Loading

    தேஜஸ்வினி குழப்பத்தினூடேயே சென்னை வந்து சேர்ந்திருந்தாள். அகிலன் தான் வந்து அவளை பிக்கப் செய்து கொண்டான்.

    “ஹ்ம்ம் அக்கா வந்துட்டாங்க மாமா. ஹ்ம்ம் நான் தான் கூப்பிட வந்தேன். ஹ்ம்ம் ஆமாம்.ஓகே மாமா சரிங்க மாமா. இல்லை இல்லை நான் பேசிக்கிறேன்”என்றெல்லாம் பேசிக் கொண்டே அகிலன் வர

    “ப்ப்ச் அகில் ஃபோனை கட் பண்ணு”என்றாள் காட்டமாக.

    “அக்கா, மாமா தான் பேசுறாங்க. நீங்க எதுவுமே சாப்பிட எடுத்துக்கலையாமே அதான் லஞ்ச் வாங்கி கொடுத்து அழைச்சுட்டு போக சொன்னாங்க ஹவ் ஸ்வீட்ல எவ்வளவு வொர்க் இருக்கும், அதுக்கு மத்தியில் உங்களை கேர் பண்ண சொல்லி கால் பண்றாங்க.ஸ்வீட் மாமா”என்று யுகாதித்தனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தான் அகிலன்.

    “ஹ்ம்ம் ஹ்ம்ம் ரொம்ப தான் அக்கறை”என்று முனகினாள் தேஜா.

    “என்ன க்கா கேட்கலை. பசிக்குதா இதோ லஞ்ச் போகலாம்”என்று அகிலன் ஒரு உணவகத்தில் நிறுத்தினான் மகிழுந்தை.

    இருவரும் கை கழுவி வந்தவர்கள் தங்களுக்கான உணவை சொல்லி விட்டு அமர மீண்டும் யுகாதித்தன் தேஜஸ்வினிக்கு அழைத்து விட்டான். அழைப்பை நிறுத்தி விட்டு கைபேசியை சைலண்ட் மோடில் போட்டு விட்டாள்.

    ‘அகம் பிடிச்ச கழுதை’என்று கைபேசியை பார்த்து திட்டி விட்டு அகிலனுக்கு அழைத்தான்.

    “அகில் ஃபோனை அக்கா கிட்ட குடு. அவ ஃபோன் ரீச் ஆகலை”என்றான் எடுத்ததும்.

    “இதோ தர்றேன் மாமா”என்றபடி கைபேசியை அவளிடம் திணிக்க வேறு வழியின்றி வாங்கி காதில் வைத்தாள்.

    “ஹ்ம்ம்”

    “சீரியஸ்லி எனக்கு கோபம் வந்திடும் அஸ்வி.ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுவேன் எடுக்கற நீ”என்ற அதட்டலோடு இணைப்பைத் துண்டித்தான்.

    சில நிமிடங்கள் வரை காதில் கைபேசியை வைத்திருந்தவள் பின் அகிலனிடம் கொடுத்து விட்டு உணவை உண்டாள். காலையில் இருந்து எதுவும் உண்ணாததில் பசி வேறு சோர்வுற செய்ய எதையும் யோசித்திடாமல் உண்டு முடித்தாள்.

   “அக்கா பே பண்ணிட்டு வர்றேன் நீங்க வெய்ட் பண்ணுங்க”என்ற அகிலன் தன் பெற்றோருக்கும் உணவை வாங்கிக் கொண்டான்.

    ஏற்கனவே சுந்தரியிடம் எதுவும் சமைக்க வேண்டாம் என்று சொல்லி இருக்க அவரும் சரியென கூறி விட்டார்.

    இருவரும் பேசிக்கொண்டே வீட்டை அடைந்திருக்க ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் யுகா அவளுக்கு அழைத்து விட்டான்.

    கைபேசியையே வெறித்து பார்த்தவள் இரண்டு மூன்று முறை அடித்து அடித்து நிற்கவும் இனியும் ஏற்காமல் இருந்தால் அகிலனுக்கு அழைத்தாலும் அழைத்து விடுவான் என்று எண்ணி அவனது அழைப்பை ஏற்றாள்.

