
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 4
செந்தமிழ் அறைக்குள் நுழைந்ததும் .. இளமாறன் வேகமாக எழுந்து கதவை பூட்டி விட்டு மெத்தையில் அமர்ந்தான் . அவனுக்கு அருகில் நிற்கும் அவளை பார்வையாலே அளந்தான் . காலையில் பார்த்த மாதிரியே அதே சேலையில் அதே அளவான ஒப்பனையில் இருந்தாள் .. இரவில் பூத்த மலராய் வாசம் வீசினாள் .
அவன் பார்வை பாரபட்சமில்லாமல் அவள் உடலை தழுவிக் கொண்டிருக்க .. அவள் கூச்சத்தில் நெளிந்தாள் . அவள் பால் சொம்பை அவனிடம் தர எரிச்சலாக “அங்க டேபிள் மேல வை” என்றான் .
“இங்க பாரு செந்தமிழ் .. நாம அன்னைக்கு பேசுனது பேசுனது தான் .. உனக்கும் எனக்கும் நடுவில ஒண்ணும் இல்ல .. நீ உன் மனசுல தேவையில்லாம எந்த கற்பனையும் வளர்த்துக்காத ..
காலைல அந்த போட்டோகிராபர் சொன்னான்னு என் கையை தொடுற .. எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது .. நீ உன் லிமிட்ல இருந்துக்கோ .. அதை கிராஸ் பண்ணா நான் மனுஷனா இருக்கமாட்டேன் .. எனக்கு கோபம் வந்தா நான் மிருகமா மாறிடுவேன் .. அப்புறம் உன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிடும் ..
ஆறு மாசம் என் அம்மா முன்னாடி .. இந்த ஊர் முன்னாடி நீயும் நானும் புருஷன் பொண்டாட்டியா நடிக்க போறோம் .. அவ்ளோதான் .. நான் பிசினஸ் ஆரம்பிச்ச அடுத்த நாள் உன்னை காலேஜில சேர்த்து விட்டு ஹாஸ்டல்ல விட்டுடுவேன் ..
இப்போவே என் அம்மாக்கு என் மேல சந்தேகம் வந்திடுச்சு .. இடையில ஏதாவது நீ குளறுபடி பண்ணி என்னோட கனவை நடக்க விடாம பண்ணா .. நான் எதுவும் உனக்கு பண்ணமாட்டேன் .. அதனால ஒழுங்கா நல்ல பிள்ளையா இரு” என்று ஸ்கூல் டீச்சர் மாணவியிடம் சொல்வதை போல் அதட்டலாக சொல்லி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் .
அவள் பார்த்த அந்த பார்வை .. “என்னா கண்ணு டா இது !!” என்று நினைத்தவன் இதயம் அதிகமாய் துடித்தது . பார்வையை வேகமாக திருப்பினான் . எழுந்து அவன் பீரோவில் இருந்து சில பேப்பர்களை எடுத்து வந்தான் .
“இது காலேஜ் அட்மிஷன் ஃபார்ம் .. இது டிவோர்ஸ் டாக்குமெண்ட் எல்லாத்துலயும் படிச்சிட்டு சைன் போடு .. ஆமா நீ என்ன படிக்க ஆசைப்படுற??” என்று அவன் கேட்க .. “எனக்கு தெரியலைங்க” என்றாள் .
“உனக்கு வேற என்ன தான் தெரியும் .. எதைக் கேட்டாலும் தெரியலைன்னு ஒரு பதில் .. தெரியாதுங்கற மாதிரி ஒரு பார்வை” அவன் எரிச்சலான முகத்துடன் பேச .. அவள் பயத்தில் கொஞ்சம் மிரட்சியாக அவனை பார்த்தாள் .
“சரி நீ ஸ்கூல்ல +2 ல எவ்ளோ மார்க்” என்று அவன் கேட்க .. “600க்கு 596 மார்க்” என்றாள் . அப்படியே வாயடைத்து போனான் . “என்ன மேஜர் எடுத்த??” அவன் கேட்க .. கம்ப்யூட்டர் மேத்ஸ் என்றாள் .
