Loading

“நிரஞ்சனாவை மறக்க முடியாம கஷ்டப்படுறியா .. உன் மனசுல என்ன இருக்கு சொல்லிடு .. இப்படி உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத” என்று இனியன் கேட்க .. “அவ என்னை வேணாம்னு சொன்னதும் நான் அவளை என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுட்டேன் .. நான் என்ன தப்பு பண்ணேன் .. இப்படி பிறந்ததுனால என் அப்பா எங்களை விட்டு போயிட்டார் ..

ஏன் எல்லாருக்கும் கிண்டலா பேச என் கால் தான் கிடச்சதா .. என்கிட்ட இருக்க மத்த எதையாச்சும் சொல்லி என்னை கிண்டல் பண்ணலாமே .. அவ என்னை வேணாம்னு சொன்னதுக்கு ஏன் என்னை காரணமா சொல்லணும் .. ஒருவேளை நான் உண்மையாவே எல்லாரும் கிண்டல் பண்ற மாதிரி அப்படி தான் போலன்னு தோணுது..

மத்தவங்க பேசுறதுக்கு முன்னாடியே நானே என்னை கிண்டல் பண்ணி பேசிட்டா எனக்கும் அந்த வலியும் கஷ்டமும் இருக்காதுல” என்று அவன் கண்ணீரோடு சொல்ல .. அவன் நண்பர்களும் கலங்கி போனார்கள்.

“இப்போலாம் எனக்கு பயம் அதிகமாயிடுச்சு .. என் அம்மாவோ .. ஏன் நீங்களே கூட என்னை கிண்டலா ஏதாவது பேசிட்டா நான் என்ன பண்றது .. அந்த அழுத்தத்துனால என்னால யார் கிட்டயும் நெருங்கி பழக முடியல .. இந்த பிசினஸ் .. ஆபீஸ் வேலை மட்டும் இல்லனா எப்பவோ எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும்” என்று இளமாறன் சொல்லிக் கொண்டிருக்க .. இனியன் அவன் வண்டியில் வாங்கி வைத்திருந்த பீர் பாட்டில்களை எடுத்து வந்து காரின் மேலே வைத்தான் .

“ஹ்ம்ம் .. நீ சொல்றது எல்லாம் சரிதான் .. இதுல செந்தமிழ் எங்க வந்தா .. நீ ஏன் அவளை கல்யாணம் பண்ண .. எதுக்கு கண்டிஷன் போட்ட” என்று சரவணன் பீர் பாட்டிலை திறந்து கொண்டே கேட்க..

“தெரியல .. அவளை பொண்ணு பார்க்க போனேன் .. அவ அங்க இருக்கிற பிரச்சனையை சொல்லி அழுதா .. அவளுக்கு உதவி பண்ணனும்னு யோசிச்சப்போ இப்படி பண்ணலாம்னு தோணுச்சு .. சொன்னேன் அவளும் சரின்னு சொன்னா .. ஆனா இப்படிலாம் ஆகும்னு நானும் நினைக்கல” என்றான் .

“எனக்கு தெரியும் .. நான் வேற கோபத்துல தான் செந்தமிழை காயப்படுத்துறேன்னு .. கோபத்துல எல்லாத்தையும் பண்ண பிறகு தான் தெரியுது நான் இவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு .. அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு .. தேவையில்லாம அவ மேல கோபப்பட்டு .. அவளை கஷ்டப்படுத்தி .. அதுக்கு பிறகு அதையும் யோசிச்சு குற்ற உணர்ச்சியில நான் இன்னும் அவளை அதிகமா கஷ்டப்படுத்திட்டேன்”  என்று இளமாறன் சொல்லிக் கொண்டிருக்க ..

“இந்தா குடி..” என்று ஒரு பாட்டிலை அவனிடமும் இனியனிடமும் தந்த சரவணன் .. “மச்சான் தெரியாம கல்யாணம் பண்ணிட்ட .. இன்னும் கொஞ்ச மாசத்துல குழந்தையும் பிறந்திடும் .. அந்த குழந்தை நிலைமையை யோசிச்சு பாரு .. உனக்கு குழந்தை பத்தி யோசனையே இல்லையா .. இல்ல குழந்தை உன்னோடது தானான்னு யோசிக்கிறியா??” என்று புருவம் உயர்த்தி யோசனையாய் கேட்க .. இளமாறன் பதறினான் .

