Loading

பாகம் – 8

அவன் அழைப்பை துண்டித்தவள் ஷிவானி அருகில் வந்து தன் திறன்பேசியை கையில் கொடுத்தவாறு “ஷிவானி குட்டி,இந்தா அக்கா மொபைல்ல எதாவது புடிச்ச வீடியோ பாத்துட்டு, அப்புறம் கொஞ்சம் நேரம் தூங்கி எந்தி அதுக்குள்ள அக்கா வேலைய முடிச்சிருவேன், அப்புறம் நம்ம வீட்டுக்கு போய் விளையாடலாம் ஓகே வா” என்று கேட்க,அவளும் சரி என்பது தலையாட்டினாள்.

 

அவளிடம் பேசிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தவள் தொடர்ந்து மூன்று மணிநேரம், எதை பத்தியும் சிந்திக்காமல் தனக்காக காத்திருந்த வெளி நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை பார்த்து முடித்துவிட்டு தன் இருக்கையில் தலை சாய்த்து கண்கள் மூடி இருந்தவளின் எண்ணம் முழுவதும் புகழை சந்தித்த முதல் நாள் நோக்கியே தோன்ற, சட்ரென்று கண்கள் திறந்தவள் 

 

“அய்யோ ராமா, என்ன இதெல்லாம் கண்ண மூடுனா கூட அவன் மூஞ்சி தான் வருது, இன்னைக்கு நினைப்பு முழுக்க அவன பத்தி தான் இருக்கு,என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஏன் அவன நினைச்சி ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன்… ஒருவேள அவன் என்ன வரஞ்ச பெயின்டிங்ய பாத்ததுனால, இப்படிலாம் தோணுதோ.. இருக்கலாம்” என்று கூறி தன்னை தேற்றி கொண்டிருந்தவளை குழப்பவே வந்த அவளின் மனசாட்சியோ 

 

“ஓ அப்படியே வச்சிக்கோயேன் ஆனா, இன்னைக்கு காலைல தான அவன பாத்துருப்ப ஏன், அவன தேடி மறுபடியும் பாக்கணும்ன்னு உன் மனசு கடந்து தவிக்குது, அப்போ அதுக்கும் இதான் காரணமா” என்று நக்கலாக கேட்க,

 

சற்று யோசித்தவள் “அது அவனுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல கைல அடிபட்டுருக்கு அதோட, இப்போ அவன பாத்துக்க கூட யாருமில்ல அதுனால ஒரு டாக்டரா அவன் எப்படி இருக்கான்னு பாக்கணும்ன்னு நினைக்கிறேன்.. அவ்வளவு தான்” என்று தன் மனசாட்சி அடுத்து கூற வருவதை கூட கேட்காமல் தான் கூறுவதை மட்டும் கூறிவிட்டு எழுந்து நோயாளிகளை பார்க்க சென்றாள்.

 

இப்போது, ஒரு சுற்று நோயாளிகளை பார்த்துவிட்டு ஷிவானி அருகில் வந்தவள் “ஷிவானி கிளம்பலாமா”

 

“அதுக்குள்ள வொர்க் முடிஞ்சிதா அக்கா”

 

“இப்போதைக்கு, இங்க முடிஞ்சுதுடா, என்னோட சீனியரோட பிரதருக்கு உடம்பு சரியில்ல அவரு வீட்டுக்கு போய் செக் பண்ணிட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாம்.. முத பேக் போட்டுக்கோ” என்று கூறி எடுத்து போட்டுவிட்டு, அவள் கரம்பற்றி மருத்துவமனைக்கு வெளிய அழைத்த வந்து, வண்டியில் ஏறி புகழின் வீட்டிற்கு சென்றார்கள்.

 

அவன் வீட்டின் வாசலில் நின்றவாறு அழைப்பு மணி அழுத்த சத்தம் கேட்டு கதவை திறந்தவன், அவளை கண்டு மலர்ந்த முகத்தோடு “ஹாய் பார்ட்..” என்று முடிப்பதற்குள், அவள் பேசியது நினைவிற்கு வர வேகமாக முகத்தை வெட்டி கொண்டு உள்ளே சென்றவன், அங்கிருக்கும் சோஃபாவில் அமர்ந்தான்.

 

ஆடவனின் செயலில் பெண்ணவளுக்கு சிரிப்பு வர உதத்தை கடித்து சிரிப்பை அடக்கியவள் ஷிவானியின் கரம்பற்றி உள்ளே அழைத்து வந்து, அவளை ஆடவனின் எதிரேயிருந்த சோஃபாவில் அமர வைத்தவள் “ஷிவானி குட்டி, அரை மணிநேரம் இங்க உக்காந்து ஸ்கூல் ஹோம்வொர்க் பண்ணிட்டு இரு, அக்கா அதுக்குள்ள வந்த வேலைய முடிச்சிருவேன்”

 

அவள் கூறியதை கேட்டு சரி என்று தலையாட்டியவள் வீட்டு பாடத்தை எழுத தொடங்கினாள்.

