Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 37

“காபி சூப்பரா இருந்தது, நீங்க தான் காபி போட்டீங்களா?” என்று அவள் ஆச்சரியமாக கேட்க, “ஹ்ம்ம்.. ஆமா டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு தான் கொண்டு வந்தேன். “சரி வா சாப்பிடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று, புனிதா செய்து வைத்த இட்லி சாம்பாரை அவளுக்கு பரிமாறியபின் தனக்கும் அவன் போட்டுக் கொள்ள, டேபிளில் கையை ஊன்றி கன்னத்தில் கை வைத்து, அவனை இமைக்க மறந்து பார்த்தாள் பெண்ணவள்.

“என்னை பார்த்து ரசிச்சது போதும் டி தமிழ். முதல்ல சாப்பிடு. ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்று அவன் சொல்ல, “இளா.. எனக்கு ஊட்டி விடுறீங்களா?” அவள் ஆசையாக கேட்க, அவன் அவளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டே தானும் சாப்பிட்டு முடித்தான்.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்தார்கள். புனிதா இளமாறனுக்கு போன் செய்ய செந்தமிழ் வாங்கி பேசினாள். “அம்மா நாங்க சாப்பிட்டோம். நான் மதியத்துக்கு சமையல் பண்றேன். நீங்க வேலையை முடிச்சுட்டு வாங்க” என்று சொல்லி போனை கட் செய்தாள்.

அன்று இளமாறன் தந்த அந்த போனை செந்தமிழ் அவனிடம் திருப்பி தந்தது தான். அவனும் அதற்கு பிறகு அந்த மோதிரத்தையும் போனையும் அவளிடம் தரவில்லை. “தமிழ்.. நாம ஈவ்னிங் கடைக்கு போய் உனக்கு புது போன் வாங்கலாம்..” என்று அவன் சொல்ல, “இல்ல எனக்கு போன் வேண்டாம்” என்றாள்.

“ஏன் டி? எதுக்கு உனக்கு செல்போன் வேணாம்னு சொல்லுற? இன்னும் என்மேல கோபமா?” என்று அவன் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, “அதெல்லாம் இல்ல இளா.. எனக்கு எதுக்கு போன்? நான் யார்கிட்ட பேசப் போறேன்?” என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே, பேசும் அவள் இதழையே பார்த்திருக்க, வெட்கத்தில் குனிந்து கொண்டாள். அவன் காதல் பார்வையை தாங்க முடியாமல், “நான் போய் குளிச்சுட்டு வந்து சமைக்கிறேன்” என்று எழுந்து அறைக்கு சென்றாள். இளமாறன் எழுந்து அறைக்குள் சென்றவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

“விடுங்க இளா..” என்று அவள் சிணுங்க, சிரித்தவாறு அவளை விட்டு விலகி மெத்தையில் அமர்ந்து கொண்டான். அவளோ சின்ன ஏமாற்றத்தோடு அவனை பார்த்துக் கொண்டே, துணிகளை எடுத்துக் குளிக்க சென்றாள். பாவம் அவளின் ஏக்க முகத்தை இளமாறன் பார்த்திருந்தால் அப்படி இப்படி ஏதாச்சும் ரொமான்ஸ் நடந்திருக்கும்.

செந்தமிழ் குளித்து முடித்து சேலையோடு வெளியே வந்து, கண்ணாடிக்கு முன்பு நின்று தன் ஈரமான முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாள். இளமாறன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் முதுகில் இருந்த நீர்த்துளிகள்.. ரோஜாப்பூவில் அங்கங்கே சிதறி இருக்கும் நீர்த்துளிகளை போல் அவன் கண்ணுக்கு அழகாகத் தெரிய, அதை ரசித்தவன் வேகமாக எழுந்து அவள் முதுகில் இதழைப் பதித்திருந்தான்.

சில்லிட்டு இருந்த முதுகில் அவன் தந்த ஈரமுத்தம் இன்னும் அவளை சில்லிட வைக்க, வேண்டாம் என்று வந்த வார்த்தையை விழுங்கி, “இளா..” என்று மட்டும் சிணுங்கினாள்.

