
சென்னை வந்து விட்டிருந்தான் யுகாதித்தன்.
“அருண் ஏர்போர்ட் வந்துட்டேன் பிக்கப் பண்ணிக்கோடா”என்று அருணிற்கு அழைப்பு விடுத்து விட்டு காத்திருக்க சில மணித் துளிகளில் அருணும் வந்துவிட்டான்.
“சாரி டா காலையிலேயே உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”என்றவனின் தோளில் ஒரு அடி வைத்து விட்டு “வாடா. ஆளைப்பாரு”என்று திட்டியவன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பத்மநாபன் வீட்டிற்கு வர வாசலில் கோலம் போட்டு கொண்டாள் தேஜா.
“பார்றா கோலம் எல்லாம் போடுவாங்க போல மேடம்”என்று கிண்டல் செய்ய தேஜா நிமிர்ந்து பார்த்து விட்டு உர்ரென முறைத்தாள்.
“ஓஓஓ ஓஹோ லடாயா என்ஜாய் டா யுகா”என்றவாறு அருண் லக்கேஜை எடுத்து செல்ல யுகா “இன்னும் உன் கோபம் தீரலையா”என்றான் மெதுவாக.
“எனக்கு எந்த கோபமும் இல்லை”என்றவள் அடுத்து பேசும் முன்பாக அவளைத் தள்ளிக் கொண்டு உள்நுழைந்து விட்டான்.
“வாங்க மாப்பிள்ளை”என்று வரவேற்ற சுந்தரி கணவனை எழுப்பி விடச் சென்றார்.
அனைவரும் நடுக் கூடத்தில் ஆஜராகி இருக்க சிறிது நேரத்தில் சாரதா கிருஷ்ணன் உடன் அங்கே வந்துவிட்டார். சொந்தங்கள் அனைவரும் கூடியிருக்க கலகலப்பிற்கு பஞ்சமில்லை அங்கே.
இரண்டு நாட்கள் இருக்கிறேன் என்ற தேஜா யுகா வரவும் அன்று மாலையே கிளம்புகிறேன் என்று நின்றாள்.
“மாப்ள, தேஜு பிரதி ரெண்டு பேருக்கும் தாலி பிரிச்சு கோர்க்கணும் அதனால ரெண்டு வாரம் கழிச்சு நீங்க வரணும்”என்றார் சுந்தரி.
“ஸ்யூரா வந்திடறோம் அத்தை”என்று வாக்குக் கொடுத்தவன் தேஜாவோடு கிளம்பி நின்றான்.
இருவருக்குமான பனிப்போர் தொடர்ந்தாலும் அதை வெளியே காண்பித்து கொள்ளவில்லை இருவரும்.
அருணிற்கு இருவரின் சண்டை புரிந்தாலும் அதை வெளியே சொல்லவில்லை அவன்.
“எதுவா இருந்தாலும் சீக்கிரம் ஷார்ட் அவுட் பண்ணுடா”என்று சூசகமாக சொல்லி விட்டு அவர்களை சாரதா வீட்டில் விட்டு விட்டான்
அங்கு இரண்டு நாட்கள் இருந்தவர்கள் மீண்டும் பெங்களூர் பயணித்தனர். ஆனால் மௌனம் இழையோட மட்டும் தான்.
தேஜா ஏதேனும் பேசுவாள் என்று அவன் காத்திருக்க அவளோ அமைதியாக தான் இருந்தாள்.
“அஸ்வி ஏதாவது பேசு. ஏன் இப்படி பண்ற அஸ்வி”என்றான் அலுப்பாக.
“உங்க ஃபாஸ்ட் பத்தி எதுவும் கேட்க மாட்டேன் யுகா”என்றாள்.
“ப்ப்ச் கேட்க வேணாம் னு நான் சொல்லவே இல்லையே அஸ்வி. கேட்க தானே சொல்றேன்”
“வேண்டாம் நான் என் லிமிட் ல இருக்கேன் அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது”என்றாள் மீண்டும்.
