Loading

அத்தியாயம் – 9

சிவப்பு நிற வேலைப்பாடுகள் நிறைந்த சிஃபான் சேலையில் அழகாக தயாராகிருந்தாள் நித்திலா,… அவள் அறையின் கதவை அடைந்த நேரம்….”எங்க போற பேபி” என்ற விக்ராந்தின் தூக்க கலக்க குரல் அவளை நிற்க வைத்தது,….

திரும்பியவள்,… படுக்கையிலிருந்து எழாமல் அப்போது தான் கண்விழித்திருந்த  விக்ராந்தை முறைப்பாக பார்த்தாள்,……

“ஏன் பேபி,… அப்படி பார்க்கிற, சரி வா” என அவன் கரம் நீட்டி அழைக்க, ‘நீ கூப்பிட்டா நான் வரணுமா’ என்ற பார்வை பார்த்தவள், கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியேறிவிட்டாள்,….

‘ம்ம்ம்ம்…. தப்பு பண்ணிட்டியே பேபி, நான் கூப்பிட்டும் அதை மதிக்காம போயிட்ட, ம்ம்.. உன்னை கவனிக்கிற நேரத்துல கவனிச்சிகிறேன்’ என எழுந்து தயாராக தொடங்கினான்….

கீழே சுமித்ராவுடன் சேர்ந்து காலை உணவை சமைக்கும் வேலையை செய்து கொண்டிருந்தாள் நித்திலா, சற்று நேரத்திற்க்கெல்லாம் உணவு தயாராகி விட, வீட்டில் உள்ள அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகியிருந்தனர்,….

“என்னமா நித்திலா,…. வந்ததுலருந்து என்கிட்ட மட்டும் ஒதுங்கியே இருக்க, என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல” வித்தார்த் அவளிடம் கேட்க,…. “இல்ல மாமா,… எந்நேரமும் நீங்க சுமி அக்காவை நினைச்சிட்டு இருக்கனால மத்தவங்க உங்க கண்ணுக்கு தெரியாம போயிடுறாங்க, நீங்க மறந்துடீங்கன்னு நினைக்கிறேன், நேத்து உங்களுக்கு நான் குட்மார்னிங் அண்ட் குட் நைட் சொன்னேன்” என்றாள் அவனை வாரிக்கொண்டு….

“உன்னை என்னவோன்னு நினைச்சேன்,  என்னையே கலாய்க்க ஆரம்பிச்சுட்ட, ம்ம்ம்… பண்ணு பண்ணு” என புன்னகையுடன் சொன்னவன்…. “எங்கம்மா என் தம்பியை காணோம்” என்றான் அவளை கூர்மையாக துளைத்து….

“வருவாரு மாமா” அவள் இயல்பான முகத்துடன் சொல்ல,… ‘இவ சாதாரணமா தான் இருக்கா, அப்போ அவன் நேத்து ஏதோ சொன்னானே, அதுக்கு அர்த்தம் என்னவா இருக்கும்’ என சிந்தனையில் அவன் இருந்த நேரம்,… “என்ன அண்ணா,… காலைலயே என்ன பலமான யோசனை” என கேட்டபடி வந்தமர்ந்தான் விக்ராந்த்….

‘எல்லாம் உன்னை பத்தி தான்டா’ அவன் மனதில் சொல்லிக்கொண்டு, வெளியே சிரித்து வைத்தான்,….

நித்திலா விக்ராந்திற்க்கு பரிமாறிவிட்டு சுமித்ராவுடன் எதிர்த்திசையில் வந்து நின்றுவிட்டாள், விக்ராந்தின் பார்வை நொடிக்கு ஒரு முறை நித்திலாவின் மீதே படர்ந்தது,,… அவனது பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல், ஏதோ ஒரு காரணத்தை கூறிவிட்டு அவள் சமையலறைக்குள் வந்து நின்று கொண்டாள்,….

கவிதா வெளியே சென்றிருப்பதால், சிங்கில் கிடந்த பாத்திரங்களை கழுவும் வேலையில் ஈடுபட்டாள்…. அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் தட்டில் கை கழுவும் பழக்கமில்லை, ஒன்று டைனிங் ஹாலில் உள்ள வாஷ்பேசனில் கை கழுவுவார்கள், இல்லையென்றால் சற்று அருகில் இருக்கும் சமையலறைக்கு சென்று கை கழுவுவார்கள்,…

நித்திலா சமையலறையில் இருப்பதை அறிந்து, ஏனோ தானோவென்று உணவருந்திவிட்டு எழுந்த விக்ராந்த், சமையலறை நோக்கி தான் சென்றான்,….

