Loading

அத்தியாயம் – 25

லாவண்யா விக்ராந்தின் அறைக் கதவை தள்ளிக்கொண்டு அத்துமீறி உள்ளே நுழைய, அங்கு நித்திலா படுக்கையில் யோசனையில் அமர்ந்திருந்தாள்,…. யாரோ வந்த அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள், லாவண்யாவை கண்டு செய்வதறியாது எழுந்து நின்றாள்,…

உள்ளே வந்த அவளோ, நித்திலாவை கண்டு கொள்ளாமல், அறையை பார்வையால் சுற்றி நோட்டமிட்டாள், அப்படி பார்த்து கொண்டிருந்தவளின் பார்வை ஒரு இடத்தில் நிலைத்து நின்றது,…

அவள் சில நொடிகளாய் ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட நித்திலாவுமே, அவள் பார்வை செல்லும் இடத்தில் திரும்பி பார்க்க, அங்கு விக்ராந்த்-நித்திலாவின் திருமண புகைப்படம் தான் சுவரில் மாட்டப்பட்டிருந்தது,..

லாவண்யாவின் முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிய, நித்திலா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள், அப்போது தான் லாவண்யா நித்திலாவை அங்கு கண்டது போல், மெல்ல நடையுடன் அவளருகில் வந்தாள்,..

​”நீதான் என் விக்கு கட்டிக்கிட்டு வந்தவளா? பரவாயில்லை, நல்லாதான் இருக்க!” என ஒரு ஏளனப் பார்வையுடன் சொன்ன லாவண்யா, “ஆமா, நீ இன்னும் விக்கு ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டது நித்திலாவின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது.

நித்திலா எதுவும் பேசாமல் மௌனமாய் நிற்க, அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் லாவண்யாவே பேச்சை வளர்த்தாள்,…

“இன்னும் ஒரு த்ரீ மந்த்ஸ்க்கு முன்னாடியே நான் வந்திருந்தா உனக்கு கஷ்டம் இல்லாம போயிருக்கும் இல்ல”

___________

“ஃபீல் பண்ணாதே, உனக்குன்னு ஒருத்தன் நிச்சயம் கிடைப்பான், நீ என் விக்குவை கல்யாணம் மட்டும் தானே பண்ணிருக்க, அவன் கூட ஒன்னும் குடும்பம் நடத்தலையே, ஸோ இதுக்காகவே உனக்கு ஒரு நல்ல பையன் கிடைப்பான்” ​நித்திலாவின் மௌனத்தைப் பயன்படுத்திக் கொண்ட லாவண்யா, தன் நச்சு வார்த்தைகளை அடுக்கினாள்…

அவள் இவ்வாறு சொன்னதை வைத்து, இத்தனை நாட்களும், தாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருப்பது இவளுக்கு தெரியாதா? என்ற திகைப்பு ஏற்பட்டது நித்திலாவிற்கு,…

“விக்கு என்னை முன்னாடியே இந்தியா வர சொன்னான், ப்ச்… என்னால தான் வர முடியாத சிட்சுவேசன், அவனோட குடும்பத்திலுள்ளவங்களை பத்தி என்கிட்ட நிறையவே சொல்லிருக்கான், ஆனா நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க, எப்படி தான் அவங்களை எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க போறோமோ தெரியல”

________

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றவளை புரியாத பார்வை பார்த்தாள் நித்திலா,….

“நீயும் விக்குவும் ஒன்னா ஒரே ரூம்ல த்ரீ மந்த்ஸ் இருந்திருக்கீங்க, அவன்கிட்ட பழகுன கொஞ்ச நாள்லேயே அவனை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, உனக்கு எப்படி? அவனை சைட் அடிச்சிருக்கியா? இவன் எனக்கே கிடைச்சிட மாட்டானானு ஏங்கிருக்கியா?” அவள் கேட்க,.. அவளுக்கு ஒரு நமட்டு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள் நித்திலா,…

“ம்ம்ம்…. எனக்கு தெரியும், எப்போதாவது ஒரு தடவை உங்களையே அறியாம உங்களுக்குள்ள தப்பு நடந்திருக்கலாம், ஆனா அதை பத்தி நான் கவலை பட போறதில்லை” என்றவளை இப்போது அருவருப்பாக பார்த்தாள் நித்திலா,…

“நான் வந்துட்டேன், இனியும் நீ இங்க இருக்க தான் போறியா? எனக்கு உன் சிட்சுவேசன் புரியுது, நீயும் பிடிக்காம தான் இருக்க, எதுக்காக இங்கிருந்து நீ கஷ்டப்பட்டுட்டு இருக்க, இன்னைக்கே கிளம்பிடு” அவள் சொல்ல, அவளுக்கு அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது,…

