Loading

அத்தியாயம் – 6

விக்ராந்தின் நிபந்தனைகளைக் கேட்ட நித்திலா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் நின்றாள், அவள் முன் இப்போது இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன.

ஒன்று.. கையெழுத்திட மறுத்து, அவளது வாழ்க்கையின் உண்மையை இப்போது பாட்டி தாத்தாவிடம் கொண்டு சேர்ப்பது.

இரண்டு.. கையெழுத்திட்டு ஆறு மாத கால அவகாசத்தை வாங்குவது…

அவள் தனக்குள் ஆழமாக யோசித்தாள். ‘தான் இப்போது கையெழுத்து இடா விட்டால் நேராக தாத்தா பாட்டியிடம் சென்றுவிடுவானே, அவர்களுக்கு மட்டும் என் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாகிவிட்டது தெரிந்தால் நிச்சயம் தாங்கி கொள்ள மாட்டார்களே,….

இல்லை இல்லை அவர்களுக்கு இது நிச்சயம் தெரிய வரவே கூடாது, எப்படியும் இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, அதற்குள் தானே தைரியமாக முடிவெடுத்து, பாட்டி தாத்தாவிற்கு புரிய வைத்து விடலாம், இல்லையென்றால் அவன் மனம் மாறவும் வாய்ப்பிருக்கு, எது எப்படியோ இப்போதைக்கு கையெடுத்து இடுவது தான் நல்லது’ என கருதியவள், கண்களில் நீர் திரையிட, விவாகரத்துப் பத்திரத்தில் நடுங்கிய கரங்களால் கையெழுத்திட்டவள் அதன் பிறகு அந்தப் பத்திரத்தை மெத்தையில் வீசினாள்…

“குட்,…. இப்படி தான் இருக்கணும்” எந்த உணர்ச்சியுமின்றி சொன்னவன், அந்த பத்திரத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துவிட்டு,.. “ஓகே ஈவினிங் கூட நான் கொஞ்ச நேரம் தான் தூங்குனேன், இப்போ ரொம்ப டையர்டா இருக்கு, நீயும் இங்கேயே படுத்துக்கலாம்” மெத்தையை காண்பித்து சொன்னவன் மெத்தையில் விழுந்து கண்மூடினான்,…..

அவனை எதுவும் செய்ய முடியாமல் போன தன் இயலாமையை எண்ணி உள்ளுக்குள் குமுறியவள், அவனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்….

சற்று நேரத்திற்கெல்லாம் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட, நித்திலாவால் அந்த மெத்தைக்கு சென்று அவனது அருகில் படுக்க முடியவில்லை. அவமானமும் வலியும் அவளைத் துரத்த, அறையின் ஒரு மூலையில் தரையில் அமர்ந்துகொண்டவள் தன் நிலையை எண்ணி அழுது தீர்த்தாள்.

அன்றைய இரவு முழுவதும், அவளது துயரத்தின் நிழல் மட்டுமே அந்த அறையை நிரப்பியது.
அழுது சோர்ந்துபோனவள் எப்போது கண்ணசந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை,..

அந்த ஏசி அறையில் குளிர் தாங்க இயலாமல் கூனிகுறுகி உறக்கத்திலிருந்தவளின் கண்கள் மெதுவாக துயிலிருந்து மீண்டது,… சோர்வாக கண்களை திறந்தவளுக்கு இரவு நடந்தவைகள் சிந்தனையில் வந்து அழுகை முட்டியது, மெத்தையில் நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை முறைத்தவளுக்கு கண்ணீரும் சேர்ந்து வடிந்தது,….

அவன் நிம்மதியாக உறங்குகிறான், ஆனால் அவளின் வாழ்க்கை ஒரு நொடியில் சிதைந்து போயிருந்தது.

கடிகாரம் சரியாகக் காலை ஆறு என்று மணியடிக்க, ​தன் துயரத்தின் ஆழ்ந்த பிடியிலிருந்து வெளிவந்தவள், இந்த வீட்டின் மருமகளாக தான் செய்ய வேண்டிய கடமைக்காக, மூச்சை இழுத்து விட்டு எழுந்து கொண்டு விரைவாக ஒரு புடவையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவன் எழுவதற்கு முன்பே இந்த அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற வேகத்தில், குளித்து முடித்து, காட்டன் பட்டுப் புடவை ஒன்றை அணிந்து, தலையில் துண்டு கட்டிய நிலையில் வெளிவந்தாள்.

