Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 30

அவனை மெத்தையில் படுக்க வைத்தவள்.. வேகமாக கிச்சனுக்கு சென்று சுடுதண்ணீருடன் வந்தாள். பேண்ட்டை கொஞ்சம் மடித்து விட்டு அவன் காலில் ஒத்தடம் வைத்துக் கொண்டே இருந்தாள். “போதும் தமிழ்.. விடு.. நீ தூங்கு” என்று அவன் சொல்ல.. ” இதெல்லாம் என்னால தான்.. நான் தான் அந்த குடிகாரங்க கிட்ட போய் தேவையில்லாம பேசி உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு” என்று அவள் அழுதாள்.

“எனக்கு வலிக்கல தமிழ்.. நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவன் சொல்ல.. “இல்ல பொய் சொல்றீங்க.. உங்க கண்ணுல வலி தெரியுது.. நாம ஹாஸ்பிடல் போயிட்டே வந்திருக்கலாம்” என்று சொன்னாள். இன்ப அதிர்ச்சியில் இருந்தவன் அவளை திகைப்பாய் பார்க்க.. அழுகையோடு இருந்தவள் அவன் கால்களை தூக்கி அவள் மடியில் வைத்து.. கண்ணீரோடு அவன் கால்களில் முத்தங்கள் வைக்க.. அவனுக்கு மொத்த வலியும் பறந்தது போல் இருந்தது.

உயரம் குறைந்த.. கொஞ்சம் பாதமும் லேசாக தேய்ந்திருந்த அவன் காலில் பாதத்திலும்.. முன்னங்காலிலும் ரத்தம் கட்டியிருந்தது. அந்த காலில் கொஞ்சம் மூவ் போட்டு அழுத்தி தேய்த்து விட அவன் கத்தாமல் வலி பொறுத்தாலும்.. வலி தாங்காமல் அவன் காலை அசைத்து கொண்டே இருந்தான். மீண்டும் கொஞ்சம் வெந்நீர் ஒத்தடம் தந்தவள்.. இனியனிடம் வலி நிவாரண மாத்திரையும்.. ஆயின்மென்ட் டும் வாங்கி வர சொன்னாள்.

அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து.. அவன் சாப்பிட்டதும் மாத்திரையை கொடுத்து.. ஆயின்மென்ட் போட்டு விட்டாள். அவன் லேசாக கண்ணயர அவனுக்கு அருகில் சென்று படுத்தாள். அவள் அசைவை தெரிந்தவன் எழுந்து அவளை அழுத்தாமல்.. அவள் மார்பில் தலையை மட்டும் வைத்து அவளை அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.

தன்னிச்சையாகவே அவன் அடர்ந்த சிகைக்குள் நுழைந்த அவள் விரல்கள்.. மெல்ல அதை கோத ஆரம்பிக்க.. அவனுக்கு இதமாக இருந்தது. “இப்போ வலி குறைஞ்சிடுச்சா இளா??” என்று அவள் கேட்க.. “ஹ்ம்ம்..” என்றவன் கண்ணீரால் அவள் மார்பை நனைத்தான். “என்னாச்சு இன்னும் வலிக்குதா??” என்று அவள் பதட்டமாக கேட்க.. “எதுக்கு என்னை இவ்ளோ காதலிக்கிற?? நான் உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்தியிருக்கேன்.. என் மேல உனக்கு கோபம் வெறுப்புலாம் வராதா” என்றான்.

“உங்களை எப்படி வெறுக்கிறதுன்னு சொல்லி தர்றீங்களா?? கோபத்துல நீங்க எனக்கு வலுக்கட்டாயமா முத்தம் வச்சீங்களே அந்த மாதிரி நான் உங்க மேல கோபப்படட்டுமா??” என்று சொல்லி லேசாக சிரித்தாள்.

நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன்.. “இந்த சிரிப்பை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. உன்னை பொண்ணு பார்க்க வந்தப்போ என்னை பார்த்து நீ ரொம்ப அழகா சிரிச்ச.. அந்த மாதிரி அதுக்கப்புறம் நீ சிரிக்கவே இல்ல.. சாரி டி தமிழ்.. உன்னை மாதிரி ஒரு உண்மையான காதல் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்று அவன் சொல்ல.. “நீங்க ஒன்னும் கவலைப்படாம தூங்குங்க..” என்று சொன்னவள் அசதியில் தூங்கி விட்டாள்.

