Loading

இளமாறன் அறைக்குள் நுழைந்ததும் கதவை தாளிட்ட செந்தமிழ் அவனை ஏற இறங்க பார்த்தாள் .. “நான் இன்னைக்கே உன்னோட அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த வீட்டை விட்டு போயிருப்பேன் .. இல்ல எல்லா உண்மையும் நீ உன் வாயால சொல்லணும் .. நான் அழுத மாதிரி நீ கதறி அழனும் .. குழந்தை பிறக்குற வரைக்கும் நீ தினமும் என்னை பார்த்து எனக்கு பண்ண தப்புக்கு எல்லாம் குற்ற உணர்ச்சியில சாகணும் ..

ஒருவேளை உனக்கு நீ பண்ணது தப்பாவே தெரியலைன்னாலும் பரவாயில்ல .. இது உன் குழந்தை .. உன் குழந்தையை உன்கிட்ட பெத்து கொடுத்துட்டு நான் போயிட்டே இருப்பேன்” என்று சொன்னவள் கீழே பெட்ஷீட்டை விரித்து பேசாமல் படுத்துக் கொண்டாள் .

நேற்று எல்லாம் இளமாறன் ஆடினான் .. இன்று செந்தமிழ் அவன் மொத்த ஆட்டத்தையும் முடித்து அடக்கி வைத்து விட்டாள் .. எத்தனை நாளைக்கு கண்ணீர் சிந்தி கணவனே கண் கண்ட தெய்வம் என்று அடியும் மிதியும் வாங்குவது .. அந்த வீட்டை விட்டு கூட தனியே வெளியே செல்லாதவளை பார்த்து .. இது என் குழந்தையல்ல என்று குற்றம் சுமத்தினால் .. இளமாறன் அவளை சந்தேகப்படவில்லை .. ஆனால் கோபத்தில் அவனுக்கு மட்டும்தான் பேச வாயிருக்கிறதா .. அடிக்க கை இருக்கிறதா ..

பெண்கள் பொங்கினால் இவர்கள் என்ன ஆவார்கள் .. இளமாறன் வாழ்க்கையில் எவ்வளவு காயங்கள் கண்டிருந்தாலும் அதே காயத்தை அவளுக்கும் கொடுக்க நினைப்பது முட்டாள் சைக்கோத்தனம் .. என்னடா நானே இப்படி ஒரு ஹீரோவை எழுதிட்டு அவனை திட்டுறேன்னு நினைக்கிறீங்களா .. இருந்தாலும் பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் என் மனம் தாங்காது .. நீங்க சொல்லுங்க இளமாறனை என்ன பண்ணலாம் .. அவனுக்கு என்ன தண்டனை தரலாம் .

மறுநாள் செந்தமிழ் காலை எழுந்து குளித்து கிளம்பி வேலைக்கு சென்றாள் .. “செந்தமிழ் சாப்பிட்டு போ” என்ற புனிதாவை பார்த்து “எனக்கு வேணாங்க” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .. துணிந்து கிளம்பியவளுக்கு பசியும் .. களைப்பும் .. பஸ் நெருக்கலும் அவள் கருவை ஒன்றும் செய்து விடப் போவதில்லை .

இவ்வளவு வலியிலும் எதுவும் ஆகாத பிள்ளை இளமாறனுடையது .. சாரி செந்தமிழுடைய பிள்ளை .. ரேவதி வேலை செய்யும் ஆலையில் வேலைக்கு சேர்ந்தவள் .. ஒவ்வொரு பகுதியாக சென்று வேலையை பழகினாள் .. முதல் முறை சுதந்திர காற்று இதமாக இருந்தது .. ரேவதி அவளுக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்திருந்தாள் ..

செந்தமிழ் முகத்தில் புன்னகை இல்லை .. மலர்ச்சி இல்லை .. ஆனால் நிம்மதி இருந்தது .. ஒருவேளை கஞ்சிக்காக சித்தியிடம் வாங்கிய பேச்சுகள் அடிகள் போய் .. அதே சாப்பாட்டுக்காக கணவனிடம் டார்ச்சர் அனுபவித்து விட்டு இன்று சாப்பிடும் அளவான சோறும் அமிர்தமாக இருந்தது ..