அவளை மெத்தையில் தள்ளியவன் இதழ்முத்தத்தோடு கூடலை தொடங்கி, முத்தங்களை அள்ளித் தந்து மொத்தமாய் அவள் பெண்மையை அள்ளிக் கொண்டான். தீரா போதை தரும் இதழ்முத்தத்தோடு தங்களின் நீண்ட நேர கூடலை முடித்து, அவளை இறுக்கமாக மார்போடு அணைத்து, அவள் தலை வருடினான்.

“இளா.. நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே”

“நீ எப்போ என்ன கேட்டாலும் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். நீ தயங்காம கேளு”

“எதுக்கு அந்த கிரீட்டிங் கார்டு, பூவை குப்பைல போட்டுட்டீங்க”

“காதல் தந்த அந்த வலி எனக்கு எப்பவும் ஞாபகம் இருக்கணும். இனிமே நான் என் வாழ்க்கையில காதலை பத்தி யோசிக்கவே கூடாதுன்னு தான் அதை வச்சுக்கிட்டே இருந்தேன். இப்போ மொத்தமா என் வலிகளை எல்லாம் கடந்து வந்துட்டேன். அதான் கிழிச்சு போட்டுட்டேன்”

“அதுல நீங்க எழுதியிருந்த கவிதை நல்லா இருந்தது”

“அது கவிதையா? அப்போ கவிதையை நீ என்னன்னு சொல்லுவ. ஏதோ அப்போ லூசு மாதிரி மனசுல தோணுனதை எழுதினேன். என் மனசுல இருக்கிற காதல் உண்மை தான். அதை தப்பானவங்க கிட்ட காட்டிட்டேன். இப்போதான் என்னோட காதலை சரியான ஆள் கிட்ட கொடுத்திருக்கேன்”

“அப்படியா? யார் கிட்ட கொடுத்தீங்க?” என்று அவள் கேட்க, சத்தமாக சிரித்தான்.

“என்னோட தமிழ் இவ்ளோ பேசுவான்னு எனக்கு தெரியாம போச்சு”

“எனக்கும் தான் தெரியாது. நான் உங்க கிட்ட மட்டும் தான் இப்படிலாம் பேசுறேன். எதுக்குன்னு எனக்கே தெரியல.

“எனக்கு காரணம் தெரியும். உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அதான்.

“ஹ்ம்ம்.. உங்களுக்கு என்ன பிடிக்குமா இளா?”

“நீ என்ன நினைக்கிற தமிழ்?”

“இளா.. உங்களுக்கு என்னை பிடிக்கும்னு தெரியும். ஆனா எவ்ளோ பிடிக்கும்னு தெரியாதே”

“எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்னு நான் சொல்ல மாட்டேன். வேணும்னா செஞ்சு காட்டுறேன்” என்று சொன்னவன் அவளுக்கு அர்த்தம் புரியுமுன் அவள்மேல் படர்ந்து அவன் காதலை காட்ட ஆரம்பித்தான்.

இளமாறன் அள்ளித் தந்த காதலில் அவள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அவனோ இன்றுதான் என் வாழ்வை நான் முழுதாக வாழ்கிறேன் என்று சந்தோஷப்பட்டான். அந்த எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவளுடன் எல்லையில்லாமல் கூடலில் இருந்தான்.

இருவரும் வியர்வையிலும் காமத்திலும் நனைந்து ஓய்ந்து போயிருக்க, அப்படியே தூங்கியும் போனார்கள். காலிங்பெல் சத்தம் கேட்டு இளமாறன் தான் கண் விழித்தான்.

அவன் பாடாய் படுத்தியிருக்க, செந்தமிழ் சோர்வாக அவன் மார்பில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமின்றி, அவன் மட்டும் எழுந்து உடைகளை அணிந்து கொண்டான். அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்திவிட்டு, அறையை மெதுவாக சாத்திவிட்டுச் சென்று வாசல் கதவை திறந்தான்.

