பாகம் – 9
சமையல் அறைக்குள் சென்று சாப்பாடு பாத்திரத்தை எடுத்தவளுக்கு தலை சுத்துவது போல் தோன்ற பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு, ஒரு கையை தலையை பிடித்தவாறு சுவரில் சாய்ந்தவள், அப்படியே மயங்கி கீழே சரிந்து விட்டாள்.
உள்ளே சென்றவள், பத்தி நிமிடமாகியும் வெளியே வரவில்லை என்றதால் அவளை தேடி சமையல் அறைக்குள் சென்ற ஆடவன், அவள் நிலையை கண்டு பதறி “ஏய் பார்ட்னர் என்னாச்சி டி.. எந்திரிடி” என்று, அவள் இரு கன்னத்தையும் மாறி மாறி தட்டியவன்,
அவளை தன் இரு கரங்களால் தூக்கி வந்து ஹாலியிருந்த சோஃபாவில் படுக்க வைத்துவிட்டு தண்ணீர் எடுத்து வந்தவன், சிறிய அளவு தண்ணீரை தன் கையில் ஊற்றி தெளித்துகொண்டிருந்தான்.
அவள் நிலையை கண்டு பயந்த ஷிவானியோ “அக்கா கண் முழிச்சு பாருங்க” என்றவாறு அவளை உலுக்கிக்கொண்டு இருந்தாள்.
இப்படியே ரெண்டு முறையும் தண்ணீர் தெளித்தும், அவள் விழிக்காததால் இந்த முறை கை நிரம்ப தண்ணீர் ஊற்றியவன் சப்பென்று முகத்தில் அடிக்க, அதில் சுயநினைவிற்கு வந்து மெதுவாக விழி திறந்தவளை கண்டு பெருமூச்சு ஒன்றையை இழுத்துவிட்டு, தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்தான்.
இப்போது மெல்லமாக எழுந்து சோஃபாவில் சாயிந்தவாறு அமர்ந்தவளை கண்ட ஷிவானியோ சோஃபாவின் மேல் ஏறி, அவளை இறுக்கி அணைத்துக்கொள்ள, அவளை தன்னிடமிருந்து விலக்கியவள் தலையை வருடியவாறு “ஷிவானி குட்டி ரொம்ப பயந்துட்டீங்களா.. அக்காக்கு ஒன்னும் இல்லைடா… சாதாரண மயக்கம் தான்”
“கொஞ்சம் நேரத்துல நானும் மாமாவும் எப்படி பயந்துட்டோம் தெரியுமா… அதுலயும் மாமா, நீங்க பேசு மூச்சு இல்லாம இருந்தது பாத்து ரொம்ப பதறிட்டாரு” என்று கூறியதும்
தலை உயர்த்தி, அவனை பார்த்து மெல்ல புன்னகைக்க, அதை கண்டு பதிலுக்கு புன்னகைத்ததவன் சமையல் அறைக்குள் சென்று ஒரு தட்டியில் அவளுக்கு சாப்பாடு வைத்து எடுத்து வந்து அவளருகில் அமர்ந்தவன் சாப்பாடை தன் கையில் எடுத்து, அவள் வாயருகே கொண்டு செல்ல மறுப்பு தெரிவிக்காமல் வாய் திறந்து வாங்கி கொண்டாள்.
இப்படியே அமைதியாக ஊட்டிவிட்டு கொண்டிருப்பவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளுக்கு ஆடவனின் அமைதி பெண்ணவளை ஏதோ செய்ய, திரும்பி பக்கத்திலிருந்த சிறுமியை கண்டவள் “ஷிவானி குட்டி ஹோம் வொர்க் எழுதினது போதும் கொஞ்சம் நேரம், அங்க ஒரு ரூம் தெரியுதுல, அங்க போய் டிவி பாருங்க” என்று புகழின் அறையை கைகாட்டி கூற, அவளும் சரி என்று தலையாட்டி அவனின் அறைக்கு சென்று தொலைகாட்சி பார்க்க தொடங்கிவிட்டாள்.
