
தேஜாவை பெங்களூர் அழைத்து சென்று விட்டான் யுகாதித்தன்.
சுந்தரி பத்மநாபன் சாரதா கிருஷ்ணன் நால்வரும் அவர்களோடு சென்றிருந்தனர்.
இரட்டை படுக்கையறை கொண்ட ஃப்ளாட் அது. சமையலறை சொற்ப பாத்திரங்களோடு இருக்க தேவைப்படுவதை எல்லாம் தாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று கூறி விட்டான் யுகா.
“ஏன் நாங்க வாங்கித் தரக் கூடாதோ”என்று முறுக்கிய சாரதாவிடம் “நாங்க எங்களுக்கு தேவையானது மட்டும் வாங்குவோம் நீங்க போனா பாத்திரக்கடை மொத்தமு வாங்கி அடுக்குவீங்க அதனால நாங்க பார்த்துக்கிறோம் சமைக்க போறது நாங்க தானே”என்றான் முறைப்பாக
“பரவாயில்லை டா மகனே தேஜு தான் சமைக்க போறான்னு சொல்லாம நாங்க சமைக்கிறோம் னு சொல்லிட்ட அதனால் பர்மிஷன் கிராண்டட்”என்று சாரதா கூற
“ம்மா”என்றவன் “அத்தை நீங்க ஷாப்பிங் போகணுமா சொல்லுங்க அரேஞ்ச் பண்றேன்”என சுந்தரியிடம் வினவ
“இல்லை தம்பி நீங்க பார்த்து தேவையானது எடுத்துக்கோங்க. நாங்க எதுக்கு”என்று மறுத்தார் சுந்தரி
“அட என்ன மதினி நீங்க. டேய் யுகா நீ கார்ட் தந்திடு அப்புறம் ஒரு சுமோ ஒண்ணு அரேஞ்ச் பண்ணு அதான் ஷாப்பிங் பண்ண சரியா இருக்கும்”சாரதா லிஸ்ட் போட
“போதுமா உங்களுக்கு. உங்களை கடை பக்கம் விடக் கூடாதுனு தான் இந்த ப்ளானே. போங்க மா”என்றான்.
சாரதா ஷாப்பிங் சென்றால் ப்ளாஸ்டிக் பாட்டில் கண்ணாடி பாட்டில் என்று வகை வகையாக வாங்கி அடுக்கி விடுவார். காய் சீவ தேங்காய் துருவி இதையே நாலைந்து வகை வைத்திருக்கிறார். சமையலுக்கு பயன்படுத்தும் கரண்டி மட்டும் ஐம்பதிற்கு மேல் தாண்டும். வித விதமான தட்டுகள் டம்ளர் என்று அது ஒரு பக்கம் கிடக்கும். அதனாலேயே அம்மாவை பெரும்பாலும் பெங்களூர் வந்தால் வெளியே ஷாப்பிங் செய்ய அனுமதிக்க மாட்டான்.
ஆனால் சாரதா கட்டுப்பட்டால் தானே .
“நீ புத்தகமா வாங்கற நான் பாத்திரமா வாங்கறேன் ரெண்டு ஒண்ணு தான்டா மகனே”என்று நியாயம் பேசும் தாயிடம் “அறிவை வளர்க்கறதும் அடுப்புல வைக்கறதும் ஒண்ணா மா உங்களுக்கு”என்று அவரிடம் காய்வான்
அறிவை வளர்க்கறதே அடுப்பில் வச்சு வித விதமாக திங்க சம்பாதிக்க தான் டா என்பவரை வேறொன்றும் சொல்ல முடியாது அவனால்.
அதற்காக சாரதா செலவாளியும் அல்ல. ஆனால் ஆவலை அடக்க முடியாமல் சில நேரங்களில் செலவு செய்து விடுவார்.
ஒரு வழியாக பேசி விவாதம் செய்து சுந்தரியை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்ல கிருஷ்ணனும் பத்மநாபனும் கீழே உள்ள பார்க்கிற்கு சென்று விட்டனர்.
இப்போது தேஜாவும் யுகாவும் மட்டும் இருக்க “வீடு எப்படி இருக்கு அஸ்வி”என்று பேச்சுக் கொடுத்தான் அவளிடம்.