புனிதா இளமாறனிடமும் பேசுவதில்லை .. அவனுக்காக சமைத்து வைக்கிறார் .. அந்த வீட்டில் இருந்த கலகலப்பு சுத்தமாக மறைந்து போய் விட்டது .. இளமாறன் இன்னும் ஆபீஸுக்கு சென்று கொண்டிருக்கிறான் .. அவனுடைய கம்பெனியில் ஆட்கள் வேலை செய்கிறார்கள் .. இனியன் ஆபீஸில் அவனிடம் பேசுவதில்லை .. ஏன் அவனை முகம் கொடுத்து பார்ப்பதுமில்லை .

இளமாறன் அவன் செஞ்ச தப்பை உணர்ந்தானா .. தெரிஞ்சே தப்பு செஞ்சா எப்படி உணருவான் .. ஒரே அறையில் இருந்தும் கணவனும் மனைவியும் பேசிக் கொள்வதில்லை .. ஒரே வீட்டில் இருந்தும் மாமியாரும் மருமகளும் பேசிக் கொள்வதில்லை .. செந்தமிழ் இளமாறனை எவ்வளவு நேசிக்கிறாளோ அதை விட இப்போது புனிதாவை அதிகமாக நேசிக்கிறாள் .. காரணம் அவர் காட்டிய அளவில்லா அன்பு .. அதற்காக அவள் மனம் ஏங்கி தவிக்கிறது ..

புனிதாவோ தன் ஒட்டுமொத்த நம்பிக்கைகளும் உடைந்து போன வலியில் இருக்கிறார் .. இவ்வளவு கால வாழ்வும் போராட்டமும் மகனுக்காக தான் .. ஒருபுறம் ஆசையாய் வளர்த்த மகன் ஒரு பெண்ணை காயப்படுத்தி விட்டான் .. இன்னொரு புறம் மகன் மருமகள் பேர குழந்தைகள் என அவர் கண்ட கனவு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க .. அவர் எதுவும் செய்யாமல் பார்வையாளராக மாறி விட்டார் ..

இளமாறனும் செந்தமிழும் ஒரு வார்த்தை “நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க ம்மா” என்று கேட்கவே இல்லையே என்ற ஏக்கம் புனிதாவுக்கு .

இது ஒரு தாய்க்கும் தாயாக போகிறவளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் .. இறுதியில் அன்பே வெல்லும் .. ஆனால் அதற்குள் வரும் சோதனைகளை தாங்கி எல்லோரும் மீண்டு வர வேண்டுமே .

செந்தமிழுக்கு நாட்கள் செல்ல செல்ல .. பழைய ரணங்கள் மீண்டும் வந்து மனதில் ஒட்டிக் கொள்ள .. வேலை செய்யும் போது எதையோ நினைத்து அங்கங்கே இடித்து கொண்டாள் .. கைகளில் காயம் ஆக்கி கொண்டாள் .. காயங்களோடு வாழ பழகியவளுக்கு இது பெரிய விஷயமில்லை தான் ..

ஆனால் அதை கவனித்த புனிதாவும் செந்தமிழ் சகோதரர்களும் தான் துடித்து போனார்கள் .. ஒவ்வொரு ஞாயிறும் இனியன் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள் ரேவதி , செந்தமிழ் ,  சரவணன் மூவரும் .. அங்கே சமைத்து சாப்பிட்டு விட்டு .. பேசி விட்டு .. மறுபடியும் அடுத்த வாரத்தை தொடங்குகிறார்கள் .

செந்தமிழ் இப்படி இருக்க திருமணம் பற்றி யோசிக்க முடியாமல் இருக்கிறார்கள் ரேவதியும் இனியனும் .. ஏன் காதல் மொழி பேசிக்கொள்ள கூட இருவராலும் முடியவில்லை .. அவள் வாழ்க்கை இப்படி இருக்கும் போது அவர்கள் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள் .

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கும் நண்பர்கள் தவிர உறவுகள் என்று யாரும் இல்லை .. எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் இருக்க .. ஆளுக்கு ஒரு வலியில் இருக்க எப்படி அவர்களால் திருமணம் பற்றி யோசிக்க முடியும் .. என்று நினைத்து இருவரும் விலகியே இருக்கிறார்கள் .

