Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 29

இளமாறன் செந்தமிழை மெரினா பீச்சுக்கு அழைத்துச் சென்றான்.. இனியனோ அவன் காதலியை அவனுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்.

இனியன் வீட்டிற்குள் சென்றதும் ரேவதியை அணைத்துக் கொண்டான். “உன் ஃப்ரெண்ட் காக என்னை இத்தனை நாள் பட்டினி போட்ட” என்றவன் .. நின்றவாறு அவளை அப்படியே தன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றான். மெத்தையில் அவளை போட்டு அவள் மேல் படுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.

“நீ தான் உன் தங்கச்சி கஷ்டத்துல இருக்கா அப்படின்னு என்னை கண்டுக்க கூட இல்ல” என்று அவள் செல்லமாக சிணுங்க.. “ஹ்ம்ம்..” என்று எழுந்தவன்.. அவள் மார்பில் படுத்துக் கொண்டான்.

“குட்டிமா.. இப்போ செந்தமிழ் எப்படி இருக்கா?? இளமாறன் நல்லா மாறிட்டான்னு தான் தோணுது.. ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டா நமக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்” என்று இனியன் சொல்ல.. “நீ ரொம்ப நல்ல பையன் டா இனி..” என்று அவன் தலையை கோதிக் கொண்டே சொன்னாள் ரேவதி..

தங்களுக்கு கிடைத்திருக்கும் சுகமான சொற்ப நேரத்தில் கூட.. தங்கள் நண்பர்களுக்காக யோசிக்கும் உண்மையான அன்பு கொண்ட நண்பர்கள் கிடைத்தது இளமாறன் செந்தமிழ் வாங்கி வந்த வரம் தான்!!!

ரேவதி அந்த அன்பிற்காக தான் இனியனை அன்று ஹாஸ்பிடலில் பார்த்ததும் நேசிக்க ஆரம்பித்தாள்.. இனியன் அவன் தந்தைக்காக அழுத அந்த அழுகை அவளுக்கு கண்ணீர் தந்தது.. இனியன் அண்ணன் அவனுக்கு செய்தது இனியனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் வலி தந்தது..

எப்படி ரேவதி அவன் தந்தையால் வஞ்சிக்கப் பட்டாளோ.. அதே மாதிரி இனியன் அவன் அண்ணனால் வஞ்சிக்கப்பட்டான். அப்போது தான் அவள் அப்பா செய்த அந்த விஷயத்தால்.. அவளுடைய வலிகளில் இருந்து மீண்டு கொண்டிருந்த ரேவதி அவள் துன்பங்களை மறந்து அவனுக்காக அழுதாள்.. அவனுக்காக வருத்தப்பட்டாள்.

அன்று அவனுக்கு ஆறுதல் சொல்ல.. அவனிடம் சென்று உனக்கு நான் இருக்கிறேன்.. கவலைப்படாதே என்று கூட அவளுக்கு சொல்ல தோன்றியது.

முதலில் இதை ஈர்ப்பு.. பரிதாபம் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்த ரேவதி.. செந்தமிழ் திருமணத்தில் இனியனை பார்த்ததும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பட்டு வேஷ்டி சட்டையில் இதழில் புன்னகை தாங்கி சுற்றிக் கொண்டிருந்தவனை பார்த்து அவன் அழகில் மயங்கி தான் அவனை இடித்து கொண்டே இருந்தாள்.

அதையும் அழகான நினைவுகளாக மனதில் பூட்டிக் கொண்டவள் மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். எதேச்சையாக அவனை பேருந்தில் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டாள். அவனுக்காக அதே பேருந்து, அதே பஸ் ஸ்டாப் என்று அவள் காத்திருக்க.. இடையில் மீண்டும் அவள் அப்பா வந்து பிரச்சனை செய்ய.. கொஞ்சம் தடுமாறினாள்.

தன் கடந்தகால வாழ்க்கையை எண்ணி அவள் காதலை அவனிடம் சொல்ல தயங்கினாள். ஆனால் இனியன் தான் காதல் பார்வை பார்த்து.. அழகாக சிரித்து பேசி அவளை மயக்கி விட்டானே!! புனிதா மூலமாக செந்தமிழும்.. செந்தமிழ் மூலமாக ரேவதியும் இனியனின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொண்டார்கள்.