பின்னே என்ன சொல்லுவாள் அவள்.. ‘இன்னும் மூன்று மாதம் கெடு இருக்கு, அதுவரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்’ என்றா சொல்ல முடியும்,… அவளுக்கும் இங்கு இருக்க மனம் இல்லை தான், தான் இப்போதே வெளியேறிவிட்டால் அவள் தாத்தா பாட்டியிடம் தானே போய் நிற்க முடியும், அவர்களிடம் என்ன சொல்வாள்? இப்போது வரை அவள் அதை பற்றி  எந்த முடிவுக்கும் வரவில்லை, அந்த ஒரே காரணத்திற்காகவே அவளுக்கு வீட்டை விட்டு போகவே பயமாக இருந்தது…

“என்ன பேச மாட்டேங்கிற, ஓகே உனக்கு வேணும்னா டூ டேஸ் டைம் தரேன், அதுக்குள்ள உன்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணி வெளியே போயிடு” கறாரான குரலில் சொன்னவள்…. “அதோட இனி இந்த ரூம்ல நீ இருக்க வேணாம், வேறு எங்கேயாச்சும் இருந்துக்கோ” என்று சொல்ல, அதற்கு மேலும் அங்கு இருக்க பிடிக்காமல் வெளியேறிவிட்டாள் நித்திலா,….

அப்போது மொட்டைமாடி ஏறியவள் தான், சுமித்ரா உணவு உண்ண அழைத்த போது மட்டும், சிறிது கொறித்து விட்டு, மாடிக்கே மீண்டும் சென்றுவிட்டாள்,,… அவள் மனதில் லாவண்யா சொல்லியது தான் ஓடிக்கொண்டிருந்தது,…

‘இரண்டு நாட்களில் போய் விட வேண்டும் என்றாளே, இதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்களா?’

‘அவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும், பாட்டி தாத்தா கிட்ட நான் என்ன சொல்றது?’

‘கண்டிப்பாக அவங்களால இதை தாங்கிக்க முடியாது, அவங்க கிட்ட சொல்ற தைரியமும் எனக்கு இல்லை, நான் என்ன பண்ணுவேன், பேசாம என் வீட்டுக்கு போகாம வேற எங்கேயாவது போயிடலாமா? கொஞ்ச நாள் அப்புறம் எல்லாம் நார்மல் நிலைக்கு வந்ததும், தாத்தா பாட்டி கிட்டயே வந்துடலாம், அப்புறம் அவங்க எதுவும் கேட்க மாட்டாங்க, ஆனா எங்கே போறது? சாதனா (தோழி), சாதனா மும்பையில இருக்கா, அவ கிட்ட பேசி, அங்கே போயிடலாமா? ஆமா இது தான் இப்போதைக்கு சரியா இருக்கும்,’ என இதற்கு ஒரு முடிவு கட்ட யோசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா…

அன்று மாலை விக்ராந்த் வீடு திரும்பினான். அலுவலகத்தில் வித்தார்த்தின் சாடல், தந்தையின் மௌனம், நித்திலாவின் உறுதி என அனைத்தும் அவனை ஒரு முடிவுக்கு வரத் தூண்டியிருந்தது. ‘இன்று நித்திலாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும்’ என்ற உறுதியுடன் அவன் மாடிப்படி ஏறினான்.

தன் அறைக்குள் “பேபி” என்ற அழைப்புடன் நுழைந்தவன், அங்கு கண்டது நித்திலாவை அல்ல, லாவண்யாவை தான்…

“விக்கு வந்துட்டியா?” அவனை வந்து அணைத்துக் கொண்டாள் லாவண்யா…

“லா… லாவண்யா நீ இங்க என்ன பண்ணுற?” ஒவ்வாமையுடன் அவளை விட்டு அவன் விலக, அவளோ.. “இது உன்னோட ரூம்னா, எனக்கும் தானே, அதான் வந்தேன், மார்னிங்லருந்து இங்க தான் இருக்கேன், இங்க இருந்தா அப்படியே உன்கூட இருக்க மாதிரி ஒரு ஃபீல்” என்றாள் குழைவான குரலில்…

