Loading

கண்மணியே காதல் என்பது-10

KKEN-10

“வெற்றி நான் உன்ன காதலிக்கறேன்டா” சொல்லிடலாமா ? என்ன நினைப்பான்? சீ! ன்னு சொல்லிடுவானோ? ஸ்டேடஸ்  காமிச்சு வேண்டான்னு சொல்லிட்டா? நான் அந்த மாதிரி உங்களை நினைக்கவே இல்லைன்னு சொல்லிட்டா? மனம் என்னென்னவோ யோசித்தது. தன்  காதலை சொல்ல அவளுக்கு  தைரியம் வரவில்லை.

காலையில் வண்டியில் ஏறும்போதே மனம் துள்ளி குதிக்கும். விபூதி இட்டிருக்கும் நெற்றி, கண்ணாடி பார்த்து பார்த்து ஓட்டும் கண்கள், லேசாக ஒட்டி இருந்த கன்னங்கள், பெரிய பெரிய காதுகள், எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது சொன்ன உதடுகள், உன் முஞ்சிக்கே நான்தான்டா கம்பீரம் சொன்ன  அளவான மீசை , நான்தான் ஸ்லீப்பிங் லைன் கழுத்துக்கு மேலே சரியாக திருத்தம்  செய்யப்பட்ட தலை முடி. இன்னும் என்னதான் பார்ப்பது? எத்தனை தடவைதான் பார்ப்பது? அவளுக்கு மட்டும் ஏனோ அலுக்கவே இல்லை.

கைப்பேசியில் அவனுக்கு அழைப்பு வந்தது.

“சொல்லுக்கா ”  வண்டியை ஓரம் கட்டினான்.

“ஒரே நிமிஷம் “முகம் திருப்பி கண்களால் அனுமதி கேட்டான் வித்யாவிடம்.

“தேங்க்ஸ் கா! ம் ! போனேன். சரிகா! பை!”

கேட்டது என்னவோ ஒரு நிமிட அனுமதி. வந்த அழைப்போ அடுத்த இருபது நொடிகளில் முடிந்திருந்தது.

“என்னாச்சு? பேசலியா?”

“மலரக்கா  தான்  போன் பண்ணிச்சு. இன்னிக்கு எனக்கு பொறந்த நாள்ல . அதுக்குத்தான். காலைல கோவிலுக்கு போனியா? உடம்ப பார்த்துக்க. அப்பாவை பார்த்துக்க. சரியா சாப்பிடு. அவ்ளோதான்.”

“ஓ! இன்னிக்கு உங்களுக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. வாங்கித் தரேன்.”

“எதுவும் வேண்டாம்” என்று சொல்லுவான் என்று எதிர் பார்த்தாள் .

ஆனால்  அவனோ, “கண்டிப்பா வாங்கி தருவீர்களா மேடம்?” என்றான்.

“கண்டிப்பா, வாங்கித் தருவேன்”

“என்ன கடைக்கு கூட்டிட்டு போய் ஒரு சட்டை வாங்கி தரீங்களா?”

“வெற்றி!” அவள் குரலில் ஒரு வருத்தம்.

“இல்ல மேடம்! எல்லா பசங்களுக்கும் அவங்க அம்மா அப்பா கடைக்கு கூட்டிட்டு போய்  பொறந்த நாளைக்கு துணி வாங்கித் தருவாங்க. எங்க அப்பா எனக்கும் மலருக்கும் வாங்க மாட்டாங்க. தங்கச்சிக்கு மட்டும்தான் வாங்குவாங்க. அம்மா இருந்திருந்தா வாங்கி இருக்கும். எங்க ரெண்டு பேருக்குமே யாருமே வாங்கி கொடுத்தது இல்ல. அதான். “

“ஒரு டிரஸ் என்ன பத்து  வாங்கலாம்” சொன்ன படியே அவனை அழைத்து சென்று அவனுக்கு பிடித்த மாதிரி ஆடை வாங்கினாள் .

