
அழகாய் ஓர் விடியல் . அருணின் தலைக்கோதலில் அவன் நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருந்த பாவையவளுக்கு இனிமையான நல்லுறக்கம். அரை மணி நேரம் ஒரு மணி நேரமாக கழிந்திருக்க கண்விழித்து பார்க்கையில் மென் புன்னகை தோன்றியது.
“மணி ஏழு”என்றதில் அடித்து பிடித்து எழுந்தவள் கடிகாரத்தை பார்க்க அது ஆறைத் தான் தொட்டது.
“உங்களை பயந்தே போயிட்டேன் நான்”என்று ஆசுவாசமடைந்தாள்.
“எழுந்து குளிச்சிட்டு ரெடி ஆகு நான் இதெல்லாம் எடுத்து வைக்கிறேன்”என்றதும் “ஆமாம் நீங்களே பண்ணிடுங்க தலை காய வைக்கவே எனக்கு அரை மணி நேரம் எடுக்கும்”என்றபடி குளியலறை புகுந்தாள்.
சிறு வயதில் பாய் கட் செய்து ட்ராக் ஷூட் போட்டு இருந்தவள் இப்போது அழகாய் இடை நீண்ட கூந்தலுடன் புடவையில் பாந்தமாய் இருக்க மென்மையாக புன்னகைத்துக் கொண்டான்.
ஏன் இந்த மாற்றம் என்று ஒரு நாள் கேட்டதற்கு “அப்படியேவா இருப்பாங்க.”என்று அவனின் வாயடைத்து வைத்தாள்.
போர்வையை எடுத்து வைத்தவனுக்கு மகனின் நினைவு. உறக்கம் தெளிந்து எழுந்து விட்டானா என்று அறிந்து கொள்ள தந்தைக்கு அழைக்க அவரோ உறக்க கலக்கத்தில் பேசினார்.
“இன்னும் எழுந்துக்கலை போல”என்று சொல்லியபடி அமர பிரதன்யா குளித்து விட்டு வந்திருந்தாள்.
“நாட் பேட்”என்று மெச்சுதலாய் சொல்லிக் கொண்டவன்,அவளருகே வர “ஹ்ம்ம் நோ கிட்ட வராதீங்க போய் குளிச்சிட்டு வந்தா தான். என் மம்மி எல்லாம் நான் குளிக்கலைனா பக்கமே வரமாட்டாங்க”என்று சொல்ல “ஓகே ஓகே போறேன்”என்று தானும் உள்ளே சென்றான்.
**********
யுகாவின் கைபேசி அடித்து அடித்து ஓய்ந்து போனது. இருவரும் அப்படி ஒரு உறக்கம். மீண்டும் கைபேசி சத்தமிடும் போது தான் லேசாய் கண் விழித்து பார்த்தாள் தேஜா.
“ப்ப்ச்”என்று சலிப்போடு கைபேசியை எடுக்க சாரதா தான் அழைத்திருந்தார்.
“ஹ்ம்ம் நின்றுச்சு”என்றபடி கைபேசியை மேசையில் வைக்க அது மீண்டும் அழைத்தது.
“யார்றா இது”என்றவள் “ஹலோ”என கொட்டாவி விட்டபடி பேச
“தேஜு நான் தான் டா அத்த பேசறேன் எங்க அவன் இன்னும் முழிக்கலையா”என்றார்.
“அத்தையா”என்று பதறியவள் “இதோ எழுப்பறேன்த்த”என்றபடி அவனருகில் சென்று எழுப்ப “ப்ப்ச் ம்மா டைம் இருக்கு தூங்க விடுங்க”என்று முனகினான்.
“தேஜு ஃபோனை ஸ்பீக்கர் ல போடு”என்றவர் “யப்பா நான் பெத்த மகனே மணி ஆறுப்பா கோவிலுக்கு போகணும் எழுந்துக்கிறியா”என்ற அன்னையின் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டவன் “ராஜ மாதா அநியாயம் இன்னைக்கும் நீங்க தான் எழுப்பணுமா வைங்க ம்மா வர்றேன்”என்று எழுந்து அமர்ந்து விட்டான்.
