Loading

அன்று காலை லேட்டாக எழுந்த செந்தமிழ் .. ஃபேக்டரி பஸ் போய்விடும் என்ற அவசரத்தில்  வேக வேகமாக கிளம்பி கொண்டிருக்க .. இளமாறனும் வேகமாக ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் .. இருந்த அவசரத்தில் அறைக்குள் இருந்த இருவரும் அடிக்கடி இடித்து கொண்டார்கள் .

ஒருவழியாக கிளம்பி வந்தவள் வெளியே செல்ல .. இளமாறனை இடித்தவள் மெத்தையில் விழ .. அவளை பிடிக்கிறேன் என்று அவன் பேலன்ஸ் இல்லாமல் அவள் மேலே விழுந்து விட்டான் .

இருவருக்கும் அவர்கள் முதல் முத்தம் நினைவுக்கு வந்து விட .. இருவரும் வெட்கப் புன்னகை பூத்தார்கள் .. ((எதே ரெண்டு பேருக்கும் சண்டை இல்லையா))  என்னதான் வெளியில் முறைத்து கொண்டாலும் இருவரின் ஸ்பரிசத்தில் .. இருவராலும் மனதிற்குள் இருக்கும் காதலை மறைக்க முடியவில்லை .. ((இளமாறனுக்கும் காதலா என்னப்பா இது ))

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் .. இருவரும் ஒரு கோபமான முறைப்பை இருவருக்கும் தந்து விட்டு எழுந்து கொண்டார்கள் .

செந்தமிழ் தினமும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர .. “என்னடி அங்க சாப்பிட மாட்டேன் .. விஷம் வச்சிடுவாங்க .. அப்படி இப்படின்னு சொன்ன .. உனக்கு இப்போ பயம் போயிடுச்சா” என்று ரேவதி கேட்க .. “விஷம் வச்சா வச்சுட்டு போறாங்க .. நான் மட்டும் வாழ்ந்து என்ன பண்ண போறேன்” என்று விரக்தியாக பேசினாள் அவள் ..

“உனக்கு இளமாறன் அண்ணன் மேல கோபமில்லை யா??” என்று ரேவதி கேட்க ..

“ஹ்ம்ம் .. உனக்கு தான் தெரியுமே .. அவரை பார்த்த நாள்ல இருந்து நான் அவரை நேசிக்க ஆரம்பிச்சேன் .. ஏதோ அன்னைக்கு அவர் குழந்தை விஷயத்துல கண்டபடி பேசிட்டாருன்னு கோபம் வந்துடுச்சு அவ்வளவுதான் .. நானும் கோபத்துல அவ்வளவு தூரம் பேசியிருக்கக் கூடாது .. குழந்தை விஷயத்துல நான் யோசிச்சு பண்ணியிருக்கணும் .. அவருக்கு பிடிக்காத விஷயத்தை நான் செஞ்சிருக்க கூடாது .. இப்போ மட்டும் இல்ல எப்பவும் நான் அவரை நேசிப்பேன்” என்று அழுதாள் .

“அப்போ குழந்தை பிறந்த பிறகு அண்ணன் கூடவே இருக்க போறியா” என்று ரேவதி கேட்க ..

“இல்லடி .. என் மனசுல மட்டும் அவர் இருந்தா போதுமா .. அவர் மனசுலையும் நான் இருக்க வேண்டாமா .. அவர் மனசுல சுத்தமா நான் இல்ல .. அவர் நிரஞ்சனான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கார் போல .. அந்த பொண்ணு மேல அவர் எவ்ளோ காதல் வச்சுருக்கார்னு என்னால உணர முடியுது ..

அவரால இன்னும் அவங்களை மறக்க முடியல .. அதான் மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப்படுறார் போல .. அவங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல .. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல .. நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல .. அவர் அவங்களையே கல்யாணம் பண்ணிக்கட்டும் ..

நான் எந்த நம்பிக்கையில இந்த குழந்தையை சுமக்கிறேன்னு எனக்கே தெரியல .. வீட்டை விட்டு வெளில வந்த பிறகு என்னால இந்த குழந்தையை பார்த்துக்க முடியுமா ?? வளர்க்க முடியுமா ?? பேசாம நானும் என் குழந்தையும் ஏதாவது அனாதை ஆசிரமத்துல போய் சேர்ந்துடனும்” என்று சொன்னாள் .

