Loading

பாகம் – 10

அவனின் மார்பில் சாய்ந்தவாறு அவன் கூறும், கதை கேட்ட சிறுமியவள் அப்படியே உறங்கியும் போனாள்.

 

அதை கண்டவள் “சரி ஷிவானி குட்டி உன்கூடவே தூங்கட்டும், நான் ஹால்ல படுத்துகிறேன்” என்று கூறி தலையணை போர்வையை எடுத்து கொண்டு கீழே சென்று படுப்பதற்காக போர்வையை விரித்தவள், சோஃபாவில் தலை சாய்த்தவாறு ஆழ்ந்த யோசனையுடன் கண்கள் மூடி  அமர்ந்திருந்தாள்.

 

அவள் அறையை விட்டு சென்ற மறுநொடி தன் மேல் படுத்துறங்கும் சிறுமியை மெத்தையில் கிடத்தியவன் அவனுக்கென்று ஒரு போர்வையும் தலையணையும் எடுத்து கொண்டு வந்து, அவள் அருகில் வந்தமர்ந்தவன் “ஓய் பார்ட்னர்” என்ற அழைக்க, அவன் குரல் கேட்டு தன் சிந்தனை உலகத்திலிருந்து வெளியே வந்தவள் “ஏய், நீ இங்க எதுக்கு வந்த…. உன்ன ஷிவானி கூட தான தூங்க சொன்னேன்”

 

“தூக்கம் வரலடி பார்ட்னர்… அதான் உன்கிட்ட கொஞ்சம் நேரம் பேசலாமேன்னு வந்தேன்”

 

“ஓ பேச வருறவன்… இப்படிதான் பெட்சீட் பில்லோலாம் எடுத்துட்டு வருவனோ”

 

“ஈஈ… சும்மா தேவைபடுமேன்னு எடுத்துட்டு வந்தேன்”

 

அதை கேட்டு ஆடவனுக்கு தன் முறைப்பை பதிலாக கொடுத்தவள் திறன்பேசியை ஆராய தொடங்கினாள்.

 

அதை கண்டு எரிச்சலுற்றவன் “ஏன்டி, உன் பக்கத்துல ஒருத்தன் உக்காந்து இருக்கிறது… உன் கண்ணுக்கு தெரியுதா… இல்லையா”

 

“இப்போ என்ன பண்ணனும்ங்குற”

 

“ஒன்னும் பண்ண வேண்டாம்…மூடிட்டு தூங்கு”

 

“ஆமாடா எனக்கும் செம டையட்டா இருக்கு…சோ… நான் தூங்குறேன்..நீயும் உன் ரூமுக்கு போய் தூங்கு”

 

“நான் ஹால்ல தான் தூங்குவேன்”

 

அதை கேட்டு “கடவுளே!” என்று பெருமூச்சுவிட்டவள் “சரி… அப்போ நீ கீழ படுத்துக்கோ… நான் சோபால படுத்துகிறேன்” என்று கூறி தனது தலையணையும் போர்வையையும் சோஃபாவின் மேல் வைத்துவிட்டு எழுந்தவளை, அவள் கரம் பற்றி இழுத்து தன்னருகில் அமர வைத்தவனை பார்த்து முறைத்தவள் “ஏன்டா என்ன படுத்தி எடுக்கிற… இப்போ உனக்கு என்ன தான்டா பிராப்ளம்”

 

“தூக்கம் வரலடி பார்ட்னர்” 

 

“ஆனா… எனக்கு வருதே” 

 

“பிளீஸ்டி…கொஞ்சம் நேரம் எதாவது பேசு… அப்படியே கேட்டுட்டே தூங்கிடுறேன்”

 

“டேய் உன்ன தாலாட்டி சீராட்டி தூங்க வைக்க… நான் என்ன உன் பொண்டாட்டியா… இல்ல உன் அம்மாவா”

 

அதை கேட்டு முகம் சுருக்கி, வேகமாக எழுந்து பால்கனிக்கு சென்றவனை கண்டவள் “அப்போ அப்போ கஜினி மாதிரி மாறிடுறான்… பேசாம இவன வச்சி கஜினி பார்ட் டூவே எடுக்கலாம்…. ஆக மொத்தத்துல இன்னைக்கும், எனக்கு சாம கொடைதான் போல” என்று தனக்குள் புலம்பியவாரே அவனருகில் வந்தவள் “இப்போ என்னடா பீலிங்கு”

 

