Loading

அத்தியாயம் – 10

“நித்தி கண்ணு,…. நீயும் உன் பாட்டியும் கூட்டு சேர்ந்துக்கிட்டு, என்னை தனியாளா நிற்க வைப்பீங்கள்ல, இப்போ பாரு அன்னைக்கு நான் சொன்ன மாதிரி எனக்கு என் பேரன் சப்போர்ட் கிடைச்சிருக்கு” என மகிழ்ச்சி பொங்க சொன்னார் ஜெயமோகன்,….

“நான் எதிர்பார்த்ததை விட மாப்பிளை நல்லா ஜாலியா பேசுறாரு,” என்றார் வைத்தீஸ்வரி….

“பாட்டி இப்போ தானே சொன்னேன், இந்த மாப்பிளைலாம் வேணாம்னு, உங்க பேரனை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க” விக்ராந்தை இதழ் விரிய சொல்ல,.. “சரிப்பா சரிப்பா, வாய் தவறி வந்துடுச்சு” என்றார் வைத்தீஸ்வரி,…

“அப்புறம் பாட்டி, இந்த வயசிலேயும் நீங்க இவ்ளோ இளமையா இருக்கீங்களே, அதன் ரகசியம் என்னவோ” விக்ராந்த் குறும்பு புன்னகையுடன் கேட்க, பாட்டி வெட்கத்துடன் சிரித்தார், நித்திலாவின் நிலை தான் பரிதாபமாக இருந்தது, இவனா இப்படி பேசுகிறான் என விக்கித்து போய் நின்றாள்,….

“ஏம்மா உடனே நீ வெட்க பட ஆரம்பிச்சிடாத, என் பேரான்டி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னாரு” தாத்தா தன் மனைவியை வார,… “உங்களுக்கு பொறுக்காதே,” என முகத்தை சுழித்துக் கொண்டார் பாட்டி வைத்தீஸ்வரி,…

கடிகாரம் ஒரு பக்கம் சுற்றிக் கொண்டிருக்க, விக்ராந்த் தாத்தா, பாட்டியை தன் குறும்பு பேச்சால் வயிறு வலிக்கும் வரைக்கும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான், இதை அனைத்தையும் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா,……

“ஐயோ போதும்ப்பா,…. இதுக்கு மேல முடியாது, என் பேத்தியை விட நீ ரொம்ப நல்லாவே ஜாலியா பேசற” என்ற ஜெயமோகன்,… “வந்ததுலருந்து உட்கார்ந்துகிட்டே இருக்கியேப்பா, கொஞ்ச நேரம் ரூம்ல போய் சாஞ்சிக்கிட்டு வா, நித்தி கண்ணு தம்பியை உன் ரூம்க்கு கூட்டிட்டு போடா” ஜெயமோகன் சொல்ல,… ‘என்னது ரூம்க்கா’ என திகைத்து நின்றாள் நித்திலா….

“என்னடா… உன்கிட்ட தானே சொல்றாரு தாத்தா,” வைத்தீஸ்வரி சொல்ல,…”ச.. சரி பாட்டி” என அவள் விக்ராந்தை பார்க்க, அவன் புருவம் உயர்த்தி அவளை பார்த்தான்,…

“வாங்க” மெல்லிய குரலில் சொல்லி விட்டு அவள் முன்னேறி நடக்க, அவனும் அவளை பின்தொடர்ந்தான்,….

நித்திலாவின் அறைக்கும்  இருவரும் நுழைந்தவர், நேர்த்தியான முறையில் இருந்த அறையை ஒரு பார்வையில் சுழற்றியவன்,… “நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என சொல்லிவிட்டு நழுவ போனவளின் கரம் பற்றி இழுக்க, அவளோ அவனது மார்பில் மோதி நின்றாள்,…

“ப்ளீஸ் ப்ளீஸ்… எதுவும் பண்ணிடாதீங்க” அவன் மார்பை ஒட்டி, அவன் கை வளைவுக்குள் நின்றிருந்தவள், கெஞ்சல் பார்வையுடன் சொன்னாள்,….