“அதெல்லாம் இல்ல மச்சான் .. அன்னைக்கு கோபத்துல அப்படி தெரியாம பேசிட்டேன்” என்று இளமாறன் சொல்ல .. “அப்போ சரி இப்போ செந்தமிழை குழந்தையை என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்க” என்று இனியன் கேட்க .. அவன் பதில் சொல்ல தடுமாறினான் .

“இங்க பாரு மச்சான் .. செந்தமிழ் மாதிரி ஒரு நல்ல பொண்ணு உன்னை மனசார விரும்புற பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் .. ஒரு நிமிஷம் இதை கேளு” என்றவாறு இனியன் அவன் மொபைலில் இருந்த ரெக்கார்டரை போட ..

ஞாயிற்றுக் கிழமை செந்தமிழ் பேசிய அத்தனையும் .. அவளுக்கு தெரியாமல் ரெக்கார்டு செய்து வைத்திருந்தான் இனியன் ..

“அண்ணா .. நீங்க அவர் கிட்ட எப்பவும் போல பேசுங்க … அவருக்கு என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டு சரி பண்ணுங்க .. என்னை பத்தி எதுவும் பேச வேணாம் .. இனிமேல் பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல .. எனக்கு தெரியும் அவர் மனசுல நான் இல்ல .. அவர் என்னை நேசிச்சிருந்தா அவ்வளவு தூரம் பேசி காயப்படுத்தியிருக்க மாட்டார் ..

நான் கல்யாணம் ஆகி வந்த நாள்ல இருந்து பார்த்துட்டு தான இருக்கேன் .. அவர் என்னை பார்த்து சிரிச்சதில்ல .. முகம் கொடுத்து சரியா பேசுனதில்ல .. என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் கண்ணுல வெறுப்பும் கோபமும் தான் தெரியும் .. நான் அவர் கண்ணுல ஒரே ஒரு தடவை தான் காதலை பார்த்தேன் .. அப்புறம் தான் தெரிஞ்சது அதுவும் எனக்கான காதல் இல்லனு ..

ரெண்டு பேரும் மனசு ஒத்துகிட்டு வாழறதுக்கு பேர் தான் வாழ்க்கை .. உங்களுக்காக , அம்மாவுக்காக , எங்க குழந்தைக்காக அவருக்கு பிடிக்காம என் கூட வாழ்ந்து .. அவர் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தி எதுக்கு இதெல்லாம் .. என்னால முடிஞ்ச அளவு என் குழந்தையை சந்தோஷமா பார்த்துக்க முடியும்னு நினைக்கிறேன் .. நீங்க எனக்கு பாதுகாப்பா இருக்கீங்க .. இதெல்லாம் போதும் மிச்சம் இருக்க வாழ்க்கையை வாழ்ந்துடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ..

எனக்கு என்னோட இளா சந்தோஷமா இருந்தா போதும் .. அவர் மன நிம்மதியோட இருந்தா போதும் .. என்னால நீங்களும் ரேவதியும் கூட ஜாலியா இருக்கது இல்ல .. சந்தோஷமா பேசிக்கிறது இல்ல .. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க .. நான் சந்தோஷமா தான் இருக்கேன்” .. என்று சொன்னவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் .

இளமாறனுக்கு இதெல்லாம் கேட்க வியப்பாக இருந்தது .. செந்தமிழ் அவனை பற்றி இவ்வளவு யோசிப்பாள் .. இவ்வளவு பேசுவாள் என்று அவனுக்கு தெரியாது .. அன்று ஃபேக்டரி யில் ரேவதியிடம் செந்தமிழ் பேசியதையும் இனியன் அவனிடம் சொன்னான் .

“சொல்லு இளமாறா என்ன பண்ணலாம்?? நாங்க செந்தமிழுக்காக மட்டும் உன்கிட்ட பேசல .. நீ எங்களோட ஃப்ரெண்ட் .. நீ எப்படியோ இருன்னு எங்களால சும்மா இருக்க முடியாது .. உன்னோட சந்தோஷத்துக்காக தான் பேசுறோம்” என்று சரவணன் சொல்ல .. அவன் அமைதியாக இருந்தான் .

