
இந்த 2025 வருடத்தின் கடைசி நாளில் … உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி … இந்த நாவலை தொடர்ந்து வாசித்து வரும் அன்பானவர்களுக்கு மிக்க நன்றி … தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி மதிப்பீடுகள் தருபவர்களுக்கும் … தொடர்ந்து கருத்துகள் சொல்லும் அன்பு தோழிகள் ஆனந்த ஜோதி மற்றும் பிரியா இருவருக்கும் பேரன்புகளும் நன்றிகளும் …
என்னுள் நீ காதலாய் 💞 17
ரேவதி பருவமெய்திய பின்னர் ஒருநாள் ரேவதி அப்பா வந்து அவளை அழைக்க … அவள் பாட்டி அனுப்ப மறுத்து விட்டார் … கோபத்தில் அவன் அவள் பாட்டியை அடித்து விட்டு சென்று விட … அவர் உடல்நலம் குன்றி சில வருடங்களில் இறந்தும் போனார் …
ரேவதி சென்னைக்கு பயணமானாள் … மெலிந்து நொடிந்து போயிருந்த அவள் அம்மாவை பார்த்து கலங்கி போனாள் … ரேவதி அம்மாவோ மகளுக்கு எதுவும் சொல்லாமலே கணவனின் ஆபத்தில் இருந்து அவளை பாதுகாத்து வந்தாள் … ஆனாலும் அவர் உடல்நிலை மோசமாகி கொண்டே போனது … ஒருநாள் அவள் அம்மாவுடன் பீச்சுக்கு சென்ற போது தான் சரவணன் குடும்பத்தை பார்த்தாள் … அவளுக்கும் சென்னையில் யாருமில்லை என்பதால் சரவணன் வீட்டிற்கு அடிக்கடி பஸ் ஏறி போய் அவர்களை பார்த்து விட்டு வருவாள்…
ஒருநாள் அம்மாவுக்கு மருந்து வாங்கி தருகிறேன் என்று மனைவி தூங்கும் வேளையில் … அவள் அப்பா அவளை அழைத்து ஒரு லாட்ஜுக்குள் சென்று … அங்கு அவளை ஒரு அறையில் தள்ளி விட்டு வந்தான் … ஏதோ தவறாக இருக்கிறது என்று ரேவதி நினைத்தாலும் … அப்பா வின் மீதிருந்த நம்பிக்கையால் அவனுடன் சென்றவளுக்கு தெரியவில்லை … அவன் அப்பா இல்லை ……………………… என்று ((கோடிட்ட இடங்களை கெட்ட வார்த்தைகளால் நிரப்பி கொள்ளவும்))
அவள் இருந்த அறைக்குள் பார்க்கவே முரட்டுத்தனமாய் இருக்கும் ஒரு ஆடவன் வந்து அவளிடம் அத்துமீற … அவள் பயந்து அவனை தாக்கிக் கொண்டிருக்க … அதற்குள் போலீஸ் அங்கு வந்து கதவுகளை தட்டி எல்லோரையும் இழுத்து சென்றது … ஒன்றும் தெரியாமல் அங்கிருக்கும் விலைமாதுக்களுடன் அவளும் விலைமாதுவாக நிற்க வைக்கப்பட்டாள் …
இன்ஸ்பெக்டர் சரவணன் வந்து நிற்க … அவனுக்கு முன்பு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவன் தத்தெடுத்த தங்கை ரேவதி … அவனும் என்னை தவறாக நினைத்து விடுவானோ என்று அவள் அவமானத்தில் வெந்து கொண்டிருக்க … அவள் முகத்தில் இருந்த பரிசுத்தம் … அவள் உண்மையான அன்பை அறிந்தவன் … போலீஸ் மூளையை கழற்றி விட்டு மற்றவர்களை வண்டியில் ஏற்றி விட்டு … தங்கையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான் …
வீட்டிற்குள் நுழைந்ததும் அவனிடம் நடந்ததை சொல்லி கதறி அழுதாள் ரேவதி … போ போய் குளிச்சுட்டு சாப்பிடு என்று ஆதரவாக அவள் தலையை அவன் வருட … மொத்த வலிகளும் அவளுக்கு மறந்து போனது … தீபாவும் அவளுக்கு மாற்று உடைகள் கொடுத்து … சாப்பிட வைத்து பார்த்துக் கொண்டாள் …
