

KKEN-27
அத்தை ப்ளீஸ்! நீங்க தைரியமா இருந்தாதான் மேடத்தை நாம் முழுசா வெளில கொண்டு வர முடியும்.”
“உன்ன பார்த்ததும் தான் இப்படி. அவ கண்ணு முன்னாடி நாங்க இப்படி அழறது இல்ல வெற்றி. தைரியமாக இருக்கற மாதிரி நடிச்சிகிட்டு தான் இருக்கோம்.”
பெற்றவர்களின் நிலை அவனுக்குப் புரிந்தது.
“பாக்கலாம் வெற்றி” விஜயனும் சொல்லிக் கொண்டார்.
வெளியில் நின்று செருப்பை போட்டுக் கொண்டார்கள்.
“நான் வித்யாகிட்ட முதன் முதல்ல உன்ன பத்தி கேட்ட போது,
“வெற்றி என்ன உன்னோட உசுரான்னு ? கேட்டேன். அதுக்கு அவ,
“இல்லம்மா அதுக்கும் மேல. அவன் என்னோட நம்பிக்கை. தைரியம்னு சொன்னா . நானும் அதை நம்பறேன் பா” காயத்ரியின் வார்த்தைகளும் கண்ணீரும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. இதை அவன் எப்படி சரிபடுத்துவான்?
“எப்பவுமே மேடத்துக்கு என் மேல ரொம்ப நம்பிக்கை. நாந்தான் படிப்பு, வேலை,பணம் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அவங்கள நோகடிச்சுருக்கேன். ஆனா அவங்க அசையவே இல்லை.
“எங்கப்பாவை, எங்க அம்மா பெரிய ஆளாக்கின மாதிரி நானும் உங்கள பெரியாளாக்குவேன்னு சொல்லி கிட்டே இருப்பாங்க.”
ஆமோதிப்பாக தலை ஆட்டியவர்கள் கிளம்பி விட்டார்கள்.
காரில் பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மனம் முழுவதும் யோசனையாகவே தான் இருந்தது.
விஜயனுக்கு நடந்தவை எல்லாம் கண் முன் வந்தது. மகளிடம் வெற்றியை பற்றி பேசியதற்குப் பிறகு மீண்டும் அவரால் அதை பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை. அதிபனின் ஆட்கள் அவ்வ போது வந்து மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் வீட்டிற்கேக் கூட வந்தார்கள். கணவனுக்கு மட்டும் தெரிந்த விஷயம் மனைவிக்கும் தெரிந்தது.
இதற்கு நடுவில் ஒரு நாள் வித்யா தோழிகளுடன் மாலிற்குச் சென்றிருந்தாள் . அங்கே ஃபன் சிட்டிக்குச் சென்று விளையாடி விட்டு கையில் கோன் ஐஸுடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
“ஏய்! வெண்ணிலா சூப்பரா இருக்குடி ” என்றால் ஒருத்தி.
“பட்டர் ஸ்காட்ச் மிக்ஸிங் கூட சூப்பர் ” இது வித்யா.
நாம நெஸ்ட் வீக் ஐ பாகோ போலாம் “இல்லடி எங்க வீட்டு பக்கத்துல BR திறக்க போறாங்க. அங்க போகலாம்.”
“பட் இ பாகோ ஐஸ் கிரீம் கேக்ஸ் கூட சூப்பரா இருக்கும். நாம எல்லாரும் ஒரு தடவை ட்ரையல் பார்த்துட்டா நாம நிஷா பர்த்துடேக்கு ஆர்டர் பண்ணலாம்.”
