Loading

அத்தியாயம் – 8

லட்சுமண மூர்த்தியும், சந்தான மூர்த்தியும் மாலை ஆறு மணிக்கே வீட்டில் ஆஜராகிவிட, விக்ராந்த் வித்தார்த் இருவரும் வீட்டிற்கு வந்து சேரவே இரவு ஒன்பது மணியை தொட்டிருந்தது,….

விக்ராந்த் அலுவலகத்திற்கு கிளம்பிய நேரத்திலிருந்து நிம்மதியுடன் இருந்த நித்திலாவிற்க்கு அவனின் வருகை உதறலை ஏற்படுத்தியது,
அறை பக்கம் மறந்தும் கூட செல்லாமல் இருந்து விட்டாள், இரவு உணவை சாப்பிடுவதற்காக காலையில் ஆஜராகியது போல் இரவும் அனைவரும் டைனிங் டேபிளில் குழுமியிருந்தனர்,….

காலையில் விக்ராந்த் இட்ட கட்டளையின் பெயரில் அவள் தான் அவனுக்கு பரிமாறினாள், அனைவரும் அமைதியாக உணவருந்தி விட்டு, களைப்பில் உறங்குவதற்காக தங்கள் அறைக்கு சென்று விட்டனர்,…. கடைசியாக இருந்த மூன்று பெண்களும் உணவருந்தி முடிக்க,… ஊர்மிளாவை அனுப்பி விட்டு, நித்திலாவும் சுமித்ராவும் சமையலறையை ஒதுக்கி வைத்தனர்,…..

“சரி நித்திலா…. நீ உன் ரூம்க்கு போ, நானும் போறேன், குட் நைட்” என சுமித்ரா தன் அறையை நோக்கி சென்றுவிட, இங்கு நித்திலாவிற்கு தான் அவன் அறைக்கு செல்லவே வயிற்றில் புளியை கரைத்தது….. அவனை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவளாய் நேராக மொட்டை மாடிக்கு தான் சென்றாள்,….

“என்ன…. ரொம்ப பலமான யோசனையில இருக்க மாதிரி இருக்கு” தன் கணவன் மெத்தையில் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை கண்டு அவனருகில் வந்தபடி கேட்டாள் சுமித்ரா,….

அவளை இழுத்து தன் மீது போட்டவன்,…”ம்ம்ம்… யோசனை தான், அது என்னனு அப்புறம் சொல்றேன்” என்ற வித்தார்த்,….”உன்னோட தங்கச்சி கூட இன்னைக்கு டே எப்படி போச்சு” என்றான் வித்தார்த்….

“ம்ம்ம்… சூப்பர்ங்க,… நித்திலா என் கூட ரொம்பவே அட்டாச்சிடு ஆகிட்டா, நானும் அவளும் இன்னைக்கு ஃபுல்லா நம்ம குடும்பத்தை பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்றாள் சுமித்ரா,…..

“குடும்பத்தை பத்திமட்டும் தான் பேசிக்கிட்டீங்களா, நீ என்னை பத்தியோ, அவ விக்ராந்தை பத்தியோ எதுவும் பேசலயா” வித்தார்த் எதையோ மனதில் வைத்துக் கொண்டு கேட்க,….”இல்லைங்க, ஏன் என்னாச்சு” என்றாள் சுமித்ரா…

“இல்ல சுமி,… பொண்ணுங்க ஒன்னு சேர்ந்தாலே, புருஷன் பொண்டாட்டி குள்ள என்னநடந்தது ஏது நடந்ததுன்னு பேசிப்பீங்கல்ல அதான் கேட்டேன்” அவன் குறும்பு பார்வையுடன் கேட்க…”ச்சீ,… நான் ஒன்னும் அப்படி பட்ட பொண்ணு இல்ல,” என்றாள் சுமித்ரா….

