Loading

அத்தியாயம் – 26

தன்னைப் பொருட்படுத்தாமல் நித்திலாவைத் தேடிச் சென்ற விக்ராந்தின் செயல் லாவண்யாவிற்குப் பெரும் ஆத்திரத்தைத் தந்தது. ‘எப்போதும் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன், இன்று இப்படி என்னை அவமதிப்பதா?’ என்ற எரிச்சல் அவளுக்குள் புகைந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணி, அவனைத் தேடி மாடிக்கு வந்தாள்.

​அங்கே சுவரில் சாய்ந்து வெறித்த பார்வையுடன் நின்றிருந்த விக்ராந்தின் முன் வந்து நின்றவள்… “விக்கு… நான் உன்கிட்ட பேசணும்,” என்றாள் அதிகாரத்துடன்.

​அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. “சொல்லு…” என்றான் வெறுமையாய்.

​”நீ என்னை இப்பவும் லவ் பண்ணுறதானே விக்கு?”  லாவண்யா நேரடியாகவே அந்த வினாவைத் தொடுத்தாள். ஆனால் விக்ராந்திடமிருந்து பதில் வரவில்லை. அமைதி மட்டுமே அங்கு நிலவியது.

அவளது கோபம் இப்போது உச்சகட்டத்தை எட்டியது. “விக்கு… உன்கிட்டதான் கேட்கிறேன்!” என அவள் கத்த, விக்ராந்த் மிகவும் அலட்சியமாக, “தெரியல!” என்றான்.

​அந்த ஒற்றை வார்த்தை லாவண்யாவைப் பித்துப் பிடிக்க வைத்தது. “தெரியலன்னா என்ன அர்த்தம்?” எனக் கண்களைச் சுருக்கி அவள் கேட்க, “பச்… ப்ளீஸ் லாவண்யா, என்னை கொஞ்ச நேரம் தனியா விடு,” என சலிப்புடன் சொன்னான் விக்ராந்த்.

​அவளது ஈகோ காயப்பட்டது. அவனருகில் நெருங்கி வந்து, மிக அழுத்தமான குரலில்.. “விக்கு… நான் உன்னை என்னைக்கும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னைப்பத்தி உனக்குத் தெரியும். இந்த லாவண்யா ஆசைப்பட்டது கிடைக்கலன்னா, அவ எந்த எல்லைக்கும் போவா!” என எச்சரித்தவள் கோபமாக அங்கிருந்து சென்றாள்..

​லாவண்யா வீசிவிட்டுச் சென்ற அந்த மிரட்டல் விக்ராந்தின் காதுகளில் விழவே இல்லை. அவன் மனமெங்கும் நித்திலா மட்டுமே நிறைந்திருந்தாள்.

பழைய விக்ராந்தாக இருந்திருந்தால், அவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தித் தன் காதலைச் சொல்லியிருப்பான். ஆனால் இப்போது, அவளது கண்ணீர் அவனைப் பலவீனப்படுத்தி இருந்தது.

​அவளிடம் உண்மையைச் சொல்லும்போது, அவளது கோபத்தில் அந்த உண்மையும் எரிந்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. அவளை நம்ப வைக்கத் தகுந்த ஆதாரமோ அல்லது சரியான சந்தர்ப்பமோ அமைய வேண்டும் என அவன் மௌனமாகப் போராடிக்கொண்டிருந்தான்.

“என்னங்க,.. என்னாச்சு ரொம்ப டென்ஷன்ல இருக்க மாதிரி இருக்கு, ஆபீஸ்ல எதுவும் ப்ராப்ளமா?” அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த வித்தார்த்திடம் தான் விசாரித்தாள் சுமித்ரா,…

“ஆபீஸ்ல உள்ள பிராப்ளத்தை அங்கேயே முடிச்சிட்டு வந்துடுவேன், வீடு வரைக்கும் கொண்டு வர மாட்டேன்னு உனக்கு தெரியாதா சுமித்ரா” என்றான் வித்தார்த் கோபக் குரலில்….