அவள் எத்தனை சொன்னாலும் பிடிவாதமாக அவன் ஒன்று தான் வாங்கிக் கொண்டான்.

“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் வெற்றி?”

கலர் எல்லாம் கிடையாது மேடம். யாரு எதை குடுக்கறாங்களோ அதை போட்டுக்க வேண்டியது தான். நமக்குன்னு இஷ்டப்பட்டு வாங்க பணம் இருக்கணும். இல்ல இஷ்டமா வாங்கித் தர மனுஷங்களாவது இருக்கணும். ரெண்டும் இல்லாத ஆளுங்க இந்த கலர் அந்த கலர், இந்த துணி, அந்தத் துணி எல்லாம் நினைக்க கூட கூடாது மேடம்.

“ஏன் வெற்றி உனக்கு வாங்க நான் இல்லையா?”

  அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவள் கூறியதன் அர்த்தம் என்ன அவனுக்குப் புரியவில்லை. புரிந்தாலும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. இல்லை! இது வேணாம். விஷயம் எங்கையோ போகுது அவன் மூளை அலாரம் அடித்தது.

  அவள் தான் அவனை காதலித்தாள். அவனுக்கு, அவள் என்ன உறவு என்றே சொல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு பிணைப்பும், பந்தமும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. சில நேரங்களில் அவன் அவளை தாயுடன் ஒப்பிட்டுக் கொள்வான். சில நேரம் மலர் இல்லாத குறையை அவள் நீக்குவாள். அதுவே அவள் கேட்டு ஒன்று நடக்காவிட்டால் நிச்சயம் அவள் பாப்பாவுக்கே டப்ஹ் கொடுப்பாள்.ஏனோ தந்தையிடம் இல்லாத உரிமை அவனிடம் அவளுக்கு ஏற்பட்டு இருந்தது.

 “அப்பா! எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுங்க” கேட்டதில்லை. அவள் தந்தைக்கு என்றுமே எப்போதுமே தொழில் பற்றிய நினைவுகள்தான். முதலில் எல்லாம்  கணவனுடன் இருக்க பிரிய பட்ட மனைவியோ அது மேக்கே  அப்படித்தான் என்று புரிந்து  கொண்டு விட்டாள். கணவனின் நேரத்தையும் சேர்த்து மகளுக்கு வழங்கினார். சமையலில் ஆர்வம் உள்ளவர். வசதியும் வந்தது. எந்த பொருளும் வாங்க கஷ்டமே பட வேண்டாம். காரை எடுத்தால்  தேவையானது அனைத்தையும் வாங்கி வந்து விடுவார். விதவிதமாக சமைப்பார். மகளை இந்த வகுப்பு அந்த வகுப்பு என்று அழைத்து போவதும் திரும்ப கூட்டி  வருவதும் கணவனை விடவும் தன்னை பிசியாக்கிக் கொண்டார்.

 மகள் பெரியவள் ஆக ஆக அவருக்கும் தான்  வேலை இல்லாமல் போனது. புது புது மொழிகளை கற்றுக்  கொண்டார். ஆன்லைன் டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.  கலகலப்பானவர் என்றாலும் பல நேரங்களில் வாய் மூடியேத்  தான் இருக்கும். ஆனால் வித்யா அப்படி அல்ல. பேசுவாள் பேசுவாள் பேசுவாள். விஷயமே இல்லாமல் கூட பேசுவாள். அவள் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் வாயில் உணவு இருக்கும் நேரம் அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். சாதாரண  தூக்கத்தில் கூட ஏதாவது பேசுவாள்.

என்னதான் நிறைய பேசுவாள் என்றாலும் ஏனோ “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது” என்று வெற்றியிடம் சட்டென்று வெளிப்படையாக  அவளால் கூற முடியவில்லை. மாடர்ன் டிரஸ் போட்ட கட்டுப்பட்டிதான் அவள்.

