
என்னுள் நீ காதலாய் 💞
அத்தியாயம் 36
“இல்ல.. உங்களுக்கு பிடிக்காம ஒண்ணா இருந்துட்டு, நான் சொன்னதால தான் என்கூட இருந்தேன்னு சொல்லிடாதீங்க பிளீஸ்” காதலையும் மீறி ஆழ்மனதில் தங்கிவிட்ட வலியோடு அவள் சொல்ல, சட்டென்று அவன் முகம் மாறிப்போக அவள் மேலிருந்து எழுந்து அவளுக்கருகில் படுத்து கொண்டான்.
‘அவளை இப்படி பேச வைத்தது நான் தான். சந்தோஷத்தோடு என்னை நெருங்கியவளை வார்த்தைகளால் காயப்படுத்தினால், காயம்பட்ட அவள் குழந்தை மனம் மீண்டும் சந்தோஷத்தை கண்டு பயப்படுகிறது’ என்று இப்போது அவளை சரியாக புரிந்து கொண்டான்.
“சாரி இளா.. நான் உங்களை குத்தி காட்டணும்னு சொல்லல” என்றவள், வேகமாக அவனை அணைத்துக் கொள்ள, “நான் உன்னை புரிஞ்சுக்கிறேன் டி தமிழ். நீ பயப்படாம என்கிட்ட நார்மலா உன் மனசுல தோணுறதை பேசு. எனக்கு நீ என்னோட வாழ்க்கை முழுக்க வேணும். நாம நமக்குள்ள இருக்கிற எல்லா விதமான தயக்கங்களை உடைச்சா தான் சந்தோஷமா இருக்க முடியும்” என்று சொன்ன இளமாறன்,
“சரி சொல்லு நம்ம பொண்ணுக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்று தன் கை வளைவில் இருந்தவளிடம் கேட்க,
“ஏன் உங்களுக்கு பொண்ணு தான் வேணுமா?” என்று கேட்டாள்.
“ஆமா உன்னை மாதிரியே எனக்கு அழகான பொண்ணு வேணும்”
“பொண்ணு இல்லாம பையன் பிறந்தா என்ன பண்ணுவீங்க?” என்று அவள் கேட்க, லேசாக முகம் சுருங்கினான். பிறகு, “பையன் பிறந்தா அடுத்ததா பொண்ணு பெத்துக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே அவள் காதுமடலை கடித்தான்.
“அந்த நர்ஸ் இப்படிதான் பண்ண சொன்னாங்க” செந்தமிழ் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே அவர் சொன்னதையெல்லாம் அவனிடம் மெதுவாக சொல்ல, ‘அவளுக்கும் அவனோடு இணைவதில் சம்மதம்’ என்று தெரிந்து கொண்டவன், இதழ் முத்தத்தோடு அவளுக்குள் தன் தேடலை தொடங்கினான்.
முத்தங்களோடு அவள் ஆடைகளை களைந்தவன், விரல்களால் அவள் உடலை தீண்டி கண்களால் அவள் உடலை அளந்து கொண்டிருந்தான். முதல் முறை போதையில் அவளுடன் இருந்தது சரியாக நினைவில்லை. அதுவும் மாதங்கள் கடந்துவிட்டது. இன்று இரு மனங்களும் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்க,
இவ்வளவு நாட்களும் ஆடைகள் விலகும் போது திருட்டுத்தனமாக அவன் ரசித்த அவள் உடல் அங்கங்களை, இன்று உரிமையோடு தன் பார்வையால் பொறுமையாக ரசித்துக் கொண்டிருந்தான் ஆணவன்.
அவன் மோகப் பார்வையில் சொக்கிப் போன பெண்ணவள், அவன் தீண்டலில் நாணத்தில் சிவந்து கொண்டிருந்தாள். அவள் மேனியை அளந்து கொண்டிருந்த அவன் மோகப் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது. விழிகளை அதிர்ச்சியில் விரித்தவன், “இது என்ன?” என்று அவள் அந்தரங்க பாகத்தை காட்டி கேட்டான்.
“அது சூடு போட்ட தழும்பு” என்று அவள் சொன்னதும் இன்னும் அதிர்ந்தவன், “அங்க யாரு சூடு வச்சாங்க?” என்று கேட்க, “என் சித்தி தான் நான் அவங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு சூடு வச்சுட்டாங்க” என்றாள். அப்படியே விதிர்விதிர்த்து போனவன் எழுந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
செந்தமிழும் பதட்டமாக எழுந்து “என்னாச்சு இளா?” என்று கேட்க, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு அவள் தலை வருடியவன், “சாரி டி தமிழ்.. இன்னைக்கு மனசு சரியில்ல. நாம நாளைக்கு ஒண்ணா இருக்கலாமா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்..” என்றவள் குழப்பமாக அவனை பார்க்க, “நீ ட்ரெஸ் பண்ணிக்கோ. தூங்கு தமிழ்” என்றவன், உடைகளை போட்டுக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அவனுக்கு பதட்டம் குறையாமல் இருந்ததால் முகம் கழுவினான். அவன் வெளியே வந்து முகத்தை துடைத்துக் கொண்டிருக்க, உடைகளை போட்டுக் கொண்ட செந்தமிழும் அவன் முகத்தையே பார்த்தாள். “ஒருமாதிரி இருக்கு, நான் மாடிக்கு போய் கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வர்றேன். நீ தூங்கு, லேட் ஆகிடுச்சு” என்று அவன் சிறு புன்னகையுடன் அவளிடம் சொல்ல, “ஹ்ம்ம்..சரி ” என்று தலையாட்டினாள்.