அவன் கோபத்தை மெல்லிய புன்னகையுடன் எதிர்கொண்டவள், அவனருகில் அமர்ந்து, அவனது கரத்தை தன் கரத்துடன் கோர்த்துக் கொண்டு… “என்னங்க ஆச்சு, என்கிட்ட இப்படிலாம் பேச மாட்டீங்களே, என்ன பிரட்சனை” அவன் கோபம் கொண்டதை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் மிகவும் பொறுமையாக கேட்டாள் சுமித்ரா,…

மனைவியின் நிதானமான வார்த்தைகளின் பின் தான் வித்தார்த்திற்கு தன் தவறு புரிந்தது, யார் மீதோ இருந்த கோபத்தை சுமித்ராவிடம் காட்டி விட்டோம் என்பது புரிய.. “ஸாரி சுமி, நான் ஏதோ டென்ஷன்ல” அவன் வருத்தத்துடன் சொல்ல,  அவனை மேற்கொண்டு பேச விடாமல் நிறுத்தியவள்,… “இந்த ஸாரி பூரிலாம் வேணாம், என்னனு விஷயத்தை சொல்லுங்க” என்றாள்

அதன் பின் வித்தார்த் இன்று விக்ராந்திடம் தான் பேசியவற்றையும், அவன் அதற்கு ஒரு பதில் கூட சொல்லாததையும் கோபத்துடன் கூறினான்.

“அவன் மனசுல என்னத்த நினைச்சிக்கிட்டு இப்படிலாம் பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியல சுமி, அவனை பத்தி நினைச்சாலே வெறுப்பா தான் இருக்கு” என்றான்,…

சுமித்ராவோ… “எனக்கு என்னமோ விக்ராந்தை முழுசா தப்பா நினைக்க முடியலங்க, அவரும் இதையெல்லாம் எதிர்பார்க்கலனு தான் தோணுது” என தான் மாடியில் கண்ட காட்சியைச் சொன்னாள்..

“இப்போ என்னாலயும் என் தம்பியை தப்பா நினைக்க முடியல, ஆனா அவனை மன்னிக்கவும் முடியல, நித்திலா கிட்ட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கினது அவன் தானே” வித்தார்த் சொல்ல….”ம்ம்ம்…. எனக்கும் இது தான் புரிய மாட்டேங்கிது, ஆனா இப்போ நித்திக்கு ஆறுதலா நாம தான் இருக்கனும், நம்ம குடும்பத்துல உள்ளவர்களால தான், அவ இப்போ மனுஷியா நடமாடிட்டு இருக்கா” என்று கூற வித்தார்த்திற்கு நிம்மதியற்ற பெருமூச்சு ஒன்று வெளிவந்தது…

அன்று இரவு உணவை கூட அனைவரும் தனி தனியாக தான் உண்டனர், வழக்கமாக இருக்கும் பரபரப்பு இல்லாமல் அமைதியாகவே கழிந்தது,… நித்திலாவிற்கு தான் எங்கே போவது என தெரியாமல், முற்றத்திலேயே அமர்ந்து விட்டாள், அவளின் எண்ணம் புரிந்து, அவளை காண வந்தான் விக்ராந்த்….

“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றவனுக்கு பதில் சொல்ல பிடிக்காமல், தலைகுனிந்து மௌனமாய் அமர்ந்திருந்தாள் நித்திலா,….

“நீ என்ன தான் முறுக்கிக்கிட்டு போனாலும், உன்னை நான் விட்டுட்டு போக மாட்டேன்னு உனக்கு தெரியும், பிடிவாதம் பண்ணாம என் கூட வா நிலா” அவன் கெஞ்சல் குரலில் சொல்ல,…. “எனக்கு உங்க கூட உங்க ரூம்ல இருக்கிறது சுத்தமா பிடிக்கல” என்றாள் எரிச்சலான குரலில்….

“உனக்கு பிடிச்சாலும் சரி, பிடிக்கலனாலும் சரி, நீ என்கூட தான் இருந்து ஆகணும்” என்றான் அழுத்தமான குரலில்,…

“அதான் நீங்க லவ் பண்ணுற பொண்ணு உங்களை தேடி வந்துட்டாள்ல, இப்போதும் ஏன் என்னை தொந்திரவு பண்ணுறீங்க, அவ கூட போய் கொஞ்சிக்கிட்டு இருக்க வேண்டியது தானே” என்றாள் கோபமான பார்வையில்,…

அத்தனை நேரம் பொறுமையாக இருந்தவன், அவளது இந்த சொல்லில் கோபம் கொண்டான், அவளது புஜத்தை அழுத்தமாக பற்றி தன் பக்கம் இழுத்தவன்,…. “இன்னும் ஒரு வார்த்தை பேசுன, அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்றான் கண்கள் சிவக்க…

அவனது கண்களில் தெரிந்த கோபத்தை கண்டு அவளுக்கு சற்று பயம் எழுந்தாலும், விழிகள் சிவக்க அவனை நேருக்கு நேர் பார்த்தவள்,… “இப்போ மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்க” என்றாள்….