“ஒன்னும் இல்ல… நீ போய் தூங்கு’ 

 

“எத தூங்குறதா…. வந்த தூக்கத்த கெடுத்து விட்டது இல்லாம…. இப்போ வந்து பெருந்தன்மையா தூங்குன்னு சொல்லுறீயே… உனக்கு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா” 

 

“பிளீஸ்டி… என்ன கொஞ்சம் தனியா விடு”

 

“தனியா விடுறதா… சரி நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்” என்று கூறியவளின் கரத்தை இறுக பற்றியவன் “நீயும்… என்னவிட்டு போயிடாதடி”

 

“டேய் பைத்தியமாடா நீ…. இப்போ தான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தனியா விடுன்னு சொன்ன…. இப்போ விட்டுட்டு போயிடாதங்கிற…கன்பார்ம் உனக்குள்ள கஜினி பூந்துட்டான்டா” என்று கூறி  அவனின் மனதை மாற்ற நினைக்க,

 

அவனோ, அதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காமல் விட்டத்தை பார்த்து கொண்டிருக்க, அவனை தன் புறம் திருப்பியவள் “ஹே புகழ்… நீ எதையோ நினைச்சி ரொம்ப டிஸ்டர்ப்பாகுறேன் தெரியுது… அது என்னன்னு என்கிட்ட ஷர் பண்ணினேனா… உனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீப்பா இருக்கும்ல”

 

அதை கேட்டு தன் திறன்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்து, அவள் கையில் கொடுத்து மறுபடியும் திரும்பி விட்டத்தை பார்த்தவன் “அந்த ஃபோட்டோல இருக்கிறது என்னோட அம்மா… சொல்லபோனா என் அம்மா தான் என்னோட ஃபர்ஸ்ட் லவ்… நான் போலீஸ் ஆகனும்ன்னு என்னவிட அவங்க தான் ரொம்ப ஆசபட்டாங்க… இப்போ, என் அம்மா ஆசபட்ட மாதிரியே நான் போலீஸ் ஆயிட்டேன், பட் அத பாக்குறதுக்கு அவங்களுக்கு கொடுத்து வைக்கல” என்று நிறுத்தியவனை கண்டவள் “அப்போ.. உன் அம்மா” என்று இழுக்க, 

 

இல்லை என்ற ரீதியில் தலையாட்டியவன் “அப்போ, நான் டென்த் படிச்சேன்… அன்னைக்கு வழக்கம் போல ஸ்கூல் முடிச்சி நானும் பாரியும் வீட்டுக்கு வந்தோம்… அப்போ மூக்குல பிளட்டோட மயங்கி விழுந்து கிடந்தவங்க தான் அதுக்கு, அப்புறம் எந்திக்கவே இல்ல…. பிளட் கேன்சர்” என்று கூறி முடித்தவன் விட்டத்தை பார்க்க, 

 

அதை கேட்டவளோ “ஓ இதுனால தான் நம்மாளு… நான் மயங்கினதும் பயந்துடாப்புடி… இந்த நிகழ்வு… அவனால மறக்காம முடியாம தான் ரொம்ப டிபிரஷனாகுறான்” என்று நினைத்து அவனின் மனநிலையை மாற்ற எண்ணியவள் “புகழ் புகழ் ஐஸ் சாப்பிடலாமா”

 

“இப்போவா”

 

“இப்போவே தான்” என்று கூறி அவன் கரம் பற்றி இழுத்து சென்றவள் நேராக, அவன் வீட்டிற்கு இரண்டு அடி தள்ளிருக்கும் கடைக்கு சென்று, அவன் கையை விடுவித்தவள் “அண்ணா டூ குல்பி” என்று கேட்டு வாங்கி ஒன்றையை அவன் கையில் கொடுத்துவிட்டு மற்றொன்றை பிரித்து சாப்பிட, அவள் சாப்பிடும் அழகை ரசித்தவாறே அவனும் சாப்பிட, அவளோ

 

“ஐயோ தீந்துருச்சே… இன்னொரு குல்பி சாப்பிடலாமா” என்று பாவமாக முகத்தை வைத்து கேட்பவளை ரசித்தவன், சரியென்று தலையாட்ட மறுபடியும் இரண்டு வாங்கி, அவனின் பங்கை கொடுத்துவிட்டு தன் பங்கை சாப்பிட்டவாறே “புகழ் நான் ஒன்னு சொல்லட்டுமா”

 