“ஏன் நாங்க இல்லையா உனக்கு … எங்களை விட்டு எங்க போகணும்னு சொல்ற .. இனி ரொம்ப நல்லவன் டி .. அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்று ரேவதி அவளுக்கு ஆறுதலாக பேச ..

“ஆமா டி .. வாழ்க்கையில எனக்கு கிடைச்ச ஒரே ஃப்ரெண்ட் சொந்தம் எல்லாம் நீ தான் .. இவ்வளவு நாளும் நீ குடுக்கிற தைரியத்துல தான் நான் உயிரோட இருக்கேன் .. அன்னைக்கு இனியன் அண்ணாவும் , சரவணன் அண்ணாவும் கொடுத்த தைரியத்துல தான் நான் இப்போ நடமாடிட்டு இருக்கேன் .. இருந்தாலும் அதுக்காக காலமெல்லாம் யாருக்கும் பாரமா இருக்கணும்னு தோணல ..

இந்த குழந்தை இல்லன்னா நான் செத்து தான் போயிருப்பேன் .. எனக்குள்ள இருக்க இந்த உயிரை அழிக்க கூடாதுன்னு தான் நான் பொறுமையா இருக்கேன் .. என்னால முடியல ரேவதி .. இவ்வளவு வருஷம் சித்தி கொடுமை அனுபவிச்சப்போ கூட வலிக்கல .. நான் இளாவை ரொம்ப நேசிச்சுட்டேன் போல .. இந்த காதல் .. கல்யாணம் .. குழந்தை .. பிரச்சனை எல்லாம் ரொம்ப வலிக்குது ..

இதையே நினைச்சு நினைச்சு எனக்கு ஏதாவது ஆகிட்டா என் குழந்தை நிலைமை என்னாகும் .. நான் தப்பு பண்ணிட்டேன் டி” என்று ரேவதி மடியில் படுத்து கொண்டு செந்தமிழ் கதறி அழுதாள் .

செந்தமிழ் தினமும் எழுந்தாள் .. சாப்பிட்டாள் .. வேலைக்கு சென்றாள் .. சுத்தமாக இளமாறன் புனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள் .. மறுபடியும் எதையோ இழந்தவள் போல் இருந்தாள் .. சில சமயம் வீட்டில் எங்கேயோ வெறிக்க பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ..

இந்த மாதம் சம்பளம் வந்ததும் செந்தமிழ் கொஞ்சம் பணம் எடுத்து புனிதாவிடம் கொண்டு போய் கொடுத்தாள் .. அவர் வாங்க மறுத்து விட .. “வாங்கிக்கோங்க .. இல்லனா உங்க மகன் சொல்ற மாதிரி நான் உங்க காசுக்காக இங்க இருக்கேங்கிற மாதிரி ஆகிடும்” என்று சொல்லியும் .. அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார் .. செந்தமிழ் அந்த பணத்தை புனிதா சேமிப்புக்காக வைத்திருக்கும் உண்டியலில் போட்டு விட்டாள் .

அந்த ஞாயிறு ….

இனியன் வீட்டில் .. “செந்தமிழ் எவ்ளோ நாளைக்கு இப்படியே இருக்க போற .. என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்க” என்று அவள் அண்ணன்கள் கேட்க .. செந்தமிழ் அமைதியாக இருந்தாள் ..

ரேவதியும் செந்தமிழும் அன்று ஃபேக்டரி யில் பேசியதை ரேவதி இனியனிடம் சொல்லி விட்டாள் .. “நடந்தது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் .. இளமாறன் கிட்ட நாங்க பேசுறோம் .. நீயும் அவனை நேசிக்கிற .. உங்களுக்கு குழந்தை பிறக்க போகுது .. அவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டு தான் பார்க்கலாம்” என்று சரவணன் சொல்ல .. செந்தமிழ் ஒன்றும் பேசாமல் கண்ணீர் விட்டாள் ..

“உனக்கு நிரஞ்சனா தான் பிரச்சனையா ??” என்று கேட்ட இனியன் .. நிரஞ்சனா யார் என்ற கதையை சொல்ல ஆரம்பித்தான் ….

இரண்டு வருடங்களுக்கு முன்பு ….. இளமாறன் வேலை செய்யும் ஆபீஸில் அவனுடைய டீமில் .. ப்ரோக்ராம் அசிஸ்டென்ட் டாக புதிதாக சேர்ந்தவள் நிரஞ்சனா .. ஆபீஸில் மற்றவர்கள் இளமாறனிடம் நெருங்க தயங்குவார்கள் .. காரணம் ஒன்று அவன் தோற்றம் .. மற்றொன்று அவன் திறமை .. அடுத்து அவன் வேலையில் கண்டிப்புடன் இருப்பவன் ..

