
தேஜாவின் கேள்வியில் புன்னகைத்தவன்,”ஹன்ட்ரட் பர்சன்ட் நீ வொன்டர்ஃபுல் வொய்ப் எனக்கு” என்று அவளைக் கட்டிக் கொண்டான்.
“நிஜமாவா”என்றவளின் நெற்றியில் இதழ் பதித்து “நிஜமாவே…”என்றிட அவன் செயலை தனதாக்கிக் கொண்டாள்.
“என் லைஃப் ல இந்த ஆறு வருஷம் தவிர மத்த எல்லா நாளும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் தெரியுமா அஸ்வி”என்க
“ஏன் அப்படி”
“ஹ்ம்ம் என் அப்பா அம்மா பாரேன்.இப்படி யாருக்காவது கிடைப்பாங்களா… என் அப்பா எனக்கு ஹீரோ வொய்ஃப் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ரோல் மாடலே அவர் தான். அப்புறம் அம்மா ம்ஹூம் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் என் சுக துக்கம் எல்லாத்திலையும் பங்கெடுத்தவங்க. கொஞ்ச நாள் அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி வச்சுட்டேன். பட் இப்போ அதுக்கு டபுளா சந்தோஷத்தை தந்துட்டேன்”என்றவன்
“அப்புறம் கவிலயா… என் டால் “என்று கண்களை மூடிக் கொள்ள அவன் நெஞ்சில் தன் முகத்தாடையை பதித்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் தேஜா.
“ஹேய்…”என்று மீண்டும் முத்தமிட்டவன் “சொல்லக் கூடாதா நான்”என்றதும் “அப்படி எல்லாம் இல்லையே”என்றாள் கண் சிமிட்டி
“ஹ்ம்ம்”என்றவன் “அவ என் கூட இருந்தப்ப எனக்கும் அவ்வளவு மெச்சூரிட்டி வரும்னு நான் நினைச்சதே இல்லை அஸ்வி. எல்லா விஷயத்திலும் எனக்கு ஒரு குரு னு சொல்லலாம். சச் எ ப்யூர் சோல் அப்படி தான் சொல்லணும்.”என்றவன்
“அடுத்து என்னோட வேர்ல்ட் அழகா இருக்குன்னா அதுக்கு காரணம் இந்த ஹிட்லர் பொண்ணு”என அவளின் நெற்றியில் முட்டினான்.
“நான் ஹிட்லரா உங்களுக்கு?”என்று மூக்கை விடைக்க
“அது முன்னாடி…!!”விலகப் போனவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு “ஒரு நாள் வந்தா இந்த ஹிட்லர், யவணராணி படிச்சவளை என் ராணி ஆக்க போறேன் னு தெரியாம வம்பு பண்ணி, திட்டு வாங்கி, முறைப்பு வாங்கி ,அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஃப்ரெண்ட் ஆகி ஒரு நாள் எனக்கு எல்லாமுமா ஆகிட்டா.”என்று சிலாகிக்க
“ஹப்பா அப்படியே புல்லரிக்குது போங்க”என்று கிண்டல் செய்தவளை மெத்தையில் உருட்டி விட்டவன் அவள் மீது படர சிரிப்புடன் விழிகளை மூடிக் கொண்டாள்.
“ஓகே அதெல்லாம் இருக்கட்டும் காசியாபாத் போறது பத்தி நீங்களும் எதுவும் பேசலை நானும் எதுவும் கேட்காம விட்டுட்டேன். என்னாச்சு ங்க”என்றாள் குழப்பமாக.
“ஹ்ம்ம் அஜிஸ் வர வேண்டாம் னு சொல்லவும் நானும் விட்டுட்டேன் அஸ்வி அப்புறம் ஒரு நாள் கால் பண்ணி லயா அம்மா இறந்துட்டதா சொன்னேன். போகணும் னு தோணலை. மாறா ரூபேஷ் வொய்ப்க்கு ஒரு விடுதலை கிடைச்சதா தான் நினைச்சேன்”என்றான்.