“ஹ்ம்ம் நல்லா இருக்கு. பூஜை ரூம் இல்லையா”என்றாள் சுற்றி பார்த்தபடி
“அம்மா வைக்கச் சொன்னாங்க நான் மட்டும் தானே இருக்கேன் அதனால வைக்கலை”என்றவன் “சாமி மேல நம்பிக்கை இருந்தா தானே வைக்கறதுக்கு” என்றான் முனகலாய்.
“அத்தை எப்படி விட்டாங்க”என்று சிரிக்க
“அதில் எல்லாம் ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க உன் இஷ்டம் னு தான் சொல்வாங்க”
“ஓஓஓ பட் எனக்கு பூஜை ரூம் வேணும். அட்லீஸ்ட் ஒரு ஸ்டாண்ட் மாதிரியாவது வச்சு தாங்க”என்றிட
“ஸ்யூரா வச்சு தர்றேன் ரெடிமேட் பூஜை அலமாரி இருக்குல்ல அது ஆர்டர் போடறேன் வந்திடும்”என்று சொல்லி விட்டு அதை செயல்படுத்தினான்.
“இங்கே வா அஸ்வி எது பிடிச்சு இருக்கு னு பாரு”என்று தனது கைபேசியை காட்ட அவள் ஒன்றை தேர்வு செய்து காட்ட”ஹ்ம்ம் நைஸ் “என அதையே ஆர்டபர் போட்டு விட்டான் .
“குக்கிங் வரும் தானே அஸ்வி எனக்கு சுமாரா தான் வரும்”என்றான்.
“நானும் ஓரளவு சமைப்பேன்.ரொம்ப செஞ்சது இல்லை”என்றாள்.
“ஓகே மேனேஜ் பண்ணிக்கலாம்.இல்லாட்டா இருக்கவே இருக்கு யூடியூப் பார்த்து சமைப்போம்”என்றவன் “காஃபி குடிக்கிறியா”என்றான்.
“ஹ்ம்ம்”என்றதும் சமையலறை புகுந்திட அதற்குள் அருண் தேஜாவிற்கு அழைத்து விட்டான்.
“அருண் கால் பண்றார்”என்றதும் “ஸ்பீக்கர் ல போடு”என்றபடி காஃபியை கலந்தான்.
“சாரி தேஜா வரலாம் னு பார்த்தோம் பட் முடியலை”என்று அருண் வருத்தம் தெரிவிக்க
“ஏன் சாரே பஸ் கிடைக்கலையோ”என்று நக்கலடித்தான் யுகா.
“தெய்வமே இப்ப விட்டுடுங்க நேரில் பார்க்கும் போது நம்ம பஞ்சாயத்து வச்சுப்போம்”என்று சரணடைந்தவனோ “ஒரு ப்ராஜெக்ட் ல சிக்கிட்டேன் யுகா. லீவ் எடுக்க முடியலை”என்றான் சலிப்பாக.
“ஹ்ம்ம் சரி எங்க பிரதி. அவளையாவது அனுப்பி இருக்கலாம் தானே”என்று கேட்க
“மகி ஸ்கூல்ல இன்னைக்கு ஃபங்ஷன் அதான் கிளம்பிட்டாங்க நான் ஒரு நாலு பணிக்காக வர்றேன் னு சொல்லி இருக்கேன். தனு நைட் பேசுவா”என்றான்.
சிறிது நேரம் பேசியவர்கள் காஃபியையும் காலி செய்து இருந்தனர்.
அதற்குள் பெரியவர்களும் வந்து விட அன்றைய தினம் அவர்களோடு கழிந்தது.
“அஸ்வி தனித்தனி ரூமில் தங்கலாம் னு எல்லாம் நினைச்சுடாதே கண்டிப்பாக நடக்காது. அம்மா வீக்லி ஒன்ஸாவது வருவாங்க இங்கே”என்றதும் அவள் மையமாய் தலையசைத்தாள்.
“இங்கே குளிர் ஜாஸ்தி இருக்கும் போலவே ஃப்ளோர் பெட் எல்லாம் தாங்காது”
“அது பிரச்சினை இல்லை ஒரே பெட் ஷேர் பண்ணிப்போம்”என்று சாதாரணமாக சொல்லியவனை விநோதமாக பார்த்தாள்.
