
தேஜா “யார் கவி?”என்று கேட்டதும் அதிர்ந்த யுகா பின்னர் “மை லவ்!”என்றான் அவளை கூர்மையாக பார்த்தபடி
“அப்போ லயா?!”என்று கேட்க
“கவிலயா அவ முழு பேர்.”என்றவனைப் பார்த்து விட்டு வேறெதுவும் பேசாமல் வேலையை கவனிக்க
“வேறெதுவும் கேட்க மாட்டியா அஸ்வி?”என்றான்.
“சொல்லணும் னா நீங்களே சொல்லி இருப்பீங்களே!”என்றாள் பதிலுக்கு.
“ஹ்ம்ம்”என்றவன் கண்களை மூடி படுத்து விட்டான்.
“காலையில் எத்தனை மணிக்கு ஏர்போர்ட் போகணும்?”என்று வினவ
“எட்டு மணிக்கு கிளம்பினா பெட்டர். அப்பா அம்மாவை ட்ராப் பண்ணிட்டு நான் அப்படியே ஏர்போர்ட் போயிடுவேன்”என்றான் விழிகளை மூடியபடியே.
“ஹ்ம்ம் ஓகே”என்றவள் கீழே தரை மெத்தையை விரித்து படுத்தாள்.
“அஸ்வி லயா பத்தி சொல்லாம விட்டதில் வருத்தம் எதுவும் இல்லையே?”என்று கேட்க அவளிடம் பதிலே இல்லை. சிறிது நேரம் கழித்து விழித்து கீழே பார்த்தவன் அவள் உறங்கி இருப்பது கண்டு அவள் முகம் பார்த்தபடியே தானும் உறங்கியிருந்தான்.
காலை வேளை அத்தனை பரபரப்பு பத்மநாபன் வீட்டில். சாரதாவின் குடும்பம் கிளம்பியதும் அடுத்து கந்தசாமி மகன் மருமகளோடு கிளம்புவார். ‘காலை உணவையாவது தயார் செய்து சாப்பிட வைத்து தான் அனுப்ப வேண்டும்’ என்று சுந்தரி பரபரப்பாய் வேலையை பார்க்க துவங்க, தேஜா அங்கே வந்து விட்டாள்.
“ஏதாவது காய் கட் பண்ணனும்னா எடுத்து தாங்க மா. கட் பண்றேன்”என்று வந்தமர்ந்தவளை கவனித்து விட்டு உள்ளூர அதிர்ந்தார். மகள் தலைக்கு குளிக்காமல் தலையை படிய வாரி விட்டு வந்திருக்க, அதுவே உள்ளத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது அவருக்கு. ஒரு வாரம் கணவனை விட்டு தனியே இருக்கப் போகிறாள் ஆனால் தலை குளிக்காமல் ,’இன்னும் அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லையோ? மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாளா?’ என்பதே பெரும் கவலையாக இருந்தது அவருக்கு.
“ஏன் மா அப்படி பார்க்கறீங்க?”என்றபடி கேரட்டை சீவ
“தேஜு!”என்றழைத்தவருக்கு இதை எப்படி கேட்பது என்ற தயக்கம் இருந்தது.
“சொல்லுங்க மா என்ன ஆச்சு?”என்றதும் யுகா அவளை அழைத்து விட்டான்.
“அவர் கூப்பிடுறார். நீ போ நான் இங்கே பார்த்துக்கிறேன்”என்று அனுப்பி வைக்க அன்னையின் முகத்தில் இருந்த குழப்பத்திற்கு விடை தெரியாமல் அறைக்குச் சென்றாள்.
“அஸ்வி ஒரு ப்ளாக் காஃபி இல்லை இல்லை நீ அன்னைக்கு போட்டீயே புதினா டீ அது ஒண்ணு கிடைக்குமா? செம தலைவலி”என்று நெற்றியை பிடித்தான்.
“காலையில் எழுந்ததுமேவா?, டீஹைட்ரேஷன் ஆகியிருக்கும் ஹாட் வாட்டர் கொஞ்சம் குடிங்க சரி ஆகிடும்”என்று கூறவும்
“நைட் தூக்கம் சரியா இல்லையா, அதான் தலை வலிக்குது”என்று நெற்றியை நீவிக் கொள்ள, தேஜா வெளியே சென்றாள்.
