
மருமகள் பேசியதை கேட்டு மாமியார் அப்படியே மெச்சி போனார் … வீட்டிற்கு வந்து மருமகளுக்கு சுத்தி போட்ட புனிதா… இன்னைக்கு எல்லாரோட கண்ணும் உன் மேல தான் … எப்படிடா இவ்வளவு அருமையா பதில் சொல்லி எல்லார் மூக்கையும் உடைச்ச என்று கேட்க … அது என் ஃப்ரெண்ட் ரேவதி இப்படி தான் எதிர்ல இருக்காதவங்க பேச முடியாத அளவு பதில் சொல்லுவா அதை பார்த்து தான் நானும் பேசினேன் என்றாள் செந்தமிழ் …
இளமாறா உன் மேல எதும் குறை இருக்குமோன்னு அவங்க கேட்டதும் நல்லா பதில் சொன்னா என் செல்லக்குட்டி … சீக்கிரமா என் பேத்தி பிறந்தா இவளுக வாய் எல்லாம் அடச்சிடுவேன் என்று புனிதா சொல்ல … ஏற்கனவே அவனுக்கு பிசினஸ் கடுப்பு … இதில் குழந்தை என்று அம்மா எந்நேரமும் கேட்க … குழந்தை என்ன பொம்மையா சீக்கிரமா வாங்கிட்டு வர்றதுக்கு … விட்டா நான் ஆம்பளையா இல்லையான்னு சர்டிபிகேட் கேட்பாங்க போல என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு எழுந்து உள்ளே சென்றான் …
புனிதவதி அப்படியே உறைந்து விட்டார் … அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது … பிறந்தது முதல் இப்போது வரை தாயின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன் கோபத்தில் வார்த்தைகளை கொட்டுகிறான் … இன்னும் இளமாறன் மனதில் அந்த நிரஞ்சனா தான் இருக்கிறாளா … இவனை நம்பி செந்தமிழ் வாழ்க்கையை கெடுத்து விட்டோமோ என்று நினைக்கையில் நிறைய கண்ணீர் வந்தது … அம்மா அழாதீங்க என்று சின்ன குழந்தை போல அவரை அணைத்து … அழுது கொண்டே அவர் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ் …
நான் அழல டா … அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான் போல … அதான் கோபமா பேசிட்டு போறான்… நீ போய் தூங்கு என்று அவர் அறைக்கு எழுந்து சென்றார் …
ஏங்க … என்று செந்தமிழ் அருகில் படுத்திருந்த இளமாறனை மெல்ல திரும்பி பார்த்து அழைக்க … ஹ்ம்ம் என்ன என்றான் … இல்ல புனிதாம்மா … என்று ஏதோ சொல்ல வந்தவள் தயங்கி எச்சில் விழுங்க … என்ன உங்க புனிதாம்மாக்கு என்றான் எரிச்சலாக …
அவங்க பாவம் அவங்களை நாம ஏன் ஏமாத்தணும் …
அதுக்கு …
அவங்க கிட்ட உண்மையை சொல்லிடலாமா …
சொல்லி எங்க அம்மா என்னை வீட்டை விட்டு துரத்திட்டா நீ சந்தோஷமா இருப்ப அதான …
அதில்லைங்க …
அவங்க குழந்தை வேணும்னு ரொம்ப ஃபீல் பண்றாங்க … இல்லனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குழந்தை பெத்துக்க…. அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் அவளை திரும்பி கோப பார்வை பார்த்தான் …
கண்ணீரிலும் கோபத்திலும் சிவந்திருந்த அவன் விழிகளை பார்த்தவள் மிரண்டு போனாள் …
ஏதாச்சும் பேசுனா வாயை கடிச்சு விட்ருவான் முரடன் என்று நினைத்து அப்படியே ஒன்றும் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்டாள் …