“ப்ச்,… என்ன பேபி, கிட்ட வந்தாலே எப்போ பார்த்தாலும் இதே டயலாக்கையே சொல்ற” அவள் கன்னத்தில் விரல்களால் கோலமிட்டபடியே கேட்க…. “இன்னைக்கு மட்டும் தான் தாத்தா பாட்டி கூட இருக்க முடியும், நான் அவங்க கிட்ட போறேனே” என்றாள்,….

“அப்படிங்கிறியா ம்ம்… ஓகே,” என்றவன்,…”ஒரு கிஸ் கொடுத்துட்டு போ” என்றான்

“என்னது?” அவள் திகைக்க,…. “முத்தம் பேபி” என்றான் கண்கள் மின்ன….

“நானா” அவள் திகைப்பு குறையாமல் கேட்க,… “நீ தான், பின்ன என்ன பக்கத்து வீட்டு பொண்ணா எனக்கு முத்தம் தரும்” என்றான் குறும்பு பார்வையுடன்,….

அவனை முறைத்தவள்,… “இல்ல… நான்… நான்.. அப்படி பண்ண மாட்டேன்” அவள் திக்கி திணறி சொல்ல,…. “அப்போ உன்னை போக விட மாட்டேன்” உறுதியான குரலில் சொன்னான் அவன்…

“பச்… ஏன் என்னை இப்படி கொடுமை படுத்துறீங்க” அவள் சோகமான முகத்துடன் கேட்ட,… “நான் எங்க பேபி கொடுமை படுத்தறேன், நீ தான் ஒரு கிஸ் கூட தராம என்னை கொடுமை படுத்துற” என்றான் பதிலுக்கு பதிலாக

“பச்… எனக்கு அதெல்லாம் தெரியாது” அவள் பாவமான முகத்துடன் சொல்ல,… “ஓகே… அப்போ நான் சொல்லி தரேன், அப்படியே பண்ணு” என அவன் அவள் இதழை நெருங்கி வர,…. “இல்ல இல்ல வேணாம், நான்… நானே பண்றேன்” என்றாள் பதறிக்கொண்டு….

“ம்ம்ம்… குட்” என்றவன் அவள் தர போவதை எதிர்பார்த்து நிற்க, அவளோ தயங்கியபடி நின்றாள்….

“எவ்ளோ நேரம் பேபி வெயிட் பண்றது”அவன் குழைவான குரலில் கேட்க,… “ப்ளீஸ்…. இன்னொரு நாள் பண்ணுறேனே, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள்….

“நீ ரொம்ப தான் வெட்கப்படுற பேபி, சரி உனக்காக நான் கொஞ்சம் இறங்கியே வரேன்” என்றவன்,…. “கன்னத்துல கொடு” என்றான் கண்கள் பளிச்சிட,…

“என்னது கன்னத்துலையா” அவள் அப்போதும் திகைப்பாகவே கேட்க…. “ஏய் என்னடி,… லிப்லருந்து கன்னத்துக்கு இறங்கி வந்துட்டேன், கன்னத்துலயானு ஷாக்கிங்கா கேட்கிற” என்றான் சிறு அதட்டலுடன்….

“என்னது டி யா” அவள் சற்று கோபமாக கேட்க,…. “ம்ம்ம்… நீ என் பொண்டாட்டி தானே” என ‘டி’ யை அழுத்தி சொன்னவன்,…”நான் டி போட்டு பேசுறதுல என்ன தப்பிருக்கு” என்றான்,…

“எனக்கு டி போட்டு பேசுனா பிடிக்காது” அவள் கோபபார்வையுடன் சொல்ல,… “பட் எனக்கு பிடிக்குமே” என்றான்

“நீங்க டி போட்டு பேசுனா அப்புறம் நான் டா போட்டு பேச வேண்டி வரும்” அவள் சற்றும் பார்வையை மாற்றாமல் சொல்ல,… “நோ ப்ராப்ளம் பேபி, நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்” என்றவன்,… “பேச்சை மாத்தாம எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு போ பேபி” என்றான்

‘இப்படி என்னை போட்டு சாகடிக்கிறானே,’ என முணங்கியவள், அவனிடம் தன்னால் போராட முடியாது என்பது புரிந்து.. “நான் தரேன், நீங்க கண்ணை மூடுங்க” என்றாள் மெதுவான குரலில்,….

