Loading

 

KKEN-26

  முதலில் எல்லாம் வேலை வேலை என்று பழக்கப்பட்ட விஜயனுக்கு மகள் என்ற உறவு வந்த போது அவள் தான் முதலில் தெரிந்தாள் . முதலில் ஏற்றுக் கொள்ளாத உறவுகள், பின்னாளில் தான் வந்து சேர்ந்தார்கள். இருப்பினும் மனைவியை பார்த்துக் கொள்ளவும் ஆள் வேண்டும். அவள் அன்னை, இவள் அன்னை என்று யார் எந்த சொந்தம் வந்திருந்தாலும் மகளின் பொறுப்பு தந்தையின் கடமை இல்லையா? அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் இருந்தாள். மகளின் ஒவ்வொரு அடியிலும் தந்தை இருந்தார். வருடங்கள் ஆக ஆக தொழிலும் பெருகியது. அப்போதும் மகளை மனைவியின் கண்காணிப்பில் தான் வைத்திருந்தார். விந்து சாப்பிட்டாலே? விந்து என்ன பண்ணற போன் பண்ணி விசாரித்து விடுவார். ஒரு முறை பள்ளியில் அவள் கீழே விழுந்துவிட்டாள் என்று பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது காயத்ரிக்கு.

“மேடம்! நாங்க உங்க பொண்ணு ஸ்கூலேர்ந்து கால் பண்ணறோம் . அவ இங்க விளையாடும்போது கீழே விழுந்து அடி பட்டிருக்கு. ஒன்னும் பெரிசா எல்லாம் இல்லை . சின்ன அடி தான். நாங்களே இங்க பக்கத்துல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டோம். நீங்க வந்து அழைச்சுக்கிட்டு போங்க.”

“சரி மேடம் இதோ வரேன். “இவள் போனை வைக்கவும் கணவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“காயத்ரி, விது எங்க இருக்கா? ஸ்கூலேர்ந்து வந்துட்டாளா?”

“என்னங்க திடீர்னு கால் பண்ணியிருக்கீங்க ?”

“இல்லடி மனசுக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு. விது வந்த ஒடனே எங்கிட்ட பேச சொல்லு.”

சரிங்கஎன்று போனை வைத்து விட்டார் காயத்ரி.

வெளியூரில் இருக்கும் கணவனை தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் இப்போது இந்த சின்ன விஷயத்துக்கு பதட்டப்படுவார். முதலில் நான் சென்று பார்க்க வேண்டும் . மகள் வீட்டுக்கு வந்ததும் கூட தந்தையிடம் பேசினாளேத் தவிர அடிபட்ட விஷயத்தை சொல்ல வில்லை.

வீட்டுக்கு வந்தவுடன் தான் அவருக்கு விஷயம் தெரிந்து மிகவும் வருத்தப்பட்டார்.

காயத்ரி சமாதானம் செய்தும் சமாதானம் ஆகவில்லை. மகளின் நெஞ்சில் முகம் வைத்து கட்டிக் கொண்டு தூங்கிய பிறகு தான் ஓரளவு சமாதானம் ஆனார்.

அதையே சாக்காக வைத்து அன்னையிடம் ஆகாத வேலைகளை எல்லாம் செய்துக் கொண்டவள் தானே மகள்.

“அப்பா இந்த அம்மா ரொம்ப மோசம் பா.”

“ஏம்மா?”

“எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் கூட வாங்கித் தர மாட்டேங்கறாங்க.”

“ஏண்டி! ஒனக்கு ஐஸ்க்ரீம் வேணுன்னா கேட்டுக்கோ. அதுக்கு எதுக்கு என்னை மோசம்னு சொல்லற?”

” சின்ன பிள்ளைக்கிட்ட எப்படி பேசணுன்னு தெரியாது? அதுகிட்ட போய் சக்களத்தி கிட்ட சண்டைக்கு நிக்கற மாதிரி நிக்கற?”

“சக்களத்தின்னா என்னப்பா?”

“ம் ! கேக்கறா இல்ல பதில் சொல்லுங்க.”

நக்கலாக கை காட்டி விட்டுப் போனார் காயத்ரி.