(( செந்தமிழ் மாமியார் வளர்ப்புல நல்லா பேசி டெவலப் ஆகிடுச்சு பரவாயில்லையே ))
இளமாறன் ஆபீஸுக்கு லீவ் போட்டு கம்பெனி திறப்பதற்காக அலைந்து கொண்டே இருந்தான் … காலையில் யாரையோ பார்க்க சென்றவன் ஏதோ டாக்குமெண்ட்ஸ் எடுக்க வீட்டிற்கு வந்தான் … கீழே காய்கறிகாரர் சத்தம் கேட்டு காய் வாங்க புனிதா சென்றிருக்க வீட்டின் கதவு வெறுமனே சாத்தி இருந்தது … வேகமாக உள்ளே நுழைந்தவன் அறை பூட்டியிருக்க தட்டி பார்த்தான் … திறக்கவில்லை … செந்தமிழுக்கு போன் செய்து பார்த்தான் … அவள் எடுக்கவில்லை…
உள்ள என்ன தான் பண்றாளோ என்று புலம்பி கொண்டே அவன் கதவை தட்ட … செந்தமிழ் ஒரு சின்ன புளூடூத் ஸ்பீக்கரில் போனை கனெக்ட் செய்து பாட்டை சத்தமாக போட்டு விட்டு குளிக்க சென்றிருந்தாள் … அவன் தட்டியது பாத்ரூமில் இருப்பவளுக்கு கேட்கவில்லை … அவனுக்கு அவசரமாக ஃபைல் தேவைப்பட … அவன் கோபமாக ஓங்கி கதவை தட்ட அது திறந்து கொண்டது …
அறைக்கு உள்ளே சென்று முதலில் அலறி கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான் … ஃபைலை காணாமல் அறை முழுக்க தேடியவன் ஓரமாக இருந்த அவன் பீரோவிற்குள் தேடிக் கொண்டிருக்க… அறை பூட்டியிருக்கிறது என்று நினைத்து கொண்டு செந்தமிழ் டவலோடு வெளியே வந்து இன்னொரு டவலால் தன் தலையை துவட்டி கொண்டு …
வாயா என் வீரா … கன்னக்குழியே குழியே காஞ்சு கிடக்குது … வாயா என் வீரா … நெஞ்சில் வலி வலி கொஞ்சம் மறைஞ்சு போகட்டும் என்று பாடல் பாடிக் கொண்டே …
உடையை எடுத்து போடலாம் என்று திரும்பி பார்த்தால் இளமாறன் கோபமாக அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் …
ஏற்கனவே ஃபைல் காணவில்லை என்று டென்ஷன் … இதில் அவள் அரை குறையாக அவனுக்கு எதிரே வந்து பாடிக் கொண்டிருந்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவன்…
இப்போ உனக்கு என்னடி பிரச்சனை… உடனே ஒரு குழந்தை பெத்துக்கணும் அதான இப்படிலாம் பண்ணிட்டு இருக்க … உன்னை … என்று கோபமாக சொன்னவன் … அவன் போட்டிருந்த பெல்ட்டை கழற்றி விட்டு அவன் சட்டை பட்டன்களை வேகமாக கழற்றினான் …
அய்யோ வேணாம் என்று செந்தமிழ் பயத்தில் கத்தியவள் … அப்படியே மயங்கி கீழே விழுந்தாள் … அவள் போட்டிருந்த டவலும் கழன்று விட பிறந்த மேனியாய் கிடந்தவளை பார்த்தவன் கண்களை மூடிக் கொண்டான் …
இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே … அம்மாவை கூப்பிடலாமா … அவங்க என்ன சொல்வாங்க … என்ன நினைப்பாங்க என்று கண்களை மூடி கொண்டே யோசனையில் இருந்தவன் … கால் பேலன்ஸ் காக கட்டிலில் சாய்ந்து கொண்டு மெல்ல அவளை தூக்கி மெத்தையில் போட்டான் …
தமிழ் என்னாச்சு டி எழுந்திரு என்று அவன் சொல்ல … அவள் மூடியிருந்த கண்களில் அசைவு இருந்தது … அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து … அவளை தூக்கி தண்ணீர் கொடுத்தான் … அவள் விழித்து பார்த்தால் சட்டை திறந்த நிலையில் வெற்று மார்புடன் இருப்பவனை பார்த்து பயந்து … மெத்தையில் பின்னால் நகர்ந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள் …