அதிர்ஷ்டவசமாக குளியலறையினுள்ளேயே உடை மாற்றுவதற்கும் அறை இருந்தமையால், அது அவளுக்குப் பெரும் நிம்மதியாக போய்விட்டது,

​தன் ஈரத்தலையைத் துவட்டிவிட்டு, வழக்கம் போல் கூந்தலை இரு பக்கமும் சிறிதாக எடுத்துப் பின்னி, கூந்தலை விரித்து விட்டிருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுவிட்டு, கழுத்தில் புத்தம் புது தாலிக் கயிறுடன் சேர்த்து, மிகவும் சிம்பிளான நெக்லஸ், காதில் அதற்கு மேட்சிங்கான ஜிமிக்கி, கையில் கற்கள் பதித்த வளையல்கள் எனப் புடவைக்கு மேட்சான நிறத்தில் அணிந்து முடித்தவள், அறையை விட்டு வெளியேற எத்தனித்த அந்த நொடியில், ஒரு வலிய கரம் ஒன்று அவளைப் பிடித்து இழுக்க, தூக்கி வாரிபோட்டது அவளுக்கு,…

ஒரே நொடியில் விக்ராந்தின் அணைப்பில், அவன் மூச்சுக்காற்று தன் மீது படும் அளவிற்கு அவனுடன் ஒன்றி நின்றாள் நித்திலா, அவன் எப்போது எழுந்தான் என்று கூட அறியாதவள், அவனிடமிருந்து விலக முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்,……

“பச்,… நீ என்ன தான் ட்ரை பண்ணாலும், நான் விடுற வரைக்கும் உன்னால போகமுடியாது, வீணா முரண்டு பிடிக்காத” என்றவன், அவள் முகத்தில் வழிந்திருந்த கற்றை முடியை அவள் காதிற்கு பின்னால் சொருகி விட்டான்…..

அவன் செயலில் நெளிந்தவளோ,.. “நீங்…நீங்க பண்ணுறது எதுவும் சரி இல்லை” அவள் முகத்தை பின்னால் கொண்டு சென்றபடி, அவனிடமிருந்து விலக முயன்று கொண்டே சொன்னாள், அவள் குரலில் பயம் இழையோடியது.

“என்ன சரி இல்ல,… இப்போ தான் சரியா பண்ணுறதா நான் நினைக்கிறேன், நைட்டே பண்ணிருக்க வேண்டியது, டையர்டா இருந்ததுன்னு தூங்கிட்டேன்” என்றான் அவளது முகத்தை தன் விரல்களால் கோலமிட்டபடியே,……

“டிவோர்ஸ்… நான் தான்… டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி கொடுத்திட்டேன்ல அப்புறம் எதுக்கு” என அவள் திக்கி திணறி பேசினாள்….

“ஆறுமாதம் நீ எனக்கு பொண்டாட்டி, நான் என்ன சொல்றேனோ அது படி தான் நீ நடந்துக்கனும், பொண்டாட்டிங்கிற உரிமை எனக்கும் இருக்கு, புருஷன்ங்கிற உரிமை உனக்கும் இருக்கு, நான் என் உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன்” என்று அவள் எதிர்பார்க்காத நேரமாய் பார்த்து அவளது கன்னத்தில் பசக்கென்று இதழ் பதிக்க,. அவனின் இந்த செயலை எதிர்பார்க்காதவளுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது,…

“ப்லீஸ்… எ… என்னை விற்றுங்க” அவள் கெஞ்சுதலான குரலில் சொல்ல,….”ம்ஹும்…. இது என் உரிமை, என்னை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியாது” என சொல்லிக்கொண்டே அவளது இன்னொரு கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்தான்… அவள் உடம்பில் இது தான் என்று சொல்ல இயலா அளவிற்க்கு உணர்வுகள் எல்லாம் வந்து போனது, அதே நேரம் அவனை விட்டு விலகவும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்,……

“எ… எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்லீஸ்” அவள் தந்தியடித்த குரலில் சொல்ல, அவளின் துடித்துக் கொண்டிருந்த மென்மையான இதழ்களை தன் விரல்களால் வருடியவன்,.. “எவ்வளவு நேரம்” என்றான் அவள் இதழை விட்டு பார்வையை விலக்காமலே…

