
அத்தியாயம் – 14
மதிய நேரமது. நித்திலா சுமித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவளது போன் அலறியது. தாத்தா-பாட்டி தான் அழைக்கிறார்கள் என்று ஆசையாகப் பார்த்தவளுக்கு, திரையில் மின்னிய விக்ராந்த் பெயரைப் பார்த்ததும் முகம் சுருங்கியது.
’இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்? காலையில வெறுப்பேத்துனது பத்தாதுன்னு இப்போ போன்ல வேறயா? நான் எடுக்கப் போறதில்லை,’ என முணங்கியபடி போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், அவன் விடுவதாயில்லை. அவள் எடுக்கும் வரை விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தான்.
’கொழுப்பு… உடம்பெல்லாம் கொழுப்பு இவனுக்கு!’ எனத் திட்டியபடி, விடாப்படியாக அவன் அழைப்பதைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு ஒருவேளை எடுக்காவிட்டால் நேராக வீட்டிற்கே வந்துவிடுவானோ என்ற பயம் வர, உடனே போனை எடுத்தாள்.
”என்ன பண்ணிக்கிட்டு இருக்க பேபி?” அவனது குழைவான குரலுக்கு, “ம்ம்… மாடு மேய்ச்சிக்கிட்டு இருக்கேன்,” என நக்கலாகப் பதிலளித்தாள் நித்திலா..
”ஓ… உனக்கு அதெல்லாம் தெரியுமா பேபி?” அவனும் பதிலுக்கு அவளை சீண்ட, நித்திலா விஸ்வரூபம் எடுத்தாள். “தெரியுமே! டெய்லியும் எனக்கு வேற என்ன வேலை? அதை மேய்க்கிறது தானே என்னோட மெயின் வேலையே! என்ன ஒன்னு… எல்லா மாடும் ‘ம்மா ம்மா’ன்னு கத்தும், நான் மேய்க்கிற மாடு மட்டும் ‘பேபி பேபி’ன்னு கத்தும்!” அவளது இந்த நக்கலான பதிலில் விக்ராந்த் அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்துவிட்டான். நித்திலாவோ திகைத்தாள்.. ‘என்ன இவன்… அவனை மாடுன்னு சொல்லியும் இவ்வளவு கூலா சிரிக்கிறான்?’
அவள் தன்னுள் நினைத்துக் கொண்டிருக்க, அவனோ..
“நீ ரொம்ப நல்லாவே ஜோக் பண்ணுற பேபி” என்றான்…
“உங்களை மாடுன்னு சொல்றேன், உங்களுக்கு என் மேல கோவமே வரலயா,” எனத் தன் மனதில் இருந்ததைக் கேட்டுவிட,.. அவனோ… “உன் மேல எப்படி பேபி நான் கோவப்படுவேன்?” அவனது அந்த ஒற்றை வரியில் நித்திலாவின் கோபம் சட்டென்று கரைந்து போனது…
“என்ன பேபி சத்தத்தையே காணோம்” அவன் குரலில்…”ஹாங் லைன்ல தான் இருக்கேன்” என்றாள் மெதுவாக….
“இப்போ எங்க இருக்க பேபி” அவன் கேட்க….”வீட்ல தான், வேறெங்க இருப்பேன்” என்றாள் சலிப்போடு….
“அதில்ல பேபி,… நம்ம ரூம்ல இருக்கியா இல்ல?” அவன் மீதி கேள்வியை கேட்கும் முன்னே,… “கீழே கிச்சன் பக்கத்துல இருக்கேன்” என்றாள்….
“ஓகே.. இப்போ ரூம்க்கு போ பேபி” அவன் சொல்ல…. “என்ன?” என விளங்காதது போல் கேட்டாள் அவள்,…
“நம்ம ரூம்க்கு போ பேபி” அவன் அழுத்தமாக மீண்டும் சொல்ல,…. “எதுக்கு” என்றாள் விழிகளை உருட்டி….
“போ சொல்றேன்” அவன் சொன்னது போல், மாடிபடியேறி தன்னறையை அடைந்தாள் நித்திலா,….
“வார்ட்ரோபை ஓபன் பண்ணு பேபி” அவன் சொல்ல,…”எதுக்கு” என்றாள் புரியாமல்…
“ம்ம்ம்… நான் அதுக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கேன், அதான் திறக்க சொல்றேன்” அவன் சொன்னதில் திகைத்து போனவள்…. “என்னது…. நிஜமாவா?” என விழிகள் பிதுங்க கேட்டாள்,…
“ஏய் லூசு பேபி,… சும்மா சொன்னேன்டி, என்ன சொன்னாலும் நம்பிடுவியா?” செல்லமாக கடிந்தவன்,.. “ஓபன் பண்ணு” என்றான்….
