Loading

    வேந்தன் மதுவுடன் தனது காரில், ஹாஸ்பிடலில் இருந்து ரிஜிஸ்டர் ஆபிஸை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

“மிஸ் மதுரம் உங்களோட ஐடி ப்ரூப் ஏதாவது, இப்போ உங்ககிட்ட இருக்கா?”

“இருக்கு சார், சேஃப்டிக்காக எப்பவுமே என்னோட வோட்டர் ஐடியை, என் கையில தான் வச்சிருப்பேன்.”

    “ஓகே அதை கொடுங்க, நான் ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்துடறேன், இதையும் சேர்த்து தான், சப்மிட் பண்ண வேண்டி இருக்கும்.”

   வேந்தன் அவளது ஐடியை எடுத்துச் சென்று, இரண்டு காபி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, வீட்டில் எடுத்த அவளது புகைப்படத்தையும், நான்கு காப்பி போட்டோ பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.

   பிறகு இருவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி சென்றனர். தன்னிடம் இருந்த அவளின் சான்றிதழ்களில், மதுவின் கையப்பத்தை பெற்றுக் கொண்டான்.

“மிஸ் மதுரம் நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் உள்ள போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்துடறேன். அதோட வேற என்ன டீடெயில்ஸ் எல்லாம் தேவைப் படுதுன்னு கேட்டுட்டு வந்துடுறேன்.”

  வேந்தன் தன்னிடம் தயாராக இருந்த ஒரு விண்ணப்பத்தை, கொண்டு வந்த சான்றிதழோடு சேர்த்து எடுத்துக் கொண்டு, அங்கிருந்த அலுவலகரிடம் கொடுத்தான்.

  மறக்காமல் இன்னொரு விண்ணப்பத்தையும் அங்கிருந்து பெற்றுக் கொண்டு, மதுவிடம் வந்தான்.

  இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க. நாம போய் சைன் போட்டா போதும்.

“நாம எதுக்காக இப்பவே சைன் பண்ணனும்? அவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது நாம கையெழுத்து போட்டா போதுமில்ல. அதுமட்டுமில்லாம  லாவண்யாக்காக தானே, நான் இங்க வந்து இருக்கேன், அப்படி பார்த்தா அவங்களோட சைன் தானே நான் போட வேண்டி இருக்கும்?”

   யோசிக்க ஆரம்பிச்சிட்டாளா, இவளை இப்படியே யோசிக்க விடக்கூடாது. தப்பாச்சே,

   “அப்ளிகேஷன்ல லாவண்யா தான் கையெழுத்து போடணுமுன்னு இல்ல, சாட்சிகள் கூட அந்த அப்ளிகேஷன்ல கையெழுத்து போடலாம். ரிஜிஸ்டர் பண்ற பைல்ல தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சைன் போடணும்.”

” ஓ சரி சார், ஆமா என்ன நாம மட்டும்தான் இங்க இருக்கோம்? உங்க பிரண்டு ஒருத்தரை கூட கண்ணுல காணமே?”

“நான் ஆல்ரெடி கால் பண்ணிட்டேன், அவங்க வந்துட்டு இருப்பாங்க”

   அப்போது மூர்த்தி, வெற்றி மற்றும் சந்துரு மூவரும், தனித்தனியாக ரெஜிஸ்டர் ஆபீசுக்கு, ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒரே நேரத்தில் மூவரும் கேள்வி எழுப்பினர்

“நீங்க எங்கடா இங்க?”

“வேந்தன் தான் ஏதோ அவசரம்னு, என்ன வர சொல்லி இருந்தான். ஆமா வெற்றி நீ எங்க இங்க?”

“வேந்தன் என்னையும் இதே போல அவசரம்னு சொல்லி தான், வரச் சொன்னான். அப்போ மூர்த்தி உனக்கும் இதே டயலாக் தானா?”

  “பின்ன தனித்தனியாவா சொல்லி இருப்பான், ஏதோ அவசரம்னு கூப்பிட்டான். அங்க எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன், போய் பார்த்தா தானே தெரியும். திரும்ப கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கிறான். ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக வர சொல்லி இருப்பான்?”

  “அப்போ வேந்தன் உங்களுக்கும் கூப்பிட்டு இருந்தானா, சரி வாங்க போய் என்னன்னு பார்ப்போம்.”

  இவர்கள் உள்ளே நுழையும் போது மதுவும் வேந்தனும், ஒருவர் பின் ஒருவராக கைய்யப்பம் இட்டு கொண்டிருந்தனர்.

  வேந்தன் இவர்களுக்கு இடையே நடக்கும் பதிவு திருமணத்திற்கான சான்றிதழை, கடைசி பேப்பராக வைத்திருந்தான். அதனால் கையப்பமிட்டுக் கொண்டே வந்த, மதுவின் கண்களில் அது சரியாக விழவில்லை.

