித்யா இருவரும் தங்களது ரூமுக்கு சென்றார்கள்.

 

  இருவரும் ரூமுக்கு சென்ற பிறகு, குகன் தலையில் “நங்” என்று  கொட்டியவன்.

 

” உன்னால் தான்” என்று கிச்சனுக்கு சென்று அவனுக்கு சுடுதண்ணீர் வைத்து அதை புகட்டினான் .

 

“எதுக்கு தேவ் திரும்ப தர”என்று அவன் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க..

 

” ஓவரா நடிக்காத ! வா” என்று அவனை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

 

இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு,வேறு உடைக்கும் மாறி இருந்தார்கள்.

 

இங்கு போகும் வழியில் ரியாவை திட்டிக்கொண்டே சென்றாள் மித்ரா.

 

” லூசு மாதிரி பேசுற எப்படி பேசணும்னு இல்ல ..அங்க அவர் முன்னாடி சொல்ல சொன்னாங்களா ?நான் உன்கிட்ட வந்து சொல்ற எல்லாத்தையும் “..

 

“பாருடா  அவராம்?”..

 

“ஏய்!”என்று பல்லை கடித்தாள் மித்ரா.

 

“உண்மையை தானே சொன்னேன்.நீ சொன்னதுதானே!”

 

“நான்  சொன்னது தான்.அதுக்காக…”  

 

“அதுக்காக..”

 

” எனக்கு ஒரு மாதிரி இருக்கு டி.அவர் அதும் நினைச்சா”

 

“என்ன மாதிரி…ஹம்” என்று மிரர் வழியாக தன் அக்காவை பார்த்து சிரிக்க…

 

“லூசு அமைதியா வா “என்றவளின் முகம் யோசனையை தத்தெடுத்து இருந்தது..

 

“என்ன யோசனை மித்து ,அவர் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டார் டி .எனக்கு தெரிஞ்சு தேவ் ஜாலி டைப் மாறி தான் தெரியுது “என்று தன் அக்காவின் தோளில் ஆதரவாக கை போட்டாள்.

 

“அ..அது.. இ…ல்ல ரியா குகனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருக்க வேணாமோனு தோணுது..”

 

“என்ன ஆச்சு?”

 

” இல்லடி அவனுக்கு வீசிங் இருக்குன்னு தெரிஞ்சும் ..”

 

“அவன் நார்மலா தான இருக்கான்.”

 

“இருக்கான் தான்.இருந்தாலும், இத வச்சு அவங்க வீட்ல எதும் பிராப்ளம் ஆன”

 

“அப்படிலாம் எதுவும் தெரியல.. தேவ்வோட அண்ணி கூட ஜாலியா தான் பேசுறாங்க. நீ சொன்ன வரைக்கும் ஜாலியான ஃபேமிலி தான் போல..”

 

“இருக்கட்டும் டி ..ஆன அவனுக்கு  ஹெல்த் இஷு வந்துட்டா?”

 

” அப்படி எதுவும் வராது மித்து.நீயா பயப்படாத சரியா? நைட் வேனா ஒன்ஸ் போன் பண்ணி என்னன்னு கேட்டுக்கோ?”

 

அதிர்வாக “நானா ?”என்று மித்ரா அவளை திரும்பி பார்க்க ..

 

“நடிக்காத ! நீ ஏதோ போன் பேசாத மாதிரியே ரியாக்ஷன் கொடுக்க வேண்டியது .எனக்கேவா?”

 

அவள் அமைதியாக ரியாவை பார்க்க…

 

“ஏதோ இருக்குடி உங்களுக்குள்ள சம்திங் சம்திங்! அது வெளியே வரும்போது வச்சிக்கிறேன்” 

 

தன் தங்கையை முறைத்தவள். வீட்டிற்கு வண்டியை விட்டிருந்தாள்.

 

இரவு  ரியா சொன்னது போல, மித்ராவும் அவனுக்கு போன் செய்து இருந்தாள்.

 

“சொல்லு ராங்கி “என்றான் இந்தப் பக்கம் புன்னகையுடன் தேவ்.

