Loading

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2026 தின நல்வாழ்த்துக்கள் …

ஆட்டோவில் இனியனை வீட்டில் இறக்கி விட்ட ரேவதி அவன் அழைத்ததால் அவளும் இறங்கி அவன் வீட்டிற்கு சென்றாள் … பால் இருக்கா காபி போட்டடுமா இல்ல வரக்காபி போட்டடுமா இனி என்று அவள் மெத்தையில் அமர்ந்திருந்த இனியனிடம் கேட்டுக் கொண்டிருக்க அவன் அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டான் …

குட்டிமா அன்னைக்கு நீ என்னை முதன்முதல்ல பார்த்த கதை … என் மேல காதல்ல விழுந்த கதை எல்லாம் சொன்ன … இந்த கதை எல்லாம் நீ என்கிட்ட சொல்லவே இல்ல என்று அவன் கேட்க … சொல்றதுக்கு இதென்ன சந்தோஷமான விஷயமா… நான் உங்களை காதலிப்பேன்னு நினைக்கவே இல்ல … நீங்க என் பின்னாடி வரலைன்னா … என்னை காதலிக்காம இருந்திருந்தா நீங்களும் எனக்கு ஒரு கிரஷ் கதையா ஆகியிருப்பீங்க என்று சொல்லி சிரித்தாள் …

குட்டிமா நீங்க ஏன் இன்னும் அங்கேயே இருக்கீங்க … நம்ம வீட்டுக்கு வந்துடுங்க என்று இனியன் கேட்க … அம்மா இருக்காங்க … அவங்களை எங்க தங்க வைக்கிறது என்று கேட்டாள் … ஆமா நான் மறந்துட்டேன் … நமக்கு ஏத்த மாதிரி மூணு பெட்ரூம் வீடு பார்க்கிறேன் என்று அவன் சொல்ல … நமக்கு அம்மாவுக்கு ரெண்டு பெட்ரூம் தான தேவை … எதுக்கு இனி மூணு பெட்ரூம் என்று அவள் கேட்க … அது நமக்கு பிறக்க போற குழந்தைகளுக்காக என்று சொல்லி அவள் காதுமடலை கடித்தான் …

விட்டா இப்போவே குழந்தைக்கு ரெடி பண்ணிடுவீங்க போல என்று ரேவதி சிணுங்கலாக சொல்ல … நீ சொன்னா ரெடி பண்ணிடலாம் என்று சொல்லி இனியன் அவள் இதழை தன் இதழால் கவ்விக்கொண்டான் …

இவங்க கல்யாணம் பண்ணாமலே ஜாலியா கொஞ்சிக்கிறாங்க … அவங்க கல்யாணம் பண்ணாலும் தள்ளியே இருக்காங்க … வெயிட் வெயிட் அதிசயம் ஆனால் உண்மை … இளமாறனும் செந்தமிழும் ஒட்டிக்கிட்டு இருக்காங்க … செந்தமிழை வீட்டிற்கு அழைத்து சென்றவன் அவளை சாப்பிட வைத்து … அவளுக்கு மாத்திரைகள் தந்து … அவளுக்கு உடம்பெல்லாம் மருந்தும் போட்டு விட்டு … நடுங்கி கொண்டே படுத்திருந்தவளை அவன் மார்போடு அணைத்து கொண்டான் …

அவளுக்கும் நேற்றைய அந்த காட்சிகள் மனதை உலுக்க ஒரு பாதுகாப்பும் அரவணைப்பும் தேவைப்பட்டது … அதை அவனே மனமுவந்து தர நிம்மதியாக அவன் மார்பில் சாய்ந்து கண் மூடினாள் … இரண்டு நாட்களும் குழந்தை போலவே அவளை பார்த்துக் கொண்டான் … அவன் நல்ல மனதிற்கும் … அவன் அன்பான குணத்திற்கும் தான் செந்தமிழ் அவனை காதலித்தாள் … அவனிடம் அவள் எதிர்பார்த்த காதல் கிடைக்கவில்லையென்றாலும் … அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறதே அது போதும் என்று செந்தமிழ் நினைத்துக் கொண்டாள் …

அவள் மெல்ல உடல் தேற … புனிதாம்மா டூர் முடிந்து வீடு வந்து சேர்ந்தார் … அன்று கடைசியாக செந்தமிழுக்கு நடந்த அந்த பிரச்சனை எதுவும் புனிதாம்மாக்கு தெரியக்கூடாது என்று ஐந்து பேரும் சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக உறுதி எடுத்துக் கொண்டார்கள் …

