
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 31
செந்தமிழ் சோபாவில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க.. அறையில் இருந்து வெளியே வந்த இளமாறன் வேகமாக சென்று.. அவளுக்கு அருகில் அமர்ந்து அவள் கண்ணீரை துடைத்தான். “என்னாச்சு டி தமிழ்?? ஏன் அழற?? நான் எதுவும் தப்பா பேசிட்டேனா” என்று அவன் கேட்க.. “ஒண்ணும் இல்ல தலை வலிக்குது” என்று சமாளித்தாள். “நான் போய் காபி போடுறேன்.. உங்களுக்கும் வேணுமா?? என்று கேட்டவாறு எழுந்தவளின் கையை பிடித்து தடுத்தவன் ..
“ஹ்ம்ம்.. காபி வேணும்.. ஆனா நான் போட்டுக் கொண்டு வரேன்” என்று கிச்சனுக்கு செல்ல.. “வேண்டாம் விடுங்க.. நானே காபி போடுறேன்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்??” என்று அவளும் அவனுக்கு பின்னாடியே சென்றாள் . “போ தமிழ்.. நான் காபியோட வர்றேன்.. போறியா?? இல்லையா??” என்று அவன் அதட்ட.. அவள் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள் .
சிறிது நேரத்தில் கையில் காபி டம்ளரோடு வந்தவன் அவளிடம் அதைக் கொடுக்க வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அருகில் அமர்ந்தவன் டேபிளின் மேலே கையை ஊன்றி கன்னத்தில் கையை வைத்து.. ‘அவள் காபியை குடித்து விட்டு என்ன சொல்வாள்??’ என்று ஆவலோடு அவள் முகத்தை பார்த்தான் .
தன் மெல்லிய இளஞ்சிவப்பு இதழை குவித்து ஊதி ஊதி அவள் அந்த காபியை குடித்து விட்டு.. “ஹ்ம்ம் சூப்பரா இருக்கு இளா.. ரொம்ப தேங்கஸ்” என்றாள். இன்னும் இருந்த காபியை அவள் குடித்து முடிக்க.. இளமாறன் எழுந்து “எனக்கும் காபி போட்டிருக்கேன்.. போய் எடுத்துட்டு வரேன்” என்று கிச்சனுக்குள் நுழைய.. “வேணாம் இளா.. குடிக்காதீங்க..” என்று பதட்டமாக அவனை தடுத்தாள் .
“ஏன்.. என்னாச்சு??” என்று அவன் கண்கள் சுருக்கி கேட்க.. “இல்ல.. காபில டிகாஷன் சுகர் ரெண்டும் ரொம்ப அதிகமா இருக்கு.. உங்களுக்கு அந்த மாதிரி பிடிக்காது.. அதனால உங்களுக்கு பிடிச்ச மாதிரி வேற காபி போட்டுத் தரேன்” என்று கிச்சனுக்கு சென்றவள் காபியோடு வந்தாள் .
“சாரி டி தமிழ் .. நல்லா இல்லைன்னா ஏன் குடிச்ச?? வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல..” என்று அவன் கேட்க.. நீங்க முதன்முதல்ல ஆசையா எனக்கு காபி போட்டு குடுத்தீங்க.. அதை எப்படி நல்லா இல்லன்னு சொல்ல முடியும்.. நல்லா தான் இருந்தது” என்றாள் மெல்லிய புன்சிரிப்புடன் .
“இதுவரைக்கும் எனக்கு தோணவே இல்ல.. ஆனா இனிமே நான் கொஞ்ச கொஞ்சமா சமைக்க கத்துக்குறேன்.. குழந்தை பிறந்துட்டா உனக்கு அப்பப்போ உதவி பண்ண மாதிரி இருக்கும்..” என்று இளமாறன் சொல்ல.. செந்தமிழ் பதிலேதும் பேசாமல் திகைப்போடு அவனை பார்த்தாள் .
அவளுக்கு தேவைப்பட்டு அவள் கேட்கும் போது கிடைக்காத அன்பு… இப்போ அவள் வேண்டாம் என்று விலகி இருக்கும் போது அவன் அதை எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் எந்த பயனுமில்லை.