இனியன் இளமாறனின் சொந்த கம்பெனிக்கு செல்வதுமில்லை .. அவன் ஏன் என்று இனியனை கேட்கவுமில்லை .. வேலை .. சொந்த தொழில் என்று அவன் பிஸியாக இருந்தான் .

மதியம் மட்டும் ரேவதி சாப்பாடு கொண்டு வர .. மற்ற இரண்டு நேரங்களும் செந்தமிழுக்கு கடையில் வாங்கி தந்தார்கள் அவளது அண்ணன்கள் .. ரேவதியும் அவள் அம்மாவையும் வைத்து கொண்டு வீட்டு வேலை செய்ய வேண்டுமே .

தினமும் கடை சாப்பாடு சாப்பிட செந்தமிழுக்கு உடம்புக்கு ஒத்து கொள்ளவில்லை .. ஏற்கனவே அவ்வப்போது மசக்கை வாந்தி .. அன்று உணவு சேராமல் காலையில் இருந்து வாந்தி எடுத்து கொண்டே இருந்தாள் .. “ஹாஸ்பிடல் போகலாம்” என்று ரேவதி அழைக்க .. “இல்ல வாந்தி மாத்திரை இருக்கு” என்று அதை போட்டுக் கொண்டாள் .

வீட்டிற்கு சென்றதில் இருந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள் .. அவள் சத்தம் கேட்டு புனிதாவிற்கு மனம் பதறியது .. “என்னாச்சு” என்று அவர் கேட்க .. “தெரியல .. சாப்பிட்டது சேரல போல” என்று வாந்தி எடுத்துக் கொண்டே தான் பேசினாள் .

“இளமாறா .. செந்தமிழை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போ” என்று புனிதா சொல்ல .. திடுக்கிட்டு விழித்தவள் “எனக்கு ஒண்ணும் இல்ல” என்று பேசாமல் படுத்துக் கொண்டாள் .. கூப்பிட்டு போய் குழந்தையை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வாள் .. அவளுக்கென்று இருக்கும் ஒரே உயிர் அதுதான் .

இரவு தூக்கத்திலும் எழுந்து வாந்தி எடுத்தவள் சோர்ந்து போனாள் .. பாத்ரூமில் உட்கார்ந்து வாந்தி எடுத்தவள் எழ முடியவில்லை .. அவசரத்திற்கு யாரை அழைப்பாள் .. தொண்டை உலர வயிறு வலிக்க “அம்மா..” என்று முனகினாள் .. அங்கேயே மயங்கியும் விழுந்தாள் .

அவள் முனகியது அந்த தாய் மனதிற்கு கேட்டு விட்டது .. புனிதா இளமாறன் அறைக் கதவை தட்டினார் .. தூக்கத்தில் எழுந்து அமர்ந்து மெதுவாக கதவினை திறந்தான் .. “செந்தமிழ் எங்க?” என்று புனிதா பதட்டமாக கேட்க .. “இங்க தான் படுத்திருப்பா..” என்று அவன் கீழே கை காட்டினால் அவள் அங்கு இல்லை .

பாத்ரூம் கதவை தட்டி “செந்தமிழ் ..” என்று புனிதா அழைக்க பதிலில்லை .. இளமாறன் கொஞ்சம் ஓங்கி தட்ட பாத்ரூம் கதவு திறந்து கொண்டது .. அவள் கீழே விழுந்து கிடக்க இருவரும் அவளை தாங்கி கொண்டே தூக்கி வந்து .. வேகமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள் .

அவளுக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க .. “கடை சாப்பாடு சாப்பிட வேணாம் .. அல்சர் தான் .. வீட்டு சாப்பாடு குடுங்க .. சரியாகிடும்” என்று டாக்டர் சொல்ல நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் இருவரும் .

இருவரும் செந்தமிழை திரும்பி பார்க்க .. குழந்தை முகம் மாறாத அவள் முகத்தை பார்த்து இருவருக்கும் மனம் கலங்கி தான் போனது .. இரவு விழித்த களைப்பில் அங்கு உட்கார்ந்து கொண்டே அவர்கள் இருவரும் தூங்கி விட .. காலையில் தான் கண் விழித்தாள் செந்தமிழ் .

