Loading

 

KKEN-40

இது எல்லாம் ரவிக்குத் தெரியாமல் செய்வதாக வேறு மேடத்துக்கு நினைப்பு. வரும் புன்னகையை அவனின் உதட்டுக்குள் அவன் மறைத்து வைக்க அவன் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.

நம் வெற்றியும் அங்கே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.

வித்யாவும் வெற்றியும் குழந்தையுடன் வெளியில் சென்றார்கள். வெற்றியின் பிடிவாதம் தான். வழக்கம்போலவே அவனை ரசித்துக் கொண்டு இல்லை சைட் அடித்துக் கொண்டு வந்தாள் .
ஸ்டியரிங் வீலில் கை  வைத்து தாளம்  தட்டிக் கொண்டிருந்தான். சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தவன் அவள் கையை பிடித்து தன கைக்குள் வைத்து கொண்டான்.
“ஒரே ஒரு தடவை கரி சட்டி சொல்லுடி”
“இல்லை ” தலை ஆட்டினாள். இப்போது அவள் இருக்கும் மன நிலையில் கரி சட்டி சொன்னால் அவன் கன்னத்தை கடித்து விடுவாள். வேண்டாம்.
அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இங்கு  ரவியும் தான் மனைவியுடன் வெளியில் வந்திருந்தான்.
முகத்தை திருப்பி மீனுவுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். மீனு தூங்கி விட்டாள் .
“அதான்  புள்ள தூங்கிருச்சு இல்ல? புருஷனை  சைட் அடிக்க வேண்டியது தானே?”
“என்ன இவங்க இப்டி அசிங்கமா பேசறாங்க?”
“அசிங்கமெல்லாம் இல்லடி. புருஷன் டீ ”
“மனசுல கூட பேச முடியாது போல் இருக்கே” கொடிதான் ஆச்சர்யப்பட்டுப்போனாள் .
“முடியாது! முடியாது!” அவன் தான்.
இவளும் கவனித்து கொண்டுதான் இருக்கிறாள். அவன் போகும் இடமெல்லாம் பெண்கள் அவனையே வெறித்து பார்ப்பதை. முன்பெல்லாம் அதைப் பற்றி தெரியும். ஆனால் கவலைப்பட்டதில்லை.  இப்போதும்  தெரிகிறது. கூடவே உரிமையுடன் கவலையும் வந்து விடுகிறது.
இரவில் வந்து அவன் தூங்கும்போது மீசையில் கிள்ளி கொஞ்சினாள்.
“இன்னும் கொஞ்சம் கொஞ்சுடி. அம்மா இல்லாத புள்ள.”
இதற்கு மேல் அவள் ஏன் அவள் தன்னை காட்டிக் கொள்ள போகிறாள்?
இன்று வெற்றியின் பிறந்த நாள் .
ஆசையுடன், “எனக்கு ஒரு சட்டை வாங்கி தாடி”
மனைவியிடம் வந்து நின்றான்.
அவனுடன் அவனின் பிறந்த நாளுக்கு ஏற்கனவே கடைக்குச் சென்ற நினைவு வந்தது. இவள் பிறந்த நாளைக்கு எத்தனை ஆசையாக சுடிதார் எடுத்து அக்காவிடம் தைக்கச் சொல்லி இவளுக்கு பரிசளித்தான் .
அதுவே இப்போது அவன் வந்து எனக்கு சாட்டை எடுத்துக் கொடு என்று உரிமையாக கேட்கவும் இவளோப் பிடிவாதமாக முடியாது என்று விட்டாள். அவனுக்கு உரிமை உள்ளவர்கள் மட்டுமே அவனுக்கு வாங்கித் தர வேண்டும். புவி வாங்கி கொடுத்தாள். அவன் தந்தை , ரவி, மலர், இவள் பெற்றோர்  அனைவருமே பரிசுகள் கொடுத்தார்கள் இவள் தான் எதுவுமே கொடுக்கவில்லை. இதோ கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அவள் மனம் கறையவில்லை.