“என்ன இளமாறா.. இவ்ளோ நேரமா கதவை திறக்க? என்ன பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே புனிதா வீட்டிற்குள் வந்தார். “செந்தமிழ் எங்க?” என்று அவர் கேட்க, “ரூம்ல தூங்குறா..” என்றான்.

“எதுக்கு இந்நேரம் தூங்குறா? உடம்பு எதும் சரியில்லையா?” என்று அவர் அவன் அறைக்கு அருகில் செல்ல, பதட்டத்தோடு, “புனிதாம்மா..” என்று அழைத்தவன், “அவ டயர்டா இருக்கா. நான் அவளை எழுப்பி விடுறேன். நீங்க போங்க” என்று தலையை சொறிந்து கொண்டே நின்றான்.

‘என்ன இவன் வித்தியாசமா நடந்துக்கிறான்?’ என்று யோசனையோடு அவன் முகத்தைப் பார்த்தார். அவன் முகமெங்கும் சந்தோஷ ரேகைகள் தெரிய உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

“செந்தமிழ் இன்னும் சமைக்கலையா?” என்று அவர் கேட்க, “அவளை போய் எதுக்கு சமைக்க சொல்றீங்க. பாவம் அவ வயித்துல குழந்தையோட வேலைக்கு போறா. இன்னைக்கு ஒருநாளாச்சும் ரெஸ்ட் எடுக்கட்டும்னு லீவ் போட சொன்னா, அவளை எதுக்குமா வேலை சொல்றீங்க?” என்று இளமாறன் செல்லக் கோபத்துடன் அவன் அம்மாவிடம் சொன்னான்.

“அடப்பாவி..” என்று வாயை பொத்திக் கொண்டவர், “நீ நல்லவனா மாறிட்ட. அதுக்குனு என்னை ஏன் டா வில்லி ரேஞ்சுக்கு பேசி கெட்டவளா ஆக்குற. நான் ஒண்ணும் அவளை சமைக்க சொல்லல. அவ தான் நான் சமைக்கிறேன்னு சொன்னா. ரொம்ப பண்ணாதடா. சரி நான் போய் சமைக்கிறேன்” என்று அவர் கிச்சனுக்கு செல்ல, “நான் சாப்பாடு ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன். ஏற்கனவே லேட்டாயிடுச்சு, அவளுக்கு பசிக்கும்.” என்றான்

“ஒரே நாள்ல இவ்ளோ நல்லவனா மாறிடாதடா. ஒருநாளாச்சும் எனக்காக சாப்பாடு ஆர்டர் பண்ணி தந்திருப்பியா?” என்று அவர் கிண்டலாக கேட்க, “என்ன புனிதாம்மா.. இப்படிலாம் சொல்றீங்க” என்று சிணுங்கினான்.

“நான் சும்மா தான் சொன்னேன். நீ சாப்பிட ஆர்டர் பண்ணு. நான் காபி போடுறேன். செந்தமிழை எழுப்பி விடு. சாப்பிட்டுட்டு அப்படியே வெளில போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு அவர் கிச்சனுக்கு சென்றார்.

பிள்ளைகளின் சந்தோஷத்தில் அவருக்கும் மனம் நிறைந்து போனது. இவ்வளவு நாட்களும் இறுக்கமாக இருந்த மகனின் முகம் மாறியிருக்க, அவன் பழைய மாதிரி கலகலப்பாக பேசுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டே காபி போட்டார்.

இளமாறன் அறைக்கு சென்று குளித்து விட்டு, செந்தமிழுக்கு அருகில் குனிந்து, “தமிழ் எழுந்திரு டி..” என்று கன்னத்தில் தட்டி அவளை எழுப்பினான். ஈரத்தலையுடன் நின்றிருந்தவனை பார்த்து சிரித்தவள், அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “இளா.. இன்னும் கொஞ்ச நேரம்” என்று கண்களை மூடிக் கொண்டாள்.