“ம்ம்ம்” என்றவள், அலமாரியை திறந்தாள்,…. “இங்க என்ன இருக்கு, ஒன்னும் இல்லையே,” அவள் கேட்க,….”மேல் செல்ஃப்ல ஒரு பார்சல் இருக்கும், அதை எடு” என்றான்,…
“ம்ம்ம்… எடுத்துட்டேன், என்ன இது” அவள் கேட்க,…”பிரிச்சு பாரு” என்றான் அவன்…
போனை தோளால் பற்றிக்கொண்டு, அதனை பிரித்து பார்த்தவள் மூச்சடைத்து போனாள்,..
அதில் பேபி பிங்க் நிறத்தில், மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு டிசைனர் புடவை இருந்தது. அதைப் பார்த்ததுமே நித்திலா சொக்கிப் போனாள்.
ஆசையாக அதனை வருடியவள்… “இது எனக்கா?” என ஆச்சரியமாய்க் கேட்க, “இல்ல… என்னோட கேர்ள் ஃபிரண்ட்க்கு,” என அவன் கிண்டல் செய்தான்…
கோபத்தில் முகம் சிவந்தவள்,.. “உங்க கேர்ள் ஃபிரண்ட்க்கு வாங்குனதை எதுக்கு என்கிட்ட கொடுக்கிறீங்க” என்றாள்
“ஏய்…. சும்மா சொன்னேன் பேபி, உனக்காக வாங்குனதுனால தானே உன்கிட்ட தரேன், இதை நீ யோசிக்க மாட்டியா நீ” அவன் சொல்ல,…. “அதுக்காக நீங்க உங்க கேர்ள் ஃபிரண்டுக்காக வாங்குனதுன்னு சொல்லுவீங்களா” என்றாள்….
“ஸாரி டியர்,… ஓகே நைட் நான் எப்படியும் செவன் ஓ கிளாக் வந்துடுவேன், நீ அதுக்குள்ள அந்த ஷாரீ கட்டிட்டுட்டு ரெடியா இரு” என்றான்,…
“எதுக்கு” அவள் மெல்லிய குரலில் வினவ,…. “என்ன பேபி,… எதுக்கு எதுக்கு ன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்க, இன்னைக்கு நாம வெளியே போலாம் அதுக்கு தான்” என்றவன்,… “ஓகே எனக்கு வொர்க் இருக்கு, ஈவினிங் பார்க்கலாம்” என பறக்கும் முத்தத்துடன் போனை அணைத்தான் விக்ராந்த்,…
போனை வைத்த பின் நித்திலாவிற்குள் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அவன் தனக்கு நிரந்தரம் இல்லை என்பதும், அந்த 170 நாட்களின் கணக்கும் ஒரு பக்கம் பயமுறுத்தினாலும், அவன் தரும் இந்தச் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளில் அவள் தன்னை மறந்தாள். அவனது ‘பேபி’ என்ற அழைப்பில் அவள் கரைந்து உருகி போகிறாள் என்பது தான் உண்மை, இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? இதற்குப் பின் என்ன நடக்கும்? எதைப் பற்றியும் அவள் சிந்திக்கவில்லை. இப்போது, இந்த நொடியில்… அவன் அவளுக்கானவன், அவள் அவனுக்கானவள் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதை நிறைத்திருந்தது…
“என்ன நித்தி, ஃபேஸ் எக்கச்சக்கமா பிரைட்டா இருக்கு, எனி குட் நியூஸ்” அங்கு வந்த நித்திலாவிடம் சுமித்ரா கேட்க,…. “அது… அது வந்துக்கா” என இழுத்தவள்,… “இன்னைக்கு நானும் அவரும் வெளிய போக போறோம்” எனச் சொல்லும்போதே அவளது கண்கள் மின்னின.
“அட,… இது பெரிய குட் நியூசாச்சே, கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவையா வெளியே போக போறீங்க ம்ம்ம்… என்ஜாய்” என்றாள் சுமித்ரா புன்னகை மாறா முகத்துடன்…..