அவனிடம் எந்த பதிலும் இல்லை .. அவன் என்ன யோசிக்கிறான் என்பதையும் இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .. “செந்தமிழ் சொன்ன மாதிரி அவ உன் மனசுல இல்லன்னு தான் நாங்க நினைக்கிறோம் .. உன்னால அவளோட காதலை புரிஞ்சுக்க முடியலன்னு நினைக்கிறோம் .. நீ செந்தமிழ் கிட்ட .. அவ உன்னை எப்போ முதன்முதல்ல பார்த்தா அப்படின்னு போய் கேளு” என்றான் இனியன் ..

“நான் அவளை பொண்ணு பார்க்க போனப்போ தான் அவ என்னை முதன்முதல்ல பார்த்தா” என்று இளமாறன் சொல்ல .. “நீ போய் கேளு மச்சான் .. சரி வா கிளம்பலாம்” என்று இனியன் சொல்ல .. மூன்று பேரும் அவர்கள் குடித்து காலியான பீர் பாட்டில்களை ஒரு பையில் போட்டு கார் டிக்கியில் வைத்து விட்டு கிளம்பினார்கள் .

வீட்டிற்கு சென்ற இளமாறன் அவன் அறைக்கு சென்று பார்த்தால் .. செந்தமிழ் கீழே படுத்து தலை வரை போர்வை போர்த்தி தூங்கி கொண்டிருந்தாள் .. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தவன் .. அவள் முகத்தில் இருந்த போர்வையை விலக்கி “தமிழ் .. தமிழ் ..” என்று அழைத்தான் .. அவள் அசந்து தூங்கிக் கொண்டிருக்க அவள் தோளை பிடித்து “தமிழ் ..” என்று உலுக்கி எழுப்பினான் .

அவள் தூக்கத்திலேயே “என்ன??” என்றாள் .. “தமிழ் தூங்குறியா??” என்று அவன் கேட்க .. “தூங்குறவளை எழுப்பி தூங்குறியான்னு கேட்கிறீங்க .. உங்களுக்கு என்ன தான் வேணும்??” என்றாள் சலிப்பாக .

“நீ என்னை எப்போ முதன்முதல்ல பார்த்த??” என்று அவன் கேட்க .. “நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ தான் பார்த்தேன்” கண்கள் திறக்காமலே பதில் சொன்னாள் .. “நல்லா யோசிச்சு சொல்லு .. நீ என்னை எப்போ முதன்முதல்ல பார்த்த??” என்று அவன் மீண்டும் அவள் தோளை பற்றி உலுக்கி கேட்க ..  “அய்யோ .. உங்களுக்கு என்னதான் பிரச்சன” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவள் அவனை கோபமாக முறைத்தாள் .

“என்ன கேட்டீங்க??” என்று செந்தமிழ் கேட்க .. “நீ என்னை எப்போ முதன்முதல்ல பார்த்த??” என்று மீண்டும் கேட்டான் .. “என்ன திடீர்னு கேட்கிறீங்க .. குடிச்சிட்டு வந்துருக்கீங்களா .. போய் பேசாம தூங்குங்க” என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி மறுபடியும் திரும்பி படுத்து கொண்டாள் .

இளமாறன் செந்தமிழுக்கு அருகில் படுத்துக் கொண்டு அவள் இடை மேல் கையை போட்டு .. அவளை அணைத்துக் கொண்டே படுக்க அவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் .. “ஏன் என்னாச்சு??” என்று அவனும் எழுந்து உட்கார .. “ம்ச் .. அர்த்த ராத்திரியில வந்து ஏன் என் தூக்கத்தை கெடுக்குறீங்க ?? நான் காலைல ஃபேக்டரிக்கு வேற போகணும்” என்று புலம்பினாள் .

“நீ என்னை எப்போ முதன்முதல்ல பார்த்த ??” என்று தேய்ந்த ரெக்கார்டு போல கேட்டதையே அவன் திரும்ப கேட்க .. “உங்களை ஒரு ஹாஸ்பிடல்ல தான் முதன்முதல்ல பார்த்தேன்” என்றாள் .

“எந்த ஹாஸ்பிடல்ல ?? எப்போ ??” என்று அவன் அதிர்ச்சியாக கேட்க .. “இனியன் அண்ணாவோட அப்பா இறந்தப்போ அந்த ஹாஸ்பிடல்ல உங்களை நான் பார்த்தேன் போதுமா .. பேசாம எழுந்து போய் தூங்குங்க ” என்று சொன்னாள் .. “அய்யோ .. எனக்கு ஒண்ணும் புரியல முழுசா சொல்லு” என்று அவன் குழப்பமாக கேட்க .. செந்தமிழ் இளமாறனை முதன்முதலாக பார்த்த கதையை சொன்னாள் .

அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நாம ஃப்ளாஷ்பேக் போய் பார்க்கலாம் …….

சென்னை பக்கமே வராத செந்தமிழ் .. சித்தியின் அண்ணனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதால் அவளுடைய சித்தி வீட்டை விட்டு அவளை அடித்து துரத்தியிருக்க .. ரேவதி வீட்டில் அப்போது தஞ்சம் புகுந்திருந்தாள் .

அன்று ரேவதியும் செந்தமிழும் ரேவதியின் அம்மாவை ஒரு கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக அழைத்து சென்றிருந்தார்கள் .

அம்மாவுக்கு டெஸ்ட்கள் எடுக்க இருவரும் .. ஒவ்வொரு கட்டிடமாக அலைந்து கொண்டிருக்க .. அப்போது அங்கு ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தது .. ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்க .. அந்த இடத்தில் இருந்த எல்லோரும் அந்த பிரச்சனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .. இவர்களும் அங்கு நின்று பார்க்க ..

இனியன் ஸ்ட்ரெச்சரில் இருந்த ஒருவர் உடலை பார்த்து “அப்பா .. ” என்று அழுது கொண்டிருந்தான் .. “இனியா .. இப்பவே எனக்கு சொத்து பிரிச்சாகணும் .. அப்பா பேர்ல நிறைய கடன் இருக்கு .. நான் அந்த கடனை அடைச்சுக்கிறேன் .. நான் குடும்பத்தோட இருக்கேன் .. வீடு எனக்கு வேணும் .. அதுக்காக உன்னை அப்படியே விட்டுட மாட்டேன் .. உனக்கும் கொஞ்சம் பங்கு தர்றேன் .. இப்போ இந்த பத்திரத்துல கையெழுத்து போடு” என்று இனியனுக்கு அருகில் நின்றிருந்த அந்த ஆசாமி சொல்ல ..

இனியன் கண்ணீரோடு அவனை கோபமாக பார்த்தான் .. “நம்மளை கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா செத்து போயிட்டாரு .. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவருக்கு கடைசி காரியங்களை செஞ்சு அவரை நிம்மதியா வழி அனுப்பாம .. இங்க வந்து இதை பேசிட்டு இருக்க ..” என்று இனியன் கோபத்தில் கத்தினான் .

“ஒரு வருஷமா படுக்கையில கிடந்து நம்ம உயிரை வாங்கிட்டார் .. சனியன் இப்போவாச்சும் விட்டு தொலஞ்சதுன்னு சந்தோஷப்படுறத விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்க..” என்று அந்த ஆசாமி சொல்ல .. “அவர் நம்மள வளர்த்து படிக்க வைக்க எவ்ளோ கஷ்டப்பட்டார் .. நீ ஏன் டா இப்படிலாம் பேசுற” என்று கோபமாக கேட்ட இனியன் .. அந்த ஆசாமியை பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தான் .

காதலாய் வருவாள் 💞 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சுற்றியிருக்கும் பலரும் அவனது குறையை சொல்லிக்காட்டும் போது பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போனவன், தனக்கானவள் என்று நினைத்தவளும் தனது குறையை சுட்டிக்காட்டி பேசவும் தன் மேல் நம்பிக்கை இழந்துவிட்டான்.

    ஒருவேளை தான் அப்படிதானோ? என்று தன்மீதே கழிவிரக்கம்.

    தமிழ் அவளது பிரச்சனையை கூறவும் அவன் சூழ்நிலையையும் யோசித்து திருமணம் செய்திருக்கின்றான்.

    மனதினில் தனக்கு ஒரு சாதாரண திருமண வாழ்க்கை சாத்தியப்படாது என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது தான் அவனது பிரச்சினை.

    அவள் தன்னை நேசத்தால் நெருங்கினாலும், தன் மனம் அவளை நெருங்கினாலும் இயலாமையில் கோபம் கொண்டு அவளை வதைத்து, அந்த குற்றயுணர்வில் எழும் ஆதங்கத்தில் மீண்டும் அவளையே காயப்படுத்தி என செய்திருக்கின்றான்.

    1. Author

      ஆமாம் சகி .. சரியா சொல்றீங்க.. சரியான புரிதலோட உங்க விரிவான கருத்துகள் எல்லாமே ரொம்ப அழகு .. மிக்க நன்றி