
- அலைகடலும் ஓய்ந்திருக்க பெண்ணவளின் அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலகளும் துயிலுகையில் மான்விழியவள் துயில் துறந்ததுமேன்?
வானகமும் நானிலமும் மௌனம்தனில் ஆழ்ந்திருக்க பெண்ணொருத்தியின் மனம் சுழல்வது மேன்?
வின்மீன்களும் சுற்றத்தாரால் சூழ்ந்திருக்க பெண்ணுள்ளம் தனிமையை நாடுவதுமேன்?
இரவு 11 மணி
தஞ்சை நகர் இருலில் சூழ்ந்திருக்க அங்கு ஒரு மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்குள்ள அனைவரும் உறங்குகையில் மொட்டை மாடியில் ஒரு உருவம் நிலமகலையும் தன் கையில் உள்ள கைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. இதற்க்கு மேல் பொருக்க முடியாததால் கைபேசியில் உள்ள ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்து அழைப்பு ஏற்க காத்துக் கொண்டுருந்தது அழைப்பை ஏற்றதும்
“ஹலோ நீ எங்க இருக்க? இங்க வருவியா வரமாட்டியா? இதுக்குமேல உங்கிட்ட கெஞ்ச முடியாது. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லனு செல்லிப் பாத்தாச்சி இவங்க கேக்கறதா இல்ல நீ வந்தா நிச்சயமா இந்த கல்யாணம் நடக்காது ப்ளீஸ் நீ இங்க வா”
“……….”
“ஹம் நீ வரமாட்ட அதானே ஆனா இதுகப்பரம் நீ என்ன பார்க்கவோ பேசவோ வரக்கூடாது உன்ன நம்பினதுக்கு நல்லா செஞ்சிட்ட இனிமே உங்கிட்ட பேச ஒன்னும் இல்ல பாய்”
என்று கூறி கைபேசியை அனைத்து வானத்தை வெறித்து பார்க்க ஆரம்பித்தாள் நம் கதையின் நாயகி மலர் என்கின்ற மலரிதழ்.
இந்த உரையாடலை ஒரு ஜோடி காது கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் தனது இடத்தை நோக்கி சென்றுவிட்டது.
வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த மலரின் நினைவுகள் இந்நிகழ்சிக்கு அடித்தலமிட்ட நாளுக்கு சென்றது.
வாங்க வாங்க நாமளும் மலர் ஃபாலோ பன்னலாம்.
தனது மூன்றாம் வருட கடைசி தேர்வை வெற்றிகரமாக முடித்து கல்லூரியில் இருந்து வீடுவந்தவளை ஆட்கள் நிறைந்த வீடுதான் வறவோற்றது. எப்பொழுதும் மாலை முதலில் வருவது இவள் தான். இன்று வீட்டில் அனைவரும் இருப்பதால் குழப்பத்துடனே வீட்டிற்குள் நுழைந்தவளை அவளது அன்னை ரூமிற்கு அழைத்து வந்து ஒரு புடவையை அணிந்து வருமாறு கூறினார். தனக்கு புடவை அணிய தேரியாது என்றதுயும் மறந்து செல்லும் அன்னையை பார்த்தவள் தனது தமக்கையை அழைத்தாள்.
மலரின் அம்மா லட்சுமி
அப்பா ஆறுமுகம் அக்கா வலர்மதி
தங்கை கவிமதி
தமக்கை வந்ததும் அடுக்கடுக்காக தனது கேள்வி கனைகளை தொடுக்க ஆரம்பித்தாள் மலர்.
“வலர் இங்க என்ன நடக்குது யார் இவங்களாம்? பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, மாமா லா வந்துருக்கறாங்க எனக்கு தலையே வலிக்குது என்னனு சொல்லு”
வலர்”உன்ன பொண்ணு பார்க்க வந்துருக்காங்க சிக்கறம் கிளம்பு நா உனக்கு புடவை கட்டி விடுற”
மலர் ” எனக்கு இப்ப எதுக்கு கல்யாணம் நா இன்னும் படிப்பையே முடிக்கல இன்னும் ஒரு வருஷம் இருக்கு எனக்கு இப்ப கல்யாணம் தேவல”
வலர் “இங்க பாரு உன்ன இப்ப பொண்ணு மட்டும் தான் பாக்க வந்துருக்காங்க இப்ப கிளம்பு அவங்க போனதும் மீதி பாத்துக்கலாம் அம்மா உனக்கு புடிச்சா தான் எதுவாயிருந்தாலும் செய்வாங்கனு நம்பிக்கை இருக்குள்ள.”