“அப்படியே அடிச்சேன்னா தெரியும்”என்று பல்லைக் கடித்தவனிடம்”நீங்களா எதையும் சொல்லாம எல்லாமே நானே புரிஞ்சுக்கணும்னா எப்படி யுகா. உங்க கிட்ட இருந்து கேட்கிறது வேற அதையே உங்க லைஃப் பத்தி வேற ஒருத்தங்க சடனா சொல்றது வேற இல்லையா அதை நான் எப்படி எடுத்துக்க. அந்த பொம்பளை சொல்றா ஏதோ என்னை எங்கிருந்தோ தள்ளிட்டு வந்த மாதிரி. ரொம்ப கஷ்டமா இருக்கு யுகா” என்றாள் வருத்தத்துடன்.
“சொல்லக் கூடாது னு நான் நினைக்கவில்லை அஸ்வி.சொல்ல சான்ஸ் நான் ஏற்படுத்திக்கலை”என்றவன்
“எஸ் நானும் லயாவும் லிவ் இன் ல தான் இருந்தோம்”என்று சொல்லி விட தேஜஸ்வினி அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.
*******”**
“அக்கா வந்ததும் கிளம்பிட்டாங்க ல்ல இன்னும் ரெண்டு நாள் இருப்பாங்கனு நினைச்சேன்”என்று பிரதன்யா சொல்லிக் கொண்டு வர அருணின் கவனம் வேறெங்கோ இருந்தது.
சிறிது நேரம் பேசிக் கொண்டே வந்தவள் அவனின் கவனம் இங்கே இல்லை என்றதும் சொடுக்கிட்டு அழைக்க”சாரி தனு வேற யோசனை”என்றான் சங்கடமாக.
“அப்படி என்ன யோசனை”என்றவளுக்கு பதில் கூறாமல் கைபேசியை காட்டினான்.
அதில் மகிழனின் அம்மா அவனை மீண்டும் தன்னிடம் வரவழைக்க வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
அதை வாங்கிப் படித்தவள் நடுக்கத்துடன் “என்னப்பா இது”என்று கேட்க
“மகியை திடீரென கேட்கிறாங்க தனு.”என்றவன் சங்கடமாக “உன் கிட்ட ஒரு விஷயம் மறைச்சுட்டேன்”என்றான்.
“மறைச்சுட்டீங்களா”
“ஹ்ம்ம் ஆமாம்”என்றவன் “உன் கூட மேரேஜ் பேசறதுக்கு முன்னாடி இவங்க எனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கறதா சொல்லி பிக்ஷர் அனுப்பினாங்க”என்று அந்த புகைப்படத்தையும் காட்டினான்.
அந்த பெண் அத்தனை அழகாய் வடிவாய் இருந்தாள். பிரதன்யாவிற்கு மனதில் பாரம் குடியேறியது.
‘இவ்வளவு அழகானப் பெண்ணை மறுத்து விட்டு ஏன் தன்னை தேர்வு செய்தான் ‘என்ற குழப்பம் மேலிட்டது.
“இந்த பொண்ணு அவங்க ரிலேட்டிவ் போல என் கிட்ட இந்த பொண்ணை மேரேஜ் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணிட்டே இருந்தாங்க எனக்கு ஏற்கனவே அவங்க மேல் கோபம். இப்போ திடீர்னு வந்து என் லைஃப் பத்தி அவங்க முடிவு எடுக்கவும் இன்னும் கோபம் அதிகம் ஆகிடுச்சு. நான் என்னால் முடியாதுனு மறுத்து ட்டேன் அந்த கோபத்தில் இப்ப மகியோட கஷ்டடி கேட்கிறாங்க என்ன செய்றதுனு தெரியலை”என்றான் வருத்தமாக.
“பேசாமல் அவங்க காட்டின பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கலாமே”என்றவளுக்கு அவன் பதிலை தெரிந்து கொள்ளும் ஆவல் பிறந்தது.
