Loading

ஆபீஸில் இருந்து வீட்டிற்கு சென்ற இளமாறன் .. அறையை பூட்டிக் கொண்டு கீழே முட்டி போட்டு விழுந்து கதறி அழுதான் .. உயிர்வலி உணர்ந்தான் .. பித்து பிடித்தவன் போல் இருந்தான் .. இனியன் வேகமாக அவனை தேடி வீட்டிற்கு வந்து விட்டான் .

இளமாறன் ப்ரொபோஸ் செய்ய போகிறான் என்று இனியனுக்கு தெரியும் .. ஆனால் நிரஞ்சனா இப்படி செய்வாள் .. அவனை காயப்படுத்துவாள் என்று இனியனும் நினைக்கவில்லை ..

“இளமாறா..” என்று இனியன் அவன் அறைக் கதவை தட்டினான் .. அவன் கதறல் சத்தம் கேட்க .. பயந்து போனவன் கடைக்கு சென்றிருந்த புனிதவதியை போன் செய்து அழைத்தான் .

புனிதா வந்ததும் இனியன் நடந்ததை சொன்னான் .. மகனின் கதறலை கேட்டு அவரும் துடித்து போனார் .. “இளமாறா உன் புனிதாம்மா கூப்பிடுறேன்ல .. கதவை திற” என்று அவர் அழைக்க .. அப்போதும் அவன் வெளியே வரவில்லை ..

இனியனுக்கும் புனிதவதிக்கும் .. அவன் ஏதாவது செய்து கொள்வானோ என்ற பயம் வேறு .. கதவை தட்டிக் கொண்டே இருந்தார்கள் ..

அழுது அழுது ஓய்ந்து போனவன் கதவை திறந்து வெளியே வந்தான் .. அவன் தாயை அணைத்துக் கொண்டான் .. அவர் மடியில் படுத்துக் கொண்டவன் .. “புனிதாம்மா நான் இப்படி பிறந்தது என்னோட தப்பா .. நான் வேற என்ன தப்புமா பண்ணேன் .. நான் காதலிக்க கூடாதா” என்று அழுது கொண்டே கேட்க .. மகனை நினைத்து அவரும் உடைந்து அழுதார் .

இளமாறன் பிறந்ததில் இருந்து அவன் அப்பா , அவர்களை சுற்றியிருந்தவர்கள் பேசிய பேச்சில் புனிதவதி இதுபோல் நிறைய கதறி அழுது இருக்கிறார் .. நாளடைவில் இறுகி போய் அந்த பேச்சுகளை கடந்து செல்ல பழகினார் .. ஆனாலும் அவ்வப்போது மகனை நினைத்து கவலைகள் வரும்போது அவனிடம் வெளிக் காட்டாமல் அழுது கொள்வார் .

இளமாறன் பள்ளி கல்லூரிகளில் இதுவரை கேட்காத கேலிப்பேச்சுகள் இல்லை .. உடனிருக்கும் நண்பர்களே அவன் முன்னால் அவன் குறையை கிண்டலாக பேசும்போது .. அவன் சிரித்துக் கொண்டே கடந்து சென்று விடுவான் .. ஆனால் தாய்க்கு தெரியாமல் அவனும் உள்ளுக்குள் நிறைய அழுதான் .. வெளியே சொல்லாத நிறைய வலிகள் வைத்திருந்தான் ..

நிரஞ்சனா கேட்ட அந்த ஒற்றை கேள்வி அவன் வாழ்க்கையை திருப்பி போட்டது .. அவனை நிறைய யோசிக்க வைத்தது .. ஒருவேளை அவள் சொன்னது உண்மையோ என்று கூட யோசித்து பார்த்தான் .. சரியாக சாப்பிடாமல் .. தூங்காமல் .. யாரிடமும் பேசாமல் இரண்டு நாட்கள் நிறைய யோசித்தான் .. அழுதான் .. இனியனும் அவன் அம்மாவும் அவனுக்கு ஆறுதலாக இருந்தார்கள் ..

“பேசாமல் செத்து விடலாமா?!” என்று கூட நினைத்தான் .. நினைத்த மாத்திரத்தில் மரணம் வந்து விட்டால் தான் பரவாயில்லையே .. காதல் கல்யாணம் என்ற வார்த்தைகளை கூட வெறுத்தான் .. இனி ஒரு பெண் அவன் வாழ்வில் தேவையில்லை என்று அவனுக்கு தோன்றியது ..

ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க கூடாது என்று முடிவுக்கு வந்தவன் வைராக்கியமாக ஆபீஸுக்கு சென்றான் .. அவன் எதை பற்றியும் யோசிக்காமல் வேலையை பார்த்தான் .. பிசினஸ் ஆரம்பித்து உழைத்து வாழலாம் .. அப்படியே காலத்தை கடத்தலாம் என்று முடிவு செய்தான் .

புனிதவதி அவன் மனதில் உள்ளதை புரிந்து கொண்டார் .. மகனின் வளர்ச்சிக்காக , மகிழ்ச்சிக்காக எப்போதோ அவர் அவனுடைய பிசினஸ்காக பணத்தை கொடுத்திருக்க முடியும் .. ஆனால் இதையே சாக்காக வைத்து மகனுக்கு இல்வாழ்க்கை அமைத்து தந்து விட நினைத்தார் .. அதனால் தான் அந்த கண்டிஷனை போட்டார்.

இளமாறன் நிரஞ்சனாவையும் .. அவள் மேல் அவனுக்கிருந்த காதலையும் எப்போதோ தூக்கி எறிந்து விட்டான் .. அவன் பேசாமல் ஆபீஸுக்கு சென்று வேலைகள் பார்க்க .. அவனுடன் வேலை பார்ப்பவர்கள் சும்மா இருப்பதில்லை .. அன்று நடந்த விஷயங்களை ஞாபகப்படுத்தி கேலி செய்தார்கள் .. அவனை காயமாக்கி கொண்டே இருந்தார்கள் .. அவனும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான் ..

நிரஞ்சனா வும் அவ்வப்போது அவனிடம் வந்து .. அவள் செய்தது சரி என்பதை அவனுக்கு நிரூபிக்கிறேன் என்று எதையாவது பேசி .. அவன் மனதில் இருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி விடுவாள் .. பதிலுக்கு அவளிடம் கோபமாக பேசினாலும் .. அதையும் அவள் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் தான் அவன் பேசுகிறான் என்று சொன்னார்கள் ..

அவனுக்கு அங்கு வேலை செய்வது நிறைய மன அழுத்தத்தை தந்தாலும் .. பிசினஸ் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு பொறுமையாக இருந்தான் .. அதன் பிறகு தான் செந்தமிழை பெண் பார்க்க சென்றது .. அவளை திருமணம் செய்தது எல்லாம் .

நிரஞ்சனாவால் இளமாறன் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று இனியனுக்கு தெரியும் .. ஆனால் அவன் திருமண விஷயத்தில் இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டிருப்பான் .. செந்தமிழிடம் அவன் கோபத்தை காட்டுவான் என்று இனியன் எதிர்பார்க்கவில்லை ..

அவனுக்கு இளமாறனை நினைக்கும் போது வருத்தமாக இருந்தாலும் .. அவன் செந்தமிழுக்கு செய்தது பெரும் பாவமாக தான் தோன்றியது .. இத்தனை வருட நட்பில் இளமாறன் யாரையும் மனம் நோகும்படி பேசி பார்த்ததில்லை .. ஆபீஸில் வேலையில் தவறுகள் நடக்கும் போது கூட அவன் கண்டிப்பில் மென்மை இருக்கும் ..

இளமாறன் வாழ்வில் கடந்து வந்த வலிகளால் யாரையும் காயப்படுத்த விரும்பாதவன் .. நிரஞ்சனா பிரச்சனைக்கு பிறகு கொஞ்சம் அவனுக்கு கோபம் அதிகமாக வருகிறது .. தன்னையே தாழ்த்தி நிறைய பேச ஆரம்பித்தான் என்று நினைத்த இனியன் .. அவன் இவ்வளவு தூரம் செந்தமிழை கஷ்டப்படுத்தி இருப்பான் .. தரம் கெட்ட வார்த்தைகள் பேசுவான் .. அவளை அடிப்பான் என்று நினைக்கவில்லை ..