  தான் செய்வது சரியா தவறா? யோசிக்கவில்லை. எதற்கு யோசிக்க வேண்டும்?

“அவள் எகிறி குதித்தால்  வானம் இடிக்கும். அவனை பார்த்தால்  பாதங்கள் இரண்டும் பறவை ஆகிறது.”

வேறு என்ன வேண்டும்? அதை அவளும் அனுபவிக்கட்டும். நாமும் அனுபவிக்கலாம். அனுபவங்கள் பலவிம். அதில் இது ஒரு விதம் .. இன்னும் நிறைய அனுபவங்கள் வர வேண்டாம் ஆனால் வந்து விடும்

 அவன் பிறந்த நாளைக்குப் பிறகு இருவருக்குள்ளும் பெரியதாக பேச்சு வார்த்தை எல்லாம் இல்லை. என்ன பேசுவது என்பது அவளுக்கும் தெரியவில்லை. அவளிடம் பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் அவனும் பேசுவதில்லை. இருவருக்குள்ளும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. அதிலும் வெற்றிக்கு பயமும் சேர்த்துக் கொண்டது. அதுவும் அடுத்த சில நாட்கள். அவளால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவனாலும் அவளை தவிர்க்க முடியவில்லை. அவன் தினமும் பாப்பாவுக்கு இரவில் வீட்டுக்கு செல்லும்போது ஏதாவது தின் பண்டம் வாங்கிச் செல்வது வழக்கம். அதைத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே இப்ப என்ன? இருக்கே புதுசா நம்ம தியா பாப்பாவும் கேட்டுடுச்சே !

ஒரு நாள் இவள் கங்கோத்ரி சென்று சில சாட் உணவுப் பொருள்கள் வாங்கிக் கொண்டாள். அப்போது அவன் பாப்பாவுக்கு ஒரே ஒரு பீஸ் கேக் மட்டும் வாங்கித் தர சொன்னான்.

“அது என்ன வெற்றி டெய்லி பாப்பாவுக்கு மட்டும் ஏதாவது வாங்கிட்டு போறீங்க?”

“மலர் அக்கா தான் வீட்டுல இல்லையே. புவிக்குத் தான் அவங்க வீட்டுக்காரர் இருக்காரே. பாப்பாதான், நான் போன உடனே மாமா எனக்கு என்ன இருக்குன்னு வந்து கட்டிக்கும். எனக்குன்னு வாங்கி கொடுக்க வேற யாரு இருக்கா மேடம் ?”

“அது சரி! என் நான் இல்லையா?”

“மேடம்!”

“என்னடா மேடம்? அது இதுன்னு. இனிமே தினமும் எனக்கு நீ ஏதாவது வாங்கித் தரணும் . உனக்கும் நான் ரொம்ப எல்லாம் செலவு வைக்க மாட்டேன். ஒரு ரூபாய் எகிலர்ஸ் இல்ல 5 ரூபாய் பைவ் ஸ்டார் ஷாட்ஸ் ஏதாவது ஓகே . கீழ் உதடு மடக்கி மிரட்டிப் பணிய வைத்தாள் அவனை.

“சரி” என்று நேரடியாக சொல்ல முடியாதவன் எல்லா பக்கமும் தலையை ஆட்டினான்.

“என்ன வெற்றி மாசத்துக்கு என்ன செலவாகுன்னு யோசிக்கறியா?

“இல்ல! அது இல்ல! ஒன்னும் இல்ல மேடம். இது தப்பு சொல்ல வந்த வார்த்தைகளை சொல்ல முடியாமல் தவித்தான். அவள் கோபித்துக் கொண்டு இனி உன்னுடன் வர மாட்டேன் என்று விட்டால்? இந்த சவாரி இல்லன்னா வேற! தோள் குலுக்கிக் கொண்டு போகும் நிலையில் அவனும் இல்லையே.

