Loading

“ம்மா சிலர் கல்யாணத்துக்கு அப்புறம் இரண்டு பக்க பெற்றோரும் வேண்டாம் நாம தனியா போயிடனும்னு சொல்றாங்க”

“இருக்கட்டுமே தம்பு தனியா இருக்கிறதால நீ எங்க பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா..? எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தா போதும்.. உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்றவர் தன்னையறியாமல் கலங்கிய விழிகளுடன்  திருவின் தோள் சாய  அவரும் மனைவியை தட்டி கொடுத்தார்.

“ம்மா இன்னும் சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்… இதுல ரொம்ப ஆச்சர்யபடுற விஷயம் என்னன்னா தன்னை பத்தி வெளிப்படையா சொன்ன எந்த பொண்ணுமே என்னோட குணம் எப்படி நான் எப்படி பார்த்துப்பேன்னு கேட்கவே இல்ல, பதிலா எவ்ளோ சேலரி, பேங்க் பேலன்ஸ், கார், சொத்து, அப்பம்மா கூட இருப்பாங்களா, வெளிநாடு போகணும் கல்யாணத்தை எந்தளவு கிராண்டா நடத்துவேன், எந்த ஸ்டைலிஸ்ட், மேக்கப் ஆர்டிஸ்ட்..”

“போதும் போதும் தம்பு நிஜமாவே பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்களா? நம்ப முடியலை..”

“இல்லம்மா எல்லா பொண்ணுங்களும் இப்படி இல்லை ஒட்டுமொத்தமா அப்படி சொல்லவும் முடியாது.. ஆனா இப்படியும் குறிப்பிட்ட  சதவிகிதம் இருக்கு! என்ன ஒன்னு இந்த ரெண்டு வருஷத்துல அந்த சதவிகிதம் ரொம்பவே கூடியிருக்கு அதான் பிரச்சனை..”

“இதனாலதான் பொண்ணுக்கு தகுதி இருக்கனும்னு சொன்னியாப்பா..?”

“நிச்சயமாம்மா நான் அதை எதிர்பார்க்க கூடாதா?ஆனா ஒரு விஷயம் நான் பேசினவரை எந்த பெண்ணும் தன்னோட நிலையை மறைக்க முயற்சிக்கலை அதுக்கே அவங்களை பாராட்டலாம்.. ஃபைன் அவங்க லைஃப் அவங்க விருப்பபடி வாழறாங்க அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..”

“அது தப்பு சரின்னு சொல்ல நான் யாருமில்லை எனக்கு செட்டாகலை அவ்ளோதான்! அதேநேரம்  என் குழந்தையை சுமக்க போற பொண்ணுக்கு தகுதி இருக்கனும்னு நினைக்கறது என்னோட உரிமை! ஏன்னா இது என் லைஃப் என் விருப்பம்.. இதுல யார் என்னோட பயணிக்கணும்னு நான்தான் முடிவு பண்ணனும்” எனவும் அனைவருக்கும் அவன் கூற வருவது புரிந்தது.

“திருமண பந்தத்தை மதிக்காம பப்புக்கு போயிட்டு ஸ்மோக் பண்ற குடிக்கிற பொண்ணு எப்படி அடுத்த தலைமுறையை நல்ல விதத்துல வளர்க்க முடியும்? இப்போ தப்பெல்லாம் சரியாகிடுச்சு சரின்னு இருந்ததெல்லாம் க்ரிஞ்சாகிடுச்சு.. வாழ்க்கை பற்றின புரிதலே இல்லாம தன் போக்கில் வாழற பொண்ணுங்ககிட்ட என் வாழ்க்கையை ஒப்படைக்க நான் தயாரா இல்லை..”

“கல்யாணத்துக்கு உண்டான மரியாதை கொடுக்கணும் பரஸ்பர மதிப்பும் அடிப்படையான அன்பும் எதிர்பார்க்கிறேன்ம்மா அதனால தான் இந்த டைம் எடுத்துக்குறேன்.. உங்களுக்கு என் பிரென்ட் ராகேஷ் நியாபகம் இருக்குல்ல”

“அவனை எப்படி மறக்க முடியும்..? கல்யாணமான ரெண்டே நாளுல பொண்டாட்டி இறந்ததால அவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா?” என்றார் அபிராமி.