“அந்த பிரச்சனைக்கு பிறகு ரொம்ப நாள் ஒருமாதிரி இருந்தவன் .. உன்னை பொண்ணு பார்த்துட்டு வந்த பிறகு கொஞ்சம் நல்லா இருந்தான் .. மறுபடியும் சிரிச்ச முகமா மலர்ச்சியா சுத்தினான் .. உங்க கல்யாணத்தப்போ கூட உன்னை ரசிச்சு அவன் காதலா பார்த்த மாதிரி தான் இருந்தது .. நிரஞ்சானாவை கூட அவன் அப்படி பார்த்து நான் பார்த்ததில்ல ..

அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல .. நாங்க பேசிப் பார்க்கிறோம் தமிழ் .. உனக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காக பேசி தான் ஆகணும் .. நீ எவ்ளோ நாள் குழந்தையை வச்சுக்கிட்டு தனியா இருக்க முடியும் .. எதுக்கு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கணும் .. இளமாறன் அவ்வளவு தப்பானவன் இல்லை” என்று இனியன் சொல்லி முடித்து செந்தமிழ் பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தான் ..

அவளோ கண்கள் நிறைந்து கண்ணீர் சிந்தி .. அதில் கன்னங்கள் நனைந்து .. அதுவும் இல்லாமல் கண்ணீரில் உட்கார்ந்திருந்தவள் மடியும் நனையும் அளவு அழுதிருந்தாள் ..

“என்ன செந்தமிழ் ?? என்ன ஆச்சு ??” என்று சரவணன் பதட்டமாக கேட்க .. “எனக்கு தெரியும் என் இளா நல்லவர் தான் .. நான் அவரோட நல்ல மனசை தான் ரொம்ப நேசிச்சேன் .. அந்த மனசுக்குள்ள இவ்ளோ காயம் இருக்கும்னு தெரியாம போச்சு” என்று சொன்னவளை மூன்று பேரும் திகைத்து போய் பார்த்தார்கள் ..

“உனக்கு அவன் மேல கோபம் இல்லையா .. அவன் உன்னை அடிச்சான் .. திட்டினான்” என்று இனியன் கேட்க .. “அன்னைக்கு குழந்தையை காப்பாத்திக்கணும்னு தான் அப்படிலாம் பேசினேன் .. என்னால என் இளா மேல எப்பவும் கோபப்பட முடியாது .. என்னால அவர் வலியை புரிஞ்சுக்க முடியுது .. தப்பெல்லாம் என் மேல தான் .. குழந்தை பெத்துக்கணும்னு இப்படி பண்ணியிருக்க கூடாது” என்று கண்ணீரோடு சொன்னவளை இன்னும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் ..

“சரி செந்தமிழ் .. அப்போ அவன் கிட்ட பேசி அவனுக்கு வேற என்ன பிரச்சனைன்னு கேட்டு சரி பண்ணிடலாம் .. நீ இனிமே எதுவும் கவலைப்படாத .. குழந்தை பிறந்ததும் எல்லாமே நல்லபடியா மாறிடும்” என்று அவள் அண்ணன்கள் மகிழ்ச்சியாய் அவளை பார்த்து சொல்ல ..”எனக்கு இளா வேணாம்” என்றாள் ..

“ஏன் என்னாச்சு?!” என்று இனியன் அதிர்ச்சியாக கேட்க .. செந்தமிழ் சொன்ன விஷயத்தை கேட்டு மூன்று பேரும் இன்னும் அதிர்ச்சியானார்கள் .

இரண்டு நாட்கள் கழித்து ….. இளமாறன் கம்பெனியை பூட்டி விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது அவனுக்கு அருகில் ஒரு போலீஸ் கார் வந்து நின்றது .. அதிலிருந்து இறங்கிய சரவணன் வேகமாக இளமாறனிடம் வந்தான் ..

“உன் கிட்ட கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ணனும் .. என் கூட வா” என்று சரவணன் அழைக்க .. அவன் அப்படியே நின்றிருந்தான் .. “என்ன உன்னை அடிச்சு இழுத்துட்டு போகணுமா” என்று சரவணன் நக்கலாக கேட்க .. ஒன்றும் பேசாமல் வண்டியில் ஏறினான் .

காரில் டென்ஷனில் நகம் கடித்த இளமாறன் “என்ன பிரச்சனை .. எதுக்கு இன்வெஸ்டிகேட் பண்ணனும்??” என்று கேட்க .. “ஏன் என்ன பிரச்சனைன்னு சொன்னா தான் சார் வருவீங்களோ .. உன்னைலாம் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி கை கால உடச்சா தான் .. நீ எல்லாம் சரி ஆவ” என்று கிண்டலாக சொன்னான் ..