வளவளத்தபடி பெண்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போலத்தான். சில ரவுடிகள் இவர்களிடம் பாலியல் சீண்டல் செய்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறு விவாதம் ஆரம்பித்து பின்னர் நகர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் இவர்களை விடுவதாக இல்லை. மீண்டும் வேறு இடத்தில வந்து மீண்டும் இடித்தார்கள். இதையே அவர்கள் திரும்ப திரும்ப செய்யவும் பெண்கள் வேகமாக அங்கே இருந்து வெளியில் வர வேண்டும் என்று ஓடி வந்தார்கள். அப்படி திரும்பி பார்த்துக் கொண்டே இவள் வரும்போது அங்கே வந்த ஆண் மகன் மீது மோதி இடித்தாள் . வேறு யாரு? அதிபன் தான். அந்த மாலுக்கே அதிபன். அவனை அங்குப் பார்த்ததும் இவளுக்கு சற்று தைரியம் வந்தது. எதையும் இவள் சொல்லவில்லை. அவனே புரிந்துக் கொண்டான். அழகாய் அவளின் இடையில் கை வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
புஜங்கள் வரை இருந்த கை வைத்த டீ ஷர்ட்டும் அதற்கு ஏற்ற பேண்டும் அணிந்து வந்தவன் மற்றப் பெண்களின் மனதை அள்ளிக் கொண்டு விட்டான். நம் நாயகிக்கோ அந்த நிலையில் அவளுக்கு பயம் மட்டுமே இருந்தது. வேறு எதுவும் தெரியவில்லை. இவள் மேல் கை வைத்தவனுக்கு தனது வலது கையால் முகத்தில் ஒரு குத்து விட்டான். மூக்கில் இருந்து இரத்தம் வந்தது.
மற்றவர்களையும் மற்ற விஷயங்களையும், அவனின் பாடி கார்ட்ஸ் பார்த்துக் கொண்டார்கள்.
குட்டு வாங்கினாலும் மோதிரம் வச்ச கையால வாங்கணுமாமே. அப்படியா? அடி வாங்கினவன் என்ன சொல்லுவானோ ?
“ரொம்ப தாங்ஸ் சார்!” மற்ற பெண்களுடன் சேர்ந்து இவளும் நன்றிக் கூறி ஓடி விட்டாள் . என்ன உதவி செய்ததற்கு பதிலாக கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்திருக்கலாமோ! பாவம் அதிபன் பார்த்துக் கொண்டிருக்க தரை தளத்தில் வந்து கொண்டிருந்த வெற்றிக்குத்தான் அவளின் அணைப்பும் முத்தமும் கிடைத்தது. என்னதான் அதிபன் காப்பாற்றி விட்டான் என்றாலும் இவளுக்கு வெற்றியை பார்த்ததும்தான் உயிரே வந்தது. ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டாள் .
“என்னாச்சு தங்கம்?” தலை கோதி நெற்றியில் முத்தமிட்டான். தோழிகள் நடந்த விவரத்தைச் சொன்னார்கள்.
“அதுதான் உங்க பாஸ் வந்து காப்பாத்திட்டாங்களே? அப்புறம் என்ன? அவருக்கு நன்றி சொன்னீங்களா ?”
“ம் ! ” இன்னும் அவள் முகம் தெளியவில்லை.
“வாங்க ! போலாம்” தைரியம் சொல்லி கை பிடித்து அழைத்துச் சென்றான். அப்போது அவள் அவனுக்கு முத்தம் கொடுத்தாள் . அவள் எப்போதுமே அப்படித்தான் . அவனுக்கு முத்தம் கொடுக்க தயங்க மாட்டாள். நினைத்ததும் சட்டென கொடுத்து விடுவாள். அவனும் சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான். இதை எல்லாம் முதல் தளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிபனுக்கு கண்களில் நன்றாகவேத் தெரிந்தது.
அங்கேயே அவனுக்கென்று தனி அலுவலகமும் உண்டு. அதில் தனி அறையும் உண்டு. தன் அறைக்கு வந்தவனுக்கு வேறு ஒரு புதிய ஆடையை கொடுத்தான் அவன் அசிஸ்டென்ட். “வேண்டாமே! இது நல்லாத்தானே இருக்கு”
“பாஸ் ! சட்டைல அந்த பொண்ணோட பொட்டு… ”
“எங்க?”
“இதோ! ” தோளில் சுட்டிக் காட்டினான்.