அன்று அவனை முதன்முதலில் பார்த்த போது அவள் நினைத்த மாதிரியே என் இனியனுக்கு நான் இருக்கிறேன் என்று காதலோடு மொத்தமாக அவனிடம் தஞ்சமடைந்து விட்டாள் ரேவதி!!

“என்ன பாராட்டு மட்டும் தானா பரிசுலாம் இல்லையா??” என்று இனியன் கேட்க.. ரேவதி அவன் தலையை தூக்கி நெற்றியில் முத்தமிட்டாள். “ஹே.. என்ன அள்ளி குடுக்க சொன்னா கிள்ளி கொடுக்கிற” என்று கில்லி பட டயலாக் சொன்னவன்.. அவள் இதழை தன் இதழால் அள்ளிக் கொண்டான்.

ஆமா பீச்சுக்கு போன ஜோடி என்ன ஆனாங்க… ரெண்டு பேரும் ஒன்றாக கையை கோர்த்துக் கொண்டு கடலைகளில் கால் நனைத்தார்கள். அலை வர வர குழந்தை போல் துள்ளி குதித்தவளை.. இறுக்கமாக இடையோடு பிடித்துக் கொண்டு கீழே விழாமல் பார்த்துக் கொண்டான் இளமாறன். இருவரும் கடற்கரையில் அமர்ந்தார்கள்.

செந்தமிழ் சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தவள் கடலை மாங்காய் சுண்டல் தள்ளுவண்டியை பார்த்துக் கொண்டே இருந்தாள். “உனக்கு என்ன வேணும் தமிழ்??” என்று அவன் கேட்க.. பதிலேதும் சொல்லாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து எழுந்து சென்றவன் கை நிறைய பார்சலோடு வந்தான்.

“உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியல.. அதனால எல்லாத்துலயும் ஒவ்வொண்ணு வாங்கிட்டேன்.. உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ..” என்று அவன் சொல்ல..

செந்தமிழ் உப்பு,மிளகாய்த்தூள் போட்ட மாங்காயை எடுத்து அதை கண்களில் ஒளி மின்ன பார்த்தவள்.. அதை கடித்து சாப்பிட்டு.. புளிப்பு, காரம், உவர்ப்பு கலந்த அதன் சுவையில் நாவில் எச்சில் ஊற.. அவள் அதை இன்னும் ரசித்து சாப்பிட.. அதை பார்த்த இளமாறனுக்கோ ரசித்து சாப்பிட்டு கொண்டிருக்கும் அவள் இதழை ருசிக்கும் ஆசை வந்தது.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் “மாங்காய் வேணும்னு தான் பார்த்துட்டே இருந்தியா?? மாங்காயை சாப்பிட்டுட்டு இதை எல்லாம் சாப்பிட்டுரு” என்று சொல்லி விட்டு அவன் மசாலா கடலையை கொறிக்க ஆரம்பித்தான்.

ஒருவழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்கிருந்த குழந்தைகளுக்கும் வாங்கியதை பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டு விட்டு.. விளையாடி விட்டு இருவரும் கிளம்பி நடந்து கொண்டிருந்தார்கள்.

அங்கு குடித்து விட்டு ஒரு படகுக்கடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவன்.. செந்தமிழை பார்த்து “பொண்ணு ஷோக்கா இருக்குது பாரு..” என்று சொல்ல.. “கூட வர்றது யாரு அவ புருஷனா என்ன நொண்டி நொண்டி நடந்து வர்றான்..” என்று உளறிக் கொண்டே பேச.. அது இவர்கள் காதில் விழுந்து விட்டது.

ஏதாவது பிரச்சனை செய்வார்களோ என்று நினைத்து.. இளமாறன் அவள் கையை பிடித்து கொண்டு மெல்ல இன்னொரு கையால் அவன் காலை தாங்கி தாங்கி கொஞ்சம் வேகமாக நடந்தான். “உன் பொண்டாட்டி எவன் கூடவாவது ஓடிப்போகும்னு கெட்டியா பிடிச்சிருக்கியா??” என்று ஒருவன் சொல்ல.. “இப்படி இருக்கவன் கூட எவ வாழ்வா.. ஓடி தான் போவா” என்றான் இன்னொருவன்.