“ஆமா அபிம்மா அந்த பொண்ணு ஒருத்தனை காதலிச்சிட்டு அப்பா அம்மா வற்புறுத்தலுக்காக ராகேஷை கல்யாணம் பண்ணிட்டு இவன்கூடவும் வாழமுடியாம காதலனை மறக்க முடியாம தற்கொலை செய்துடுச்சி.. புதுப்பெண் என்பதால சட்டம் இவனுக்கு எதிரா இருக்கவும் அவன் வார்த்தைகள் எதுவும் எடுபடலை கடைசியா அந்த பொண்ணு அவ ஃபிரென்ட்க்கு அனுப்பின வாய்ஸ் நோட் அடிப்படையில அவளோட சாவுக்கு இவன் காரணமில்லைன்னு ப்ரூவ் பண்ணி வெளியில வந்தவன் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுத்து போயிட்டான்.. அதனாலேயே நீங்க பார்க்கிற பொண்ணுக்கு முதல்ல ஏதாவது லவ் இருக்கான்னு தெரிஞ்சுப்பேன்..” என்று தன் பேச்சு முடிந்தது என்பது போல வசீகரன் தண்ணீரை எடுத்து பருகினான்.

“சரிப்பா எங்களுக்கு புரியுது இனி உன் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்.. அவசரப்பட்டு வாழ்க்கையை இழந்துட கூடாதுன்னு நினைக்கிற உன்னை வற்புறுத்த மாட்டேன்… ஆனா சீக்கிரமே உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைக்கனும்னு வேண்டிகிறோம்..” என்றனர் பெற்றோர்.

“அம்மூ என்னை நம்பு !” என்று தன் நீண்ட நெடிய உரையை முடித்துகொண்ட வசீகரன் சாரதியோடு ஏலகிரிக்கு கிளம்பிவிட அறையில் தளர்வாக சாய்ந்திருந்த மனைவியிடம் மன்றாடி கொண்டிருந்தார்  திருவேங்கடம்.

“உங்களை என்கூட பேச வேண்டாம்னு சொன்னேன்” என்று  குறையாத கோபத்தோடு நாயகி அவர் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டு சொல்லவும்..,

“ஆனா என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுடி!” என்று மனைவியின் முகத்தை தன் கரங்களில் அள்ளிக்கொண்ட திரு,

“ஓகே தப்புதான் ஒத்துக்கறேன் உன்கூட கலந்துக்காம ஜித்துக்கு விதுஷாவை கட்டி வைக்கலாம்னு நான் முடிவு எடுத்தது தப்புதான்.. ஆனா சாகர் அவனோட பிரெண்ட் நம்மகூட சம்பந்தம் செய்துக்க ஆர்வமா இருக்கறதா சொன்னான் அதோட வசீயும் எதுக்கும் பிடிகொடுக்காம போனதால அப்படி சொல்லிட்..” என்று அவர் முடிக்கும் முன்னமே..

“நீங்க முதல்ல அவனை வசீன்னு சொல்றதை நிறுத்துங்க..” என்ற உறுமலோடு கணவனின் கரங்களில் இருந்து விலகினார் நாயகி.

“என்ன பேசுற அம்மூ யாரோ ஒரு பொண்ணுக்காக என் பிள்ளையை எனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடகூடாதா..?”

“கூடாது! அதான் அன்னைக்கு தம்பு யாரும் இனி வசீன்னு கூப்பிடகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொன்னானே அப்பவும் இப்படி கூப்பிட்டா என்ன அர்த்தம்? என் பிள்ளையோட உணர்வை நீங்களே மதிக்க மாட்டேங்கறீங்க.. அதான் எந்த பெண்ணை பத்தியும் தீர விசாரிக்காம என் பிள்ளை வாழ்க்கையை படுகுழியில தள்ள பார்த்திருக்கீங்க..”