அவள் பார்ப்பதை உணர்ந்தவன் “ஸ்ஸ் உனக்கு ஓகே தானே. இப்போதைக்கு மட்டும் அவங்க கிளம்பிட்டா நீ அங்கே அந்த ரூமில் படுத்துக்கோ வரும் போது இங்க சேஞ்ச் பண்ணிப்போம்”என்றான் படபடவென்று.
“ஹ்ம்ம் ஓகே எனக்கு பிரச்சினை இல்லை”என்று முடித்தவளுக்கு வேறு என்ன கேட்க வேண்டும் என்று சிந்தனை துளிர்த்தது.
இன்னுமே அவளை ஒரு தோழியாக சொந்தமாக நினைத்தானே தவிர மனைவியாய் நினைக்கவில்லை.
இரவு உணவை பெண்கள் மூவரும் பேசிக் கொண்டே தயாரிக்க சாரதா மகனுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நம்ம ஊர் சாப்பாடு ன்னா அவனுக்கு உயிர் தேஜு. இங்கே எல்லாம் ஃப்ரோஷன் ஐட்டமா அதில் சமைச்சா ஏதோ மாதிரி இருக்கு னு நான் வெஜ்ஜே எடுக்கறதில்லை அவன் அங்கே வந்தா இளவரசி மதினி இவனுக்காக கறி கொண்டு வருவாங்க”என்றார்.
“ஹ்ம்ம் த்தை”என்றவள் அவனுக்கு பிடித்த உணவு பட்டியலை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.
**********
“தனு லேட் ஆகிடுச்சு வெளியே டின்னர் முடிச்சுட்டு அப்பாவுக்கும் ஏதாவது வாங்கிட்டு கிளம்புவோம்”என்ற அருண் ஒரு உணவகத்தில் தன் வண்டியை நிறுத்தினான்.
“எங்களுக்கு நூடுல்ஸ் வேணும்”என்று பிரதியும் மகிழனும் ஒரு சேர கூற
“உதை கிடைக்கும் ரெண்டு பேருக்கும். இந்த வீக் வந்ததில் இருந்து நூடுல்ஸ் தான் போகுது இப்போ இட்லி தோசை தான்”என்றான் கண்டிப்புடன்.
“நோ நூடுல்ஸ்”என்று மகிழன் சொல்ல
“நூடுல்ஸ் தானே அரிசி நூடுல்ஸ் இருக்கு ஸ்வீட்டா இருக்கும் சாஸ் வாங்கிட்டு வர்றேன்”என்று அருண் சொல்லவும் மகிழன் குதூகலம் ஆகி விட்டான்.
“இதெல்லாம் அநியாயம் இடியாப்பம் பேரு அரிசி நூடுல்ஸா”என்று சண்டைக்கு நின்றவளை “அடி வாங்குவடி ஒழுங்கா இட்லி சாப்பிடு. இல்ல”
“இல்லைனா என்ன செய்வீங்களாம்”
அவளருகில் சென்றவன்”நோ இஷ்யூஸ் உனக்கு நூடுல்ஸ் எனக்கு”என்று இழுத்தவனை முறைத்து விட்டு “ஆளைப் பாரு போங்க அடி வாங்காமல்”என்று அடிக்குரலில் மிரட்ட சிரிப்புடன் பில் கவுண்ட்டருக்கு டோக்கன் வாங்குவதற்காக சென்றான்.
அவன் டோக்கனை கொடுத்து விட்டு வரும் போது தனு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க அவள் கையில் மகிழனைத் தூக்கி வைத்திருந்தாள்.
அவளைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த அருண் “தனு”என்று சத்தமாய் அழைக்க அனைவருமே ஒரு நொடி அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“முன்ன பின்ன தெரியாத ஆள் கிட்ட எல்லாம் பிள்ளையை தருவியா நீ”என்றவன் வெடுக்கென்று மகிழனைப் பிடுங்கிக் கொண்டான்.
“இல்லை அது வந்து”என்று அவள் பேசும் முன்பே “வா போகலாம்”என்று அதட்டினான்.
“அருண் ப்ளீஸ்”என்று அந்த பெண் கெஞ்சுதலாய் அவனைப் பார்க்க
“யாருங்க நீங்க எதுக்கு என் பெயர் சொல்லி கூப்பிடுறீங்க கெட் லாஸ்ட்”என்றவன் பிரதன்யா கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வெளியே போக அவள் திகைப்பில் இருந்து மீளவே இல்லை.
