Loading

வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவள் எவ்வளவு நேரம் நின்றாள் என அவளுக்கே வெளிச்சம். காலில் வலி எடுக்க தனது அறையை நேக்கி சென்றாள்.

காலை அந்த மண்டபமே ஆட்களால் நிறைந்து வழிந்தது மண்டப வாசலில் “அபிமன்யு வெட்ஸ் மலரிதழ்” என்ற பூக்களால் அலங்கரித்த பலகை வருவோர்களை வறவேற்றது.

மணமகள் அறையில் மலரை அலங்கார கலைஞர்கள் அலங்கரித்து கொண்டிருந்தார்கள். அந்த அறையே பொண்களின் சிரிப்பொலியாள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மலரின் முகத்தில் மட்டும் கவலை குடிகொண்டிருந்தது.

மலர் இதுவரையில் தனது தாயை விட்டு எங்கும் தனியே சென்றது இல்லை. பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றாலும் தனது தங்கை அல்லது தமக்கை உடன் தான் சென்றிருக்கிறாள். கல்லூரி முதல் நாளும் தனது தாயுடன் தான் சென்றாள்.

அவள் யாருடனும் அவ்வளவு சிக்கிரம் பழக மாட்டாள் சிறிது கூச்ச சுபாவம் கொண்டவள்.

 

பெண் பிள்ளைகள் அப்பொழுதும் அப்பாவின் மேல்தான் அதிக அளவில் அன்பு இருக்கும் ஆனால் மலர் மட்டும் அல்ல அவளது இரு சகோதரிகளும் தாயின் மேல்  தான் அதிக நேசம் கொண்டுன்ளனர். இப்போது அவ்வளவு தூரம் தனித்து செல்ல போகிறோம் என நினைத்தே அதிக கவலை கொண்டுள்ளால்.

 

மணவரையில் ஆண்மைக்கே உரித்தான  மிடுக்குடன் அமர்ந்திருந்தான் அபிமன்யு ராஜேந்திரன். அவனது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது ஜயர் கூறும் மந்திரத்தை கூறிக்கொண்டிருந்தான்.

 

பொண்ண அழைச்சிட்டு வாருங்கோ என ஜயர் குறல் குடுக்க மலரை அபியின் தங்கை மித்ரா சென்று அவளின் சகோதரிகள் சூழ அழைத்து வந்து மணவரையில் அமர்தினாள்.

ஜயர் மாங்கல்யத்தை மித்ரா வின் கையில் தந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வருமாறு கூறி அனுப்பினார்.

 

மித்ரா அனுவரிடமும் ஆசிர்வாதம் பெற்று மாங்கல்யத்தை ஐயரிடம் கொடுத்தாள்.

முகூர்த்த நேரம் வந்ததும் மாங்கல்யத்தை அபியிடம் தந்தவர் மந்திரம் முழங்க அபி மங்கலநான் பூட்டி மலரை தன் சரி பாதியாக ஆக்கிக்கொண்டான். ஆனால் இருவரின் மனதில் என்ன உள்ளது என அவர்களே அறிவர்.

 

பின் அனைத்து சம்பர்தாயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக முடிவுற்றது இருவருமே உண்ர்ச்சி துடைத்த முகத்துடனே பங்கேற்றனர்.

வந்த அனைவரும் சென்றதும் இரு குடும்பத்தார் மட்டுமே இருந்தனர். மணமக்களை ஓய்வெடுக்க அங்குள்ள ஒரு அறைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் மித்ராவும் மலரின் சகோதிரிகளும் சென்றனர்.

 

கவி “ஹாய் மாமா நா கவி கவிமதி இவங்க இரண்டு பேரும் பிரியா திவ்யா என்னுடைய அக்கா சித்தப்பா பொண்ணுங்க இன்னொரு அக்கா வெளிய இருக்காங்க அவங்க பெயர் வலர்மதி ” என கூறிக்கொண்டிருக்கும் போதே அத்தை என்ற அழைப்போடு வந்தான் மூன்று வயது சிறுவன் அவர்கள் அண்ணண் மகன் ஷாம்கனேஷ் அவனை அள்ளிக் கொண்டு மீண்டும் அபியிடம் “இவன் ஷாம்கனேஷ் எங்களுடைய அண்ண பையன் அண்ணா பெயர் தமிழ் அண்ணி பெயர் கனிமொழி அப்பறம்” என கூறிக் கொண்டிருக்கும் போதே பிரியா “கவி கொஞ்சமாச்சும் மூச்சி விடு பாவம் மாமா மீதிய அப்பறம் பேசலாம் வாங்க போலாம் மித்ரா நீங்களும் வாங்க நாம வெளிய போய் பேசிக்களாம் ” என மித்ராவையும் அழைத்துக் கொண்டு சென்றாள். இதை அனைத்தையும் சின்ன சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான் அபி.