புனிதாம்மா வந்ததும் மகளை அணைத்துக் கொண்டார் … மகனுக்கும் மகளுக்கும் பிரசாதம் தந்தார் … அங்கங்கே இருக்கும் காயங்களை மறைக்க முழுக்கை போட்ட டாப்புடன் சுற்றி வந்தாள் செந்தமிழ் … புனிதா அன்றிரவு எண்ணெய் எடுத்து அவர் கைகளில் தேய்த்து கொண்டிருக்க என்னாச்சும்மா என்று அவரிடம் கேட்டாள் செந்தமிழ் …

அது ஒண்ணும் இல்லடா … குழந்தை வேலப்பர் கோவில்ல அங்க பிரதக்ஷணம் பண்ணா சீக்கிரம் குழந்தை வரம் வேண்டுதல் நிறைவேறும்னு சொன்னாங்க … பண்ணேன் … அங்கங்க லேசா எரியுது என்று அவர் சொல்ல … செந்தமிழ் அழுது கொண்டே அவர் காயங்களுக்கு எண்ணெய் வைத்து விட்டாள் …

இந்த புனிதாம்மாக்காக தான் அந்த முரடனை அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கு … இந்த அம்மாவுக்கு போய் இப்படி ஒரு பையன் என்று செந்தமிழ் நினைத்துக் கொண்டாள் … திடீர்னு நல்லவனா இருக்கான் … திடீர்னு கோபக்காரனா மாறிடுறான் … காதல் பண்ணா அவளையே கல்யாணம் பண்ண வேண்டியது தான … எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து கஷ்டப்படனும் …  என்னையும் கஷ்டப்படுத்தனும் … ஒருவேளை அம்மா தான் வேணாம்னு சொல்லிட்டாங்களோ … அன்னைக்கு அம்மாவும் நிரஞ்சனானு ஏதோ சொல்ல வந்தாங்க …

என்னமோ இளா எனக்கு சொந்தம் இல்ல … நல்லா தெரிஞ்சு போச்சு … முதல்ல இந்த வீட்டை விட்டு போனா போதும் … இளா அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும் … அவங்களே அவருக்கு குழந்தை பெத்து தரட்டும் … அவருக்கு என்னை எப்பவும் பிடிக்க போறது இல்ல என்று நினைத்து மனம் வருந்தினாள் செந்தமிழ் …

IP Software Solutions என்ற கம்பெனியின் முகப்பு பலகையை புனிதா திறந்து வைத்தார் … ஐயர் வந்து பூஜைகள் செய்ய செந்தமிழ் அங்கு குத்து விளக்கேற்றினாள் … அவனுடைய கேபினில் அம்மாவை அந்த கம்பெனி MD என்று உட்கார வைத்து அழகு பார்த்தான் இளமாறன் … நான் இல்ல உன் பொண்டாட்டி தான் இங்க MD என்று புனிதா செந்தமிழை அழைக்க … அவள் பிடிவாதமாக உட்கார மறுத்து கேபினில் இருந்து வெளியே சென்று விட்டாள் …

இளமாறனுக்கு ஒருவழியாக கம்பெனி திறந்தாச்சு … பழைய ஆபீஸில் ரிலீவ் நோட்டீஸ் கொடுத்தாச்சு … நோட்டீஸ் பீரியட் மீதமிருக்கிறது … அதுவரை ஆபீஸுக்கு செல்ல வேண்டியிருக்கும் … நினைத்தது எல்லாம் நடக்க … மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருந்தான் …

இளமாறன் , இனியன் , இன்னும் சில பேர் அவனுடைய கம்பெனியில் வேலை செய்தார்கள் … ஏற்கனவே செய்து கொண்டிருந்த ப்ராஜெக்ட்களை முடித்து தர ஆரம்பித்தார்கள் … இளமாறனும் இனியனும் பல புதிய கிளையன்டுகளை சந்தித்து புது ப்ராஜெக்ட் கள் வாங்கினார்கள் …

செந்தமிழுக்கு நிம்மதியாக இருந்தது … அந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது … அவளுக்கு அம்மாவை பிரிவது தான் வேதனையாக இருந்தது … இறுகி போனாள் … எதையோ பறிகொடுத்தவள் போல் சுற்றி வந்தாள் … எதிலும் நாட்டம் இல்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டே இருந்தாள் … வீட்டு வேலைகள் செய்வதில்லை … படுத்துக் கொண்டே இருந்தாள் …