மறுநாள் கொஞ்சம் தெளிந்த ரேவதி அம்மாவை பார்க்க போகிறேன் என்று அழுதாள் … அன்று ரேவதி அப்பா … மகள் போலீஸிடம் மாட்டி பணம் கிடைக்காத கோபத்தில் வீட்டிற்கு சென்று … அவள் அம்மாவை அடித்து துன்புறுத்தியதில் அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் … இந்த விஷயத்தை ரேவதியிடம் சொல்லாமல் … அவளை சமாதானம் செய்து வீட்டில் இருக்க வைத்திருந்தார்கள் சரவணனும் தீபாவும் … ரேவதி அப்பாவை பிடித்து லாக்கப்புக்குள் வைத்து அடித்து லாடம் கட்டியிருந்தான் சரவணன் …
ரேவதி அப்பா ஒரு பெரிய அரசியல் புள்ளியின் தயவால் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து விட்டான் … ஆனால் இனிமேல் அவனால் ரேவதிக்கு எந்த தொந்தரவும் ஆபத்தும் இருக்க கூடாது என்று அவனை மிரட்டி அனுப்பி விட்டான் சரவணன் …
ரேவதி உடன் சரவணன் குடும்பமும் அவள் அம்மாவை பார்க்க சென்றார்கள் … ரேவதி அம்மாவிற்கு BP ஏறி வலிப்பு வந்து பக்கவாதம் வந்து விட்டது … படுத்த படுக்கையாகி விட்டார் …
சரவணன் இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்துக் கொண்டான் … ஆனால் சரவணனுடைய பெற்றோர் அங்கு வந்திருந்த போது அவர்களை பார்த்து முகம் சுழித்தார்கள் … இதனால் சரவணனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் அடிக்கடி சண்டை வர … ரேவதி பிடிவாதமாக அவனிடம் அவளுக்கு ஒரு வேலையும் … இருக்க வீடும் ஏற்பாடு செய்ய சொல்லி விட்டாள் ….
அவன் தான் ரேவதிக்கு வேலை ஏற்பாடு செய்து தந்தான் … வீடு பார்த்து அவர்களை தங்க வைத்தான் … சரவணனுக்கு காஞ்சிபுரத்துக்கு பணி மாறுதல் கிடைக்க மனைவியை டெல்லியில் விட்டு வந்தான் … அவ்வப்போது ரேவதியிடம் போனில் பேசி அவள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வான் சரவணன் … நீண்ட விடுப்பு வாங்கி மனைவியை பார்க்க டெல்லி சென்றிருந்தான் … அந்த நேரத்தில் ரேவதியின் அப்பாவெனும் மிருகம் மீண்டும் தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது … அப்போது தான் அவளுக்கும் இனியனுக்குமான காதலும் தொடங்கியுள்ளது …
தங்கள் பாசக்கதையை சரவணனும் ரேவதியும் மாறி மாறி சொல்லி முடிக்க … இளமாறனும் இனியனும் வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் … செந்தமிழுக்கு இதெல்லாம் தெரியும் … உனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் இருக்காங்கன்னு சொல்லியிருக்க அது இந்த பொண்ணு தானா என்று சரவணன் கேட்க … ஆமாங்க அண்ணா என்றாள் ரேவதி …
போலீஸுக்கு தேவையான ஆறடி உயரமும் … பயிற்சிகளில் இறுகிய அவன் கட்டுக்கோப்பான உடலும் … மாநிறத்தில் இருக்கும் அவன் முகத்தில் இருந்த கூர்மையான பார்வையும் … காக்கி உடைக்கு பொருத்தமாய் கம்பீரமான தோற்றமும் கொண்ட சரவணன் தன் அடர்த்தியான முறுக்கு மீசையை முறுக்கி கொண்டே தன் கரகரப்பான குரலில் …
