
அத்தியாயம் 33
அர்ஜூன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் மகனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதி காத்தனர்.
சுயநலத்துடன் நடந்துகொண்டோமென ஒருபுறமும், பிள்ளையைப் பாதுகாத்து வளர்க்க வக்கற்றவர்களென மறுபுறமும் குற்றவுணர்வில் நெளிந்துக் கொண்டிருக்க, இருபுறமும் இணைந்தாலொழிய என் ஆன்மா ஆனந்திக்காது என்று அனு, நிரஞ்சனா இருவரின் முன்பும் மண்டியிட்டான் அவர்களின் மகன்.
“அக்னி, சஞ்சு…” என்ற குரல்கள் ஒலிக்க,
அவன் அன்னையர் இருவரின் கரங்களையும் சேர்த்து தன் உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டு சொன்னான். “உங்க ரெண்டு பேரோட கண்ணீரையும் பார்க்கறளவுக்கு நான் திடமானவனில்லை. எப்பவும் உங்க வார்த்தைகள்ல இருந்து நான் விலகி நடக்கப் போறதுமில்லை. என் சர்வத்தையும் தந்து, உங்க அன்புக்கு அடிமையா இருக்கறதுல இருக்குது என் மொத்த சந்தோஷமும்! ஆனா என்னோட அந்த சந்தோஷத்துக்கு ஆதாரமா (source) உங்க ரெண்டு பேரோட கையும் எப்பவும் சேர்ந்திருக்கணுமே…”
வெடுக்கென அவன் கையை உதறிய நிரஞ்சனா சீறினாள். “என்னை என்னன்னுடா நினைச்சிட்டிருக்கே? இரக்கமே இல்லாத ராட்சசின்னா? முதல்ல எந்திரி நீ! ஆமா, முதல்ல அதிர்ச்சில அழுகை வந்தது. உன்னோட சொந்த அப்பா, அம்மா கேட்கும்போது உன்னைத் திருப்பி தரணுமேன்ற பயம் எனக்கு எப்பவுமே உண்டு. ஏன்னா உன்னைச் சட்டப்படி தத்தெடுக்கும் போது, உனக்கு சொந்தமானவங்க வந்து உன்னைத் திருப்பிக் கேட்டா எந்தவித வியாக்கியானமும் இல்லாம உன்னை அவங்கக்கிட்ட ஒப்படைக்கணும்ன்னு உங்கப்பா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் உன்னை வீட்டுக்கே அழைச்சிட்டு வந்தார். அதுவே இப்போ நிஜமா நடந்ததும் அந்த பயம்தான் முதல்ல வந்தது. நீயும் அனு மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு இப்போ தான்…” என்று பேசிக்கொண்டே வந்தவளுக்கு தொண்டை அடைத்தது.
“ம்மா…”
“முன்னாடியே புரியும் தான்னாலும் உன்னை இழந்துடுவோமோன்ற பயத்துல உன்கிட்ட உன் அம்மாவைப் பத்தி கேட்காம இருந்துட்டேன்.”
“அம்மா! எரிச்சலைக் கிளப்பாம முதல்ல அழறதை நிறுத்து!” என்றவன், அவள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அவளின் தாய்ப்பாசத்தையும் அறிந்தவனாயிற்றே! ஆகையால் அவள் அவளையே குற்றம் சொல்லிக் கொள்வது பிடிக்கவில்லை.
அவன் கண்களைச் சந்திக்காமல், “அனு…” என்று அனுவின் விரல் கோர்த்துக் கொண்டு தொடர்ந்தாள். “வேற யாரா இருந்தாலும் எனக்கு விட்டு கொடுக்கற இந்த மனசு இருந்திருக்குமான்னு தெரியல. பட் ஷி’ஸ் ப்யோர் ஸோல்! வந்ததுல இருந்து இவ முகத்துல இருந்த சோகம் என்னை உறுத்திட்டே இருந்தது. அதனாலதான் அவளோட பேசி பார்க்கலாம்ன்னு என் சுபாவத்தை விட்டு கொஞ்சம் அதிகப்படியா பேச ஆரம்பிச்சேன். ஆனா இப்போ அவ மொத்த சந்தோஷத்தையும் மீட்டுக் கொடுக்க என்னால முடியும்போது அதைச் செய்யாம இருப்பேனா?” என இன்னும் சில துளி விழிநீரை வழிய விட்டு கணவனைப் பார்க்க, ஆம் என தலையசைத்தான் அவன்.