“அக்கா…. நீங்களும் வித்தார்த் மாமாவும் எங்க கூட வறீங்களா, ரெண்டு கப்புல்சா போனா இன்னும் சூப்பரா இருக்கும்ல” நித்திலா சொல்ல,…. “இல்ல நித்தி,… இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் எல்லாரும் ஒன்னா சேர்ந்து போலாம், இப்போ முதல் தடவை போறீங்கள்ல தனியா போனா தான் நல்லா இருக்கும்” சுமித்ரா சொல்ல, முதலில் முகவாடியவள் பிறகு சரி என்றாள்………
விக்ராந்த் சொன்னது போலவே ஏழு மணிக்கெல்லாம் ஆஜராகிவிட்டான். அவன் வாங்கிக் கொடுத்த அந்த டிசைனர் புடவையில், நித்திலா நிஜமாகவே ரவிவர்மனின் ஓவியத்தை மிஞ்சும் அழகில் ஜொலித்தாள்.
அவளது அழகில் தன்னை மொத்தமாகத் தொலைத்த விக்ராந்த், கண்களில் தாபத்துடன் அவளை நெருங்க… அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட நித்திலா, “நீங்க ரெடியாகிட்டு வாங்க, இதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்!” எனத் தலைகுனிந்து நாணத்துடன் தடுத்தாள்…
“ஓகே பேபி, டென் மினிட்ஸ்!” எனச் சிரித்துக் கொண்டே தயாராகச் சென்றான் விக்ராந்த்…
அடுத்த சில நிமிடங்களில், கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற ஷர்ட்டில் விக்ராந்த் கம்பீரமாக வெளிவந்தான். அவனது கட்டுடலுக்கு அந்த உடை அத்தனை கச்சிதமாக இருக்க, நித்திலா அவனை இமைக்காமல் ரசித்தாள். “பேபி… இப்படிலாம் பார்த்தா அப்புறம் என்னால சும்மா இருக்க முடியாது!” என அவன் சீண்ட, முகம் சிவக்க அவனுடன் புறப்பட்டாள், இருவரும் வீட்டினரிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்பினர்,….
இருபத்தைந்து தளங்கள் கொண்ட, ஒரு வெள்ளை மாளிகை போன்ற பிரம்மாண்டமான உணவகத்தின் முன் கார் நின்றது. விக்ராந்த் தன் மனைவியை இடையோடு அணைத்தபடி பதிமூன்றாம் தளத்திற்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் ஏசியின் குளிர்ச்சியும், ஏர்-பிரெஷ்னரின் நறுமணமும் நித்திலாவை வரவேற்றன.
மங்கிய வெளிச்சத்தில் மெல்லிய இசை காற்றில் மிதக்க, அங்கிருந்த கலைப் பொருட்களையும் செல்வச் செழிப்பையும் பார்த்துப் பிரமித்து நின்றாள் நித்திலா.
நித்திலாவிற்கு பணத்தில் எந்த குறை இல்லை என்றாலும் அவள் இது நாள் வரையில் இது போல் ஒரு இடத்திற்கும் சென்றதில்லை, வெளியே சாப்பிட ஆசைப்பட்டால் கூட, ரெஸ்டாரண்டில் தாத்தா பாட்டியுடன் சேர்ந்து போய் வருவாள்,… இல்லையென்றால் தோழிகளுடன் போய் வருவாள், ஆதலால் அவளுக்கு இந்த இடம் அதிக பிரம்மிப்பை தந்தது,….
மனைவியின் பார்வையை உணர்ந்தவன் போல்,… “பேபி,…இது பிஸ்னஸ் பார்ட்டி நடக்கும் இடம், முக்கிய பிரமுகர்கள் வந்து போகும் இடம், ஆனா நாம இங்க இப்போ கப்புலா வந்திருக்கோம்” என்றவன் அவளை அழைத்துச்சென்று தங்களுக்கென்று ரிசர்வ் செய்யப்பட்ட இடத்திற்கு வந்தவன், அவளை அமரவைத்து, தானும் அமர்ந்தான்,….
முதலில் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை, நித்திலாவின் விருப்பத்திற்கேற்பவே ஆர்டர் கொடுத்தான் விக்ராந்த்,….
“என்ன பேபி உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா” அவள் முகம் பார்த்து கேட்க,… “ரொம்ப பிடிச்சிருக்கு, இந்த மாதிரி ஒரு இடத்துக்கு நான் வந்ததே இல்லை” என்றாள் பிரம்மி மாறாமல்..