 

“இ.. இல்ல அ..அது குகன் நல்லா இருக்கான்  இல்ல ..எதும் பிரச்சனை இல்லல” என்றாள் எடுத்த எடுப்பில்.  

 

அவள் வார்த்தையில் ஒரு சில நொடி ஒன்றும் புரியாமல் விழித்தவன்.  அதன்பிறகு, நினைவு வந்தவனாக சிரித்துக் கொண்டே, “ஒன்னும் பிரச்சனை இல்ல. நல்லா தான் இருக்கான்.. வீட்டுக்கு வந்தும் ஒன்ஸ் ஹாட் வாட்டர் கொடுத்தேன் ..எப்பவும் போல தான் இருக்கான்”

 

“சரி “என்று பெருமூச்சு விட்டாள்.

 

அவள் பெருமூச்சு விட்டது. இங்கு அவனுக்கே கேட்க செய்தது.. குகன் உடல் நலனை கருத்தில் கொண்டு பயந்திருக்கிறாள் என்பது புரிந்தது..

 

அவளது அக்கறையை எண்ணி அதரங்களில் புன்னகை அரும்பியது.. 

 

“அவன் தூங்கிட்டானா? என்ன பண்றான்”

 

” இப்போ தான் தூங்கினான்”

 

” சரி குட்நைட் தேவ்” என்றாள் .

 

“இதுக்கு தான் போன் பண்ணிங்களோ மேடம் ?”என்றவனது  பேசும் தோரணை மாறி இருந்தது..

 

“உங்க கிட்ட பேச எனக்கு என்ன சார் இருக்கு ?”என்றாள் அவளும் அவனுக்கு இணையாக..

 

“ராங்கி, பேசுற எல்லாத்தையும் அப்படியே உன் தங்கச்சி கிட்ட சொல்லிடுவியோ  ?”

 

 

இப்பொழுது ,அவளும் குரலை சற்று உயர்த்தி, “நீங்களும் தான் உங்க அண்ணி கிட்ட சொல்லி வச்சிருக்கீங்க ?”..

 

” இ..இல்ல அ..அது” என்றவன்..தலையை உலுக்கி விட்டு, ஒரு கையால் கேசத்தை வருடியபடி,” அதுக்கும் ,இதுக்கும் சரியா போச்சு, நீ எப்படி உன் தங்கச்சி கிட்ட பிரண்ட்லியா பேசுறியோ ? அது மாதிரி தான் எனக்கு அங்க அண்ணி” ..

 

” எதே! சரியா போச்சா?”..

 

” என்னடி சரியா போச்சு”என்று கேட்டுகொண்டே ரூமுக்குள் நுழைந்தாள் ரியா .

 

“ஒன்னும் இல்ல ” என்றவள் போனை மியூட்டில் போட்டு விட்டு “தேவ்” என்றாள்.

 

“குடு நான் பேசுறேன்”

 

” என்ன பேச போற ?”என்ற மித்ரா தங்கையை குறுகுறுவென பார்க்க

 

“ஆள் செம்ம ஸ்மார்ட்டா இருக்காரு.. கடலை போட்டா நமக்கு சிக்குதானு பார்க்கலாம். நீ தான் ஒன்னுத்துக்கும் வொர்த் ஆக மாட்ட போல “என்று சிரிக்க..

 

தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தவள்..” ஒழுங்கா போய் படிக்கிற வேலைய பாரு !”

 

 

“ச்சீ பே! “என்று அவளுக்கு பழுப்பு காண்பித்து விட்டு ,சிரித்துக் கொண்டே “ஒரு நாள் இல்ல ஒரு நாள் வெளிய வரும் அன்னைக்கு பார்த்துக்கிறேன்” என்று  தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள் பிரியா.

 

சிரித்துக் கொண்டே மித்ரா ,”ஹலோ!” என்க..

 

  அந்த புறம் ,”ஹலோ !ஹலோ! “என்று கத்திக் கொண்டிருந்த தேவ்.

 

அவள்  “ஹலோ! “என்றவுடன்,”எங்கடி போன “…

 

“இல்ல ரியா வந்தா அதான் “.