 

அவர்கள் சென்றதும் அபிக்கு ஒரு முக்கிய அழைப்பு வற தனது கைபேசியை எடுத்து கொண்டு வெளியேரினான். அவன் சென்றதும் தான் மலருக்கு மூச்சே வந்தது இதுவரை யாரிடமும் இவ்வளவு அருகில் அமர்ந்தது இல்லை அனைவரும் ஆண்கள் தான் என்ற வரிகள் கேட்டே அவளது அன்னையாள் வளர்க்கப் பட்டவள். தந்தையிடம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஒன்றியது இல்லை சிறு இடைவெளி விட்டே வளர்ந்தவள் எனவே அபியின் நெருக்கம் அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது.

 

அபி கைபேசியை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் பேசிக்கொண்டே அந்த அறைக்கு  பின்னால் வந்து நின்றான்.

 

அபி வெளியே சென்றதும் மலரிடம் பேச லட்சுமி உள்ளே வந்தார்.

“இங்க பாரு மலர் நா உனக்கு எப்பவும் நல்லதுதான் செய்வ அம்மா மேல நம்பிக்க இருக்கில்ல அப்பறம் என்ன. நீ எங்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது” என பேசிக்கொண்டிருக்கும் போதே மலரின் அத்தை காமாட்சி வந்தார். அவர் மலரின் அன்னையின் அண்ணண் மணைவி திருமணம் முடிந்ததும் அவர் கணவருடன் அவரது தாய் வீட்டிற்கே சென்றவர் இன்னும் அங்கே தான் உள்ளார். இப்பொழுது மலரின் திருமணத்திற்கு வந்துள்ளார்.

லட்சுமி “வாங்க அண்ணி” என்று அழைத்தார்.

 

காமாட்சி “என்ன அண்ணி மலருக்கு ஆறுதல் சொல்றிங்களா அதுக்கு தான் நா அப்பவே சொன்னே எம்மகனுக்கு மலர குடுங்கன்னு நீங்கள் தான் படிக்கணும்னு சொன்னிங்க இப்ப பணக்கார சம்பந்தம்னு தானே ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் வந்து நின்ன மாப்பிள்ளைக்கு மலர கட்டி கொடுத்திட்டிங்க நாங்கள்ளா ஏழைங்கனு தானே எம்பையனுக்கு மலர தறல ”

 

லட்சுமி “என்ன அண்ணி நா அப்படிலா நினைக்கல”

 

காமாட்சி “சரி விடுங்க அண்ணி மலர் நீ அங்கெல்லாம் இருக்க தேவல மாப்பிள்ளை கிட்ட பேசி அவரமட்டும் இங்க அழைச்சிட்டு வந்துடு எப்பவும் அம்மா கூட இருக்கலாம் ” என அவர் பேசிக்கொண்டே போக மலர் தன் தாயை முறைத்தாள்.

 

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவரின் பேச்சில் கோபத்தின் உச்சிக்கே சென்றாள் அவளை பார்த்த லட்சுமி அவள் ஏதேனும் கூறுவதற்கு முன் அவரை என்ன செல்லி அனுப்புவது என முழிக்க அப்போது “அத்தை உங்கள அப்பா கூப்டாங்க” என சொல்லிக் கொண்டு வந்தாள் வலர்.”சரி நா என்னன்னு கேக்கற” என்று சென்றார் காமாட்சி.

 

அபி இங்கு அவளது அத்தை பேச்சை கேட்டவன் அதற்கு மேல் கேக்க பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு கோபத்தோடு சென்றான் இருந்து கேட்டிருந்தால் பின் வரும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

ஏற்கனவே இரவு அவள் பேசியதை கேட்டு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியாமல் இருந்தவன் இப்பொழுது அவளது அத்தை பேசியதை கேட்டதும்  பணத்திற்காக தான் தன்னை மணந்துள்ளாள் என நினைத்தே கோபம் கொண்டுள்ளான்.

இவனும் இந்த திருமணத்திற்கு மணப்பூர்வமாக ஒன்னும் சம்மதம் தெரிவிக்க வில்லை இந்த திருமணத்தில் அவனுக்கு ஆதாயம் உள்ளது இருந்தும் ஏன் கோபம் கொள்கிறோம் என்று யோசிக்க வில்லை.

 

அவர் சென்றதும் பொரிய தொடங்கிவிட்டால் “அவங்க என்ன நினைச்சுக்குனு இருக்காங்க அவங்க மாதிரி நா பன்னுவனு நினைக்குறாங்களா எல்லா உங்கள சொல்லனும் அவங்க கிட்ட பதில் பேசாம அமைதியா இருக்கிங்க நீங்க எதுக்கு அவங்கள கல்யாணத்திற்கு கூப்டிங்க”

வலர் “மலர் விடு, மணியாச்சினு அங்க எல்லோரும் உங்கள கூப்டாங்க வாங்க போகலாம்”

 

பின் அனைவரும் பெண் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

பிரியா தான் ஆர்த்தி எடுத்து வறவேற்றாள்.