மேஜையில் இருந்த அவளது கரத்தைப் பற்றியவன், “இதெல்லாம் என்ன பேபி? இதை விடச் சொர்க்கமே தோற்றுப்போற இடத்துக்கெல்லாம் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். அங்கே நானும் நீயும் மட்டும் தான்… யாரோட தொந்தரவும் இல்லாம இருக்கலாம்,” என அவன் சொல்ல, முதல் முறையாக அவனைத் தீராத காதலுடன் பார்த்தாள் நித்திலா.
”பேபி… நான் வீட்லயே சொன்னேன், இப்படிலாம் பார்த்தா என் கண்ட்ரோலை மீறிடுவேன்,” என அவன் எச்சரிக்க, நித்திலா செவ்வானமாய் சிவந்தாள்.
“அப்புறம் பேபி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” விக்ராந்த் கேட்டதில் அவனை கேள்வியாய் பார்த்தாள் அவள்,…
“நீ என்னை எப்படி கூப்பிடுவ பேபி?” அவன் கேட்க,…”அப்படினா?” புரியாமல் பார்த்தாள் அவள்,…
“நான் உன்னை பேபின்னு கூப்பிடுறேன்,,.. பட் நீ என்னை பேர் வச்சு கூப்பிட மாட்டேங்கிறியே, அதை தான் கேட்டேன்” என விக்ராந்த் ஒரு குறையை முன்வைத்தான்.
”நான் பேர் சொல்லி கூப்பிட்டா உங்க அம்மா அடிக்க வருவாங்க,” என அவள் பாவம் போலச் சொல்ல, அவன் சிரித்துவிட்டு “ஓகே அப்போ வேற ஏதாச்சும் பேர் சொல்லு,” என்றான்.
நித்திலா தன் தாடையில் விரல் வைத்து தீவிரமாக யோசித்தாள். “ம்ம்… மாமான்னு கூப்பிடவா?” என உற்சாகமாய் கேட்க, “நோ பேபி… ஆல்ரெடி என் அண்ணனை அப்படித்தான் கூப்பிடுற… எனக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் பேர் வேணும்,” என்றான் விக்ராந்த் பிடிவாதமாக.
”அப்போ… மச்சான்?” எனச் சொல்லிவிட்டு “ச்சீ வேணாம்” என அவளே மறுத்தாள்.
“அத்தான்… அத்தான்னு கூப்பிடட்டுமா?”
“இதை யோசிக்க தான் உனக்கு இவளோ டைம் தேவை பட்டதா பேபி, இது சாதாரணமா எல்லாரும் கூப்பிடுறது தானே” அவன் சலித்துக் கொள்ள… .”அப்டிங்கிறீங்களா” என்றவள்,… மீண்டும் யோசித்து,…”அத்து,… ஹை அத்து, அத்து சூப்பரா இருக்குல்ல” என்றாள் துள்ளிக்குதிக்காத குறையாக…
”என்னடி இது ‘அத்து’வா? யாராவது கேட்டா சிரிக்கப் போறாங்க,” என விக்ராந்த் பாவமாகச் சொல்ல, நித்திலாவோ பிடிவாதமாக… “சிரிச்சா சிரிக்கட்டும்! அத்தானைச் சுருக்கி ‘அத்து’ன்னு கூப்பிடப் போறேன்” என்றாள்…
“நீ என்னை என் பெயர் சொல்லியே கூப்பிடுமா தாயே, அம்மாவை நான் சமாளிச்சிக்கிறேன்” அவன் சொல்ல…. “முடியாது…. நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன், நீங்க என்னோட அத்து, இனி நான் அப்படி தான் கூப்பிட போறேன்” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்,….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்லா லவ் பண்றான் … ஆனா ஆறு மாசம் தானா … நித்திலா விக்ராந்த் தை மாடுனு சொன்னதுக்கு நானும் சத்தமா சிரிச்சுட்டேன் …
நித்திலா மேய்க்கும் மாடு மட்டும் பேபி பேபினு கத்துமா. 🤣
அவன் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில், அவனது அன்பான அழைப்பினில், அவ விதித்த 170 நாட்கள் கணக்கு எல்லாம் மறந்து உருகி மருகி போகிறாள்.
ஆறு மாசத்துக்கு உன்னை எப்படி கூப்பிட்டா என்ன விக்ராந்த்? செல்லபெயர் வேற கேக்குதோ!
அத்தான் சுருங்கி அத்து நல்லா தான் இருக்கு.