 

“ஓ! சரி ஓகே. நீ தூங்கு பாய். பாரு” என்றான்..

 

“தேவ் என்ன ஆச்சு  ஏன்?”

 

” இல்ல நீ பாரு!” என்றவன் வைத்து விட்டான்..

 

அவனுக்கு, ஏனோ ரியாவை வைத்துக் கொண்டு பேசுவதற்கு ஒரு மாதிரியாக இருந்தது. இத்தனை நாள் அவளும் அந்த ரூமில் தான் இருந்தாள், மேக்ஸிமம் அதிகமாக  போன் பேச மாட்டார்கள். மெசேஜ் தான்..

 

அப்படி போன் பேசினாலும், அந்த நேரத்தில் ரியா பெரிதாக இருக்க மாட்டாள். இப்பொழுது, ஏனோ அவனுக்கு அவளுடன் வம்பு வளர்க தோன்றியது. ஆனால், வயது பெண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசினால், அவள் மனதை கெடுப்பது போல் ஆகிவிடுமோ ?என்ற எண்ணம் தோன்றியதால், அமைதியாகி விட்டான்.

 

அதை உணர்ந்த மித்ராவும் “சரி” என்று போனை வைத்திருந்தாள்.

 

போன் வைத்தவுடன் மித்ரா சிரித்துக்கொள்ள.

 

“என்னடி அதுக்குள்ள வச்சிட்ட ?”

 

“தூக்கம் வருது அதனால வச்சுட்டேன் .நீ படிச்சிட்டு தூங்கு “என்று புன்னகைத்துக் கொண்டே படுத்து போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள..

 

“இவ என்ன லூசு மாறி பண்றா? போர்வையை குளிரினாலே போத்திக்கவே மாட்டா. இன்னைக்கு தானா போர்வை எடுத்து போத்திக்கிறா. பல்ல பல்ல இளிக்கிறா சம்திங் இஸ் ராங்”என்று முனக..

 

இங்கு போர்வைக்குள் நுழைந்தவள் தன் போனை எடுத்து பார்த்தாள்.

 

” வயசு புள்ளையை பக்கத்துல வச்சிட்டு பேசுவது சரியா வராதுடி ராங்கி .அவளுக்கு நம்ம முன் உதாரணமாக   இருக்கனுமே தவிர ,கெட்ட விஷயத்தை அவ மனசுல பதிய வைக்க கூடாது. அதனால தான் ..நாளைக்கு மீட் பண்ணும் போது பேசிக்கலாம். அப்படி எதுவும் இம்பார்டன்ட் இல்ல. தூங்கு பாய் குட் நைட்”என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 

அந்த மெசேஜ் படித்தவள்.. புன்னகைத்துக் கொண்டே போனை தன் நெஞ்சில் வைத்துக் கொள்ள ..

 

போர்வையை விலக்கி உள்ளே புகுந்த ரியா.” என்னடி தனியா சிரிக்கிற பைத்தியம் போல ?அப்ப   முத்திடிச்சோ”..

 

“என்ன முத்திடிச்சு ?”என்றாள் புருவம் உயர்த்தி,

 

“காதல் பைத்தியம்!” என்ற ரியா சிரித்து கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள் அவள் அடிப்பதற்குள்..

 

அவளை அடிக்க எழுந்த மித்ரா.. அவள் பாத்ரூமுக்குள் நுழைந்தவுடன் கையை “ச்சை”என்று உதறிக் கொண்டு, “இவள வச்சுக்கிட்டு “என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

 

தேவின் பொறுப்பை எண்ணி மனதிற்குள் சந்தோஷம் கொண்டாள்.

 

காலை பொழுது நன்றாக புலர்ந்தது.தேவ்,குகன் இருவரும் கீழே இறங்கி வரும்போது, எழில் ஹாலில் உட்கார்ந்து இருக்க..

 

இருவரையும் பார்த்தவர் முறைக்க.

 

“என்னடா ஹிட்லர் காலையிலேயே நம்மள பாசமா பாக்குறாரு” என்று முனக..

