Loading

    “பைத்தியமாடா நீ”ஆத்திரமாய் கத்தியிருந்தாள் தேஜா.

    யுகா அதிர்ந்தவன் பின்னர் அவளை,”அஸ்வி?!”என்று சங்கடமாய் அழைக்க

    “இது தான் உனக்கு தேவைன்னா சொல்லு நான் இப்பவே சம்மதிக்கிறேன். முழு மனசோட சம்மதம் சொல்றேன் ஆனா”என்று பாதியில் அவள் பேச்சை நிறுத்த

    “சாரி”என்றான் தலை குனிந்து.

   ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவள்,”எனக்கும் எல்லா ஃபீலும் இருக்கு யுகா. ஆனா அதை எக்ஸ்பிரஸ் பண்ணும் போது நீங்களும் அதே உணர்வை வெளிக்காட்டணும். இல்லாம ஏதோ கடமைக்கு ஒரு வாழ்க்கை வீட்டில் நச்சரிப்பு தாங்காம ஒரு இன்டிமேஷி அதனால வந்த பிள்ளை இதெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்.”

    “இல்லை அஸ்வி நான் கொஞ்சம்… சரி விடு ஐம் சாரி”என்று அவளை சமாதானம் செய்ய

    “ஹ்ம்ம்”என்றவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

    யுகாதித்தன் தலையில் வித்துக் கொண்டே ‘என்ன வேலைடா பார்க்க போன பைத்தியக்காரா’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் சிறிது நேரம் வரை அவ்விடம் விட்டு அசையவில்லை.

    மீண்டும் அவள் வந்து “சாப்பிட வாங்க”என்று அழைக்க “இங்கே வா அஸ்வி”என கை நீட்டினான்.

    அவன் முகம் பார்த்து கனிந்தவள் அவனருகில் வந்தமர அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    அவனது கை கொடுத்த சிறு அழுத்தம் அவள் மனதின் பாரம் இறங்க வழி செய்ய கண்களை மூடிக் கொண்டு அந்த கணத்தை கிரகித்தாள். வார்த்தைகள் சொல்லிட முடியாத ஆறுதலையும் மன்னிப்பு என்ற யாசகத்தையும் அது ஒரு சேர வழங்கியது.

    “ப்ப்ச் விடுங்க பரவாயில்லை. ஏதோ ஒரு ட்ரிகர் அதனால் தானே இப்படி ஆகிடுச்சு”என்றவள் “செம பசி வாங்க போகலாம்”என்று கூப்பிட மறுக்காமல் எழுந்து கொண்டான்.

    டைனிங் டேபிளில் வந்து அமர ஹாட் பாக்ஸில் சாம்பார் சாதம் இருந்தது. அவன் முகம் போன போக்கில் “என்னாச்சு”என்று கேட்க

    “இதுக்கு நீ என்னை நாலு அடி போட்டு இருக்கலாம். சாம்பார் சாதம் பண்ணி இருக்க”என்றான் பரிதாபமாக.

    “ஏன் பிடிக்காதா… உங்களுக்கு பிடிக்கும் னு நினைச்சேனே”

    “பிடிக்காதுன்னு இல்லை. பட் நைட் ல ப்ப்ச் சரி பரவாயில்லை விடு ஒரு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”என்று எடுத்து வைக்க

    “நான் வேணும் னா வேற ஏதாவது பண்ணவா?”

    “அதெல்லாம் வேண்டாம் நீயும் உட்கார். முடிச்சா கொஞ்சம் தூங்கலாம்”என்றவனுக்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவைக் கொடுத்தாள்.

    “வாவ் இது சூப்பர் அஸ்வி. இதுக்கு காம்பினேஷன் ரசம் வச்சு சாதம் தந்தா கூட போதும். செமயா இருக்கும்.”என்றபடி சாம்பார் சாதத்துடன் உருளைக்கிழங்கை மசாலாவோடு பிசைந்து உண்டான்.

    உணவருந்தி முடிக்கும் வரை பேச்சுக்கள் இல்லை இடையில் சில ஹ்ம்ம் கள் மட்டும் அவன் அதரங்கள் உதிர்க்க, அவனுக்கு உணவு பிடித்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது தேஜாவிற்கு.

