Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 27

நிரஞ்சனாவை ஒரு காரில் அவள் திருமணம் செய்து கொள்பவனுடன் பார்த்தான் இளமாறன் . அதுவும் மிகவும் நெருக்கமாக அவர்கள் முத்தம் வைத்து கொள்வதை போல் பார்த்தவன் மனம் நொந்து போனான் . “தன்னை காயப்படுத்திய எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. ஏன் நான் மட்டும் இப்படி இருக்கிறேன்” என்று அதை நினைத்து தான் அன்று குடித்தான் .

செந்தமிழின் மடி சாய்ந்து மனம் விட்டு அழ ஏங்கினான் . ஆனால் வேண்டாம் என்று நினைத்து அவளை அம்மா அறையில் படுக்க சொன்னான் . சூழ்நிலைகள் மாறி அமைந்திட அன்று அவன் காதலை காமமாக மாற்றி .. தன்னையே தனக்கு நிரூபித்து கொள்ள நினைத்து அவசரமாக எல்லாவற்றையும் தொடங்கியவன் செந்தமிழின் கண்ணீரை பார்த்து .. அவளிடம் காதலை சொல்லி .. அவளிடம் மென்மையாக நடந்து கொண்டு அவளை ஆட்கொண்டான் .

போதையில் அவன் ஆழ்மனதில் இருந்த காதல் .. அவள் மேல் இருந்த ஆசை எல்லாம் சொல்லி விட்டான் . தெளிந்த பிறகு அவள் வாழ்க்கையை கெடுத்து விட்டேன் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளானான் . அதையும் கோபமாக அவள் மேல் காட்டி அவளை கஷ்டப்படுத்தினான் . எதை வேண்டாம் என்று மனம் நினைக்கிறதோ அதை தான் வேண்டும் என்று திரும்ப செய்யும் .

இளமாறன் செந்தமிழை எவ்வளவு நேசித்தானோ அவளை அவ்வளவு தூரம் விட்டு விலகி இருக்க நினைத்தான் .. எதை விட்டு விலக நினைத்தானோ அதை தான் அவன் அதிகம் நேசித்தான் . இதுதான் இருவருக்குள்ளும் இதுநாள்வரை நடந்தது .

செந்தமிழ் அவனை நேசிக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை .. அவன் தெரிந்து கொள்ள விரும்பவில்லை . தனக்குள் போராடவே அவனுக்கு சரியாக இருந்தது . இன்றுதான் நண்பர்களிடம் மனதில் இருப்பதை பகிர்ந்து நிதானத்திற்கு வந்திருக்கிறான் .. ஆனாலும் செந்தமிழ் மேல் இருக்கும் காதலை அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை .

காதலில் காயம் கண்ட அவன் மனது .. அவன் அவள் மீது வைத்திருப்பது காதல் என்பதையோ .. அவள் இல்லாமல் அவனால் வாழ முடியாது என்பதையோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது . இன்னொரு காயத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறது .

இன்னும் சொல்லப் போனால் .. நிரஞ்சனா பிரச்சனைக்கு அப்புறம் இளமாறன் தன்னை பற்றி புதிதாக உணர தொடங்கியிருந்தான் . அவன் காதலுக்கோ கல்யாணத்திற்கோ தகுதியில்லாதவன் .. தாம்பத்தியத்திற்கும் கூட தகுதியில்லாதவன் என்று நினைத்துக் கொண்டான் . அதன் பிறகு நடந்த விஷயங்களும் .. செந்தமிழுக்கு அவன் செய்த டார்ச்சர்களும் அதை உண்மை என்று அவனுக்கே உறுதி செய்ய .. அவன் அதை நம்ப ஆரம்பித்திருந்தான் .

அதனால் தான் அவன் உயிருக்கும் மேலாக அவன் நேசிக்கும் தாயையும் வார்த்தைகளால் காயப்படுத்தினான் .. உயிர்த் தோழனுடன் சண்டையிட்டான் .. யாருடைய அன்பிற்கு கூட தகுதியில்லாதவன் என்று அவனை நினைக்க ஆரம்பித்தான் . அதை உறுதி செய்ய கர்ப்பம் என்று வந்து நின்றவளிடம் மிருகத் தனமாய் நடந்து கொண்டான் .