“ஏற்கனவே எல்லாம் உடைஞ்ச மாதிரி பாதி தான் இருக்கு .. இதுல நீ வேற உடைக்கணுமா” என்று அவன் கேலி புன்னகையோடு சொல்ல .. “இப்படிலாம் பேசுற உன் வாயை தான் முதல்ல உடைக்கணும்” என்றான் சரவணன் ..

வண்டி போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் பீச் ஓரமாக போய் நின்றது .. “ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு போகாம என்னை ஏன் இங்க கூப்பிட்டு வந்திருக்க ??” என்று கொஞ்சம் திகிலோடு இளமாறன் அவனை பார்த்து கேட்க .. காரில் இருந்து இறங்கிய சரவணன் .. “இவரை ஸ்டேஷன் கூப்பிட்டு போய் விசாரிப்பாங்க .. இறங்குடா” என்று அவன் சட்டை காலரை பிடித்து கீழே இறக்கினான் .. இனியன் அங்கு ஏற்கனவே வந்து பைக்கில் சாய்ந்து நின்றிருக்க .. இளமாறன் இருவரையும் மாறி மாறி கேள்வியாய் பார்த்தான் .

இளமாறனுக்கு அருகில் வந்த இனியன் .. “உன்னை.. ” என்று இளமாறனின் ஒரு கன்னத்தில் அறைய .. சரவணன் அவன் மறு கன்னத்தில் அறைந்தான் .. அவன் அதிர்ச்சியாக நின்றிருக்க .. அவனை குனிய வைத்து இருவரும் இன்னும் நாலு அடி அடித்தார்கள் .. “எதுக்குடா அடிக்கிறீங்க .. டேய் .. சொல்லிட்டு அடிங்கடா .. நான் என்ன தப்பு பண்ணேன்” என்று இளமாறன் கத்த அவனை விட்டார்கள் ..

இனியன் அவன் சட்டை காலரை பிடித்து “நீ எந்த தப்பும் பண்ணலையா இளமாறா .. ஏன் இப்படி இருக்க .. உனக்கு என்ன பிரச்சனை டா” என்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள .. இவ்வளவு அடித்த போது கூட அழாதவன் .. அவன் வார்த்தைகளில் .. அவன் அணைப்பில் உடைந்து அழுது விட்டான் .

இளமாறன் சத்தமின்றி இனியனை அணைத்துக் கொண்டு அழுதான் .. “இளமாறா நீ ஏன் இப்படி உன்னையே கஷ்டப்படுத்திக்கிற .. உன் கால் குறையை பத்தி யார் என்ன பேசினாலும் சிரிச்சிட்டே அதை கடந்து போயிடுவ .. இப்போ நீயே உன் குறையை சொல்லி சொல்லி உன்னை ஏன் காயப்படுத்திக்கிற” என்று சரவணன் கேட்க .. அவனிடம் பதிலில்லை .. அவன் காயங்கள் அனைத்தும் .. அவன் கண்களில் கண்ணீராக பதிலாக வெளியே வந்தது .

காதலாய் வருவாள் 💞 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கேலி பேச்சுக்களை புன்னகையுடன் எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்தியவன், தான் உயிராய் நேசித்தவளது பேச்சுகளால் மீண்டும் தனக்குள் சுருண்டுகொண்டுள்ளான்.

    தமிழை திருமணம் செய்த பிறகு இயல்பாக தானே இருந்தான். அவனது சொல்லை மீறி அவள் குழந்தைக்காக என்று செய்தது அவனது தாழ்வு மனப்பான்மை மீது கல் எரிந்து மீண்டும் காயத்தை கிளறி விட்டது.

    1. Author

      ஆமாம் சகி .. இளமாறன் காயங்களோடு இருப்பது செந்தமிழுக்கு தெரியாது .. சிறுபிள்ளைத்தனமாய் அவள் பேசிய பேச்சுகளும் .. அவள் செய்த செயலும் அவனை காயப்படுத்தி விட்டன .. அதை கோபமாக மாற்றி அவனும் அவளை காயப்படுத்தி விட்டான் .. இதே காதல் கண்ணோடு பார்த்திருந்தால் இளமாறனுக்கும் தமிழின் மனதும் செயல்களும் புரிந்திருக்கலாம் ..