Loading

 

 

 

KKEN-39

 

அவளோ அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் உடல் திருப்பிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவனுக்குத் தான் சங்கடமாகி விட்டது.

‘ரொம்ப ஒவ்வரா வழியறேனோ !” மனதிற்குள் திட்டி இனி இப்படி பேசிக் கூடாது. புருஷன் இல்லாத பொண்ணு அட்வான்டேஜ் எடுத்துக்கற மாதிரி ஆகிடும்.’ தனக்குத் தானே அறிவுரைக் கூறிக் கொண்டான் இந்த நல்லவன்.

ஒரு நாள் வெற்றிக்கு மதியம் பசிக்கிறது என்று உணவு ஆர்டர் செய்தான். அவனுக்கு டெலிவரி செய்தது அவன் தங்கை.

“புவி?”

“சார்! இந்தாங்க உங்க டெலிவரி. ஒரு பேப்பரில் அவள் கைப் பேசி எண்ணை எழுதி கொடுத்துவிட்டு போனாள் .

இரவில் அழைத்தான்.

அவள் கணவனுக்கு தொண்டையில் புற்று நோய் . வேலைக்குச் செல்ல முடியாது. இவள்தான் வேலைக்குச் செல்கிறாள். இப்போதெல்லாம் தந்தையாலும் பெரியதாக வண்டி ஓட்ட முடிவதில்லை.

மறு நாளே அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.

“என்ன மறந்துட்டியா மாமா?”  குழந்தை அழ அணைத்துக் கொண்டான். அவள் ஒன்றும் தங்கையின் குழந்தை அல்ல. தன்னுடைய மகள். தன் அன்னையே எனக்காக வந்து பிறந்தவள். இப்படித் தானே எண்ணி அவளை கையில் வாங்கிய நாள் முதல் வெற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான். குழந்தைக்கு சரி சமமாக அழும் மாமனை பார்த்த புவிக்கும் இப்போது கண் கலங்கியது.

அவர்களின் பாசம் புரிந்தது. அவர்களை பிரித்து எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம்? உணர்ந்து கொண்டாள் .

“நீ ஊதாரித்தனம் பண்ணாதன்னு எத்தனையோ சொல்லியும் நான் கேக்கல. உன்னையும் அந்த பெண்ணையும் கரிச்சு கொட்டினேன். உன்னோட ஆட்டம்  போதும்னு ஆண்டவன் ஓங்கி அடிச்ச போது வலி தாங்க முடியல வெற்றி. ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.”

வீரமாக நான் ஆம்பிள என்ற திமிரில் சுற்றும் அவன் தந்தை இப்போது ஒடுங்கி போய் அமர்ந்திருந்தார். மகள் ஒருத்தியின் சம்பளம் போதவில்லை. உடம்பு முடிந்தாலும் முடியவில்லை என்றாலும் காலையில் எழுந்து வேலைக்குச் சென்று தான் ஆக வேண்டும். மூன்று வேளை சாப்பாடு இல்லை. மதியம் ஏதோ ஒன்று. பெரும்பாலும் கார குழம்புதான் . கழிவறை செல்ல முடிவதில்லை. எரிகிறது. வெகு நேரம் அமர்ந்து வண்டி ஓட்ட முடிவது இல்லை. உட்கார்ந்தால் எரிகிறது.

“நீதான் சோறு போட வேண்டும்” உரிமையாக மகனை சொல்ல முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தை பார்த்துக் கொண்டவன். மலர் என்றால் பார்த்துப்பார்த்து ஏதாவது செய்வாள் . கட்டு செட்டாக குடித்தனம் செய்ய தெரிந்தவள் . அவளும் இப்போது எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. இரவில் கூட ஒன்றோ இரண்டோ தோசை. வயிறு நிறைய பசித்தாலும் அவ்வளவுதான் கிடைக்கும். இருப்பதை தான் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவ்வ போது மருமகனை மருத்துவமனைக்குஅழைத்துச் செல்ல வேண்டும். திரும்பி வந்தால் சுருண்டு படுத்துக் கொள்ளும் அவரைத் தூக்க வேண்டும்.