    “சப்போஸ் சாம்பார் சாதம் வைக்கிறதுனா இந்த காம்பினேஷன்லயே வை டூ குட்”என்று பாராட்டி விட்டு அவளைத் தோளோடு அணைத்து விடுவித்து செல்ல தேஜாவின் முகம் பளிச்சென்று மின்னியது.

    அன்றைய அத்துமீறலோடு முடிவுக்கு வந்திருந்தது யுகாதித்தனின் குழப்பமும் தெளிவற்ற மனநிலையின் தர்க்கங்களும்.

    இருவருக்கும் அந்த ஊடல் ஒரு புரிதலை தந்திருந்தது. நிதர்சனம் வேறு நம் மனநிலை என்பது வேறு என்று உணர்ந்து கொண்டிருந்தனர். நாம் நினைக்கும் அத்தனையையும் செயல்படுத்த முடியாது என்பதை நிதர்சனம் பொட்டில் அடித்தாற் போல புரிய வைத்தது இருவருக்கும். திருமணத்தின் அடுத்த நிலை பிள்ளை செல்வம் தான் என்று வருகையில் பெரியோர்களின் ஆதங்கமும் தவிப்பும் அவர்களின் எதிர்பார்ப்பும் இருவருக்கும் புரியத் துவங்கியது.

    சிறு சிறு தொழுகையில் துவங்கி இருவரும் ஏதேனும் பாராட்டுதலோ ஆறுதலோ என்றால் தோளோடு அணைத்துக் கொள்ள துவங்கி இருந்தனர். இருவரின் மனநிலை தெளிந்த நிலையில் தேஜாவிற்கு வேலையும் கிடைத்திருந்தது. அவன் கூறியது போலவே அவன் அலுவலகத்தின் அருகிலேயே வேலை கிடைத்து விட இருவரின் பயணமும் ஒன்றாகத் தான் இருந்தது.

    “இவ்வளவு ட்ராஃபிக் ல எப்படி தான் வர்றீங்களோ டயர்டா இருக்கு யுகா”என்றாள்.

    “இதுக்கேவா நாம கார்ல போறோம் இந்த மெட்ரோ ட்ரெயின் மாதிரி எல்லாம் போனா நீ அசந்து போயிடுவ மக்களோட ஓட்டத்துக்கு நிகரா நாமளும் ஓடினா தான் ஓரளவு டைமுக்கு போக முடியும் இல்லாட்டா அவ்வளவு தான்”என்றவன் “நீயும் டிரைவிங் கத்துக்கோ அஸ்வி. க்ளாஸ் சேர்த்து விடறேன் ஈசியா இருக்கும்ல”என்று ஆலோசனை கூறினான்.

    “அப்பா அப்பவே சேர்க்கிறேன்னு சொன்னாங்க நான் தான் ஃபீலிங்ஸ் ஆஃப் செந்தாளம்பட்டியில் இருந்தேனா அதனால போகலை”என்று தன்னைத் தானே கிண்டல் செய்து கூற

    “அது ஒரு மைன்ட் செட்ல எதுவும் செய்ய தோணாது பட் எனக்கு அப்படி இல்லை. லயா போன பிறகு நிறைய கத்துக்க தோணுச்சு எல்லாம் அவ சொல்லித் தந்தது தான்.”என்றான்.

    “இதெல்லாமா சொல்லி தந்தாங்க”என்று ஆர்வமாய் கேட்க

    “அவ நிறைய பேசுவா. இப்ப நீ சொன்னீயே ஃபீலிங்ஸ் அதை அவ கிட்ட சொல்லி இருக்கணும் நீ உடனே இதெல்லாம் கத்துக்காம விடறதுக்கு ஒரு சாக்கு போக்கு உங்க சோம்பேறி தனத்துக்கு ஃபீலிங்ஸை இழுக்காதீங்கனு சொல்லிடுவா. “

    “லவ்லி. லயா பத்தி சொல்லுங்களேன்”என்றதும் புன்னகைத்தான் யுகாதித்தன்.