 

கவி அவர்களை வழி மறைத்து “மாமா காசு தறாம உங்களுக்கு வழி விட மாட்டேன்” என்றவள் அபி கையால் காசை வாங்கிய பின்பே வழியை விட்டாள்.

 

மலரின் வீடு ஒரு சின்ன ஹால் இரண்டு படுக்கை அறை அதை ஒட்டி சமையல் அறை மட்டும் பூஜை அறை  பின்புறம் குளியலறை மாடிக்கு போக ஹால் மற்றும் பின்புறம் படிக்கட்டு அமைந்துள்ளது மாடியில் அட்டாச்சுடு பாத்ரூமுடன் ஒரு அறையும் உள்ளது. மாடியில் உள்ள அறைதான் மலரின் அறை. அவள் இரவில் தான் படிப்பாள் பகலில் ஒருபோதும் படிக்க மாட்டாள் இதனால் அனைவரின் உறக்கமும் கெடும் என மாடியில் தனக்கு தனி அறை அமைக்க செல்லி பெற்று கொண்டாள் அவர்களும் அவள் கல்லூரி சென்றதும் தான் தனி அறை அமைத்து தந்தனர்.

 

பின் சம்பர்தாயங்கள் முடிந்த உடன் அபியை ஓய்வெடுக்க கீழே உள்ள ஒரு அறைக்கு அனுப்பினர். அவனுடன் அவன் தம்பி அர்ஜூன் சென்றான். அபி அவர்களின் வீட்டில் அவனது தாத்தா உடன் மட்டும் தான் பேசுவான் அதும் அவர் கூறுவதை கேட்பதொடு சரி.

அந்த அறையில் ஒரு கட்டில் துணி அடுக்கிவைக்க ஒரு கபோடும் ஒரு டிரெஸ்ஸிங் டெபில் மட்டுமே இருந்தது. இருவரும் கட்டிலில் அமர்ந்தனர். அபி தனது கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான். அர்ஜூன் சிறிது நேரம் இருந்தவன் பின் சும்மா இருக்க பிடிக்காமல் வெளியே வந்தவன் கவி ஷாமுடன் இருப்பதை பார்த்து அவளிடம் சென்றான்.

 

“ஹாய் பாப்பா எந்த க்ளாஸ் படிக்கிரிங்க ஐந்தாவதா ஆறாவதா”

 

“நா ஒன்னும் பாப்பா இல்ல நா எய்த் படிக்கிரிங்கற”என்றவள் “நீங்க என்ன படிக்கிரிங்க அண்ணா”என கேக்க அதற்கு அர்ஜூன்

 

“ஏய் நா உனக்கு மாமா நீ என்ன மாமானு தான் கூப்புடனும் அப்பறம் நா படிச்சு முடிச்சி ரொம்ப காலம் ஆச்சி” என்று தனது சட்டை காலரை தூக்கி விட்டவாறு.

 

“ஹம் நா உங்களளாம் மாமான்னு கூப்புட மாட்ட அபி மாமாவதான் கூப்டுவ”

 

“நா உன்ன மாமான்னு கூப்புட வைக்காம விடமாட்டேன்”

 

“பாக்களாமா?”

 

“பாக்களாம்” என்றவன் தன் அன்னை அமைக்கவும் அங்கிருந்து சென்றான்.

 

பின் அவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றனர். மலர் தன் அறைக்கு வந்தவள்  கண் மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். இன்னும் மனதின் படபடப்பு குறைந்த பாடில்லை.

 

வலர் வந்து மலரை சாப்பிட அழைத்து சென்றாள். இங்கு தமிழ் வந்து அபியை சாப்பிட அழைத்தான். சாப்பிட்டு முடித்த உடன் மீண்டும் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.

 

இரவு வந்ததும் மலரின் பயம் பதட்டம் அதிகரிக்க செய்தது. இருவரும் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசியது இல்லை.

நேற்று தான் அவள் அபியை முதல் முதலில் பார்த்தது. இவ்வாறு யொசித்துக் கொண்டிருக்கும் போதே வலர் வந்து மலரை அலங்கரிக்கத் தொடங்கினாள்.

 

அபியை மலரின் அறைக்கு அனுப்பினர்.

வலர் மலரின் கையில் பால் சொம்பை கொடுத்து அவள் அறைக்குள் அனுப்பி விட்டு மலரின் பெற்றோர் தவிர அனைவரும் மலரின் பெரியம்மா வீட்டிற்கு சென்றனர். அவரின் ஊர் தஞ்சை பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அங்குதான் சென்றுள்ளனர்.

 

இதற்க்கு முன் தான் இருந்த அறைதான் என்றாலும் இன்று உள்ளே  செல்ல பயமாகதான்

இருந்தது.

உள்ளே சென்றள் அவனின் கோபக் குறலில் அதிர்ந்து நின்றாள்.

 

தொடரும்…..

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்