Loading

 

 

 

KKEN-8
” ஏண்டா! என்னடா மார்க் இது? நாப்பது அம்பதுன்னு. இதுக்கு எதுக்குடா நீ இஸ்கூலுக்கு போற? அடி விழும். தந்தை அடித்தவுடன் ரோஷம் வரும். நன்றாக படிப்பான். அடுத்த சில நாட்களில் அக்காவுக்கு காலில் கஞ்சி கொட்டும். அல்லது கையில் சுட்டுக் கொள்வாள் . இப்படித் தான். மீண்டும் கவனம் வீட்டு விஷயங்களில் சென்று விடும்.
“அக்கா என்னக்கா உன்னோட துணி எல்லாம் இப்படி கறையா இருக்கு?”
சிறு பெண்ணுக்கு விவரம் புரியவில்லை. ‘தனக்கு எங்காவது அடிபட்டிருக்கிறதா. இல்லையே?’
பள்ளியில் விவரம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். எதற்கும் பக்கத்துக்கு வீட்டு பாட்டியிடம் கேட்போம். அருகில் இருந்தவர்கள் வந்தார்கள் அவர்களே காசு போட்டு நல்லது நடத்தினார்கள். பணம் இருப்பதே தகுதியாக வைத்திருக்கும் பணம் படைத்தவர்களை விட இப்படிப்பட்ட சாதாரண மனிதர்கள் தான் உண்மையில் உயர்ந்தவர்கள்.
“வுடு! எதுக்கும் கவலை படாத! மலருக்கு எல்லாம் நல்லது தான் நடந்திருக்கு” அசால்ட்டாக தைரியம் சொன்னார்கள்.
“வெற்றி! வெற்றி!’
“என்னக்கா?”
“டேய் தனியா படுக்க பயமா இருக்குடா. பேய் கனவு வருதுடா.”
“சரிக்கா! நான் கூட இருக்கேன். நீ தூங்கு” இரவில் அக்காவின் தலைக் கோதி தூங்க வைப்பான். விடியலில் தந்தைக்கு தெரியாமல் தன் இடம் வந்து விடுவான். இப்போதும் மலருக்கு அந்த நாட்களில் இரவில் பயம் தான். கணவன் அருகில் இருப்பான். அவனிடம் விருந்து வரும் சாராய வாடைக்கு பேய் கனவே பரவாயில்லை என்று தோன்றும். அதிலும் அவனிடம் சென்றால் அந்த நாள் இந்த நாள் என்று எல்லாம் பார்க்க மாட்டான். சக்கையாக்கிவிடுவான். தேவையா இது? பயத்துடன் பெட்ஷீட்டை வைத்து முகத்தை மூடிக் கொள்வாள்.
மலருக்கு இருந்த கஷ்டம் புவிக்கு இல்லை. தங்கை பெரியவள் ஆனபோது அண்ணனும் அக்காவும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். அக்கா வாய்க்கு ருசியாக செய்து போட்டாள் . சத்துக்கு களி செய்து கொடுத்தாள் . தனக்கு கிடைக்காதது எல்லாம் அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று அனைவருமே கஷ்டப்பட்டார்கள். நல்ல படிப்பு நல்ல வேலை எல்லாம் கிடைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் அவள்தான் எதுவும் வேண்டாம் என்று பதினொன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் சாதனையை செய்து விட்டாளே !
படிப்பில் ஆர்வம் இருந்த மலர் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து எக்ஸ்போர்டில் வேலைக்கு போனாள் . வெற்றியும் அதே போல பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆட்டோ ஓட்டினான்.
சில வாரங்கள் வேலைக்குச் சென்ற மலர் தந்தையின் உற்ற தோழனாகிய இன்னொரு குடிகாரனுக்கு மனைவி ஆனாள் . வெற்றியின் பிடிவாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. தந்தையின் அதிகாரமே அங்கே வலுவாக நின்றது. மகன் ஆசைப்பட்டு விட்டான். அதனால் திருமணம். இல்லை என்றால் இவர்கள் போட்ட ஐந்து சவரனுக்கு யார் மாப்பிள்ளை தருவார்கள்? இப்படியேத்தான் மலரின் மாமியார் அவளை கொடுமை படுத்தினாள் . குழந்தையும் இல்லாமல் போகவே இன்னும் கேட்கவே வேண்டாம்.
====================================
வழக்கம் போலவே வித்யாவின் கல்லூரி பயணம் வெற்றியுடன் வெற்றிகரமாகவே நடந்து கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வெற்றியுடன் அவள் ரொம்பவே பேச ஆரம்பித்திருந்தாள். அவனும் தான் . மலரிடம் அவன் அப்படித்தான் இருப்பான். காலை எழுந்தது முதல் இரவு வரை அத்தனையும் ஒப்பித்து விடுவான். இடையில் அவள் இல்லாத இடத்தை இவள் போக்கி இருந்தாள் . அவள் கல்லூரி முடிந்தால்? இருவருக்கும் திண்டாட்டம்தான். முன்பெல்லாம் வளவளக்கும் மகள் இப்போதெல்லாம் அத்தனை பேசுவதில்லையே? காயத்ரி கவனிக்க ஆரம்பித்தார். அவரும் இதை எல்லாம் கடந்து வந்தவர்தான்.
முகத்தில் தாடி மழிக்கப் படாமல் இருக்கும் அண்ணன் இப்போதெல்லாம் துளி கூட தாடி வளரவிடுவதில்லையே? அவன் தங்கைக்கும் ஆச்சர்யம்தான். அது என்ன தினமும் இஸ்திரி போட்ட டிரஸ்? யோசிக்க ஆரம்பித்தாள்.
“என்ன வெற்றி இது? ட்ரெஸ் கசங்கி இருக்கு?”
“துவைச்சதுதான் மேடம்”
“அது சரி இப்டி கசங்கி போன சட்டையை போட்டா யாரு உன்ன மதிப்பா? சவாரிக்கு போகற இடத்துல உன்ன எப்படி பார்ப்பாங்க? அதுதான் ஆரம்பம். அப்போதில் இருந்துதான் அவளை புரிந்து கொண்டான். அவளுக்கு எது புடிக்கும் புடிக்காது தெரிந்து கொண்டான். செர்ரி கேக் புடிக்கும். அடர் நீலம் புடிக்கும். கசங்கிய துணி புடிக்காது. கிழிந்த பர்ஸ் புடிக்காது. இன்னும் நிறைய விஷயங்களை அவன் தெரிந்து கொண்டான். வெற்றிக்கு எது புடிக்கும்? அவனுக்கு இந்த உலகத்தில் பிடித்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். அது மலர். அவளைத் தவிர அவனுக்கு இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அதைத் தெரிந்து கொண்டவளுக்கு அந்த லிஸ்டில் அவளும் உண்டு என்பதை அவன் எப்படி வெளிப்படுத்துவான்?