“கன்னத்துல முத்தம் தரதுக்கு எவ்வளவு அக்கப்போரு பண்ணுற நீ” என்று செல்லமாய் கடிந்து கொண்டவன்,… “ஓகே” என்று கண்களை மூடிக் கொண்டான்,….

முதலில் தயங்கியவள், பின் மெல்ல அவன் கன்னத்தில் தன் மென்மையான இதழை ஒற்றி எடுத்து விட்டு, அவனை தள்ளிவிட்டு அறையிலிருந்து ஓடி விட்டாள்,….

அன்றைய மதிய உணவை தடல்புடலாக சமைத்து, உணவு மேஜை முழுக்க பரப்பி வைத்திருந்ததனர், அவைகளை பார்த்து விக்ராந்தின் கண்களே விரிந்தது,….

“என்ன தாத்தா இது,… ஒரு ஊரையே சாப்பிட கூப்பிட்டிருக்கீங்களா என்ன,” விக்ராந்த் சந்தேகமாக கேட்க… “ஏன்ப்பா அப்படி கேட்கிற” என்றார் ஜெயமோகன்….

“இல்ல…. நாம இங்க மொத்தமே நான்கு பேரு தான் இருக்கோம், சுமதி அம்மா அவங்க புருஷன்னு அவங்களையும் சேர்த்துகிட்டா கூட, நம்ம ஆறு பேருக்கும் இந்த ஃபுட்லாம் ரொம்ப அதிகம்னு தோணுது, அதான் கேட்கிறேன் தாத்தா” என்றான் விக்ராந்த்

அதில் சத்தமாக சிரித்தவர்,…. “இதெல்லாம் உங்களுக்காக பண்ணுது தான்’ப்பா” ஜெயமோகன் சொல்ல,…. “ஓ காட்” என விழிகளை விரித்தவன் நெஞ்சிலும் கை வைத்துக் கொண்டான், அவனின் நடவடிக்கை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள் நித்திலா,…

விக்ராந்த் நித்திலாவுடன், சேர்ந்து பாட்டியும் தாத்தாவும் அமர்ந்து சாப்பிட்டனர், வழக்கத்தை விட அன்று அதிகமாகவே வயிற்றை நிரப்பியிருந்தான் விக்ராந்த் தாத்தா பாட்டியின் பாசத்தினால்,….

“எனக்கு ஆஃபிஸ்ல முக்கியமான வொர்க் இருக்கு தாத்தா, ஈவினிங் வந்து நான் நிலாவை கூப்பிட்டுகிறேன்” விக்ராந்த் சொல்ல, ஜெயமோகன் சம்மதமாக தலையசைத்தவர்,..

“நித்திம்மா,… தம்பியை வழி அனுப்பி வச்சிட்டு வாடா” என்றார் 

தாத்தாவின் சொல்லை தட்ட முடியாமல் அவனுடன் வாசல் வரைக்கும் வந்தாள் நித்திலா,….

வெளியிடங்களை சுற்றி முற்றி பார்வையிட்டவனை வினோதமாக பாரத்தாள் நித்திலா,… ‘என்னத்த இப்படி சுத்தி சுத்தி பார்க்கிறான்’ அவள் மனதில் நினைத்தது அவனுக்கு கேட்டது போல்… “யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்தேன் பேபி” என்றவனை விழி விரிய பார்த்தாள் நித்திலா….