“இல்ல… வந்து…. நாளைக்கு” அவள் பேசமுடியாமல் தடுமாற, “நாளை வரைக்குலாம் என்னால வெயிட் பண்ண முடியாது… ஐ நீட் யூ பேபி” என்றான் குழைவான குரலில்,…

“ப்லீஸ்” அவள் கெஞ்சல் பார்வையுடன் சொல்ல,…”ஓகே,… இன்னைக்கு நைட் ஓகே தானே” அவன் கேட்க,… இப்போதைக்கு அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தவள்….”ம்ம்ம்” என்றாள்,….

“ஓகே” என்று அவன் தன் பிடியை தளர்த்த அவ்வளவு தான், அவள் அங்கு நிற்கவே இல்லயே, நொடி நேரம் கூட தாமதிக்காமல் அறையை விட்டு ஓடி விட்டாள்…..

அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, இயல்பிற்கு மாறாக அவளுடைய இதயம் வேகமாக துடித்தது, தன் இதயத்தின் அருகில் கரம் வைத்து, கண்களை இறுக்க மூடி தன்னை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தாள்  நித்திலா,….

எத்தனை நேரம் அவ்வாறு நின்றாளோ,… தன் தோளை யாரோ பற்றிய உணர்வு வரவே, அரண்டு போய் திரும்பினாள்,…

“ஏய் நித்திலா நான் தான்” அவள் பயந்ததை அறிந்த சுமித்ரா அவள் கரம் பற்றி அழுத்த, சுமித்ராவை கண்ட பின்னர் தான் அவள் பதட்டம் சிறிது குறைந்தது,..

“என்னாச்சு நித்திலா,… ஏன் ஏதோ மாதிரி இருக்க” என்றாள் சுமித்ரா,…

“அது… அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா,… ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தேன், திடீர்னு கை வச்சதும் பயந்துட்டேன்” நித்திலா முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தபடி சொல்ல,.. “சரி என்ன அதுக்குள்ள எழுந்துட்ட, புது பொண்ணு எழ லேட்டாகும்னுல நினைச்சேன்” என்றாள் கேலி புன்னகையுடன்…

அவள் பதில் சொல்ல முடியாமல் திணற,.. அவள் கூச்சப்படுகிறாள் என்று நினைத்துக் கொண்டு.. “சரிசரி வா, இன்னைக்கு நீ தான் முதல்ல ஸ்வீட் செஞ்சு சமையலை ஆரம்பிச்சு வைக்கணும்,” என அவளிடம் இயல்பாக பேச்சு கொடுத்தபடி அவளை சமையலறை நோக்கி அழைத்துச் சென்றாள் சுமித்ரா….

மரகத பாட்டி அப்போது தான் தன் அறையிலிருந்து வெளிவந்தார், அவரின் வருகையை கண்டதும் மருமகள்கள் இருவரும் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்….

“சுமித்ராம்மா,… இன்னைக்கு நித்திலா ஸ்வீட் செய்யணும் தெரியும்ல” மரகதம் சுமித்ராவிடம் பரிவுடன் கேட்க,… “தெரியும் பாட்டி, இப்போ தான் நித்திலா கிட்ட சொல்லிட்டு அவளை கிச்சன்க்கு கூட்டிட்டு போயிட்டு இருந்தேன்” என்றாள் சுமித்ரா…

“நல்லதும்மா,…” என்றவர் நித்திலாவின் புறம் திரும்பி “அப்புறம் நித்திலாம்மா இந்த வீட்டு பழக்க வழக்கத்தை பத்தி, உன் அக்கா சுமித்ரா உனக்கு சொல்லி தருவா, நீ எதுக்கும் தடுமாற வேணாம், உன் வீட்ல இருக்கிற மாதிரியே இங்க நீ இருக்கலாம்” பாட்டி கனிவான பார்வையில் சொல்ல,  தலையசைத்து புன்னகைத்தாள் நித்திலா,…

“ஏய் என் க்ரீன் டீ எங்க, ரெடி பண்ணிட்டியா இல்ல இனிமே தானா” என வரும் போதே தன் மூத்த மருமகளை அதட்டிக் கொண்டு வந்தார் அன்னலட்சுமி,…

“ரெடியா இருக்கு அத்தை, இதோ நான் எடுத்துட்டு வரேன், பாட்டி உங்களுக்கும் டீ ரெடியா இருக்கு எடுத்துட்டு வரேன்” என சமையலறை நோக்கி ஓடினாள் சுமித்ரா,….