அவனுக்கு வேறு வழியில்லை .. தாயை இழந்து விடக்கூடாது என்ற பயத்தில் மொத்தமாய் செந்தமிழின் உணர்வுகளை தெரிந்தே காயமாக்கினான் . அது சரிதான் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் .

செந்தமிழ் பற்றி இவ்வளவு யோசித்தவன் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றி .. அதன் எதிர்காலம் பற்றி அதில் பாதி அளவு கூட யோசிக்கவில்லை .. ஏனென்றால் அவனுக்கு குழந்தை வேண்டாம் .

இன்னும் காதலை பற்றியே தெரியாதவன் .. வாழ்வின் போராட்டங்களில் தத்தளிப்பவன் குழந்தை பற்றி யோசிக்கவில்லை . அவனுக்கு தந்தை பாசம் கிடைக்கவில்லை .. அப்படி என்றால் என்னவென்று கூட தெரியாது . தந்தை என்ற சொல் கேட்டால் வெறுப்பவனுக்கு .. படத்தில் அப்படி காட்சிகள் வந்தால் கூட அதை தவிர்ப்பவனுக்கு .. அவனே தந்தை என்ற உறவானது பற்றி யோசிக்க முடியவில்லை .

புனிதாம்மா நீ ரொம்ப நல்லா பிள்ளையை வளர்த்து வச்சிருக்க .. வெளியே தைரியமா இருக்க மாதிரி இருந்துகிட்டு உள்ளுக்குள்ள இவ்ளோ பிரச்சனையை வச்சிருக்கான் . காதலை கல்யாணத்தை குழப்பி இப்போ மொத்தமா தந்தைமை யை குழப்பி வைத்திருக்கிறான் .

தன் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன் .. அவன் ஆசைப்பட்ட விஷயங்களே அவனுக்கு வலியை தரும் ஒருவன் மனநிலை நிச்சயம் இப்படிப்பட்டதாக தான் இருக்கும் .. வலிகளை கடந்து வருவதற்கு பதிலாக அவன் வலிகளை சேர்க்க ஆரம்பித்து விட்டான் .

அவன் நேசிப்பவளுக்கு பரிசாக வாங்கியது தான் அந்த மோதிரமும் செல்போனும் . செந்தமிழை நேசிக்கிறேன் என்ற அர்த்தத்தில் தான் அவன் அதை அவளிடம் கொடுத்தான் . ஏனென்றால் அவன் நேசம் உண்மை .. என்ன முதலில் அதை தவறானவரிடம் காட்டி விட்டான் . அவன் நேசம் எப்படி மறுக்கப்பட்டதோ அந்த மாதிரி அந்த பொருட்களும் மறுக்கப்பட்ட பொருட்கள் .

செந்தமிழ் அந்த மோதிரத்தை போட்டுக் கொண்ட போது .. மறுக்கப்பட்ட அவன் நேசத்தை அவள் ஏற்றுக்கொண்டதாக தான் அவன் நினைத்தான் . ஆனால் செந்தமிழோ அவை நிரஞ்சனாவுக்கு சொந்தமான பொருட்கள் என்று நினைத்துக் கொண்டாள் . இளமாறனும் அவன் நேசமும் நிரஞ்சனாவுக்கு மட்டுமே சொந்தம் என்று தவறாக புரிந்து கொண்டாள் .

எல்லாம் சரிதான் .. அதற்காக இளமாறன் நல்லவன் என்று சொல்ல வரவில்லை . நல்லவனாய் இருந்தாலும் தெரிந்தே செய்த பாவங்களுக்கு தண்டனைகள் காத்திருக்கிறது . அதுவரை இளமாறன் கொஞ்சம் சந்தோஷமாக இருந்து கொள்ளட்டும் .