“மேத்ஸ்ல எவ்ளோ??” என்று கேட்க .. “சென்டம் வாங்கினேன் .. எனக்கு மேத்ஸ் ரொம்ப பிடிக்கும் .. இன்னும் 4 மார்க் வாங்கியிருந்தா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பேன் .. ச்சே வாங்க முடியாம போச்சு” படிப்பு என்றதும் கண்களில் ஆர்வம் மின்ன பேசியவளை ஆசையாக பார்த்தான் .
“நீ B.Sc IT எடுத்து படி .. உன் படிப்பு திறமைக்கு நல்ல வேல்யூ இருக்கு” என்றவன் .. அவள் கையெழுத்து போட்டதும் மீண்டும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு .. “நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வச்சுக்கோ” என்றான் .
“ஹ்ம்ம்..” என்றவள் “நான் எங்க படுத்து தூங்குறது??” என்று கேட்க .. அவளை பார்த்தான் . அவன் இன்னும் அவளை உட்கார கூட சொல்லவில்லை . “அங்க பெட்ஷீட் தலையணை இருக்கும் .. கீழ படுத்துக்கோ” என்று சொன்னவன் “அய்யோ புனிதாம்மா கண்டுபிடிச்சிடுவாங்களே” என்று நினைத்து .. “இல்ல நீ பெட்ல என் பக்கத்திலேயே படு .. நீ உள்ள படுத்துக்கோ .. நான் முன்னாடி படுத்துகிறேன்” என்றான் .
அப்படியே அசையாமல் நின்றவளை “என்ன நிக்கிற??” என்று அவன் கேட்க .. “நீங்க பால் சாப்பிடல..” என்று தயங்கி கொண்டே சொன்னாள் . “இப்போ இது ரொம்ப முக்கியம்” என்று அவன் சொல்ல .. “அம்மா காலைல கேட்பாங்க” என்றாள் .
“இந்த புனிதாம்மா டார்ச்சர் இருக்கே .. சரி குடு” என்றவன் மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் குடித்து விட .. ஏக்கமாய் பார்த்திருந்தவளை .. “என்ன உனக்கு பால் லாம் குடிச்சு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடணுமா??” என்று அவன் கேட்க .. “ஹ்ம்ம் .. இல்ல” என்று சொன்னவள் .. வேகமாக மெத்தையில் ஏறி படுத்துக் கொண்டாள் .
அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவள் சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள் . அவனும் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் .
காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்க .. இருவரும் விழித்தனர் . வேகமாக எழுந்து அமர்ந்தவன் “செந்தமிழ் நீ கதவை திற” என்றான் . எழுந்தவளை “நில்லு..” என்றவன் “உன் சேலைய கழட்டு” என்றான் . அவள் அதிர்ச்சியாய் அவனை பார்க்க .. “சேலையை கழட்டு” என்று அவன் பற்களை கடிக்க .. அவள் வேகமாக சேலையின் பின்களை கழற்றினாள் .
அவன் சேலையை பிடித்து பாதி இழுக்க .. அவள் பயந்து போய் அவள் முன்னழகை கைகளால் மறைத்தாள் . அவனோ அதை எல்லாம் பார்க்கவில்லை .. சேலையை கொஞ்சம் கசக்கி அப்போது தான் சுற்றிக் கொண்டது போல சும்மா சேலையை அவள் மேல் போட்டு விட்டான் . அவள் முடி அலங்காரம் .. பொட்டு எல்லாவற்றையும் கலைத்து விட்டான் . மெத்தையில் இருந்த பூக்களின் அலங்காரத்தையும் கலைத்து விட்டான் .
“இங்க பாரு செந்தமிழ் .. புனிதாம்மா இல்ல யார் வந்து கேட்டாலும் நாங்க ஒண்ணா சந்தோஷமா இருந்தோம்னு சொல்லணும்” என்று மிரட்டலாக சொல்லி விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான் . கதவை தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க அவள் போய் கதவை திறந்தாள் . யாரோ ஒரு அக்கா காபி கொண்டு வந்திருந்தார் . அவள் அதை வாங்கி அங்கே வைக்க .. “குளிச்சுட்டு வாம்மா” என்று அவர் சொல்ல .. “ஹ்ம்ம் சரிங்க” என்றாள் .