 

“நேத்து நம்ப வெளியே போனது தெரிஞ்சிருக்குமோ ?”என்றான் குகன்.

 

“அடிங்!.எல்லாம் உன்னால தான் வாடா! வாயை மூடிகிட்டு”என்று அவன் தலையில் கொட்டி விட்டு, அவனுடன் இறங்கி வர ..

 

“நேத்து ரெண்டு பேரும் எங்க போயிட்டு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?”என்றார் எழில் ஒரு முறைப்புடன்..

 

தேவ், தனது அண்ணனை திரும்பி பார்க்க..

 

“நான் இல்லை” என்று அவன் தோலை குலுக்க..

 

தன் அண்ணி சொல்லி இருக்க மாட்டார் என்பதால்,  சமையலறையை எட்டி பார்த்தான்…

 

” நான் தாண்டா சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?” என்று சொல்லிக் கொண்டே தனம் வெளியில்  வர ..

 

“வர வர நீ ஒன்னும் சரியில்ல தனம் .உன் கண்ணாளனுக்கு தான் சப்போர்ட் பண்ணிட்டு போற?”

 

“டேய்! நான் கேட்டதுக்கு பதில் சொல் டா. அப்புறமா அவ கிட்ட போய் பஞ்சாயத்து பண்ணுவ”

 

” வெளியே போனோம் .கொஞ்சம் லேட் ஆயிடுச்சு “என்றான் அசட்டையாக ..

 

“அதான் எங்க போனீங்கன்னு கேட்டேன்”

 

“நேரம் ஆகுது மாமா” என்று வித்யா வர..

 

“கொஞ்சம் அமைதியா இருமா! எப்போ  பார்த்தாலும் இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டே வராதா எல்லா நேரமும்” என்றார் .

 

“மாமா அடிக்கடி நீங்க அவனை குற்றம் சாட்டுவது போலவே இருக்கு ..அவன் அப்படி ஒன்னும் தப்பு பண்ற பையன் இல்ல, அது உங்களுக்கே தெரியும்  இருந்தும், தோலுக்கு மேல வளர்ந்த பையனை தினமும் இப்படி நடுக்கூடத்தில் வைத்து கேள்வி கேட்கிறது சரியா? நீங்க தினமும் ஏதாவது அவனை கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க ?என்னால பாத்துட்டு அமைதியா இருக்க முடியாது”  என்றாள் வேகமாகவே குரல் உயர்த்தி ..

 

வேலு தான் ,”வித்யா இது என்ன பேச்சு ?அப்பாகிட்ட குரலை உயர்த்தி  பேசுற?”என்று அதட்டினான்.

 

“டேய் விடுடா !”என்றார் எழில்.

 

” சாரி நான் கூட்டிட்டு போனதுக்கு அண்ணி கிட்ட யாரும் பிரச்சினை பண்ண வேணாம்”என்றான் தேவ்.

 

“ஏதோ பண்ணுங்க!”என்ற எழில் வெளியே சென்று விட்டார். 

 

“ஏன் அண்ணி?”என்றான் பாவமாக..

 

“அப்புறம் உன்னை என்னடா சொல்றாரு ! தினமும் இப்படியே நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டே இருக்காரு”

 

“விடுங்க  அண்ணி.அவரு இன்னைக்கு நேத்தா  சொல்றாரு

… தினமும் சொல்றது தானே! “

 

” எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா”என்றாள் லேசாக கண்கள் கலங்க..

 

“ஒன்னும்  இல்லை அண்ணி!”என்று அவள் தோளில் கை போட்டு நெற்றியில் முட்டி சிரிக்க..

 

இருவரையும் நின்று முறைத்து விட்டு ரூமுக்குள் புகுந்து கொண்டான் வேலு.

 

“உங்க புருஷன் முறைச்சிட்டு போறான் போய் என்னன்னு பாருங்க !முதல்ல அவனை போய் சமாதானம் படுத்துங்க”.