    “ஒரே வார்த்தையில் சொல்லணும்னா நம்ம தாத்தாவோட புத்தக அலமாரி தான் அவ. அங்க எப்படி விதவிதமான புத்தகம் இருக்கோ அது மாதிரி லயா. எந்த டாபிக் பேசினாலும் அவ சொல்றதுக்கு அதில் நிறைய தகவல் இருக்கும். நமக்கு தெரியாத தெரிஞ்ச எல்லாம் அவ கிட்ட இருந்து கேட்கலாம். மினி விக்கிப்பீடியா”என்று சிலாகித்துக் கொண்டான்.

    “சரி நீ சொல்லு. ஏன் நீ எல்லாரும் கூப்பிடற மாதிரியே என்னை கூப்பிடுற. நான் உன்னை யாரும் கூப்பிடாத நேம்ல அஸ்வி தானே சொல்றேன் உனக்கு தோணலையா அஸ்வி”என்று அவளின் முகம் பார்த்து கேட்க

    “தோணாம இல்லை ஆனா அக்வேர்டா நீங்க ஃபீல் பண்ணிட்டா”என்று தயக்கம் காட்டினாள்.

    “நிஜமாவா தோணுச்சா என்ன ஆமா என்ன பேரு. “என்று ஆவலாய் வினவும் போதே அவளின் அலுவலகம் வந்துவிட்டது.

    “நீங்களே யோசிச்சு வைங்க சரியா சொல்லிட்டா நீங்க கேட்கிறது கண்டிப்பாக கிடைக்கும்”என்று இறங்கிக் கொண்டாள்.

    “ஸ்யூரா என்ன கேட்டாலும் கிடைக்குமா…எது வேண்டுமானாலும் கேட்பேன்”என்றவனிடம் “ப்ராமிஸா என்ன கேட்டாலும் கிடைக்கும் இட்ஸ் எ பிங்க்கி ப்ராமிஸ்”என்றதும் “அப்போ ஓகே ஈவ்னிங் ரெடியா இரு”என்று அங்கிருந்து அவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

    **********

    பிரதன்யா அருணோடு இணங்கிப் போனாலும் மனதின் ஓரத்தில் அவன் ஏன் அப்படி ஒரு பெண்ணை மறுத்து விட்டு தன்னை மணந்தான் என்ற கேள்வி துளிர்த்துக் கொண்டே இருந்தது.

    “ஹாய் ஐடி பொண்டாட்டி அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை. சிந்தனையில் யாரு நான் தானே”என்று கேலி பேசியபடி வந்தவனை முறைத்து விட்டு “அங்கிள் அமைதியா போங்க ஆமா. இவரை வேற நினைக்கிறாங்க”என்று அலுத்துக் கொண்டவள் “ஆமாம் ஏன் லேட் இன்னைக்கு”என்று அவனது லஞ்ச் பேகை வாங்கி வைத்தாள்.

    “இனிமே ஒரு மாசத்துக்கு இப்படி தான் புது ப்ராஜெக்ட். இந்த வொர்க் முடிக்கிற வரை அந்த மேனேஜர் விட மாட்டான்”என்று சலித்து கொள்ள

    “ஐடி ஜாப்னா சும்மாவா அங்கிள். உழைக்கணும் உழைச்சா தான்”என்றவளை தடுத்து “உழைச்சா தான் இன்னும் கொஞ்சம் வேலையை நம்ம தலையிலேயே கட்டுவாங்க அப்படி தானே”என்றான்.

    “எக்ஸாக்ட்லி அங்கிள் அங்க ஹார்ட் வொர்க் விட ஸ்மார்ட் வொர்க் பெட்டர் சாய்ஸ்”

    “அப்போ ஸ்மார்ட்டா ஹாட்டா க்யூட்டா”என்று அவளை நெருங்கியவன் விழிகளில் முத்தமிட

    “ஹை இது கண்கட்டி வித்தை நான் ஏமாற மாட்டேன்.”என்று பழிப்பு காட்டி விட்டு ஓடினாள்.

    “ஹேய் தனு ஒன் வீக் ஆகிடுச்சு இதெல்லாம் அநியாயம்”என்றவனை சத்தமின்றி முறைத்தவள் “கத்தின குத்திடுவேன். ஆளைப் பாரு, பேச்சைப் பாரு”என்றாள்.

