Loading

அத்தியாயம் – 27

நித்திலாவை லாவண்யா அறையை விட்டு வெளியேறச் சொன்ன அந்த நொடி, விக்ராந்தின் உள்ளுக்குள் எரிமலை வெடித்தது. அடக்க முடியாத கோபத்துடன் அவளை ஏறிட்டவன், “நிலாவை வெளியே போகச் சொல்ல உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என இடியென முழங்கினான்.

​லாவண்யா அதிர்ச்சியில் உறைந்து போனாள். “விக்கு… என்னைப்பார்த்தா இப்படி கேட்கிற?” என அவள் நம்ப முடியாமல் வினவ, “உன்னைப் பார்த்துதான் கேட்கிறேன்! அவளை வெளியே போகச் சொல்ல நீ யாரு?” என அவளது முகத்திற்கு நேராகக் கேட்டான் விக்ராந்த்.

​”நான் உனக்கு மனைவியாகப் போறவ விக்கு! நமக்கு இடையில அவ இருக்கிறது எனக்குப் பிடிக்கல, அதான் வெளியே போகச் சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு?” என லாவண்யா தன் உரிமையைக் கொண்டாட முயன்றாள்.

அவளது பேச்சில் விக்ராந்திற்கு ஆத்திரம் இன்னும் அதிகமானது. “என் மனைவியை அவ ரூமை விட்டு வெளியே போன்னு சொன்னதுமில்லாம, என்ன தப்பிருக்குன்னு வேற கேட்கிறியா?” என எகிறிக்கொண்டு வந்தான்.

​”விக்கு… நீ ரொம்ப மாறிட்ட! என்னோட பழைய விக்கு நீ இல்லையோன்னு தோணுது,” என லாவண்யா ஆற்றாமையுடன் சொல்ல, விக்ராந்த் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும்
​”உண்மைதான்! இப்போ நான் உன் விக்கு இல்ல… நிலாவோட ஹஸ்பண்ட் விக்ராந்த்!” என்றான்..

​அந்த வார்த்தைகள் லாவண்யாவின் இதயத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்தன. “விக்கு… உன்னைத்தான் என் வாழ்க்கைன்னு நினைச்சு இங்கே வந்தேன், ஆனா நீ…” என அவள் அழத் தொடங்க, விக்ராந்த் சலனமின்றி… “ஐம் ஸாரி லாவண்யா… உன்னோட வாழ்க்கையைப் பார்த்துட்டு நீ போயிடு” என்றான்

“என்னோட லைஃபே நீ தான் விக்கு,” என்றாள்..

“ப்ச்.. என் லைஃப் என்னோட நிலா மட்டும் தான்” என அழுத்தமாக உரைத்தவன்,.. “இதுக்கு மேல உன்கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை. முடிஞ்ச அளவு இங்கிருந்து கிளம்பப் பாரு!” என்று சொன்னவன் நித்திலாவை தேடி சென்றான்,….

அவள் சுமித்ராவுடனும் மற்றவர்களுடனும் இருப்பதைக் கண்டவன், அங்கே எதாவது பேசினால் மீண்டும் சலசலப்பு ஏற்படும் என்று கருதி, அமைதியாக அலுவலகம் புறப்பட்டுச் சென்றான்.

​ஆனால், விக்ராந்தின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்ட லாவண்யாவிற்கு ரத்தம் கொதித்தது. ‘அவன் இப்படி நடந்து கொள்வதற்குக் காரணமே அந்த நித்திலாதான்!’ என அவள் மீது தீராத கோபம் கொண்டாள்.

​’நித்திலா இந்த வாழ்க்கையை விட்டுச் சென்றுவிட்டால், விக்ராந்த் மீண்டும் பழையபடி தனக்கே கிடைத்துவிடுவான்’ என வஞ்சகமாகக் கணக்குப் போட்ட லாவண்யா, நித்திலாவை எப்படியாவது இந்த வீட்டை விட்டு விரட்ட வேண்டும் எனத் தன் மூளையைக் கசக்கத் தொடங்கினாள்.

