Loading

அன்று இனியன் அவனுடைய பைக் ரிப்பேர் ஆனதால் … பஸ்சில் ஆபீஸுக்கு சென்று கொண்டிருந்தான் … காலை நேரம் பள்ளி ஆபீஸ் வேலைக்கு செல்பவர்கள் கூட்டம் அதிகம் என்பதால் பேருந்தில் நிற்க கூட இடமில்லை … பேருந்து நிற்கும் போதும் … பிரேக் போடும் போதும் அருகில் இருப்பவர்களை இடித்துக்கொண்டு தான் நிற்க முடியும் …

இனியன் முன்னால் இருந்த ஒரு பெண்ணை இடித்து கொண்டே இருக்க … ஹலோ ஏங்க என்னை இடிச்சுட்டே இருக்கீங்க … கொஞ்சம் தள்ளி நின்னா தான் என்ன என்று அவள் திரும்பாமலே கோபமாக கேட்க … நான் என்ன வேணும்னே உங்களை இடிக்கிறேனா … பஸ் கூட்டமா இருக்கு கூட்டத்துல நின்னுட்டு இருந்தா அங்கங்க இடி விழ தான் செய்யும் என்று இனியன் எரிச்சலாக சொல்ல … என்னடா எங்கேயோ கேட்ட குரலா இருக்கே என்று திரும்பி பார்த்தாள் ரேவதி …

ரேவதி எப்போதும் அவள் வேலை செய்யும் ஃபேக்டரி பேருந்தில் தான் செல்வாள் … இன்று அந்த பேருந்தை தவற விட்டதால் கவர்மெண்ட் பஸ்சில் ஏறினாள் …

அட இந்த வாயாடியா என்று மனதில் நினைத்த இனியன் … அன்று இளமாறன் கல்யாணத்தில் ரேவதியும் அவனும் இடித்துக் கொண்டதும் … சண்டை போட்டதும் அவனுக்கு நினைவுக்கு வர … ரேவதியை பார்த்து புன்முறுவல் செய்தான் … அவளும் லேசாக சிரித்தாள் …

அதற்குள் ரேவதி இறங்கும் ஸ்டாப் வந்து விட அவள் இறங்கி சென்று விட்டாள் … அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் நல்லா குண்டு குண்டு கண்ணை வச்சுக்கிட்டு கண்ணாலேயே மிரட்டி பேசுவா என்று நினைத்து சிரித்து கொண்டான் …

மறுநாள் ரேவதி வேண்டும் என்றே கம்பெனி பேருந்தை தவற விட்டு கவர்மெண்ட் பஸ்சில் ஏறினாள் … ஏறியவள் இனியனை சுற்றிலும் தேடினாள் … என்னை தான் தேடுறீங்களா ரேவதி என்று இனியன் சத்தம் வர … அவள் பார்த்தால் அவளுக்கு அருகில் சீட்டில் தான் அமர்ந்திருந்தான் …

இல்ல என் ஃப்ரெண்ட் வருவா … அவளை தான் தேடுனேன் என்று அவள் அசடு வழிந்து சொல்ல … அவன் எழுந்து அவளை அங்கு உட்கார சொன்னான் … அவள் அமர்ந்து கொண்டாள் …

எங்க வேலை பார்க்குறீங்க ?? தினமும் இந்த பஸ்ல தான் போவீங்களா என்று அவன் கேட்க … நான் VP மில்லுல தான் வேலை பண்றேன் … கம்பெனி பஸ் வரும் … அதை மிஸ் பண்ணிட்டா இதுல வருவேன் என்று சொன்னவள் …

ஆமா நீங்க எங்க வேலைக்கு போறீங்க … உங்கள இந்த பஸ்ல இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே என்று கேட்க … நானும் இளமாறனும் ஒரே ஆபீஸ்ல தான் வேலை செய்றோம் … தினமும் பைக்ல தான் ஆபீஸ் போவேன் … என்னோட பைக் ரிப்பேர் ஆகிடுச்சு .. அதான் பஸ்ல வந்தேன் என்றான் …

