Loading

    சுதாகரனுக்கு தாய்மாமன் மகளையே பேசி முடித்து இருக்க அவளும் இவர்களோடு இணைந்து விட்டாள். திருமண வீடே கலகலத்துக் கொண்டிருந்தது. 

    

    நாத்தனார் ஜம்பம் காட்டுவேன் என்று ப்ரதன்யா தான் அங்கே அலப்பறை கூட்டிக் கொண்டிருந்தாள்.  

    

    

    “நீ செய்த்தா ஒனக்கு இல்லாத உரிமையா ஏலே சுதா ஒழுங்கா எம்மவ கேட்கறத தந்தா தான் நாத்தி முடிச்சு போடுவா”என்று சித்தி முறையில் இருந்தவர் வேறு ப்ரதன்யாவிற்கு ஆதரவாய் பேச

    

    

    “பிரதி நா தேஜாவை நாத்தி முடிச்சு போட சொல்ல போறேன் அதுதேன் எதுவும் கேட்காது”என்று மாப்பிள்ளை சுதாகரன் வேறு வம்பு வளர்த்துக் கொண்டிருக்க அந்த இடம் அனைவரின் சிரிப்பில் குலுங்கியது.

    

    “அஸ்வி நீ ஏன் விட்டுத் தர்ற உன் பங்கை கேளு”என்று யுகா சொல்ல 

    

    “எங்கண்ணன் எனக்கு செய்ய வேண்டியது தானே செய்வான் இன்னைக்கு அவனுக்கான நாள் அதனால நான் அவன் கட்சி”என்றாள் தேஜா.

    

    “பார்றா”என்று சிரித்தனர் அருணும் யுகாவும்.

    

    கேலி கிண்டல்களோடு சுதாகரன் சடங்குகளை செய்து முடிக்க இடையிடையே வெட்கி சிவந்தான் இளைய பட்டாளம் ஏதாவது சொல்லி அவனை வெட்கப்படவும்,’ விடுங்களேன்டா’ என்ற இறைஞ்சுதலோடும் தான் செய்ய விட்டனர்.

    

    பாரம்பரிய முறைப்படி தான் திருமணம் நடைபெற்றது. புதிதான எந்த பழக்கவழக்கங்களையும் அவர்கள் செய்யவில்லை. மேளதாளம் மட்டும் தான் அங்கே பிரதானமாய் இருக்க ஆடல் பாடலோ வேறு எதுவுமோ இல்லை. 

    

    

   ப்ரதன்யா நாவல்பழ நிற புடவையிலும் தேஜா அடர் காப்பிக் கொட்டை நிறத்திலான புடவையிலும் இருந்தனர். இருவருமே அமர்த்தலான அழகுடன் அமரிக்கையாக நிற்க அதுவே பெற்றவர்களுக்கு நிறைவாய் இருந்தது. சென்னையில் ஏதாவது விசேஷம் என்றால் இருவரும் லெஹங்கா அல்லது டிசைனர் சுடிதார் மட்டும் தான் அணிந்து செல்வர். இப்போதோ புடவை அணிந்திருக்க நகைகளையும் அதற்கேற்றாற்போல் போட்டு விட்டிருந்தார் திரிபுரசுந்தரி.

    

    “என்ன பெரியாத்தா அடுத்தடுத்து விசேஷம் பண்ணனும் போலிருக்கே பேத்திக ரெண்டு பேரும் கலியாண வயசுல நிக்குதாக. மாப்ள எதுவும் பாக்குறீகளா…நம்ம வளசல்ல கூட பயலுக இருக்காங்க”என்று பேச்சுவாக்கில் உறவினர்கள் சொல்லி செல்ல 

    

    “என் ஓர்ப்படி பேரன் இருக்கான் அதுவும் போக நம்ம வளசல்ல மாப்ளைக்கா பஞ்சம். சீக்கிரம் அடுத்த கலியாணம் தான்”என்ற கெஜலட்சுமி திரிபுரசுந்தரியை அழைத்து பேத்திகளுக்கு திருஷ்டி எடுக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார்.

    

   இங்கே உணவுக்கூடத்தில்”எதுவுமே சொல்லலை நீங்க”என்று அருணிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ப்ரதன்யா.