 

இப்போது நிக்கியோ ஆடவனின் அருகே வந்து அமர, அவனோ அவளை பாராமல் முகத்தை கோவமாக திருப்பி கொண்டான்.

 

அதை கண்டவள், அவனை தன் கரம் கொண்டு தன் புறம் திருப்பியவள் செதோஸ்கோப்பை அவன் மார்பில் வைத்து பரிசோத்தவாறு அவன் இதய துடிப்பை கேட்ட பெண்ணவளுக்கு, அவனின் இதயம் தன் பெயர் உரைப்பதுபோல் ஒரு உணர்வு, அதை கேட்டு ரசித்து கொண்டிருந்தவளுக்கு செதோஸ்கோப்பை எடுக்க மனதில்லை அப்படியே கேட்டு கொண்டே இருக்க தான் தோன்றியது, வேறு வழியின்றி தன் உணர்வை கட்டுபடுத்தியவள்  செதோஸ்கோப்பை ஓரமாக வைத்துவிட்டு,அவனின் கைகட்டை அவிழ்த்தவள் காயத்திற்கு மருந்திட்டு புதிய கட்டு போட்டுவிட்டாள்.

 

அவளின் தொடுகையை ஆடவன் உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே கோவமாக இருப்பது போல் தான் காட்டிக்கொண்டான்.

 

இப்போது கட்டிட்டு எழுந்து, அவன் அறைக்குள் சென்று தான் ஏற்கனவே கொடுத்த மருந்து மாத்திரையுடன் கோவமாக வெளியே வந்தவள் “நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ டேப்லெட் போட்டுக்கவேயில்ல அப்படி தான”

 

இதையெல்லாம் சிறிதும் அவன் காதில் வாங்காமல் திறன் பேசியை நோண்டியவாறு இருந்தவனை கண்டவள், அதை பிடிங்கி கீழே வைக்க, அதில் கடுப்பானவன் 

 

“அதான் வந்த வேலை முடிஞ்சிட்டுல அப்போ கிளம்ப வேண்டிதான.. எதுக்கு தேவையில்லாம கத்தி சீன் க்ரீயேட் பண்ணிட்டுருக்க”

 

அதை கேட்டு கோபத்தில் தன் கையிலிருந்த மாத்திரையை அவன் மீது எறிந்தவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.

 

அவள் சென்றதும், அவன் அருகில் வந்து அமர்ந்த ஷிவானி “என்னாச்சி மாமா, ஏன் அக்காவ கோவபடுத்துறீங்க”

 

“ஒன்னும் இல்லடா குட்டி அக்காக்கும் மாமாக்கும் சின்னதா சண்ட..நீ இதெல்லாம் கண்டுக்காத நாங்க, இப்படி தான் அடிக்கடி சண்ட போட்டுப்போம்”

 

“அது சரி… உங்க பேரு என்ன” 

 

“நான் புகழ்வேந்தன்.. உங்க பேரு என்ன.”

 

“ஐ அம் ஷிவானி… நைஸ் டூ மீட் யூ” என்று கூறி, அவன் கை குலுக்கினாள்.

 

உள்ளே, அவள் சமைக்க வெளியே சிறுமியோ அவனிடம் கதைத்தவாறு வீட்டு பாடங்களை எழுதினாள்.

***********************************

 

இங்கே அலுவலகத்தில் அமர்ந்திருந்தவள், கடுப்புடன் ஒரு கண்ணியில் கணினியை தட்டியவாறே மறுகண்ணை திறன்பேசியில் வைத்தது அவனின் அழைப்பு எப்போது வருமென்று  காத்துகொண்டிருந்தவள் “டேய் மாங்கா என் ஃபோன் நம்பர் கண்டுபிடிக்கவே உனக்கு இவ்வளவு நேரம்ன்னா என்மனசுல உள்ளத நீ எப்போ கண்டுபிடிச்சி நான் எப்போ உன்கூட டூயட் பாடுறது.. ஆனா ஒன்னு,

 

நீயா என்கிட்ட லவ் சொல்லுற வர நான் வாயவே திறக்க மாட்டேன்.. என்னலாம் ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியாது.. சீக்கிரம் சொல்லிடுவ தான..” என்று எண்ணிக்கொண்டு இருந்தவளின் எண்ணம் நிறைவேறும் என்று கூறும் விதமாக, அவளின் திறன்பேசி அலற தன்னவன் என்று அறிந்ததும் முகம் மலர அதை எடுத்து காதில் வைத்தவள் “ஹலோ வேலா” 

 

“பரவாயில்லயே அடிச்சதும் நான் தான் கண்டுபிடிச்சிடீங்களே.. அப்போ மேடம் இவ்வளவு நேரம் என்னோட காலுக்காக தான் வெயிட்டிங் போல” 

 

அதை கேட்டவள், இதழ் கடித்தவாறு தலையில் அடித்தவள் “இது என்ன சிதம்பர ரகசியமா… அதான் இப்போலாம் ட்ரூகாலர் இருக்கே” 

 

“அது சரி.. மேடம் என்ன பண்றீங்க” 