அதற்கு மேல் அவளிடம் பேசினால், கோபத்தில் அவளை காயப்படுத்த கூடும் என்பது புரிந்தவன், தன்னால் அவள் இதற்கு மேலும் துன்பப்பட கூடாது என்று அடுத்த நொடியே அவ்விடத்திலிருந்து அகன்று விட்டான்,… ஆனால் அவளுக்கோ அவனின் கோபம் கூட காயத்தை ஏற்படுத்தவில்லை, இந்த விலகல் தான் காயத்தை உண்டாக்கியிருந்தது,…

உரிமையாக அவளின் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு, தங்களறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு, அவனின் இந்த விலகல் பெரும் வலியை உண்டுபண்ணியது..

குளிராக இருந்ததால் அவள் மாடிக்கும் செல்லவில்லை, முற்றத்திலுள்ள சோபாவிலேயே படுத்துக் கொண்டாள், அதுவும் சில நிமிடங்களுக்கு தான், சிறிது நேரத்தில் சோர்வின் காரணமாக நித்திலா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட, அவள் தூங்கியதை உறுதி செய்துகொண்டு மெல்ல அவளருகில் வந்தவன், அவளது வதங்கிய முகத்தைக் கண்டு பெருமூச்சு விட்டான்.

​நேற்று போலவே இன்றும், ஒரு மலரை எடுப்பது போல அவளை மிகவும் மென்மையாகத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான். அந்தப் பிடிவாதக்காரி விழித்திருந்தால் நிச்சயம் அவனைத் தடுத்திருப்பாள். ஆனால் உறக்கத்திலோ அவள் அவன் மார்பில் சாய்ந்து நிம்மதியாக இருந்தாள்.

​படிகளில் ஏறி மெதுவாகத் தங்கள் அறைக்கு வந்தவன், அவளைப் படுக்கையில் கிடத்தினான். அவளுக்குப் போர்வை போர்த்திவிட்டு, தானும் அவளருகிலேயே படுத்துக்கொண்டான். அவளது சுவாசத்தின் சத்தம் மட்டுமே அந்த அறையில் ஒலித்துக்கொண்டிருந்தது.

மறுநாள் காலை, உறக்கம் கலைந்து நித்திலா தன் கண்களைத் திறந்தபோது, அவளுக்கு மிக அருகில் ஒரு குழந்தையின் மென்மையுடன் துயில் கொண்டிருந்த விக்ராந்தின் முகம் தான் தெரிந்தது. அவன் உறங்கும் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்தவள், தன் கரத்தை அவனது கேசத்தை வருடுவதற்காக நீட்டினாள்.

ஆனால், அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டவள், சட்டெனத் தன் கையைத் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

​படுக்கையிலிருந்து எழுந்து செல்ல முயன்றபோதுதான் கவனித்தாள் அவளது ஒரு கரத்தை விக்ராந்த் மிகவும் அழுத்தமாகப் பற்றியிருந்ததை. அந்தப் பிடியில் ஒருவிதமான உரிமையும், தவிப்பும் கலந்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

அவனது அந்தப் பிடியைக் கண்டதும் நித்திலாவின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் அலைமோதத் தொடங்கின.
​’இவன் மனசுல என்னதான் இருக்கு? ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னான்… இப்போ அவ இந்த வீட்டுக்குள்ளேயும் நுழைஞ்சிட்டா! இவன் என்னடான்னா இன்னும் மூணு மாசம் மீதி இருக்கு, அதுவரைக்கும் நீ இங்கிருந்து போகக் கூடாதுன்னு மிரட்டுறான். நைட்டு கோபப்பட்டுப் பேசிட்டுப் போனவன், இப்போ என்னைத் தூக்கிட்டு வந்து ரூம்ல படுக்க வச்சிருக்கான்… இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்?’

‘​நேற்று ஏதோ சொல்ல வந்தானே, அதை ஒருவேளை தான் கேட்டிருக்க வேண்டுமோ’ என்ற எண்ணம் ஒரு கணம் அவள் தலைக்குள் மின்னியது.