  ஆம் மதுவுக்கும் வேந்தனுக்கும் பதிவு திருமணம் தான் நடந்து கொண்டிருந்தது. முதலில் வேந்தன் அவளை காதலித்து, அவளின் சம்மதத்தோடு, உற்றார் உறவினர் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ளும் முடிவில் தான் இருந்தான்.

  ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வேந்தனுக்கு அழைத்த வெற்றி, குருந்த மரத்தின் அடியில் இருந்து, மண்ணெடுக்கப் போவதாக கூறிய செய்தியால், உடனே தமது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அதனால் அவளுக்கேத் தெரியாமல் அனைத்து வேலைகளையும் செய்தான்.

    அவளுக்கே தெரியாமல் அவளை திருமணம் செய்து கொள்வது, அவனின் மனதிற்கு சற்று வருத்தமாக தான் இருந்தது.

      என்ன செய்வது, ஒருவேளை அவளுக்கு பூர்வஜென்மம் ஞாபகத்திற்கு வந்துவிட்டால், நிகழ்காலத்தில் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்ற அச்சமே, அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது.

  அத்தோடு மோகினி பள்ளமும் மற்றொரு காரணமாகும். அவள் வெளிவரும் முன் தங்களது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தான்.

    அதுவே வேந்தனை மதுவிற்கு தெரியாமல், தங்களது திருமணத்தை இவ்வளவு விரைவாக, நடத்தி முடிப்பதற்கு முக்கிய காரணமாக ஆனது.

    வேந்தனை ஒரு பெண்ணுடன் ரிஜிஸ்டர் ஆஃபீஸில் கண்டு, அதிர்ந்து நின்ற நண்பர்கள் மூவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“டேய் மூர்த்தி யாருடா அந்த பொண்ணு?”

   “நான் சொன்னேன்ல அந்த கார் ஹெட் லைட், அதே பொண்ணு தான் இது. ஆனா இவங்க ரெண்டு பேரும் எப்போ எப்படி ஜோடி சேர்ந்தாங்கன்னு தெரியலையே?”

    நண்பர்கள் அவ்விடத்திற்கு வரும்போது, சரியாக மதுவிற்கு அவள் வீட்டில் இருந்து அழைப்பு வரவே, இவர்களிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு வெளியே ஃபோன் பேசச் சென்றாள்.

   “வேந்தா இங்க என்னடா நடக்குது? அந்தப் பொண்ணு இங்க என்ன பண்ணுது? அப்புறம் எங்களையெல்லாம் எதுக்கு இங்க வர சொல்லி இருக்க?”

       “ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போட்டோ எடுக்கவா வருவாங்க? மேரேஜ் பண்ணிக்க தான் வந்திருக்கோம். நான் மட்டும் தனியா பண்ணுனா அது எப்படிடா மேரேஜ் ஆகும். அப்புறம் சாட்சி கையெழுத்து போட மூணு பேர் வேணுமே, அதுக்காக தான் உங்க மூணு பேரையும் கூப்பிட்டேன்.”

   சரியாக அந்த நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுமாறு அலுவலகத்தில் இருந்து கூப்பிட,

“எப்படி? வந்து சாட்சி கையெழுத்து போடப் போறீங்களா, இல்ல இன்னும் என்னை நிக்க வச்சு, விசாரணை பண்ணிகிட்டே இருக்க போறீங்களா?”

      தன் நண்பனின் மேலுள்ள நம்பிக்கையில், அவனுக்காக சென்று சாட்சி கையெழுத்துகளை போட்டு விட்டு வெளியே வந்தனர்.

“வேந்தா இப்பவாச்சும் சொல்லு, அந்த புள்ள எப்ப இருந்து உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுது? முதல்ல நீங்க ரெண்டு பேரும் எப்போ எங்கடா பார்த்துக்கிட்டீங்க? எப்படா காதலிக்க ஆரம்பிச்சீங்க?”

“நான் எப்போ சொன்னேன், இது லவ் மேரேஜ்ன்னு.”

  ” எதே? என்னடா உளர்ற, அப்போ லவ் மேரேஜ் இல்லைன்னா, அப்புறம் எதுக்காக யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறீங்க? நீ அந்த முள்ளு காட்டுக்குள்ள போயிட்டு வந்ததிலிருந்து, நடந்துக்கிறது ஒண்ணுமே சரியில்ல வேந்தா.”

    தொலைபேசி அழைப்பை பேசி முடித்து வந்த மது இவர்களிடம் வந்து,

     “உங்கள்ல யார் சந்துரு?ஓஓஓ நீங்களா, கங்கிராட்ஸ் பிரதர் நிஜமாவே லாவண்யா ரொம்ப சூப்பர் கேரக்டர். அவங்க கிடைக்கிறதுக்கு நீங்க தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.