“புருஷா! புருஷானு நீ சொல்லி சொல்லி பின்னாடியே வரும்போது எனக்கு அவளோ சந்தோஷமா இருக்கும். உன் முன்னே வெக்கத்தை காமிக்காம மறைச்சுருக்கேன். அது எதுவுமே பொய் இல்லை. எனக்குத் தெரியும், என்னோட தியாவை பத்தி. அவளுக்கு பொய் வராது. நடிப்பு வராது. இப்பவும் நீ உண்மையாதான் இருக்க. அவன் வேணடாம் தியா . அவனைத் தூக்கி எரிஞ்சுடு . உன்னோட புருஷன் நான்தாண்டி நிஜம். செத்துப் போனவனை எதுக்குடி உன்னோட கற்பனைல வாழ வச்சிகிட்டு இருக்க ?
இப்போதும் அவளிடமிருந்து மவுனம்தான் பதிலாக வந்தது.
‘தியா எனக்கு உண்மையா சொல்லு. அவன் உன்ன*** பன்னதுக்காக மட்டும் நீ என்னை ஒதுக்கலை .வேற எதுவோ இருக்கு. என்னன்னு சொல்லும்மா. சொன்னாத் தானே ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க முடியும் . எனக்கு என்னோட பழைய தியா வேணும். புருஷா புருஷான்னு என்னை சுத்தி சுத்தி வரணும். என்னை மட்டும் சுத்திக்கிட்டு ப்ளீஸ் தியா .”
இரண்டு கைகளாலும் முகம் மூடி சிறிது நேரம் விம்மினாள்.
“நீ சொல்லறது சரிதான் வெற்றி. நான் இன்னிக்கு இதை சொல்லலைன்னா என்னிக்குமே சொல்வேனா தெரியல. அவன் அன்னிக்கு ன்னை தூக்கிட்டு போகும் போது கண் முழிச்சு பார்த்து நான் ரொம்ப அழுதேன். அவன் கிட்ட சண்டை போட்டேன். அப்ப அவன் சொன்னான். இந்த வயசுலயும் உங்க அம்மா டக்கர் பிகருதான். எனக்கு தான் நீ இருக்கியே! எனக்கு வேணாம். ஆனா பசங்க ஏதாவது பண்ணா நான் பொறுப்பில்லை. நீ ஒழுங்கா இருந்தா பசங்களை வீட்டுக்கு வர சொல்லிடுவேன்னு என்னை மிரட்டினான். எங்க அம்மாவுக்காக அவங்க ***காப்பாத்த அவன் சொன்ன மாதிரி எல்லாம் செய்தேன். என்னால அதை நினைச்சு கூட பாக்க முடியலை வெற்றி.”
இந்த விஷயம் வெற்றியை பெரியதாக பாதிக்கவில்லை. அவனுக்குத் தான் அதிபன் பற்றி நன்றாகவேத் தெரியுமே .
முகம் மூடி அழுதவளின் கைகளைப் பிரித்து தன் நெஞ்சொடு கட்டிக் கொண்டான்.
இந்த அணைப்பு இல்லாமல் தன் இத்தனை நாட்களாக அவள் மனதிற்குள் செத்துக் கொண்டிருக்கிறாள்.
சற்று நேரத்தில் அவளின் அழுகை நின்றது. மனம் சமாதானம் ஆகியதாத் தெரியாது . அப்போது உதி “அப்பா” என்று அலறினாள். அனைவரும் வந்து பார்த்தபோது காயத்ரி கொண்டு வந்து வைத்த சாம்பாரை கையில் கொட்டிக் கொண்டாள் . அவசரமாக அவளைத் தூக்கியவன் உடனே ஷவரில் நிற்க வைத்து மருத்துவரிடம் ஓடினார்கள். கெட்டதிலும்  ஒரு நல்லதாக அங்கேயே ஒரு குழந்தை மருத்துவரும் இருந்தார். நேரம் தாமதிக்காமல் சென்றதில் குழந்தைக்கு பெரியதாக காயம் எதுவும் இல்லை.  இருந்தாலும் ஊசி போட்டதில் இவன் கையிலேயே உறங்கி இருந்தாள் உதி.