“தலையை திருப்பி அவள் சாய்ந்து இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஸ்டிக்கரை பார்த்தான்.எடுக்கப் போனான். மனம் வரவில்லை. அவன் தோளில் அவளின் மனம். அவள் போட்டிருந்த வாசனை திரவியத்தின் மணம் . அப்பா! வாசம் பிடித்தான். வாசனையையா? அல்லது அவளையேவா? அனுபவித்தான். சுகம் அனுபவித்தான்.
“உங்கள விரும்பறேன்” அவள் வாயாலேயே சொல்ல வேண்டும். சொல்ல வைக்க வேண்டும். எளிய வழிதான். இந்த அதிபனால் முடியாதது ஒன்று உண்டா? சொல்ல வைத்தான் . தன் வழியில்.
அவன் அறியாதது எதுவும் இல்லை. தன்னவளை மனதால் மாற்ற வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. வாயால் சொல்ல வைத்தால் போதும். கட்டிலில் தான் காட்டும் வித்தையில் தன் அழகில் பதிவில், அந்தஸ்தில், மயங்க முடியாத எந்தப் பெண்ணும் இல்லை.
“அதி ப்ளீஸ் ! என்னால தாங்க முடியலை. நான் உனக்குத்தான். என்னை எடுத்துக்கோங்க” அவள் சொன்னால் எப்படி இருக்கும். கலர் கலராக அவனுக்கு கற்பனை வந்தது.
எல்லாம் ஈஸி தான் என்ன அதை அவளிடம் காட்ட வேண்டிய விதத்தில் காட்ட வேண்டும்.
அதிபன். ஒற்றை பிள்ளை. அவனை யாராலும் அதிகாரம் செய்ய முடியாது. அன்னையாலும் அவனை திட்ட முடியாது. அடிக்க முடியாது. நல்லது சொல்ல முடியாது. அவன் தந்தைக்கு மகன். கேட்பார் இல்லாமல் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்தவன். அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவன். அவன் சரியாக பேசுவானோ இல்லையோ? அவன் சொல்வது எல்லாமே சரிதான். அப்படிப்பட்டவனுக்கு திமிரும், அதிகாரமும், ஆணவமும் இல்லாமல் இருக்குமா? அதிலும் ஆணழகன் வேறு. பார்க்கும் பெண்களை வெகு எளிதாக அடைந்து விட முடியும். அப்படிப்பட்டவன் கை அணைப்பில் இருந்தும் எப்படி அந்த வித்யாவால் வேறு ஒருவனை அணைத்துக் கொள்ள முடியும்? அத்தனை அருகில் இத்தனை பெரிய பணக்காரன். ஆணழகன் தான் அவளை அணைத்து நிற்க அவளோ வேறு ஒருவனை கட்டிப் பிடித்துக் கொண்டு? அதிலும் அத்தனை பேர் முன்? வித்யா தனக்கு மட்டும் தான். தன்னைத் தவிர வேறு யாருமே அவளைத் தொடக் கூடாது.
முதலில் வித்யாவை அடைய வேண்டும். பிறகு அவனை பார்த்துக் கொள்ளலாம். இனி அவனால் பொறுக்க முடியாது. அவள் வேண்டும். முடிவு செய்து விட்டான். வந்தான். அவள் முகவரிக்கே வந்தான்.
மாலிற்குச் சென்று வந்தவள் மிகவும் அசதியாக இருக்கவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
விஜயனும் தலை வலி என்று வீட்டிற்கு வந்து விட்டார்.
நடு நாயக(னா)மாய் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்.
விஜயனுக்கு அவன் யார் என்பது தெரியும். இருந்தும் எதுவும் பேசவில்லை. கணவன்,மனைவி இருவருக்கும் தொண்டை தண்ணீர் வற்றிப் போனது.
“அப்புறம் என்ன விஜயன்? பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா?” குசலம் விசாரித்தான். மரியாதை எல்லாம் அவனுக்கு கொடுக்க தெரியாது.
