Loading

    இரு இணைகளும் பேசிக் கொண்டிருக்கும் போதே அகிலனும் சுதாகரனும் வந்து விட்டவர்கள் இவர்கள் பேச்சையும் கேட்டிருந்தனர்.

    ‘போச்சு’என்று முனகியபடி நின்றாள் தேஜா.

    “இப்ப என்ன அருணுக்கும் பிரதிக்கும் புடிச்சு இருக்கு உனக்கும் யுகாவுக்கும் புடிச்சு இருக்கு அதானே தேஜு நீ கவலையை விடு வீட்டில் பேசி உங்க கல்யாணத்தை நடத்த வேண்டியது என் பொறுப்பு”என்றான் சுதாகரன் மிடுக்காக.

    “மச்சான் அது வந்து”என்று பேசப் போனவனை தடுத்தாள் தேஜா.

    “அமைதியா இருங்க நான் உங்களுக்கு சொல்றேன்”என்று அவன் காதில் கிசுகிசுத்தவள் “நீங்க சொன்ன மாதிரி தான் ண்ணா நீங்க தான் எங்களை சேர்த்து வைக்கணும் வீட்டில் பேசணும்”என்று தேஜா கூற அப்போதே பரபரப்பாகி விட்டான் அவன்.

    “ஏ தங்கச்சியை சொன்ன பெறவு நிப்பேனா நானு வெள்ளென தாத்தன் கிட்ட பேசிப்போட மாட்டேன் மாப்ள எதுக்கும் கலங்காத மச்சான் நான் இருக்கேன்”என்ற சுதாகரன் அகிலனிடம் “என்னடா அகி”என்று அவனையும் ஆதரவிற்கு அழைக்க அண்ணனோடு இணைந்து தன் தமக்கைகளை அவரவர்க்கு பிடித்தவரோடு இணைத்து வைக்க முடிவு செய்தான் அகிலன். அண்ணன் தம்பி இருவரும் அங்கிருந்து சென்று விட அருணும் யுகாவும் ஒரு பக்கமாய் அமர்ந்தனர்.

    “அருண் இப்ப என்னடா செய்றது”என்று யுகா கேட்க

    “நம்ம பேச்சு இங்கே எடுபடாது நடக்கிறது நடக்கட்டும்”என்று அருண் சொல்லி விட்டு எழுந்து சென்றான்.

    “ரொம்ப ஓவரா பண்ணாதீங்க பிரசாத்”என்று சொல்லியபடி பிரதன்யாவும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.

    தேஜா அங்கேயே நின்றவள் பின் யுகாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

    “போய் தூங்கு அஸ்வி டைம் ஆகுது”என்றவன் வானத்தையே வெறித்து பார்த்தான்.

    “உங்களுக்கு ஏன் மேரேஜ் இஷ்டம் இல்லை னு எல்லாம் கேட்க மாட்டேன். ஏதாவது ரீசன் இல்லாம இப்படி பேச மாட்டீங்கன்னு புரியுது. பட் இந்த மேரேஜ் நடந்தா அவங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருப்பாங்க”என்றாள்.

    “அருணுக்கும் மேரேஜ் ல இன்ட்ரெஸ்ட் இல்லை அஸ்வி”

    “ப்ப்ச் அவருக்கு கடன் பிரச்சினை அதனால் தான் மேரேஜ் வேண்டாம் னு சொல்றாரு இன்னொன்னு மகிழன் மத்தபடி பிரது மேல அவருக்கு க்ரஷ் இருக்கு”

    “எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற”

    “அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க வாட்சப்பில் அடிக்கடி கால் பண்ணி பண்றது பிரதின்னாலும் அவர் அவளை அவாய்ட் பண்ணவே கிடையாது. பிடிக்காம தான் அவ என்ன சொன்னாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாரா”என்று வினவ

    “அப்புறம் ஏன் நீ அவனை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்ச”என்று அவளை மடக்கினான்.

