Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 28

“இங்க பாருங்க .. இப்போ உண்மை தெரிஞ்சுடுச்சு .. எல்லார் மனசும் சந்தோஷமா இருக்கு .. இப்போ நான் வெளில போயிட்டேன்னா எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும் .. பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வந்து நீங்க என்னை கழுத்தை பிடிச்சு வெளில தள்ளினா நான் என்ன பண்ண முடியும்” என்று செந்தமிழ் சொல்ல .. அவன் தளர்ந்து போய் அந்த சோபாவில் அமர்ந்தான் .

புனிதா வேகமாக எழுந்து அவள் கையை பிடித்துக் கொண்டு “எங்கடா போற?? அம்மாவை விட்டுப் போறியா??” என்று கண்ணீருடன் கேட்க ..

“நான் இங்க இருந்த இத்தனை நாள்ல ஒருநாள் கூட என் அன்பு உங்களுக்கு புரியலையா?? உண்மையா தெரியலையா??” தப்பு பண்ணினாலும் அவர் உங்க பையன் .. நீங்க அவரை ஏத்துக்கிட்டீங்க .. இதே நான் உங்க பொண்ணா இருந்தா என்னை இப்படி பண்ணி இருப்பீங்களா?? என் பக்கம் இருந்து நீங்க யோசிச்சு பாத்தீங்களா??

இப்பவும் அவர் உண்மையை சொல்லலைனா நீங்க என்னை இங்க இருக்க சொல்ல மாட்டீங்க தான .. அன்னைக்கு என் பக்க நியாயத்தை நீங்க கேட்கவே இல்லையே .. நான் இப்படியே இருந்துக்குறேன் .. எனக்கு இன்னும் காயங்கள தாங்கறதுக்கு எல்லாம் மனசுல தெம்பு இல்ல .. நான் உங்க கூட இருந்த அந்த சந்தோஷமான நாள் எல்லாம் நினைச்சு மிச்ச காலத்தை வாழ்ந்துக்குவேன்” என்று செந்தமிழ் புனிதாவிடம் அழுது கொண்டே சொல்லி முடிக்க ..

புனிதாவும் இளமாறனும் அவளை அதிர்ச்சியாய் பார்த்தார்கள் .. அவள் கேட்பது அனைத்தும் நியாயம் தான் . அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை . “உன் வயித்துல இருக்கிறது என் பையனோட குழந்தை” என்று புனிதா கேட்க .. “குழந்தை பிறந்ததும் கொண்டு வந்து தரேன்” என்றாள் .

எல்லாவற்றிற்கும் தயாராக தான் இருந்திருக்கிறாள் . அம்மா மகன் இருவருக்கும் அவளை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை . “குழந்தை பிறக்குற வரை நீ இங்கேயே இரு .. எங்க கண் பார்வையிலேயே இரு .. உனக்கும் பாதுகாப்பா இருக்கும்” என்று இளமாறன் சொல்ல .. அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் .

அவள் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை ..  எப்படியாவது அவளை அங்கே இருக்க வைக்க வேண்டும் என்று யோசித்தவன் .. “பிளீஸ் தமிழ் .. இங்க இரு .. நாங்க உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டோம்” என்று சொல்ல .. “நான் குழந்தையை பெத்து கொடுத்துட்டு போயிடுவேன் .. அதே மாதிரி இப்போ எப்படி இருக்கேனோ அப்படி தான் இருப்பேன்” என்றாள் .

“ஹ்ம்ம்.. சரி” என்று அவன் சொல்ல வேலைக்கு கிளம்பினாள் . “வேலைக்கு போக….” இளமாறன் ஏதோ சொல்ல வர அதற்குள் செந்தமிழ் அவனை முறைக்க .. “நான் பைக்ல போய் விட்டுட்டு வரேன் தமிழ் .. உனக்கு வேலைக்கு போக லேட்டாயிடுச்சு” என்றான் .

வேறு வழியில்லாமல் செந்தமிழ் இளமாறனுடன் பைக்கில் ஏறிக் கொள்ள இருவரும் கிளம்பினார்கள் . அவள் எப்போதும் பைக்கின் சைடில் இருக்கும் கம்பியை தான் பிடித்துக் கொள்வாள் . “நல்லா உட்காரு தமிழ் விழுந்துடாத .. என்னை பிடிச்சுக்கோ” என்று அவன் சொல்ல .. அவள் பதிலேதும் பேசாமல் எப்போதும் போல் கம்பியை பிடித்து கொண்டாள் .