அவள் ஆடையில்லாமல் இருப்பது இன்னும் அவளுடைய மூளையில் உரைக்கவில்லை … அவன் ஏதாவது செய்து விடுவான் என்ற பயத்தோடு அவனை பார்த்து … இளா வேணாம் கிட்ட வராதீங்க … என்னை எதுவும் பண்ணாதீங்க … எனக்கு நீங்க வேணாம் … உங்க உடம்பு வேணாம்… உங்க குழந்தை வேணாம் … என்னை விட்டுருங்க … உங்களுக்கு பிடிக்காம என்னை தொடாதீங்க … நான் எந்த தப்பும் பண்ணல என்று முகத்தை மூடி அழுதவள் …
நான் அம்மா கிட்ட போய் எல்லா உண்மையும் சொல்ல போறேன் என்று … அவள் மெத்தையில் இருந்து இறங்க போக வேகமாக சென்று கதவை தாழ் போட்டான் … தமிழ் இப்படியே போக போறியா என்று அவள் தோளை அவன் தொட .. பயத்தில் மீண்டும் மயங்கி மெத்தையில் விழுந்து விட்டாள் …
அய்யோ பிசாசு என்னை டார்ச்சர் பண்றா என்று டென்ஷனில் தன் தலையை பிடித்துக் கொண்டவன் அவள் உடைகளை தேடி எடுத்தான்… அவள் மேல் பாதி விழுந்து … நடுங்கிக் கொண்டே அவளுக்கு உள்ளாடைகள் மாட்டி ஒரு நைட்டியை போட்டு விடுவதற்குள் வேர்த்து விறுவிறுத்து போய் விட்டான் …
அதிக எடை இல்லாத செந்தமிழை தூக்கி உடை போடுவது எல்லாம் அவனுக்கு எளிதான விஷயம் தான்… ஏற்கனவே அவள் அழகில் … அவள் அருகாமையில் அவ்வப்போது கிறங்கி போய் மன சஞ்சலத்தில் இருக்கும் இளம் ஆணவன் … இந்த கோலத்தில் அவளை பார்த்து விட்டு… தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தான் நிறைய போராடினான் …
இளமாறன் மீண்டும் செந்தமிழை தட்டி எழுப்ப … அய்யோ நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன் … என்னை விட்டுடுங்க … எனக்கு பணம் வேணாம் … காலேஜ் வேணாம் … படிப்பு வேணாம் … என்னை பேசியே கொல்லாதீங்க … எனக்கு கஷ்டமா இருக்கு என்று அழுதவள் மீண்டும் மயங்கி சரிந்தாள் … அவள் குழந்தைத்தனமான கதறலில் அவன் உள்ளமும் பதறி தான் போனது … கண்கள் கலங்கி போய் ஹேய் தமிழ் எழுந்திரு டி என்று அவன் எழுப்பினால் அவள் அசைவற்று கிடந்தாள் …
இளமாறன் வெளியே சென்று அவன் அம்மாவை அழைத்து வந்தான் … செந்தமிழ் என்னை பாருடா என்ன பண்ணுது என்று அவர் தட்டி எழுப்ப … ஹ்ம்ம் அம்மா என்று முனகினாள் …
புனிதா மெல்ல அவளை கைத்தாங்கலாக டாக்சியில் அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்கள் … என்ன இது இவ்ளோ BP இருக்கு … வீட்ல எதும் பிரச்சனையா … இப்பிடியே விட்டா ஹார்ட் அட்டாக் வந்திடும் என்று சொன்ன டாக்டர் அவளுக்கு செலுத்த வேண்டிய மருந்துகளை நர்ஸிடம் சொல்லி விட்டு சென்று விட …
என்னமா என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டே நர்ஸ் அவளுக்கு குளுக்கோஸ் போட்டு அதில் மருந்தும் போட்டார் … அது கல்யாணமாகி 3 மாசம் ஆச்சு … குழந்தை இல்லன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க … அதான் பிள்ளை பயந்துடுச்சு போல என்று புனிதா சொன்னார் …