‘இவ இங்கிருக்கானா, அப்போ நிலா? நிலா எங்கே போனா? கண்டிப்பா டெரர்ஸ்ல தான் இருப்பா’ என மனதினுள் எண்ணியவன், திரும்பி நடக்க,.. “எங்க போற விக்கு, நீ ஃபிரஷ்அப் ஆகிட்டு வா, நாம வெளியே போயிட்டு வரலாம், நான் உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு நம்ம மேரேஜை பத்தி” அவன் கை பற்றி நிறுத்தியபடி சொல்ல, அவளது கையை எடுத்து விட்டவன்…”ஸாரி லாவண்யா,… நான் போகணும்” என்றான்…

“எங்கே,.. எங்கே போற விக்கு, இப்போ தானே ஆஃபிஸ்லருந்து வந்த” என்றாள்…

“நான் நிலாவை பார்க்கணும்” அவன் தயக்கமான ஆனால் உறுதியான குரலில் கூற,.. “நிலாவா யாரது?” என்றவளுக்கு தாமதமாக தான் புரிய வந்தது போலவே… “ஓஹ்… உன்னோட காண்ட்ராக்ட் வொய்ப்ஃபா?” என்றாள் இளக்காரமாய்…

அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை, தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவளிடம் பேச விரும்பவில்லை, அவன் வாசலை நோக்கி நடையை கட்ட,…”விக்கு,… நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள் அவள் காட்டமாய்,… அவனோ அவள் பேச்சு எதற்கும் செவிசாய்க்காமல் மொட்டை மாடிக்கு ஓடினான்…

மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளின் முகம் சோகத்தை தான் மூழ்கடித்திருந்திருந்தது, சோகமே உருவாய் நின்றிருந்த நித்திலாவைக் கண்டதும் விக்ராந்தின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

மெல்ல நடையுடன் அவளருகில் வந்தவன்…..”நிலா” என்று அழைத்தான், அவனது குரல் அவளது செவியை எட்டவில்லை, காரணம் அவன் மனம் முழுக்க பலவாறான சிந்தனைகள் தான் ஓடிக் கொண்டிருந்தது,….

அவள் மனநிலையை அறிந்தவன் போல,…”பேபி” என்று அவளது கரத்தை பற்றினான்,… சட்டென்று திரும்பியவள் தன் முன்னே நின்ற விக்ராந்தை பார்த்து,.. “வந்துட்டீங்களா… எப்போ வந்தீங்க,” அவளது இதழ்களில் இருந்த அந்த வலி நிறைந்த கசந்த புன்னகை, அவனை ஆயிரம் வாள்களால் குத்துவது போலிருந்தது.

அவள் தன்னிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு போனால் கூட அவனுக்கு அவ்வளவு தூரம் வலித்திருக்காது, அவளது அந்த புன்னகை அவனை குத்தி குதறியது….

“உங்க கிட்ட தான் கேட்கிறேன்,” அவள் மீண்டும் அதே புன்னகையுடன் கேட்க,….”பேபி,… ஐம் ஸாரி” என்றான் தழுதழுத்த குரலில்..

கண்களை சுருக்கியவள்,.. “எதுக்கு” என்றாள் புரியாமல்,…..

“பேபி,… நான்… நான் உன்கிட்ட பேசணும், நிறைய பேசணும்” அவன் வலி நிறைந்த குரலில் சொல்ல,…. “நானும் உங்க கிட்ட பேசணும்” என்றாள் அவள்,…

“பேசு பேபி,… அதுக்கு முன்னாடி நான் பேசிடுறேன், நான் சொல்ல வந்தததை சொல்லிடுறேன்” அவன் சொல்ல,….”நீங்க என்ன பேச போறீங்க, உங்க கல்யாணத்தை பத்தி தானே, கவலை படாதீங்க, லட்சுப்பா, பாட்டி கிட்ட நான் பேசுறேன், அவங்க உங்களுக்கும் நீங்க விரும்புற பொண்ணுக்கும் முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணி வைப்பாங்க” என்றாள் ஒரு அந்நியப் பெண்ணைப் போல.

“இல்ல பேபி நான்” ​அவன் ஏதோ விளக்க முற்பட.. “ப்ளீஸ்,… நான் சொல்ல வரதை கேளுங்க,” அவள் கெஞ்சல் குரலில் சொல்ல,… “சொல்லு” என்றான் அவனும் அமைதியாக,…

“நான் போயிடுறேன், நான் என் வீட்டுக்கே போயிடுறேன், நீங்க நேசிச்ச பொண்ணு தான் வந்துடாங்கள்ல, இனியும் நான் இங்கே இருக்கிறது நல்லா இருக்காது, அதனால நான் போயிடறேன்,” என்றாள்..

அவன் அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை, ஒரு நொடி திகைத்தவன்,…”என்னை விட்டு நான் உன்னை போக விடமாட்டேன் நிலா” என்று அழுத்தமான குரலில்
சொல்ல, நித்திலாவின் கோபம் எரிமலையாய் வெடித்தது.