புயல் வேகத்தில் இளமாறன் கையை உதறி விட்டு அவர்களுக்கு அருகில் சென்றவள்.. “கருமம் புடிச்ச உங்க கூடவே ஒருத்தி வாழும் போது என் புருஷனுக்கு என்னடா அவர் தங்கம்.. அவர் கால் தூசுக்கு நீங்க ஈடா ஆக மாட்டீங்க” என்று செந்தமிழ் கோபத்தில் மூச்சு வாங்கிக் கொண்டே அவர்களிடம் கத்தி பேச.. “பார்ரா பாப்பா ரொம்ப துள்ளுது..” என்று ஒருவன் அவள் தோளில் கையை வைக்க வர.. இளமாறன் அந்த கையை பிடித்து கொண்டான்.

“விடுங்கண்ணா சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா..” என்று அவர்களிடம் சொன்னவன்.. “வா தமிழ் போகலாம்..” என்று அங்கு நின்றிருந்தவளை இழுக்க.. “ஏதோ நீ தங்கமாம்.. எங்க உரசி பார்த்துடலாமா??” என்று அவர்கள் இளமாறனை நெருங்கினார்கள்.

அந்த குடிகாரர்கள் இளமாறனின் தோளில் தட்டி “நீ தங்கமாம்.. எங்க உரசி பார்த்துடலாமா?? என்று அவனை நெருங்க.. தன் உடல்பலம் மொத்தமும் திரட்டி அப்படியே அவர்களை தள்ளி விட்டவன்.. அவள் கையை பிடித்து கொண்டு வேகமாக நடந்தான்.

இளமாறன் நினைத்திருந்தால் அவர்களை அடித்திருக்கலாம்.. அதற்கான மன வலிமை அவனிடம் இருக்கிறது. அவர்கள் போதையில் இருக்கிறார்கள்.. “அவர்களிடம் சண்டையிட்டு என்ன பயன்??” என்று யோசித்தான். அதை விட செந்தமிழின் பாதுகாப்பு முக்கியமல்லவா.. சில நேரங்களில் துஷ்டர்களை கண்டால் தூர விலகி விடுவதும் நல்லது தானே.

கோபத்தில் அங்கிருந்த ஏதோ ஓர் கட்டையை எடுத்து அவர்களில் ஒருவன் எறிய.. அது இளமாறனின் உயரம் குறைந்த காலில் பட தடுமாறி கீழே விழுந்து விட்டான்.

செந்தமிழ் கோபமாக அந்த கட்டையை எடுத்து.. திருப்பி அவர்கள் மேல் ஏறிய ஒருவன் மண்டை உடைந்து விட்டது. கோபத்தில் அவர்கள் செந்தமிழை நெருங்க.. அவள் மணலை அள்ளி அவர்கள் கண்ணில் போட்டு விட்டு வேகமாக இளமாறனை தூக்கினாள்.

அவர்கள் கண்ணை கசக்கிக் கொண்டிருக்க.. அங்கு பணி ரோந்தில் இருக்கும் போலீஸ் இதையெல்லாம் பார்த்து விட்டு அங்கு வந்தார்கள். வேகமாக வந்தவர்கள் என்னவென்று கேட்க.. செந்தமிழ் நடந்ததை சொல்ல அந்த குடிகாரர்கள் தலை தெறிக்க ஓடினார்கள்.

காவலர்கள் அவர்களை விரட்டி பிடித்து விட்டு.. “வாங்க ஸ்டேஷன் வந்து கம்பிளையண்ட் எழுதி குடுத்திட்டு போங்க” என்று செந்தமிழிடம் சொல்ல.. “சார் அவருக்கு அடிபட்டிருக்கு நாங்க முதல்ல ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் செந்தமிழ்.

“கேஸ் தராம இவங்களை நாங்க என்ன பண்றது??” என்று அவர் யோசித்து கொண்டிருக்க.. செந்தமிழ் இளமாறன் போனை வாங்கி சரவணனுக்கு போன் செய்தாள். அவள் நடந்ததை சரவணனிடம் சொல்ல.. போனை காவலரிடம் தர சொன்னவன் அவரிடம் பேச.. “சரி நீங்க போங்க.. கம்பிளையண்ட் காப்பி வீட்டுக்கு அனுப்புறோம்” என்றார் அந்த காவலர்.