“என்ன பேபி வேலை பண்ணிக்கிட்டு இருக்கியா” திடீரென்று கேட்ட விக்ராந்தின் குரலில் அரண்டு போய் திரும்பினாள் நித்திலா…..

அவள் விழிகள் விரிய நிற்க, அவனோ விரல்களில் ஒட்டியிருந்த உணவை, அவளை பார்த்துக் கொண்டே தன் வாயில் வைத்து சூப்பியவன்,….”ஏன் பேபி அப்படி பண்ண?” என்றான் அவளை நோக்கி மெதுவாக அடி எடுத்து வைத்து வந்தபடி,….

“எ.. எப்படி” அவள் பின்னால் செல்ல வழியில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி கேட்க,… “நான் உன்னை கூப்பிட்டும், என்னை மதிக்காம வந்துட்ட, இது தப்பில்லையா?” அவன் அவளை விட்டு சில இன்ச்களே தள்ளி நின்றபடி வினவினான்,….

தைரியமாக அவள் அப்போது வந்துவிட்டாலும், இப்போது இவனை சமாளிக்கும் வழி தெரியாமல் திணறி போய் நின்றாள்,…. அவள் பதில் பேசாமல் நின்ற நேரத்தில் அவளை விட்டு சிறிது கூட நகராமல், தன் அருகில் இருந்த வாஷ்பேசனில் கை கழுவியவன், அவளது முந்தானையில் அவளை பார்த்துக்கொண்டே துடைத்தும் கொண்டான்,….

“கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகு பேபி,” அவனது குரலில் அழுத்தம் தெரிய,… “இல்ல,…. வே… வேலை இருந்துச்சு அதான்..” என இழுத்தாள் அவள்,….

“ம்ம்ம்… இல்லையே, உன் பார்வையில திமிரு தெரிஞ்சதே” அவன் தாடையை தடவி யோசித்தவாறு சொல்ல,…. ‘இப்போது இவனிடம் எப்படி சமாளிப்பது’ என தெரியாமல் விழித்தாள் அவள்,….

அந்த கணம் அவளது தோள்களை அவன் தன் கரங்களால் பற்ற, அவனை மிரண்டு போய் பார்த்தவள்….”ப்ளீஸ் விட்டுடுங்க, யாராச்சும் வந்தா” அவள் சொல்ல முடியாமல் நிறுத்த….”வரட்டுமே, யார் வந்தாலும் வரட்டும், முக்கியமா உன் மாமனார் வந்தா இன்னும் சௌகரியமா போச்சு, அவர் கூட இதை தானே ஆசைபட்டாரு, நான் என் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கணும்னு” என புருவம் உயர்த்தி கேட்டான் விக்ராந்த்,….

அவள் பதில் பேசமுடியாமல் தலை குனிந்து நிற்க,… தன் ஒற்றை விரல் கொண்டு அவள் தாடையை பற்றி நிமிர்த்தியவன், எதை பற்றியும் யோசிக்காமல் அவளது இதழ்களை முற்றுக்கையிட்டிருந்தான், முதலில் திமிறியவள், அவன் முத்தத்தில் உருகி அமைதியாகிட, அந்த நேரம் சரியாக வந்தான் அவனின் தமையனான வித்தார்த்,….

“அடச்சீ,… இது கிச்சன்னு நினைச்சியா, பெட் ரூம்னு நினைச்சியா” வித்தார்த்தின் குரலில், அவனை விட்டு பிரிந்த நித்திலா, அங்கு நிற்காமல் சங்கடத்துடன் வெளியே ஓடியேவிட்டாள்,….

“ம்ம்.. எனக்கு எல்லா இடமும் ஒன்னு தான்” சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் தன் தமையனுக்கு பதில் தந்தவன்,….”நீ பண்ணாததையா நான் பண்ணிட்டேன், வீட்ல வயசுக்கு வந்த பையன் ஒருத்தன் இருக்கான்னு நினைக்காம எப்படிலாம் வெட்ட வெளியில நின்னு ரொமாண்ஸ் பண்ணுவ நீ” அவன் வித்தார்த்தை லாக் பண்ண, அதோடு வாயை மூடிக்கொண்டான் வித்தார்த்…

“கேட்டது தப்பு தான்டா மன்னிச்சிக்கோ” விட்டால் அவன் தன்னை பற்றி இன்னும் பச்சை பச்சையாக கூட பேசுவான் என அறிந்து பயந்த வித்தார்த் பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டான்,…

“கேட்டது தப்பில்லை, நீ இங்க வந்தது தான் தப்பு, ஏன்டா இங்க வந்த” விக்ராந்த் அடாவடியாக கேட்க,…. “நீ கிச்சன் உள்ளேயே குடும்பம் நடத்துவன்னு சத்தியமா தெரியாதுடா, தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன், ஆளை விடு, நான் கையவே கழுவல, நான் இப்படியே கிளம்புறேன்” என வந்த வழியிலேயே சென்று விட்டான் வித்தார்த்,….