    “நான் காலையில் ரீச் ஆகிடுவேன். டூ டேஸ் அங்கே இருக்கோம் அப்புறம் அம்மா வீட்டுக்கு போயிட்டு மறுபடியும் பெங்களூர் ரிட்டர்ன் ஆகறோம் டாட் புரியுதா ஏதாவது பேசின அவ்வளவு தான்”என்று படபடத்தவன் இணைப்பைத் துண்டித்து விட்டான்.

    “எல்லாம் இவர் இஷ்டமா நான் போக முடியாது”என்று வெளியே கேட்காதபடி சொல்லியவள் முழங்காலிட்டு தலையை கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள். தலையை வலிக்கும் போல இருக்க படுத்து உறங்கி விட்டாள்.

  இங்கே சாரதா மகனை காய்ச்சி எடுத்தார் மருமகளை தனியே அனுப்பி வைத்ததற்காக.

    “ம்மா நான் வேணுன்னே அனுப்பின மாதிரி பேசறீங்க அவ தான் அம்மாவை பார்க்கணும் னு கேட்டு எல்கேஜி பாப்பா மாதிரி அழுதா. எனக்கு வொர்க் இருக்கு மா சும்மா என்னையே திட்டாதீங்க தனியா வந்ததுக்காக அவளுக்கு கூப்பிட்டு திட்டுங்க நான் மட்டும் உங்களுக்கு தக்காளி தொக்கா”என்று பொரிந்தவனை நினைத்து கைபேசியை அணைத்த பின்னரும் நினைத்து நினைத்து சிரித்தார் சாரதா.

    “ஆனாலும் நீ அவனை ஆட்டிப் படைக்கிற சாரதா. பாவம் என் பையன்”என்ற கணவனை முறைத்து விட்டு “நானே என் பையன் பழைய ஃபார்முக்கு வந்துட்டு இருக்கானேன்னு சந்தோஷப்பட்டா நீங்க பாவமா படறீங்க”என்றார்.

    “ஹ்ம்ம் இருந்தாலும் அவனை அத்தனை விரட்ட வேண்டாம் நீ”என்று சொல்லியவர் “சரி சொல்லு மருமகளை எப்போ போய் பார்த்துவிட்டு வரலாம்”என்று கேட்க

    “அவனே டூ டேஸ் ல வந்து சேர்ந்து வர்றானாம். அதுவரைக்கும் நாமளும் போக கூடாதாம் அவளையும் கூப்பிட கூடாதாம். கல்நெஞ்சக்காரன்”

    “ஹாஹாஹா இல்லை மா மறுவீடு வந்தபிறகு முதல் தடவையாக வரப் போறான் சேர்ந்து வரலாம் னு நினைச்சு இருப்பான்.”என்று மனைவியை சமாதானம் செய்த கிருஷ்ணன் தேஜாவிற்கு அழைத்து பேசும்படி கூறினார்.

    “சுந்தரி அண்ணிக்கு கூப்பிட்டேன் தேஜா தூங்குவா போல அப்புறம் பேச சொல்றேன் னு சொன்னாங்க”என்றவர் “ப்ப்ச் இந்த பொண்ணு தனியா வந்திருக்க வேண்டாம். ஏதோ உறுத்தலாவே இருக்குங்க”என்றார் கவலையாக.

    “விடும்மா என்னன்னு அவனே சொல்வான் இல்லை சொல்லாட்டியும் பரவாயில்லை அவங்களுக்குள்ள சரி பண்ணிக்கட்டும். நாம இன்டர்ஃபியர் ஆகணும்னா அவனே சொல்வான்”என்றார் கிருஷ்ணன்.

    **********

    பிரதன்யாவிற்கு அப்படி ஒரு உறக்கம். அவளின் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்ட அருண் காலை சமையலை துவங்கி இருக்க அகிலன் அழைத்து தேஜஸ்வி வீட்டிற்கு வந்திருப்பதை கூறி அவர்களையும் அழைத்தான்.

    “ஈவ்னிங் போல வர்றோம் டா அகில் ஏன் யுகா வரலையா”என்று கேட்க அகிலன் பதில் சொல்லிக் கொண்டிருக்க பத்மநாபன் வாங்கி அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார்.

    “ஈவ்னிங் வர்றோம் மாமா.”என்றவன் அவரிடம் நகையை வைப்பதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

    “என்னப்பா பாப்பா தூங்குதா”என்றபடி வந்தமர்ந்தார் கந்தசாமி.