வீட்டிற்கு வந்தவனும் அசதியில் அப்படியே உறங்கிப் போனான்.
“வெற்றி!” அமர்ந்து கொண்டே உறங்கியவனை மெதுவாக எழுப்பினாள் வித்யா. அவனைப் பார்க்கவே இவளுக்குப் பாவமாக இருந்தது.
‘இவன் என்னிடம் என்ன கேட்டான்? பிறந்த நாளைக்கு ஒரு துணி. அது கூட ஏன் என்னால் வாங்க முடியவில்லை. தூக்கி ஏறிய வேண்டும். அவன் ஆசைப்பட்ட படி எல்லாவற்றையும் தூக்கி எறியப் போகிறேன். பழைய சிந்தனைகளை தூக்கி எறியப் போகிறேன். இவன்தான் என் புருஷன். என் குழந்தைக்கு அப்பா. கையில் சூடு பட்ட பொது அவள் அழைத்து அவனைத் தான். அவளுக்கு அவனாய்த் தான் அப்பாவாகத் தெரியும். நான் தான் தப்பு செய்து விட்டேன். என் குழந்தை யார் வேண்டும் என்று காட்டிவிட்டாள்
மனதை மாற்றிக் கொண்டாள் வித்யா .
“வெற்றி! வாங்க சாப்பிடலாம்” மெதுவாக தோள் தட்டி எழுப்பினாள். இவர்கள் வீட்டிலேயே உணவை முடித்துக் கொண்டான்.
எனக்குத் தெரிந்து இது தான் அவனை இவள் சாப்பிட அழைத்திருப்பது முதல் முறை .
மாலையில், தயங்கியபடியே அன்னையிடம் வந்து நின்றவள் ,
“அம்மா! இன்னிக்கு உதிய  நீங்க  படுக்க வச்சுக்கறீங்களா?”
தலைக் குனிந்து தயக்கத்துடன் அன்னையிடம் வந்து நின்றாள் மகள் .
அர்த்தம் புரிந்த அன்னைக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. முக்கியமாக வெற்றியிடம். மகளின் ஆசைக்காகத் தான்.
“தம்பி! இன்னிக்கு ஒரு நாள் இங்கையே இருங்களேன். உங்களுக்கு பிறந்த நாள். ராத்திரிக்கு நானே சமைச்சு போடணும் போல இருக்கு.”
“சரிங்க அத்தை ”
மருமகனுக்காக வித விதமாக பட்சணங்கள் இனிப்புகள் செய்தார் காயத்ரி . வெற்றிக்கு எத்தனை செய்தாலும் போதாது. மகளுக்காக மகளின் வாழ்வுக்காக தன்னால் முடிந்த எல்லாம் செய்தார்.
மகளை தனியே அழைத்தவர்,
“சீக்கிரமா இன்னொரு குழந்தை பெத்துக்க வித்யா.” என்றார். அன்னை சொல்வதன் அர்த்தம் ஓரளவு விளங்கியது.
“அதே மாதிரி இன்னொரு விஷயம் வித்யா. வெற்றி கூட நீ இருக்கும்போது உனக்கு வேற எந்த நினைப்பும் வரக் கூடாது புரிஞ்சுதா?”
“அதுக்குத் தானே இத்தனை நாள் போராடி இருக்கேன். என்னோட மனப் போராட்டம் உனக்குத் தெரியாதா?”
“வேண்டாம் வித்யா. எதுவுமே நமக்கு வேணாம். இந்த புது வாழ்க்கை. இதை நாம எல்லாருமே வாழலாம் வித்யா. ”
மகளுக்கு அறிவுரைக்கு கூறிக் கொண்டே அலங்கரித்து விட்டார் அன்னை.