சிறிது நேரத்தில் புதினா தேநீருடன் வந்தவள் “இதை குடிங்க”என்று நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
“லக்கேஜ் எதுவும் எடுத்து வைக்கணுமா?”என்றபடி அங்கிருந்தவற்றை ஒதுக்கி போட்டாள்.
“எல்லாம் தான் எடுத்தாச்சே ஒரு பேக் மட்டும் தான் எடுத்து வச்சுட்டேன்”என்றவன் தேநீரைக் குடித்து முடித்ததும் மீண்டும் நெற்றியை நீவிக் கொள்ள, தைலம் எடுத்து வந்து அவன் நெற்றியில் தடவி மசாஜ் செய்ய வாகாய் சாய்ந்து கொண்டான்.
“வாவ்! நீ சூப்பர் அஸ்வி, ப்பா நல்லா இருக்கு. ஹ்ம்ம் ஹ்ம்ம்”என்று முணுமுணுத்தபடி சிரிப்புடன் சாய
“கண்டதையும் போட்டு குழப்பிக்க வேண்டியது. அப்புறம் தலைவலினு புலம்பணும்”என்றவள் “டைம் இருக்கு கொஞ்ச நேரம் அப்படியே தூங்குங்க. சரி ஆகிடும் செவனுக்கு எழுப்பி விடுறேன்”என்றாள்.
“ப்ப்ச் ஷோபாவில் தூங்கினா கழுத்து வலிக்கும்”என்று சலிக்க
“பெட்ல எப்படி மசாஜ் செய்ய முடியும். பின்னால் நின்னு பண்ணா தான் பட் அதுவும் கஷ்டம் இல்லாட்டா மடியில் தான் படுக்க வச்சு தேய்க்கணும்”என்று கிண்டல் செய்ய
“ஆக்ஸுவலி, அது பெட்டர் ஆப்ஷன்”என்றவனின் தலையில் குட்டியவள் “அவ்வளவும் கொழுப்பு”என்றாள் முறைப்புடன்.
“ஏன் தேய்க்க மாட்டியா?. ஒரு ஃப்ரெண்ட்லி ஹெல்ப் இது கூட செய்ய கூடாதா?!”என்றவனுக்கு தற்சமயம் தலைவலி பரவாயில்லை போல இருந்தது.
“ஹ்ம்ம்ம், எந்த ஃப்ரெண்ட் மடியில் போட்டு தைலம் தேச்சு விடுறாங்க. விட்டா தாலாட்டு பாட சொல்வீங்க”என்றபடி “போய் தூங்குங்க”என்று வெளியேறப் போக
“ஹேய் சூப்பர் ஐடியா!”என்றவன் அவள் கையைப் பிடித்து விட புன்னகையாய் முறைத்து விட்டு “ஒழுங்கா தூங்குங்க ஆமாம்”என்று எச்சரித்து விட்டு வெளியே செல்ல, வதனத்தில் இன்னும் முறுவல் மிச்சமிருந்தது அவளுக்கு.
மகள் சிரிப்புடன் வருவதைக் கண்ட சுந்தரிக்கு, சற்று முன் இருந்த கலக்கம் எல்லாம் போயே போய் விட்டது.
‘படிச்ச புள்ளைங்க அதுங்க விருப்பமா சேர்ந்து இருக்கட்டும்.என் பொண்ணு சந்தோஷமா தான் இருக்கா’என்று தன் மனதை சமன் செய்து கொண்டார்.
*********
“தனு என்னென்ன தேவையோ எல்லாம் எடுத்து வச்சுக்கோ.அப்புறம்னா நீ தான் வரணும். இல்லை அகில் தான் கொண்டு வந்து தந்தாகணும் இந்த மூணு மாசம் டைட் வொர்க் இருக்கு மா”என்று சொல்ல
“மறந்தாலும் அகில் கொண்டு வருவான் நீங்க ஏன் கவலைப் படுறீங்க?. போய் மாமாவும் மகியும் ரெடி ஆகியாச்சானு பாருங்க”என்றவள், அலமாரியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“நாங்க வந்துட்டோம்”என்ற சத்தத்துடன் கதவைத் தட்டினான் அகிலன்.