தனக்கு ஊட்டிகொண்டிருப்பவனை நிறுத்தி “போதும் புகழ்”
“கொஞ்சம் சாப்பிடுடி”
“வயி்று ஃபுல் ஆயிடுச்சு.. இதுக்கு மேல முடியாது”
“சரி, அப்போ இந்த ஜுஸ் மட்டும் குடி” என்று கூறி பழசாறை கையில் கொடுக்க அவளும் சரி என்று வாங்கி குடித்துவிட்டாள்.
இப்பொழுதும், அவன் அமைதியாக இருக்க பழசாறை குடித்து முடித்தவள் அவன் கரம் பற்றி “ஏன் டா இப்படி இருக்க.. எதாவது பேசு”
அவனோ, அவள் கரத்தை இறுக பிடித்து அழ தொடங்கிவிட்டான்.
அதை கண்ட நிக்கி “ஏய் என்னாச்சிடா… இப்போ, எதுக்கு அழுகுற.. நான் என்ன செத்தா போயிட்டேன்” என்று கேட்டு முடிப்பதற்குள் தன் கரம் கொண்டு, அவள் வாயை மூடியவன் அப்படி மட்டும் சொல்லாத என்ற ரீதியில் தன் தலையை ஆட்டி, அவள் கரத்தை இறுக்கமாக பிடித்து அவள் தோலில் சாய்ந்து கொள்ள,
அவனை தன்னிடமிருந்து விலக்க மணமில்லாதவள் தலையை வருடிவிட்டவாறே “எனக்கு ஒன்னும் இல்லைடா.. நான் நல்லா தான் இருக்கேன், சாப்பிடாதனால ஜஸ்ட் மயக்கம் வந்துருச்சு”
“பார்ட்னர், என் கூடவே எப்போவும் இருப்பியாடி என்னவிட்டு போயிட மாட்டியே… நான் அழும் போதெல்லாம் இந்த மாதிரி அறுதல் சொல்ல நீ வேணும்டி..சீக்கிரமே எனக்கானவளா என்கிட்ட வந்துரு… லவ் யூ சோ மச் டி”
அதை கேட்டு இதழ் கடித்து தன் அழுகை கட்டுபடுத்தியவள் “பசிக்குதுன்னு சொன்னேல.. சாப்பிடு வா”
“பிளீஸ் பார்ட்னர் கொஞ்சம் நேரம், இப்படியே இருக்கேன்டி”
சிறிது நேரம், அவன் தலையை வருடியவாறு அமைதியாக இருந்தவள், அவன் கையில் வரும் இரத்தத்தை கண்டு பதறி எழ, அதை கண்டவன் “இப்போ.. எங்க போற”
“ஏய் அடிப்பட்ட இடத்தில பிளட் வருதுடா.. இரு நான் போய் ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வாரேன்” அவள் கூறி தான், அவனுக்கே தெரிந்தது
முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவள் மறுபடியும் கட்டினை அவிழ்த்து இரத்தத்தை சுத்தம் செய்து மருந்திடும் போது, அதன் எரிச்சல் தாங்காமல் “ஸ் ஸ்” என்று முணங்கியவனை கண்டவள்
“ரொம்ப வலிக்குதா” என்று கேட்டவாறே மருந்திட்டு புது கட்டை கட்டிவிட்டவள் “இங்க பாரு காயம் ஆருற, வர ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணி எதுவும் தூக்காத.. புரியுதா”
அவனும் சரி என்று தலையாட்டி சாப்பிட அமர்ந்தான்.