“ஓ… அப்போ எப்படி பட்ட பொண்ணு” அவன் ஒருமாதிரி குரலில் வினவ…. “என்ன உங்க பார்வையே சரி இல்லை” அவள் கேட்க,….”ஏன்னு தெரியாத உனக்கு” என்று கேட்டவன், அடுத்த கணம் அவளை கட்டிலில் சரித்து அவள் மீது படர்ந்தான்,….

நித்திலா வானத்தில் தெரிந்த முழு நிலவை ரசித்து பார்த்தபடி நின்றாள்,… ஜில்லென்று வீசிய காற்று அவளது மேனியில் பட, அதை இதமாக அனுபவித்தபடியே நின்ற நேரம் ஒரு வலிய கரம் வந்து அவளை பின்னால்லிருந்து அணைத்தது,….

திடுக்கிட்டு போனவள்,…”ஹேய் பேபி நான் தான்” என்ற விக்ராந்தின் குரலில் அவளுக்கு உடம்பில் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது, தன் கரங்களை அவள் வயிற்றோடு சேர்த்து அணைத்திருந்த அவனை பிரிக்க முயன்று கொண்டிருந்தவளிடம்,……

“நான் தான் மார்னிங்கே சொன்னேன்ல, நானே விடுற வரைக்கும் உன்னால என்னை நகர்த்த கூட முடியாது” என சொன்னபடி அவளது தோளில் தாடையை வைத்தவன்,…”நான் ரூம்ல உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீ இங்க என்ன பண்ணுற” என்றான்..

“ப்லீஸ் என்னை விட்டுடுங்க” அவனை விலக்க முயற்சித்தபடியே சொன்னாள் அவள்….

“ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் தான் பேபி, அப்புறம் விட்டுடுவேன்” என்றான் தங்களுக்கு எதிரிலிருந்த நிலவை பார்த்தபடியே…..

“ஆறுமாசம் உங்க கூட இருக்கேன், ஆனா… ஆனா இதெல்லாம் வேணாமே” என்றாள் கெஞ்சுதலான குரலில்,…

“கஷ்டம் பேபி,… நீ என்னோட உரிமை, என் உரிமையை நான் எதுக்கு விடணும்,” என்றான் அவள் தோள் வளைவில் இதழ் பதித்து,… அவனின் இந்த பேச்சும் செயலும் அவளுக்கு கோபத்தை உண்டு பண்ண, தன்முழு பலத்தையும் ஒன்று திரட்டி அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளினாள்…..

“என்னாச்சு பேபி….” அவன் ஒரு மாதிரி குரலில் வினவ… “போதும்…இதோட நிறுத்திகோங்க” என்றாள் ஆத்திரத்துடன்….

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே, அதுக்குள்ள நிறுத்திக்க சொன்னா எப்படி பேபி” அவன் குழைவான குரலில் சொல்ல, “எப்படியும் ஆறு மாசம் தான் நான் உங்க வீட்ல இருக்க போறேன், அதுக்கு பிறகு எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு, நீங்க உங்க உரிமையை எடுத்துக்கிறதா நினைச்சு, என்னோட அடுத்த கட்ட வாழ்கையில இடைஞ்சல் உண்டு பண்ண பார்க்கிறீங்க” அவனை தன்னை நெருங்கி வர விடாமல் தடுக்க நினைத்து, இவ்வாறு கூறி அவன் கோபத்தை அதிகப்படுத்திவிட்டாள் நித்திலா,….

தாடையை விரல்களால் தடவியவன்….. “இப்போ நீ என்ன சொல்ல வர,… நான் இப்போ என் உரிமையை எடுத்துக்க நினைச்சா, அடுத்ததா நீ வாழ போகும் வாழ்க்கைக்கு நாம ஒன்னு சேர்ந்ததால இடைஞ்சல் வரும்னு நினைக்கிறியா, யூ மீன் உன்னோட அடுத்த புருசனுக்கு, நீ என் கூட நெருக்கமா இருந்தது தெரிய வந்தா, உன்னை ஏத்துக்காம போயிடுவானோன்னு பயப்படுறியா?” அவன் சாதாரணமாக கேட்டாலும், அவன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது,…..