“என்ன பண்றது பெத்த மவனுக்காக அம்மா தான் சில நேரங்களில் அலாரமா மாற வேண்டியது இருக்கு. அம்மான்னாலே அன்பு பாசம் பாயசம் தானே”என்றவரின் பேச்சில் பழைய துள்ளல் திரும்பி இருக்க
“ராஜமாதா மருமகள் எடுத்த மமதையோ”என்று கிண்டல் செய்ய
“மமதையும் இல்ல மமிதா பைஜூவும் இல்லை சீக்கிரம் கிளம்பி வாங்க கோவிலுக்கு நேரம் ஆச்சு”என்று இணைப்பைத் துண்டிக்க தேஜா அவனை விநோதமாக பார்த்து நின்றாள்.
“குட் மார்னிங் அஸ்வி என்னாச்சு இப்படி நிற்கிற”என்றவன்”கோவிலுக்கு கிளம்ப சொன்னாங்க”என்றவாறு எழுந்து கொண்டான்.
“இல்லை அத்தை”என்றவளை புன்னகையுடன் பார்த்து விட்டு “அவங்க அப்படி தான்.ரெண்டு பேரும் கொஞ்சம் நக்கலா பேசிப்போம் கண்டுக்காதே பட் நல்ல என்டர்டெயின்மென்ட் எனக்கு”என்றான்.
“எப்பவும் இப்படி தானா”என்று வினவ
“ஆல்வேஸ் னு சொல்ல முடியாது பட் நான் கொஞ்சம் டம்ப்பா இருந்தா அவங்க இப்படி பேசி சகஜம் ஆக்கிடுவாங்க”என்றபடி குளியலறை செல்ல தேஜா அனைத்தையும் எடுத்து வைத்தாள்.
விநோதமான காலைப் பொழுதாக இருக்க “திருமணம் முடிந்த மறுநாள் இப்படி தான் இருக்கும் போல”என்று நினைத்துக் கொண்டாள்.
“சினிமாவில் கதையில் எல்லாம் வித்தியாசமா சொல்றாங்க இங்கே நார்மலா போகுது ஒரு வேளை நாங்க ரெண்டு பேரும் முன்னமே தெரிஞ்சவங்க அதனால் இப்படியோ”என்று சொல்லிக் கொண்டவள் கண்ணாடியை துடைத்து போட்டாள்.
கைபேசியில் இரண்டு மூன்று தவறிய அழைப்புகள் இருந்தது. சுந்தரி தான் அழைத்திருந்தார்.
“எழுத்துட்டேன் மா குளிச்சிட்டு வர்றேன்”என்று இணைப்பைத் துண்டிக்க யுகா குளித்து விட்டு வந்திருந்தான்.
“நான் கீழே போறேன் நீ வந்திடு அஸ்வி. ஹீட்டர் போட்டு இருக்கேன். பார்த்துக்கோ “என்றவன்
“எனி ஹெல்ப்”என்று கேட்க
“ஹ்ம்ம் இந்த மொபைல் மட்டும் அம்மாட்ட தந்து சார்ஜ் போட்டுடுங்க”என்று கைபேசியை நீட்டினாள்.
“ஓகே அஸ்வி இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிடுவோம் ஓகே சென்னை போயிட்டு மறுநாளே பெங்களூர் போகணும் நிறைய வொர்க் பெண்டிங் இருக்கு.”என்றான்.
“ஹ்ம்ம் ஓகே”என்று சொல்லி செல்ல அவனும் கீழே சென்று விட்டான்.
அருண் மட்டும் மகிழனோடு அமர்ந்திருக்க அவனருகில் அமர்ந்தவன் சுந்தரி காஃபி கொண்டு வந்து தரவும் அதை வாங்கியபடி மொபைலைக் கொடுத்தான்.
அவனிடம் எப்படி கேட்பது என்று திருதிருவென விழித்தபடி நின்றவர் “கோவிலுக்கு நேரம் ஆச்சே தம்பி தேஜா”என்று நிறுத்த
“ரெடி ஆகிட்டா அத்தை நீங்க போய் கூப்பிடுங்க”என்று காஃபியை அருந்தினான்.
“ஷ்ஷ் சுகர் ஜாஸ்தி”என்று முனகியபடி ஒரே மிடறில் குடித்து விட்டான்.