“யார் அவங்க ஏன் கத்துனீங்க ஜஸ்ட் தம்பியை தூக்க தானே செஞ்சாங்க”என்று பிரதி கடுப்படிக்க
“வாயை மூடிட்டு வர்றியா முன்ன பின்ன தெரியாத ஆள் கிட்ட பிள்ளையை தரலாமா யோசிக்க மாட்டியா”என்றான் படபடவென்று.
“முன்ன பின்ன தெரியாதவங்க தான் உங்க நேமை கரெக்டா சொன்னாங்களா… என்ன நடக்குது இங்க யார் அவங்க சும்மா கத்திட்டு வந்தா சரி ஆகிடுச்சா”என்று அவளும் பதிலுக்கு கத்த
“தம்பி முன்னாடி கத்தாத வீட்டுக்கு தானே போறோம் பேசிப்போம்”என்றவனுக்கு அப்போது தான் உணவருந்தாமலேயே வந்தது நினைவிற்கு வந்தது.
மீண்டும் வண்டியை திருப்மியவன் அந்த உணவகத்திற்குள் வேகமாய் நுழைந்து தங்களுக்கான உணவை வாங்கிக் கொண்டான். அது தெரிந்த நபரின் கடை என்பதால் வந்ததும் வாங்கிக் கொண்டான் இல்லை என்றால் உணவு கிடைத்திருக்காது.
இன்னும் அந்த பெண் அங்கே தான் அமர்ந்திருந்தாள். அவளெதிரே ஒருவன் உணவருந்த அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு அத்தனை ஆத்திரம் அவனுக்கு.
“ச்சீ சுயநலவாதி”என்று முனகியபடி வெளியே சென்று விட்டான்.
அவளும் அருணைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.
பிரதன்யாவிற்கோ கோபம் பொங்கியது. வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேன்.எவ்வளவு கோபமா பேசுறாரு இதுல டீ வேற என்று முணுமுணுக்க அதுவுமே அருணின் காதில் விழத் தான் செய்தது.
சட்டென அவனின் மனநிலை மாறிப் போனது அவளின் முணுமுணுப்பில்.
உல்லாசமாய் விசிலடித்தவன் “சரி சரி திட்டுனது போதும். வீடு வந்திடுச்சு இறங்கு”என்றவாறு வண்டியை நிறுத்தினான்.
“எங்களுக்கு தெரியும்”என்றவள் வேகமாய் உள்ளே செல்ல
“பாத்தியாடா உங்கம்மாவுக்கு கொழுப்ப… எல்லாத்தையும் என் கிட்ட தள்ளி விட்டுட்டு போறா பாரு”என்றான் மகனிடம்.
“ஆமா ஆமா கொழும்பு கொழும்பு”என்று மகிழன் கை தட்டி சிரிக்க
“அவ வெளியே வந்தா நாம் ரெண்டு பேரும் உண்மையிலேயே கொழும்பு ஆகிடுவோம் வா ஓடிடலாம்”என்றவன் மகனை கீழே இறக்கி விட்டு விட்டு உணவுப் பொட்டலங்களை எடுத்து கொண்டான்.
அமைதியாக உணவருந்தி முடித்தவர்கள் அவரவர் அறைக்குச் செல்ல பிரதன்யா அவனிடம் பேசாமலேயே படுத்து விட்டாள்.
கதவை எல்லாம் அடைத்து விட்டு வந்தவன் அவள் செய்கையில் புன்னகைத்தவாறு நின்றிருந்தான்.
கையில் இருந்த மகிழனின் பொம்மையை தூக்கி அவன் மீது எறிந்தவள் “என்ன அப்படியே சோபையா ஒரு சிரிப்பு மனசுக்குள்ள பெரிய ஆசிர்வாதம் வழங்கற சாமியார் னு நினைப்பா… ஒழுங்கா போயிடுங்க ஆமா”என்று திட்டிட
“அந்த பொண்ணு தான் மகியோட”என்று அவளைப் பார்க்க அதிர்ச்சியுடன் பார்த்தாள் பிரதன்யா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
23
+1
1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Ammaavaaaaa
எஸ் மா ❤️ தொடர்ந்து கமெண்ட் போடுறீங்க நன்றி டியர் 😍😍