    “எனக்கு அப்போ இது ஸ்ட்ரைக் ஆகலையே அவங்க வாட்சப் சாட் ஜஸ்ட் ஓபன் பண்ணவும் தான் புரிஞ்சுது. என் தங்கச்சி ஆசையாவது நடக்கட்டும் யுகி.”என்றாள் இறைஞ்சுதலாக

    “சரி அப்போ வீட்டில் பேசி அவங்க ரெண்டு பேர் மேரேஜையும் பண்ணி வைக்கட்டுமே”என்று சொல்ல

    “ம்ம்க்கும் ஏற்கனவே என் பேரன்ட்ஸுக்கு நான் ஏதோ வாழ்க்கையை இழந்து நிற்கிற மாதிரி ஒரு பிம்பம் இருக்கு இதில் இந்த ப்ரபோசலும் கேன்சல் ஆகி பிரதிக்கு மேரேஜ் நடந்தா மொத்தமா உடைஞ்சு போயிடுவாங்க”என்றாள் வருத்தமாக

    “சரி இப்போ என்ன தான் சொல்ல வர்ற”என்றான் சலிப்பாக

    “நாம மேரேஜ் பண்ணிக்கலாம்”என்றாள் சட்டென.

    “லூசு மாதிரி பேசாதே அஸ்வி. எனக்கு மேரேஜ் கான்செப்ட் செட் ஆகாது.”

    “சரி அப்போ பேசி வச்ச மாதிரி பிரதுவை கல்யாணம் பண்ணிக்கோங்க”

    “தேஜஸ்வினி”என்று அதட்ட

    “வேற என்ன தான் செய்ய சொல்றீங்க. எனக்கும் மேரேஜ் இப்போ வேண்டாம் னு தான் தோணுது அதுவும் இப்படி வேண்டாம் னு தான் தோணுது. ஆனா வேற வழி. இந்த கல்யாணம் நடந்தா அவங்க ஆசை நிறைவேறும் அத்தையோட ஆசை எங்கப்பா அம்மாவோட ஆசை கனவு எல்லாம் நிறைவேறும். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க இப்ப என்ன ஆஃப்டர் மேரேஜ் நமக்குள்ள செட் ஆகலைனு சொல்லி டிவோர்ஸ் பண்ணிக்கலாம்”

    “ப்ப்ச் எடுத்ததும் அபசகுனமா பேசாதே”என்றான் அதட்டலாய்

    “நீங்க தான் பேச வைக்கிறீங்க எனக்கு என் சிஸ்டர் ஆசை ப்ளஸ் என் அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியம் உங்களுக்கு உங்கப்பா அம்மா ஆசை சந்தோஷம் முக்கியம் னா எதுவும் பேசாமல் ஒத்துக்கோங்க. இல்லை அவங்க பேசி வச்ச மாதிரி கல்யாணம் நடக்கும் உங்களுக்கு பிரது கூடவும் எனக்கு அருண் கூடவும்”என்றாள் சலிப்பாக

    “வேற வழியே இல்லையா”

    “இல்லாம தான் தம் கட்டி பேசிட்டு இருக்கேன்”

    “தலைவிதி எதுவோ நடக்கட்டும்”என்றான் கடுப்பாக

    “உங்களுக்கு நான் வேற ஒருத்தரை லவ் பண்ணது உறுத்தலா இருக்கா அதான்”எனும் போதே அவள் தலையில் குட்டியவன் “பைத்தியம் பப்பி லவ்க்கெல்லாம் படம் காட்டாத போ”என்று எழுந்து கொண்டவன் அவளுக்கும் ஒரு கை கொடுத்து எழுப்பி விட்டு”நாளைக்கு நாமளே பேசுவோம் அட்லீஸ்ட் அவங்களாவது ஹாப்பியா இருக்கட்டும்” என்றான்.

    “உங்களை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் யுகி”என்றவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான்.

    “லெட் ஸீ. ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை”என்றான் சங்கடமாக.

    “அவங்களுக்காக”என்று முடித்தாள் அவள்.