சுமித்ரா புகுந்த வீட்டிற்கு வந்த சிறிது நாட்களிலேயே, தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொண்டாள், முக்கியமாக அவளின் மாமியாரை பற்றி. காலையில் ஆரம்பித்து இரவு உறங்க செல்லும் வரையில் அவள் தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருக்கிறாள் தன் மாமியாருக்கு. தன் மாமியார் என்ன தான் தன் மீது கோபத்தை காட்டினாலும், சிரித்த முகம் மாறாமல், தன் தாய்க்கு செய்யும் பணிவடைகள் போல் அனைத்தையும் சரியாக செய்து கொண்டிருக்கிறாள்….

மரகத பாட்டி தன் மருமகள் அன்னலட்சுமியிடம் எத்தனையோ முறை, ‘சுமித்ராவிடம் பார்த்து பழகு, அவள் மனம் நோகும் அளவிற்கு பேசாதே’ என்று அன்பாகவும் சொல்லி பார்த்து விட்டார், அதட்டியும் சொல்லி பார்த்து விட்டார், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழிக்கேற்ப அன்னலட்சுமியின் குணத்தையும் மாற்ற முடியவில்லை அவர்களால்,….

அன்னலட்சுமிக்கு க்ரீன் டீயும், மரகத பாட்டிக்கு பால் டீயும் கொடுத்து கொண்டிருந்த நேரம், ஊர்மிளா அப்போது தான் வந்தார்….

“ம்ம்ம்… இப்போ தான் மகாராணி வராங்க ஆடி அசஞ்சி” அன்னலட்சுமி தங்கை ஊர்மிளாவை வசைபாட…. “மன்னிச்சிடுங்கக்கா, நைட்லாம் தலைவலி, தூக்கமே இல்ல, அதான் காலைல அசந்து தூங்கிட்டேன்” ஊர்மிளா சொல்ல…. ‘ம்ம்கும்ம்… இந்த மாதிரியான சாக்கு போக்கைலாம் தான் ஸ்டாக்ல வச்சிருப்பாளே’ என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார் அன்னம்,…

“அத்தை இப்போ தலைவலி பரவால்லயா” சுமித்ரா அக்கறையாக ஊர்மிளாவிடம் வினவ,….”பரவால்லமா” என்றார் அவர் கனிவுடன்..

“சரிங்கத்தை டீ எடுத்துக்கோங்க, அதோட நீங்க இன்னைக்கு எந்த வேலையும் பண்ண வேணாம், நான் பார்த்துகிறேன்” சுமித்ரா சொல்ல,…. “அதெல்லாம் ஒன்னும் இல்லடா, இப்போ நான் நல்லா இருக்கேன்” என சொல்லியபடி டீ எடுத்துக்கொண்டார் ஊர்மிளா,…

அதே நேரம், அண்ணனும் தம்பியுமான லட்சுமண மூர்த்தியும் சந்தான மூர்த்தியும் அவரவர் அறையிலிருந்து வந்தனர்,… சுமித்ரா அவர்களுக்கும் டீ கொடுத்து விட்டு, இத்தனை நேரம் பார்வையாளராக மட்டும் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவை சமையலறைக்கு தன்னுடன் அழைத்துச் சென்றாள்,….

அங்கு தன் வீட்டில் பல வருடமாக வேலை செய்யும், வேலைக்காரம்மா கவிதாவை நித்திலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் சுமித்ரா, என்ன தான் பெரிய குடும்பமாக இருந்தாலும், தன் வீட்டினர்கள் கையில் சாப்பிட்டு தான் பழகி போயிருந்தார்கள் அவ்வீட்டினர்கள், அதனால் தான் சமையல்காரர் என்று தனியாக வேலைக்கு சேர்க்கவில்லை, மார்க்கெட் பொருட்கள் வாங்கி வரவும், காய்கறிகள் நறுக்கி தரவும், அவ்வப்போது பாத்திரங்கள் விலக்கவும் மட்டுமே கவிதாவை நியமித்திருந்தனர்,…

அன்னலட்சுமிக்கு சுட்டு போட்டாலும் சமைக்க வராது, தான் பெரிய வீட்டு மருமகள், தான் எதற்காக சமையல் வேலை செய்ய வேண்டும் என்ற கர்வத்திலேயே கல்யாணமாகி வந்த நாட்களிலிருந்து சமையலறை பக்கம் செல்லாமலே இருந்து விட்டார்,….