    

    “என்ன சொல்லணும் தனு”என்று புரியாமல் அவன் கேட்க 

    

    “ஃபர்ஸ்ட் டைம் சாரி கட்டி இருக்கேன்”என்று நிறுத்த விநோதமாகப் பார்த்தான் அவளை.

    

    திருவிழா முடிந்து வந்ததில் இருந்து அவ்வபோது கைபேசியில் குறுஞ்செய்தி அழைப்பில் என்று பேசுகிறார்கள் தான் ஆனால் இது போல எதுவும் பேசவோ கேட்டதோ இல்லை. அருண் பொதுவாக பேசுவதோடு சரி ‌. 

    

    இதென்ன புதிதாக தன்னிடம் அபிப்பிராயம் கேட்கிறாள் என்று குழம்பிப் போய் நின்றான்.

    

    “ஹலோ என்ன”என்று அவள் அவன் முகத்தின் நேராக சொடுக்கிட

    

    “ஹ்ம்ம் குட் தனு நல்லா இருக்கு”என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

    

    ப்ரதன்யாவிற்கு சப்பென்று ஆனது.

    

    **”*****

    

    தேஜா தாம்பூல பைகளை எடுத்து கொண்டு வர திருமணத்திற்கு வந்திருந்த பிரகாஷ் அவளைத் தனியே பிடித்து விட்டான்.

    

    “ஏன் தேஜ் என் கிட்ட பேச மாட்டியா…என்னோட பக்கத்தை கூட நீ கேட்கலை”என்றான் பெரிய குற்றம் போல

    

    “ப்ப்ச் உங்க கிட்ட நான் ஏன் பேசணும். தள்ளி போங்க இந்த மாதிரி எல்லாம் என் கிட்ட பேசற வேலை வேண்டாம்”என்று எச்சரித்தாள்.

    

    “தேஜ்”என்று அவன் அழைக்கும் போதே அருண் வந்துவிட்டான்.

    

    “நீ போ தேஜா”என்று அவளை அனுப்பி வைத்தவன் “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா பிரகாஷ் எதுக்கு அவளைத் தொந்தரவு செய்ற”என்று கோபத்துடன் கேட்க

    

    “ப்ம்ச் ஜஸ்ட் பேச தான் டா செஞ்சேன்”என்றவன் “நீ என்ன அவ கிட்ட பேச வந்தாலே காவலுக்கு வந்து நிக்கிற உனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா”என்றான் கிண்டலாக.

    

    “அப்படி தான்னு வச்சுக்கோ அவளை இனிமே தொந்தரவு செய்றதைப் பார்த்தேன் யோசிக்கவே மாட்டேன் பளார்னு விட்ருவேன்”என்று எச்சரிக்க பிரகாஷ் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து அகல அருண் சொல்லியதை ப்ரதன்யா கேட்டிருந்தாள்.

    

    சட்டென்று அவன் சொல்லியதில் நெஞ்சில் பாரம் ஏறியது போல உணர்ந்தாள். கண்களில் நீர் நிறைய யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள் பிரதன்யா.

    

    

     “ப்ரது”என்று தேஜா அவளின் தோளைத் தொட்டு அழைக்க சட்டென விசும்பியவள் அங்கிருந்து செல்ல தேஜா தங்கை ஏன் அழுகிறாள் என்று புரியாமல் விழித்தாள்.

    

    

    “தேஜாக்கா அம்மா கூப்பிடுறாங்க”என்று அகிலன் அழைக்க தங்கையிடம் பிறகு பேசிக் கொள்வோம் என அகிலனோடு சென்றாள்.

    

    திருமணச் சடங்குகள் முடிந்து அனைவரும் வீடு திரும்பி இருக்க அன்றிரவே மணமக்களை அறைக்குள் அனுப்பி விட்டு தேஜஸ்வினி திருமணம் பற்றி பெரியவர்கள் பேசத் துவங்கி விட்டனர்.