மலர் “ஹம்”
வலர் “அப்பறம் என்ன கிளம்பு” என்று கூறி மலருக்கு புடவை அணிவித்து அலங்கரித்தாள்.
அலங்காரம் முடியவும் மலரின் அன்னை லட்சுமி அறைக்கு வரவும் சரியாக இருந்தது. தனது மகளை பார்த்தவர் மெய் மறந்து நின்று விட்டார்.
வலர் தான் அம்மா என்று தன்அன்னையை உலுக்கி நிகழ்வுக்கு கொண்டுவந்தாள்.
லட்சுமி “பாக்க ரொம்ப அழகா இருக்க மலர் எங்கண்ணே பட்டுடும் போல உனக்கு இன்னைக்கு திஸ்டி சுத்தி போடனும்” என்றதுக்கு புன்னகித்தாள் மலர்.
மலர் “அம்மா என்க்கு இப்ப கல்யாணம் தேவல மா, நா உன்னும் படிச்சி முடிக்கல மா இப்ப என்ன அவசரம் கல்யாணத்திற்கு.” என்று தன் அன்னையிடம் தனது வாதத்தை துவங்னாள்.
லட்சுமி “இப்ப முதல வெளியே வா அவங்க போனதும் மீதிய பேசிக்களாம் டா” என்று சமாதானம் செய்து மலரை அனைவர் முன்னிலையிலும் அழைத்து வந்தனர்.
டி, காஃபி, பச்சி, சோச்சி என பொண் பார்க்கும் படலம் இனிதே முடிவுற்றது.
மாப்பிள்ளையின் ஊர் சென்னை மாப்பிள்ளையின் அம்மா ஊர் தான் தஞ்சை.
அவரது பெயர் லதா, அவர் கணவர் ராஜேந்திரன், இரண்டு மகன், ஒரு மகள்.
அவரது முதல் மகனுக்கு தான் பெண் பார்க்க வந்தனர். ராஜேந்திரன் லதா மற்றும் ராஜேந்திரரின் அப்பா சிவேந்திரன் இவர்கள் மூவரும் தான் பெண் பார்க்க வந்தனர்.
லதாக்கும் லட்சுமிக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கம். லதாவின் திருமணத்திலிருந்து அவர் தஞ்சை வருவது குறைந்தது அவரது தாய் இறந்ததும் முற்றிலும் அவர் தஞ்சை வருவது இல்லை.
தனது முத்த மகன் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும் என வேண்டிக்கேள்ள தஞ்சை கோவிலுக்கு வெகு நாட்கள் கழித்து வந்தவர் அங்கு தான் லட்சுமியை பார்த்தார். வெகு நாட்கள் கழித்து பார்த்தால் இருவரும் அவரவர் குடும்பங்களை பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசிக்கொண்டனர். அப்போது லட்சுமி அவரிடம் மூத்த மகள் திருமணம் பற்றியும் இரண்டாவது மகள் கல்லுரியிலும் கடைசி மகள் பள்ளியில் பயில்வதையும் கூறினார்.
மலரை பற்றி கூறிய உடன் லதா அவரின் மூத்த மகனுக்கு மலர் மனைவி ஆக வந்தாள் நன்றாக இருக்கும் என லட்சுமியிடம் அதை உடனே கூரவும் செய்தார்.
லட்சுமியும் லதாவை போன்றே அவரது மகனும் நல்லவராக தான் இருப்பார் என்று உடனே தனது சம்மதத்தை தந்தவர் அன்றே இருவரது ஜாதகத்தையும் பொருத்தம் பார்ததில் நன்றாக பொருந்தியதாள் லதா மலரின் புகைப்படத்துடன் சென்னை சென்றார்.
அப்போது மலருக்கு தேர்வு இருந்ததால் மலரிடம் யாரும் இதைப்பற்றி கூறவில்லை. லட்சுமி தனது வீட்டினாருடன் கலந்து பேசி அவர்களது சம்மதத்தையும் வாங்கினார்.
லதாவின் மூத்த மகனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் பொறுப்பை அவனது தாத்தா ஏற்றுக் கொண்டார். அவனுக்கு அவனது தாத்தாவின் மேல் தனி பிரியம் உண்டு அவரது வார்த்தையை அவன் மீறியது இல்லை. அவர் கூறியது போல் அரும்பாடு பட்டு அவனது சம்மதத்தையும் வாங்கிவிட்டார்.