செந்தமிழ் நல்லா இருக்காளா ?? அவளை கல்யாணத்தன்னைக்கு பார்த்தது … நான் போய் பார்க்கணும்னு நினைச்சேன் … போக முடியல … இந்த ஞாயிற்றுக் கிழமை போய் பார்க்கணும் என்று அவள் சொல்ல … ஹ்ம்ம் இளமாறனை நான் தினமும் பார்க்கிறேன் … அவன் கிட்ட நீங்க செந்தமிழை விசாரிச்சதா சொல்றேன் என்றான் …

இளமாறன் போன் நம்பர் தரேன் ரேவதி … நீங்க அவனுக்கு போன் பண்ணி செந்தமிழ் கிட்ட தர சொல்லி … உங்க ஃப்ரெண்ட் கூட பேசுங்க என்று சொன்ன இனியன் அவன் செல்போன் எண்ணையும் … இளமாறன் செல்போன் எண்ணையும் கொடுத்து விட்டு … அவள் செல்போன் எண்ணை வாங்கி தன் மொபைலில் பதிந்து கொண்டான் … (( எப்படி நேக்கா பேசி அவ கிட்ட போன் நம்பர் வாங்கிட்டான் இந்த இனியன் ))

பேசும் போது இருவரின் பார்வைகளும் சந்தித்து கொள்ள … இருவரின் மனதுக்குள்ளும் ஒரு தடுமாற்றம் … ஒரு மெல்லிய பரவசம்… ஸ்டாப் வந்து விட ரேவதி இறங்கி சென்று விட்டாள் … அவள் சென்றதும் அவன் மனதில் தோன்றிய வெறுமையை இனியன் உணர தான் செய்தான் …

தினமும் இளமாறன் ஆபீஸுக்கும் புனிதா தையல் கடைக்கும் சென்று விட … செந்தமிழ் சமையல் செய்து வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டாள் … அவள் வீட்டிற்கு வந்ததில் இருந்து புனிதாவிற்கு வேலை பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது …

இளமாறனுக்கு காலையில் எழுந்து காபி போட்டுக் கொடுப்பதில் ஆரம்பித்து … அவன் குளிக்க போனால் டவல் எடுத்து தருவது … அவன் குளித்து விட்டு வந்தால் அவனுக்கு உடை எடுத்து அயர்ன் செய்து தருவது … சாப்பாடு பரிமாறுவது என எல்லா வேலைகளையும் செய்தாள் …

இதை கவனித்து விட்ட இளமாறன் என்ன எனக்கு பொண்டாட்டி மாதிரி… இந்த வீட்டுக்கு மருமக மாதிரி எல்லாத்தையும் உரிமையா பண்ற மாதிரி இருக்கு என்று நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்க… உரிமையா லாம் பண்ணல … நீங்க எனக்கு சாப்பாடு போடுறீங்க … கேட்காமலே துணிமணி எல்லாம் எடுத்து தர்றீங்க … அதுக்கு பதிலா தான் வேலை செய்றேன் … சும்மா இருக்க எனக்கும் போர் அடிக்குது … நீங்க ஒன்னும் பயப்படாதீங்க  … நீங்களே இங்க இருக்க சொன்னாலும் நான் இருக்க மாட்டேன் போதுமா என்று வெடுக்கென்று சொல்லி விட்டாள் …

அன்று இளமாறன் வீட்டிற்கு வந்து இரவு உணவு சாப்பிட உட்கார்ந்தான்… அம்மா என்ன இது டின்னர் கலர்ஃபுல்லா இருக்கு என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டவன் … ம்ம் … சூப்பரா இருக்கு … ரெட் தோசை … கிரீன் சட்னி … ஒயிட் சட்னி புதுசா செஞ்சிருக்கீங்க… சூப்பரா இருக்கு … கலக்குறீங்க புனிதாம்மா என்று அவன் சொல்லி சிரிக்க …