தேவ உலகத்து மங்கை எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா லட்டு எப்படி இருக்கும்னு தெரியுமே. உங்களுக்குத் தெரியும்தானே! அசோ! அசோ! இவ்ளோ அழகா இருந்தா எனக்கே தாங்கலையே . வெற்றி என்ன பண்ணுவான்?
அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். விஜயனுக்கும் விஷயம் புரிந்தது.
தலை நிறைய பூவுடன் புது தியா. தியா அவளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி அவன் கொஞ்சினான்.  பொலிவுடன் வந்து நிற்கும் வித்யா. அவனின் பழைய வித்யாதான். அவனுக்குப் புரிந்தது. அவள் ஆசைபட்டப்படியே அவனின் கழுத்து செயின் அவன் மேல் பட்டு அவள் உதட்டில், முகத்தில், கழுத்தில் எல்லா இடங்களிலும் கொஞ்சி உறவாடியது.
“பர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவா கேட்டியே” காட்டவா ?”
“ம் !” என்ற முனகல் சத்தமே அவனுக்குப் போதும் .
கரி சட்டி சொல்லி சொல்லிக் கொஞ்சினாள். அவனை ஆசைத் தீர கடித்தாள் .
‘ஏண்டி நான் அவ்ளோ கெஞ்சியும் எனக்கு ஷர்ட் வாங்கி தர முடியாதுன்னு சொன்ன?” கலைந்திருந்த தலை முடியை காதிர்ந் ஓரம் ஒதுக்கியவனுக்கு அவள் பதில் கேள்வி தான் கேட்டாள் .
“ஒனக்கு எதுக்குடா சட்டை ?” உதட்டில் கடித்து அர்த்தத்தை புரிய வைத்தாள் .
இங்கே ரவியும் மனைவிக்கு காதலையும் காமத்தையும் புரிய வைத்துக் கொண்டிருந்தான். என்னதான் அவளை பாடாய் படுத்தினாலும், ஏனோ மலரை அவ்வளவு எளிதில்  ரவியால் அவளை மசிய வைக்க முடியவில்லை. நாட்கள் நகர்ந்தாலும் அவன் விடுவதாக இல்லை. அவளுக்கே அவன் மீது ஈடுபாடு வர ஆரம்பித்தது.
“வெற்றி! எனக்கு அவரோட வாழனுன்னு ஆசையா இருக்குடா”
“நல்ல விஷயம் தானே? அவருகிட்ட சொல்ல வேண்டியதை எங்கிட்ட சொல்லற?”
“இல்ல வெற்றி….”ஏதோ சொன்னாள் .
மகிழ்ச்சியுடன் கணவனிடம் இன்று தன் காதலைச் சொல்ல வேண்டும் காத்திருந்தாள்.
வீட்டுக்கு வந்தவன் முகம் சரி இல்லை. அவளின் முகம் பார்த்தவன் சுற்றி வளைக்கவில்லை. நேரடியாகவே
“உன்னோட புருஷன் எப்படி இறந்தான்? அவன் பேரு என்ன?”
“இப்ப எதுக்கு அதெல்லாம் ?”
அவள் மறக்க வேண்டியது என்று நினைத்து ஒதுக்க ஆரம்பித்தவளுக்கு அவனே அதைப் பற்றி கேட்டது பிடிக்கவில்லை.
“ஏன் உன்னோட பிளான் எல்லாம் எனக்கு தெரிஞ்சுடுமோன்னு பயமா இருக்கா ?”
“ப்ளானா ? என்ன பிளான் ?
இவளுக்கு எதுவும் புரியவில்லை.
“உன்னோட புருஷன் என்னோட அப்பாவையும் அண்ணனையும் வண்டி ஏத்தி கொல்லுவான் . நீ குழந்தையை காப்பாத்தற மாதிரி வந்து நடிச்சு என்ன கல்யாணம் பண்ணி மொத்த சொத்தையும் அபகரிக்க பாக்கறியா? அப்புறம் என்னையும் போட்டு தள்ளிட்டு அவன் கூட போகலான்னு நினைச்சியா ? அவன் உண்மையிலேயே இருக்கானா ? செத்துட்டானா ? கோபத்தில் தாறு மாறாக வந்த வார்த்தைகள்.