செந்தமிழ் அங்கிருந்த வாஷ்பேசினில் பல் துலக்கி முகம் கழுவி காபியை குடித்துக் கொண்டிருக்க .. புனிதவதி வந்தார் . “சந்தோஷமா இருந்தீங்களா டா??” என்று அவர் கேட்க .. “ஹ்ம்ம் .. சந்தோஷமா இருந்தோம்” என்று சொன்னவள் குனிந்து கொண்டு சிரித்தாள் .
அவள் கண்களை பார்த்ததுமே ஒன்றுமே நடக்கவில்லை என்று தெரிந்து போனது அவருக்கு . “இந்த நாடகம் எல்லாம் எதற்கு .. அதுவும் இவளும் ஏன் நடிக்கிறாள்” என்று குழம்பினார் . “சரி குளிச்சுட்டு சாப்பிட வாங்க” என்று சொல்லி விட்டு சென்றார் .
((சினிமாவை பார்த்து இதெல்லாம் பண்ணா இப்படிதான் .. புனிதாம்மா கிட்ட தப்பிக்க முடியுமா ))
அவன் குளித்து முடித்து ஏதோ ஞாபகத்தில் இடுப்பில் டவலோடு .. கையில் டவலை வைத்து துடைத்து கொண்டே வர .. மெத்தையில் அமர்ந்திருந்தவளை பார்த்து திடுக்கிட்டான் . சட்டென தன் மார்பை டவலால் போர்த்தி கொண்டவன் .. “இனிமே எனக்கு முன்னாடி எழுந்து குளிச்சு கிச்சனுக்கு போயிடு .. இப்போ எழுந்து போ குளி” என்று அதட்ட அவள் ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டே குளிக்க சென்றாள் .
குளித்து முடித்து தாவணி கட்டி தலையை துவட்டிக் கொண்டே அவள் வெளியே வர .. அவனுக்கு தெரிந்தது அவள் எலுமிச்சை நிற இடை தான் . தலையை சரியாக துவட்டாமலே வேகமாக கிளிப் எடுத்து தன் நீண்ட கூந்தலில் மாட்டி விரித்து விட்டவள் .. பொட்டு வைத்து கொண்டு வெளியே சென்று விட .. அங்கங்கு மறையாமல் தெரிந்த அவள் முன்னழகு .. வயிறு என்று பார்த்து ரசித்து மயக்கத்தில் இருந்தான் இளமாறன் .
தாவணியோடு கிச்சன் வந்த செந்தமிழை பார்த்த புனிதவதி சிரித்தார் . “என்ன டா தாவணி போட்டிருக்க??” என்று அவர் கேட்க .. அம்மா நான் வீட்ல பாவாடை தாவணி தான் போட்டிருப்பேன் .. என்கிட்ட வேற ட்ரெஸ் இல்ல .. 4 பாவாடை தாவணி செட் தான் இருக்கு .. அத மாத்தி மாத்தி போட்டுப்பேன்” என்றாள் .
“இளமாறா சாப்பிட வா..” என்ற அம்மாவின் குரல் கேட்டு மயக்கம் தெளிந்தவன் ஹாலுக்கு சென்றான் . ஹாலில் ஒரு ஓரமாக டைனிங் டேபிள் சேர்கள் போட்டிருக்க அதில் போய் அமர்ந்தான் . மாமியார் மருமகள் இருவரும் டிபனை எடுத்து டேபிளில் வைக்க .. “செந்தமிழ் நீயும் உட்காரு டா” என்றார் புனிதவதி . “அம்மா நீங்க உட்காருங்க .. காலைல இருந்து எவ்ளோ வேலை செஞ்சுருக்கீங்க” என்று அவரை வலுக்கட்டாயமாக அமர வைத்து இருவருக்கும் பரிமாறினாள் .
இட்லியை சட்னி சாம்பார் தொட்டு அவன் சாப்பிட்டு கொண்டிருக்க .. “செந்தமிழுக்கு ட்ரெஸ் இல்ல .. சுடிதார் டாப் எடுக்கணும் .. சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் போய் எடுத்துட்டு வாங்க” என்று புனிதா சொல்ல .. “புனிதாம்மா நான் ஆபீஸ் போறேன் .. நீங்க அவளை கூப்பிட்டு போய் எடுங்க” என்றான் .