அருண் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன் அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். அவனின் தேடல் துவங்க மனதில் உள்ள கலக்கம் மீறி அவனுக்கு இணங்கினாள் பிரதன்யா.
*********
தேஜா அதன் பிறகு லயா பற்றிய எதையுமே யுகாவிடம் கேட்க மறுத்தாள். இயல்பு போல அவள் தன் வேலையை கவனித்துக் கொள்ள யுகாவின் மனநிதையும் அப்போதைக்கு லயாவைப் பற்றி கூறுவதில் லயிக்கவில்லை.
வாழ்க்கை போகும் வரை போகட்டும் என்று அமைதியாகி விட்டான். காலங்கள் கடந்திருக்க தாலி கோர்க்கும் வைபவத்திற்கு மீண்டும் சென்னை வந்தவர்கள் ஒரு வாரம் போல தங்கினர்.
இரு மகள்களுக்கும் ஒன்று போல சீர் செய்திருந்தார் சுந்தரி. செந்தாளம்பட்டியில் இருந்து சுதாகரன் நந்தினி இருவரும் வந்திருந்தனர்.
வைபவம் சிறப்பாக நடந்தேற சுந்தரிக்கு மகள்கள் ஏதேனும் நற்செய்தி கூறமாட்டார்களா என்று ஏக்கம் வந்தது.
அதனை சூசகமாக கேட்கவும் செய்தார் மகள்களிடம்.
“ம்மா அதுக்குள்ளயா”என்று சிணுங்கினாள் இளையமகள். பெரியவள் வாய் திறக்காததில் அவருக்கு மீண்டும் ஓர் பயம். அதை உடைக்கும் விதமாக யுகாவின் நடவடிக்கைகள். அவரால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. யாரிடம் இதைப் பற்றி பேசுவது என்று கூட அவருக்கு புரியவில்லை.
“டேய் மகனே உங்க மாமியார் வேற பேரன் பேத்தியை பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்க போலடா”என்று சாரதா கூற
“அப்போது உங்களுக்கு இல்லை அந்த கியூரியாசிட்டி என்னம்மா”என்று சிரித்தான் யுகா.
“அப்படி பொதுவா சொல்லிட முடியாது பட் ஒரு யூகமா சொல்லலாம்”என்றவர் “நீ உன் கவலையில் இருக்க நினைக்கிற ஆனா தேஜுவையும் நினைச்சு பாரு. அவளுக்கும் ஒரு மனசு இருக்கு அது என்னன்னு யோசிச்சு பாரு”என்றார் கவலையாக.
“ம்மா”என்றவன் “நானும் அப்படியே இருக்க விரும்பலை மா. அஸ்வி பத்தி எனக்கு தெரியும் நான் அவளை நல்லா வச்சுப்பேன்”என்றான் சூசகமாக.
“சொன்னது புரிஞ்சா சரி யுகி. பார்த்துக்கோ அம்மாவா உனக்கு நான் அட்வைஸ் தான் செய்ய முடியும் உன் லைஃபை நான் டிசைன் பண்ண முடியாது இல்லையா”என்றவர் “நாங்களும் டிபிகல் இந்தியன் அம்மா அப்பா தான் டா மகனே. இந்த பேரன் பேத்தியை கண்ணால பாத்துட்டு அதுகளை தூக்கி சீராட்டி விட்டு இந்த உசுரை விடுற சாதாரண எளிய அம்மா அப்பா”என்றார் கிண்டலாக. அவர் கிண்டலாக கூறினாலும் தன் மகன் வாழ்வில் ஒரு நல்லது நடந்து விடாதா என்று தான் ஏங்கித் தவித்தார்.