சிவேந்திரர் சென்னையில் முக்கிய பணக்காரர்களில் ஒருவர் அவரின் தந்தை சென்னையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியை நடத்தி வந்தார். இவர் அதனுடன் பொறியியல் கல்லூரியும் நிறுவினார். ஏழைகளுக்கு குறைந்த செலவில் கல்வி வழங்குவது சிவேந்திரரின் தந்தையின் ஆசை அதை இன்று வரை நிறைவேற்றி வருகிறார்.
ராஜேந்திரர் தனியாக தொழில் செய்ய ஆசை என ஒரு வணிக வலாகம் ஒன்றை நிறுவினார் இன்று சென்னையில் மூக்கிய இடங்களில் அதன் கிளைகளை நிறுவியுள்ளார்.
அவரது மூத்த மகனும் தனியாக தான் தொழில் செய்வேன் என படித்து முடித்தவுடன் மென்பொருள் (software) நிறுவனத்தை நிறுவி அதில் வெற்றியும் கண்டான்.
சரி சரி இன்றோடோக்க்ஷன் போதும் வாங்க பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட போவோம்.
அவர்கள் சென்றதும் மலர் தனது தாயை பிடித்துக் கொண்டாள்.
“அம்மா எனக்கு இப்ப கல்யாணம் தேவல இது முதல நிருத்துங்க எனக்கு நீங்க பன்னுரதெல்லாம் பாத்தா கடுப்பாகுது எனக்கு இப்ப எதுவும் தேவல நா இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கனும் மா ப்ளிஸ் மா” சோர்ந்து போன குறலில் வந்தது மலரிடமிருந்து.
லட்சுமி “இங்க பாரு மலர் இந்த இடம் ரொம்ப நல்ல இடம் நீ கவலப்பட தேவயில்ல, உன்ன ஒன்னும் தெரியாத இடத்துக்கு கட்டி கொடுக்க பொறது இல்ல லதா ரொம்ப நல்லவ அவங்க வீட்டுல உள்ள எல்லொரும் ரொம்ப நல்லவங்க. அவங்க சென்னையிலே ரொம்ப பெரிய குடும்பம் நீ ரொம்ப அதிஷ்டசாலி”
மலர் “என்னது சென்னையா? அம்மா நா உங்களளாம் விட்டுட்டு அவ்வளவு தூரம் போக மாட்ட எனக்கு இந்த கல்யாணம் தேவல மா” சினுங்களில் ஆரம்பித்தது அழுகையில் முடித்தாள்.
லட்சுமி “மலர் நீ உன்னுள் சின்ன பொண்ணு இல்ல இது முதல புருஞ்சிக்கோ எப்படியும் கல்யாணம் ஆனா நீ வேற வீட்டுக்கு தான் போகனும். இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் அவ்ளோதான் ”
மலர் “அம்மா சரி நா இந்த கல்யாணம் பன்னிக்குற ஆன நா இன்னும் படிப்பையே முடிக்கல இன்னும் ஒரு வருஷம் இருக்கு அதனால் கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சி வச்சிக்கலாம் மா” என்று தனது அன்னையையே பாவமாக பார்த்தாள்.
லட்சுமி “நீ ஃபைனல் இயர சென்னையிலே படிக்கலாம் அங்க அவங்களுக்கு காலேஜ் இருக்கு அதிலே படிக்கலாம்” என்று அதற்கும் ஒரு பதிலை வைத்திருந்தார்.
மலர் “அம்மா அவங்க ரொம்ப பணக்காரங்க மா நமக்கு இது தேவல அவங்க நிறைய வரதட்சணை கேப்பாங்க மா” என்று கல்யாணத்தை நிறுத்தும் நோக்குடன் கூறினாள்.
லட்சுமி “அதலாம் நாங்க பாத்துக்குறோம் அவங்க ஒன்று வரதட்சணை கேக்கவே இல்ல இந்த கல்யாணம் நடக்கனும் அம்மா மேல பாசம் இருந்தா இதுக்கு சம்மதம் சொல்லு நா அவங்களுக்கு எம்பொண்ணு நா சொன்னா கேப்பானு இந்த கல்யாணம் நடக்கும்னு வாக்கு கொடுத்துட” என்று அதோடு தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
அன்றிலிருந்து இந்த ஒரு மாத காலமாக திருமணம் வேண்டாம் என பல முறை கே
ட்டு கொஞ்சி கெஞ்சி என பல விதமாக கேட்டு பார்த்தவள் இன்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