“விக்கி இன்னைக்கு நீ ஆஃபிஸ்க்கு போக வேணாம்” அலுவலகத்திற்கு புறப்பட தயாராக இருந்த மகனிடம் கண்டிப்புடன் சொன்னார் லட்சுமணன்….

“ஏன் ப்பா” அவன் கேள்வியாய் வினவ,…”இன்னைக்கு நித்திலா வீட்டுக்கு மறுவீட்டுக்கு போறீங்க ரெண்டு பேரும், நித்திலாவோட தாத்தா நைட் கால் பண்ணிருந்தாரு, உன்கிட்ட நேத்தே சொல்ல மறந்துட்டேன்” என்றவர்,…”ரெண்டு பேரும் போயிட்டு வந்துடுங்கப்பா” என்றார்,….

சிறிது யோசித்தவன்,….”ஓகேப்பா” என்றான் அவரின் பேச்சை தட்டாமல்,….

நித்திலா தன் தாத்தா பாட்டியை பார்க்க போவதை நினைத்து மிகவும் உற்சாகமாய் தயாராகினாள்,… விக்ராந்த் அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பை பார்த்துக் கொண்டே மெத்தையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்….

“நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா நான் ஷேரீ சேஞ்ச் பண்ணனும்” சந்தோஷத்தில், தான் அவனிடம் என்ன சொன்னோம் என்று அறியாமலேயே சொன்னாள் நித்திலா….

“என்ன பேபி??” அவன் தனக்கு கேட்காதது போல் மீண்டும் வினவ, அப்போது தான் அவளுக்கு உரைத்தது…. ‘இவன் கிட்டயா வெளிய போக சொன்னோம்’ என்று.. ‘ஐயோ நானே வாய் கொடுத்து மாட்டிகிட்ட மாதிரி ஆகிடுச்சே’ என விழித்து நின்றவள்…. “இல்ல ஒன்னுமில்ல…. நான் உள்ளேயே போயிடுறேன்” என நொடியும் தாமதிக்காமல் பாத்ரூமிற்குள் ஓடி விட்டாள்,….

வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, விக்ராந்த், நித்திலா இருவரும் ஜெயமோகனின் வீட்டிற்க்கு புறப்பட்டனர்,…. விக்ராந்த் கார் ஓட்டிக் கொண்டிருக்க, பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தாள் நித்திலா,….

சற்று நேரத்திற்கு முன் நித்திலாவின் முகத்தில் இருந்த பூரிப்பு மறைந்து, வாடி போய் காணப்பட்டது, அதனை கண்டு கொண்ட விக்ராந்த்,….”என்ன பேபி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி பிரைட்டா இருந்த, இப்போ என்ன சேட் ஆகிட்ட” என்றான்….

“அது…. அது வந்து” அவள் எப்படி இவனிடம் சொல்வது என தெரியாமல் இழுக்க,… “அதான் வந்துட்டல்ல பேபி சொல்லு” என்றான்,….

“நாம இப்போ என் வீட்டுக்கு போறோம், அங்க பாட்டி தாத்தா எல்லாம் இருப்பாங்க” அவள் இழுவையாக ஆரம்பிக்க,… “அது தான் தெரியுமே,” என்றான் அவன்…

“அது இல்லை,… நீங்க பாட்டி தாத்தா முன்னாடி தயவு செஞ்சு எதுவும் கோவமா பேசாதீங்க என்கிட்ட, கொஞ்சம் சிரிச்ச முகத்தோட அவங்க கிட்ட பேசுனா பாட்டியும் தாத்தாவும் ரொம்ப சந்தோஷ படுவாங்க, அவங்க பேத்தியான நான் சந்தோஷமா இருக்கிறேன்னு தெரிஞ்சா தான், அவங்க சந்தோஷமா இருப்பாங்க,”  அவள் தயங்கி தயங்கி சொல்ல,…. “இவ்வளவு தானா பேபி” என்றான் அவளது முகத்தை திரும்பி பார்த்து….

“ம்ம்ம்” என அவள் முணங்க,…”ஓகே பேபி, உனக்காக நான் இது கூட செய்ய மாட்டேனா, நீ கவலையே படாத, உன்னை தரையில கூட இறங்க விடாம என் கையிலேயே தாங்கிக்கிறேன்” அவன் இதழோர சிரிப்புடன் சொல்ல….. “ஐயோ அப்படிலாம் பண்ணிடாதீங்க நீங்க” என அவள் பதற..”கூல் பேபி சும்மா சொன்னேன், நீ எப்படி சொல்றியோ அப்படியே நான் நடத்துகிறேன்” என்றான், நித்திலாவின் மனதில் அப்போது தான் நிம்மதி வந்தது,….

ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் தங்கள் பேத்தியை கண்டதும் ஆனந்த கண்ணீருடன் அணைத்துக் கொண்டனர்,… நித்திலாவிற்குமே கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது, சிறு வயதிலிருந்து ஒரு நாள் கூட பிரியாமல் இருந்தவர்களுக்கு அந்த இரண்டு நாட்கள் பிரிவு நிறைய ஏக்கத்தை கொடுத்திருந்தது, இவர்களின் பாச பிணைப்பை பார்வையாளராக மட்டும் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் விக்ராந்த்,….

“மாப்பிளை வாங்க, எப்படி இருக்கீங்க, மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை, பேத்தியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு உங்களை கவனிக்காம விட்டுட்டேன்” தாமதமாக விக்ராந்த் அங்கு இருப்பதை புரிந்து கொண்ட ஜெயமோகன் அவன் கரம் பற்றி கூறினார்,…..

“என்ன தாத்தா நான் உங்களை விட வயசுல எவ்வளவு சின்னவன், என்கிட்ட போய் மன்னிப்பு அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க,” அவனது அக்கறையான சொற்களை கேட்டு மனம் நிறைந்து போனார் ஜெயமோகன்,….

“நித்தி கண்ணு மாப்பிளை பக்கத்துல நில்லுடா,” என்ற வைத்தீஸ்வரி, சுமதியிடம் ஆரத்தி தட்டை கொண்டு வர சொல்லி குரல் கொடுத்தார்,…

“எதுக்கு பாட்டி இதெல்லாம்” நித்திலா சொல்ல,….”இந்த ஊர்ல இருக்கிறவங்க கண்ணெல்லாம் உங்களை சுத்தி தான் இருக்கு” என்றவர், அவர்கள் இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்,….

“நித்தி கண்ணு நல்லா இருக்கியாம்மா” வீட்டில் வேலை செய்யும் சுமதியும் பார்த்திபனும் பாசத்துடன் கேட்க, அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு தானும் அவர்களை நலம் விசாரித்தாள் நித்திலா,….

“மகேஷ் எங்க சுமதிம்மா, அவன் வரலையா” நித்திலா கேட்க,…. “அவனும் உன்னை பார்க்கணும் ரொம்ப ஆசைல இருந்தான்மா, பரீட்சை நடந்துகிட்டு இருக்காம், அதனால தான் காலேஜுக்கு போயிட்டான், ரொம்ப வருத்த பட்டான், பரிட்ச்சை இருக்குனு தெரிஞ்சும் லீவ் போட்டா அக்கா திட்டும்னு மனசை புலம்பிக்கிட்டே போயிட்டான்” என்றார் சுமதி,….

“நான் எங்க இருக்கேன், இதே ஊர்ல தானே, அடுத்த தடவை வரும் போது பார்த்துக்கலாம், அவன் கிட்டயும் சொல்லுங்க” என்றவள் பாட்டி தாத்தாவிடம் சென்றாள்,….

ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் விக்ராந்திடம் பேசிக் கொண்டிருந்தனர், அவனும் சிரித்த முகம் மாறாமல் அவர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தான், நித்திலாவிற்க்கு தான் அவன் புரியாத புதிராகவே இருந்தான்,…

‘நேத்து நைட் பேச கூடாத வார்த்தையை பேசி என் மனதை நோகடித்தான், இப்போது உனக்காக இது கூட செய்ய மாட்டேனா பேபின்னு உருகுற அளவுக்கு பேசுறான், இவனை நான் எந்த ரகத்தில் சேர்த்துக் கொள்வது’ என புரியாமல் குழம்பி போய் நின்றாள் நித்திலா….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அதே தான் நாங்களும் குழம்பி போய் இருக்கோம் … நீங்க நல்லவரா கெட்டவரா விக்ராந்த் … பேபி பேபி னு கொஞ்சுறிங்களே … இருக்க வரைக்கும் என்ஜாய் பண்ணுவோம்னு நினைச்சுட்டான் போல …

  2. அண்ணனும் தம்பியும் நல்லாவே ரொமான்ஸ் செய்றாங்க.

    ரவுடிலேயே நான் கொஞ்சம் நியாயமான ரௌடினு சொல்ற மாதிரி வில்லன்ல நான் கொஞ்சம் நியாயமான வில்லன் போல இருக்கான் விக்ராந்த்.