“டேய் சூடுடா”என்று அருண் பதற
“சூடு பத்தலைடா சுகர் வேற அதிகம் “என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “காஃபிக்கு அழகே கசப்பு தான் அதை மறைச்சு சுகரியா இருக்கு”என்றான்.
“எங்கே சத்தமா சொல்லு”என்று அருண் கிண்டல் செய்ய
“சும்மா இருடா அப்புறம் மாப்பிள்ளை இம்மாம் பெரிய சொம்பு ல தான் தண்ணி குடிப்பாராம்னு கிசுகிசு வந்திடப் போகுது”என்றிட கொல்லென சிரித்தான் அருண்.
“மகி எங்கடா உங்க பிரதிமா”என்று அவனிடம் பேச
“பெதர் கோயிங் கிச்சன்”என்று சொல்ல அவன் வாயை அவசரமாக பொத்திய அருண் “அன்னைக்கு ஒழுங்கா பிரதிமானு தானடா சொன்ன”என்று முணுமுணுக்க
“நோ பெதர். பிரதிமா பெதர்”என்று மகன் விளக்கம் கொடுக்கவும் எங்கே மனைவி வந்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு.
வந்தால் “நீங்க தான் அவனைக் கெடுக்கறதே”என்று சண்டைக்கு தயார் ஆகி விடுவாள்.
இளஞ்சிவப்பு வண்ண சாஃப்ட் சில்க்கில் மிளிர்ந்தவள் “குட் மார்னிங் யுகி மாமா”என்றபடி வந்தாள்.
“குட் மார்னிங் பிரதி எங்க உங்க அக்கா வந்தா கோவிலுக்கு கிளம்பலாம் தாத்தா வேற நேரம் ஆச்சுன்னா ங்க”என்றான் கைபேசியில் நேரத்தைப் பார்த்தபடி.
“இதோ வந்திடுவாங்க அம்மா உள்ள கூப்பிட்டாங்கனு போயிருக்காங்க” என்றவள் “மகி வா நாம முன்னாடி போவோம்”என்று தூக்கிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விட பெரியவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர் அவர்களுக்கு துணையாக ஆட்கள் இருக்க மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
“நீங்க நாலு பேரும் கார் ல போங்க ப்பா நாங்க நடந்து வந்திடுறோம்”என்று புதுமணத் தம்பதியை அனுப்பி விட்டு மற்றவர்கள் நடந்து சென்றனர்.
“இங்கன இருக்க கோவிலுக்கு காரா இந்த மம்மி இருக்கே”என்று முனகிய யுகாவிடம் “நடந்து போனா எல்லாம் தெரிஞ்சவங்களா நிற்பாங்ங யுகி. பேசாமல் போக முடியாது இங்கேயே லேட் ஆகிடும் அதான் அம்மா சொன்னா”என்றார் அவனின் தந்தை.
சுதாகரன் கோவிலில் பக்திபழமாக நின்றிருக்க அகிலன் அவனருகில் அவனைப் போலவே நின்றான்.
“வாங்க மாப்பிள்ளைகளா இவ்வளவு நேரமா”என்றவன் “சாமிய கும்பிட்டு வருவோம் நேரம் ஆச்சு”என்று ஆளாய் பறந்தான். அவன் பசி அவனுக்கு.
சாமி கும்பிட்டு முடித்ததும் கிடாய்களை வெட்டி எடுத்து கொண்டு அவர்கள் நகர மணமக்கள் நால்வரும் கோவிலைச் சுற்றி வந்தனர்.
“அப்புறம் யுகா அடுத்த ப்ளான் என்ன”என்று அருண் கேட்க
“இப்போதைக்கு எதுவும் இல்லை டா ஹெவி வொர்க் பெண்டிங் முடிச்சா தான் ரிலாக்ஸாக இருக்க முடியும். ஆமா நீங்க”என்று வினவ
“இங்கேயும் அதான். மகி ஸ்கூல் வேற இருக்கு அவனுக்கு லீவ் விடும் போது எடுக்க லீவ் எல்லாம் ஷேவ் பண்ணி வைக்கிறேன் நான். ஆமா தேஜ் நீ எப்படி வொர்க் ரிசைன் பண்ணிட்டியா”என்று அவளிடம் கேட்க
“இன்னும் இல்லை அங்கிள் பாவம் இந்த மாசம் நிறைய முகூர்த்தம் இருக்கு அவரால் மேனேஜ் பண்ணிக்க முடியாது. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்”என்றாள்.