    

    “பிள்ளைக்கு வயசு ஆகுது சுந்தரி இப்ப செய்யாம அப்புறம் எப்ப செய்ய இன்னிக்கு பாத்த சொந்தம் அத்தனையும் எம்பேத்திகளுக்கு எப்ப கல்யாணம் னு தான் கேட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் செயலா இருக்கும் போதே பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்க நினைக்கிறோம் என்ன சொல்றீங்க”என்று வெங்கடாசலம் கேட்க 

    

    “எங்களுக்கும் சம்மதம் தான் ஐயா. மாப்ளைகளும் நம்ம வளசல்ல இருக்கும் போது வெளியே தர வேணாம் னு தான் யோசிக்கிறோம் அதுக்கு தகுந்த மாதிரி கந்தசாமி மச்சானும் பொண்ணு கேட்கிறாரு சாரதாவும் கேட்குது. என்ன பண்றதுனு தான் கொழப்பமா இருக்கு”என்றார் பத்மநாபன்.

    

    “இதுல என்ன கொழப்பம் கொழுந்தனாரே ரெண்டு மவளை வச்சு இருக்கீங்க கட்டிக் குடுக்கலாம் அருணுக்கும் யுகாவுக்கும் என்ன கொறையாம்”என்று சுதாகரனின் அம்மா கேட்க

    

    “மருமகனுகளை பத்தி ஒண்ணும் இல்லை மயினி. ரெண்டு பேரும் தேஜாவை மருமவளாக்க தான் கேட்குறாங்க அதேன் யோசிச்சுட்டு இருக்கேன்”என்று பத்மநாபன் கூற கந்தசாமிக்கோ கவலையானது.

    

    “அண்ணே எங்களுக்கு தேஜான்னாலும் சரிதான் ப்ரதுன்னாலும் சரி தான். உன் விருப்பம்”என்று சாரதா கூறி விட 

    

    “பெறகென்ன பத்து பெரியவளை அருணுக்கும் சின்னவளை யுகாவுக்கும் கட்டிக் குடுக்கலாம். சரி தானே கந்தா”என்றதில் “சரிங்க மாமோய் எனக்கு சம்மதம்”என்றார்.

    

   “நாளைக்கு விருந்தப்ப இதான் மாப்ள இதான் பொண்ணுனு சொந்தக்காரவங்களுக்குச் சொல்லி வைப்போம் அப்பறம் நல்ல நாள் பார்த்து மத்ததை பண்ணிக்கலாம்”என்று கெஜலட்சுமி கூற மற்றவர்கள் ஆமோதிப்பாய் ஏற்றுக் கொண்டனர்.

    

    அனைவரும் படுக்கச் செல்ல தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் தேஜா ப்ரதன்யா இருவரும் படுத்திருந்தனர்.

    

     கண்ணீர் கோடுகள் காய்ந்த கன்னத்தில் தெரிய தங்கை அழுதிருக்கிறாள் என்று புரிந்தது தேஜாவிற்கு.

    

    ஏன் இந்த அழுகை என்ற காரணம் தான் புரியவில்லை அவளுக்கு.

    

    கேட்டால் எதுவும் இல்லை என்கிறாளே என்ற ஆதங்கம் தேஜாவிற்கு.

    

    தனது கைபேசியை எடுத்து சார்ஜரில் போட்டவள் அருகிலிருந்த தங்கையின் கைபேசியைப் பார்த்து விட்டு நகர முற்பட்டு பின் அதனை திறந்து பார்த்தாள். அருணின் புகைப்படம் வரவே திகைத்து நின்றாள் பெண்.

    

    

  “அருண் ஃபோட்டோ”என்று முனகி விட்டு பின் “சாதாரணமாக பேசி இருப்பா எதுக்கு எடுத்தாலும் சந்தேகப்படாத தேஜு.”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வந்து படுத்து விட்டாள்.

    

    

    *********

    

    “யுகா தூங்கிட்டியா”என்று அருண் கேட்க 

    

    “இல்லைடா சொல்லு”என்று அவன் பக்கமாக திரும்பி படுத்தான் யுகாதித்தன்.

    

    “அந்த பிரகாஷ் இன்னைக்கு”என்று காலையில் நடந்ததை விவரிக்க 

    

    “அவன் என்ன லூசா கல்யாணம் ஆகி பிள்ளையே பெத்துட்டான் இப்போ எதுக்கு இவளை தொல்லை பண்றான்”

    

    “ஹ்ம்ம் அதையும் விசாரிச்சேன் அவனுக தெரு பசங்க கிட்ட.”