அவள் அங்கேயே அவனை உட்கார வைத்து அவன் காலை பிடித்து தேய்த்து விட்டாள். அவன் கால் நடுங்கிக் கொண்டிருக்க.. “ஆஆ.. என்று அவன் வலியில் முனக.. “இளா வலிக்குதா?? நீங்க வண்டி ஓட்ட வேணாம்.. நாம ஆட்டோல ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவள் அழுது கொண்டே சொல்ல.. “இவ்வளவு நேரம் புயலாக அங்கு களேபரம் செய்தவள்.. பூந்தென்றலாய் அவன் காலை வருடிக் கொண்டிருக்க அவனுக்கு வலியை தாண்டி சிரிப்பு வந்தது.

“தமிழ் எனக்கு ஒன்னும் இல்லடி.. வா போகலாம்..” என்றவன் காலை தரையில் ஊன்ற முடியாமல் வலியில் துடித்தான்.. அவனை தாங்கி பிடித்தவள் அவன் கையை தோளில் போட்டு மெல்ல வெளியே அழைத்து வந்து விட்டாள்.

“வண்டி ஓட்ட முடியுமா??” என்று அவள் கேட்க.. “ஏன் நீ ஓட்ட போறியா தமிழ்??” என்று கேட்டு சிரித்தான். பைக்கில் செல்லும் போது எப்போதும் அவனை பிடித்துக் கொள்ளாதவள் ஏதோ அவளுக்கு அடிபட்டது போல்.. அவனை இறுக்கமாக அணைத்து பிடித்துக் கொண்டாள்.

வீட்டில் இறங்கி அவனை உள்ளே கைத் தாங்கலாக அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தாள். “என்னாச்சு இளமாறா??” என்று புனிதா கேட்க.. செந்தமிழ் நடந்த கதைகளை சொன்னாள். “சரி நீ போய் அவனை படுக்க சொல்லு நான் சுடு தண்ணி வைக்கிறேன்.. ஒத்தடம் தந்தா சரி ஆகிடும்” என்று அவர் சொல்ல.. அவள் அப்படியே அவனை அறைக்கு அழைத்து சென்றாள்.

“நான் பாத்ரூம் போய் கை கால் கழுவுறேன்..” என்று அவன் சொல்ல.. அவனை பாத்ரூமுக்குள் விட்டவள் அங்கேயே நிற்க “என்ன??” என்றான்.. “இருங்க நானே காலை கழுவி விடுறேன்..” என்று அவள் குனிய.. “ஏய் தமிழ் குனியாத.. வயித்துக்குள்ள குழந்தை இருக்கு மறந்துட்டியா நான் பார்த்துக்கிறேன் விடுடி.. எனக்கு டவல் டீசர்ட் அப்புறம் ஒரு ட்ராக் பேண்ட் மட்டும் எடுத்து கொடு” என்றவன்.. அவள் எடுத்து தர முகம் கை கால் கழுவி உடை மாற்றி கொண்டு வெளியே வந்தான்.

காதலாய் வருவாள் 💞 

பொறுப்பு துறப்பு: இந்த நாவலில் இளமாறன் காலில் இருக்கும் குறை பற்றி மற்றவர்கள் பேசுவது போல் இருக்கும் சொற்கள் .. இன்னும் சில 18+ வார்த்தைகள் கதையின் போக்குக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. அவர்கள் குறையை எடுத்துக் காட்ட எழுதப்படவில்லை. நம்மை போலவே சாதாரணமாக இருக்கும் மனிதர்களை இன்னும் சமூகத்தில் சில பேர் இப்படி பார்க்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று தான்.. அதை பதிவு செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது.. மிக்க நன்றி!!

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தன்னை போலவே உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு அன்புக்கு ஏங்கும் இருஜீவன்களும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் அன்பை பொழிகின்றனர்.

    கணவனை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் கைகொடுத்து தாங்குகிறாள் தமிழ்.

    கோவம், வருத்தம் இருந்தாலும் அவன் மீது உள்ள பாசம் அதனினும் அதிகமாக உள்ளது.

    என்று இருவரும் மனம் திறந்து பேசி இயல்பான தம்பதியர் ஆக போகின்றனரோ.

    1. Author

      கூடிய விரைவில் இணைந்து விடுவார்கள்.. நன்றி சகி 🥰🥰