ஆனால் நிரஞ்சனா அவனிடம் நெருங்கி பழகினாள் .. உரிமையோடு மாறா என்று பெயர் சொல்லி அழைத்தாள் .. அதன் பிறகு தான் ஆபீஸில் எல்லோரும் அவனை மாறா என்று அழைக்க ஆரம்பித்தார்கள் .. இளமாறன் அவளிடம் நட்பாக தான் பழகினான் .. நிரஞ்சனா தான் அவனை பார்த்தால் கொஞ்சி கொஞ்சி பேசினாள் .. அவனிடம் மிகவும் அக்கறையாக இருந்தாள் .

இனியனும் .. ஆபீஸில் இருக்கும் மற்ற நண்பர்களும் சேர்ந்து இதை காதல் என்று ஏற்றி விட .. அவனுக்குள்ளும் சஞ்சலம் தோன்ற ஆரம்பித்தது .. அதை உறுதிப்படுத்தும் விதமாக நிரஞ்சனா அவனிடம் தொட்டு தொட்டு பேசினாள் .. இளமாறன் கல்லூரியிலும் ஆபீஸிலும் நிறைய பெண் தோழிகளிடம் பேசி இருக்கிறான் .. அவர்கள் தொட்டு பேசினாலும் .. கிண்டலாக அடித்து பேசினாலும் எல்லாம் ஒரு லிமிட்டில் இருக்கும் .. ஆனால் நிரஞ்சனா தொடுதலில் வித்தியாசத்தை உணர்ந்தான் ..

இளமாறன் அழகானவன் .. திறமைசாலி .. எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவான் .. முக்கியமாக பெண்களை தவறான பார்வை பார்க்காதவன் .. அவன் மனம் விட்டு சிரித்தால் அந்த சிரிப்பழகில் மயங்காதவர் இருக்க முடியாது .. இது போதாதா ஒரு பெண்ணுக்கு .. நிரஞ்சனா அவனை நேசித்தாள் .. இன்னும் அவனுக்கு நெருக்கமாக நடந்து கொண்டாள் .. பேசினாள் .

இளமாறன் மெல்ல அவள் மேல் காதல் கொள்ள ஆரம்பித்தான் .. மாறாக இதை காதல் என்று தெரிந்து கொண்ட அவளுடைய ஆபீஸ் நண்பர்கள் .. அவள் நெருங்கிய தோழிகள் இது காதலுக்கு ஒத்துவரும் .. கல்யாணத்துக்கு ஒத்து வராது என்று அவன் காலில் இருக்கும் குறையை எடுத்து சொல்லி .. அவள் மனதில் இருந்த காதலை கலைக்க ஆரம்பித்தார்கள். (( மற்றவர்கள் சொன்னால் கலைந்து விடுவதன் பேர் காதல் அல்ல ))

அன்று இளமாறன் பிறந்தநாள் .. ஆசையாக ஒரு கிரீட்டிங் கார்டு .. ரோஜாப்பூ .. அதோடு ஒரு தங்க மோதிரம் வாங்கிக் கொண்டு ஆபீஸ் சென்றான் .. காலையில் சீக்கிரமாக ஆபீஸ் சென்றவன் நிரஞ்சனாவையும் சீக்கிரமாக வர சொல்லியிருந்தான் ..

“ஹே மாறா .. ஹேப்பி பர்த்டே” என்று சொல்லி கை குலுக்க நிரஞ்சனா கையை நீட்ட .. இளமாறன் அவள் கையை பிடித்து கொண்டு .. “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு .. உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் .. ஐ லவ் யூ நிரஞ்சனா .. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று சொல்லி கார்டையும் பூவையும் தர அவள் அதிர்ச்சியடைந்தாள் ..

அவள் அதை வாங்காமல் நின்றிருக்க .. நிமிர்ந்து அவள் குழப்பமான முகத்தை பார்த்தான் .. “என்னாச்சு நிரஞ்சனா .. உனக்கு விருப்பம் இல்லையா” என்று அவன் கேட்க .. “மாறா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு .. ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாது .. ரியாலிட்டிக்கு இதெல்லாம் ஒத்து வராது” என்றாள் .

அவள் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் விலகி சென்றிருப்பான் .. ஆனால் பிடிக்கும் என்று தயங்கி சொல்லும் போது அவள் மீது காதல் கொண்ட அவன் மனது அவளுக்கு தன் காதலை புரிய வைக்க முயற்சித்தது ..