“தாங்க்ஸ்!” மனைவியின் இந்தப் புரிதல்தான் பிரபஞ்சனின் வாழ்வில் கிடைத்த ஆகச் சிறந்த வரம்!
இவனும் புன்னகையுடன் எழுந்து, “தாங்க்ஸ் மாம்!” என நிரஞ்சனாவை அணைத்து விடுவித்துவிட்டு, அனு ஏதாவது சொல்லுவாள் என்று பார்க்க, அவள் ஏதும் சொல்லாமல் நிரஞ்சனாவின் முகம் பார்த்து சிலையென நின்றிருந்தாள்.
இவன் புன்னகை சுருங்கிவிட்டது. மேலும் சில நொடிகள் கழிய அப்போதும் அவள் அசையவில்லை.
சூழ்நிலை இறுக்கமாக இருந்ததைக் கண்டு சந்தனா, ‘ஏதாவது சொல்லுங்களேன்!’ என்பதைப் போல் அபிராமியைத் தன் முழங்கையால் இடிக்க,
தலையாட்டிவிட்டு அவர் சூழ்நிலையைக் கையிலெடுத்துக் கொண்டார். “என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கறாளான்னு பாரு! அவளே எல்லாம் முடிவு பண்ணிக்கறா!” என மாமியாராய் மாறிப் பொரிய,
“ஏனாம்? நீங்களும் உங்க மருமக பேச்சைத்தான் கேட்க போறீங்க! அப்புறம் எதுக்கு இந்த ப்ளூப்பர் ஸீனு?” என இடக்காகக் கேட்டாள் சந்தனா.
இத்தனை வருடங்களில் தன் மாமியாரைப் பற்றி புரிந்திருந்தாலும், நிரஞ்சனா அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் இந்தச் சின்னப் பெண் பட்டென்று கேட்டுவிட்டாளே என்ற வியப்பு தோன்றவே செய்தது.
“நான் ஏன் அவ பேச்சைக் கேட்கணும்?” அவர் தன் மாமியார் முறுக்கைத் தொடர,
சந்தனா கேட்டாள். “பின்ன? கர்நாடகால இருந்து தண்ணியைத் தான் தர மாட்டீங்க! அக்னியைக் கூட தர மாட்டீங்களா என்ன?”
“ப்புஹ்!” என அர்ஜூன் சிரிக்க,
சஞ்சுவும் சனாவும் ஒருங்கே அவனை முறைக்க, “ஸாரி எனக்கு சென்ட்டி சீன்ஸ்ல சிரிக்கற வியாதி இருக்குது. ஹிஹி..” என்றதில் அபிராமியின் உதடுகளும் சிரிப்பில் துடித்தது.
அவர், “உனக்கு எப்போ தெரியும்? என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா நீ?” எனச் சந்தனாவைக் கேட்க,
“எனக்கே நேத்து நைட் தான் சொல்லி ஷாக் கொடுத்தாங்க போவீங்களா…” என உதட்டை வளைத்தாள் அவள்.
அதனைக் கண்ட சஞ்சுவின் உள்ளம் ரகசியமாய் அவளிடம் ஓர் கதகதப்பைத் தேடியது. அவளைக் காதலாகப் பார்த்தான். அதனை அபிராமியைத் தவிர தத்தம் எண்ணங்களில் உழன்று கொண்டிருந்த மற்ற யாரும் கவனிக்கவில்லை.
“நேத்து தான் அம்மா, அப்பாவுக்கும் தெரியும் பாட்டி.” என்றான் அர்ஜூன்.
மிகுந்த யோசனைக்கு பின்னர் பாஸ்கரன் தன் மூத்த மகனைக் கேட்டான். “நீ என்ன சொல்ல நினைக்கற சஞ்சு?”