“அது., சக்கரை கட்டியத்தான் வாய் தவறி ஏதோ சொல்லிட்டேன். அது சரி உனக்கு என்ன ஐஸ்க்ரீம் வேணும் ?”

இரவில் வரும் குலஃபீ வாங்கி சாப்பிட்டார்கள். அப்போதெல்லாம் அது ஐந்து ரூபாய் தான். மேலே ஒரு பிளாஸ்டிக் மூடி இருக்கும் அதை அவர் உடைத்து தருவார். அத்தனை சுவையாக இருக்கும்.

இதே கதையை எத்தனை முறை அவள் வெற்றியிடம் சொல்லியிருக்கிறாள். அன்னையும் தந்தையும் அவளிடம் காட்டிய அன்பை மகள் புரிந்து கொண்டவள். அதனால் தான் அன்று தந்தை அவளிடம் வெற்றி வேண்டாம் என்று சொன்ன போதும் அவளால் எதிர்த்துப் பேச முடியவில்லை. நின்று நிதானமாக தன்னுடைய எதிர்ப்பை காட்டி தந்தையிடம் சம்மதம் வாங்கினாள். ஒரு வேளை ஆண்டு தந்தை விடாப் பிடியாக வேண்டாம் என்று சொல்லியிருந்தால் கூட அவளும் விடாப் பிடியாக அவர்களின் மகளாகவே தான் இருந்திருப்பாள். அவர்களை எதிர்த்து கொண்டு எல்லாம் திருமணம் செய்திருக்க மாட்டாள் .

அவளின் அந்த பாசமான வளர்ப்பு தான் அன்று வெற்றியின் தந்தையிடம் கூட பேச வைத்தது. ஒரு தந்தை, வேலைக்குச் செல்லும் மனை அடிப்பது ற்புடையது அல்ல என்று மட்டும்தான் நாம் நினைக்கிறோம். வித்யாவை பொறுத்தவரையில் பெற்றவர்கள் யாருமே குழந்தைகளை கை நீட்டக் கூடாது. பள்ளிப் பருவத்தில் சில நேரங்களில் அவளுக்கு மதிப்பெண் குறைவாக வந்திருக்கிறது. காயத்ரி அல்லது விஜயன் யாருமே அவளை திட்டியதுக் கூட இல்லை.

அவளை திட்டாமல் அதே சமயம் படிப்பின் முக்கியத்துவம் என்ன என்று பேசி புரிய வைத்தார்கள்.

காயத்ரி பெரும்பாலும் தான் சொல்ல நினைப்பது எல்லாம் நேரடியாக சொல்வது இல்லை. தன்னம்பிக்கை பற்றி பேசும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்ஸ் சொல்வதை கேட்க வைப்பாள். அப்படி செய்வதும் சரி தவறு என்ற விவாதங்கள் உண்டு தான் . நாம் இப்போது அதற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை .

மாற்றம் பவுண்டேஷன் சுஜித் அன்று பேசிக் கொண்டிருந்தார். “அன்னிக்கு மேத்ஸ் படிக்காத தெரியாம இருந்த நான் இன்னிக்கு பல பேரோட மனச படிக்க தெரிஞ்சு எச் ஆர் ல இருக்கேன்.”

அம்மா பசிக்குதும்மா விளையாடிவிட்டு வந்து உணவுக்கு காத்திருந்த மகளுக்கு கேட்கும்படி சத்தம் வைத்தார்.

ஒரு முறை வாய் தவறி கோபத்தில் போடி என்று காயத்ரியை சொல்லி விட்டாள் மகள். கணவனிடம் சொன்ன போது மகளுக்கு தான் அவர் துணை போனார்.

“ஏதோ சின்ன புள்ளை . வாய் தவறி சொல்லிடுச்சு. இதுக்கு போய் இதை இவ்ளோ பெரிய விஷயமாக்கணுமா?”

“இதையே நாளைக்கு ஸ்கூல்ல டீச்சர பார்த்து உங்க செல்ல பொண்ணு போடின்னு சொல்லிட்ட்டானா அப்ப என்ன பண்ணுவீங்க?”

“ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கற?”