ஃபேக்டரியில் அவளை இறக்கி விட்டவன் .. “சாயந்திரம் நானே உன்னை வந்து கூப்பிட்டுக்கிறேன்” என்று சொல்ல .. “வேண்டாம் நான் ரேவதி கூட வந்துக்கிறேன்” என்று சொல்லி சென்று விட்டாள் .

மதிய உணவு வேளையில் செந்தமிழ் ரேவதியிடம் .. அன்று காலை வீட்டில் நடந்ததை சொல்ல ரேவதி சிரித்தாள் . “எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும்” என்று மனதில் நினைத்து கொண்டாள் . இரவு பேருந்தில் வீட்டிற்கு சென்றவள் ஒரு பார்சலை டைனிங் டேபிளில் வைக்க .. புனிதா “என்னடா வாங்கிட்டு வந்திருக்க??”  என்று கேட்டார் .

“வரும் போது அங்க தெரு முக்குல ஃப்ரைட் ரைஸ் போடுவாங்க .. ஆசையா இருந்தது .. அதான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் , காளான் , காலிஃபிளவர் சில்லி வாங்கிட்டு வந்தேன் .. எல்லாருக்கும் இருக்கு நீங்களும் எடுத்துக்கோங்க” என்றவள் .. புனிதாவிற்கு ஒரு தட்டில் போட்டு தந்தாள் .

அவளுக்கு ஒரு தட்டில் எல்லாவற்றிலும் கொஞ்சம் போட்டுக்கொண்டு .. சாஸ் ஊற்றி ஸ்பூனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .

வீட்டுக்கு வந்த இளமாறன் “என்ன புனிதாம்மா ஏதோ ஸ்பெஷல் போல?!” என்று கேட்க . “செந்தமிழ் தான் வாங்கிட்டு வந்தா” என்றார் . அவள் கிச்சனுக்கு உள்ளே தண்ணீர் எடுக்க சென்றிருக்க .. உடை மாற்றி வந்த இளமாறன் அவள் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை ஸ்பூனுடன் எடுத்து .. சோபாவில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான் .

அங்கு வந்தவள் “அது நான் சாப்பிட்டுட்டு இருந்த தட்டு” என்று அவனிடம் சொல்ல .. “தமிழ் உன்னோடதா .. நான் கவனிக்கல .. அச்சோ நான் எச்சில் பண்ணிட்டேனே .. நீ வேற தட்டுல போட்டுக்கோ” என்று பாவமாய் முகத்தை வைத்து சொன்னான் .

அவனை முறைத்து பார்த்த செந்தமிழ் வேறு தட்டில் போட்டு சாப்பிட்டாள் . அவனுக்கு பிடிக்கும் என்று தான் செந்தமிழ் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி வந்திருக்கிறாள் என்று அவள் காதலை புரிந்தவன் .. அவள் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு “இந்த காதல் எவ்ளோ அழகா இருக்கு!!” என்று உணர்ந்து உள்ளுக்குள் சிரித்து கொண்டான் .

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் .. “வர்ற ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு வச்சுக்கலாம் நான் கடைல இருக்கவங்க .. இங்க பக்கத்து வீட்ல இருக்கவங்கள கூப்பிடுறேன் .. நீ உன் கம்பெனில இருக்கவங்கள கூப்பிடு இளமாறா .. நீ உன் அண்ணனுங்கள வர சொல்லு செந்தமிழ்” என்று புனிதா சொல்ல .. “நானே நாளைக்கு காலைல அவங்கள கூப்பிடுறேன்மா” என்றான் இளமாறன் .

“என்ன இளமாறா.. நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கூட சமாதானம் ஆகிட்டியா .. புள்ளபூச்சி மாதிரி இருந்துட்டு அந்த இனியன் அன்னைக்கு எப்படி துள்ளுறான்” என்று புனிதா கிண்டலாக சிரிக்க .. “அவனுங்கள என்ன நான் சமாதானம் பண்றது .. வான்னு சொன்னா வந்துட்டு போறானுங்க” என்றான் .