இளமாறனுக்கு தூக்கமே வரவில்லை. அவளை தொந்தரவு செய்யாமல் அவள் மேல் இருந்து எழுந்து கொண்டவன் அவளுக்கு போர்வையை நன்கு போர்த்தி விட்டான். இன்று பீச்சில் அவள் செய்ததை எல்லாம் நினைத்து பார்த்தான்.

இளமாறனை அவர்கள் ஏதோ சொல்லி விட்டார்கள் என்று செந்தமிழ் அவர்களிடம் சண்டைக்கு போனதும்.. பிரச்சனை என்றதும் சமயோசிதமாக செயல்பட்டு அவர்களை தாக்கியதும்.. அவனுக்கு வலித்து விட அவள் துடித்ததும்.. “இவ்வளவு காதலை தர என் செந்தமிழால் மட்டுமே முடியும்” என்று யோசித்து சிரித்தான்.

ரேவதியை விடுவதற்காக இனியன் அவள் வீட்டிற்கு செல்ல அங்கு ரேவதியின் அப்பா வந்திருந்தான். இருவரும் அவனை பார்த்து திடுக்கிட்டார்கள். வந்தவன் மனைவியை சுத்தம் செய்து வைத்திருந்தான்.  “அன்னைக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு அப்படி பண்ணிட்டேன்.. இனிமே அப்படி பண்ணமாட்டேன்.. எனக்கு போக இடமில்ல.. என்னை ஏத்துக்கோமா” என்று மகள் காலில் விழுந்தவன்.. “இந்த மாதிரி பொண்ணுன்னு தெரிஞ்சும் அவளை கல்யாணம்னு பண்ண நினைக்கிற நீங்க தெய்வம் மாப்ள” என்று இனியன் காலிலும் விழுந்தான்.

இருவரும் அவரிடம் இருந்து தள்ளி நின்றார்கள். “நான் எதாச்சும் வாட்ச்மேன் வேலைக்கு போய் என்னை பார்த்துக்கிறேன்.. உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்.. நான் அவளுக்கு பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா உன் அம்மாவையும் நானே பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்ல ரேவதி மௌனமாக இருந்தாள். “அவர் இங்க இருக்கட்டும் ரேவதி.. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.. எதுனாலும் போன் பண்ணு.. சரவணன் கிட்ட விஷயத்தை சொல்லிடு.. நான் கிளம்புறேன்” என்று சொன்ன இனியன் வீட்டிற்கு கிளம்பினான்.

இனியன் வீட்டில் பெற்றோர்கள் இல்லை.. “ஏன் ரேவதியின் பெற்றோரை பிரிக்க வேண்டும்.. பெரியவர்கள் ஆதரவாக இருப்பது நல்லது தானே” என்று யோசித்தார்கள். இருந்தாலும் இவ்வளவு நாள் காணாமல் போனவர் திடீரென்று வந்து நிற்க அவர் மேல் சந்தேகமும் இருக்கிறது அவர்களுக்கு.. சரவணன் ரேவதி அப்பாவை கண்காணிக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்தான்.

இந்த ஒரு முடிவு அவர்கள் எல்லோர் வாழ்வையும் அப்படியே புரட்டி போட போகிறது. அவர்கள் எல்லோருமே பெரிய பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள்.

காலையில் எழுந்த செந்தமிழ் இளமாறனை தேடி ஹாலுக்கு சென்றால் அவன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். வேகமாக சென்று அவனுக்கு கீழே அமர்ந்து அவன் காலை பிடித்து பார்த்தாள். “உங்களுக்கு இப்போ வலி எப்படி இருக்கு.. இன்னும் சிவந்து போயிருக்கு.. ஹாஸ்பிடல் போகலாமா??” என்று அவள் கேட்க.. “எனக்கு ஒண்ணும் இல்ல தமிழ்.. ரெண்டு நாள்ல சரி ஆகிடும்” என்று சொல்லி சிரித்தான்.. அவள் கையை பிடித்து தூக்கி சோபாவில் உட்கார வைத்தான்.