கண் விழித்து இளமாறனையும் ஹாஸ்பிடலையும் மாறி மாறி பார்த்தவள் பயந்து போய் எழுந்து உட்கார்ந்தாள் .. “அய்யோ என் குழந்தை .. என் குழந்தைய என்ன பண்ணீங்க” என்று இளமாறனை பார்த்து .. கண்கள் கலங்கி போய் அவள் கேட்க .. “செந்தமிழ் குழந்தைய நாங்க ஒண்ணும் பண்ணல .. நீதான் பாத்ரூம்ல மயங்கி விழுந்துட்ட” என்று புனிதா பதில் சொல்ல .. அவள் சோர்வாக நிமிர்ந்து அவரை பார்த்தாள் .

“உன் வயித்துல இருக்கிறது எங்க வீட்டு குழந்தை .. இவ்வளவு அக்கறை இருக்கிற நீ ஏன் கடையில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குற .. நான் தான் சமைக்கிறேனே சாப்பிட வேண்டியது தான” என்று புனிதா கொஞ்சம் கோபமாக சொல்ல .. அவரை ஏக்கமாக பார்த்தாள் .

அப்படியே அவள் தலையை வருடி “என்னடா பண்ணுது .. ஒண்ணும் இல்ல .. உனக்கு நான் இருக்கேன்” என்று அவர் சொல்ல மாட்டாரா என்று அவள் மனம் ஏங்கியது .. “ஏன் இவரும் அன்பு காட்டி என்னை ஏமாற்றினார்” என்று அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது .

அங்கு சரவணனும் இனியனும் வர “புனிதாம்மா நாம கிளம்பலாம் .. மேடத்தோட பாடிகார்ட்ஸ் வந்துட்டாங்க” என்று இளமாறன் நக்கலாக சொல்ல இருவரும் அவனை பார்த்து முறைத்தனர் .. “என்னாச்சுமா??” என்று அண்ணன்கள் கேட்க .. அவள் அமைதியாக அழுது கொண்டே இருந்தாள் .. புனிதாம்மா தான் நடந்ததை சொன்னார் .

“என்னை நம்புங்க இனியா .. நான் தினமும் அவளுக்கு சமைச்சு தரேன் .. அவ வயித்துல இருக்கிறது எங்க வீட்டு குழந்தை தான .. அதை நாங்க ஒண்ணும் பண்ணமாட்டோம்” என்று புனிதா சொல்ல .. இந்த பிரச்சனைகளுக்கு காரணமான கல்லுளிமங்கனோ வாயை மூடி இறுக்கமாக இருந்தான் .. செந்தமிழ் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து ரெஸ்ட் எடுத்தவள் .. மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் .

அவளுக்கு லேசாக வயிறு மேடேறி இருக்க .. அவள் போட்டிருந்த டாப்பை தூக்கி கண்ணாடியில் அவள் வயிற்றை பார்த்தவள் .. சிலிர்த்து போய் வயிற்றை கிள்ளி முத்தமிட்டாள் .. இதை அறை வாசலில் நின்று பார்த்த இளமாறன் .. பார்த்து விட்டு எந்த சலனமுமின்றி தன் வேலையை தொடர்ந்தான் .

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தமிழ் வாழ்வில் அன்பு காட்டியவர்கள் விட்டு சென்று விடுகிறார்கள் இல்லையேல் அருகில் இருந்தும் விலகியே நிற்கின்றனர்.

    அவர்கள் வீட்டு குழந்தை என்று மட்டும் சொல்லும் புனிதாமா கூட அவளை பற்றியோ அவள் மனதை பற்றியோ யோசிக்கவில்லை.

    மாறன் இவ்வளவு ஒதுக்கம் காண்பிக்க எதற்காக திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டும்.

    தன்மானம் உள்ள எவரும் மாறன் பேசிய பேச்சுக்களுக்கு உடன் இருக்க மாட்டார்கள்.

    இவன் என்ன செய்து எல்லாவற்றையும் சரி செய்ய போகின்றானோ.

    1. Author

      தமிழ் அந்த காரியத்தை செய்ததற்கான காரணமும் .. தமிழின் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிய வரும் போது .. மாறன் தெரிந்தே செய்த தவறுகளுக்கு வருந்தியாக வேண்டும் ..