“ஆண்ட்டி நான் உங்க கிட்ட பேசணும்” அன்னலட்சுமியுடன் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட லாவண்யா, நித்திலாவை விரட்டுவதற்கானத் தன் முதல் காயை நகர்த்த திட்டமிட்டாள்,..

“சொல்லுமா,… சொல்லு, என்கிட்ட ஏன் இதெல்லாம் கேட்டுகிட்டு” அவர் சொல்ல,…”ஆண்ட்டி அவ, விக்குவோட அந்த காண்ட்ராக்ட் வைஃப் அவ எப்போ வீட்டை விட்டு போறதா இருக்கா?” என அலட்சியமாக கேட்டாள்,..

“அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே மா, மூணு மாசம் முடிஞ்சதும், அவ போயிடுவா” என்றார் அவர்,…

“அதான் நான் வந்துட்டேன்ல ஆண்ட்டி, இனியும் ஏன் அவ இங்க இருக்கணும், விரட்டி விட வேண்டியது தானே” என லாவண்யா ஆத்திரத்துடன் தூண்டில் போட, அன்னமோ.. “என்னால அப்படியெல்லாம் பண்ண முடியாதும்மா, நீ இதை பத்தி என் பையன் கிட்ட தான் கேட்கணும்” என்று பின்வாங்கினார்..

‘அவன் என்னை வீட்டை விட்டு போக சொல்றான், நீங்க பையன் கிட்ட கேட்க சொல்றீங்க, அவன் என்கிட்ட சொன்னதை இவங்க கிட்ட சொல்ல வேணாம், இவங்ககிட்ட சொன்னா வேலைக்காகாது. நாமளே தான் ஏதாச்சும் செஞ்சு அவளைத் துரத்தணும்’ என வஞ்சகமாக யோசிக்கத் தொடங்கினாள் லாவண்யா.

சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த நித்திலாவிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள் சுமித்ரா. “நித்தி… விக்ராந்த் உன்கிட்ட ஏதாச்சும் பேசுனாரா?”

​”பேசுனாருக்கா… ஆனா அவர் பேச்சைத் தொடர்ந்து கேட்க எனக்கு விருப்பம் இல்லை,” என்றாள் நித்திலா.

​சுமித்ரா அவளைத் தேற்ற முயன்று, “நித்தி… அவரோட மனசுல நீ தான் இருக்கன்னு எனக்குத் தோணுது. நீ ஏன் ஒருமுறை…” என இழுக்க, நித்திலாவின் கண்களில் ஒரு கசப்பான வேதனை மின்னி மறைந்தது. அந்த அடிபட்டப் பார்வையைக் கண்டதும் சுமித்ரா மேற்கொண்டு பேச முடியாமல் நின்றாள்.

​”உங்களுக்கு அவரைப் பத்தித் தெரியாதுக்கா!” என வெடித்தவள்.. “முதல் ராத்திரி அன்னைக்கு டிவோர்ஸ் கொடுத்ததோடு அவர் நிறுத்தல. நான் எப்போதெல்லாம் சந்தோஷமா இருக்கேனோ, அப்போதெல்லாம் ‘இன்னும் ஆறு மாசம் தான் இருக்கப் போற’ன்னு சொல்லிச் சொல்லியே என்னை வேதனைப்படுத்தினாரு. டிவோர்ஸ் பண்ண முடிவு பண்ணியாச்சுன்னா என்னை விலக்கி வச்சிருக்க வேண்டியதுதானே? அவரோட ஆசைக்காக என்னை யூஸ் பண்ணிக்கவும் செஞ்சாரு. இதெல்லாம் உங்களுக்குச் சரியா படுதாக்கா?”