ஒருவழியாக தன் மீது செந்தமிழ் வைத்திருக்கும் காதலை தெரிந்து கொண்ட இளமாறனின் மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது . இன்று தான் தன் வாழ்க்கை அழகாக இருப்பதாக தோன்றியது . நீண்ட நாட்கள் கழித்து மனமெங்கும் மகிழ்ச்சியாக இருக்க .. அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது .

ஏதோ உலகத்தையே தன் வசமாக்கி விட்டது போல் சிரித்தான் . “இந்த நிமிடம் மரணம் வந்தால் கூட .. வாழ்க்கையை வாழ்ந்த முழு திருப்தியோடு செத்து போவேன்” என்று யோசித்தான் . செந்தமிழை அப்படியே அணைத்து கொஞ்ச ஆசை வந்தது .. ஆனால் அவள் தூக்கத்தை கலைக்க விரும்பவில்லை . அவள் அருகில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் . விடியல் வரும் வரை பார்த்திருந்தான் . ((இவன் எல்லாத்தையும் ஓவரா தான் பண்ணுவான் போல))

எப்போது தூங்கினானோ செந்தமிழுக்கு கொஞ்சம் தள்ளி அங்கு அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து காலை நீட்டி அப்படியே தூங்கி விட்டான் . காலையில் செந்தமிழ் எழுந்து அவன் தூங்கும் கோலத்தை பார்த்தாள் . “இரவு போதையில் ஏதேதோ கேள்விகள் கேட்டானே .. என்ன கேட்டான்?? என்ன பதில் சொன்னேன்??” என்று யோசித்து பார்த்தாள் . அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் ஞாபகம் இருந்தது .

செந்தமிழ் எழுந்து ஃபேக்டரிக்கு கிளம்பி விட்டு சாப்பிட சென்றாள் . புனிதா அவளுக்கு தட்டில் பூரி எடுத்து வைத்துக் கொண்டே .. உனக்கு 5 மாசம் ஆச்சு வளைகாப்பு பண்ணனும் .. என்னைக்கு பண்ணலாம்??” என்று அவளிடம் கேட்க .. “எனக்கு எதுக்கு அதெல்லாம் பண்ணனும் .. வேணாம்” என்றாள் .

“உனக்கு இல்லேன்னாலும் உன் வயித்துல இருக்கிற குழந்தைக்காக பண்ணனும் .. நிறைய வளையல் போடனும் .. வளையல் சத்தம் கேட்டு குழந்தை அசையும்” என்று ஆசையாக சொன்னார் .

“ஹ்ம்ம் .. நீங்க நல்ல நாள் பார்த்துட்டு சொல்லுங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க .. இளமாறன் தூக்கத்தில் இருந்து எழுந்தவன் அவளை காணாமல் தேடிக் கொண்டே வெளியே வந்தான் .

“இளமாறா.. நீ ஆபீஸ் கிளம்பலையா??” என்று புனிதா கேட்க .. “ஹ்ம்ம் .. கிளம்பனும் ம்மா” என்றவன் அறைக்கு சென்று குளித்து கிளம்பினான் . செந்தமிழ் அறைக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டிருக்க இளமாறன் ட்ரெஸ் பண்ணிக் கொண்டே அவளை பார்த்தான் .

“செந்தமிழ் நீ வேலைக்கு லாம் போகாத” என்று சொன்ன இளமாறனை அவள் வித்தியாசமாக பார்த்தாள் .

“எதுக்கு?? என்று அவள் கேட்க .. பதில் சொல்ல தடுமாறியவன் “வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு பஸ்ல போயிட்டு வர கஷ்டமா இருக்கும்ல” என்றான் .

“நான் இவ்ளோ நாளா அப்படிதான் போயிட்டு வரேன்..”

“உன் வயிறு பெருசாகிட்டே இருக்கு .. அதான் சொன்னேன்..”

“நான் பார்த்துக்கிறேன் .. எனக்கு செலவுக்கு பணம் வேணுமே ..”

“நம்ம கம்பெனிக்கு வா .. அங்க மேனேஜ்மென்ட் பார்த்துக்கோ .. சேலரி கூட தர்றேன்” என்றவனை முறைத்து பார்த்தாள் .