“அன்னைக்கும் அப்படிதான் என் பையனோட உணர்வை நீங்க மதிக்காம நடந்துகிட்டீங்க  இப்பவும் அப்படிதான்… என்ன நினைச்சிட்டு நீங்க மூத்தவன் இருக்க இளையவனுக்கு கல்யாணம் பண்ண பார்க்கறீங்க..”

“அம்மூ எல்லாமே நம்ம குடும்பத்துக்காக தானடி..”

“ஆகமொத்தத்துல குடும்பத்துக்காகன்னு சொல்லிட்டு இங்க எல்லாமே உங்க இஷ்டம்  அப்படிதானே?”

“ஹே அம்மூ என்ன பேசுற? நான் அப்படியெல்லாம் நினைக்கலைடா வசீயே…” என்று ஆரம்பித்தவர் மனைவியின் முறைப்பில்,

“சரி தம்புவே அதெல்லாம் கடந்து வந்துட்டான்.. இன்னும் அதையே நினைச்சிட்டு இருப்பியா ப்ச் விடு அம்மூ ஸாரி.. இனி அப்படி கூப்பிடலை நீ ஏன் இப்படி பிரிச்சு பேசுற?”

“வேற எப்படி பேச சொல்றீங்க? பெருசா பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பினா போதாது.. நாங்க தான் வீட்டோட இருக்கோம்  நாட்டு நடப்பு எதுவும் தெரியாம இருக்கோம் ஆனா  மிலிட்டரில இருந்து இவ்ளோ பெரிய மீசை வச்சு என்ன ப்ரோஜனம் என் பையனோட எதிர்பார்ப்பு என்னன்னு தெரியாம ஊர் மெச்ச கல்யாணம் பண்றதுல அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? எதுக்காக கிடைச்ச பெண்ணை தலையில கட்ட பார்க்கறீங்க.. உங்க விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு என் பிள்ளை அவஸ்த்தை படவா?”

“இல்லமா தம்பு சொன்ன மாதிரி விதுஷா சாகர் பார்த்து வளர்ந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி வசீயோட எதிர்ப்பார்ப்புல நிச்சயம் இருக்கும் ஆனா அவன் வேலைக்கு போகவேண்டாம் சொல்றது எந்த விதத்துல் நியாயம்?”

“ஏங்க அவன் ஒன்னும் எல்லா பொண்ணுங்களையும் வேலைக்கு போக வேண்டாம் சொல்லலையே தனக்கு வரபோற மனைவி போகாம இருந்தா நல்லா இருக்கும்னு  நினைக்கிறான் இதுல என்ன தப்பு? அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு பாருங்க இவ்ளோ ஏன் எம்எஸ்சி படிச்ச என்னை வேலைக்கு போக வேண்டாம்னு நீங்க சொல்லலாம்.. என் பையன் சொல்லகூடாதா?”

“ஹே எனக்கு வேற வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிட்டே இருந்தது அதோட உங்கப்பாக்கு முடியாம நீயும் தானே..”

“இருக்குல்ல..”

“என்னது?”

“நீங்க என்னை வேலைக்கு போக வேண்டாம் சொன்னதுக்கும் நான் கேட்டுகிட்டதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல! அதேபோல நிச்சயம் தம்புக்கும் இருக்கும் அது புரியாம நீங்க கூட்டிட்டு வந்தீங்களே விதுஷாவா மதுஷாவா? அந்த பொண்ணு ஏதோ அமெரிக்கன் கம்பெனில வேலை செய்யறாளாம் அவளுக்கு வேலை நேரமே சாயங்காலத்துல இருந்து காலையில வரையிலயாம்.

“ஒருவேளை ஜித்துக்கே அந்த பெண்ணை பார்த்திருந்தாகூட இவன் காலையில வேலைக்கு போயிடுவான் அவ சாயங்காலம் வேலைக்கு போயிடுவா? அப்புறம் எங்கிருந்து அவங்க வாழ? வாழவேண்டிய வயசுல வாழாம ரெண்டு பேரும் வெவ்வேறு திக்குல ஓடி என்னத்தை சாதிக்க போறாங்க? உங்களை நம்பி ஒப்படைச்சா என் மூணு பிள்ளைகளோட வாழ்க்கையும் என்னாகுறது..” என்ற மனைவிக்கு பதில் கூற முடியாமல் திணறி போனார் திருவேங்கடம்.