“தமிழ்.. உன் புனிதாம்மா வந்துட்டாங்க டி” என்று அவன் சொல்ல.. திடுக்கிட்டு கண் விழித்தவள், “அய்யோ நான் சமைக்கவே இல்லையே” என்று எழுந்து அமர்ந்தாள்.

“நான் சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன். நீ போய் குளிச்சுட்டு வா. சாப்பிட்டுட்டு வெளில போகலாம்” என்று சொன்னவன், “குளிச்சுட்டு சேலையே கட்டிக்கோ. சேலையில நீ ரொம்ப அழகா இருக்க” என்று சொல்ல, வெட்கத்தில் சிவந்த அவள் கன்னத்தை கடித்து விட்டு அவன் எழுந்து தலையை துவட்டினான்.

அவள் குளித்து முடித்து வெளியே வர, “எதுக்குடா இந்நேரத்துக்கு தலைக்குளிச்ச?” என்று அவருக்கு காரணம் தெரிந்திருந்தாலும், அவள் மீதிருந்த அக்கறையால் கேட்டவர், அவள் தலையில் கட்டியிருந்த டவலை கழற்றி தலையை துவட்டி விட்டார்.

புனிதா இருவருக்கும் காபியை கொடுத்தவர், “செந்தமிழ்.. உன்னை சமைக்க சொல்லிட்டேனாம் உன் புருஷன் என்கூட சண்டைக்கு வர்றான்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, அவளும் சிரித்தாள். ஆர்டர் செய்த உணவு வர மூன்று பேரும் சாப்பிட்டனர்.

“புனிதாம்மா.. நீங்களும் வாங்க வெளில போகலாம்” என்று அவள் அழைக்க, “எனக்கு கடைல இன்னும் வேலை இருக்குடா. நான் போயிட்டு வரேன். நீங்க பைக்லையே போயிட்டு வாங்க” என்று அவர் கடைக்கு சென்றுவிட, இளமாறனும் செந்தமிழும் மெரீனா பீச்சுக்கு சென்றனர்.

இருவரும் சேர்ந்து கடலலைகளில் கால் நனைத்தபின் அங்கு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆரவாரமாக கரைக்கு வரும் கடலலைகளை போல, இருவரின் மனதிலும் மகிழ்ச்சியின் ஆரவாரங்கள். இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டே காதலின் இந்த அழகிய தருணங்களை ரசித்துக் கொண்டிருந்தனர்.

“தமிழ் நீ ஏன் எனக்கு இன்னும் ஐ லவ் யூ சொல்லவே இல்ல?

“சொன்னா தான் லவ்வா? மனசுக்குள்ள இருந்தா போதாதா?

“இருந்தாலும் அந்த வார்த்தை தர்ற போதை சூப்பரா இருக்கும். நான் சொல்லும் போது நீ ஃபீல் பண்ணிருக்கியா?

“ஹ்ம்ம்..” என்று சிரித்தாள்.

“நீ எதுக்கு வேலைக்கு போற? வீட்ல இரு டி. உன்னை பார்த்துக்க தான் நான் இருக்கேன்ல. பாப்பா பிறந்து கொஞ்ச நாளைக்குப் பிறகு நீ காலேஜ் போ, படி. நம்ம கம்பெனில மேனேஜ்மென்ட் பார்த்துக்கோ” என்று அவன் சொல்ல, அவள் அதற்கும் சிரித்தாள்.

“உனக்கு இஷ்டம் இல்லனா நீ வேற கம்பெனிக்கு கூட வேலைக்கு போ. நானும் அம்மாவும் நீ காலேஜுக்கு போகும் போதும், வேலைக்கு போகும் போதும் குழந்தையை பார்த்துக்கிறோம்” என்று அவன் சொல்ல,

“இளா கோச்சுக்காதீங்க. நான் எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல. நான் குழந்தை பிறந்ததும் வீட்டை விட்டுப் போயிடுவேன்” என்று அவள் சொல்ல, அவள் தோளில் சாய்ந்திருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்