​அவளது நியாயமான அந்தக் கேள்விக்குச் சுமித்ராவிடம் பதில் இல்லை. “சரி நீ எமோஷனல் ஆகாத நித்தி… நான் தெரியாமக் கேட்டுட்டேன்,” என வருத்தத்துடன் அந்தப் பேச்சை முடித்துக்கொண்டாள் சுமித்ரா.

********

மரகதப் பாட்டியும் ஊர்மிளாவும் தனிமையில் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். “அத்தை, நித்திலா வாழ்க்கை கேள்விக்குறியாகி நிக்குது. அந்தப் பொண்ணுக்கு நாம பெரிய அநியாயம் பண்ணிட்டோம். இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” எனக் கவலையுடன் கேட்டார் ஊர்மிளா.

​மரகதம் தீர்க்கமான குரலில்.. “நித்திலா இந்த வீட்டுக்குள்ள வந்த நிமிஷமே அவ நம்ம வீட்டுப் பொண்ணாகிட்டா. அவளுக்கு அநியாயம் நடக்க நான் விடமாட்டேன். நான் ஒரு முடிவு பண்ணி வச்சிருக்கேன். அதுக்கு அவளை நாமதான் சம்மதிக்க வைக்கணும்” என்றவர்… மேலும்,
“நித்திலா வேண்டி கேட்டுகிட்டதால அவ பாட்டி தாத்தாக்கு இங்க நடந்தது எதுவும் தெரியாம பார்த்துகிட்டேன், அதுவும் ஒரு வகையில் நல்லது தான், நித்திலாக்கு ஒரு நியாயம் கிடைத்த பிறகு அவங்க கிட்ட சொல்லிக்கலாம்னு நானும் அமைதியா இருந்துட்டேன்” என்றார் மரகதம்…

“இப்போ நீங்க என்ன அத்தை முடிவு பண்ணிருக்கீங்க” ஊர்மிளா கேட்டத்திற்கு, ​மரகதம் சொன்ன அந்த ரகசிய முடிவு ஊர்மிளாவை அதிர வைத்தது.

********

டைனிங் டேபிளில் அமர்ந்து நித்திலாவும் சுமித்ராவும் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாவண்யா, அவர்களை ஒரு வேலையாட்களைப் பார்ப்பது போல ஏளனமாகப் பார்த்து, “ஏய்! எனக்கு ஒரு ஃப்ரூட் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா!” என அதிகாரத் தொனியில் ஆர்டர் செய்தாள்.

​இருவரும் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட லாவண்யா, “ஏய்… சொல்றது காதுல விழல? உன்னைத்தான் சொல்றேன்!” என நித்திலாவைச் சுட்டிக்காட்டி கத்தினாள்.

இதுவரை அமைதியாக இருந்த சுமித்ராவிற்கு கோபம் தலைக்கேறியது. “கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் எங்களால எதுவும் செய்ய முடியாது! வேணும்னா நீயே போய் போட்டு குடி!” எனப் பொரிந்து தள்ளினாள்.

​”ஏய்… யாரைப் பார்த்து நாய்ன்னு சொன்ன?” என லாவண்யா ஆவேசமாகப் பாய, சுமித்ரா துணிச்சலுடன் எழுந்து நின்று.. “உன்னைப்பார்த்துதான் சொன்னேன்!” என்றாள்…

“என்னை பத்தி தெரியாம நீ பேசிக்கிட்டு இருக்க” அவள் பாய்ந்து கொண்டு வர…. “ஏன் தெரியாது? உன்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். இன்னொருத்தி புருஷனுக்கு ஆசைப்படுற அசிங்கமான பொண்ணு தானே நீ? உனக்கும் *** நிற்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை!” என இதுவரை யாரிடம் இத்தனை வேகத்தில் பேசிடாத சுமித்ரா, லாவண்யாவின் முகத்தில் அறைந்தாற்போல் பேசினாள்…

சுமித்ராவின் வார்த்தைகள் லாவண்யாவை நிலைகுலைய வைத்தன. கண்கள் சிவக்க நின்றிருந்தாள், சுமித்ரா மீண்டும் எதோ பேச முயல… நித்திலா குறுக்கிட்டு.. “அக்கா… வேணாம்! தயவு செஞ்சு அமைதியா இருங்க,” என சுமித்ராவைத் தடுத்தாள்.
​இப்போது லாவண்யாவின் மொத்த வன்மமும் நித்திலா பக்கம் திரும்பியது.