ஆனால் நாயகி விடுவதாக இல்லை.

“அப்பவே என் பையன் இவர் பொண்டாட்டியை மட்டும் இவர் தேர்ந்தெடுக்கலாம் ஆனா நான்  தேர்ந்தெடுக்க கூடாதான்னு கேட்டான் ஆனா நான்தான் அப்பா எது செய்தாலும் சரியா இருக்கும்னு சொன்னேன்.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீங்க சொன்னா அவன் லவ் பண்ணனும் வேண்டாம் சொன்னா பண்ணகூடாது என்ன நியாயங்க இது? சரி அதெல்லாம் விடுங்க முதல்ல நாம கல்யாணம் எதுக்கு பண்றோம் அதை சொல்லுங்க?” என்று கணவரை பிடித்து உலுக்கவும்  ‘அக்கா’ என்று உள்ளே நுழைந்தார் அபி.

“வா அபி..” என்ற திரு மனைவியின் மறுபுறம் சென்று அமர.., ஹாட் பேக்கோடு வந்த அபி “முட்டியில வீக்கம் இருக்காமே டாக்டர்  ஒத்தடம் கொடுக்க சொன்னார்னு ஜித்து சொன்னான் காலை நீட்டுக்கா..”

“என்கிட்டே கொடு அபி நான் பார்த்துக்குறேன்’ என்று திரு கையில் வாங்கிக்கொள்ளவும் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..” என்ற நாயகி ஹாட்பேக்கை பிடுங்கி அபியிடம் கொடுக்க..,

“என்ன மாமா அக்கா இன்னும் சமாதானம் ஆகலையா?” என்றார்  சிரிப்போடு..

“இல்ல..” என்று ஹாட்பேக்கை வாங்கி மனைவியின் காலை பிடித்து தன் மடியில் வைத்து ஒற்றடம் கொடுக்க ஆரம்பிக்கவும்..,

“மாமா நைட்க்கு சப்பாத்தி போடட்டுமா இல்ல ஆப்பமா என்ன பண்ணட்டும்?”

“நீ எதுவும் செய்யாத நான் பார்த்துக்குறேன்..”

“என்ன பார்த்துப்பீங்க? நீங்க பார்த்தவரை போதும் இனி நீங்க ஒன்னும் பார்க்க வேண்டாம்… எல்லாமே நாங்க பார்த்துக்குறோம்..”

“என்.. என்னது?” என்று பதறியவருக்கு மனைவியின் பாராமுகத்தை தாங்கும் சக்தி எப்போதுமே இருந்ததில்லை.

“ப்ளீஸ் அம்மு உனக்கு நான் செய்யற ஆப்பமும் குருமாவும் பிடிக்குமே..” என்றார்.

“நான் தான் வேண்டாம் சொல்லிட்டேனே விடுங்க..”

“அக்கா என்னக்கா இது அதான் மாமா சொல்றாரே நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற?”

“நீ அமைதியா இருடி! இவ்ளோநாள் இவர் செய்யற எல்லாமே சரியா இருக்கும்னு நம்பிவிட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது.. என் பையன் கேட்கிற தகுதியோட ஒரு பெண்ணை பார்க்க முடிஞ்சதா இவரால?”

பொறுமை இழந்த திரு, “ஏன்டி நான் தெரியாம தான் கேட்கிறேன் பார்க்கிற பொண்ணுங்ககிட்ட எல்லாம் அவன் சொன்ன தகுதி இருக்கா இல்லையான்னு கேட்டா பெண்ணை பெத்தவன் என்னை செருப்பால  அடிக்க மாட்டான்… சரி அதுகூட பரவால ஒருவேளை அவன் நம்ம பையனுக்கு குழந்தை கொடுக்குற தகுதி இருக்கான்னு திருப்பி கேட்டா என்ன பண்ணுவ?”