அவங்ககிட்ட பேசுனதுல இம்ப்ரஸ் ஆகித்தான், உங்களை முன்ன பின்ன தெரியலைன்னாலும் கூட, நானே உங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட வந்திருக்கேன்.”

  அவ்வளவுதான் நண்பர்கள் மூவரும் கரண்ட் கம்பியை மிதித்தது போல், ஷாக் ஆகி வேந்தனை பார்த்தனர்.

  அப்போது மறுபடியும் மதுவிற்கு அவள் தோழி வினுவிடம் இருந்து அழைப்பு வர, போனை ஆன் செய்து விட்டு, இவர்களிடம் தலையசைத்து வினுவுடன் பேச வெளியே சென்றாள்.

   “அவள பொருத்தவரைக்கும் இது சந்துருவோட கல்யாணத்துக்கு அப்ளிகேஷன் கொடுக்கிறோம்னு நினைச்சுட்டு இருக்கா, நீங்களா எதுவும் அவகிட்ட உளறி தொலைக்காதீங்க.”

   “டேய் இந்த விஷயம் தீபனுக்கு தெரிஞ்சா, அவனே நம்மளை கைது பண்ணிடுவாண்டா.”

     “அதனால தான், அவன சாட்சி கையெழுத்து போட கூப்பிடாம, உங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கேன்.”

   “டேய் சந்துரு, அனேகமா உன் கல்யாணம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் நடக்க போகுது.

  ஆனா என்ன, நீ ஜெயிலுக்குள்ள இருந்து, கையெழுத்து போட வேண்டி இருக்கும்.”

   “டேய் மூர்த்தி வாயை வெச்சு தொலைக்காதடா? ஏற்கனவே அவங்க அப்பனுக்கு தெரியாம, எப்படி கல்யாணத்தை முடிக்க போறோம்? அதுக்கு அப்பறம் எப்படி ஃபாரின்க்கு தப்பிச்சு போக போறோன்னு யோசிச்சி  பயந்துட்டு இருக்கறோம்.

    கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே, என்னை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைச்சிடுவ போலயே, இது உனக்கே நியாயமாடா வேந்தா?”

     சந்துரு தனது புலம்பலை மூர்த்தியிடம் ஆரம்பித்து, வேந்தனிடம் கேள்வியாக முடித்தான்.

    வேந்தன் தனது கையில் உள்ள இன்னொரு பைலை எடுத்து, சந்துருவிடம் கொடுத்தான்.

   “இதுல உன் கல்யாணத்துக்காக ரிஜிஸ்டர் பண்ண போற, அப்ளிகேஷன் இருக்கு.

       ஆல்ரெடி நானே ஃபில்லப் பண்ணிட்டேன். அதோட லாவண்யாவோட சர்டிபிகேட்டும் இதுல வெச்சாச்சு. உன்னோடது மட்டும் தான் பாக்கி. அதையும் வச்சு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணும் போது ஆபீஸ்ல கொடுத்துடு.”

     “வேந்தா நீ செய்யறது ஒன்னும் சரியில்ல. ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம, அவளுக்கு கட்டாய தாலி கட்டினது மாதிரி தான் இருக்கு, நீ இப்போ அந்த பொண்ணு கிட்ட நடந்துக்கிட்டது.

நீ அந்த பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யலைன்னாலும், அந்த பொண்ணுக்கு தெரியாம இப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறது ரொம்ப தப்பு.”

  “அந்த பொண்ணுக்கே உன்னை பிடிச்சிருந்தாலும், அவங்க பேரன்ட்ஸ் பத்தி நினைச்சு பார்த்தியா? அவங்க பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணும், எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணனும்னு எவ்ளோ கனவில் இருந்து இருப்பாங்க.”

   “வெற்றி நீ சொல்றதெல்லாம் சரிதான். அவங்க அப்பா, அம்மா  கண்டிப்பா என்னை ஏத்துப்பாங், அந்த அளவுக்கு பெர்பார்மன்ஸ் போட்டு இருக்கேன்.”

      “எது அவங்க அப்பா அம்மாவ உனக்கு தெரியுமா? அப்புறம் என்னடா பிரச்சனை, டேரக்டா பெரியவங்க மூலமாவே கல்யாணத்தை நடத்தி இருக்கலாம் இல்ல?”

   “இரு வெற்றி,வேந்தா நீ சொல்லு முதல்ல, அவங்க அப்பா அம்மா யாரு? நீ ஏதோ உள்குத்து வெச்சே பேசுற மாதிரியே இருக்கு.”