இவனை தன்னிடம் நெருங்க விட கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் நித்திலாவின் மனதில் ஓடி கொண்டிருந்தது, அதனால் அவன் வார்த்தைகளின் வீரியத்தை யோசிக்காமல் “ஆமா” என்று தலையசைத்தாள் இதனால் அவன் கோபம் எந்தளவிற்கு செல்லும் என அறியாமல்,….

“ஓ… அப்படினா  இப்போவே உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ண ஆசை வந்துடுச்சு, உன்னோட ரெண்டாவது புருஷனை நினைச்சு இப்போவே கனவு காண ஆரம்பிச்சுட்ட இல்ல” தான் தலையாட்டியதற்க்கு உதாரணம் இதுவா என்று அரண்டு போய் நின்றாள் நித்திலா,…

அவனை தன்னை விட்டு தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக மட்டுமே அவ்வாறு கூறினாள், ஆனால் இப்போது அவன் இது போல் ஒன்று இட்டுகட்டி சொல்லுவான் என்று எதிர்பார்க்கவில்லை, அவள் கண்கள் கண்ணீரை வெளியேற்ற தயாரான நிலையில் இருந்தது,….

“சொல்லு,…. இப்போதைக்கு கனவு மட்டும் தான் காண ஆரம்பிச்சிருக்கியா, இல்ல ஆளையே செட் பண்ணிட்டியா” அவன் எல்லை மீறி பேசிட,.. அவனது அவ்வாரத்தைகளை கேட்டு துடித்து போனவள்… “போதும்,… இதோட நிறுத்திக்கோங்க” என அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்து அழ ஆரம்பித்து விட்டாள் அவள் ….

“உண்மையை சொன்னா இப்படி அழுது சாதிக்கிறது தானே பொண்ணுங்களோட பாலிசி” அவன் விடாமல் பேச,…. “எது உண்மை,… உங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறீங்க, இது உண்மையா?” தன் அழுகையை கட்டு படுத்தி கொண்டு ஆத்திரத்துடன் கேட்டாள்….

“பின்ன நீ சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்,…. ” அவன் சீற,… “உங்களை என்னை நெருங்க விட கூடாதுனு தான் அப்படி சொன்னேன், உங்களோட ச்சீப்பான புத்தி இப்டிலாம் யோசிக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வாய் திறந்திருக்கவே மாட்டேன்” கோபம் பாதியும் அழுகை மீதியுமாய் சொன்னாள்,….

“நீ என்ன தான் பேசி என்னை மடக்க ட்ரை பண்ணாலும் என் உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றவன், அவள் எதிர்பார்க்கும் முன்னரே அவள் கன்னம் பற்றி அவளது மென்மையான செவ்விதழ்களை சிறை பிடித்தான் தன் முரட்டு இதழ்களால்,….

முதலில் கோபத்தோடு அவள் இதழ்களைத் தீண்டியவன், நேரமாக ஆக மென்மையாக தீண்ட ஆரம்பித்தான், அவனை தடுக்க முடியாத இயலாமையில் நின்ற அவள், அவன் சட்டையை இறுக்கப் பற்றியபடி கண்களை மூடிக்கொண்டாள்,  எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை, அவளின் இதழ்களின் மென்மையில் மூழ்கிக் கரைந்து கொண்டிருந்தவன், மூச்சுக் காற்றுக்காக கூட அவளின் இதழ்களை பிரிய மறுத்தான்,…

அவளது பின்னந்தலை முடியை பற்றியவாறு அவளுக்குள் மூழ்கிருந்தவன், தன் சட்டையை பற்றியிருந்த அவளின் கரம் தொய்ந்து சரியவும் தான், அவளை விட்டு விலகினான்,….