இவன் கேட்டதற்கு இன்னும் அனு எதுவும் சொல்லாததில் அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டு எழுந்து போய் தன் உடமைகளில் தயாராக வைத்திருந்த முத்திரைத் தாள்களை (stamp papers) கற்றையாக எடுத்து வந்தான். “இதுல நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போடணும்.” என தன் அம்மாக்கள் இருவரிடமும் சொல்ல,
“எதுக்குடா கையெழுத்தெல்லாம்?” என்ற நிரஞ்சனா அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
“நீ நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் உங்களைச் சந்தேகப்பட்டு கையெழுத்து கேட்கல.” என ரோஷமாக சொன்னவன் பிரபஞ்சனிடம் சொன்னான்.
“**** ஏரியாவுல இப்போ கட்டிட்டு இருக்க வீடு எதுக்குன்னு நீங்க கேட்டீங்க தானே டாட்? அதை நான் என்னோட ரெண்டு அம்மா பேர்லயும் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன்.” என்றவன், நிரஞ்சனாவைப் பார்த்துவிட்டு, “இந்த விஷயம் எந்தளவுக்கு சரியா வரும்ன்னு தெரியல. அதான் முன்னாடியே சொல்லல.” என்றான் பொதுவாக!
பிரகதிக்கு அவினாஷைப் பார்த்தபோதே அக்னி, தங்கள் வீட்டினருகே ஏற்கனவே வாங்கியிருந்த நிலத்தில் வீடு கட்டும் பணியை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான். பிரபஞ்சனும் பிரகதிக்காக தான் செய்கிறான் என்று நினைக்க, ‘அவளுக்கு சென்னையிலேயே வாங்கிக் கொடுக்கலாம்.’ என்றான்.
ஆனாலும் பெங்களூரில் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைப் பற்றி யாரிடமும் பெரிதாக பிரஸ்தாபிக்கவில்லை. அது எதற்கு என்று நேரம் வரும்போது கண்டிப்பாக உங்களுக்கும் அம்மாவுக்கும் சொல்லுவேன் என்றதோடு சரி! அந்த நேரம் இப்பொழுதுதான் வந்திருக்கிறது. (இவ்விடம் ஏழாம் அத்தியாயத்தில் அப்பா -மகனுக்கிடையேயான உரையாடலில் ஒளிந்திருக்கிறது.)
எல்லாம் முன்பே முடிவு செய்திருக்கிறானென்றால், இந்த வாய்ப்பை அவன் விட்டுவிடுவதாக இல்லை. இனி ஒருபோதும் அனுவை அவன் விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை. மீண்டும் மாமியாரும் மருமகளும் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.
அவனின் விருப்பமும் எதிர்பார்ப்பும் இத்தனை தூரத்திற்கு வெளிப்படையாக தெரிந்த பின்னர் இனியும் தாங்கள் தெரியாததைப் போல் இருந்துவிடுவது நியாயமில்லையே! தவிர, இவர்களுக்கும் அவனின் மகிழ்ச்சியில் அக்கறையிருக்கிறதே!
கட்டிட பணி இன்னும் ஒரு மாதத்தை விழுங்கும் என்ற நிலையில் இவர்கள் சென்னை வந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை தினமும் கட்டிட வேலை எப்படி போகிறதென மேற்பார்வைக்காக பிரபஞ்சன் அங்கே போய் வந்திருக்கிறான். ஆனாலும் மகனிடம் ஏனென்று கேட்டிருக்கவில்லை.
அதையே இப்போது தன் முகம் பார்க்கும் மகனிடமும் சொன்னான். “நீ செய்றது சரியா இருக்கும்ன்ற நம்பிக்கைல தான் நான் அதைப் பத்தி உன்கிட்ட அழுத்திக் கேட்கல அக்னி! இப்பவும் என் நம்பிக்கையை நீ காப்பாத்திருக்கன்னு தான் சொல்லுவேன்.”
“தாங்க்ஸ்ப்பா!”
நிரஞ்சனாவும் பிரபஞ்சனும் சொன்னதைக் கேட்ட அனுவின் எண்ணங்கள் இப்படியாக இருந்தது.