இரவு அறையில் .. “தமிழ் நீயும் மெத்தையில வந்து படுத்துக்கோ” என்று இளமாறன் சொல்ல .. “வேண்டாம் நான் கீழ படுத்துக்கிறேன்” என்றாள் செந்தமிழ் .

“வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு கீழ படுத்து எந்திரிக்க உனக்கு கஷ்டமா இல்லையா”

“நான் நைட்டு அடிக்கடி பாத்ரூம் போக எழுந்திருப்பேன் .. உள்ள படுத்துகிட்டா என்னால எழுந்து எழுந்து உங்களை தாண்டி போக முடியாது”

“நான் உள்ள படுத்துக்கிறேன் .. நீ முன்னாடி படுத்துக்கோ”

“என்னால உங்களுக்கு எதுக்கு கஷ்டம் ..”

“தமிழ் எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல .. நீ மேல வந்து படுக்கிறியா இல்ல நான் கீழ வந்து படுக்கட்டுமா”

அவள் எரிச்சலுடன் எழுந்து சென்று மெத்தையில் இளமாறனுக்கு அருகில் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொள்ள .. அவன் அவள் முதுகை பார்த்தான் . ((அங்க ஒன்னும் தெரியாது அவ ஃபுல்லா மூடியிருக்க டாப் போட்டிருக்கா))

செந்தமிழ் இடுப்பில் கையை போட்டவன் அவளுக்கு அருகில் நெருங்கி படுக்க .. “இப்படி பண்ணா நான் கீழ போய் படுத்துக்குவேன்” என்று அவள் சொல்ல .. அவன் வேகமாக கையை எடுத்துக் கொண்டான் .

அவள் தூங்கி விட .. தூக்கம் தொலைத்து தான் செய்த தவறுகளை நினைத்து இரவில் அழுவது இப்போது அவன் முறை ஆயிற்று ..

“கையில் வைரத்தை வைத்து கொண்டு .. அதை பொக்கிஷமாக பாதுகாக்காமல் விட்டு விட்டேன் .. விட்டு விலகி செல்ல நினைப்பவளுக்கு எப்படி என் காதலை புரிய வைப்பேன்” என்று சத்தமில்லாமல் அவன் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க .. மெல்ல திரும்பி படுத்தவள் .. அவன் அழுகையை பார்த்ததும் நன்றாக விழித்து பார்த்து “என்னாச்சு ஏன் அழறீங்க??” என்று பதட்டமாக கேட்டாள் .

“நான் உனக்கு பண்ண தப்பெல்லாம் நினைச்சு தான் அழறேன்”

“விடுங்க .. உங்க மேல ஒரு தப்பும் இல்ல .. உங்க சூழ்நிலை அப்படி .. எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அவன் கண்களை துடைத்தாள் .

அவள் கையை எடுக்க .. அவள் கையை பிடித்து அப்படியே அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழுதான் . “என்னாச்சு இளா .. தயவுசெஞ்சு அழாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அவள் கண்கள் கலங்க .. அவனுக்கு வந்து கொண்டிருந்த கண்ணீர் அப்படியே நின்று விட்டது .

அவன் தேடிக் கொண்டிருந்த காதல் இதுவல்லவா .. கண்களில் கண்ணீரோடு சிரித்தான் . “ஐ லவ் யூ தமிழ்” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைக்க .. அவளுடைய கண்ணீர் அவள் கண்களை தாண்டியது . “வேண்டாம் இளா.. நம்ம ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாகி நமக்குள்ள இருக்க கொஞ்ச மன நிம்மதியையும் கெடுத்துக்க வேணாம்” என்று அவள் சொல்ல .. அவன் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்து சிரித்தான் . அவள் மீண்டும் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள் .

மறுநாள் காலையில் இருவரும் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க .. இளமாறன் தன் நண்பர்களுக்கு போன் செய்தான் .

“டேய் மச்சான்.. உங்க தங்கச்சிக்கு ஞாயிற்றுக் கிழமை வளைகாப்பு வச்சிருக்கோம் .. சும்மா வந்துடாத .. தங்கச்சின்னு சொன்னா மட்டும் போதாது சீர்வரிசை எல்லாம் கரெக்ட்டா இருக்கணும் .. இல்லனா வீட்டுக்குள்ள உங்கள விடமாட்டேன்” என்று இளமாறன் சிரித்துக் கொண்டே சொல்ல ..