    அடுத்தவர்களுக்காக தியாகம் போல் ஒரு திருமணமா அதுவே யுகாவின் மனதிற்கு பிடித்தமில்லை. அவனின் தவித்த மனது லயாவை தேடியது.

    எப்படியும் உறங்க முடியாது என்றெண்ணியவன் நூலக அறைக்குள் தான் நுழைந்தான்.

    ஏதோ ஒரு புத்தகம் வாசிப்போம் என்று நெருங்கியவன் விழிகளில் பட்டதோ காதல் நாவல் ஒன்று.

    தெளிந்த நீரோடை போல இருந்த மனதை ஆர்ப்பரிக்கும் அலையாய் வாரிக் கொண்டவளின் நினைவில் நெஞ்சத்தை தேங்க வைத்தான். தானாய் விழி மூடி தவிப்பாய் தன்னவளை தேட மூடிய விழிகளுக்குள் நளினமாய் வந்து நின்றாள் தேஜஸ்வினி.

    திடுக்கிட்டு விழித்தவனுக்கு மனது பதைபதைக்க புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

    நால்வரும் ஏதேதோ சிந்தனையில் உறக்கம் தொலைத்திருக்க விடிந்த பொழுதிலேயே கூட்டத்தை கூட்டி விட்டான் சுதாகரன்.

    வெங்கடாசலத்திற்கும் கெஜலட்சுமிக்கும் சூடாக செய்தியை வாசித்திருக்க விளைவு பத்மநாபன் திரிபுரசுந்தரி கந்தசாமி சாரதா கிருஷ்ணன் அனைவரும் அவர்கள் முன்னே வந்து நின்று விட்டனர்.

    அனைவரும் ஒருவரை ஒருவர் செய்வதறியாமல் திகைத்து பார்த்து நிற்க

    “என்ன செய்யலாம் பத்து நீங்க உங்க முடிவை சொல்லுங்க மருமகனே”என்று கிருஷ்ணனையும் கேட்டவர் “கந்தா நீ என்ன சொல்ற”என்றார்.

    “என்ன சொல்றதுன்னு தெரியலையே மாமா. ஏதுக்கும் சாதகம் பார்க்கலாமா”என்று கேட்க

    “அதை நாம முன்னவே செய்யலையேய்யா இப்ப அவங்க நாலு பேத்துக்கும் மாத்தி மாத்தி பிடிச்சு இருக்கப்ப ஜாதகம் பார்த்து அதுல ஏதாவது கோளாறுனா நிறுத்தவா முடியும்”என்றார் வெங்கடாசலம்.

    “அதுவும் சரிதான் மாமா.”என்றார் கிருஷ்ணன்.

    “எனக்கு ஜாதகத்தை பார்த்து வச்சுட்டா நல்லது னு தோணுது மாமா”என்று திரிபுரசுந்தரி சொல்ல

    “என்ன சின்னம்மா நீங்க…இதை இப்பவா யோசிப்பாங்க அவங்களுக்கு எப்படி புடிக்குதோ அப்படி கட்டி வைங்க மனசை விடவா பொருத்தம் வந்து நிக்க போகுது. ஏதோ இந்த மட்டுக்கு அவங்க விருப்பத்தை பேசிட்டாங்களேனு நினைங்க. சொல்லாம உங்க விருப்பத்துக்கு கட்டுப்பட்டு பிடிச்ச வாழ்க்கையை வாழாம ஏனோ தானோ னு வாழ்ந்தா சரியா இருக்குமா”என்றான்.