“இப்போ எனக்கு ஜூஸ் கொண்டு வருவியா மாட்டியா?” என அவள் அதட்ட, சுமித்ரா “அவ கொண்டு வர மாட்டா!” என உறுதியாக மறுத்தாள்.

​ஆனால், வீட்டில் மேலும் ஒரு பிரட்சனையை விரும்பாத நித்திலா, “அக்கா ப்ளீஸ்… சும்மா இருங்க,” என சுமித்ராவைக் கெஞ்சிவிட்டு, லாவண்யாவை நோக்கி, “நான் கொண்டு வர்றேன்,” என்றாள். லாவண்யா ஒரு வெற்றிக் களிப்புடன், அவர்களை முறைத்துப் பார்த்தவாறே முற்றத்தில் சென்று அமர்ந்தாள்.

​”நித்தி! நீ ஏன்டி அவளுக்கு இதெல்லாம் பண்ணனும்?” என சுமித்ரா ஆதங்கப்பட, “பிரச்சனை வேணாம்க்கா… ஒரு ஜூஸ் போடுறது என்ன பெரிய வேலையா?” என்றாள் நித்திலா

​”அது சின்ன வேலையாவே இருக்கட்டும், அவளுக்காக நீ ஏன் செய்யணும்?” என சுமித்ரா கேட்க, “அக்கா… அவ ஏதோ பிரச்சனை பண்ணணும்னே இப்படிப் பண்றா. அவ சொல்றதை செஞ்சு கொடுத்துட்டா வாயை மூடிட்டு இருப்பாள்ல? நீங்க டென்ஷன் ஆகாதீங்க,” என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்றாள் நித்திலா.

​சமையலறைக்குள் செல்லும் நித்திலாவைப் பார்த்த சுமித்ரா, ‘முதல்ல இவளை அடக்கணும்’ என மனதிற்குள் முணுமுணுத்தவளுக்கு லாவண்யா மீது அடக்க முடியாத அளவிற்கு ஆத்திரம் வந்தது,..

நித்திலா, லாவண்யாவிற்காக பழச்சாற்றை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்,… அவளை பார்த்தபடியே வாங்கிக்கொண்ட லாவண்யா,.. அங்கிருந்து நகர முற்பட்டவளிடம்”நான் உன்கிட்ட பேசணும், உட்காரு,” என சோபாவைச் சுட்டிக்காட்டினாள். ப

“என் கிட்ட நீங்க என்ன பேசணும்” நித்திலா குழப்பமாக கேட்க,… “சொல்றேன் உட்காரு” லாவண்யா சொல்லவும், பிரட்சனை வேண்டாம் என நினைத்துவேறு வழியின்றி அமர்ந்தாள்,…

லாவண்யா திடீரென தன் குரலை மாற்றிக்கொண்டு… “உன்கிட்ட நான் கொஞ்சம் ரூடா நடந்துக்கிட்டேன், அதுக்கு ஃபர்ஸ்ட் ஸாரி,” என்றவளை நித்திலா வியப்புடன் பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்கிற,.. பேசிகலி நான் அப்படி பேசுற கேர்ள் கிடையாது, ஸ்டார்டிங்ல ஏதோ ஒன்னு என்னை அப்படி பேச வச்சிடுச்சு” என்றாள், அவள் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா,….