“ஏன் அப்படி. லயாவோட அம்மா அவங்க. என் கிட்ட சொல்லி இருக்கலாம் தானே”என்று வினவ
“ப்ப்ச் உண்மையா எனக்கு சொல்லப் பிடிக்கலை அஸ்வி. அவங்களுக்கு மூட நம்பிக்கை இருக்கலாம் அதுக்காக பெத்த பொண்ணை பேய் பிசாசு அதுஇதுனு அதுவும் லயாவைப் போய்… தெரியாமல் கூட ஒருத்தரை ஹர்ட் பண்ண நினைக்க மாட்டா அவளைப் போய்”என்றவன் “விடும்மா.. இந்த பேச்சு வேண்டாம்”என்றான்.
“சரி பேசலை.”என்றவள் “எனக்கு லயா மாதிரி பொண்ணு வேணும்”என்றிட
மென்மையாக புன்னகை சிந்தியவன்”லயா மாதிரி வாய்ப்பு இல்லை. எனக்கு அஸ்வி மாதிரி பொண்ணு தான் வேணும்.”
“பார்றா அவ்வளவு இஷ்டமா நான்”
“ரொம்ப இஷ்டம்…”
“நம்பி ட்டேன் நம்பிட்டேன்”என்றாள் கிண்டலாக.
அவளின் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு “சொன்னா நம்பணும் சோடா புட்டி. நம்பலைனா அப்புறம்”என்று நிறுத்த
“அப்புறம் என்ன செய்வீங்களாம்?”என்றவளை அடுத்து அவன் பேச விட்டால் தானே…
இருவரின் புரிதலும் இதம் சேர்க்கும் அதிகாலை பனியாய் நிறைய ஓர் ஆடைக்குள் இரு உயிர் வெம்மை தேடி சரண் புகுந்தது.
********
அருண் பிரதன்யா இருவரும் வெகு சுவாரஸ்யமாக படம் ஒன்றை பார்த்து கொண்டிருந்தனர்.இருவருக்கும் பிடித்தமான ஒன்று இருக்கிறது என்றால் அது படம் பார்ப்பது தான். அதுவும் இரவு நேரத்தில் கையில் சூடான டீயும் நொறுக்கு தீனியும் இருந்து விட்டால் விடிய விடிய கூட பார்ப்பர்.
பிள்ளை பிறந்த பிறகு இப்படியானதொரு நேரம் கிடைப்பது அரிதாகிப் போகவே கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படம் தான் ஓடும். ஒரு ஓடிடி தளம் விடாமல் இன்ஸ்டால் செய்து வைத்துள்ளனர்.
“தனு”
“ஹ்ம்ம்”
“செமயா குளிருது”என்று ராகம் பாடியவனை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு”அதுக்கு”என்றாள் அந்த பக்கம் திரும்பி சிரித்தபடி.
“ஒண்ணும் இல்லை ஹீட்டரை போட்டு விட சொன்னேன்”என்றான் சலிப்பாக.
“ஸ்விட்ச் உங்க பக்கம் தான் இருக்கு”
“ப்ப்ச் இங்கே வச்சுட்டானுகளா”என்று முணுமுணுத்தபடி பெருமூச்சு விட பிரதன்யாவுக்கு அத்தனை சிரிப்பு.
“ஓவர் சலிப்பா இருக்கே என்னவாம்”என்று கிண்டலாக கேட்டாள்.
“ப்ம்ச் நத்திங் நத்திங்”என்று படுத்துக் கொள்ள
“வாயைத் திறந்து எதையுமே கேட்க மாட்டீங்களா பிரசாத் எல்லாம் நானே கேட்கணும்”என்று முறைக்க
“இல்லை எப்பவும் நீயே தந்துடுவ அதான்”என்று தயக்கமாக இழுத்தான்.
“ஹப்பா”என்று அலுத்தவள் “நான் உங்களை அதிகாரம் பண்றேனா”என்று கேட்க
“ஹேய் என்ன நீ அப்படி எல்லாம் இல்லை”எனப் பதறினான்.
“அப்புறம் ஏன் இப்படி பிரசாத். ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்க தயங்கி நிற்கறது கஷ்டமா இருக்கு தெரியுமா”என்றாள் சங்கடமாக.