அவளுக்கு பிடித்த அடர் நீலத்தில் புடவை கட்டி வந்திருந்தாள் . நிச்சயம் தேவதைதான்.
“எப்படி இருக்கேன் வெற்றி? நல்லா இருக்கேனா?”
“ட்ரெஸ் சூப்பர் மேடம்”
இவள் முகம் சுருங்கியது. அப்போது முதல் வாயே திறக்கவில்லை. அவள் கோபம் அவனுக்கு புரிந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டு வந்தான்.
சிக்கனலில் பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். இரண்டு முழம் வாங்கினான்.
“எனக்கு ஒன்னும் பூ வேணாம்” மூஞ்சியை திருப்பிக் கொண்டாள் .
“நான் வண்டிக்குத்தானே வாங்கினேன்” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
மிளகாவை முழுங்கியது போல இருந்தாள் .
சில நிமிடம் கழித்து வண்டியை ஓரம் கட்டியவன் அவளிடம் பூவை நீட்டினான்.
“உங்களுக்காகத்தான் வாங்கினேன்”
நான்காக மடித்து வைத்துக் கொண்டாள்.
“இப்ப தான் என் ராசாத்தி” முகம் வழித்து திருஷ்டி எடுத்தான்.
“ஏ! என்ன? பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?”
“அசோ சாரி மேடம் . பாப்பாவை இப்படித்தான் கொஞ்சுவேன். அதே பழக்கத்துல சாரி மேடம்”அவன் உலகமே மலரும் பாப்பாவும்தான் அவளுக்கு தெரியும். அதனால் அவன் சொன்னதை அவளால் தவறாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன் அது அவளுக்கும் பிடித்திருந்தது. இப்போதும் அவள் முகம் சிவந்துதான் இருந்தது. ஆனால் கோபத்தினால் அல்ல.
இன்று கல்லூரி ஆண்டு விழா . சிறப்பு விருந்தினர்? நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் நம் ஆணழகன் அதிபன் தான் .
ஆங்காங்கு இருந்த ஒரு சில நரைத்த முடி கூட அவன் அழகை பேச அங்கே இருந்த பெண்கள் பேசாமலா இருப்பார்கள். ரசித்தான். அத்தனையும் ரசித்தான். அத்தனை பெண்களையும் ரசித்தான். சிலர் சுமாராக இருந்தார்கள். பலர் அழகிகளாகவே இருந்தார்கள். வயதா? இளமையா , மேக்கப்பா ? எதுவாக இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை.