“ஆமாக்கா தம்பு முதல்ல அப்படி சொல்லவும் நானும் மாமா மாதிரி தான் நினைச்சேன்.. யாராவது நம்மளை திருப்பி கேட்டா என்ன பண்றதுன்னு ஒரு நிமிஷம் அரண்டு போயிட்டேன்..”

“வாயை மூடுடி..” என்று தங்கையிடம் கர்ஜித்தவர்,

“என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு என் பையனை தெரியும் தம்பு இன்னைக்கு அவன் மனசுல இருக்க மொத்தமும்  சொல்லலை இதெல்லாம் தாண்டி அவன் மனசுல ஏதோ இருக்கு.. அவன் சொன்னதோட அர்த்தம் நிச்சயம் தப்பா இருக்காது அதை புரிஞ்சுக்காம நீங்களே இப்படி  பேசலாமா?”

“அம்மூ எனக்கும் தம்புவை புரியுது ஆனா எப்படி என்னன்னு சொல்லி பொண்ணு கேட்கிறதுனு தெரில..”

“போதும் இனி நீங்க இதுல தலையிடாதீங்க.. என் பையனுக்கு நானே பொண்ணு பார்த்துக்குறேன் அதுவும் அவன் கேட்ட சகல தகுதியோட..” என்றவர் திரு அங்கேயே நிற்பதை கண்டு,

“போங்க போய் இன்னும் அரைமணி நேரத்துல ஆப்பம் கொண்டு வந்தா சாப்பிடுறேன் இல்ல..” என்று அவர் முடிக்கும் முன்னமே சமையலறைக்குள் நுழைந்திருந்தார் திருவேங்கடம்.

“சரிக்கா நான் போய் மாமாக்கு ஹெல்ப் பண்றேன்..”

“அதெல்லாம் வேண்டாம் நீ ப்ரணவ வரசொல்லுடி..” என்றார் குறையாத கோபத்தோடு

“எதுக்குக்கா?”

“கூப்பிட போறியா இல்லையா?” என்றதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மகனோடு வந்தார் அபி…

“கண்ணா ஒரு நோட்புக்,  பேனா  எடுத்துட்டு வாப்பா..” என்றதும் மறுபேச்சு பேசாமல் அவர் கேட்ட பொருட்களுடன் பிரணவ் வந்து சேர்ந்தான்.

“உங்க அண்ணன் சொன்னதை எல்லாம் லிஸ்ட் போடு..” என்றார்.

“என்ன லிஸ்ட் அம்மும்மா?”

“அதுதான் ராஜா அவனுக்கு வரபோற மனைவி குடும்பத்துக்கு மதிப்பு கொடுக்கணும், கல்யாணத்தின் மேல நம்பிக்கை இருக்கணும், குடிக்க கூடாதுன்னு அவன் சொன்ன எல்லா கண்டிஷனையும் லிஸ்ட் போடு..”

“எதுக்குக்கா?”

“உனக்கு வேற தனியா சொல்லனுமா? நீ எழுது கண்ணா..” என்று மகனின் எதிர்பார்ப்புகளை பட்டியலிட தொடங்கினார்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Super Amma… Avangale ipa ponnu pakka kalathula irankitanga… 🙂

  2. தெளிவான புரிதலோட இருக்கான் வசி. வசி ஏன்பா உன்னை வசி என்டு கூப்பிட கூடாது? காரணம் என்ன வசி? 🙃

    திருபா நாயகிமா பேச்சுவார்த்தை அழகா இருக்கு 😍😍

    இவங்க காதலும் அன்பும் நிரம்ப நிரம்ப அழகு.

    தம்பு என்டு கூப்பிடுவது ரொம்ப அழகா இருக்கு. நானும் என் பையனை அப்படி தான் கூப்பிடுவேன் சின்னதுல இருந்து.

    நாயகிமா சொல்றது சரி தான், Military மீசை வெச்சா மட்டும் பத்தாது பையனோட உணர்வுகளை புரிஞ்சுக்கணும் நீங்க போய் ஆப்பம் சுடுங்க திருபா.

  3. என்ன திரு சார் நீங்கதான் டெரர்னு நினைச்சா நாயகி தான் டெரர் போலயே … மகனுக்காக பொண்ணை கண்டுபிடிச்சிடுவாங்க போல …