“நிரஞ்சனா என் காலை நினைச்சு யோசிக்கிறியா ?? அது ஒரு பெரிய விஷயமே இல்ல .. என்னால காலம் முழுக்க உழைச்சு சம்பாரிச்சு .. உன்னை சந்தோஷமா பார்த்துக்க முடியும் .. உன் மேல நான் அவ்ளோ காதல் வச்சிருக்கேன்” என்று இளமாறன் சொல்ல ..

“பணம் லாம் பெரிய விஷயமே இல்ல மாறா .. நான் நேரடியாவே கேட்கிறேன் .. உன்னால என்னை செக்ஸ்ல திருப்திப்படுத்த முடியும்னு நினைக்கிறியா ??” என்று அவள் கேட்க .. அவன் கூனிக் குறுகி போனான் .. பெண்களை வெறும் போகப் பொருளாக பார்க்காதவன் இதை பற்றி யோசிக்கவில்லை ..

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால சந்தோஷமா இருக்க முடியும்னு தோணல .. நல்லா இருக்கவங்களுக்கே இப்போ எல்லாம் குழந்தை பிறக்கிறது கஷ்டமா இருக்கு .. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கு குழந்தை இல்லாம போயிட்டா என்ன பண்றது ??” என்று அவள் கேட்க .. அவன் முழுவதுமாக உடைந்து போய் விட்டான் .. அதற்கு மேலும் பேச முடியாமல் அவன் சீட்டிற்கு சென்று விட்டான் ..

காதலை சொல்வோம் .. அவள் சரி என்று தான் சொல்வாள் அவ்வளவுதான் என்று நினைத்து .. காலையில் ஆபீஸ் வந்ததும் பொறுமை இல்லாமல் அவளிடம் காதலை சொல்லியவன் .. அவர்களுக்குள் நடந்த உரையாடல் நீண்டு கொண்டே போக .. ஆபீஸில் இருக்கும் மற்றவர்களுக்கு இந்த நிகழ்வுகள் காட்சிப்பொருளாகி போனது .

நிரஞ்சனா ஒரே வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம் .. ஆனால் ஆபீஸில் அவனுடைய தேவை அவளுக்கு இருக்கிறது .. இவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டால் .. அதை மனதில் வைத்து கொண்டு அவன் வேலை விஷயத்தில் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தவள் .. அவள் மறுப்பதற்கான காரணம் அவன் தான் என்று .. அவன் மேல் பழியை சுமத்தி குற்ற உணர்ச்சிக்கு அவனை ஆளாக்கி விட்டாள் ..

இளமாறன் மனதில் பெரும்புயல் அடித்தாலும் அது வேலையை பாதிக்காமல் .. அமைதியாக தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான் .. ஆனால் அவர்கள் ஆபீஸில் டாக் ஆஃப் த டே இந்த பேச்சு தான் .. சில பேர் அவனுக்காக பரிதாபப் பட்டார்கள் .. சில பேர் பொறாமைப்பட்டார்கள் .. சில பேர் கேலியாக சிரித்தார்கள் .. இருந்த அவசர வேலைகளை மட்டும் முடித்தவன் .. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பி விட்டான் ..

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தமிழுக்கு மாறன் மேல் உள்ள காதல் அவன் செய்கைகளை மன்னிக்க சொல்கிறது.

    ஒப்பந்த திருமணம், அம்மா தொழில் தொடங்க பணம் தந்த பின் பிரிந்து செல்வது, கல்லூரியில் சேர்ப்பது என்று எல்லாமே மாறானது திட்டங்கள். அதனில் அவளை ஒத்துழைக்க கூறினான் அவ்வளவே.

    தமிழ் செய்த பெரிய தவறு அவன் தெளிவாக எடுத்து கூறியபிறகும் குழந்தை வேண்டி அவள் செய்த செயல் தான்.

    அதற்கு மாறனின் கோவம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் அம்மாவிடம் உண்மையை சொல்லி அவளை வெளியில் அனுப்பி இருக்கலாம்.

    அப்படி செய்யாமல் முழு பழியையும் அவள் மேல் போட்டது தான் அவன் செய்த தவறு.

    1. Author

      உங்கள் தொடர் ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி சகி .. இளமாறன் கோபத்தில் நிதானம் இழந்து பேசக்கூடாததை எல்லாம் பேசி விட்டான் .. செய்யக்கூடாததை எல்லாம் செய்து விட்டான் ..