ஆரம்பத்தில் அவரை கண்டித்த மரகதம், சொல்லி சொல்லி தன் வாய் தான் புண்ணாய் போகிறது என்ற காரணத்தினால், காலப்போக்கில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டார், அதற்கு பிறகு தான் ஊர்மிளா அவ்வீட்டிற்க்கு மருமகளாக வந்தார்,….

வீட்டின் சமையலறை பொறுப்பை அவரே ஏற்று கொண்டார், அவருக்கு பிறகு சுமித்ரா ஏற்றுக்கொண்டாள், சுமித்ரா வந்துவிட்ட காரணத்தினால் சுமித்ராவே கஷ்டப்படட்டும் என்று ஊர்மிளா விட்டு விட வில்லை, அவளுக்கு பாதி வேலையை அவர் தான் குறைத்துக் கொடுப்பார்….

வீட்டில் உள்ளவர்கள் பாயாசம் விரும்பி சாப்பிடுவார்கள் என்ற காரணத்தினால் சுமித்ரா, அதையே செய்யும் படி நித்திலாவிடம் கூறினாள்,… நித்திலாவிற்கு வித விதமான பல ஐட்டங்கள் செய்ய தெரியாவிட்டாலும், சமையலை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருந்தாள்…

இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் பாயாசம் செய்ய, எவ்வளவு அரிசி போட வேண்டும் எவ்வளவு பால் ஊற்ற வேண்டும், எந்தளவிற்க்கு சர்க்கரை போட வேண்டும் என்பதை அவள் கூடவே இருந்து சொல்லிக் கொடுத்தாள் சுமித்ரா,…

தனக்கு ஒவ்வொன்றும் கூடவே இருந்து, துல்லியமாய் சொல்லி தந்த சுமித்ராவை நித்திலாவிற்கு மிகவும் பிடித்துப் போனது, அத்தனை நேரம் விக்ராந்தை பற்றி இருந்த பயம் மறைந்து, சுமித்ராவுடன் சேர்ந்து ஒரு வித ஆர்வத்துடன்  பாயாசத்தை தயார் செய்தாள்….

கவிதா காலை உணவுக்கான பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்த காரணத்தினால், மறுபக்கம், ஊர்மிளாவும் காலை உணவை தயார் செய்து முடித்திருந்தார்…

காலை உணவு வகைகள் டைனிங் டேபிளில் சாப்பிடுவதற்க்கு தயாரான நிலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது, வீட்டின் பெரியவர்கள் யாவரும் டைனிங் டேபிளில் குழுமியிருக்க, தன் அலுவலக உடையில் தயாராக  வந்தான் வித்தார்த்,….

“அண்ணன் ஆஜராகிட்டாரு, தம்பியை எங்க காணோம்” லட்சுமணன் திருப்பி வைக்கப்பட்டிருந்த தட்டை சரியாக வைத்தபடி கேட்க,…. “நம்ம விக்கிக்கு நூறு ஆயுசு அண்ணா, அதோ வரான் பாருங்க உங்க கோவக்கார பிள்ளை” சந்தானம் சொல்ல, அவரும் திரும்பி பார்த்தார்,…

க்ரீம் கலர் ஷர்ட் மற்றும் பிளாக் கலர் பேண்ட் என ஃபார்மல் உடையில் இடது பக்க கரத்தில் கோட் தொங்கியபடி ஆணழகனாக மாடியிலிருருந்து இறங்கி வந்தான் விக்ராந்த்…..

“ஏன்டா,… நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, இன்னைக்கே ஆஃபிஸ் போறானாமா உன் பையன்” மரகதம் தன் மூத்த மகனிடம் கேட்க,….”அதை நீங்க உங்க பேரன் கிட்டயே கேட்டுக்கோங்கமா” என்று முடித்து கொண்டார் லட்சுமணன்….