“என்னப்பா இது? நான் போன் பண்ண போது எதுக்குப்பா சொல்லல?”

“நான் எப்படி டா உரிமையா உன்கிட்ட சொல்ல முடியும். நான் உனக்குன்னு என்னடா செஞ்சுருக்கேன். யாரோ உதவி பண்ணி நீயே சொந்தமா ஒரு தொழில் தொடங்க போறேன்னு சொல்லும்போது எப்பிடிடா எங்களோட கஷ்டத்தை சொல்ல முடியும்?”

“நானும் மலரும் எப்பவுமே உங்களுக்கு வேறுதானே ? அதான் உங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லல. இருக்கட்டும்பா. நீங்க எங்களை வேறையா நினைச்சாலும் நாங்க உங்கள அப்டி நினைக்கல.  மாப்பிளைக்கு சிகிச்சைக்கு பாக்கலாம்.”

“ரொம்ப செலவாகுமேப்பா?”

“நான் பார்த்துக்கறேன் பா. ஏதாவது பண்ணலாம்பா. எங்கையாவது கடன் வாங்கறேன் . எப்படியாவது நம்ம புவி வாழ்க்கையை சரி பண்ணனும்பா. கூட பொறந்தவளுக்கு இது கூட செய்யலைன்னா எங்க மலர் அக்கா வளர்ப்பு தப்பாகிடும்பா .”

குழந்தைக்கு வேறு உடை மாற்றி காரில் ஏற்றிக் கொண்டான். அவனின் உடை மாறி இருந்தது. மனம் அப்படியேத் தான் இருந்தது.

“நான் கூட்டிட்டு போலாமா புவி?”

“என்னடா கேள்வி இது. எப்பவுமே அவ உன்னோட பாப்பா தாண்டா . உண்மையான அன்ப புரிஞ்சுக்காம நான் உன்ன நோகடிச்சது தப்புதாண்டா. தப்புதான்.” முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்.  தோளில்  சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான்.

அவளுக்கு இந்த அணைப்பு நிச்சயம் தேவை. கவலைப் படாத பார்த்துக்கலாம். சொல்ல ஒரு ஆள் இல்லை. தந்தை இருந்தாலும் அவரால் என்ன செய்து விட முடியும்? அழுதாள். சிறிது நேரம் அழுதாள். மனதில் இருந்த பாரம் குறைந்தது. அண்ணனைக் கண்டதில் ஏதோ ஒரு தைரியம் வந்து விட்டது.

கண்ணை துடைத்துக் கொண்டு பாப்பாவை காரில் ஒரு ரவுண்டு அழைத்துப் போனான்.

“நீங்க  யாரும் எதுவும் பேசக் கூடாது. நான் அங்க  வீட்டை ரெடி பண்ணறேன். அங்க வந்துடுங்க.”

“வேண்டாம் வெற்றி. மறுபடியும் கைல காசு பார்த்தா  நான் ஒழுங்கா இருக்க மாட்டேன். இவருக்கு மருத்துவம் மட்டும் பாரு. நானே வேலை செஞ்சி பார்த்துக்கறனே. ஆனா ஒன்னு வெற்றி புள்ளைக்கு பீஸுக்கும் பொறந்த நாளைக்கும் வந்து நிப்பேன் .”

சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அழுகை வெடித்தது. துணியால் வாயை மூடி அழுதாள்.

“அப்டியே போட்டேன்னா தெரியுமா?”கையை ஓங்கி மிரட்டினான்.

அன்று அவன் அடித்தது தவறாக  தெரிந்தது இன்று யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.

மாப்பிள்ளையின் மருத்துவ செலவு அனைத்தையும் வித்யாதான் பார்த்துக் கொண்டாள் .

“தியா எதுக்கு இதெல்லாம்?”

“எதுக்குன்னு ஒனக்கு தெரியாதா? வெற்றி ப்ளீஸ்!”

கண்களில் காதலை வைத்துக் கொண்டும் எதிரில் நிற்கும் அவளிடம் அவனால் எதுவும் பேச முடியாமல் போனது.