“நேத்து சேலை எடுக்கலையா இளமாறா??” என்று புனிதா கேட்க.. “இல்ல ம்மா இன்னைக்கு வேலை முடிஞ்சு வரும்போது எடுத்துட்டு வர்றோம்” என்றான். “நீங்க ஒண்ணும் வேலைக்கு போக வேணாம்.. லீவ் போடுங்க.. ரெஸ்ட் எடுங்க” என்று செந்தமிழ் உரிமையாக சொல்ல.. அம்மா மகன் இருவரும் அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள். அவள் மனம் மாறி விட்டாள் என்று மகிழ்ந்தார்கள்.

“நான் லீவ் போடணும்னா நீயும் லீவ் போடணும்” என்று இளமாறன் சொல்ல.. சிறிது நேரம் யோசித்தவள் “ஹ்ம்ம்.. சரி உங்களுக்கும் சரியானதும் நான் வேலைக்கு போறேன்” என்று சொல்ல.. புனிதா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். “சரி நான் சாப்பிட்டு கடைக்கு கிளம்புறேன்.. இன்னைக்கு ஒரு முக்கியமான கஸ்டமர் வர்றேன்னு சொல்லியிருக்காங்க.. நான் போயிட்டு மதியம் வந்து சமைக்கிறேன்” என்று சொன்னவர் சாப்பிட்டு முடித்து கிளம்பினார்.

“இளா வாங்க சாப்பிடலாம்..” என்று சொன்ன செந்தமிழ் அவனுக்கு பரிமாறி அவளும் சாப்பிட்டு முடித்து.. அவனை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து.. மீண்டும் அவன் காலில் ஆயின்மெண்ட் போட்டு தேய்த்து விட்டாள்.

“இருக்க கொஞ்ச காலையும் தேய்ச்சு எடுத்துடாத தமிழ்..” என்று இளமாறன் சிரித்துக் கொண்டே சொல்ல.. “இப்படிலாம் பேசாதீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்” என்றாள். “ஹோ.. அப்போ உனக்கு நல்ல கோபம்லாம் வராதா?!” என்று அவன் அரத பழைய மொக்கையை போட கோபமாக அவனை முறைத்தாள்.

“இங்க வாடி..” என்று அவன் அழைக்க அவனுக்கு அருகில் சென்று படுத்தாள். அவளை மார்பில் சாய்த்து படுக்க வைத்துக் கொண்டவன்.. “தமிழ் நீ ஏன் வேலைக்கு போய் கஷ்டப்படனும்.. குழந்தை பிறக்குற வரைக்கும் வீட்ல ரெஸ்ட் எடு” என்று இளமாறன் அவள் தலையை வருடிக் கொண்டே சொல்ல.. “ஹ்ம்ம்.. இவ்ளோ நாளா நான் யாரோவா இருந்தேன்.. இப்போ உங்க குழந்தைக்கு அம்மான்னு என் மேல ரொம்பத்தான் அக்கறை காட்டுறீங்க” என்று சொன்னவள்.. “உங்க குழந்தைக்கு ஒண்ணும் ஆகாம நான் பத்திரமா பார்த்துக்கிறேன் சரியா..” என்றாள்.

லேசாக முகம் மாறியவன் “நான் உன்னை பத்தி பேசுனா நீ குழந்தையை பத்தி பேசுற.. எனக்கு நீ தான் முக்கியம்.. தப்புதான்.. உன்கிட்ட இருந்து நான் விலகி இருக்கணும்னு இவ்ளோ நாளா எதும் கண்டுக்காம இருந்துட்டேன்.. சாரி டி தமிழ்” என்று சொல்லி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவள் சட்டென்று எழுந்து உட்கார.. அவனும் எழுந்தான். “என்னாச்சு தமிழ்.. இன்னும் என் மேல கோபமா?? போதும் டி.. ஏற்கனவே நாம நிறைய நாள் எல்லாத்தையும் மறைச்சுட்டு வாழ்ந்துட்டோம்.. இன்னும் ஏன் உனக்குள்ள இருக்கிற காதலை மறைக்கிற??” என்று கேட்டுக் கொண்டே வேகமாக அவள் இதழை நெருங்கி விட்டான்.