    “இப்படி பேசலைனா நீ சொல்ற மாதிரி உண்மையிலேயே அங்க்ள் ஆகிடுவேன்டி ப்ரதர்”என்று அவளை தன் அணைப்பில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்.

    “நல்ல வேளை மகி இல்லை உங்க பேச்சை எல்லாம் அவன் ஊருக்கு வந்ததும் நிறுத்திடணும்.”

    “அப்போ அதுவரைக்கும் பேசலாமா பர்மிஷன் கிராண்டடா”என்று சிரிக்க

    “அப்ப உடனே அவனை அழைச்சுட்டு வரச் சொல்றேன்”என்றாள் முறைப்புடன்.

    “உன்னை பேச விடறதே தப்பு”என்றவனின் பிடியில் இருந்து திமிற அது அவளால் முடிந்தால் தானே.

    மகிழன் பள்ளி விடுமுறை விடவும் கந்தசாமியோடு செந்தாளம்பட்டிக்குத் தான் சென்றிருந்தான்.

    கந்தசாமிக்கு அருணை அவன் திருமணவாழ்க்கையை வாழ வேண்டும் என்று தோன்ற முடிந்த அளவு மகிழனை அவர்களிடம் இருந்து விலக்கி தன்னோடு வைத்துக் கொள்ள முயன்றார். அவர்கள் அதை உணராமல் செய்வதில் தான் அவருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    மகிழனுக்கு ஊர் பக்கம் இருப்பதென்றால் கொள்ளை இஷ்டம். நன்றாக விளையாடலாம் பிள்ளைகள் சுற்றிலும் இருப்பர். மண்ணில் விளையாடினாலும் திட்டு விழாது தண்ணீரில் குதித்தாலும் திட்டு விழாது அதனாலேயே ஊருக்கு வருவது என்றால் குஷியாகி விடுவான் மகிழன்.

    அது மட்டும் இல்லாமல் கந்தசாமிக்கு அவரது நிலம் ஒன்றை விற்க வேண்டி இருந்தது. மகன் இத்தனை இக்கட்டில் இருக்கும் போது அவனது சுமையை சற்று குறைக்கலாம் என்று எண்ணி தான் ஊருக்கு வந்திருந்தார். இத்தனை நாட்களும் அது பிரச்சனையில் இருக்க தற்போது வெங்கடாசலத்தின் உதவியால் அதுவும் ஒரு முடிவுக்கு வந்தது.

    “என் பங்காளி தான் கந்தா அவரு. அவர் நெலமும் ஓ எடத்தை ஒட்டி தான் இருக்கு. அவருக்கே குடு நான் கணிசமா பணம் வாங்கி தரேன்”என்று வெங்கடாசலம் கூறியிருக்க

    “நீங்க சொன்னா செரித்தேன் மாமோய். எனக்கு என் மவன் கடன் தீந்தா போதும்”என்றார் பேச்சு வாக்கில்.

    “இன்னமும் எம்புட்டு இருக்கு மாமா”என்று சுதாகரன் கேட்க

    “ஓ மச்சான் புகழு ஆஸ்பத்திரியில் கெடக்கையில வாங்குனது தான்யா நாப்பது லட்சம் வாங்கி ல்ல அவனை ட்ரீட்மெண்டு பாத்தோம் ஆனா எங்க காப்பாத்த முடியலையே”என்று பெருமூச்செறிந்தார்.

    “இன்னும் நாப்பது அப்படியேவா நிக்குது”என்று கேட்க

    “இல்லய்யா அருணு இருவத்தி அஞ்சுக்கு பக்கமா அடைச்சுட்டான். இன்னம் பதினைந்து இருக்குது. இந்த நெலம் வித்தா கைக்கு ஒரு ஏழெட்டு வராது அதுக்கு தான் வந்ததே”என்றார்.

    “மீதிய வேணும்னா நான் தரவா மாமா. சும்மா வாங்கிக்கிட வேணாம் எப்ப முடியுமோ அப்பக்கி குடுங்க. “என்று சுதாகரன் சொல்ல கந்தசாமி அவனை வியப்பாக பார்த்தார்.

    ….. தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super ennaaava irukkum chella peruuu