“இப்போ கூட,.. நான் ஒரு ஜூஸ் தான் கேட்டேன், அந்த பொண்ணு தான் ஃபர்ஸ்ட் ஓவரா பேசுச்சு, அதான் பதிலுக்கு நானும் பேசினேன்” அவள் சொல்ல,… “அக்கா அப்படி பேசுனது தப்பு தான், அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றாள் நித்திலா,…

“இட்ஸ் ஓகே,…” என்றவள்….”விக்கு என்னை பத்தி உன்கிட்ட எது வரைக்கும் சொல்லிருக்கான்னு தெரியல, நானும் அவனும் படிக்கும் போது தான் லவ் பண்ண ஆரம்பிச்சோம், நான் தான் ஃபர்ஸ்ட் அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன், அவனுக்கும் என்னை பிடிச்சிருந்ததால அக்சப்ட் பண்ணிக்கிட்டான், அதுக்கு அப்புறம் நாங்க ரொம்ப சந்தோஷமா காதலிசிக்கிட்டு இருந்தோம், படிப்பு முடிஞ்சதும் அவன் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம், இந்த பிரிவு எங்க ரெண்டு பேருக்கும் நிறைய கஷ்டத்தை கொடுத்தது, நிமிஷத்துக்கு ஒரு தடவை ஐ லவ் யூ சொல்லுவான், அவன் போனதும் அதையெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணேன், அவனை அளவுக்கு அதிகமா காதலிச்சேன், அவனும் தான்,… அப்போ பிஸ்னஸ் பத்தி யோசிக்காம இருந்திருந்தா இந்நேரம் விக்குவோட வொய்ஃபா நான் இங்க இருந்திருப்பேன்,…”

லாவண்யா அடுத்ததாக வீசிய வார்த்தை நித்திலாவை நிலைகுலைய வைத்தது.

“விக்கு மேரேஜ் பண்ண போறதை பத்தி சொன்னதும், நான் தான் அவனுக்கு டிவோர்ஸ் பத்தி ஐடியா கொடுத்தேன், நான் சொல்லி தான் அவன் எல்லாம் பண்ணான்,… இப்படி பண்ணா நாங்க சேருவதுல பிராப்ளம் வராதுன்னு நினைச்சேன்,

பட் விக்கு பேமிலி மெம்பர்ஸ் நான் நினைச்சதை விட ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க, அவன் மார்னிங் கூட இதை சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணான், அவனால அவன் பேமிலியை எதிர்த்து எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்றான், எங்களுக்கு என்ன பண்ணுறதுனே தெரியல” என்றவள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்,…

நித்திலாவின் இதயம் அதிர்ந்தது.
“அப்படினா நீங்க சொல்லி தான் அவர் எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுத்தாரா?” எனக் கேட்டாள்,..

​”ஆமா! அவன் மேரேஜை நிறுத்த வழி தெரியாமத் தவிச்சான், அதான் நான் இந்த ஐடியா கொடுத்தேன்,” என்றாள் லாவண்யா கூசாமல்.

நித்திலா வருத்தத்துடன், “நீங்களும் ஒரு பொண்ணு தானே? இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சுப் பார்க்கலையா?” எனக் கேட்க, லாவண்யா தந்திரமாக.. “ஐம் ஸாரி… நான் ஃபாரின்ல வளர்ந்த பொண்ணு, அங்க இதெல்லாம் சாதாரணம். ஆனா இந்தியாவுல வளர்ந்த விக்ராந்த் கூட இது தப்புன்னு ஒரு வார்த்தை சொல்லலையே!”

​லாவண்யா பேசிய வார்த்தைகள் நித்திலாவின் மனதை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அதுவரை லாவண்யாவின் மீது இருந்த சிறு கோபம் கூட இப்போது மறைந்து, ஒருவிதப் பரிதாபமே ஏற்பட்டது. ‘அவள் சொல்வதும் சரிதானே? அவள் வெளிநாட்டில் வளர்ந்த பெண், அங்கே கலாச்சாரம் வேறு, வாழ்க்கை முறை வேறு. அவளுக்கு நம் ஊர் பழக்கவழக்கங்களும், ஒரு பெண்ணின் மாங்கல்ய பலமும் எப்படித் தெரிந்திருக்கும்?’ என நித்திலா தனக்குள் சமாதானம் தேடிக்கொண்டாள்.