என்னங்க நீங்க . அம்மாகிட்ட சரி சொல்லு. இனிமே இப்படி சொல்லக் கூடாதுன்னு சொல்லிக்கொடுக்காம நீங்களும் அவளுக்கு சப்போர்ட்டா பேசிகிட்டு இருக்கீங்க?”

“இது முதல் தடவை தான். அவ சமத்துப் பொண்ணு. இனிமே அவ அப்படி சொல்ல மாட்டா . இதுக்கு மேல இதைப் பத்தி பேசாத.” அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்.

மகளும் வந்து அன்னையே அன்னையே ன்று கொஞ்சவும் அன்னை மகளை மன்னிக்கவில்லை . மாறாக அப்படி ஒரு சம்பவம் நடந்த நிகழ்வையே மறந்துவிட்டார்.

சில வாரங்கள் கழித்து மகளுக்காக காஷ்மீரி புலாவும் பன்னீர் பட்டர் மசாலாவும் செய்து கொண்டிருந்த அன்னையை பின்னாடி வந்துக் கட்டிக் கொண்டாள் மகள்.

“என்ன என் தங்கத்துக்கு?”

கண்களில் கண்ணீர் .

“என்னம்மா ? என்ன ஆச்சு?”

“ஒரு சொல் தான் குழந்தைகளே.” பர்வீன் சுல்தானா சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் இருக்கறது மீர் சாகிப் மார்க்கெட். அத்தனை கேட்ட சொல்லும் எனக்கு தெரியும். ஒரு சொல்லும் இந்த நாவினால் சொல்லியதில்லை அதுதான் வெற்றிக்குக் காரணம் குழந்தைகளே.”

எத்தனைப் பெரிய விஷயம்? எளிதாக குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லி விட்டார்.

“சொல். ஒரே சொல் . உயிரைக் கொடுக்கும். ஒரே சொல் உயிரை எடுக்கும்.”

அதன் வீரியம் என்ன வித்யாவுக்கு அன்று புரிந்தது. புரிந்தவள் தான் தன்னுடைய உயிரை வேண்டாம் என்று சொல்லி விட்டாள். அதற்கான வலி வெற்றிக்கு.

” நீங்க  கவலைப்படாதீங்க மேடம். சீக்கிரமா எல்லாமே சரி ஆகிடும்.”

அனைவரிடமும் சிறிது மௌனம்.

 அவனே தொடர்ந்தான்.

இதற்குள் பாப்பா, “அப்பா! அப்பா!” என்று அவன் முகத்தில் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் .

“பாப்பாவுக்கு என்ன பேரு  வச்சிருக்கீங்க?”

“பேரு எல்லாம் யோசிச்சு வைக்கல . உத்திர நட்சத்திரத்துல பொறந்தாளாம். அதனால உத்ரான்னு தான் கூப்பிடறோம்”

“என்னதான் இருந்தாலும் அவ மேடத்தோட குழந்தை இல்லையா? நீங்க  அவளை ஒதுக்கறது சரியா இல்ல மேடம்”

“என்ன வெற்றி இது? எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி பேசலாமா? உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகி சீமந்தம் பண்ணி பிரசவம் பார்த்த குழந்தையா இது ? அவன் வலுக்கட்டாயமா கொடுத்தது. யாரோ எவனோ? கொஞ்ச நாள் அவன் கம்பனில வேலை பார்த்தா . வீட்டுக்கு வந்தான். தூக்கிட்டுப் போய் என் குழந்தையை நாசம் பண்ணி கொடுத்த குழந்தை இது. எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? என் பொண்ணு பெத்த குழந்தை. அதனால் அனாதை ஆஸ்ரமத்துல விட முடியல. அதுக்குன்னு எங்க யாராலையும்  இதை ஏத்துக்க முடியல வெற்றி. நாங்க  மட்டும் இல்ல. அவளும் அப்டித்தான் இருக்கா . குழந்தை பசில அழும்போது கூட பால் குடுக்க மாட்டா . கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுருவா. சில நேரம் இந்த குழந்தை நெத்தி சுறுக்கிப் பார்க்கும். அப்ப எல்லாம் அவ பயந்து பயந்து அழுவா. சில நேரம் எங்களுக்கே இதைப் பார்த்தா ஏதோ தீய சக்தின்னு தோணும் வெற்றி. என்னதான் இருந்தாலும் அந்த அரக்கனோட குழந்தை தானே? “