“ம் சொல்லு” 

 

“நமக்கு பிடிச்சது எல்லாமே நம்ம கைல இருக்காது… ஒன்னு தொலையும் போது தான் இன்னொன்னு கிடைக்கும்ன்னு சொல்லுவாங்க… அதுக்காக நம்ம முதல தொலைச்சத பத்தியே நினைச்சிட்டு இருந்தா… அடுத்து நமக்கு கிடைக்க இருக்கிறதும் தொலைஞ்சிடும்…. புரியுதா”

 

“ம் நல்லாவே புரியுது… மறுபடியும் தொலைக்க மாட்டேன்… இப்போவே இறுக்கி பிடிச்சிக்குறேன்” என்று அவள் கரம் பற்றி இழுத்து இறுக்கி அணைத்து கொண்டான்.

 

பாவம் பெண்ணவள் தான், அவனின் தீடீர் அணைப்பில் செய்வதறியாது திகைத்து நிற்க்க, அவர்களை கண்ட கடைக்காரனோ “டேய் டேய் போங்கடா வீட்டுக்குள்ள போய் லவ் பண்ணுங்க…. நானே என் ஆள பாக்க முடியாம காண்டுல இருக்கேன்… எனக்குன்னே வந்து சேருறாங்க பாரு”

 

அதை கேட்டு தன்னவளை விடுவித்தவன் “நோவ்… வயிற் எரியாத நோவ்… சீக்கிரமே உங்க ஜோடி புறா தேடி வந்துரும்…. டோண்ட் வொர்ரி” என்று கூறி தன்னவள் கரம் பற்றி உள்ளே அழைத்து வந்தவன் அவளை சோஃபாவில் அமரவைத்து “ஏய் என்னடி பேயரஞ்ச மாதிரி இருக்க” என்று கூறி அவள் தோலை உலுக்க,

 

அதில் சுயவநினைவுக்கு வந்தவள் எதுவும் கூறாமல் சோஃபாவில் படுத்து போர்வையால் தன்னை மூடியவள் அவனின் அணைப்பால் தன் உடல் சிலிர்ப்பை அடக்க பெரும்பாடுபட்டு அடக்கியவள், அப்படியே உறங்கியும் போனாள்.

 

அவள் படுத்ததும் சோபாவின் கீழே படுத்தவன் தன்னவளுடன் முதல் அணைப்பை நினைத்தவாறே உறங்கிவிட்டான்.

 

இப்படியே அன்றைய பொழுது கழிந்து மறுநாள் சூரியன் உதித்தது.

 

இப்போது கண்களை விழித்தவள் தனக்கு எதிரே நெருக்கத்தில் இருக்கும் அடவனை கண்டு அதிர்ந்தவள் “ஏய் என்ன பண்ற”

 

அதையெல்லாம் காதில் வாங்காதவன் அவள் இதழை நெருங்க, அவன் செயலில் மூச்சுவிட முடியாமல் தவித்த பெண்ணவளோ அவனை தள்ளிவிட  அவனோ, அவளையும் சேர்த்து இழுக்க, அதில் அவன்மேல் விழுந்தவளின் இதழ் அவன் இதழை சிறை செய்ய, இருவரின் விழியும் ஒரேநேரத்தில் அதிர்ந்து விழித்தது.

 

அப்போது கதவை திறந்து வந்த இருவரும் அவர்கள் நிலையை கண்டு தன் கண்களை மூடியவாறு “டேய் டேய்… நடு ஹால்ல பண்ற வேலையா… இதெல்லாம்…”

 

சத்தம் கேட்டு களைந்து எழுந்த இருவரையும் கண்ட ரஞ்சியோ “என்ன இதெல்லாம்” என்பது போல் கண்களால் வினவ, அதற்கு நிக்கியோ”அது அது.. கெட்ட கனவு… வந்துச்சு நிஜம்ன்னு நினைச்சி பயத்துல… சோபாலிருந்து ஸ்லீப்பாகி… ஸ்லீப்பாகி” என்று இழுத்து கொண்டிருந்தவளை கண்ட ரஞ்சியோ “ம் ஸ்லீப்பாகி…” என்று கேட்டு நக்கல் செய்ய, 

 

அதை கேட்டவளோ, ஒரே ஓட்டமாக புகழின் அறைக்கு பக்கத்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

இப்போது, இருவரின் பார்வையும் தன் புறம் திரும்புவதை கண்ட புகழும் திறன்பேசியை காதில் வைத்தவாறே வெளியேறி விட்டான்.