மொட்டை மாடிக்கு சென்ற இளமாறன், ஆசுவாசமாக அங்கிருந்த சுவர் திண்டின் மேல் அமர்ந்தான். ‘அந்த இடத்தில் போய் யாராவது சூடு வைப்பார்களா? தழும்பே இப்படி இருக்கிறது என்றால் காயம் எப்படி இருந்திருக்கும்? அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்?’ என்று நினைக்கையில் அவன் உள்ளம் பதறியது. அந்த வலியை உள்ளத்தால் உணர்ந்தவன் கண்களில், அவனை அறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்திருந்தது.
‘ஏற்கனவே காயங்கள் தாங்கி வந்தவளை நானும் எவ்வளவு காயப்படுத்தி விட்டேன். நான் அவளை பெண் பார்க்க சென்ற நாளிலிருந்து இன்று வரை என்னை பார்க்கும் போதெல்லாம் அவள் கண்ணில் தெரியும் காதல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. ஒரு வெறுப்பான பார்வையை கூட அவள் எனக்கு தந்ததில்லை’ என்று, செய்த தவறுகளுக்காக அவனது மனம் குற்ற உணர்ச்சியில் தகித்துக் கொண்டிருந்தது.
‘தெரிந்தே கேவலகமாக பேசி அவள் மனதை எவ்வளவு வலிக்கச் செய்திருப்பேன். நான் என்ன செய்தாலும் என் பாவம் கரைந்து விடுமா?’ என்று மனமுடைந்து உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தான்.
செந்தமிழோ, ‘எதற்கு திடீரென பாதியில் எழுந்து விட்டான்? என் மீது மறுபடியும் எதும் சந்தேகமோ?இல்லை எதும் மன வருத்தமோ? ஏதாவது தவறாக நடந்து கொண்டேனா?’ என்று பயந்தவள், எழுந்து மாடிக்கு சென்று பார்த்தது கண்ணீரோடு இளமாறன் கண் மூடி இருந்ததை தான்.
செந்தமிழ் அவனுக்கு அருகில் சென்று அவன் கையை பிடிக்க, கண்களை திறந்து அவளை பார்த்தவன், இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான். “என்னாச்சு இளா? என்ன பண்ணுது?” அவன் தலையை கோதிக் கொண்டே அவள் கேட்க ,
“அப்போ உனக்கு ரொம்ப வலிச்சுருக்கும்ல? நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப தான?” என்று அவன் கேட்ட கேள்வியில் ஆடித்தான் போனாள். ‘எனக்காக அழுகிறானா?’ என்று நினைத்தவள், “என்னை நினைச்சு தான் அழறீங்களா?” பதில் தெரிந்தும் அவன் வாயாலேயே அதை கேட்க நினைத்து கேட்டாள்.
“சாரி டி தமிழ்.. இதெல்லாம் தெரியாம இருந்துட்டேன். உன்னை நானும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். உன்னை காதலிக்க எனக்கு எந்த தகுதியும் இல்ல. நீ நினைச்ச மாதிரி நான் உன் மனசுல இருக்கிற நல்லவன் இளா இல்ல. நான் ரொம்ப தப்பானவன். என்னால இதை தாங்கவே முடியல. எனக்கு வலிக்குது தமிழ், ரொம்ப வலிக்குது. நீ எதுக்காக என்கிட்ட வந்தியோ அதை கூட உனக்கு நான் கொடுக்கவே இல்ல தான” என்று அங்கேயே முட்டி போட்டு முகம் மூடி கதறி அழுதான்.
“அய்யோ இளா.. என்ன இதெல்லாம்? பிளீஸ் அழாதீங்க,நீங்க முதல்ல எழுந்திருங்க. வாங்க கீழே போகலாம்” என்று அவள் தூக்க முயன்றாலும், அவனை அசைக்கக்கூட முடியவில்லை. “இளா.. என்னால குனிய முடியல” என்று அவள் சொன்னதும், எழுந்து நின்றவன் கண்களை துடைத்துக் கொண்டான்.
“விடுங்க.. என் சித்தி என்னை எப்பவும் அடிக்கிறது தான். சூடு வைக்கிறது தான். அது கடைசியா வச்சது. அதான் இன்னும் தழும்பு மறையல போல” சமாளிக்கிறேன் என்று, இன்னும் அவன் நெஞ்சில் அவள் நெருப்பை அள்ளி கொட்ட, கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு இளமாறன் அவளை பார்த்தான்.