முடி கலைந்திருக்க, இதழ்கள் சிவந்திருக்க, மூச்சு வாங்க அவள் நின்றிருந்த கோலம் அவன் மனதை மயக்கி தாபத்தை அதிகரித்தது, அவள் இடையை வளைத்து அவளை தன் பக்கம் இழுத்தவன், கலைந்திருந்த அவளது முடியை சரி செய்தான்,…

அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவேயில்லை, அவளது தாடையை பற்றி நிமிர்த்தியவன், அவளது இமை மூடிய முகத்தை பார்த்தான், அவள் தன்னை காணக் கூடாதென்ற எண்ணத்தில் தான் இமைகளை மூடியிருக்கிறாள் என அவளின் எண்ணவோட்டத்தை அறிந்து புரிந்து கொண்டவன்,….”நிலா” என மென்மையான குரலில் அழைத்தான்,….

அவன் குரலில் தெளித்த ஏதோ ஒன்று அவள் இமைகளை பிரித்து அவனைக் காண செய்தது….. இருவரின் கண்களும் ஒன்றோடொன்று கலந்தது…. அவனது கண்களில் எதை கண்டாளோ மொத்தமாக மயங்கி கிறங்கிவிட்டாள்,…..

“ரூம்க்கு போலாமா பேபி” அவனது கேள்வியில், தன்னை அறியாமலேயே “ம்ம்” என்ற பதிலை தந்தாள் அவள்,… ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளை கரங்களில் அள்ளிக் கொண்டு தங்களது அறை நோக்கி புறப்பட்டான்,….

அறைக்கு வந்தவன் அவளை மெதுவாக கட்டிலில் கிடத்தி, நெற்றி கன்னங்கள் என்று அவளது முகமெங்கும் முத்தங்களை வழங்கினான், அவன் செய்கையை தடுக்காமல் கண்கள் மூடி அவன் முத்தங்களை இன்பமாக அனுபவித்தவளுக்கு உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் ஏதோ பரவ, மருதாணியாய் சிவந்து போனாள்….

அதற்கு மேலும் தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல், அவளது கழுத்து சரிவில் அவனுடைய உதடுகள் முன்னேறி தன்னுடைய தேடலை தொடங்க, தோளில் அழுந்திய அவனது கரங்கள் மேலும் கீழிறங்கி, பயணத்தை ஆரம்பித்து, தனது எல்லையை மீறின, இருவரது உணர்ச்சிகளும் கரையுடத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தது…..

அத்தனை நேரம் அவ்வளவு மிருதுவாய் தன் தேடலில் பயணித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று விலகினான், அவன் செயல் புரியாமல் அவள் மலங்க மலங்க விழிக்க,…. அவனோ.. “கேர்ஃபுல்லா இருந்துக்கனும்ல பேபி, அப்புறம் குழந்தை உருவாகிட்டா இங்கேயே டேரா போட்டுடுவியே” என்றவன் மீண்டும் தன் தேடலை துவங்கியிருந்தான், அத்தனை நேரம் அவன் தொடுதலில் உருகி போனவள், அவனது இந்த சொற்களின் மூலம் அவனை விட்டு விலக முயன்றாள்,…

ஆனால் அவளால் அது முடிந்தால் தானே,…. அவள் எண்ணம் புரிந்து, அவள் இதழை மீண்டும் ஆர்ப்பரித்து, அவள் எண்ணவோட்டத்தை அலைக்கழித்து, முழு மூச்சோடு அவளை வேட்டையாடியவன், தன் தேடல் முடிந்த பின்பு தான், அவளை விட்டு விலகினான்,…..

கசங்கிய பூவாய் படுத்திருந்தவளின் தோற்றம் அவனது முரட்டுத் தனத்தை பறைசாற்ற, “ரொம்பவும் கஷ்டப்டுத்திட்டேனா பேபி” என்றான்

அவனது இந்த சொற்களே அவளின் உடல் வலி அனைத்தையும் மாயமாய் மறைய வைத்திருக்க, அவனது அக்கறையான வார்த்தைகளில் இளகி போனவள்,.. “ம்ஹும்” என்றாள், அவனது மயக்கும் பார்வை வேறு அவளை பித்தாக்கியது,..