அவள் பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ள.. அவள் இதழை நெருங்கியவன் முத்தமிடாமல்.. மூடியிருந்த அவள் கண்களை பார்த்தான். செந்தமிழ் கண்களை திறந்து பார்த்தால்.. இருவரின் இதழ்களுக்கும் இடையில் மெல்லிய நூல் அளவு இடைவெளி மட்டுமே இருக்க அவள் இமைகளை படபடவென அசைத்தாள்.

அவள் கீழிதழ் நடுங்க “வேண்டாம் இளா..” என்றாள். அவள் பயத்தில் கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு அவனை பார்க்க.. அவன் விலகிக் கொண்டான். “நமக்கு இடையில இந்த குழந்தை மட்டும் தான் உறவு.. நாம அந்த லிமிட்ல இருந்துக்கலாம்” என்று கண்கள் கலங்க சொன்னாள்.

“அப்போ நேத்து எனக்கு அடிபட்டதுல இருந்து ஏன் பதட்டமா இருக்க?? ஏன் எனக்கு எல்லாம் செய்யுற??” என்று இளமாறன் கேட்க.. “நாம ஒண்ணா ஒரே வீட்ல இருக்கோம்.. பக்கத்துல இருக்கிறவங்க கஷ்டப்படும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா.. கொஞ்ச நாள்ல நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்.. அது வரைக்கும் நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்னு தான்” என்று அவள் சமாளிப்பாக சொல்லி விட்டு.. “நான் போய் சமைக்கிறேன்..” என்று எழுந்து ஹாலுக்கு சென்றாள்.

சோபாவில் அமர்ந்தவள் அமைதியாக அழுதாள். இளமாறன் அவளை நேசிப்பதை அவளால் நம்ப முடியவில்லை.. அதை விட “இதெல்லாம் எத்தனை நாளைக்கு??” என்று நினைத்து அழுதாள். இவ்வளவு அக்கறையாக அவளிடம் பேசுபவன் இன்னும் குழந்தை பற்றி எதுவும் அக்கறையாக பேசுவதில்லையே.. “குழந்தை வேண்டும்..” என்கிறான்.

ஆனால் ஒரு தந்தையாக அவன் முகத்தில் பூரிப்பையோ மகிழ்ச்சியையோ அவளால் பார்க்க முடியவில்லையே.. “ஒருவேளை என் அப்பாவை போலவே எல்லா அப்பாக்களும் இப்படி தான் இருப்பார்களோ??” என்று யோசித்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

அவன் காதலையே இப்போது தான் புரிய ஆரம்பித்திருக்கிறான்.. குழந்தை குறித்து அவன் மனதில் இருக்கும் தயக்கங்களை எப்போது உடைக்க போகிறானோ?? செந்தமிழ் இளமாறன் காதலை ஏற்றுக் கொள்வாளா?? அவனை புரிந்து கொண்டு இன்னும் அவன் மனதில் இருக்கும் வலிகளை கடக்க அவனுக்கு உதவியாய் இருப்பாளா?? அவனுடன் வாழ்க்கை முழுதும் இருப்பாளா?? தொடர்ந்து பார்க்கலாம்…

காதலாய் வருவாள்💞 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அவன் மீது அன்பும் அக்கறையும் இருந்தாலும் அதை விட அதிகமாக நிலையில்லா உறவுகள் மீதான பயம் அதிகமாக உள்ளது தமிழுக்கு.

    மாறனோ இப்பொழுது தான் தன் மனதை நிலையாக்கி தன்னை காதலுக்காக தயார்படுத்தி இருக்கின்றான்.

    தமிழுக்கு அன்பை ஏற்கவும் பயம் அளிக்கவும் தயக்கம். என்ன தான் மாறன் வாய் வார்த்தையாக கூறினாலும் அவனது முந்தைய செயல்கள் அவனை முழுவதும் நம்ப மறுக்க செய்கின்றது.

    குழந்தைக்காக தான் தன்னை கவனிக்கிறார்கள் என்று சொல்கிறாள் அதே நேரம் குழந்தையை பற்றி பேசுவதில்லை என்றும் வருந்துகிறாள்.

    1. Author

      ஆமாம் சகி மாறன் தமிழ் மன நிலையை சரியா புரிஞ்சுகிட்டீங்க. தொடர் ஆதரவுக்கு நன்றிகள் சகி