“நான் போய் சமையல் பண்றேன்..” என்றவள்.. வேக வேகமாக சாப்பாடு வைத்து சாம்பார், கூட்டு, பொரியல் வைத்து, அப்பளம் பொரித்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்க.. “என்ன ஒரு மணி நேரத்துல மொத்த சமையலையும் முடிச்சுட்ட” என்று சிரித்தான் இளமாறன் .
“ஹ்ம்ம்.. நான் தினமும் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே வேகமா சமைச்சு வச்சுட்டு போயிடுவேன்.. அந்த பழக்கம் தான்” என்று அவள் ஷாலை வைத்து முகத்தில் இருக்கும் வியர்வையை துடைத்துக் கொண்டே சொல்ல.. “எப்போ +2 படிக்கும் போதா?!” என்று கேட்டான் .
“இல்ல.. என் அம்மா நான் ஒண்ணாவது படிக்கும் போது இறந்து போயிட்டாங்க.. அப்புறம் சித்தி வந்தாங்க.. அப்போ என் அப்பத்தா இருந்ததால அவங்க தான் சமைப்பாங்க.. நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது என் அப்பத்தாவும் இறந்து போனாங்க.. அப்போ இருந்து சமைக்க ஆரம்பிச்சேன்..”
“ஹ்ம்ம்.. அப்போ இருந்தே நீ நல்லா சமையல் பண்ணுவியா..”
“முதல்ல எனக்கு சமையல் பண்ண தெரியாது.. அடிக்கடி கையை சுட்டுப்பேன்.. தப்பு தப்பா பண்ணி.. சாப்பாடு நல்லா இல்லன்னு என் சித்தி கிட்ட அடி வாங்குவேன்.. அப்புறம் பக்கத்து வீட்டு வேணி அத்தை தான் எனக்கு சமையல் பண்ண சொல்லிக் கொடுத்தாங்க..”
“உன் சித்தி வீட்ல சமைக்க மாட்டாங்களா??”
“எப்பவாச்சும் பண்ணுவாங்க.. அது நல்லாவே இருக்காது.. அதனால நானே காலைல சீக்கிரம் எந்திரிச்சு சமையல் செஞ்சு வச்சுட்டு சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கு கொண்டு போயிடுவேன்..” தன் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டபடியே பெருமூச்சோடு அவள் சொல்ல..
“நீ வீட்லருந்து வந்து இவ்ளோ நாள் ஆச்சு.. உனக்கு வீட்டுக்கு போகணும்.. உன் அப்பா தம்பி தங்கைகளை பார்க்க ஆசையா இல்லையா??” என்று கேட்டான் .
அவள் எந்த கொடூரமான சூழ்நிலையில் அங்கிருந்து தப்பி வந்தாள் என்பது பாவம் இளமாறனுக்கு தெரியாது அல்லவா.. விரக்தியாய் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள் .
“டைம் ஆச்சு.. உங்க அம்மாவுக்கு போன் பண்ணி சாப்பிட வர சொல்லுங்க..” என்று அவள் சொல்ல..
“எனக்கு தெரியாதுப்பா நீ தான சமையல் பண்ண.. உன் புனிதாம்மாக்கு நீயே போன் போட்டு கூப்பிடு..” என்று கண்கள் சுருக்கி சிரித்தான் அவன் .
இளமாறன் போனை எடுத்து புனிதாவிற்கு அழைத்தவள் “ம்மா.. சாப்பாடு ரெடி பண்ணிட்டேன்.. வீட்டுக்கு சாப்பிட வாங்க” என்று அழைக்க.. “நான் வந்து பண்ணியிருப்பேன்ல.. நீ ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானடா” என்று சொன்னவர்.. “வர்றேன்டா..” என்று சொல்லி போனை வைத்து விட்டார் .
“நீ அவங்களை ஏன் புனிதாம்மானு கூப்பிட மாட்டேங்குற??” என்று அவள் பேசியதை கேட்டு யோசித்தவாறு அவன் கேட்க.. “ஏன்னா அவங்க என்னோட அம்மா இல்லையே.. உங்களோட புனிதாம்மா..” என்று உள்ளுக்குள் தோன்றிய வலியை மறைத்து சிரித்தாள்.