“போக விடமாட்டீங்களா? இதை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு, இவ்வளவு நடந்த பிறகும் என்னை போக விடமாட்டேன்னு சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லையா, ஒரே வீட்ல ரெண்டு பொண்ணுங்களோட குடும்பம் நடத்துறது உங்களுக்கு வேணும்னா சரியா படலாம், ஆனா என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது, ஏன்னா எனக்கு வெட்கம், மானம், ரோஷம்னு எல்லாம் இருக்கு,” என சீறினாள்…

“இப்போதும் எனக்கு உன்மேல உரிமை இருக்கு நிலா, உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன், இன்னும் மூணு மாசம் இருக்கு, அதுக்குள்ள நீ போயிட்டா லீகலா உன் மேல என்ன ஆக்ஷன் எடுக்க முடியுமோ, அதை நான் எடுக்கலாம், அது மட்டும் இல்ல, இதை உன் தாத்தா பாட்டி கிட்டயும் சொல்லுவேன்” வேறு வழியில்லாமல் விக்ராந்த் தன் கடைசி அஸ்திரத்தை ஏவ,.

“நீங்கல்லாம் திருந்தாத ஜென்மம்! ச்சே” என அவனை வெறுப்போடு பார்த்துவிட்டு நகர, போகும் அவளையே வலி நிறைந்த விழிகளோடு பார்த்தான் அவன்….

‘ஏன் பேபி  என்னை பேச விட மாட்ற, நான் பேசுனா தான் என்னை நீ புரிஞ்சிப்ப, நான் தப்பு பண்ணலன்னு சொல்ல மாட்டேன், தப்பு பண்ணிருக்கேன் தான், ஆனா ஐம் லவ் வித் யூ பேபி, நான் உன்னை தான் காதலிக்கிறேன், உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன், என் மனசு முழுக்க நீ மட்டும் தான் பேபி இருக்க, இதை நான் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியல’ என
மனதிற்குள் கதறியவன், அப்படியே நிலைகுலைந்து அமர்ந்துவிட்டான்.

அந்த நேரம் விக்ராந்திடம் பேசுவதற்காக அவ்விடம் வந்த சுமித்ரா அவனின் நிலையை கண்டு குழம்பி போனாள்,…

“விக்ராந்த்” சுமித்ராவின் குரலில், தன்னை சமன் செய்து கொண்டு எழுந்தான் அவன்…

“இங்க என்ன நடக்குது,…? இங்க நடக்குறதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம்னு உங்க மேல அவ்வளவு கோபத்துல இருந்தேன், ஆனா இப்போ உங்களை பார்க்கும் போது? எனக்கு குழப்பமா இருக்கு” என்றாள் சுமித்ரா….,

“என்கிட்ட எதுவும் கேட்காதீங்க அண்ணி, நிலா கூட இருங்க,  இப்போ அவளுக்கு தேவையானதெல்லாம் அன்பா அரவணைப்பா ஆறுதல் கூற ஒருத்தர் தான்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விக்ராந்த்,
போகும் அவனையே குழப்பத்துடன் பார்த்தாள் சுமித்ரா,….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
25
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விக்ராந்த் நீ எப்போ இருந்து நிலாவை லவ் பண்ற .. நீதான் நிலா கிட்ட லாவண்யா வை கல்யாணம் பண்ண போறேன்னு சொன்ன ..

  2. இவ ஒருத்தி எப்ப பாரு விக்கு கொக்குனுட்டு. விக்ராந்த்னு எம்புட்டு அழகா பேரு வெச்சிருக்காங்க அவனுக்கு.

    ஆளாளுக்கு தனியா உட்கார்ந்து வருத்தப்படறாங்க.

    நித்திலா agreement sign செய்த போதும் இப்படி தான் அவன் reaction na கவனிக்காம அவசரகுடுக்கையா உண்மைய உளறி கொட்டினா.

    இப்போ அவன் உண்மைய சொல்ல வரான் இப்பவும் அவன சொல்ல விடாம அவளா ஒண்ணு நினைச்சு பேசிட்டு போயிட்டா.

    விக்ராந்த் பழக்க தோஷத்தில் agreement ta சுட்டிக்காட்டி மிரட்டிடியே பா. 🫢

    ஆறு மாச பொண்டாட்டிகிட்ட romance மட்டும் தீவிரமா செய்தா போதுமா அவள சமாதானப்படுத்தும் வேலையிலும் தீவிரமா இறங்கனும்.