============================================

ரவியின் வாழ்வில் வேண்டாத மலராக பூத்தவள் தான் மீனு. எடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தந்தை என்ற ஸ்தானத்தில் இருக்க முடியாமல் கார்டியன் என்ற நிலையில் இருந்து அவளை மகளாக வளர்த்துக் கொண்டிருக்கிறான். பூ மேனியின் பூ வாசத்தை அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் முகமெங்கும் முத்தமிட்டு கொஞ்ச வேண்டும். ஆசையாக மடியில் அமர்த்தி பால் புகட்ட வேண்டும் என்ற பல விதமாக ஆசைகள் வந்தாலும் அந்தக் குழந்தையை தொடும் போதும் தூக்கும் போதும் அந்தப் பிஞ்சின் வாசனையை அனுபவிக்கும் போதும் அவள் அன்னை சொன்ன வார்த்தைகள் காதில் வந்து தொலைக்கும்.

“நீ எவ்ளோ மான்லி டா ! “

கட் பனியனில் தன்னுடைய அறைக்குள் அவன் இருக்கும்போதும் வந்து நிற்பாள் . பெயருக்கு கையில் ஒரு ஜூஸ் அல்லது காபி இருக்கும்.

“எவ்ளோ பேக்ஸ் டா வச்சுருக்க?”

அத்து மீறி அவன் உடலில் கைகள் வளம் வரும். ஆடைகள் இருந்தாலும் கற்பு பறந்தது போல அவனுக்கு அருவருப்பாக இருக்கும்.

“என்ன செக்சியான லிப்ஸ் டா உனக்கு” இழுத்து வைத்து முத்தமிட முயன்றது என்று எல்லாமே அருவருப்பான அசிங்கங்கள் தானே நடந்திருக்கிறது. அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு அவனால் அந்த நிகழ்வுகளை மறக்கவும் முடியாமல் தூக்கி போடவும் முடியாமல் தனக்குத் தானே வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

வெளியில் செல்வது, நல்ல பாடல், நல்ல உணவு எதுவுமே அவனுக்கு மன மாற்றத்தைக் கொடுக்கவில்லை. தன்னுடைய வாழ்வில் ஒரு பெண். அதுவும் மனதிற்கு பிடித்த பெண். ரவியால் யோசிக்கவே முடியாது. எப்போதுமே அவனுக்கு பெண்களைக் கண்டால் பிடிக்காது. நல்லவர்களாவே இருந்தாலும் வேஷம் போடுகிறார்கள் என்று நினைப்பவன் இன்னும் தன்னுடைய அண்ணன் மனைவியால் நொந்துப் போய் இருந்தான்.

அவன் மனம் கவர ஒருப் பெண்ணை மேட்ரி மோனி கொண்டு வராது. ஆத்தர் நான் கொண்டு வரணும்.

பிரோப்பைல் எப்படி?

நல்ல பையன்தான். என்ன ஒன்னு அவன் கூடவே இருக்கணும். ஆனா அவனை கண்டுக்க கூடாது. அதே சமயம் திமிர் புடிச்சவளாவும் இருக்க கூடாது. எல்லாத்துக்கும் மேலையும் அவன் அம்மா மாதிரியே தூய்மையான அன்பு காட்டறவளா இருக்கணும். அவளோட அன்பு உண்மைன்னு அவன் நம்பனும். அவள் தன்னை காதலிக்க மாட்டாளான்னு சுத்த விடற பொண்ண பார்த்து அவனைத் திரிய விடணும்.

படிப்பு அந்தஸ்து அழகு எல்லாம்?

அதெல்லாம் பார்த்து போட்டுக்கலாம்.

சரி சீக்கிரமா போய் அவனுக்கு ஏத்தவ எங்கையாவது இருக்காளான்னு பார்த்து பையனை தெறிக்க விடணும்.

காதல் வரும்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்