புருவத்தை உயர்த்தி பார்த்தவன்,…. “அப்போ ஓகே,…” என சொல்லிவிட்டு மீண்டும் அவளின் மீது படர வர,…”ஐயோ வேணாம்ங்க” என பதறினாள், அவளை பார்த்து மெலிதாய் சிரித்தவன்,…”ஓகே தூங்கு பேபி” என அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான், அவனது மார்புக்குள் புதைந்துக் கொண்டு, எதை பற்றியும் யோசிக்க வைக்காமல் உறக்கம் அவளை ஆக்கிரமித்திருந்தது…..

மறுநாள் உறக்கத்திலிருந்து நித்திலா விடுபட்டது விக்ராந்தின் அணைப்பில் இருந்த படியே தான்,…. இரவு நடந்தவைகளை நினைத்து பார்த்தவளுக்கு முகம் குங்குமமாய் சிவந்தது, அவன் உறங்கி கொண்டிருந்தாலும் அவன் முகத்தை ஏற்று பார்க்க ஒரு மாதிரி நாணமாக இருந்தது,….. அதுவும் சில நிமிடங்கள் தான், இரவு அவன் கூறிய வாரத்தைகள் நினைவு வரவே அவள் முகத்தில் இருந்த பூரிப்பு ஒரு நொடியில் காணாமல் போனது,…..

இத்தனை நேரம் அவனை ஒன்றி படுத்திருந்தவள், தீயை தொட்டது போல் சட்டென்று பிரிந்தாள்,… அவனோ இதை எதையும் கண்டுகொள்ளாமல் சிணுங்கிவிட்டு உறக்கத்தை தொடர்ந்தான்,…

‘இவன் மனசில என்னத்த நினைச்சிகிட்டு இப்படியெல்லாம் பண்ணுறான், அவன் தான் ஏதோ பைத்தியக்கார தனமா பண்ணுறான்னா நானும் அவனுக்கு’ ‘ச்சே,… நான் ஏன் அவனுக்கு கட்டுப்பட்டேன், அவன் பார்வையாலேயே இப்படி என்னை சாச்சிட்டானே, அவன் கண்ணுல என்ன மாயமா வச்சிருக்கான், என்னையே இப்படி மயங்க வச்சிட்டான், சரியான மாய வித்தைக் காரன்,’

‘என் வாழ்க்கைல இப்படி தான் நடக்கணும்னு இருக்கு போல, இவன் நல்லவனா கெட்டவனான்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல, எது எப்படி இருந்தாலும் இனி இவன் கிட்டருந்து தள்ளியே இருக்கணும்’ தனக்குத் தானே உறுதியெடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்….

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அத்தியாயம் எதார்த்தமா தொடங்கி எதார்த்தமா முடிஞ்சிடுச்சு … ஒரு பிளானோட தான் இருக்கான் போல விக்ராந்த் …

  2. நித்திலா அவரசப்பட்டு வார்த்தையை விடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளாள்.

    விக்ராந்த் தெளிவாக ஆறு மாதம் கணவன் மனைவி என்று உரிமை எடுத்துக் கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தான்.

    இவளும் இவளது மறுப்பை பொறுமையாக தெளிவாக எடுத்து கூறாமல் எதையோ கூற போய் எதையோ கூறி விட்டாள்.

    ஏற்கனவே, தந்தைக்காக அவர் கூறியதற்காக தான் தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளால் என்ற கடுப்பில் இருக்கிறான். இப்பொழுது கூடுதலாக, தன்னை விட்டு சென்ற பிறகு வாழ போகும் வாழ்க்கைக்காக இப்பொழுதே மனதளவில் தயாராகி விட்டால் என்று நினைத்து கோவப்படுவான்.

    சும்மாவே எடக்கு மடக்காக செய்பவனை பற்றி இப்பொழுது கேட்கவா வேண்டும்.