ஹ்ம்ம் … முழிச்ச பிறகு கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் எதுவும் சொல்லாதீங்க … BP குறைஞ்சா தான் நல்லது என்று சொல்லிவிட்டு நர்ஸ் சென்றுவிட … கொஞ்ச நேரம் கழித்து அவள் விழித்து பார்த்தாள் …
செந்தமிழ் என்னடா இது … எதுனாலும் அம்மா கிட்ட சொல்ல மாட்டியா … நான் உனக்கு இருக்கேன்… நீ எதும் பயப்படாத … நல்லா சிரிச்சிட்டே இருந்த பிள்ளையை பேசியே படுக்க வைச்சுட்டாளுங்க … நீங்க குழந்தை மெதுவா பெத்துக்கோங்க … அம்மா இனிமே கேட்கவே மாட்டேன் … குழந்தை பத்தி பேசவே மாட்டேன் … குழந்தை பிறக்கலை ன்னாலும் எனக்கு நீயும் இளமாறனும் இருக்கீங்கள … அது போதும் என்று அவர் சொல்ல சொல்ல அவள் அழுது கொண்டே இருந்தாள் …
புனிதாம்மா என்று செந்தமிழ் கையை தூக்கி அழைக்க … அவர் அவளை அணைத்துக் கொண்டார்… குளுக்கோஸ் ஏறிக் கொண்டே இருக்க அவளுக்கு பின்னால் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து படுக்க வைத்திருந்தார் … தன்னை பற்றி யோசிக்க எனக்கும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று நினைக்கையில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி … உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் எல்லாமே அவள் மனதை அழுத்திக் கொண்டு இருந்தது …
இளமாறனும் எங்கும் செல்லாமல் … எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளுக்கு அருகில் அவளை பற்றி யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான் … (( ஆத்தீ… இவன் இன்னும் என்ன யோசிக்கிறானோ ))
செந்தமிழ் மயக்கத்திலேயே இருந்தாள் … அவ்வப்போது விழித்து பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள் … புனிதா வீட்டிற்கு சென்றிருக்க … விழித்துப் பார்த்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள் …
இளமாறன் அங்கு வர கண்களை விரித்துப்பார்த்து பயந்து நடுங்கினாள் … இப்போ எதுக்கு என்னை பார்த்து பயப்படுற என்று கோபத்தில் சத்தமாக கத்தியவன் அதன் பிறகு தன் சத்தத்தை குறைத்து மெதுவாக பேசினான் …
அவள் ஒன்றும் பேசாமல் அழ … வாயை திறந்து சொல்லவும் மாட்ட … இருக்க பிரச்சனையில நீ வேற ஏன் என்னோட உயிரை வாங்குற என்று அவன் கேட்க … அவளுக்கு கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது … இந்தா ஜூஸ் குடி என்று அவன் ஜூஸ் டம்ளரை அவளிடம் நீட்ட எனக்கு வேண்டாம் என்றாள் …
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இப்படி பொசுக்கு பொசுக்குணு மயங்கி விழுறியே தமிழ் ஆங்கிலம் தெலுங்கு
கொஞ்சம் அழாம இரு. பிறகு உன் உடம்பு எதுக்கு ஆகும்?
புனிதா இதுக ரெண்டையும் அஞ்சாரு நாள் பிரிச்சு போட்டா சரியா போகும்.