“சாப்பிட்டியா?” மனைவியாக ஒரு நாளும் கேட்டதில்லை. இத்தனை பெரிய மருத்துவம் செய்ய நான் தான் உன்னவள் இருக்கிறேன் என்று உரிமையாக வந்து நிற்கிறாள். இந்த உறவு என்ன உறவு அவனுக்குப் புரியவில்லை. வித்யாவுக்கும்தான்.

அவளின் மூளைக்கு அதிபதியாகி அமர்ந்து இருக்கும் அந்த ராட்சசனை அவள் தூரே எறிந்து விட்டால் போதும் . செய்வாளா ?

நல்ல விதமாக மருத்துவமனில் அறுவை சிகிச்சை முடிந்தது. வித்யாவும் அங்கே தான் இருந்தாள் . கவலைப் படாதீங்க! புவிக்கு வாயாலும் சொல்லிக் கொண்டு கைகளையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தையின் வீட்டில் உதி பாபுவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

“எப்படிப்பட்ட பெண் இவள்? ”

வெற்றியின் தந்தை அவளிடம் கை  எடுத்து கும்பிட்டார். இவள் பதில் எதுவும் சொல்லவில்லை. சங்கடமாக உணர்ந்தாள்.

“மாமா ப்ளீஸ்! என்னை அந்நியமாக்காதீங்க ”

அன்று அவளை முதன் முதலில் பார்த்த நினைவு வந்து.

திமிர் பிடித்தவள் என்று எத்தனை நாட்கள் மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தார். ஒரு வேலை எல்லாம் நல்ல படியாக இருந்திந்திருந்தால் இவளை அவர் மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் பிறகு கடவுள் எதற்கு?

ஆரம்ப நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை நல்ல படியாகவே முடிந்தது. அடிக்கடி செக்கப் செய்ய வேண்டும். செய்து கொள்ளலாம். சில மாதங்கள் கழித்து அவரையும் தனக்கு உடன் உதவிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் வெற்றி.

==================================

மலர் சில சமயம் வந்து  விட்டு சென்றாள் . புவி, தந்தை யாரிடமும் அவள் வேற்றுமை பாராட்டவில்லை. உயர்ந்த துணி போட்டு நகை போட்டு அழகியாக  நிற்கும் இந்த பெண்ணை தான் என்ன செய்து விட்டோம் என்று தந்தை வருந்தினார்.

மனதில் பல பாரங்கள் அழுத்தினாலும் அவள் எதையும் வெளிக்காட்டவில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி.

‘என்னை ஏம்ப்பா இப்டி பண்ணீங்க? ‘

கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பம் இது அல்ல.

அன்று ரவியுடன் அவளும் திருமணத்திற்குச் சென்றாள். குழந்தையை பார்த்துக் கொள்ள.

“நம்மள சுத்தி இருக்கறவங்க எல்லாருமே தப்பானவங்கள இருக்க மாட்டாங்க.”

அன்று அவள் சொன்னதை இப்போது அவனும் புரிந்துக் கொண்டான்.

“நல்லவர்களும் இருப்பார்கள்.,கெட்டவர்களும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்றது போல பழகிக் கொள்ள வேணும்” என்பாள் அன்னை . உணர்ந்து கொண்டான்.

அங்கே திருமணத்தில் இவளுக்கு கொடுத்த பூவை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் . அவளுக்கு பூ என்றால் மிகவும் பிடிக்கும். மனதில் ஏதோ பெரிய பாரம்  அழுத்தியது போல இருந்தது. வீட்டிற்கு வந்ததும் தன்  அறைக்கு வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

வெற்றிக்கு அழைத்தாள் .

“வெற்றி! எனக்கு பூ வச்சுக்கணும் போல இருக்குடா?”

இதற்கு அவன் என்ன பதில் சொல்ல வேண்டும்?

“வாங்கிட்டு வரேன் கா!”