“ரெண்டு வாலும் வந்திடுச்சு”என்ற அருண் கதவைத் திறக்க, மகிழன் அவனிடம் தாவினான்.
“பிரதிக்கா நீ கேட்ட ஐபேட் அங்கே ட்ராவில் இருக்கு எடுத்துக்கோ சார்ஜர் மறந்திடாத”என்ற தம்பியை ஆச்சரியத்துடன் பார்க்க
“என்ன லுக்கு…? அதுக்கு பதில் உன் டெடி பியர் எனக்கு வேணும்”என்றான்.
“என்னடா இது ரொம்ப சீப்பான பண்டமாற்று முறையா இருக்கு. ஐபேடுக்கு டெடி பியர் பொம்மையா?”என அருண் கிண்டல் செய்ய
“ஐபேட் ரொம்ப நாளா அக்கா என் கிட்ட கேட்டா மாமா, நான் தராம போங்கு காட்டி சண்டை போட்டேன் இத்தனை நாள். இனிமே யார் கிட்ட சண்டை போட?”என்றவனின் குரல் உள்ளடங்கிப் போக அருண் அவனை ஆதூரமாக பார்த்தான்.
“அகி எரும, கெளம்புற நேரத்தில் ஏதாவது பேசின கொன்னுட்டேன் உன்னை”என்று கண்கலங்க தம்பியை அணைத்துக் கொள்ள
“அவ்ளோ சீன் எல்லாம் இல்லை உனக்கு. உன் டெடி பியரை வாங்கறதே நினைச்ச நேரம் உன்னை அடிக்கறதுக்கு பதிலாக அதை அடிக்க தான்.”என்று பேச்சை மாற்றியவனுக்கு அழுகையில் கண்கள் பனித்தது.
அக்கா தம்பி இருவரும் அழுது கொண்டிருக்க, மகிழன் இருவரையும் மாறி மாறிப் பார்த்து அழத் தயார் ஆக அருண் இருவரையும் அதட்டினான்.
“உங்க பாசமழையை பார்த்து என் மகன் அழுவறான்டா உதைப்பேன் ராஸ்கல்களா…நினைச்ச நேரம் உங்க அக்காவை வந்து பாரு இதுக்கு போய் இவ்வளவு அழுகை சின்ன பையா!”என்று திட்ட
“பேசாம மகியை என் கிட்ட விட்டுடுங்க மாமா நான் பார்த்துக்கிறேன்”என்று மூக்கை உறிஞ்ச
“அய்யே ஆளைப் பாரு. படிச்சு முடி சீக்கிரம் எங்க பக்கமே வீட்டை பார்த்து வந்து பக்கத்திலேயே இருக்கலாம்”என்று சமாதானம் செய்தான்.
தேஜாவை விட பிரதியிடம் தான் அதிக ஒட்டுதல் அகிலனுக்கு. சண்டை சச்சரவு கோபம் அழுகை என்று அனைத்தும் இவளோடு தான். ஒரே அறையில் இருந்ததாலோ என்னவோ அவளை அதிகமாக மிஸ் செய்தான். அதற்காக தேஜாவை பிடிக்காது என்றில்லை மூத்தவள் என்ற மரியாதை அகிலன் பிரதி இருவருக்குமே அவள் மீது அதிகம். பெற்றவருக்கு அடுத்த இடத்தில் தேஜா இருக்க ஒரு வித மரியாதையுடன் தான் இருவருமே அவளிடம் பேசிப் பழகினர்.
ஏதாவது தேவை என்றால் சுந்தரிக்கு பிறகு இருவரும் நிற்பது தேஜாவிடம் தான். அவளுமே அமைதி தானே தவிர தம்பி தங்கைக்கு வேண்டியவற்றை அவர்கள் கேளாமலேயே பல நேரங்களில் நிறைவேற்றி வைத்திருக்கிறாள்.
இருவரும் அழுது கொண்டிருக்க உணவருந்த அழைக்க வந்த தேஜா “ஹேய் எதுக்கு அழறீங்க?”என்று பதறினாள்.