“பார்த்து பேபி கண்ணு ரெண்டும் வெளியே வந்து விழுந்துட போகுது” என நகைத்தவன்,…. அவள் இடையை பற்றி தன் பக்கம் இழுத்தான்…

“என்ன பண்ணுறீங்க, இது வீடும் இல்ல, பெட்ரூமும் இல்ல, வெட்ட வெளியில நிக்கிறோம், யாராவது பார்த்தா அசிங்கமாயிடும்” அவள் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலக முயல,.. “பச்…. சுத்தியும் யாரும் இல்லை பேபி நோ டென்ஷன்” என்றான் அவள் முகத்தை பார்த்தவாறே,…

“இருந்தாலும் நீங்க ரொம்ப தான் ஓவரா போறீங்க” என அவனிடமிருந்து பிரிந்தவள்,… “தயவு செஞ்சு கிளம்புங்க” என்றாள் வெடுக்கென்று அவன் முகம் பார்க்காமலே,….

“ஏன் பேபி விரட்டுற, என்னை விரட்டுறதுல அவ்வளவு சந்தோஷமா உனக்கு” அவன் குரலில் ஒரு தொய்வு இருந்தது, அதை கண்டுகொள்ளதாவள் போல் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்,….

“ஓகே பேபி ஒரு பை’யாச்சும் சொல்லு” அவன் ஏக்கமான குரலில் கேட்க,… அப்போதும் அவள் அவன் பக்கம் திரும்பவில்லை…. நெற்றி சுருங்க பார்த்தவனின் இதழோரத்தில் சிறு புன்னகை அரும்பியது,….

அதே புன்னகையுடன் திரும்பி ஓரடி எடுத்து வைத்தவன்,… “ஷ்” என கால் தடுமாறி விழ போன நேரம்,… “ஐயோ… பார்த்துங்க” என அவனது புஜத்தை பற்றினாள் நித்திலா..

இப்போது அவனது இதழ் அழகாக இன்னும் விரிந்தது,… “பார்த்து போக கூடாதா?” அக்கறையாக கேட்டவள்,…”இங்க வாங்க, உட்காருங்க” என அவனை அங்கிருந்த கல்பெஞ்சில் அமர
வைத்துவிட்டு “ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்” என வீட்டினுள் ஓடினாள்,…

சில நிமிடத்தில் கையில் தண்ணீர் டம்ளரோடு வந்தவள்…. “குடிங்க” என்றாள் அவனிடம் நீட்டியபடி…

அவன் புருவம் உயர்த்தி பார்க்க,…. அவளோ…  “வெளியே போகும் போது, கால் தடுக்குனா அப்படியே போயிட கூடாது, உட்கார்ந்து தண்ணீ வாங்கி குடிச்சிட்டு தான் போகணும்” அவள் விளக்கம் தர, மறுக்காமல் தண்ணீரை வாங்கி பருகினான் அவன்,……

“இப்போ போய்ட்டு வாங்க” அவள் சொல்ல,… சிறு புன்னகையுடன் எழுந்தவன், தன் காரினுள் அமர்ந்து வண்டியை உயிர்ப்பித்தான்…. அவன் ஜன்னல் கண்ணாடியை இறக்கி அவளை பார்க்க, இதழில் புன்னகை பூக்க…. “பை” என கையசைத்தாள் நித்திலா, அவளை பார்த்தவாரே வண்டியை ரிவர்ஸில் எடுத்தவன், விழிகளில் அவளை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிருந்தான்,….

அவனது கார் மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் இன்று தன்னிடம் நடந்து கொண்டது நினைவு வரவே இதழில் புன்னகை மலர்ந்தது, அதே புன்னகையுடன் தன் தாத்தா பாட்டியை காண சென்றாள்,… விக்ராந்த் வரும் வரை தன் பாட்டி தாத்தாவோடு தான் அவளுக்கு நேரங்கள் கடந்தது…

“நித்தி கண்ணு,… விக்ராந்த் தம்பி உன்னை சந்தோஷமா தானே வச்சிருக்காரு, நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா சந்தோஷமாக தானே இருக்கீங்க” தன் பேத்தி தன் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டாளா என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கில் மறைமுகமாக கேட்டார் வைத்தீஸ்வரி பாட்டி,….