அவன் எழுந்து அவள் முகத்திற்கு மிக நெருக்கமாக தன்னுடைய முகத்தை வைத்து.. “தமிழ்.. உனக்கு தான் இது செட்டாகவே இல்லையே.. உன்னால எங்க மேல இருக்கிற அன்பை எவ்ளோ நாள் மறைக்க முடியும்னு பார்க்கிறேன்..” என்று அவள் காதை லேசாக சுண்டி விட்டு அறைக்கு சென்றான் .
புனிதா வந்ததும் செந்தமிழ் இருவருக்கும் சாப்பாடு பரிமாறி விட்டு.. அவளும் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டாள் .
“செந்தமிழ் ரொம்ப நாள் ஆச்சுடா உன் கையால சாப்பிட்டு.. நல்லா இருக்கு.. நீ எதுக்கு வேலை எல்லாம் பண்ற?? இன்னும் மாசம் அதிகமாக உனக்கு வேலை எல்லாம் செய்ய முடியாது கஷ்டமா தான் இருக்கும்.. நீ வேலைக்கு லாம் போக வேணாம்.. வீட்ல இரு.. குழந்தை பிறந்த பிறகும் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.. நீ எந்த வேலையும் பண்ணாத.. அம்மா இருக்கேன்ல.. நான் உன்னை பார்த்துக்குறேன் டா” என்று புனிதா சொல்லிக் கொண்டிருக்க அவர் முகத்தை கண் இமைக்காமல் பார்த்தவள்..
“பரவாயில்ல ம்மா.. நான் இந்த வீட்டை விட்டு போன பிறகு எப்படியும் வேலைக்கு போய் தான ஆகணும்.. அண்ணன்கள கஷ்டப்படுத்த முடியாதுல.. டெலிவரி டைம்ல மட்டும் லீவ் போட்டுக்கிறேன்” என்று இளமாறனுக்கும் சேர்த்தே அவள் பதில் சொல்ல..
இதை கேட்ட அம்மாவிற்கும் மகனுக்கும் சோறு தொண்டைக்குழியில் அப்படியே நின்று விட்டது.. சாப்பாடு உள்ளே இறங்கவில்லை .
புனிதாவுக்கு ‘மகனின் மன அழுத்தம், வலி ஒருபக்கம்.. அவர் போட்ட கண்டிஷனால் தான் இளமாறன் இப்படி எல்லாம் செய்து.. செந்தமிழுக்கும் பிரச்சனை தந்து விட்டான் என்ற குற்ற உணர்வு மறுபக்கம்’ இரண்டிலும் மனம் தளர்ந்து போய் இருந்தவர்.. மகன் குடும்பமாக வாழ வேண்டும் என்று ஏக்கத்தோடு இருக்க..
இளமாறன் முழுவதுமாக மனம் மாறி விட்டான்.. செய்த தவறுகளை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறான் . ‘அவனுக்கு செந்தமிழும் அவள் காதலும் வேண்டும்.. அவளை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும்’ என்று நினைத்து அவன் காத்துக் கொண்டிருக்க..
செந்தமிழ் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவான முடிவுடன் இருக்கிறாள். ‘என்ன நடந்தாலும் யார் சொன்னாலும் குழந்தை பிறக்கும் வரை அவள் இந்த வீட்டில் இருப்பாள்.. அதன் பிறகு வேறு வீடு பார்த்து செல்ல வேண்டும்.. குழந்தை அவர்கள் வளர்த்துக் கொண்டாலும் சரி என்னிடம் விட்டாலும் சரி.. எதையும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று தீர்க்கமான முடிவுடன் இருக்கிறாள் .
பிறகு என்ன முடிவு எடுப்பாள்… கல்யாணம் ஆன நாளே டிவோர்ஸ்க்கு கையெழுத்து போட்டாள்.. குழந்தை கருவுற்றவுடனே இல்லாத மோசமான பட்டத்தை வாங்கினாள்.. மனதால் விவகாரத்து ஆன பின்பு கோர்ட் உத்தரவு எல்லாம் வீண் தானே.. நிம்மதியாய் உழைத்து சாப்பிட்டு.. வாய்ப்பு கிடைக்கும் போது வந்து அவள் குழந்தையை பார்த்துக் கொண்டு அப்படியே வாழ்ந்து விடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தது அந்த குழந்தை மனம் .