 

“எனக்கு வேலை இருக்குடா “

 

“அந்த வேலையை விட ,இந்த வேலை அவ்வளவு முக்கியமா?… நான் பாக்குறேன் நீங்க போங்க”

 

” இல்ல வேணாம். எனக்கு டைம் இல்லை “என்றவள் தன் வேலையில் கவனத்தை செலுத்த, 

 

தன் அண்ணியை, மேலும் கீழும் பார்த்தவன்.. தோலை குலுக்கி கொண்டு “ஏதோ.. உங்க விருப்பம் “என்று சொல்லிக்கொண்டே,தங்களுக்கு என  தயாரித்து வைத்த காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் .

 

இங்கிருந்தால், ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கும் என்ற எழில் அப்போதே வெளியே சென்று இருந்தார்.

 

வீட்டில் நடந்த பேச்சு வார்த்தையில், இருவரும் ஸ்கூலுக்கு கிளம்பி போவதற்கு லேட் ஆகியது.. 

 

அப்போதுதான் ,மித்ரா ஒரு மிஸ் உடன் பேசிக்கொண்டே செல்ல..

 

இருவரையும் பார்த்தவள் .டைமை பார்த்துவிட்டு ,”நேரமாயிடுச்சு போல” என்று சைகையில் கேட்க..

 

” சாயங்காலம் சொல்றேன் பாய்” என்று மெசேஜ் அனுப்பி விட்டு, அவளை பார்த்தான் .

 

மெசேஜ் சத்தம் கேட்டவுடன் அவளும் போனை எடுத்து மெசேஜ் பார்த்தவள்.சரி என்று தலையசைக்க , அவனும் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு குகனிடமும் பாய் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான்..

 

 

அதன் பிறகு ,வேலை அவளை இழுத்துக் கொண்டது ..மதியம் லஞ்ச் டைமில் குகனிடம்,” என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா ?உனக்கு ஓகே தானே !” 

 

“எனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ் என்றவன்.. நேத்து அப்பா தான் தேவை திட்டினார் .இன்னைக்கு தாத்தா “என்றான் கவலையாக..

 

“அதுக்கெல்லாம் பயப்படுற ஆளா டா நீங்க ரெண்டு பேரும் “என்று அவள் சிரிக்க ..

 

“பயப்பட மாட்டோம். ஆனால்,”என்றவன் அமைதியாக, 

 

” என்னடா ?”

 

அவனுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனாலும், கண்ணை உருட்டி உருட்டி பார்க்க..

 

“என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது விஷயமா ?”

 

” இல்லை “என்பது போல் தலையாட்டி அவன் உதட்டை பிதுக்க,

 

“என்ன ஆச்சு குகன்? ஏதாவது சண்டையா ?”என்றாள் இப்பொழுது உண்மையான கவலையுடன் ..

 

“சண்டை இல்ல மிஸ். ஆனா,”

 

 

” என்னடா”..

 

” தெரியல. தாத்தா தேவ் கிட்ட ஏதோ கேட்டாங்களா ?அம்மா கொஞ்சம் வேகமாக பேசினாங்கன்னு …அப்பா குரலை உயர்த்தாதனு சொன்னாரு “என்று நடந்ததை அவன் மேலோட்டமாக சொல்ல ..

 

“சரி விடுடா. பெரியவங்க விஷயத்துல நீ பெருசா யோசிக்காத !சின்ன பையன் சின்ன பையனாவே நின்னு வேடிக்கை பாரு! சரியா? எதுவா இருந்தாலும் உன்னுடைய தேவ் பார்த்து பாரு இல்ல”என்று அவன் தலையை கலைத்துவிட்டு , கன்னம் கிள்ளி கொஞ்ச..

 

அவனும் சிரித்தான்..

 

“சரி ஓகே. உட்காரு” என்றாள்.

 

அதன் பிறகு, பாடத்தில் கவனத்தை செலுத்தி இருந்தாள். மாலை ஒரு கதையும் சொல்லி அனுப்பிவிட்டு , கிளாஸ் முடிந்தவுடன் தன்னுடைய கேபினுக்கு சென்று விட்டாள்.