 

“ம் சாம்பிராணி போடுறேன்… என்னங்க கேள்வி வேலைக்கு வந்த இடத்துல என்ன பண்ணுவாங்க” 

 

“ஏங்க, இவ்வளவு காண்டு.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. நான் வேணா அப்புறம் கால் பண்றேன் யூ கேரி ஆன்” என்று அழைப்பை துண்டிக்க போக,

 

“ஏங்க ஏங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல எப்போவும் பாக்குறது தான்.. நீங்க பேசுங்க”

 

“ஓ அப்போ, எப்போவும் இதே காண்டுல தான் வேல பாப்பீங்கன்னு சொல்லுங்க”

 

“டேய் மாங்கா, உன் கால் லேட்டா வந்த காண்டுல தான் பேசுறேன்னு எப்படிடா சொல்லுவேன்” என்று நினைத்தவள் “என்ன பாத்தா உங்களுக்கு கிண்டலா இருக்குல” 

 

“ஏங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன், சாரி சாரி..”

 

“சாரிலாம் வேண்டாம்”

 

“சரி மீட் பண்ணலாமா” 

 

“இப்போவா.. காலைல தான பாத்தோம்”

 

“நீங்க தான டாஸ்க் கம்ப்ளீட் பண்ணா மீட் பண்ணலாம்ன்னு சொன்னீங்க”

 

“ஆமா சொன்னேன், அதுக்காக உடனேவா”

 

“இப்போ வேண்டாம், ஈவ்னிங்” 

 

“வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.. எனக்கு டுடே நைட் ஷிப்ட் வொர்க், சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”

 

“என்னங்க இப்படி சொல்லுறீங்க” 

 

“என்னங்க பண்ண.. நான் பாக்குற வேல அப்படி.. சரி நீங்க என்ன வொர்க் பண்றீங்க”

 

“சாரிங்க, எனக்கு கொஞ்சம் வொர்க் வந்துட்டு, நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

 

“மாங்கா கொஞ்சமாவது ரொமான்ஸ் பண்றானா பாரு..ஏதோ கண்டவகிட்ட பேசுற மாதிரி வாங்க போங்கன்னு பேசுறான், இவன வச்சிகிட்டு ஊறுகா போட கூட வாய்ப்பில்ல..” என்று தன்னவனை அர்ச்சித்தவாறே திறன் பேசியில், அவன் எண்ணை மாங்கா என்று பதிவு செய்தவள், அதை பார்த்து சிரித்துவிட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

 

*****************************

 

இப்போது சமைத்து முடித்து அவனருகில் வந்தவள் “சமச்சி முடிச்சிட்டேன்..வா சாப்பிடலாம்”

 

“எனக்கு தேவையில்ல..ஒருநாள் சாப்பிடலன்னா, நான் ஒன்னும் செத்துருற மாட்டேன்”

 

“பைத்தியம் மாதிரி பேசாத புகழ்.. செஞ்சத வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா வந்து சாப்பிடுற” 

 

“நான் தான் வேண்டாம்ன்னு சொல்லுறேன்ல, பின்ன எதுக்கு திரும்ப திரும்ப டார்ச்சர் பண்ற” 

 

“இங்க பாரு..எனக்கு பயங்கரமா பசிக்குது, நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்”

 

“என்னடி மிரட்டுறீயா” 

 

“சத்தியமா, நானும் நேத்து நைட்ல இருந்து, இப்போ வர எதுவுமே சாப்பிடல டா”

 

அவனோ புருவம் உயர்த்தி சந்தேக பார்வை பார்க்க

 

“என்ன நம்பலயா.. வேணும்ன்னா சூடம் அடிச்சி சத்தியம் பண்ணவா”

 

“உனக்கு பசிக்குதுன்னா நீ தாராலமா கொட்டிக்கோ.. ஐ டோண்ட் கேர்” 

 

“அதான் சொல்றேன்ல நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்… அதுனால ஒழுங்கா ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கூறி சமையல் அறைக்குள் சென்றவள், பத்து நிமிடமாகியும் வெளியே வரமால் போக அவளை காண சமையல் அறைக்குள் சென்றவன், அவள் நிலை கண்டு பதறிவிட்டான்.

தொடரும்…

                                 -ஆனந்த மீரா 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. இந்த மாங்கா அவளோட நம்பரை எப்படி கண்டுபிடிச்சான்??

    நிகிதா சமையல் கட்டுக்குள்ள அப்படி என்ன பண்ணிட்டு இருக்கா இவன் வேற ஏன் அதிர்ச்சி ஆகுறான். சாப்பிடாம இருந்ததுல விழுந்துட்டாளோ

    1. Author

      அது ava கொடுத்த glue vachi தான் kandu pidchiruppan vera enna irukka போகுது ❤️❤️ நிக்கிக்கு ennachinnu next epi la pakkalam ❤️❤️thanks ka 🥰🥰

  2. Nijamale Avan manga va irupan polaiye😂 Niki ku enna Achu🙄 super darling, 😍