    

    “என்ன சொன்னானுக”

    

    “அவன் பொண்டாட்டி கூட ஏதோ பிரச்சினை போகும் போல அதனால பழைய லவ்ஸை புதுப்பிக்க நினைக்கிறாரு தலைவரு”

    

    “செருப்பால அடிக்கணும் நாயை எவ்வளவு திமிர் பாரேன்”என்று கொந்தளித்த யுகா “விருந்து முடிந்து அவனை பேசிக்குவோம் நாலு வச்சா தான் அடங்குவான்”என்றான்.

    

    “வீட்டுக்கு தெரியாமல் தான் மிரட்டி வைக்கணும் இல்லாட்டா சுதாகரன் போய் பிரச்சினை பண்ண வாய்ப்பு இருக்கு. அதான் உன் கிட்ட சொன்னேன் தேஜா கிட்டவும் உஷாரா இருக்க சொல்லணும்.”

    

    “இவ ஏன் டா அவன் கிட்ட பேசுறா”என்று சலிக்க

    

    

    “வழி மறிச்சு பேசுனான்டா தேஜா வள்ளுனு விழுந்தா அதுக்குள்ள நான் போயிட்டேன். இருக்கிற கடுப்புக்கு அடிச்சாலும் அடிச்சுடுவா ஆனா நாளைய பின்ன ஏதாவது வம்பு வளர்த்து வச்சான்னா அவ கல்யாணம் இதெல்லாம் பாதிக்குமே அதுக்கு தான் யோசிச்சேன். என்ன செய்யலாம் சொல்லு”என்று அருண் கேட்க 

    

    “பேசாமல் நீயே மேரேஜ் பண்ணிக்க டா ப்ராப்ளம் சால்வ்ட்”என்று யுகா சிரிக்கவும் 

    

    “யார் நானு அட ஏன் டா நீ வேற எனக்கு இருக்கிற பிரச்சினைக்கு கல்யாணம் ஒண்ணு தான் குறை”என்றவன் “இவ்வளவு பேசுறியே நீ தான் மாமன் மகளை மணக்குறது”என்றான் கிண்டலாக.

    

    “ம்ம்க்கும் ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம் அதை விட எனக்கு மேரேஜ் இன்ட்ரெஸ்ட் கிடையாது”என்றவன் மனதில் வந்து நின்றாள் கவிலயா.

    

    இருவரும் பேசியபடியே உறங்கிப் போக மறுநாள் காலை விருந்து தடபுடலாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

    

    அதற்குள் அருணிடம் கந்தசாமி விஷயத்தை கூற தேஜாவை பெண் கேட்டு விட்டேன் இன்று பேசி முடிக்க போகிறேன் என்று சொல்ல அவன் முடியவே முடியாது என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

    

    “நான் இருக்கறதால தானே இப்படி பண்ற நானும் என் பேரனும் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறோம் நீ தனியாவே இருப்பா”என்று கந்தசாமி சொல்லி விட்டு செல்ல தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான் அருண்.

    

    

    அதே நிலை தான் யுகாதித்தனுக்கும்.

    

    “ம்மா யோசிக்கவே மாட்டீங்களா ப்ரது சின்ன பொண்ணு ரெண்டு பேருக்கும் எட்டு வருஷம் வித்தியாசம் அதை விட எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்”என்று குதித்தான்.

    

    “அப்போ எங்களையும் நீ மறந்துடு நாங்க எங்கேயாவது போறோம்”என்று சாரதா சொல்ல “என்னவோ செஞ்சு தொலைங்க ஆனா ப்ரது வேண்டாம் அவ்வளவு தான் சொல்வேன்”என்றான் கண்டிப்புடன்.

    

    “அதான் ஏன் வேண்டாம்”என்று கேட்க 

    

    “ம்மா வேற பொண்ணை பாருங்க பிரதுவை நான் அப்படி நினைக்கவில்லை”என்று சொல்ல

    

    “நாங்க பொண்ணு கேட்டுட்டோம்”என்று சாரதா முடிக்க தலையை பிய்த்துக் கொள்ளாத குறை தான் அவனுக்கு.

    

    

    அனைவரும் சிறிது நேரத்தில் வந்தமர பத்மநாபன் அனைவரிடமும் தேஜஸ்வினியை அருணுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக கூறினார். பிரதன்யா திகைப்பாய் அருணைப் பார்த்திட அவன் அமைதியாக நின்றான்.

    

    ….. தொடரும் 

    

    

    

    

    

    

    

    

    

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்