பாட்டி கேட்டதன் அர்த்தம் புரிந்து கொண்ட நித்திலாவிற்கு,… இரவு நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்து, வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தது, அதனை கண்டு பூரித்து போன பாட்டி,…”என் ராசாத்தி, எனக்கு இது போதும்டி கண்ணு” அவளை உச்சி முகர்ந்தவர்,… “சீக்கிரமே என் கொள்ளு பேரனையோ பேத்தியையோ பார்க்க போறேன்னு உன்னுடைய இந்த சிவந்த முகமே சொல்லிடுச்சு” என சந்தோஷத்தில் ஆர்பரித்தார்,…

பாட்டியின் கடைசி சொல்லில் நித்திலாவின் முகம் மாறியது, ‘குழந்தையை வைத்து இங்கேயே டேரா போட்டுடுவியே’ என்ற அவன் சொல்லிய வார்த்தைகள் சிந்தனையில் வந்து அவளது முகம் வெளிறியது,…

“என்னடா கண்ணு” நித்திலாவின் முகமாற்றத்தை கண்டு கேட்டார் பாட்டி,…

வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்… “ஒன்னுமில்ல பாட்டி” என சமாளித்துவிட்டு அவருடன் விட்டதிலிருந்து பேச்சை தொடர்ந்தாள்……

மாலை ஆறுமணிக்கெல்லாம் நித்திலாவை அழைத்துச் செல்வதற்காக அவள் வீடு வந்து சேர்ந்திருந்தான் விக்ராந்த், அங்கே சிறிய பாசமலர் படமே ஓடிக்கொண்டிருந்தது, தன் பாட்டி தாத்தாவை பிரிந்து வந்த துயரத்தில், கண்ணீர் கன்னத்தில் வடிய விக்ராந்துடன் புகுந்த வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் நித்திலா….

சிறிது நேரம் அவளின் அழுகையை கண்டுகொள்ளாமல் வந்தவன்,… “இப்போ ஏன் பேபி நிறுத்தாம அழுதுட்டு வர, ஆறுமாசத்துக்கு அப்புறம் நீ உன் பாட்டி தாத்தா கிட்ட தானே திரும்ப போக போற, உனக்கு அவங்களை பிரிஞ்சு இருக்க விருப்பம் இல்லைன்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம அவங்க கூடவே இருந்துடு” அவன் சொன்னதில் அவளுக்கு கோபம் தலைக்கேறியது….

“எதுக்காக இப்படி மனசாட்சியே இல்லாம நடந்துகிறீங்க, எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லாட்டாலும் பரவால்ல, ஆறு மாசம் ஆறு மாசம்ன்னு சொல்லி சொல்லியே என்னை கொல்லாதீங்க” என்றாள் வேதனையுடன்….

“எப்படி பேபி அந்த பேச்சை எடுக்காம இருக்க முடியும், நான் அப்பப்போ சொல்லிக்கிட்டு இருந்தா தானே உனக்கும் அது நியாபகத்துல இருக்கும், உன்னை அறியாம நீ என் வீட்டுலேயே நிரந்தரமா தங்கிட்டா எனக்கு தானே பிரட்சனை” என்றான்….

“உங்களுக்கு அந்த பயமே வேணாம், ஆறுமாசத்துக்கு மேல நீங்களே என்னை உங்க கூட இருக்க சொன்னாலும் நான் இருக்க மாட்டேன், இப்போ சந்தோஷமா?” கோபமாக கத்தியவள், வெளிப் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்படி சொல்லுமா நித்திலா … இவன் கூட யார் இருப்பாங்க …

  2. பாட்டி தாத்தா ஆசைப்பட்டது போல் அவர்களுக்கு பேரனின் அன்பு கிடைத்துவிட்டது.

    விக்ராந்த் எல்லோரிடமும் அன்போடு தானே பழகுகிறான் பிறகு ஏன் அப்பா மீதும் அப்பா ஏற்பாடு செய்த திருமணத்தின் மீதும் வெறுப்பு?

    மகிழவும் வைத்து அழவும் வைக்கிறான். ஆறு மாதங்கள் கணக்கை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கணுமா?