​ஆனால், அதே சமயம் விக்ராந்தின் மீது அவளுக்குப் பலமடங்கு ஆத்திரமும் வெறுப்பும் மேலோங்கியது. ‘நம் கலாச்சாரத்தைத் தெரிந்தவனும், இங்கே வளர்ந்தவனுமான அவனாவது அவளுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கும் இந்த விவாகரத்துத் திட்டத்திற்கு அவன் எப்படிச் சம்மதித்தான்? காதலி சொன்னாள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வானா?’ என விக்ராந்தின் பொறுப்பற்றத் தன்மையை எண்ணி நித்திலா குமைந்து போனாள்.

​நித்திலாவின் முகத்தில் தோன்றி மறைந்த அந்த மாற்றங்களையும், விக்ராந்த் மீது அவள் கொண்ட அந்தத் தீவிரமான கோபத்தையும் கவனித்த லாவண்யாவிற்குப் பெரும் நிம்மதி ஏற்பட்டது. தான் வீசியத் தூண்டிலில் நித்திலா சரியாகச் சிக்கிக்கொண்டதை உணர்ந்தவள், ‘என் திட்டம் பலித்துவிட்டது’ என்று உள்ளுக்குள் வஞ்சகமாகச் சிரித்துக் கொண்டு,.. “ப்ளீஸ் நித்திலா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு. என் விக்குவை என்கிட்ட சேர்த்து வச்சிடு. நீ சொன்னா அவன் ஃபேமிலி கேட்கும்னு விக்குவே சொன்னான். நீ எப்படியும் இங்கிருந்து போகப் போறவ தானே? போறதுக்கு முன்னாடி எனக்கொரு லைஃப் அமைச்சு கொடுத்துட்டுப் போ,” எனப் போலியாகக் கெஞ்சினாள்.

​லாவண்யா வீட்டிற்குள் நுழைந்தபோதே விக்ராந்துடன் வாழும் ஆசையைப் புதைத்துவிட்ட நித்திலாவிற்கு, அவள் மீது பரிதாபம் தான் வந்தது. தன் காதல் செத்துப்போனாலும், இந்த பெண்ணின் வாழ்க்கையாவது மிஞ்சட்டும் எனத் தீர்மானித்தாள்.

​”நான் பாட்டி கிட்டயும் அப்பா கிட்டயும் பேசுறேன். நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்,” என நித்திலா வாக்குறுதி கொடுத்த அந்த நொடி, லாவண்யாவின் முகத்தில் ஒரு வஞ்சகமான வெற்றிப் புன்னகை மின்னி மறைந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விக்ராந்த் நிலா பேசினா தான் இதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும் ..

  2. ஆஹா தியாகச் செம்மல்!

    அதே நாடு அதே தாலி அதே கலாச்சாரம் கொண்ட இடத்தில் தானேம்மா நீயும் வளர்ந்த.

    அவனுக்கு 🤝 ஐடியா யார் கொடுத்து இருந்தாலும் அவன் ஒத்துக்ககூடாதுனா! நீயும் அவன் சொன்னான்னு 🤝 sign செய்ய ஒத்து இருந்திருக்க கூடாது தானே.

    உனக்கு 🤝 சம்மதிக்க தாத்தா, பாட்டினு ஒரு காரணம் இருந்த மாதிரி, அவனுக்கும் 🤝 போட ஒரு காரணம் இருந்து இருக்கும் இல்லையா.

    அதை சொல்ல தேவையில்லாத போதும் நீயாக கேட்டுக்கொள்ளவில்லை, இப்பொழுது அவனே சொல்ல வந்த போதும் கேட்டுக்கொள்ளவில்லை.

    லாவண்யா பக்க விளக்கத்தை மட்டும் தேநீர் இடைவெளி நேரக்கதைப்போல் பொறுமையாக கேட்கின்றாய்.