இப்போது சாப்பாடு பரிமாறிவிட்டு அவனருகில் அமர்ந்தவளிடம் “சாரி டி”
“டேய் நல்லவனே போதும்டா என்னால.. இதுக்கு மேல தாங்க முடியாது” என்று நக்கல் செய்தவாறே அங்கிருந்த தண்ணீரை ஊற்றி குடித்தாள்
அவள் கூறியதை கேட்டு புன்னகைத்தவன் “அதுசரி… நீ எதுக்கு நைட்லயிருந்து சாப்பிடாம இருந்த”
அதை கேட்டு தண்ணீர் குடித்து கொண்டிருந்தவளுக்கு புரையேற அவனை கண்டு விழித்து
இருமியவாறே “நம்ம ஏன், சாப்பிடாம இருந்தோம்” என்று சிந்தித்தவளை “ஏய் பாத்து குடிடி” என்று தலையை தட்டிவிட்டவன் “சரி, நான் கேட்டதுக்கு பதில் வரவே இல்லையே”
“இவன் விடமாட்டான் போலயே, எதுக்கு வம்பு சும்மா சமாளிப்போம்” என்று நினைத்தவள்
“ஹான், என்ன கேட்ட”
“அதான்டி நீ, எதுக்கு நைட்ல இருந்து சாப்பிடாம இருந்த”
“அதுவா பசியில்லடா”
அவனும் புருவம் உயர்த்தி “அது எப்படி ஒருநாள் முழுக்க பசியில்லமா இருக்கும்”
“மலகுரங்கு விடுறானா பாரு” என்று அவனை அர்ச்சித்தவள்
“மந்திலி ஒன்ஸ், இந்த மாதிரி தான் சாப்பிடாம ஜுஸ் மட்டும் குடிப்பேன் அப்போ தான்,அந்த பார்ட்ஸ்க்கும் ரெஸ்ட் கிடைக்கும்.. இது உடம்புக்கும் ரொம்ப நல்லதுடா… ஆனா, இன்னைக்கு வொர்க் ஸ்ட்ரெஸ் வேற அதிகமா இருந்துச்சா அதான் டையரட் ஆயிட்டேன்”
“என்னமோ சொல்லுற… ஆனா, எதுவும் நம்புற மாதிரி இல்ல” என்று சாப்பிட்டு முடித்தவன் எழுந்து, அவன் அறைக்கு சென்றான்.
போகும் அவனை பார்த்தவாறே “மலகுரங்கு, என்ன சொன்னாலும் நம்பாம சந்தேகமாவே பாக்குது.. ஒருநாளைக்கே நாக்கு தள்ளுது இதுல காலமுழுக்க இவன வச்சி எப்படி குடும்பம் நடத்தறது” என்று தலையில் அடித்தவள் “அய்யோ.. கடவுளே, நான் ஏன் இப்படிலாம் நினைக்கிறேன்.. தப்பு ரொம்ப தப்பு இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட, இங்க இருக்கக்கூடாது” என்று முடிவு எடுத்தவள்
வேகமாக புகழின் அறைக்கு செல்ல அங்கு, அவனோ ஷிவானியுடன் தலையணை வைத்து அடித்து சிறு பிள்ளை போல் விளையாடி கொண்டிருக்க, சிறிது நேரம் கதவு அருகில் நின்றவாறே ரசித்துவிட்டு உள்ளே சென்றவள் “டேய் உன்ன கை அசைக்க கூடாதுன்னு சொன்னேன்… நான் சொல்லுறது எதையும் கேட்க கூடாதுன்னு, ஸ்ட்ராங்கா இருக்கல”
அதை கேட்டு தலையணையை ஓரமாக வைத்தவன் “இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற.. வா இப்படி வந்து உட்காரு”
“உட்காருறதா… முடியாது நான் இப்போ கிளம்பனும்”
“எங்க”
“என் வீட்டுக்கு தான்”
“பிளீஸ்டி பார்ட்னர் இன்னைக்கு ஒருநாள் மட்டும் இங்கேயே ஸ்டே பண்ணேன்”
“என்ன விளையாடுறீயா”
“பிளீஸ்” என்று உதடு பிதுக்கி கூறுபவனை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே வீரப்பாக
“அதெல்லாம் முடியாது.. நீ டேப்லெட் போட்டுட்டு நல்ல ரெஸ்ட் எடு.. நான் கிளம்புறேன்” என்று கூறி முடிக்கவும், அவளின் திறன்பேசி தொய்ங் என்று சத்தம் கொடுக்க, அதை பார்த்தவளின் புருவம் விரிய “இவ என்னத்துக்கு இந்நேரத்தில வாய்ஸ் போடுறா” என்று நினைத்தவாறே, அந்த பதிவை கேட்க,
அதில் சாருவோ “சாரி நிக்கி, இன்னைக்கு, எனக்கு நைட் வொர்க் நாளைக்கு மார்னிங் மேல தான் வருவேன்… அப்புறம் ஆபீஸ்க்கு போற அவசரத்துல ரெண்டு கீயும் நானே கொண்டு வந்துட்டேன்.. சோ இன்னைக்கு ஒருநாள் ஹாஸ்பிட்டலயே ஸ்டே பண்ணிக்கோ.. சாரி டி” என்று கூறி முடித்திருக்க, அதை கேட்டு புகழை அசடு வழிந்து பார்க்க,
அவனோ தான் நினைத்து நடக்க போகிறது என்ற வெற்றியில் ஒரு கையால் தன் காலரை தூக்கிவிட்டு “இப்போ என்ன பண்ணுவ” என்பது போல் அவளை பார்த்தான்.