“எனக்கு இருக்கிற ஒரே மன நிம்மதியே நான் வேலைக்கு போறது தான் .. உங்க கம்பெனிக்கு வந்து நான் தினமும் உங்க கிட்ட திட்டு வாங்கணுமா” என்று அவள் கேட்க வாயை மூடிக் கொண்டான் .

சட்டென அவள் கையை பிடித்து ஹாலுக்கு இழுத்து சென்றவன் சோபாவில் உட்கார்ந்து அவளை அருகே உட்கார வைத்தான் . “புனிதாம்மா இங்க வாங்க” என்று அவன் அழைக்க .. வந்தவரை தன் அருகில் இன்னொரு பக்கம் உட்கார வைத்தான் .

அவன் இறுக்கமாக பிடித்திருந்த அவள் கையை விட்டவுடன் எழுந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டாள் செந்தமிழ் .. “என்ன இளமாறா??” என்று புனிதா கேட்க ..

அவர் கைகளை பிடித்துக் கொண்டவன் .. “அம்மா என்னை மன்னிச்சிடுங்க .. இப்போ நான் சொல்றதை கேட்டு நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி .. நான் தான் எல்லா தப்பும் பண்ணேன் .. செந்தமிழ் மேல எந்த தப்பும் இல்ல” என்று அவன் நடந்தது அத்தனையும் சொல்லி விட்டு .. “அம்மா தமிழ் வயித்துல இருக்கிறது என்னோட குழந்தை தான் .. ஏதோ கோபத்துல கஷ்டத்துல அவளை நான் ரொம்ப பேசிட்டேன் .. காயப்படுத்திட்டேன் .. அடிச்சுட்டேன் .. கஷ்டப்படுத்திட்டேன்” என்று கதறி அழ .. புனிதா திரும்பி செந்தமிழை பார்த்தார் .

அவள் எந்த சலனமின்றி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரை தாண்டி கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது .

“அம்மா அவ வேலைக்கு போக வேணாம் .. நான் அவளை பார்த்துக்கிறேன்” என்று அவன் சொல்ல .. அவரும் கண்ணீரோடு இருந்தார் . செந்தமிழ் உள்ளே போய் முகம் கழுவி விட்டு ஒரு பையுடன் வெளியே வந்தாள் . “நான் இவ்ளோ நாள் இதுக்காக தான் இங்க இருந்தேன் .. கிளம்புறேன்” என்றவள் வாசலை நோக்கி நடக்க .. அவன் எழுந்து அவள் கையை பிடித்துக் கொண்டான் .

“எங்க போற தமிழ் .. என்னை மன்னிச்சுரு .. நான் பண்ணதெல்லாம் பாவம் தான் .. தப்பு தான் .. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு .. என்னை விட்டு போகாத” என்று அவன் சொல்ல ..

“உங்களுக்கு என்னால எதும் காரியம் ஆகணுமா?? என்னாச்சு திடீர்னு இப்படி மாறிட்டீங்க” என்று சொன்னவள் ஒரு சின்ன புன்னகையை மட்டும் வீசினாள் .

“நான் இவ்ளோ நாளா உன்னோட காதலை புரிஞ்சுக்காம இருந்துட்டேன் .. புத்தி தடுமாறி நடந்துகிட்டேன்..”

“சரி புரிஞ்சுகிட்டீங்கள .. நான் உங்களை மன்னிச்சுட்டேன் .. நான் கிளம்புறேன் ..”

“தமிழ் நீ எனக்கு வேணும் ..”

காதலாய் வருவாள் 💞

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தன்னை தானே தாழ்த்தி யோசிச்சு யோசிச்சு இது தான் நான்னு எல்லோருக்கும் காட்டி தாழ்ந்தவனாவே மாறி நிக்கிறான்.

    ஆசைப்பட்டது கிடைக்காம, ஆசைப்படவே தகுதி இல்லன்னு நினைக்க வெச்சிருச்சு காலம்.

    எல்லாம் கைவிட்டு போற நேரம் தான் புரியும் போல. இனி தமிழ் என்ன முடிவு செய்வாளோ!

    1. Author

      உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகி 🫶🏻