“சரிடா வெண்ண .. நாங்க வர்றது இருக்கட்டும் நீ எங்க தங்கச்சிக்கு செய்றது எல்லாம் கரெக்ட்டா பண்ணு” என்று சொன்னார்கள் செந்தமிழின் அண்ணன்கள் .

“இளமாறா.. உன் கல்யாணத்துக்கு சொன்ன கேட்டரிங்ல சாப்பாட்டுக்கு சொல்லிடு .. இது அஞ்சாவது மாசம் .. அஞ்சு வகை சாப்பாடு .. புளியோதரை , லெமன் சாதம் , தக்காளி சாதம் , தேங்காய் சாதம் , அதுக்கு கூட்டு , தொகையல் , வடை சொல்லிடு .. நான் வீட்ல சர்க்கரைபொங்கல் , கொழுக்கட்டை பண்ணிடுறேன்” என்று புனிதா சொல்ல அவன் சரி என்றான் .

“அம்மா தமிழுக்கு புது புடவை எடுக்கட்டுமா?? என்று அவன் கேட்க .. “ஹ்ம்ம்.. ரெண்டு பேரும் வேலை முடிஞ்சு வரும் போது எடுத்துட்டு வாங்க” என்று சொன்னவர் வளையல் அளவுக்காக செந்தமிழ் கையில் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் வளையலை வாங்கிக் கொண்டார் .

“யாருக்கோ விசேஷம் வைத்திருப்பது போல” செந்தமிழ் இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு .. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .

“எனக்கு புது சேலை வேணாம் .. கல்யாண சேலை இருக்குல அதைக் கட்டிக்கிறேன் .. சாயந்தரம் நான் ரேவதி கூடவே வந்துடுறேன்” என்று ஃபேக்டரியில் இறங்கிய செந்தமிழ் சொல்ல .. சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் இளமாறன் .

மாலை அவளை அழைக்க வந்தவன் .. இனியனோடு வந்தான் . இனியனையும் ரேவதியையும் பிரிக்க விரும்பாத செந்தமிழ் இளமாறன் பைக்கில் ஏறிக் கொள்ள .. இனியன் ரேவதியை அழைத்து சென்றான் . இளமாறன் செந்தமிழை மெரினா பீச்சுக்கு அழைத்துச் சென்றான் .

என்னடா இவன் உடனே திருந்திட்டான் .. உடனே இவ்வளவு நல்லவனா மாறிட்டான்னு ஆச்சரியமா இருக்குல . இளமாறன் அந்த அழுத்தத்துல இருந்து வெளில வரணும் .. செந்தமிழ் கிட்ட நெருங்கணும்னு தான் ஆசைப்பட்டுட்டு இருந்தான் . ஆனா சூழல்கள் வேறுமாதிரி தான் அமைஞ்சுடுச்சு .

இப்போ செந்தமிழோட காதலை தெரிஞ்சுக்கிட்டு சந்தோஷப்படுறவன் .. அவளோட ஆழமான காதல் தெரிய வரும் போது ரொம்ப வேதனைப்படுவான் .

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. உண்மை தானே. தனது மகன் தவறே செய்தபோதும் மன்னித்து உடன் வைத்துக்கொள்ள முனையும் புனிதாமாவின் மனம், மகள் போல் என்று கூறியவள் தவறு செய்துவிட்டால் என்றதும் அவள் புறம் இருக்கும் நியாயத்தைக்கூட கேட்க தயாராக இருக்கவில்லையே.

    குழந்தையை பற்றி இருவருமே சிந்திக்க மறந்துவிட்டனர்.

    தவறு செய்துவிட்டு எங்கே கைசேர்ந்த சொர்க்கம் நழுவிவிடுமோ என்ற பயத்தினில் அவனும்.

    நேசிப்பவனை மன்னித்து இயல்பாய் இருக்க இயலாமல் விட்டு செல்லவும் மனமில்லாமல் குழப்பத்தினில் அவளும்.

    நடந்தவைகளை மறந்து, மன்னித்து, உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் இருவரும்.

    1. Author

      ஆமாம் சகி.. இருவரும் அவரவர் மனதை.. உணர்வுகளை பகிர்ந்து கொண்டால் தான் நல்லது.. எல்லாம் நல்லபடியாக மாறும்.. நன்றி சகி 🥰