“இளமாறா ..” என்று அவர் அவனை முறைக்க .. “புனிதாம்மா உங்க நெற்றிக்கண்ணை தொறக்காதீங்க .. ஆபீஸ்ல முக்கியமான ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு .. நான் போகலைனா சொதப்பிருவாங்க .. ஈவ்னிங் வந்து அவளை கூப்பிட்டு போறேன் போதுமா” என்று அவன் சொல்ல .. அவர் “ஹ்ம்ம் ..” என்றார் .
சாப்பிட்டு முடித்து அவன் எழுந்து சென்று விட .. செந்தமிழ் சாப்பிட உட்கார்ந்தாள் . புனிதா வந்து மருமகளுக்கு பரிமாறினார் . “அம்மா வேணாம் நான் போட்டுக்குறேன்” என்று அவள் சொல்ல .. “சாப்பிடு டா..” என்று வாஞ்சையாய் அவள் தலையை தடவினார் .
அவளுக்கு இட்லி உள்ளே செல்லவில்லை .. புகை மண்டிய அடுப்பறைக்குள் ஒரு ஓரமாக மீதமிருப்பது பழையதை தின்று கொண்டிருக்கும் போது கூட சித்தி அழைத்தால் உடனே செல்ல வேண்டும் .. இல்லை அந்த சாப்பாடும் பறந்து விடும் . உணவின்றி பசியால் அழுத நாட்கள் கண் முன் வர மனம் கனத்து போனது செந்தமிழுக்கு .
காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து வைத்தாலும் சில நேரம் அவளுக்கு வைக்காமல் எல்லோரும் சாப்பிட்டு விட .. பாதி நாட்கள் பள்ளி சத்துணவிலும் .. பாதி நாட்கள் பட்டினியிலும் கழிந்தது . பள்ளி விட்டு நின்ற பின்னர் அதுவும் இல்லாமல் போக .. அவ்வளவு வீட்டு வேலைகள் செய்து கிடைத்ததை தின்று வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு கண்ணுக்கு அழகாய் கணவன் .. மகளாய் தாங்கும் மாமியார் கிடைக்க மகிழ்ச்சி தான் .
ஆனாலும் “இதெல்லாம் நிரந்தரம் இல்லை .. எத்தனை நாளைக்கு இந்த அன்பும் உபசரிப்பும்” என்று நினைக்கையில் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் . கிடைத்த மகிழ்ச்சியை கூட அனுபவிக்க விடாமல் துக்கம் தொண்டையை அடைத்தது .
சித்தி கொடுமையை தாண்டி ஏதோ பிரச்சனைகள் அங்கு அவளுக்கு இருக்க .. வேறு வழியே இல்லாமல் இளமாறன் சொன்னதற்கு சரி என்று சொல்லி விட்டாள் . இதற்கு அதுவே பரவாயில்லை என்று அவள் நினைக்கும் நாளும் வெகு விரைவில் .
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவளுக்கு மட்டும் தான் கட்டுப்பாடா? இவர் மட்டும் கண்களாலேயே களவாடுவாராம். என்ன ஒரு வில்லத்தனம். 😳🤣
திரைப்படங்களில் வருவது போல பூசி மொழுகுனா இதான் கதி. 🤭
நிரந்தரமில்லா அன்பும் அக்கறையும் என்று தெரிந்துவிட்டால் அதை அனுபவிக்கும் நொடிகள் கூட ரணம் தான்.
தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே பரவாயில்லை என்பதை போல் ஆகப்போகின்றதோ தமிழ் வாழ்வு.
அருமையான நகர்வு. 👏🏼❤️
உண்மையில் உடல் வேதனையை விட மன வேதனை தான் தாங்க முடியாத ஒன்று … அது கொடுமையானது …
மாறன் அப்படி தான் … இவரே வேணாம்னு சொல்லுவாராம் … இவரே பார்த்து ரசிப்பாராம் 😜😜😜
அந்தப் பொண்ணு ரொம்பவும் பாவம்.
ஏண்டா அவளை ரசிக்க தெரிஞ்ச உனக்கு, அவளுக்கும் ஒரு மனசு இருக்கும்னு நினைக்க தோணலயாடா?
இந்த மிரட்டு மிரட்டுறே…
புனிதம்மா நீங்க தான் உங்க புத்திரனை நல்வழிப்படுத்தணும்.
ஆமா புனிதாம்மா தான் அவனை அடிச்சு திருத்தணும் … அவனுக்கு அவள் மனசு புரிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே … மிக்க நன்றி சகி