“குட் மார்னிங் அப்பா, குட்மார்னிங் சித்தப்பா” வந்தவன் வழக்கமாக வைக்கும் காலை வணக்கத்தை வைத்து விட்டு, தனக்கே உரிய நாற்காலியில் அமர்ந்தான்…..

“என்ன பாட்டி,  என்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமா” அவர் பார்வையின் மூலமே அவர் தன்னிடம் ஏதோ கேட்க வருகிறார் என அறிந்து, அவர் கேட்கும் முன்பே கேட்டான் விக்ராந்த்,…

“ஆமாப்பா…. இன்னைக்கே ஆபிஸுக்கு போகணுமா நேத்து தானே கல்யாணம் ஆகிருக்கு” பாட்டி கேட்க,. “ம்ம்ம்… நீங்க கேட்கிறதும் வாஸ்தவம் தான், ஆனா என்ன பண்ணுறது பாட்டி, என்னால லீவ் லாம் போட முடியாது, உங்க மூத்த பேரன் என் சமபளத்துல பிடிச்சுப்பான், நானும் குடும்பஸ்தனா ஆகிட்டேன், வரவு செலவு அதிகமா இருக்கும்ல,” அவன் சீரியஸான முகத்துடன் சொல்ல, பாட்டி சிரித்து விட்டார்….

“இந்த கிண்டல் பேச்சு இருக்கே, அது இப்போ வரைக்கும் உன்னை விட்டு போகலடா” பாட்டி சிரித்தபடி சொல்ல,… “அதெல்லாம் கூடவே பொறந்தது பாட்டி” என்றவன், தன் எதிரில் நின்று கொண்டிருந்த நித்திலாவை ஆழ்ந்து நோக்கினான்…..

நித்திலாவோ அவன் வந்து, அங்கு உட்கார்ந்த நொடியிலிருந்தே மறந்தும் அவன் புறம் பார்வையை திருப்பவில்லை, சுமித்ராவின் அருகில் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள்,….

“நித்திலா…. இன்னைக்கு நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுடா” லட்சுமணன் பாசமாக சொல்ல,…. “இல்லப்பா….. நான் சுமிக்கா, ஊர்மிளா அத்தை கூட சேர்ந்து சாப்பிட்டுகிறேன்” அவள் மென்மையான குரலில் சொல்ல.. “என்னது அப்பாவா?” குழம்பிய பார்வையுடன் பார்த்தார் அன்னம்…. மற்றவர்களின் பார்வையுமே அப்படி தான் இருந்தது,….

“நான் தான் அப்பான்னு கூப்பிட சொன்னேன், அவ என் மருமக மட்டும் இல்ல மகளும் கூட,” என்றவர்,… “சுமித்ராமா உன்னையும் சேர்த்து தான் சொல்றேன்” என்றார்,…. நித்திலாவும் சுமித்ராவும் தங்கள் மாமனாரை பெருமை பொங்க பார்த்தனர்,….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விவகாரத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்கிட்டு ஆறு மாசம் கணவன் மனைவி தானே அதனால் முழு உரிமை எடுத்துப்பேன் சொல்றானே என்ன ரகம் இவன்? 🤔

    எப்படி வந்தோம், ஏன் வந்தோம், நேத்து என்ன நடந்தது எல்லாம் மறந்துட்டு அக்மார்க் மருமகளாக சமையல் வேலைகளை இழுத்து போட்டு செய்ய ஆரம்பிச்சிட்டாளே நித்தி! 😂

    அன்னலட்சுமி பெயரில் மட்டும் தானா? அன்னம் வடிக்கிறது எல்லாம் கிடையாதோ? அதிகாரம் மட்டும் தூள் பறக்குது. மூத்த மருமகள் ம்ம்ம்ம்.

    பரவாயில்லை விக்ராந்த் பேச்சில் மட்டுமே கடினம் கொண்டுள்ளான் செயல்களில் இல்லை.

  2. நல்ல அழகான குடும்பம் … இவன் என்ன வில்லாதி வில்லனா இருப்பான் போல … விவாகரத்துக்கு கையெழுத்து வாங்கிட்டு எல்லாம் தப்பு தப்பா பண்றான் … நித்திலா பாவம்