நான் இன்னைக்கு சமைக்கல இளமாறா … செந்தமிழ் தான் தக்காளி தோசையும் … தேங்காய் சட்னியும் … கொத்தமல்லி சட்னியும் செஞ்சிருக்கா … நல்லா இருக்குல்ல என்று புனிதா சொல்ல அவன் முகம் மாறினான் … இப்போலாம் செந்தமிழ் தான் சமைக்கிறா … நானே சமைச்சு சாப்பிட்டா எனக்கு அவ்வளவா பிடிக்காது … ஆனா இப்போ அவ சமைக்கிறது நல்லா இருக்கு … நான் கொஞ்சம் அதிகமா சாப்பிடுறேன் என்று அவர் சொல்ல … அவன் ம்ம் என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான் …

வாயை திறந்து ஒரு வார்த்தை நல்லா இருக்குனு சொன்னா குறைஞ்சு போயிடுவானா என்று மனதிற்குள் நினைத்த புனிதா … மருமகளுக்கு தோசை சுட்டு குடுத்து சாப்பிட வைத்தார் …

நீ என்ன இளமாறனை வாங்க போங்க அப்படின்னு பேசிட்டு இருக்க … மாமா ன்னு கூப்பிடு இல்ல பேர் சொல்லி கூப்பிடு என்று புனிதா கேட்க … ஐயோ நான் பேர் லாம் சொல்லி கூப்பிடல என்று வேகமாக சொன்னாள் செந்தமிழ் …

அப்போ அவனுக்கு செல்ல பேர் வச்சு கூப்பிடு … அப்போ தான் உங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாகும் என்று அவர் சொல்ல சிரித்தாள் … செல்ல பேர் வச்சு கூப்பிடுற அளவு நானும் அவரும் என்ன அவ்வளவு நெருக்கமா என்று அவளுக்குள்ளே கேட்டுக் கொண்டாள் …

அம்மா அவர் உங்களை புனிதாம்மானு கூப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு … நானும் உங்கள அப்படி கூப்பிடட்டுமா என்று செந்தமிழ் கேட்க … உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுடா என்று அவர் சொல்ல … புனிதாம்மா என்று அவரை அவள் அணைத்துக் கொண்டாள் …

அன்று இளமாறன் ஆபீஸில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தவனுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டாள் செந்தமிழ் … இன்னைக்கு வேலை எல்லாம் எப்படி போச்சு மாமா … எப்போ பிசினஸ் ஆரம்பிக்க போறீங்க என்று அவள் கேட்க … அவன் யோசனையாய் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் …

சாப்பாடு போடும் போதும் அவனுக்கு தேவையானதை எடுத்து தரும் போதும் அவனை மாமா என்று அவள் அழைத்துக் கொண்டிருந்ததையும் … அவன் அம்மாவை புனிதாம்மா என்று அவள் அழைப்பதையும் கவனித்து விட்டான் … இரவு அவள் அறைக்கு வரும் வரை மெத்தையில் நகத்தை கடித்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான் …

அவள் மெத்தைக்கு வந்து படுத்ததும் நீ எதுக்கு இப்போ என்னை மாமான்னு கூப்பிடுற என்று இளமாறன் கோபமாக கேட்க… அவள் மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள் … புனிதாம்மா தான் அப்படி கூப்பிட சொன்னாங்க என்று அவள் சொல்ல … எனக்கு பிடிக்கல … நீ என்னை அப்படி கூப்பிடாத என்றவன் … என் அம்மாவை எதுக்கு புனிதாம்மான்னு கூப்பிடுற … அவங்க என்னோட அம்மா அவங்களை அப்படி கூப்பிடுற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு என்று அவன் கோபமாக சொல்லி விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்…

அவங்க ஒண்ணும் என்னோட அம்மா இல்லையே … அவங்க மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையே என்ற உண்மை அவளை சுடத்தான் செய்தது … கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க கூட மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள் …

மறுநாள் செந்தமிழ் புனிதாவை மறுபடியும் அம்மா என்று மட்டும் அழைக்க … நீ ஏன் என்னை புனிதாம்மா அப்படின்னு கூப்பிட மாட்டேங்குற என்று புனிதா கேட்டார்… நீங்க அவரோட புனிதாம்மாவாம் … நான் அப்படி கூப்பிட கூடாதுன்னு அவர் சொல்லிட்டார் என்று புனிதாவிடம் அவள் சொல்லி விட … இங்க பாரு இளமாறா எனக்கும் என் பொண்ணுக்கும் இடையில நீ வராத என்று புனிதா அவனிடம் கோபமாக சொல்லி விட்டார் … அவன் இருவரையும் எரிச்சலோடு பார்த்தான் …