    “சுதா சொல்றதும் சரிதான் அந்த மாதிரி பிடிக்காம கல்யாணம் பண்ணி இருந்தா நாலு பேரு வாழ்க்கையும் வீணா போயிருக்குமே அதுக்கு இது எவ்வளவு தேவையோ எந்த ஜாதகமும் பார்க்க வேண்டாம் எதையும் யோசிக்க வேண்டாம் எல்லாம் அந்த மீனாட்சி பாத்துக்குவா”இன்று கஜலட்சுமி சொல்லிவிட மற்றவர்களுக்கு மறுப்பு இல்லை

    பிறகு நால்வரையும் வரவழைத்து மீண்டும் திருமண பேச்சு வார்த்தையை துவங்க வெங்கடாசலம் அதட்டலாக,” இப்பவே நல்லா தெளிவா முடிவு பண்ணி சொல்லுங்க. சும்மா நாளைக்கு வந்து உங்களால தான் நாங்கள் இவ்வளவு கஷ்டப்படுறோம் எங்களுக்கு பிடிக்காத வாழ்க்கை வாழறோம் சொல்லிரக்கூடாது “என்றார் எச்சரிக்கையாக

    சுதாகரனின் தந்தையும் அதையே கூற நால்வருமே,” எங்களால் எந்த பிராபளமும் வராது” என்று உத்தரவாதம் கொடுக்க பெரியவர்கள் முகத்தில் சொல்லொணா மகிழ்ச்சி பிறந்தது.

    அதன் பிறகு விரைவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று தேதியை பார்க்க அடுத்த மூன்று வாரங்களில் முகூர்த்த தேதி வரவும் அதையே தேர்வு செய்து அப்போதே இருவரது நிச்சயத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவு எடுத்திருந்தனர். அனைவருக்கும் பொதுவாய் சென்னையில் மண்டபத்திலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், ஊருக்கு திருமண ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்றும், பேசி இருந்தனர் அதன்படியே அனைவரும் மீண்டும் அவரவர் வேலைக்கு திரும்ப மறுபடியும் நிச்சய விழா எப்போது வரும் என்று காத்திருப்போடு கிளம்பிச் சென்றனர் அனைத்து உறவுகளும்.

    அருணிற்கு தான் அதிக கவலையாக இருந்தது. மகிழனிடம் இதை எப்படி சொல்வது அவன் எவ்வாறு தன்னை எடுத்துக் கொள்வான். இத்தனை நாட்களும் தன்னை தந்தை என்று நினைத்துக் கொண்டிருப்பவனிடம் புதிதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப் போகிறாள் என்று எவ்வாறு எடுத்து உரைப்பது என்று குழம்பிப் போய் நின்றான்.

    கந்தசாமியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருக்க அவரே அவனை அழைத்துப் பேசினார்.

    “என்னய்யா இன்னும் என்ன கொழப்பம் ஒனக்கு”என்று நேரடியாக கேட்க

    “யப்பா மகிழனை நினைக்கவே இல்லை நம்ம. அவன் எப்படி எடுத்துக்குவானோன்னு இருக்கு. என்ன சொல்லி புரிய வைக்குறது அவனுக்கு. பயமா இருக்குப்பா பிள்ளை ஏதாவது தப்பா நினைப்பானோன்னு” என்றான் தவிப்பாக

    “எய்யா அவன் சின்ன புள்ளை அவன் என்னத்த நினைப்பான்”எனும் போதே அருணின் கைபேசி ஒலிக்கிறது என்று மகிழன் கைபேசியை எடுத்து வந்து கொடுத்தான். அழைப்பு நின்று விட்டது என்று அருண் நினைக்க மகிழனோ “ப்பா பெதர்”என்று நீட்டியவன் பின் தலையை இடவலமாக ஆட்டி”ப்ரதுமா”என்றான் தெளிவாக

    அவன் சொன்னதில் தந்தையும் மகனும் திகைப்புடன் பார்க்க கைபேசியில் பிரதன்யா ஹலோ ஹலோ மகி என்று சத்தம் போட்டு கொண்டிருந்தாள்.

    “மகி யார் னு சொன்ன”என்று அதிர்வாய் கேட்க

    “பிரதுமா”என்றான் அவன் திரும்பவும்.

    “அப்படி சொல்லு சாமி”என்ற கந்தசாமி பேரனை தூக்கிக் கொண்டு செல்ல அருண் பிரதன்யாவிடம் “ஹலோ”என்றான்.

    …. தொடரும்

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super super super