கடவுள் இனி நீ அழ வேண்டாம் என்று நினைத்துவிட்டாரோ? இருபத்தியிரண்டு வருடங்களாக இவளின் சந்தோஷத்திற்கு சிறை வைத்திருந்த பரம்பொருள் இன்று அதற்கு விடுதலை அளித்துவிட்டாரோ! எத்துணை பரிசுத்த ஜீவன்களை அனுப்பி இவளின் சந்தோஷப் பூவிற்கு தீர்த்தம் பாய்ச்சுகிறார்!
பிரபஞ்சனைப் பரமாத்மாவைப் போல் பார்த்து கைக்கூப்பினாள் அனு. “சஞ்சு ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவன். உங்களை மாதிரி நல்லவங்களோட வளர்ப்புல இருக்கணும்ன்னு தான், கடவுள் சுயநலமா இருந்த என்கிட்ட இருந்து அவனை…”
“அனு!” -பாஸ்கரன்.
“அத்தை!” -சந்தனா.
அவளுக்கான அதட்டல் குரல்கள் எழும்ப, அவளை அணுகிய சஞ்சய், “அடுத்தவங்களை அழிக்காத வரைக்கும் சுயநலமும் தப்பில்லைம்மா! நீ உன் சுயநலத்தை விட்டுட்டு என்னை எனக்காக மட்டும் வளர்க்க ரெடியா இருந்தே! உன் சுயநலமில்லாத அன்போட ஒவ்வொரு துளியையும் நான் அனுபவிச்சிருக்கேன். அத்தனைத் துளியையும் என் ஞாபகத்துல சேர்த்தும் வச்சிருக்கேன். இனியும் அதை அனுபவிக்க ஆசையாயிருக்குது. என் கூட அங்கே வந்து இருந்துடும்மா!” என்றான்.
அனு பாஸ்கரனைப் பார்க்க, அவனிடமும் சொன்னான். “இனியும் உங்களைப் பிரிஞ்சிருக்க நான் விரும்பலை. அங்கே என்கிட்ட வந்துடுங்கப்பா! ப்ளீஸ்…”
அவனுக்கு இப்போது நிரஞ்சனாவின் புரிதலில் மனம் நிறைந்துவிட்டது. நினைத்ததைக் கேட்டுவிட்டான். ஆனால் கேட்டவுடன் அனு தலையாட்டவில்லை என்ற கோபம் உள்ளுக்குள் பதுங்கிக் கிடக்கிறது.
பாஸ்கரனிடம் மிகுந்த தயக்கம். என்னதான் பெண்கள் புரிதலுடனும் தோழமையுடனும் இருந்தாலும், அவர்களைப் பிரிவினைப்படுத்த ஒற்றைச் சமையலறைப் போதும்! அங்கே மகன் இருந்தாலும் இவர்களைப் பொறுத்தவரை அது வேற்று மனிதர்களின் இல்லம்தானே! மகனுக்கு இதனை எப்படி புரிய வைப்பது?
அப்பாவின் தயக்கம் கண்டு, அப்பாவைப் பார்வையால் துணைக்கழைத்தான் மகன். பிரபஞ்சன் நிரஞ்சனாவைப் பார்க்க, அவள் தன் மாமியாரைப் பார்த்தாள். அதில் அவர் முகத்தில் ஓர் மிடுக்கு வந்தமர்ந்துகொண்டது.
அனுவிடம், “நீ முதல்ல கையெழுத்து போடு அனு!” என ஆக்ஞையாகச் சொன்னார்.
அவள் திருதிருவென விழிக்க, “இந்த கிழவி சொல்றதை நாம ஏன் கேட்கணும்ன்னு நினைக்கறியோ?” என அதிகாரம் தூள் பறந்தது.
“அச்சோ இல்லைம்மா!” எனப் பதறிய அனு அவசரமாக நிரஞ்சனாவைப் பார்க்க, அவள் இதழில் குறுஞ்சிரிப்பு. “அத்தை அப்டிதான். ஆனா நல்லதுதான் சொல்லுவாங்க. சைன் பண்ணு அனு.” என்றவள், அக்னியிடமிருந்த பேனாவை வாங்கி அவன் காட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டு விட்டு அனுவிடம் நீட்டினாள்.
அவள் மீண்டும் ஒருமுறை அபிராமியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கையெழுத்திட, “உன் பிள்ளை உனக்கு செய்றான். இதுக்கு ஏன் நீ இப்டி முழிக்கணும்?” என்றவர் பாஸ்கரனிடம் கேட்டார்.