“அது அப்படி இல்லை தனு. உனக்குனு ஒரு ப்ரைவஸி இருக்கும் உன் மைன்ட் ல நிறைய தாட்ஸ் இருக்கும் அது எதையும் கேட்காம நான் பாட்டுக்கு பிஹேவ் பண்ணிட்டு அது உனக்கு வெறுப்பு ஆகிட்டா… அதனால என்னைப் பிடிக்கலைனா”சிறுபிள்ளை போல கேட்டவனை ஆதூரமாய் பார்த்தாள்.
“லட்டு பையன்”என்று கன்னத்தை கிள்ளி ஆட்டி விட்டு கொஞ்சியவள் “தூங்கலாம் லேட் ஆகிடுச்சு”என்றதில் முகம் வெயிலில் காய வைத்த சுண்டைக்காய் போல மாறி விட்டது அவனுக்கு.
அதில் கலகலவென்று சிரித்தவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னை எப்போ இருந்து பிடிச்சது” என்னவளின் மடியில் படுத்துக் கொண்டவன் “பத்து வயசுல இருந்தே பிடிக்கும் னு சொல்லலாம்”
“அடப்பாவி பத்து வயசுலயா இதெல்லாம் அநியாயம். பாய் கட் வச்சுட்டு சுத்திட்டு இருந்தவளை உங்களுக்கு பிடிச்சது அதை நான் நம்பணும்”என்று வம்பு செய்ய
“உண்மையை சொன்னா நம்பணும் தனும்மா”என்றவன் “பத்து வயசு இருக்கும் னு தான் நினைக்கிறேன். சரியா தெரியல. பசங்க மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு ராட்டினத்தில் சுத்திட்டு பாதியில் பொத்துனு குதிச்சியே”
“ஆமாம் அப்போவே பார்த்தீங்களா என்னை”என்றாள் ஆச்சரியமாக.
“உன்னை முதல்ல பையன் னு நினைச்சேன் நான். அப்புறம் பார்த்தா பொண்ணு… யார்டா இந்த பொண்ணு துறுதுறு னு ஒரு இடத்தில் நிற்காம இருக்காளே னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்புறம் தான் சொன்னாங்க சுதாகரன் தங்கச்சினு. ஓஓஓ நமக்கு முறைப் பொண்ணு னு தான் பேச வந்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க வச்சவ மொத்தமா பிடிக்க வச்சுட்டா”என்றான் சிரித்தபடியே.
“ஹ்ம்ம் ஹ்ம்ம்”என்றவள் “நான் உங்களை ஃபோர்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணது உண்மையிலேயே உங்களுக்கு பிடிக்கலை தானே”
“அட லூசு …. அப்படின்னு யார் சொன்னது. நான் என்ன குழந்தையா மிரட்டினதும் சம்மதிக்க, அந்த இடத்தில் வேற யாரு அது மாதிரி கேட்டிருந்தாலும் நிச்சயம் நோ தான் சொல்லி இருப்பேன். அங்கே இருந்தது பிரதன்யா. அதனால் தான் சம்மதிச்சேன். ஆனா எனக்கு ஒரு கில்ட் ஃபீல் தெரியுமா”
“கில்ட் ஃபீலிங்கா எதுக்கு”என்று குழப்பமாக கேட்க
“பின்ன ஜாலியா சுத்திட்டு இருந்த பொண்ணை கல்யாணம் ன்ற பேரில் ஒரு அஞ்சு வயசு பையனை வளர்க்க விட்டு என் குடும்பம் என் கடமை எல்லாத்தையும் செய்ய விட்டு உன்னை ஒரேயடியாக போட்டு டம்ப் பண்ணிட்டேன் னு நினைச்சு வருத்தப்பட்டு இருக்கேன்”
“ப்ப்ச் அதெல்லாம் இல்லை பிரசாத். மகியை நான் மனசார தான் ஏத்துக்கிட்டேன். உங்களுக்கு முன்னாடி என்னை அக்ஸெப்ட் பண்ணிக்கிட்ட பையன். எல்லாம் தெரிந்து தானே மேரேஜ் பண்ணேன் இதுல டம்ப் பண்றது எங்கிருந்து வந்துச்சு.”என்றவள் “ஆக்ஸுவலி நான் நல்லா சுதந்திரமா இங்கே தான் இருக்கேன் தெரியுமா”என்றாள் கண் சிமிட்டி.