“பிரதி நீ”என்று தங்கையை கேட்க
“நான் முன்னவே பேப்பர் போட்டுட்டேன்லக்கா ப்ராப்ளம் இல்ல. இன்னும் டூ வீக்ஸ் வேலை பார்த்தா போதும் அப்புறம் இவர் ஆபிஸ்க்கே தாவிடுவேன்”என்றவள் “மாம்ஸ் பேசாம நீங்களும் சென்னைக்கு வந்திடுங்க அடிக்கடி பார்த்துக்கலாம்”என்றாள்.
“ஹ்ம்ம் வரணும்”என்றவனுக்குமே லயாவின் இடத்தில் இருந்து தள்ளி இருந்தால் பரவாயில்லை என்று தான் தோன்றியது.
கோவிலில் சாமி கும்பிட்டு கிளம்பியவர்களை வீட்டிற்கு சென்றதும் மீண்டும் ஒரு அலங்காரம் ஒப்பனை என்று அடுத்து அடுத்து பரபரப்பாக்க வந்த சொந்தங்களுக்கு பதில் கூறி நின்றே அசந்து போயினர்.
“என்ன இது மொவத்துல ஒரு வெட்கம் இல்லை சாதாரணமா அலையுதுக ஏ சுந்தரி ரெண்டும் புருஷன் கூட ஒண்ணு மண்ணா இருந்துச்சுகளா இல்லையா னு கேட்டீயா. உன் மருமவளை விட்டு கேட்க சொல்லு.”என்று சந்தேக விதை தூவி விட்டு செல்ல சுந்தரிக்கு மனது அலை பாய்ந்தது.
‘அது பற்றி எதுவுமே கேட்கவிவ்வையே சிறியவள் கூட பிடித்தமாய் தான் திருமணம் செய்தாள் ஆனால் மூத்தவள்’என்று தவித்தவர் மகளை கவலையாகப் பார்த்தார்.
“என்ன மயினி வந்து உட்கார்ந்துட்டீங்க. சாப்பிடலேயா ரெண்டு பேரும் போவோமா”என்று சாரதா கேட்க
“இந்தா போவலாம்”என்றபடி நந்தினியை தேடினார்.
“யாரைத் தேடுறீங்களாம்”
“நந்தினிய தான்”என்றவர் சாரதாவிடம் மெலிதான குரலில்”விசாரிக்கணும்ல “என்றார் சூசகமாக.
“நான் கேட்டுட்டேனே எல்லாம் பழம் தான்”என்று சம்பந்தியை சமாளித்தார் சாரதா.
“நிஜமா தானா சாரதா எனக்காவ சொல்லலையே”என்று தவிப்புடன் கேட்க
“இதுல என்ன பொய் வேண்டி கெடக்கு மயினி. அப்புறம் நம்ம புள்ள வாழ்க்கை நாம தானே விசாரிக்கணும்”என்றார் சமாளிப்பாக.
பின்னே மகன் தன் நச்சரிப்பு தாளாமல் தான் திருமணம் செய்து கொண்டான் என்றா சொல்ல முடியும். எல்லாம் விரைவில் சரி ஆகும் என்று சாரதாவிற்கு நம்பிக்கை இருந்தது. தேவை இல்லாமல் இப்போது போய் தேஜாவிணம் ஏதாவது வினவினால் அது நிச்சயம் மகனை பாதிக்கும் என்று உணர்ந்தவர் சிறிது காலம் போகட்டும் என்று எண்ணியிருந்தார்.
தேஜா நிச்சயம் தன் மகனுக்கானவளாய் இருப்பாள் யுகாவும் இந்த திருமணத்தினால் இயல்பாய் இருப்பான் என்று தான் இந்த திருமணம் நடக்கவே சம்மதம் சொல்லி இருந்தார்.
அவர்களே தங்கள் வாழ்க்கையை தகவமைத்துக் கொள்வார்கள் நாம் தலையிட்டால் அது வேறு விதமாக முடியலாம் அதனால் பொறுமையாக இருப்போம் என்று நினைத்தார்.
….. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super super super super super super waiting for next update