“இங்கே உங்களுக்கு பிஸினஸ் எதுவும் இருக்குதா தம்பி?
“இல்லைம்மா. ஏற்கனவே சொல்லிருக்கேனே… அனுவைக் கவனிச்சிக்கறதுக்காக பத்து வருஷத்துக்கு முன்னாடியே வேலையை விட்டுட்டேன். சில லேண்ட்ஸ் அண்ட் பில்டிங்ஸ் இருக்குது. அதுல வர்ற வாடகைதான்! இன்னுமே லேண்ட்ல தான் இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.”
“அப்போ நீங்க அங்கே வந்து உங்க பிள்ளையோட இருக்கறதுல என்ன தயக்கம்?”
“ஆனா…” என்று இழுத்தவன், “பிரபு…” என பிரபஞ்சனின் முகம் பார்க்க, அவனுக்கு அப்போதுதான் பாஸ்கரனின் தயக்கம் புரிந்தது.
“இப்போ நாங்க இருக்கற வீடு அம்மா பேர்ல இருக்குது பாஸ்கர். அம்மா என் பொறுப்புல இருக்காங்க. ஸோ நான் அம்மா கூட தான் இருப்பேன். அக்னி அனு பேர்ல எழுதிருக்க வீடு நம்ம வீட்டுக்கு பத்து நிமிஷ தூரத்துல தான் இருக்குது. நீங்க அங்கே இருந்துக்கலாம். ஸோ, டோண்ட் பீ எம்ப்ராஸ்ட் பை திஸ்!”
அப்போதும் பாஸ்கரன் தயக்கமாகவே தலையாட்டினான்.
அபிராமி சொன்னார். “உங்க மகன் மாசத்துல பாதி நாள் ஃபாரின்ல தான் கிடப்பான் தம்பி. அதனால அவன் ஊர்ல இருக்கும்போது உங்களோட சேர்ந்து அனு வீட்டுலதான் இருப்பான். நிரஞ்சனாவுக்கு காலைலயும் ராத்திரியும் அவன் முகத்தைப் பார்த்தா தான் முழிப்பும் தூக்கமும்! அதனால காலைலயும் ராத்திரியும் அவளோட வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு போகட்டும்.”
பாஸ்கரனுக்கு அவரின் கூற்று உவப்பானதாக இருந்தது. ஏனெனில் மகன் கிடைத்துவிட்ட பின்னர், அவனைக் கண்ணார கண்டு நெஞ்சில் நிரப்பிக் கொண்ட பின்னர், அருகே இருக்கும் வீடென்றாலும் இனி அவனைப் பிரிந்து நிற்பதென்பது அனுவின் மனநிலைக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் சஞ்சுவை அவர்களிடமிருந்து சட்டென்று பிரித்துவிட்டதான உணர்வில் விழித்தான். “ஸாரி, உங்களைக் கஷ்டப்படுத்தறோம்.” என நிரஞ்சனாவிடம் சொல்ல,
அவள் அனுவின் கைப் பிடித்து சொன்னாள். “நீங்க அவனுக்காக இத்தனை வருஷம் வாழ்ந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு வரும்போது, நானும் அவனுக்காக கொஞ்சம் இறங்கி வர்றதுல எந்த கஷ்டமுமில்லை. இப்போதான் அவன் எருமைக் கடா மாதிரி வளர்ந்துட்டானே… அத்தை சொன்ன மாதிரி எனக்கு தினமும் அவன் முகத்தைப் பார்க்கணும். அவ்ளோதான்!”
இப்போது அவன் முகம் தெளிந்தாலும் விழிகளில் சிறு அலைப்புறுதல்! “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அர்ஜூனோட பிஸினஸ் இங்கே இருக்குதே?”
“அவனோட பிஸினஸை அங்கேயும் எஸ்டாபிளிஷ் பண்ணலாம்ப்பா. அதுவரை நான் ஃபாரின் போற சமயம் இங்கே அவனோட வந்து இருக்கலாம்.” அவர் மறுத்துவிடக் கூடாதென்ற தவிப்பில் அவசரமாக சொன்னான் சஞ்சய்.