இரு பெண்கள் வந்து தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். வித்யாதான் ஹோஸ்டிங் செய்து கொண்டு இருந்தாள் . ஒவ்வொரு முறையும் அவள் பேசும் போதும் இவன் மனம் காற்றில் மிதந்தது. மற்ற பெண்களை பார்க்கும்போது அவனுக்கு ஆண்மைதான் வெளிப்படும். ஆனால்
இவளைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு காதல் வெளிப்பட்டது.
“அம்மா! சும்மா நொய் நொய் னு உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப்பாரு கல்யாணம் கல்யாணன்னு”
“ஏன்டா! இப்டி சொல்லி சொல்லியே ஒனக்கு இந்த ஜூலை வந்தா முப்பது ஒன்னுடா. என்ன அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கியா?” இயல்பாக அன்னைக்கு வரும் கவலை.
“ஒருத்திய பார்த்தா இவதான் எனக்குன்னு தோணனும்” (அவள் இவளா?)
“ஏன்டா! முதல்ல ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கோ. அப்டி யாரையாச்சும் பார்த்த வச்சுக்கோ. இதெல்லாம் ஒரு விஷயமா?”
சொன்ன தந்தையை முறைத்து விட்டுச் சென்றான்.
“அது நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா?” அந்த பார்வையின் அர்த்தம் அதுதான். முதலில் எல்லாம் வித்யா மீது பெரியதாக எண்ணம் இல்லாதவன் பிறகு வந்த நாட்களில் மனதை தொலைக்க ஆரம்பித்தான். நான் சொல்லுவது தி கிரேட் அதிபனை பற்றித்தான். அதிபன் அருணாச்சலம் வாழ்வில் வித்யா கொண்டு வர போகும் மாற்றம் என்ன? இல்லை வித்யாவின் வாழ்க்கை தான் இவனால் மாறுமா?
சிலரை பார்க்க பார்க்கத்தான் புடிக்கும் என்பார்களே அது போலத்தான். அதையே தான் இங்கு வித்யாவும் செய்துக் கொண்டிருக்கிறாள். சிலரை பார்க்க பார்க்கத் தான் புடிக்குமாம். வெற்றியை இவளுக்கு பிடிக்க அதுவா காரணம்?
ஒரு நாள் இவள் வண்டியில் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும்போது ரோடு மிக மோசமாக இருந்தது. நிறைய பள்ளம் மேட்டில் ஏறி இறங்கியதும் இவளுக்கு பீரியட்ஸ் வந்து விட்டது. பர்ஸை துழாவினாள். அது இல்லை. நாட்கள் வந்திருப்பதை மிஸ் செய்து விட்டாள் . அன்னையும் நினைவு படுத்தவில்லை. இப்போது எப்படி? இவள் முகம் வெளிறி இருப்பதை கண்டு கொண்டான்.
“மேடம் ஏதாவது சொல்லனுமா?”
“ம்ம் ” தலையை மட்டுமே ஆட்டினாள்.
இவள் சரியாக உட்கார முடியாமல் தவிப்பதை பார்த்து புரிந்து கொண்டான்.
மருந்தகம் வாயிலில் நிறுத்தியவன் அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து அடுத்து வந்த பெட்ரோல் பங்கில் நிறுத்தினான்.
வெளியில் வந்தவளுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.
“அவனுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும். எப்படி?” கூச்சமாக இருந்தது.
அவளுக்கு தேவையானதையும் செய்து கல்லூரிக்கும் தாமதமாகாமல் அழைத்து வந்து விட்டானே? பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பாராட்டினாள் . மனதிற்குள்.
“தேங்க்ஸ்” இறங்கும்போது சொன்னாள் .
“மேடம்! இந்த மாதிரி நாள்ல நல்ல அடர்ந்த நிறமா உடுப்பு போடுங்க.”
அவளிடம் இது என்ன உரிமை? அவன் அதை எல்லாம் யோசிக்கவில்லை. அவனுக்குத் தன் உடன் பிறந்தவர்களிடம் பேசுவது போலவே உரிமையுடன் பேசினான். அந்த உரிமையின் பெயர் என்ன?
மாலையில் அவளிடம் , அதற்கு மன்னிப்பு கேட்டான்.
“சாரி மேடம், உங்க கிட்ட காலைல கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேன்”
“இட்ஸ் ஓகே!”
அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னிடம் பேசுவது இன்று இயல்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்டான். இன்று மட்டுமல்ல. இன்னும் சில நாட்கள் அப்படித்தானே இருக்கும்.

அன்று இரவு முழுவதும் வெற்றி தான் அவள் நினைவில் நின்றான். எத்தனையோ ஆண்கள் செய்ய முடியாத சாதனை வித்யாவின் நெஞ்சில் நுழைவது. அதில் வெற்றி, வெற்றி கண்டுவிட்டான். இந்த சம்பவம் ஒரு சிறு காரணம் மட்டுமே. வெற்றி எப்போதுமே தன்னுடைய வீட்டு பெண்களின் நினைவாகவே இருப்பது தான் முக்கிய காரணம்.
“மேடம்! இந்தாங்க இந்த பால்கோவா சாப்பிட்டு பாருங்களேன். உங்களுக்கு ரொம்ப புடிக்கும்”
“சாரி வெற்றி! நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன்”
“ப்ச்! நீங்க சாப்பிட மாட்டிங்கன்னு தெரியும். ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா. பாப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். அது கேட்டுச்சுன்னுதான் வாங்கிட்டு போறேன். அம்மாவுக்கும் குடுங்க. ரொம்ப புடிக்கும்”
‘தன் அன்னையை பற்றியும் நினைக்கிறானே ?’
அன்னை சாப்பிடும்போது சிறிது டேஸ்ட் பண்ணினாள் . அவன் சொன்னது சரிதான் உண்மையிலேயே அன்னைக்கும் ரொம்ப பிடித்தது.
காதல் வரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்