இரண்டு கன்னங்களிலும் அறைந்தான். பிறகு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் அவள் கையை பிடித்து இழுத்து வீட்டிற்கு வெளியில் தள்ளினான்.
“இனிமே ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது. போடி வெளில”
இரண்டு நாட்கள் சென்றன. மீனுவுக்கு அன்னை இல்லாமல் ஜுரம் வந்து விட்டது. ரவியால் சமாளிக்க முடியவில்லை. போனில் அழைத்தான். மலரும் வீராப்பு பார்க்கவில்லை. ஓடி வந்தாள் . குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.
“நானும்  அம்மா இல்லாத புள்ள தாண்டி” சொல்லி விட்டு  முகம் திருப்பிக் கொண்டான்.
ஓடி வந்து அவனுக்கு முகமெங்கும் முத்தமிட்டாள்.
“நான் சத்தியமா உங்கள ஏமாத்தல . அவருதான் அந்த விபத்துக்கு காரணம்னு எனக்கு தெரியவே தெரியாது. ப்ளீஸ் என்ன நம்புங்க.”
“நான் அவரு கூட ஒரு நாள் கூட சநதோஷமா வாழ்ந்ததே இல்ல. அவருக்காக நான் உங்கள ஏமாத்தல. ப்ளீஸ். என்ன நீங்க அடிங்க திட்டுங்க என்ன வேண்ணா  பண்ணுங்க. ஆனா மீனுவை விட்டுட்டு போக சொல்லாதீங்க.” அழுகையினூடே  சொன்னாள் .
“ஓ ! மீனு மட்டும் தான் வேணும். நான் வேண்டாம்.”
“யாரு சொன்னா? உங்க கூட சேர்ந்து வாழனுன்னு எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா? புருஷன்னா உங்க பேரு  மனசுல பதிஞ்சு போச்சு.
அந்தாளு யார் யாருகிட்டயோ போயிட்டு எங்கிட்டயும்  வருவான். எனக்கு ஏதாவது நோய்  இருந்துச்சுன்னா? அதான் போய்  ஒரு புல்  செக் அப் பண்ணிட்டு வந்தேன். டாக்டர் எனக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாங்க. ரிப்போர்ட் பார்த்துட்டு அவ்ளோ சந்தோஷத்தோட உங்ககிட்ட சொல்ல வந்தேன்.  ஆனா நீங்க?”
“என்ன சொல்ல வந்த?”
“உங்கள காதலிக்கறேன்னு”
“சொல்லு”
“என்ன? என்ன சொல்லணும்?”
“டேய் மக்கு புருஷா! உன்ன காதலிக்கறேன்னு”
அதையே அவளும் திருப்பி சொன்னாள் .
“என்ன பார்த்தா மக்குன்னு சொன்னா ? சொன்ன உதடுகளுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான் தன் மெல்லிய முத்தங்களால். பூ கொடுத்தவன் பூ போன்ற முத்தங்களை வாரிக் கொடுக்கத்  தான் வேணும்.
அவர்களின் காதலும்  முத்தங்களும் தொடரும்…
கதை?
சுபம் …….

என்ன மக்களே! எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்ச கதை. ஆறடி ஆண் மகன் கம்பீரமானத் தோற்றம் இது எல்லாமே ஹீரோசுக்கு கொடுத்தே பழக்கப் பட்டுட்டோம் . கரெக்ட்டா ? இதுல வரும் மது, வித்யா, கோடி மலர், லதா இந்த மாதிரி பெண்கள் இந்த சமூகத்துல வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. இல்லையில்லை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கோம். ஒரே நிலையில் தேங்கி விடாமல் நாமளும் அடுத்த அடுத்த நிலைக்கு முன்னேறி போய்கிட்டே இருக்கணும். சரிதானே!
மீண்டும் வேற ஒரு புதுக் கதையோட மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.

எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்