“உங்க அம்மா கிட்ட காலையில் போட்டு தர்றேன் டி பிரதர்”என்றவனை தலையணையால் அடித்து விட்டு “உண்மை தான் பிரசாத்.எனக்கு இங்கே கட்டுப்பாடு கிடையாது. நான் நானா இருப்பேன். சில விஷயங்கள் எல்லாம் கேட்க தயங்கவே மாட்டேன். இந்த மாதிரி ஒரு நல்ல பையன் எல்லாம் கிடைக்கவே மாட்டான் அதான் உருட்டி மிரட்டி கல்யாணம் பண்ணிட்டேன்”என்றாள் புன்னகையாக
“பேசியே டைம் வேஸ்ட் ஆகிடுச்சு”என்றவனின் பார்வை திசை மாற இருவருக்குமான உலகில் ஒருவருக்கும் இடமில்லாமல் போனது.
********
அனைவரும் ரெஸாட்டில் விடுமுறையைக் கழித்து விட்டு கவி கங்காதரேஷ்வரர் கோவிலுக்கு கிளம்பி விட்டனர். கவி கங்காதரேசுவரர் கோயில் சிவபெருமானுக்கான பழமையான குகைக்கோயில், இது சூரிய ஒளி மூலம் சிவலிங்கத்தை ஒளிரச் செய்யும் அதிசயத்தைக் கொண்டது.
வெளியே உணவைப் பார்த்து கொள்ளலாம் என்று பயணித்தனர்.
“நம்ம மச்சான் மட்டும் தான் சிங்கிளா சுத்துறான் அடுத்து அவனையும் குரூப் ல ஜாய்ன் பண்ணி விட்டுடணும்”என அகிலனை தான் கிண்டல் செய்தபடி வந்தனர் அருணும் யுகாவும்.
“ஏன் மாம்ஸ் உங்களுக்கு இந்த ஆசை. நான் கொஞ்ச நாள் சிங்கிள் போர்ட் வச்சே சுத்திக்கிறேன்”என்ற அகிலனை இறுக்கிக் கொண்டு “ஹாஹாஹா உன்னை விட்டா தானே”என்றனர் இருவரும்.
“நல்ல பழமையான கோவில் போல”என்று கந்தசாமி கேட்க
“ஆமாம் பெரியப்பா. பொங்கல் அன்னைக்கு பயங்கர கூட்டமா இருக்கும். அன்னைக்கு தான் நந்தியோட கொம்புகளுக்கு இடையில சிவலிங்கம் மேல சூரிய ஒளி படுமாம் அதை பார்க்கவே கூட்டம் கூடுமாம் நான் ரெண்டு மூணு தடவை வந்திருக்கேன்”என்றான் யுகா.
“நல்லா இருக்கு கோவில். அமைதியா இருக்கு”என்று பழமையான ஓவியங்கள் எல்லாம் பார்த்தபடி வந்தனர்.
சிவ தரிசனம் முடியவே மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
வருடா வருடம் செந்தாளம்பட்டி திருவிழாவிற்கு பயணித்து விடுவார்கள் இரு குடும்பத்தாரும்.
என்ன தான் நகர வாழ்க்கையில் இருந்தாலும் கிராமத்திற்கு வந்து விட்டால் அனைவரும் வேறு மாதிரி தான்.
மனதை தாலாட்டும் சுகமான பயணங்கள் அவை. என்றுமே வாழ்வின் திரும்ப பெற இயலாத சொர்க்கம். அதில் லயித்தவர்களுக்கே அந்த வாழ்க்கையின் சுகங்கள் புரியும். இரு இணைகளும் எங்கோ துவங்கி இடையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தாங்கி திருமண பந்தத்தில் இணைந்து தன் இணையின் வானில் வானவில்லாய் இருக்க இரு இணைகளின் வாழ்வும் இனிதாய் பயணித்தது.
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1