“பாசமலர் படம் ஓடுது”என்று அருண் கிண்டலடிக்க
“சேட்டையா!?”என்று அவனை முறைத்து விட்டு “ப்ப்ச் அகி இங்கே பக்கமா தானே போறா நினைச்ச நேரம் போய் பார்த்துக்கோ அதுக்கு போய் அழுதுட்டு குட்டி பையனாடா நீ?”என்று அதட்ட
“அவளாச்சும் பரவாயில்லை நீங்க பெங்களூர் போறீங்க ம்ஹூம் நான் மட்டும் தனியா!”என்று விசும்பியவனை தமக்கைகள் இருவரும் பார்த்து கண்ணீருடன் சிரித்தனர்.
“அது சரி அதுக்காக அவங்க ரெண்டு பேரையும் இங்கேயே இருக்க வச்சிடலாமா?”என்று அருண் இடுப்பில் கை வைத்தபடி முறைக்க
“குட் ஐடியா மாமா. பேசாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாமா மேல் ஃப்ளாட் இருக்கு அங்கேயே எல்லாரும்”என்றவனை தமக்கைகள் இருவரும் அணைத்துக் கொள்ள, இருவரின் தோள் மீதும் கைபோட்டு கொண்டான் அகிலன்.
“ஹோய்! சாப்பிட கூப்பிட்டு வருவன்னு பார்த்தா என்னங்கடா நடக்குது இங்க, டேய் மினியன் பொம்மை எதுக்கு டா மூஞ்சி மேல தக்காளி சாஸ் ஊத்தி இருக்க?”என்று அவன் மூக்கு கன்னம் எல்லாம் அழுகையில் சிவந்திருந்தது கண்டு அங்கே வந்த யுகாதித்தன் கிண்டல் செய்தான் வாயில் ஒரு கையும் இடுப்பில் ஒரு கையுமாக.
“நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்ட தல. இப்ப தான் பாசமலர் முடிச்சு வானத்தை போல போனாங்க”என்று அருண் இன்னுமே கிண்டல் அடிக்க
“ஹ்ம்ம் என்னது”என்று இருவரும் அவனை முறைக்க
“அட வாங்கப்பா பசி வயித்தை கிள்ளுது”என்று முன்னால் ஓடி விட்டான்.
“எஸ்கேப் ஆகறீங்களா உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்”என்று பிரதன்யா அவன் பின்னால் செல்ல வரிசையாக மற்றவர்களும் சென்றனர்.
உணவருந்தி முடித்ததும் அனைவருமே கிளம்பி விட்டனர்.
திரிபுரசுந்தரி இளைய மகளை வழி அனுப்பி வைத்து விட்டு அப்படி ஒரு அழுகை அழுதார். யுகாதித்தன் தன் குடும்பத்துடன் அதற்கு முன்பே கிளம்பி இருந்தான். சாரதா தேஜாவிடம் சீக்கிரம் வந்து விட வேண்டும் அடிக்கடி ஃபோன் செய்து பேச வேண்டும் என்று கிளம்பும் வரை சொல்லிக் கொண்டு மனதேயின்றி கிளம்பினார்.
“ம்மா பேசாம அவ கூடவே நீங்க இருந்துடுங்க”என்று யுகா அதட்டவும் தான் கிளம்பிச் சென்றார்.
அனைவரும் அவரவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட நாட்கள் அழகாய் கடந்திருந்தது. தேஜாவும் தன் வேலையை முடித்துக் கொண்டு வேலையை ராஜினாமா செய்திருந்தாள்.
“நீ இல்லாம எனக்கு ஒரு கையே உடைஞ்சா மாதிரி இருக்கும் மா. நல்லபடியா பத்திரமா இருக்கணும் பாப்பா. எதுவா இருந்தாலும் அங்கிளுக்கு கூப்பிடு சரியா”என்று வேலை கொடுத்த உறவினர் சொல்லி வாழ்த்தி பரிசுப் பொருள் தந்து அனுப்பி வைத்தார்.
ஒரு வாரம் கழித்து தேஜா யுகாவுடன் பெங்களூருக்குப் பயணமானாள்.
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
26
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super super super super super பெங்களூரு la theju and yuga life epdi poga potho