இப்போதெல்லாம் செந்தமிழ் புனிதாவிற்கு நெருக்கமாக இருப்பதையும் … அவன் கேள்வி கேட்டால் பயப்படாமல் பட்டென்று அவள் பதில் சொல்வதையும் இளமாறன் கவனிக்க தான் செய்தான் …

அதனால் அவள் மேல் அவனுக்கு கோபம் அதிகமாக தான் செய்தது … அதோடு அவன் அம்மாவும் பிசினஸ் பணம் பற்றி கேட்டால் … பதில் சொல்லாமல் இருக்க கோபத்துடன் தான் சுற்றிக் கொண்டிருந்தான் …

தினமும் புனிதாம்மா தன் அன்பு மழையால் செந்தமிழ் மனதை குளிர செய்ய … இளமாறனோ அமில வார்த்தைகளால் அவள் மனதை எரிக்க செய்தான் … அவளுக்கு இதெல்லாம் பழகி போனது … அவன் திட்டினால் கூட கண்ணீர் வருவதில்லை … அதுவும் வற்றி போனது … திருமணமாகி வந்த போது அவனுடன் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று இருந்த கொஞ்ச ஆசை கூட இப்போது இல்லை …

இருக்கும் வரை அம்மாவின் அன்பில் மகிழ்ச்சியாக இருக்கலாம்… அவன் போக சொன்னால் போய் விடலாம் என்று அங்கிருந்து வெளியேறும் நாளுக்காக காத்திருக்கிறாள் … ஆனாலும் அம்மா மகன் இருவரிடமும் மனம் கோணாமல் … சிரித்த முகமாக அவர்களுக்கு தேவையான எல்லா வேலைகளும் செய்து … கனிவுடன் அன்பாக நடந்து கொள்கிறாள் …

அம்மா ரொம்ப போர் அடிக்குது நானும் உங்க கூட கடைக்கு வரட்டுமா என்று செந்தமிழ் புனிதாவிடம் கேட்க… இல்ல டா இப்போதான் உங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கு … நீ அங்க வந்தா எல்லார் கண்ணும் உன் மேல தான் இருக்கும்… கல்லடி கூட படலாம் கண்ணடி படக்கூடாது … அங்க இருக்க எல்லார் கண்ணும் பொல்லாதது … அதனால நீ வீட்ல இரு … அம்மா கொஞ்ச நாளைக்கு பிறகு உன்னை கடைக்கு கூப்பிட்டு போறேன் என்று சொன்னார் புனிதவதி …

காதலாய் வருவாள் 💞 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அவள் சொன்னதை அவளுக்கே திருப்பி சொல்றியா இனியா? 🤣ரெண்டு பேருக்கும் என்ன ஒரு திருட்டுத்தனம்! எப்படியோ நேக்கா பேசி பேசியே நம்பர் வாங்கிட்டான்.

    உரிமை எடுத்துக்க கூடாதுனு தெளிவா சொல்லிட்ட, பதிலுக்கு அவ பிரதிஉபகாரம் செய்ய நினைக்கிறதும் தப்புனா எப்படி?

    புனிதாமாகாக இரண்டு பேருக்கும் இடையில் அன்பு போராட்டம், உரிமை போராட்டம் எல்லாம் உண்டாகும் போலையே.

    செந்தமிழ் எதுக்கும் ஆசைப்படாம நிதர்சனமான இருக்கும் வரை அன்போட மகிழ்வா வாழனும்னு முடிவு செஞ்சிருக்கா. நல்லது.

    மாறன் எப்போ பொருத்தது போதும்னு பொங்கி எழ போறானோ? பார்ப்போம்.

    1. Author

      ஒரு கல்யாணம் நடந்த இடத்தில அவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்களே இந்த இனியன் ரேவதி … பொங்குவான் நல்லா பொங்குவான் இந்த கெட்ட பையன் மாறன் …