இப்போது அனைவரும் அர்ஜூனின் முகம் பார்க்க, அவன் சொற்களின்றி சஞ்சுவை நெருங்கி ஆரத்தழுவிக் கொண்டான். அனைவரின் முகமும் நிம்மதியில் விகசித்தது.
“என்னை என் பானு பேபி பார்த்துப்பா! எப்போ அவளை எனக்கு கட்டி வைக்கப் போற?” அணைத்திருந்தவாறே தன் காதில் கேட்டவனை முறைத்துப் பார்த்தான் அர்ஜூனின் அண்ணன்!
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்…
உனை தாய் மடி
ஏந்துதே தாலோ…
இசைக்கும்🎵🎶…
ஹாய் அபி சிஸ் @abhishree, நீங்க கேட்ட அண்ணன்-தம்பி hugging scene! எப்டி?😅😅
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் சீன். அண்ணன்னு தெரிஞ்சுருச்சு. அப்போ ஹக் பண்ணல. இப்போ பொறுப்பா அண்ணனா என்னை பத்தியும் யோசிக்கிறான் அப்படின்னு உணர்வுப்பூர்வமாக ஹக் பண்ணியிருக்கான். அர்ஜுன் 🤣🤣 சேட்டை. அக்னி சீக்கிரமா கல்யாணம் பண்ணிடு. இல்ல அர்ஜுன் கல்யாணம் தான் முதல்ல நடந்திடும் 😜😜😜😜 போல
யார் மனசும் வருத்தப்படாம எல்லாரும் ஒண்ணு சேரணும் அப்படின்னு சஞ்சுவோட எண்ணம். அக்னி அனு பேர்ல வீடு கட்டி தந்திருக்கலாம். ஆனா ரெண்டு பேர்ல வாங்கியிருக்கிறது அவன் மனசுல ரெண்டு பேருக்கும் இடமிருக்குது. அவனை சார்ந்த எல்லாமே.. அவனும் கூட அவங்க ரெண்டு பேருக்கும் சொந்தம் அப்படின்னு காட்டுற மாதிரி பண்ணியிருக்கான்.
ஆமா சிஸ், ரெண்டு அம்மாவுமே அவனுக்கு equal! மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 💝🎉
Vera level ♥️ eagerly waiting for next episode 😊
Thank u 🫶✨
அவர்கள் அங்கே கைநழுவி சென்ற குழந்தையை தேடி தவித்தார்கள் என்றால் இங்கே இவர்கள் கைச்சேர்ந்த குழந்தையிடம் குழந்தை தன்மையை காணாது தேடினரே.
இத்தனை நாள் கண்டிராத அக்னியின் ஏக்கத்தையும் ஆசையையும் அவன் வாய்வழியே கேட்ட பிறகும் அதனை நிறைவேற்றி விட மனம் எழாமல் போய்விடுமா என்ன?
பாட்டி சனா இடையேயான உரையாடல் மிகவும் ரசிக்க வைக்கின்றது.
“கர்நாடகால இருந்து தண்ணி தான் தர மாட்டீங்க அக்னிய கூடவா தரமாட்டீங்க” 🤣🤣❤️
மகனது மகிழ்வே முக்கியம் என்ற புரிதலுடன் அக்னியின் முடிவிற்கு ஒப்புக்கொண்டார் நிரஞ்சனா.
வழமை போல் இப்பொழுதும் குழப்பமான குடும்ப சூழலை கையாள தயங்குகிறார் அனு.
“அதுதான் எருமை மாடு போல் வளர்ந்தாயிற்றே இனி அவ்வப்போது வந்து செல்ல என்று பார்த்துக்கொண்டால் போதும்” 🤣🤣
எவ்ளோ Emotional la ஒரு scene போயிட்டு இருக்கு உனக்கு பாவி வேணுமா அர்ஜுன். 🤭
ஆமா, அனுவிற்கு குழப்பம். வேறு ஒருவர் வீட்டில் போய் எத்தனை நாட்கள் இருந்துவிட முடியும் என்று! அர்ஜூன் டிஸைனே அப்டித்தான்😂😂 மிக்க நன்றி சிஸ்🌈🫧