ஆனால் அடுத்த கணமே.. ‘என்ன சொல்லப் போறான்? என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு சொல்லுவான்… எனக்குத் தெரியும்! ஆனா அவன் இப்படிச் சொல்றதுக்குக் காரணம் என் மேல இருக்கிற அன்பால இல்லைன்னு எனக்கு நல்லாவே புரியுது. அவனோட ஆசைக்கு நான் வேணும்… அதுக்காக வேணும்னா அப்படி நினைப்பான். ஆனா அவன் ஆசைக்கு நான் ஒன்னும் ஆள் இல்ல!’ ​இந்த எண்ணம் மேலோங்கியதும் அவளுக்குள் கோபம் கொப்பளித்தது. சுருக்கென வந்த அந்த ஆத்திரத்தில், அவனது இரும்புப் பிடியிலிருந்து தன் கரத்தை வழுக்கட்டாயமாக உருவிக்கொண்டவள், திரும்பிப் பாராமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.

​காலை கடன்களை முடித்து, தயாராகி அறையை விட்டு வெளியேற முயன்ற நித்திலாவை, “பேபி!” என்ற விக்ராந்தின் குரல் தடுத்தது. அப்படியே சிலையாக நின்றவளை நோக்கி, “நான் குளிச்சிட்டு வர்றேன், என்னோட டிரஸ் எல்லாம் எடுத்து வை,” என்றான் படுக்கையிலிருந்து எழுந்தவாறே.

​திரும்பி அவனை ஏறிட்டவள், “முடியாது!” எனத் தடாலடியாகப் பதிலளித்தாள்.

​புருவம் உயர்த்திப் பார்த்த விக்ராந்த், “ஏன் முடியாது?” எனக் கேட்க, “எந்த உரிமையில உங்களுக்குத் தேவையானதை என்கிட்ட பண்ணச் சொல்றீங்க?” என எரிச்சலுடன் வினவினாள் நித்திலா.

​”பொண்டாட்டிங்கிற உரிமையில தான்!” விக்ராந்த் பட்டென்று சொன்ன பதில் அவளை எரிச்சல் பட வைத்தது. “யார் யாருக்கு பொண்டாட்டி? அதெல்லாம் எப்போவோ முடிஞ்சு போச்சு,” என அவள் வாதிட, அவனோ விடவில்லை. “ஏன் பேபி உனக்கு என்ன அவ்வளவு நியாபக மறதியா, நேத்து தானே சொன்னேன், இன்னும் த்ரீ மந்த்ஸ்க்கு நீ என்னோட பொண்டாட்டி தான்னு, அதுவரைக்கும் நான் சொல்றதைத்தான் நீ கேட்கணும்,” எனக் கறாராகச் சொன்னான்.

​”முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க?” என நித்திலா சவால் விட, “முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க” அவள் கூர்மையான பார்வையுடன் வினவ… “என்ன பண்ணுவேன், உன் தாத்தா பாட்டி கிட்ட தான் ஃபர்ஸ்ட் இதை பத்தி சொல்லுவேன்” என்றான்…

“எப்போ பார்த்தாலும் இதையே சொல்லி என்னை லாக் பண்ணாதீங்க, தாராளமா போய் சொல்லுங்க,” என்றாள்…

“ஓகே பேபி, போய் சொல்ற அளவுக்கு எனக்கு அவ்வளவு பொறுமை இல்ல, நான் போன்லயே சொல்லிடறேன்” என்றவன், தன் போனை கையில் எடுத்தான், நித்திலாவின் இதயம் ஒரு கணம் ‘பக்’ என்றது.

அவன் போனை காதில் வைக்க,..
“கொஞ்சம் நிறுத்துங்க,… இப்போ என்ன உங்களுக்கு வேண்டியதை நான் எடுத்து வைக்கணும் அவ்வளவு தானே, பண்ணி தொலைக்கிறேன்” அவள் சினத்துடன் சொல்ல,.. “ம்ம்ம்… குட்”  என்றவன் போனை மேஜையில் வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்…

ஓரிரு நிமிடங்களில் எல்லாம் அவன் குளித்து முடித்து வந்தவன் நித்திலா தந்த உடையை அணிந்து கொண்டான்,.. முழுவதுமாக தயாராகி முடித்ததும், அங்கிருந்து நகர முயன்ற நித்திலாவின் கரம் பற்றி நிறுத்தினான் விக்ராந்த்.

​”பேபி… ப்ளீஸ், என்கிட்ட இப்படி இருக்காத. எனக்குக் கஷ்டமா இருக்கு,” என அவன் வருத்தமாகச் சொல்ல, “கஷ்டமெல்லாம் மத்தவங்களுக்குத்தான், உங்களுக்கு இல்லை,” என அவள் ஆவேசமாகச் சீறினாள்.