“ம் ! என்ன விஷயமா..”
“இந்த பொட்டு யாரோடதுன்னு தெரியுதா?’
கலக்கத்துடன் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இது… ஆமா !உங்க பொண்ணோடதுதான் . இன்னிக்கு மாலுக்கு வந்திருந்தா . யாரோ ரவுடி பசங்க தொந்தரவு செஞ்சுருக்காங்க போல. நான்தான் காப்பாத்தினேன். அப்ப தான் இந்த சம்பவம்.”
நகத்தை கடித்து வெட்கப்பட்டான் .
“எனக்கு உங்க பொண்ணு மேல லவ் வந்துருச்சு.
அதான் உங்க கிட்ட பொண்ணு கேட்டு வந்துருக்கேன்”
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.விஜயன் என்ன சொல்லி இருப்பார் ?
பெண்ணை பெற்றவர் என்ன சொன்னால் என்ன? விஜயனின் மறுப்பை காதில் ஏற்றுக் கொண்டான். கவலை இல்லாமல் தூங்கி கொண்டிருந்த மகளை தோளில் ஏற்றிக் கொண்டான். கணவனும் மனைவியும் அவன் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி அழுதனர்.
“சார். ப்ளீஸ் சார் ! உங்கள கூட பொறந்த தம்பியா நினச்சு கேக்கறேன். அவளை விட்டுடுங்க. உலகம் தெரியாத பொண்ணு சார் அவ” காலில் விழுந்து கதறிய காயத்ரியிடம்,
என்ன சொன்னீங்க? தம்பியா ?உங்களுக்கு நான் தம்பி., அப்படின்னா அவளுக்கு மாமா முறை இருக்குல்ல?
இங்க பாருங்க. போலீசு அது இதுன்னு ஏதாவது எங்கையாவது, இன்ப்ளுயன்ஸ் பண்ணலான்னு பார்த்தீங்க, என்ன நடக்குன்னே தெரியாது. இவ நான் லவ் பண்ணற பொண்ணு. கொஞ்ச நாள் தான் . அப்புறம் நானே கொண்டு வந்து விட்டுடறேன். இது கூட அவளை ஒன்னும் பண்ணறதுக்கு எல்லாம் இல்ல. என்ன பார்த்து ஐ லவ் யூ சொல்ல வைக்கறதுக்குத் தான். நீங்க எதுவும் பயப்படாதீங்க.”
ஏதாவது ஏடாகூடமா பண்ணி
என்னை வேற எதுவும் அசிங்கமா பண்ண வச்சுடாதீங்க. வரட்டா மாமனாரே!” சொல்லி விட்டு அவரின் கன்னம் தட்டி சென்றான்
லேசாக கண் விழிக்க ஆரம்பித்தவளை நெஞ்சில் புதைத்துக் கொண்டு தூங்க வைத்தான்.
அந்த கொஞ்ச நாள் எத்தனை நாள்? ஒரு மாதம். அவன் கெஸ்ட் ஹவுஸ் சிறையில் வைத்திருந்தான். அன்பாக பார்த்துக் கொண்டான். காதல் கணவனாய் இருந்தான். அதிபனின் கை அணைப்பில் இருந்தவள் வெற்றியிடம் சென்றது தவறு. அவனைத்தான் காதலிக்க வேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும். அவன் எதிர் பார்த்த நேரத்தில் முத்தம் கொடுக்க வேணும். எதிர் பாராத நேரத்தில் இங்கிலிஷ் முத்தம் கொடுக்க வேண்டும். இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும். செய்ய வேண்டும். அவன் சொல்வதற்கு அனைத்திற்கும் அவள் கட்டுப்பட வேண்டும். இவள் வேறு ஏதாவது முயற்சி செய்தால் இவள் கண் முன்னேயே அவள் பெற்றோர் நாய்களால் கடித்து கொடூரமாக கொல்லப் படுவார்கள். அதையும் மீறி இவள் ஏதாவது முயற்சி செய்ய முடியும்?
காதல் தொடரும்..