யுகாவிற்கும் அவர்களுக்கு கஷ்டம் தரும் வகையில் நடந்து கொள்ள ஆசையில்லை தான் ஆனால் தன்னை சரி செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதே கட்டியவள் நேரம் கொடுக்க தயார் எனினும் சொந்த பந்தங்கள் தயாராக இல்லை. திருமணம் முடித்தால் அடுத்து அடுத்து அவர்கள் வாழ்வில் என்ன என்று கேட்க தான் உந்தித் தள்ளப்பட்டார்கள். நல்ல வேளையாக இருவரும் செந்தாளம்பட்டியில் இல்லை. ஆளாளுக்கு நச்சரிக்க துவங்கி இருப்பர்.
தேஜா அதன் பிறகு சகஜம் ஆகிப் போக யுகாவுமே அவளது இருப்பிற்கு பழகியிருந்தான்.
எது வேண்டுமானாலும் எதையும் புதிதாக செய்ய வேண்டும் என்றாலும் அவளோடு கலந்து ஆலோசித்து அவளது முடிவுகளுக்கு முன்னுரிமை தருவதை வழக்கம் ஆக்கிக் கொண்டான்.
“இன்னைக்கு மட்டன் சுக்கா செம டேஸ்ட் அஸ்வி. டீம் ல எல்லாரும் டேஸ்ட் பண்ணாங்க ஒரே பாராட்டு தான். ஒரு வீக் எண்ட் வீட்டுக்கு வர்றாங்களாம் உன் சமையல் டேஸ்ட் பண்ண
“என்றபடி லஞ்ச் பேகைக் கொடுத்தான்.
“வரச் சொல்லுங்க கண்டிப்பாக செஞ்சு தரலாம்”என்றவள் டிஃபன் பாக்ஸை கழுவ போட்டாள்.
“அஸ்வி டுடே ஒரு கம்பெனி இன்டர்வியூ ஆஃபர் வந்தது நீ ட்ரை பண்ணேன். “என்றவன் “அப்படியே ஒரு புதினா டீ வழக்கம் போல தைல மசாஜ்”என்றான் கெஞ்சலாக.
“இதோ தர்றேன்”என்றவள் கால் மணி நேரத்தில் தேநீரோடு அறைக்குள் நுழைந்தாள்.
தேநீரைக் குடித்தவன் அவள் தைலத்தை தடவவுமே கண்கள் சொக்கி அவளது இரண்டு கைகளையும் பிடித்துக் கொள்ள அவனது தொடுகையில் திடுக்கிட்டு பார்த்தாள்.
“என்னாச்சு”என்று அவள் பதற
“ஒண்ணும் இல்லை”என்றவன் அவளை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தினான்.
“எதுவும் சொல்லிடாதே ப்ளீஸ்”என்றவன் அவளிடம் எல்லை மீற திடுமென அவன் உடல் மொழி மாறியதில் சற்று கலங்கித் தான் போனாள்.
திருமணம் ஆகி இத்தனை மாதம் இல்லாமல் திடீரென ஏன் இப்படி செய்கிறான் என்ற குழப்பம் அவளுக்கு.
அவனது பரிமாணத்தில் ஸ்தம்பித்து நின்றவள் “யுகி ஏன் என்னாச்சு நான் நான்”என்று அவள் தடுமாற
“அஸ்வி நோ சொல்லாதே எதுக்கும் சொல்லிடாத எதையும் சொல்லிடாத”என்று முன்னேறத் துவங்க தேஜாவின் உடல் இறுக்கத்தை தத்தெடுத்தது. அவன் எதையும் கேளாதே என்றாலும் இவளால் குழப்பம் நிறைந்த மனதுடன் அவனோடு ஒன்ற முடியவில்லை. அவனை விலக்கவும் முடியவில்லை மனதில் போராட்டம் நடத்தி ஒரு வழியாக திமிறி சட்டென அவனை தள்ளி விட்டிருந்தாள். யுகா அதிர்ச்சியாக அவளைப் பார்க்க அவளோ கண்களில் நீர் நிறைய நின்றாள்
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
1
+1
1