வாய் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க காயத்ரி குலுங்கி குலுங்கி அழுதுகி கொண்டிருந்தார். விஜயன் மனைவியை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“எங்க போய்  எதை மாத்தறதுன்னே தெரியல வெற்றி. எதுக்கு இன்னும் உயிரோட இருக்கோம்னு நிறைய தோணும். நாம் செத்தாலும் பெத்த புள்ளைய அது பெத்த புள்ளைய சாகடிக்க மனசு வரல.”

“ரொம்ப யோசிக்க வேணாம் சார். நீங்க இங்கையே குடி வந்துருங்க. மேடத்தை நான் பார்த்துக்கறேன்.அன்னிக்கே நான் பிடிவாதமா அவங்க கூடவே இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இனிமே என்னோட மனைவியை, மகளை நான் விட்டுட மாட்டேன்.  நீங்க  யாரு ஏத்துக்கிட்டாலும் இல்லனாலும் இவ என்னோட பொண்ணுதான்.”

பட்டு கன்னத்தில் வலிக்காத படிக்கு ஒரு முத்தம் கொடுத்தான். உதியும்  அவன் போலவே அவனுக்கு முத்தம் கொடுத்தாள் .

இதை விட அவனின் காதலின் உண்மையை அவன் எப்படி நிரூபிக்க முடியும் ?

நிரூபிக்க வேண்டிய வசியமும் தான் இப்போது இல்லையே .

“அந்த வீடு? ஏன் அங்கே இருந்து காலி பண்ணறீங்க?”

“அது ரொம்ப கஷ்டப்பட்டு கட்டின வீடு வெற்றி. எங்களோட சந்தோஷத்துக்காக கட்டின இடம். எப்ப என் மகளுக்கு இந்த மாதிரி ஆச்சோ அப்பவே நான் காலி பண்ணி இருக்கணும்.”

அவர் முழுங்கிய வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். அவர் வேறு இடம் மாறாததற்குக் காரணம் காயத்ரி. அவரின் உடல் நிலைக்காகவே அப்போது அவர் இடம் மாற்றவில்லை.

“வேற இடம் மாத்தி  பார்த்தா அவளுக்கு மனசு கொஞ்சமாவது மாறுதான்னு பாக்கத்தான். இந்த மாதிரி பெரிய பிளாட்ல இருந்தா நாலு மனுஷங்களை பாக்கும்போதாவது ஏதாவது பேசறாளான்னு முயற்சி பண்ணி பாக்கலான்னுதான்.”

அவர்களின் மன நிலை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அமைதியாக நின்றான்.

“நாங்க  கிளம்பறோம்பா!” காயத்ரி கண்ணில் வழிந்த கண்ணீரை மெதுவாக தன்னுடைய கர்ச்சிப்பினால் ஒத்தி எடுத்தான் வெற்றி.

உன்னை பத்தி சொன்னபோது வித்யா சொன்ன. வெற்றி என்னை பத்தி யோசிப்பான். உங்களை பத்தி அப்பா பத்தி எல்லார் பத்தியும் யோசிப்பான் அவனால மட்டும்தான் அப்படி இருக்க முடியும்னு சொன்னா. சரிதான்.” வெற்றியின் கையை கண்ணில் அழுத்தி ஒத்திக் கொண்டார் காயத்ரி.

“அத்தை ப்ளீஸ்! நீங்க தைரியமா இருந்தாதான் மேடத்தை நாம் முழுசா வெளில கொண்டு வர முடியும்.”

“உன்ன பார்த்ததும் தான் இப்படி. அவ கண்ணு முன்னாடி நாங்க இப்படி அழறது இல்ல வெற்றி. தைரியமாக இருக்கற மாதிரி நடிச்சிகிட்டு தான் இருக்கோம்.”

பெற்றவர்களின் நிலை அவனுக்குப் புரிந்தது.

அவர்களை வழி அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டவனுக்கு

காதல் தொடரும்……..

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்