    “ஹ்ம்ம் ஆமாம் ப்பா மகியும் எழுந்துக்கலையா”என்று கேட்டவாறே அவருக்கும் தனக்கும் தேநீரை கலந்தவன் மாலை பத்மநாபன் வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    “தேஜு வந்திருக்கா அப்ப நீயும் பிரதியை அங்கே ரெண்டு நாள் விட்டுட்டு வாயேன்”என்றார் அவர்.

    ‘விட்டுட்டு வரணுமா இப்ப தானே க்ளோஸ் ஆனோம் அதுக்குள்ள எப்படி அவளை’என்று யோசித்தபடி அவன் அமர்ந்திருக்க கந்தசாமி சத்தமாய் அழைத்தார்.

    “ஹான் என்னப்பா”என்றவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே “விட்டுட்டு வாப்பா. ரெண்டு மகளும் சேர்ந்து அவங்க கூட இருந்தா சந்தோஷப்படுவாங்க”என்றதும் “சரிப்பா”என்றான் புன்னகையுடன்.

    பிரதன்யா விழிப்பதற்குள் காலை உணவு தயாராகி விட படபடவென்று எழுந்து குளித்து வந்தவளை சிரிப்புடன் நோக்கியவன் “அவ்வளவு அவசரம் வேண்டாம் மேடம். டிஃபன் ரெடி வாங்க”

    “எப்டி? நீங்க பண்ணீங்களா. ப்ப்ச் என்னை எழுப்ப வேண்டியது தானே தனியா ஏன் பண்ணீங்க”படபடத்து பேசியவளை நிலைநிறுத்த தன் வசம் இழுத்தவன் “ஏன் பண்ணக் கூடாதா… இவ்வளவு டென்ஷன் எதுக்கு ஆகற நீ.ஓகே ரெடி ஆகு உன் அக்கா வீட்டுக்கு வந்திருக்காளாம். மாமா நீயும் வந்தா நல்லா இருக்கும் னு நினைக்கிறாங்க”என்றதும் அவனை கூர்ந்து பார்த்தவள் “உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையே”என்றாள் தவிப்புடன்.

    “ஹ்ம்ம்”என்று இழுத்தவன் “இல்லை னு சொல்ல மாட்டேன். பட் ஆபிஸ் இருக்கறதா நினைச்சுக்கிறேன். போகலாம்”என்றதில் முகம் மலர்ந்தவள் “தேங்க்ஸ் அங்கிள்”என்றாள் குறும்பாக.

    “அடிங்க யாரைப் பார்த்து அங்க்ள்னு சொன்ன”என்று மிரட்டியவனை பார்த்து கண்சிமிட்டி விட்டு “என்னை விட ரொம்ப பெரிய பையன் தானே நீங்க அப்போ அங்க்ள் தான்”என்றாள் சிரிப்புடன்.

    “இதெல்லாம் ஓவர்டி பிரதர். நேத்து பெர்ஃபார்ம்”என்றதும் அவன் வாயைப் பொத்தி “அடி வாங்குவீங்க. மோசமான பையன்”என்று சொல்ல

    “யார் நானா.நீ தான் டவுட்டா அங்க்ள்னு சொன்ன அதான் எக்ஸ்ப்ளைன் பண்ணலாமேனு”என்று கேலி செய்ய

    “அவ்வா பேச்சை பாரு. பேருக்கு தான் நைன்ட்டீஸ் கிட் ஆனா அவ்வளவும்”

    “எங்க சொல்லு சொல்லு”என்று வம்பு செய்தவனை நெஞ்சிலேயே குத்தினாள் அவனுக்கு வலிக்காமல்.

    “பிரதர் இப்படியே நின்னா டைம் ஆகிடும் கிளம்பு கிளம்பு ஓடு”என்று விரட்டியவன் மகிழனை கிளப்பிவிட சென்றான்.

    காலை உணவு அவளுக்கு பிடித்ததாக இருக்க மென் சிரிப்பு அவளிடம்.

    “ப்ரதுமா இப்படி”என்று நூடுல்ஸை வாயில் வைத்தபடி உள்ளிழுத்தான் மகிழன்.