என்னடா ஒருமாதிரி இருக்க என்று புனிதா கேட்க … ஒண்ணுமில்லம்மா என்று அசால்ட்டாக பதில் சொன்னாள் செந்தமிழ் … அவர் டெய்லர் கடைக்கு அழைத்ததற்கு அவருடன் செல்லவில்லை … இளமாறன் அவனுடைய கம்பெனியை மேற்பார்வை பார் என்று அழைத்தத்திற்கும் அவள் செல்லவில்லை … ரேவதியிடமும் அவள் மனம் விட்டு பேசுவதில்லை …

எதுக்கு இப்படி இருக்க … எதும் பிரச்சனையா ?? ஏன் அம்மா கிட்ட சகஜமா இருக்க மாட்டேங்கிற என்று இளமாறன் கேட்க … நான் தான் வீட்டை விட்டு போக போறேன்ல … நான் நெருக்கமா இருந்தா பிரியும் போது அம்மாக்கு கஷ்டமா இருக்கும் அதான் என்று செந்தமிழ் சொல்ல இளமாறன் அதிர்ந்து போனான் …

நாளைக்கு காலேஜ் கிளம்பு அட்மிஷன் போட்டுட்டு வரலாம் என்று அவன் அழைக்க … வேண்டாம் நான் படிக்கல … எனக்கு ரேவதி ஃபேக்டரில வேலை கிடைச்சிடும் … நான் போறேன் என்று பிடிவாதமாக சொன்னதையே சொன்னாள் … அம்மா கிட்ட பேசுங்க … நான் எப்போ வீட்டை விட்டு கிளம்பணும் என்று தினமும் அவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள் … அவனோ வேலை மும்முரத்திலும் புனிதாம்மா பற்றிய பயத்திலும் நாட்களை கடத்தினான் …

அன்று புனிதா வெளியே சென்றிருக்க … இனியனும் ரேவதியும் இளமாறன் வீட்டிற்கு வந்தார்கள் … எல்லோரும் சாப்பிட்டார்கள் … வழக்கம் போல் நண்பர்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து பேச … தோழிகள் இருவரும் அறையில் அமர்ந்து பேசினார்கள் …

செந்தமிழ் அன்னைக்கு அவருக்கு மருந்தை குடுத்தியா இல்லையா ?? எதும் பண்ணாரா ?? நாம அதுக்கப்புறம் சரியாவே பேச முடியல என்று ரேவதி கேட்க … ஹ்ம்ம் மருந்து கொடுத்தேன் … ஒண்ணா இருந்தோம் … ஆனா நான் ப்ரெக்னன்ட் ஆகல என்றாள் … அங்கு எதேச்சையாக வந்த இளமாறன் ப்ரெக்னன்ட் என்ற வார்த்தையை கேட்டு விட்டு என்ன மருந்து ?? யாரு ப்ரெக்னன்ட் என்று கேட்க … ரேவதி திருதிருவென விழித்தாள் …

செந்தமிழ் சொல்லு என்று அவன் குரலுயர்த்த … என்னாச்சுடா என்றவாறு வேகமாக அங்கே வந்தான் இனியன் … அது வந்து நான் தான் ரேவதி கிட்ட நமக்கு குழந்தை வேகமா பிறக்கணும்னு ஒரு நர்ஸ் கிட்ட சொல்லி மருந்து வாங்கி தர சொன்னேன் … அதை உங்களுக்கு தந்தேன் … அன்னைக்கு அதனால தான் நாம ஒண்ணா இருந்தோம் என்று சொன்ன செந்தமிழ் தலையை குனிந்து கொண்டாள் …

ஹோ அது என்ன மருந்து ?? போதை மருந்தா என்று இளமாறன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கோபமாக கேட்க … அது … அது … ஆண்மையை வீரியமாக்குற மருந்துன்னு சொன்னாங்க என்று தயங்கி கொண்டே சொன்னாள் …

ஹ்ம்ம் … நான் ஆம்பள இல்ல … எனக்கு ஆண்மை இல்ல … என்னால உனக்கு சுகம் தர முடியலைன்னு எனக்கு மருந்து கொடுத்து நீ உன் சுகத்தை ஆசையை தீர்த்துக்கிட்ட … அப்படிதான என்று அவன் கேட்க … அதெல்லாம் ஒண்ணும் இல்ல … அம்மா ரொம்ப மனசு கஷ்டப்பட்டாங்க … என்னால தாங்க முடியல … அவங்களுக்கு ஒரு குழந்தை பெத்துக் கொடுத்துட்டா சந்தோஷமா இருப்பாங்கனு நினைச்சேன் … அதான் அப்படி பண்ணேன் என்றாள்…