       “நீ மட்டும் தான் மூர்த்தி என்னை கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்க. மதுவோட அப்பா, நம்ம பூவு பாட்டியோட இரண்டாவது பையன் சிவராமன் அங்கிள் தான். இப்போ வடிவுப்பாட்டியும் பூவுப்பாட்டியும் அவங்க வீட்ல தான் இருக்காங்க.

   காலையில தான் கொண்டு போய் அங்கே விட்டுட்டு வந்தேன், ஒரு ரெண்டு நாள் அங்க இருப்பாங்க அதுக்குள்ள நான் இதெல்லாம் செட்டில் பண்ணிடுவேன்.”

     “அடேய் அது உன் மாமன் பொண்ணு தானடா, அப்புறம் எதுக்கு இந்த திருட்டு கல்யாணம்? ஆனாலும் மணப் பெண்ணுக்கு தெரியாம நடந்த, இப்படி ஒரு கல்யாணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லைடா!”

      “ஐயோ பேசி பேசியே என்னை டயர்ட் ஆக்கிடுவீங்க போல இருக்கே, இப்ப நிரஞ்சனா எதை காரணமா வச்சு ஓடிப் போய் இருக்கா? ஒரு வேலை அவ திரும்பி வந்தா? உடனே கல்யாணம் பண்ணனும்னு சொன்னா? பெரியவங்க என்னை வற்புறுத்தினால் என்னால அவங்க பேச்சை தட்ட முடியாது.

  ஆனால் இப்போ நடந்த கல்யாணத்தால கண்டிப்பா என்னால மதுவை விட்டுக் கொடுக்க முடியாது. இதை ஒரு காரணமா, அவங்க கிட்ட சொல்ல முடியுமில்ல. சரி சரி அவ வர்றா கொஞ்ச நேரத்துக்கு எல்லாரும் வாய மூடிக்கிட்டு இருங்க.”

         “இவங்க எல்லாம் ஏன் இப்படி திருதிருன்னு முழிக்கிறாங்க?”

   “அவங்க முழியே அப்படித்தான்.”

“சார் இங்க ஒர்க் முடிஞ்சுதா இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?”

   “முடிஞ்சுது மிஸ் மதுரம். நாம நேரா இனி ஆபீஸ்க்கு தான் போறோம். இனி இருக்க ஒர்க் எல்லாம் என் பிரெண்ட்ஸ் இவங்க இருந்து பார்த்துப்பாங்க. நான் உங்களை ஆபீஸ்ல விட்டுடறேன்.”

  “சார் எனக்கு ஒரு ஹாவ் டே லீவ் கிடைக்குமா? என் வீட்டில் இருந்து கூப்பிட்டாங்க கொஞ்சம் அர்ஜென்ட் போல.”

     “எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு லீவு இல்லாமையா. ஆபீஸ் போனதும், நீங்களும் உங்க பிரண்டும் கண்டிப்பா இன்னைக்கு லீவ் எடுத்துக்கலாம்.”

  “ரொம்ப தேங்க்ஸ் சார். ஆமா உங்க பிரண்டுக்கு தேங்க்ஸ் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா சார். இருந்தாலும் லாவண்யா மேடமோட அறிவுக்கும் அழகுக்கும் முன்னாடி இவர் கொஞ்சம் கம்மிதான்?”

   “அவன் அவனோட கல்யாண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளல, நீங்க வாங்க நம்ம கிளம்பலாம். அப்புறம் மிஸ் மதுரம் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிட்டு போலாமா ப்ளீஸ். ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு கிளம்பறோம், அதனால தான் கேட்டேன்.”

     மது சிறிது யோசித்து விட்டு, சரி என்று கூறினால்.

      வேந்தனும் மதுவும் ஒரு தலையசைப்புடன் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டனர்.

“என்னடா வெற்றி, அவன் பாட்டுக்கு நம்மள விட்டுட்டு போறான்.”

    “அடுத்து ஏதோ ப்ளான் போட்டுட்டான், அதுக்குள்ள நம்மளை இழுக்காம போறானே, அதுவரைக்கும் சந்தோஷப்படு.”

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. Super Marriage sis.. 🙂 Madhu ku therium pothu enna natakumnu theria aavalaka ullathu sis…

  2. மன்னவா என்ன இது திடீர் கல்யாணம் … மதுவுக்கு தெரிஞ்சா உங்க மண்டையை பிடிச்சு ஆஞ்சுடுவா …

    இப்போ எதுக்கு கோயிலுக்கு … தாலி கட்ட போறானோ … முன் ஜென்மத்து கதைய பார்க்க ரொம்ப பக்கத்துல வந்துட்டோம் போல …

    1. Author

      🤣🤣🤣கண்டிப்பாக உண்மை தெரியும் போது ஹீரோ நிலைமை கவலைக்கிடமாக தான்