நான் வெற்றி ஏன் உங்களில் பலர் இன்னமும் பூவும் பொட்டும் கணவனுக்காகத் தான் என்று நம்புவதில்லை. அது பெண்ணாக பிறந்தவளுக்கு பிறப்புரிமை இல்லையா ?

“வெற்றி வேற யாருக்கும் தெரிய வேணாம் வெற்றி” கண்ணீரை துடைத்துக் கொண்டாள் .

போனை வைத்து விட்டாள் .

போனை வைத்து விட்டு திரும்பினால் அங்கே ரவி நின்றிருந்தான். கையில் வைத்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டான். அவள் எதிர் பார்க்கவில்லையே . இதற்குஎன்ன அர்த்தம்?

இவளுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.

“ஏன் இப்டி பண்ணீங்க?” முயன்று திக்கி திக்கி கேட்டாள் .

“ஏன்னா என்னோட பொண்டாட்டி இனிமே எதுக்காகவும் அழக் கூடாதுன்னு தான் “.

“நான் எந்த விதத்துல தப்பா  நடந்து உங்க மனச கெடுத்தேன்?”

“மனசு கவர்ந்தா அதுக்கு பேரு கெடுக்கறதுன்னு அர்த்தம் இல்ல. இங்க பாரு! இது இன்னிக்கு எடுத்த முடிவு இல்ல. ரொம்ப நாள் முன்னாடியே யோசிச்சது  தான். இல்லாட்டி என்னோட மனசுல இருக்கற விஷயங்களை உன்கிட்ட சொல்லுவேனா ?”

“நீங்க பண்ணது தப்பு. என்னால ஏத்துக்க முடியாது ”

“ஓகே! இருக்கட்டும்.உனக்கா எப்ப என்ன ஏத்துக்கனுன்னு தோணுதோ அப்ப சொல்லு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் . பட் இனிமேலும் நீ பூ வச்சுக்கறது பொட்டு வச்சுக்கறது எல்லாமே ஒன்னு ஒனக்காக இருக்கணும். இல்ல எனக்காக இருக்கனும். ”

அவன் ஒரு முடிவதோடு தான் இருக்கிறான்.  என்ன செய்ய போகிறாள்.

அவள் தன்  மனைவி என்று வேலை செய்பவர்களிடம் சொன்னான். உரிமையுடன் கட்டிலில் கட்டிக் கொண்டு படுத்தான். கழுத்தில் முகம் புதைத்தான். குழந்தைக்கு முத்தம் கொடுத்தான். கூடவே சேர்த்து அன்னைக்கும் கொடுத்தான். அவளால் மறுக்க முடியவில்லை. அவள் மறுப்பை அவன் ஏற்கவில்லை. குழந்தையை  விட்டு பிரிய முடியவில்லை. தவித்தாள். அருகில் நின்று உணவு பரிமாறச் சொன்னான். படுத்தி எடுத்தான். ஆனால் அவளின் முன்னாள் கணவன் நல்லவன் போல அல்லாமல், இவன் தொல்லை அன்பு தொல்லையாக இருந்தது.

கொடுக்கும் அணைப்பும், முத்தமும் கூட அவளுக்கு வலித்து விடக் கூடாது என்று அன்பு காட்டும் கணவனை எப்படி ஒதுக்கி விட முடியும் ?

முதலில் எல்லாம் இது தப்பு என்று யோசித்தவள் மனதை மெதுவே தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தான் ரவி.

சில நேரம் வேண்டுமென்றே இவள் கையில் குழந்தை இருக்கும்போது இவள் முகம் அருகே வந்து குழந்தைக்கு மட்டும் முத்தம் கொடுப்பான். எனக்கு? இவள் வாய் சொல்லவில்லை என்றாலும் கண்களில் ஏக்கம் வரும். இப்போதெல்லாம் அவனின் முத்தம், அணைப்பு, தொடுகை எல்லாமே அவளுக்கு எனர்ஜி கொடுக்க ஆரம்பித்து விட்டது . இரவில் அவன் கட்டிக்காமல் விட்டாலும் வேண்டுமென்றே இவள் அருகில் வந்து படுத்துக் கொள்வாள்.

 

காதல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்