    அதுவோ பாதியில் நிற்க “அப்படி இல்லை மகி இப்படி”என்று உள்ளிழுத்துக் காட்டி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    “ரெண்டு பேருக்கும் உதை கிடைக்கும். இந்த மாதிரி பண்ணா நெக்ஸ்ட் டைம் நூடுல்ஸ் க்கு நோ தான் பார்த்துக்கோங்க”என்று அருண் மிரட்டவும் தான் இருவரும் ஒழுங்காய் உண்டனர்.

    “ப்பா உங்களை அங்கே விட்டுட்டு நான் ஆஃபிஸ் கிளம்பறேன் போயிட்டு ரெண்டு மணி நேரத்தில் வந்திடுவேன் ஓகே”என்று கூற

    “சரிப்பா”என்றார் கந்தசாமி.

    “அப்போ எங்களோட மூவிக்கு நீங்க வரலையா”என்று பிரதன்யா கேட்க

    “நாளைக்கு யுகாவும் வந்திடட்டும் தனு சேர்ந்து போகலாம் இன்னைக்கு உன் அக்காவோட இரு. அகில் கிட்ட நான் பேசிக்கிறேன்”என்றவன் கேப் புக் செய்தான்.

    நால்வரும் பத்மநாபன் வீட்டிற்கு கிளம்பி செல்ல வீடே கலகலப்பாக இருந்தது. தேஜாவிற்கு அனைவரும் வரவும் யுகாதித்தன் இல்லாதது ஒரு மாதிரியாக இருக்க முகம் வாடி நின்றாள்.

    அவனோடு சண்டை போட்டு விட்டு தான் வந்தாள் ஆனாலும் அனைவரும் இருக்கையில் அவன் இல்லாதது மனதை பிசைந்தது.

    ‘எதையுமே சொல்லாமல் தானே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்’என்று அவன் எதிர்பார்ப்பது போலத் தோன்றியது அவளுக்கு.

    “எதையும் சொல்லாமல் இப்படி செஞ்சா நான் என்ன னு நினைக்க. லவ் ஃபெயிலியர் னு மட்டும் சொன்னால் போதுமா அதுக்கான ரீசன் எனக்கு தெரிய வேணாமா அட்லீஸ்ட் இவர் மைன்ட் செட்டையாவது எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணலாம் தானே எதையும் பேசாமல் நான் புரிஞ்சுக்கணும்னு நினைச்சா எப்படி எனக்கு என்ன மந்திர மாயாஜாலம் எல்லாமா தெரியும் மந்திரம் போட்டு இவர் மனசை படிக்க நான் என்ன மந்திரவாதியா…

    திடீர்னு ஒரு பொண்ணு இப்படி பேசினா எனக்கு ஷாக்கா இருக்காதா இதை இவர் ஆல்ரெடி சொல்லி இருந்தா நான் ஏன் டென்ஷன் ஆகப் போறேன். எல்லா தப்பையும் இவர் செஞ்சுட்டு என் மேல கோவப்படுறார்.‌ அப்படி அந்த பொண்ணை மறக்க முடியாதவர் எதுக்கு என்னை கல்யாணம் செய்யணும். ம்ஹூம் நான் தான் தப்பு அவரை ஃபோர்ஸ் பண்ணது என் தப்பு. “என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அவன் சொல்லாததற்கு திட்டுவதையும் கைவிடவில்லை.

    ‘கோபத்தை எத்தனை நாட்கள் இழுத்து பிடிக்க முடியும். இல்லை அவனிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டில் அதிக நாட்கள் தான் இருக்க முடியுமா இதற்கா திருமணம் செய்தேன்.‌அவர்கள் என்னைப் பற்றி வருத்தம் கொள்ள கூடாது என்று தானே திருமணம் செய்தேன்’ என்று எண்ணியவளுக்கு சட்டென்று ஒரு திகைப்பு.

    ‘நான் என் பெற்றோருக்காக அவனை வற்புறுத்தி திருமணம் செய்ய சம்மதம் வாங்கி விட்டு இப்படி பழைய காதலியை நினைக்காதே என்று கட்டுப்படுத்துவது சரியா ?’என்ற எண்ணம் வர அவனிடம் இதைப் பற்றி பேசவேக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டாள்.

    அங்கு யுகாதித்தனோ ஒரு நாளை நெட்டித் தள்ளியவன் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பி இருந்தான்.

    ….. தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super namma ninaikkarathu ellame nadantharrathu illaye plan panni pannalum sodhappum niraya visayam