என் அம்மா மேல எனக்கு இல்லாத அக்கறை உனக்கு என்னடி இருக்கு … ஒருவேளை என்னால குழந்தை தர முடியலைன்னா வேற ஒருத்தன் கிட்ட இருந்து குழந்தை பெத்துகிட்டு எங்க அம்மாவை சந்தோஷப்படுத்துவியா?? என்று அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியானது ரேவதியும் இனியனும் தான் … செந்தமிழுக்கு அவன் வார்த்தைகள் எல்லாம் பழகி போய் விட்டது … அவன் பேசியே அவளை பழக்கப்படுத்தி விட்டான் …

இளமாறா என்ன இது பேசாம இருடா என்று இனியன் சொல்ல … நீ எங்க ரெண்டு பேருக்கும் இடையில வராத என்று அவனை முறைத்தான் …

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு … நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நான் சொன்னதுக்கு எல்லாம் சரி சரின்னு தலையாட்டிட்டு … என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து … இங்கேயே செட்டில் ஆகிடலாம்னு பிளான் பண்ணியிருக்க சரியா என்று இளமாறன் கோபத்தில் சிவந்த விழிகளுடன் கேட்க …

அப்போ நான் பிளான் போடுற நிலைமையில இல்ல … நீங்க போட்ட பிளான் தான எல்லாம் … நீங்களே எல்லாம் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து .. தினமும் பேசியே சாகடிக்கிறீங்க என்று அவள் கோபத்தில் பேச … அவள் பின்னங்கழுத்தை முடியோடு பிடித்திருந்தான் இளமாறன் …

டேய் விடுடா பொம்பள பிள்ளையை அடிக்கிற என்று இனியன் இளமாறனை தடுக்க …

உங்க அம்மா வரட்டும் நானே அவங்க கிட்ட உண்மையை சொல்லிட்டு … வீட்டை விட்டு போயிடுறேன் என்று செந்தமிழ் திமிராக பேச அவன் கோபம் அதிகமாகி … என்னடி மிரட்டுறியா என்று அவளை ஓங்கி அறைந்தான் … அவன் விட்ட அறையில் சுருண்டு விழுந்து விட்டாள் பெண்ணவள் …

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. காதல் தரவில்லை என்றாலும் அன்பும் அக்கறையும் தருகின்றானே என்ற எண்ணத்தினில் உடன் இருக்கின்றாள்.

    அன்பை கொட்டிவிட்டால் பிரியும் போது வலிக்கும் என்று அம்மாவிடம் இருந்து விலகி இருக்கின்றாள்.

    அம்மாவிற்காக குழந்தை பெற்று தர எடுத்த முடிவு சிறுபிள்ளைத்தனமானது.

    ஏதோ ஆர்வக்கோளாரில் ரேவதியுடன் சேர்ந்து செய்த தவறு இன்று வினையாகிவிட்டது.

    சும்மாவே சலம்புவான். இப்போ அவன் காலில் சலங்கையை வேறு கட்டிவிட்டாங்க.

    அவன் தெளிவாக சொல்லிய பிறகும் குழந்தைக்காக திட்டம் தீட்டி உள்ளனர் என்று தெரிந்தால் கோவம் வருவது இயல்பு தான்.

    1. Author

      தவறு தான் … இளமாறன் கோபத்தில் இன்னும் நிறைய செய்வான் …

  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி 🥰🥰 வாழ்த்துகள் ♥️

    1. Author

      மிக்க நன்றி சகி … பேரன்புகளும் நன்றிகளும் ♥️♥️♥️

  3. இந்த ஓட்டை வாய் பொண்ணுகளுக்கு கொஞ்சமும் அறிவில்லை. எதை எங்க வச்சு பேசணும்னு விவரமும் இல்லை. இருந்திருந்தா, அவன் வீட்டுல வச்சு பேசுவார்களா?

    1. Author

      என்னதான் இருந்தாலும் அவங்க சின்ன பொண்ணுங்க தான் அப்படின்னு நிரூபிக்கிறாங்க … இனி காலமும் பிரச்சனைகளும் தான் அவர்களை பக்குவப்படுத்தும் … ஆனா இந்த மாறனும் கெட்ட பையன் … அவனுக்கு எப்பவும் எல்லாம் கேட்டுரும் …