“தப்பு பண்ணா எல்லா அம்மாவும் அடிப்பாங்க தான. ஏன் புனிதாம்மா உங்களை அடிச்சது இல்லையா?” என்று அவனை சமாதானப்படுத்த அவள் ஏதேதோ உளற, அவன் வலி நிறைந்த பார்வையும் கண்களில் கண்ணீரும் குறையவே இல்லை.
அவன் தனக்காக அழுகிறான் என்று நினைத்து அவன் காதலில் உயிர் சிலிர்த்து போனவள், அவன் கண்ணீரை தாங்க முடியாமல் வேதனையோடு அவன் முகத்தை பார்த்தாள். அவனை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.
யோசனையில் இருந்தவள் சட்டென அவன் கன்னங்களை தாங்கி அவன் இதழை கவ்வி, அவன் கற்று தந்த முத்தத்தை அதே மாதிரி அவனுக்கு தந்தாள். முதலில் இதை எதிர்பாராதவன், பிறகு ஒத்துழைத்து அந்த முத்தத்தை விடாமல் நீட்டித்தான். விலகியதும் “நான் நீங்க சொல்லி தந்த மாதிரி கரெக்ட்டா முத்தம் தந்தேனா?” என்று செந்தமிழ், அவன் மனதை மாற்ற குறும்பாக கேட்க, அவன் சிரித்தான்.
இருளில் அவன் புன்னகை தாங்கிய முகம் ஒளிர நிம்மதி பெருமூச்சு விட்டாள் செந்தமிழ். எவ்வளவு வலியிலும் கஷ்டத்திலும் அவனை பற்றி மட்டுமே யோசிக்கும் அவளுடைய காதல் இளமாறனுக்கு எப்போதும் வியப்பான ஒன்று. அதுவே அவன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்திருப்பதாக அவன் இன்று தான் உணர்ந்து கொண்டான்.
இளமாறன் மனம் நிறைந்த காதலோடு அவளை அப்படியே அணைத்து, அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான். “இளா இங்க குளிருது, வாங்க போகலாம்” என்று அவள் அழைக்க, இருவரும் கீழே சென்றார்கள். குளிர் காற்றும் சோர்வும் அதிகமாக இருக்க, தூக்கம் கண்களை தழுவ அணைத்துக் கொண்டே இருவரும் தூங்கியும் போனார்கள்.
காலையில் புனிதா ரெண்டு மூன்று தடவை வந்து அறைக் கதவை தட்டி பார்த்தும் இருவரும் எழவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மன நிம்மதியில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘சரி பொறுமையாக எழட்டும்’ என்று நினைத்து, இளமாறனிடம் ஒரு சாவி இருப்பதால் கதவை பூட்டி விட்டு அவருடைய கடைக்கு கிளம்பினார்.
இளமாறன் தான் முதலில் விழித்தான். எப்போதும் திரும்பி படுத்துக் கொண்டிருப்பவள் இன்று அவனை இறுக்கமாக அணைத்து அவன் மார்பில் புதைந்து, தூங்கி கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கத்தைக் கலைக்காமல் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு எழுந்து ஃப்ரெஷ்அப் ஆகி வந்தவன் கிச்சனுக்கு சென்றான்.
காபி போட்டு குடித்து விட்டு ஒரு டம்ளரில் காபியோடு அறைக்கு சென்றான். இன்னும் செந்தமிழ் தூக்கத்தில் தான் இருந்தாள். ‘அவ்வளவு சோர்வும் அசதியும் அவளுக்கு’ என்று நினைத்தவன் மெதுவாக அவள் கன்னத்தை வருடி முத்தம் வைத்தான்.
தன் இமைகளை படபடத்துக் கொண்டே விழித்து பார்த்தவள் அவன் முகத்தை அருகில் பார்த்ததும் சிரித்தாள். அவன் கண்களில் தெரியும் காதலை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவளுக்கு. அவன் விலகிக் கொள்ள எழுந்து அமர்ந்தவள், கடிகாரத்தில் மணியை பார்த்து, “12 மணி ஆகிடுச்சா?” என்று குதித்தபடி வேகமாக எழுந்து நிற்க,
“தமிழ் இன்னும் குழந்தை மாதிரி குதிச்சுட்டு இருக்க. வயித்துக்குள்ள நம்ம குழந்தை இருக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க, குழந்தை போல சிரித்தவள், “ஆமா நீங்க ஆபீஸ் போகலையா? புனிதாம்மா எங்க? என்னை எழுப்பி விட வேண்டியது தான?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
“முதல்ல போய் பிரஷ் பண்ணு, காபி குடி. அப்புறம் பேசலாம்” என்று சொன்னான். ‘மறுபடியும் அவர் போட்ட காபியா? அய்யோ..’ என மனதிற்குள் நினைத்தவள் பிரஷ் செய்து விட்டு தயங்கிக் கொண்டே வந்து காபியை எடுத்து அவன் முகம் பார்த்தாள். “என்ன பார்க்குற.. குடி” என்று அவன் சொல்ல, அதை வாயில் வைத்து பருகியவள் அதன் ருசியில் விழிகளை விரித்து வேகமாக அதை குடித்து முடித்தாள்.