 

போகும் அவர்களை கண்டு சிரித்து கொண்டு இருப்பவளை இழுத்து கொண்டு தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் தன்னவளுடன் விழுந்தவனிடம், ரஞ்சியோ

 

“பாரி… என்ன பண்ற விடுடா… நான் போய் ப்ரஷ் ஆகனும்”

 

“சேந்து குளிக்கலாமா”

 

“செருப்பு பிஞ்சிரும்” 

 

அதில் கடுப்பானவன், அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுக்க, அதை கண்டு பல் கடித்து சிரித்தவள், அவனை இழுத்து அணைத்தவாறே “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா…”

 

“அவனுக்கும் செட் ஆகட்டும்… ஒரே மேடையில ரெண்டு கல்யாணத்தையும் முடிச்சிரலாம்”

 

“இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி நடந்த காட்சிய பாத்துமா… தெரியல அவங்க ரெண்டு பேரும் சேந்துட்டாங்கன்னு”

 

“அது அவங்களுக்குள்ள தெரியாம நடந்த இன்ஸிடன்ட்டி…. என் ஜூனியர் உன்ன மாதிரி லோக்கல் கிடையாது… ஆனாலும் இந்த லோக்கல தான் எனக்கு பிடிக்குது..”

 

அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் “நம்பிட்டேன்..” என்று கூறி முகத்தை வெட்டி குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவனோ தலையணையை கட்டி பிடித்து உறங்கிவிட்டான்.

************************************

 

குளித்து முடித்து துண்டை கட்டியவள் “அய்யோ மாத்து துணி இல்லங்குறத மறந்து ஒரு புளோல குளிச்சிட்டேன்… இப்போ என்ன பண்றது…”என்று யோசித்தவாறே வெளியே வந்தவள், படுக்கையிலிருந்த ஆடையை கண்டு புன்னகைத்தவாறே அணிந்து தயராகி வெளியே வந்தாள்.

 

அவளை வரவேற்கும் விதமாக ஆடவன் ஷிவானியுடன் அவளுக்காக காத்து கொண்டிருக்க, அவனை காணாமல் தன் வண்டியை எடுக்க சென்றவளை “நைட் சரியா தூங்கிருக்க மாட்ட… வா நானே ட்ராப் பண்றேன்” 

 

அவள் இருக்கும் நிலமைக்கு அதுவே சரியான தோன்ற பதில் பேசாமல் ஆடவனின் காரில் முன் புறம் ஏறி கொண்டாள்.

 

முதலில் பள்ளிகூடத்தில் ஷிவானியை இறக்கிவிட்டு மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தவன்  பாடல் கேட்கலாம் என்று எண்ணி பாடலை ஒலிக்கவிடவும்

 

முதலில் தொடங்கியதே, இந்த வரிகளிலிருந்து தான்

 

“ஒத்த ஒத்த முத்தத்துக்கே

பித்தம் தலைக்கேறுதடி

பத்து தலை வேணுமுன்னு

சத்தியமா தோணுதடி

சுழட்டிவிட்ட பம்பரமா

என் மனசு சுத்துதடி

கழட்டிவிட்ட குதிரையா

திக்குகெட்டு அலையுதடி “

 

அதை கேட்டவள், அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்க்க, அதில் பயந்தவன் “ஐயோ… இது கேசுவலா தான் வருது.. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல… பிளிவ் மீ… நான் பாட்டே கேக்கல ஆஃப் பண்ணிடுறேன்” என்று பாடலை அணைத்தவன், அவளை காணாமல் சாலையில் கவனத்தை செலுத்தினான்.

 

முதல் அணைப்பின் சிலிர்ப்பே அடங்கவில்லை, அதற்குள் முதல் முத்தம் வேறா, இரண்டையும் நினைத்து நினைத்து பெண்ணவளுக்கு வெட்கம் பிச்சி திங்காத குறை தான், அவளுக்கு மட்டுமல்ல ஆடவனக்கும் அதே நிலமை தான்.

தொடரும்….

                                   – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

      1. Author

        நன்றி அக்கா ❤️❤️

    1. என்ன டா பொசுக்குனு முத்தம் குடுத்துட்ட 😂🤣🤣

      1. Author

        Athu கனவுல அவன் கொடுப்பான் அதுல பயந்து ஸ்லீப் ஆகி real aa ava koduthuruva 😜😜