ஷிவானியோ “அப்போ இன்னைக்கு இங்க தான் இருக்க போறோமா… அய் ஜாலி” என்று கூறி புகழை கட்டிக்கொள்ள
அவனோ “என்ன மேடம்…வீட்டுக்கு போறீங்களா என்ன”
“என்ன வெறுப்பேத்துறீயா”
“சரி சரி லவ்வர்ஸ் ரெண்டு பேரும், அப்புறமா சண்ட போடுங்க… இப்போ கொஞ்ச நேரம் விளையாடலாம் வாங்க”
அதற்கு நிக்கி “என்ன சொன்ன லவ்வர்ஸா.. அதெல்லாம் இல்ல”
“ஏன் மாமா, நீங்க அக்காவ லவ் பண்றீங்க தான.. ஏன் இங்க மாட்டி வச்சிருக்குற நிக்கி அக்கா ஃபோட்டோ,அப்புறம் அவங்க மயங்கி விழும் போது நீங்க துடிச்ச துடிப்பு எல்லாம் பாத்தாலே நல்லா தெரியுதே அக்காவ லவ் பண்றீங்கன்னு.. பின்ன இல்லையா”
“இவ்வளவு சின்ன வயசுலயும் சார்ப்பா பேசுற.. ஆனா, உன் அக்கா தான் மர மண்டையா இருக்கா”
“யார பாத்து மர மண்டன்னு சொன்ன” என்று கூறி அங்கிருந்த தலையணயை அவனின் மேல் எறிய அது, அவன் கையில்பட்டதால் “அய்யோ” என்று கத்த
அதில் பயந்து, அவனருகில் அமர்ந்து “சாரி.. வலிக்குதா” என்று அவன் கைபிடித்து பதறி கேட்க,
அதைக்கண்ட ஷிவானி “பாத்தீங்களா, எங்க அக்கா உங்களுக்காக இப்படி பதறுராங்க, இத பாத்துமா தெரியல அவங்களுக்கும் உங்கமேல லவ் இருக்குன்னு” என்று கூற
அதை கேட்டு, அவளை கண்ணடித்தான்.
அதில் பெண்ணவளின் கன்னம் சிவப்பதை ஆடவனும் அறியாமல் இல்லை,
இவர்களை கண்ட ஷிவானி “சரி போதும் ரெண்டு பேரும் அப்புறமா ரொமான்ஸ் பண்ணுங்க.. இப்போ கொஞ்சம் நேரம் விளையாடலாம்”
“அடிங்..முளச்சு மூணு இலை விடல இப்போவே என்ன பேச்சேல்லாம் பேசுது, இந்த வானரம்” என்று கூறி, அவளை அடிக்க துரத்த, வானரம் போல் தான் அவளின் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் தாவி தாவி, அந்த அறை முழுவதும் ஓடி கொண்டிருந்தாள்.
தொடரும்….
– ஆனந்த மீரா
நிக்கிக்கும் புகழ் மேல லவ் இருக்குல்ல அப்புறம் எதுக்காக மறைக்கிறா??
Wait panni paakkalam sis ❤️❤️thank you ❤️❤️
எதுக்கு இவ லவ் இருந்தும் மறைக்குறா🤔🤔
அது thaan twist wait and watch 😁😁
Chinna pulla sharp ya irukuthu😂 enna Nikki sapudama iruntu romba kevalama samalikura pola😂 pugal setta pudicha aala irukane😂
ரொம்பவா சேட்டை panraan