யார் நினைப்பது நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் ….. அன்று செந்தமிழுக்கு ஐந்தாம் மாத வளைகாப்பு.. இளமாறன் எவ்வளவு அழைத்தும் செந்தமிழ் சேலை வேண்டாம் என்று மறுத்து விட.. அவனே அவனுக்கு பிடித்த பச்சை நிறத்தில் அவளுக்கு ஒரு பட்டு சேலை எடுத்து வந்து விட புனிதா மருமகளுக்கு அழகாக பிளவுஸும் உடனே தைத்து விட்டார் .
செந்தமிழ் அதிகாலையிலேயே குளித்து மெத்தையில் மின்விசிறிக்கு கீழே அமர்ந்து ஈரமான தலைமுடியை விரித்து காய வைத்து கொண்டிருந்தாள். கருவுற்று இருப்பதால் வந்த முகப்பொலிவும்.. இளமாறன் புனிதா காட்டும் அன்பால் அவள் மனதில் இருக்கும் மகிழ்ச்சியும் முகத்தில் தெரிய.. அவள் கருவிழிகள் மின்ன.. பெரிய இமைகளை சிமிட்டிக் கொண்டு.. முதுகு வரை இருக்கும் அவள் தலைமுடியை விரித்து விட்டிருக்க.. ஃபேன் காற்றில் ‘அது மெல்ல அசைந்து கரிய அலைகள் அவள் முதுகில் படர்ந்து இருப்பது போல்’ தோன்றியது இளமாறனுக்கு .
இளமாறன் பொண்டாட்டிய ரசிக்கிறானாம்.. செந்தமிழ் மேல இருக்கிற காதல் முத்தி போய் அவனுக்கு என்னெல்லாம் தோணுது பாருங்க. இட்ஸ் டூ லேட் ஜி … போங்க போய் வளைகாப்பு வேலையை பாருங்க .
செந்தமிழ் சேலை கட்டி தயாராகி தலைமுடியை சீவி கொஞ்சம் இறுக்கமாக ஜடையை பின்னிக் கொள்ள.. புனிதா பெரிய மல்லிகை பூ சரத்தோடு வந்தவர்.. அவள் தலை நிறைய பூவை வைத்து விட்டார் .
அவர் அவளை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு செல்ல.. இளமாறன் அவளுக்கு மேட்சாக அதே இளம்பச்சை நிறத்தில் வேஷ்டி சட்டை கட்டி ரெடி ஆகி பூஜை அறைக்கு சென்றான் . அங்கு புனிதா சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கு ஏற்றி விட்டு சூடம் காட்ட.. செந்தமிழ் கைகளை கூப்பி கண்கள் மூடி கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருக்க.. அவள் மார்பில் ஏதோ விழுந்து உரச கண்கள் திறந்து பார்த்தாள் .
இளமாறன் தான் அவள் கழற்றி தந்த தாலி செயினை அவள் கழுத்தில் போட்டு விட்டிருந்தான். “எனக்கு இதெல்லாம் வேணாம்..” என்று கழற்ற போனவளை.. “வேண்டாம் டா தமிழ்.. இன்னைக்கு நல்ல நாள் அத கழட்டாத.. வளைகாப்புக்கு கடைல இருந்து பக்கத்து வீட்ல இருந்து எல்லாரும் வருவாங்க.. நீ வெறும் மஞ்சள்கயிறு போட்டிருந்தா எதாச்சும் சொல்லுவாங்க” என்று சொன்னார் புனிதா .
“நான் வீட்டை விட்டு போகும் போது தந்துட்டு போயிடுவேன்” என்று அவள் கண்கள் கலங்கி சொல்ல.. “ஹ்ம்ம் சரி.. இப்போ நீ போட்டுக்கோ..” என்று சொன்ன புனிதா அவள் ஜடையை எடுத்து சரி செய்து செயினை அவள் கழுத்தில் நன்றாக போட்டு விட..
இளமாறன் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அந்த தாலியிலும் அவள் நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டு.. அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் கண்களோ கண்ணீரில் நனைந்திருந்தது .
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தமிழ் மனம் அமைதியாக மீண்டும் பழைய நம்பிக்கை வர சிறிது காலம் ஆகும். அதுவரை எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்காமல் இருப்பது நலம்.
ஏங்கி நிற்கும் போது கிடைக்காதது வெறுத்து ஒதுங்கும் நேரம் தான் கை சேரும்.
அதனை ஒதுக்கவும் முடியாது ஏற்கவும் மனம் வராது.