 

ஸ்கூல் முடிந்து குகன் 10 நிமிடமாக  நின்று கொண்டிருந்தான். 

 

ரொம்ப நேரமாக நின்று நின்று பார்த்தவன் ..மர நிழலில் அங்கு இருக்கும் கல்பெஞ்சில் உட்க்கார்ந்து,’ ஆபீஸ்ல ஏதாவது வேலையா? இல்ல ட்ராபிக்ல தேவ் மாட்டிக்கிச்சா? இன்னும் காணோம்’ என்று யோசனை உடனே இருக்க. 

 

  அப்போது வெளியில் வந்த மித்ரா, குகன் அங்கு தனியாக இருப்பதை பார்த்துவிட்டு ,” குகன்”என்று அழைக்க, 

 

அவனும் திரும்ப..” சரி இருங்க மிஸ் .நான் கொஞ்சம் அவன் கிட்ட பேசிட்டு வரேன்” என்று உடனிருந்த ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அவன் அருகில் சென்றாள்.

 

“ஏண்டா தனியா உட்கார்ந்து இருக்க, இன்னும் தேவ் வரலையா?”

 

“இல்லை “என்று அவன் உதடு பிதுக்க..

 

” சரி “என்று அவனிடம் ஒரு 10 நிமிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

 

அப்படியே நேரம் சென்றதே தவிர, தேவ் குகனை அழைக்க வரவில்லை.

 

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் சென்று இருந்தது..” ஏதாவது வேலையா இருக்கும் போல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

 

“மிஸ் ஒரு ஹெல்ப்!” என்றான்.

 

“என்னடா?”என்றாள் அவன் உயரத்திற்கு கீழே குனிந்து …

 

“உங்க போன் கொஞ்சம் தரீங்களா?  தேவுக்கு ஒரே ஒரு போன் பண்ணிக்கிறேன்”என்றான் கெஞ்சலாக..

 

“சரி” என்று போனை கொடுக்க..

 

அவனும் நம்பர் டைப் பண்ண.. தேவ் போன்  நம்பரை அவள் சேவ் பண்ணி வைத்திருந்த பெயரை பார்த்தவுடன் அதிர்ச்சியாக தனது மிஸ்ஸை பார்த்தான்.

 

அவளோ ,நாக்கை கடித்து திரும்பி நின்று, “போச்சு அவன் கேட்டவுடனே அவசரத்துல போன் குடுத்துட்டேன்” என்று முனகலுடன்  தன் தலையிலேயே லேசாக தட்டிக் கொண்டாள் .

 

அதன் பிறகு,அவன் புறம் திரும்பி “பேசுடா ” என்றாள்.

 

அந்த பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்த்தான்.. “வசியக்காரன் “என்று சேவ் பண்ணி இருந்தாள் ..பொடியன் சிரித்துக் கொண்டே ,’இதை முதல்ல தேவ் கிட்ட சொல்லணும் ‘என்று எண்ணிக் கொண்டே போனை காதில் வைத்தான்.

 

முழு ரிங் சென்று கட் ஆகியது.. “மிஸ் எடுக்கல” என்றான் கவலையாக , அழும் குரலில் ..

 

“ஏதாவது வேலையா கூட இருக்கும் இருடா “என்று அவன் தலையை கலைத்துவிட்டு ,”இரு நான் ஒரு முறை  ட்ரை பண்றேன்” என்று அவளும் போட்டு பார்த்தாள்.

 

அப்பொழுதும் எடுக்கவில்லை. ‘ஏதாவது வேலையா இருந்தாலும் முன்கூட்டியே சொல்

லி இருந்திருக்கலாமே! கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு ,என்னவா இருக்கும்?’ என்று யோசனையுடன் இருந்தாள் மித்ரா. போன் எடுக்கவில்லை என்றவுடன் கவலையாக ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் குகன். 

 

இருவரும் யோசனையுடன் வாசலையே  பார்த்துக் கொண்டிருக்க, அப்போது வேகமாக வந்து அவர்கள் அருகில் வண்டியை நிறுத்தினாள் வித்யா.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்