“இப்படியெல்லாம் நடக்கும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல பேபி, லாவண்யா இங்க வருவானு எனக்கு நிஜமா தெரியாது” என்றான்

“ஓ…. உங்கள நம்புறேன், ஆறு மாசம் முழுசா முடியுறதுக்குள்ள அந்த பொண்ணு இங்க வருவான்னு உங்களுக்கு தெரியாது, தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பீங்க, ஏன்னா அடுத்த மூணு மாசம் என்னை  உங்களால அனுபவிக்க முடியாம போயிடுமே, என்ன நான் சொல்றது கரெக்ட் தானே” லாவண்யாவின் வருகையைப் பற்றி அவன் விளக்க முயன்றபோது, நித்திலா அவனது இதயத்தைச் சுடும் வார்த்தைகளை வீசினாள்.

விக்ராந்தின் கண்கள் வலியால் சிவந்தன. “நான் உன்னை வெறும் உடம்பு சுகத்துக்காகத்தான் பயன்படுத்துறேன்னு உனக்குத் தோணுதா நிலா?” எனக் கேட்டான்.

“அதுதானே உண்மை!” என அவள் சலிப்புடன் சொல்ல, அவனது முகம் அப்படியே வாடிப் போனது.
அவள் அதை கண்டாலும் கண்டு கொள்ளாதது போல் இருந்துவிட்டாள்,…

​”ஓகே நிலா… இப்போ நான் சொல்றதை மட்டும் கேளு. அதுக்கு அப்புறமும் உனக்கு அப்படித் தோணுச்சுன்னா நீ என்னைச் செருப்பால அடிச்சாலும் தாங்கிக்கிறேன்,” என அவன் ஏதோ ஒரு பெரிய உண்மையை உடைக்க முற்பட்ட அந்த நொடி… ​”விக்கு… விக்கு டார்லிங்!” ​அறை கதவை லாவண்யா தட்டும் சத்தம் இடியாய் விழுந்தது.

நித்திலா அவனை அடிபட்டப் பார்வை பார்த்து விட்டு கதவைத் திறக்க, லாவண்யா உள்ளே புகுந்தாள். நித்திலாவை ஒரு புழுவைப் போலச் சலிப்புடன் பார்த்த லாவண்யா, நேராக விக்ராந்திடம் சென்று..
​”விக்கு… நான் உன்கிட்ட முக்கியமான விஷயத்தைப் பேசணும்,” என லாவண்யா உரிமையோடு சொல்ல, நித்திலாவின் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

என்ன தான் அவள் அவனை விட்டு விலகி போக நினைத்தாலும் அவளால் இதையெல்லாம் பார்க்க முடியவில்லை, கால்களைக் கூட நகர்த்த முடியாமல் அவள் அங்கேயே தவித்து நிற்க, “நாங்க தனியா பேசணும், ப்ளீஸ் கொஞ்சம் கிளம்புறியா?” அவள் நித்திலாவை துரத்த, ​அதற்கு மேல் அங்கு நிற்க வலிமையற்றவளாய், கண்கள் ஆறாய்ப் பெருக நித்திலா அங்கிருந்து வெளியேறினாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
25
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விக்ராந்த் நீ என்ன உண்மையை தான் சொல்ல போற .. சீக்கிரம் சொல்லு பா ..

  2. தம்பியின் மனம் பிடிபடாமல் கவலையில் உலவுகின்றான் வித்தார்த்.

    உனக்கு பிடிக்கலையென்றாலும் கூட இருந்து தான் ஆகணும் மா? அடேய் இப்படி மிரட்டல் விடுறதுக்கு, தூங்குன பிள்ளைய அடிச்சு எழுப்பிவிட்டு உண்மைய உரக்க சொல்லி இருக்கலாம்ல.

    “உண்மைய சொன்னால் என்ன ஆகும்? அவள் கண்ணீர் வலிக்கின்றது” இப்போ தான் உட்கார்ந்து feel செய்யறான் feel 🙁

    நித்திலா விலகணும்னு முடிவெடுத்தும் அதனை செயல்படுத்த இயலாமல் தவிக்கின்றாள்.

    அவனது காதல், அக்கறை, உரிமை கோபம், தவிப்பு எல்லாம் புரிகின்றது. இருந்தும் அவன் செயல்களுக்கான தெளிவான காரணம் புரியாமல் குழம்புகின்றாள்.