இங்க பாரும்மா செந்தமிழ் … ரேவதி எனக்கு தங்கச்சின்னா நீயும் எனக்கு தங்கச்சி தான் … உனக்கு என்ன பிரச்சனை … ஏன் கோபமா வீட்டை விட்டு வந்த … இளமாறன் உன்னை ஏதும் கொடுமை பண்றானா சொல்லுமா … அவனை லாக்கப்ல வச்சு அடிச்சு திருத்தி அனுப்புறேன் என்று அவள் தலையை வருடித்தர … அவள் ஒன்றும் பேசாமல் கண்ணீர் மட்டும் விட்டாள் …
அவன் அடித்து துன்புறுத்தினால் காயத்தை காட்டலாம் … சொற்களாலே அடித்து இதயத்தை கிழிக்கிறான் … மன வலிக்கு எது மருந்து …
நான் வீட்டுக்கு போகமாட்டேன் … ரேவதி கூட போறேன் என்று மட்டும் தன் செவ்விதழ் மலர்ந்து வார்த்தைகளை உதிர்த்தாள் …
அய்யோ போச்சு … புனிதாம்மா வந்தா இவனுக்கு மட்டுமில்ல எனக்கும் திட்டு விழும் … நீ அவங்க கிட்ட சொல்லு ரேவதி என்றான் இனியன் … இனி நீங்க இதுல தலையிடாதீங்க … எங்க வீட்ல அவளுக்கு வசதி இருக்காது … பாதுகாப்பு இருக்காது … அதனால தான் இவ்ளோ நாளா நான் அவளை கூப்பிட்டு போகல … நானும் பார்க்கிறேன் கல்யாணமான நாள்ல இருந்து அவ சிரிச்ச முகத்தை நான் பார்க்கல … அவளை அழ வச்சுட்டே தான் இருக்காரு உன்னோட ஃப்ரெண்ட் என்று கடுகடுத்த முகத்துடன் பேசினாள் ரேவதி …
ஏன் இவ்ளோ கோபமா இருக்க … நீ வா நாம சாப்பிட போகலாம் … அவங்களுக்கும் வாங்கிட்டு வரலாம் என்று இனியன் ரேவதியை அழைக்க … சரவணனும் அவர்களுடன் சென்றான் …
அவர்கள் சென்றதும் செந்தமிழ் அருகில் அமர்ந்து கொண்டான் இளமாறன் … ஒன்றும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் … செந்தமிழ் என்னை மன்னிச்சிடு … இனிமே இப்படி பேசமாட்டேன் … வீட்டுக்கு வா என்று அழைத்தான் …
எத்தனை நாளைக்கு என்னை அங்க இருக்க கூப்பிடுறீங்க … அம்மா வந்தா நான் யார் கூடயாச்சும் ஓடிப் போயிட்டேன்னு கூட சொல்லுங்க என்று சொல்லி அழுதாள் …
சாரி செந்தமிழ் … ஏதோ கோபத்துல … வாழ்க்கை மேல இருக்க வெறுப்புல நான் உன்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிறேன் … உன்னை நான் ஏமாத்தணும்னு நினைக்கல … உன் வாழ்க்கையை பாழாக்கிட்டேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு … நீ என்னோட ஆசை நிறைவேற துணையா இருந்திருக்க … உனக்கு ஒரு சரியான பாதுகாப்பான வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது என்னோட பொறுப்பு …
இனிமே உன் மேல கோபப்பட மாட்டேன் … உன்கிட்ட அத்துமீறி தப்பா நடந்துக்க மாட்டேன் … அந்த நிரஞ்சனா என்னோட தவறான கடந்த கால வாழ்க்கை … அதை பத்தி பேச எதும் இல்ல … அம்மா வந்ததும் கம்பெனி திறப்பு விழா வச்சுட்டு … அவங்க கிட்ட நான் பேசுறேன் … உன்னை செட்டில் பண்ணிடுறேன் என்று அவன் சொல்லி முடிக்க … அவள் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் …
(( நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம் அப்படிங்கிற டெம்ப்ளேட் இளமாறனுக்காக இங்க போட்டுக்கோங்க )) இனிமே தான் நம்ம இளமாறன் சாரோட சிறப்பான செய்கையே இருக்கு …
நீ எனக்கு வேணாம் … நீ நான் காதலிச்ச இளா இல்ல … எனக்கு பிடிச்ச இளா இல்ல … எனக்கு உன்னை பிடிக்கவே இல்ல … நான் உன்கூட வரமாட்டேன் என்று செந்தமிழ் அவன் மார்பில் அடித்து கதறி அழுதாள் … அவன் கண்ணீரோடு அவள் தலையை கோதினான் … இறுக்கமாக அணைத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் …
இளமாறன் , செந்தமிழ் பதற்றத்தில் இருக்க … அவர்கள் இருவரும் அன்பாக பேசியதை … இருவருமே சரியாக கவனிக்கவில்லை … புரிந்து கொள்ளவில்லை … புரிந்து கொண்டால் தான் எந்த பிரச்சனையும் இல்லையே …
எனக்கு நீங்க எதுவும் பண்ண வேணாம் … அம்மா கிட்ட உண்மையை சொல்லிடுங்க … நான் எங்கேயோ போய் என்னமோ பண்ணிக்கிறேன் … எனக்கு அம்மாவை பார்க்க அப்பப்போ அனுமதி கொடுத்தா போதும் என்றவள் பயத்திலும் மன வலியிலும் அவன் மார்பில் தான் சாய்ந்திருந்தாள் …
இருவரும் அணைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து வந்த மூவரும் திகைத்து விட்டர்கள் … நான் தான் சொன்னேன்ல இது சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டை தான் … செந்தமிழ் இனிமே இவன் உன்கிட்ட சண்டை போட்டா எனக்கு போன் போடு … நான் ரெண்டு நாள் லாக்கப்ல வச்சுட்டு அனுப்புறேன் என்று அவர்களிடம் சொன்ன சரவணன் … இனியா சீக்கிரமா கல்யாண நியூஸ் சொல்லுங்க என்று இனியன் ரேவதியை பார்த்து சொன்னான் …
எனக்குனு யார் இருக்காங்க … நீங்க எல்லாரும் சேர்ந்து தான் கல்யாணம் பண்ணி வைக்கனும் … இளமாறன் புதுசா கம்பெனி ஆரம்பிக்க போறான் … ஏற்கனவே நாங்க தனியா ப்ராஜெக்ட்ஸ் பண்ணிட்டு தான் இருக்கோம் … கம்பெனி திறந்ததும் … பெண்டிங் ப்ராஜெக்ட்ஸ் முடிச்சுட்டு அடுத்து எங்க கல்யாணம் தான் என்றான் இனியன் …
ரேவதி அப்பா தான் அடிக்கடி குடித்து விட்டு அவளை பின்தொடர்ந்து வருவது … அவள் தனியாக இருந்தால் கண்டபடி பேசி அவளிடம் சண்டையிடுவது … ரோட்டில் வம்பிழுப்பது என்று கோபத்தில் அவளை அசிங்கப்படுத்தி கொண்டிருந்தான் … அந்த கேடு கெட்ட மிருகத்திற்கு தெரியவில்லை அசிங்கப்படுவது அவன் தான் என்று …
ஹ்ம்ம் … சிறப்பா உனக்கு கல்யாணத்தை பண்ணிடலாம் … நானும் அதுக்குள்ள சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுறேன் … அப்போ தான் ஃபேமிலி யை கூப்பிட்டு வர முடியும் என்று சொன்ன சரவணன் … ரேவதி உன் அப்பா என் கைல சிக்க மாட்டேங்கிறான் … நீ அவனை பார்த்தா எனக்கு தகவல் கொடு … திரும்பவும் உன்னை வந்து தொந்தரவு பண்றானா … அவனுக்கு இருக்கு என்று கைகளை முறுக்கி சொன்னவன் … நாம டாக்டரை பார்த்திட்டு கிளம்பலாம் என்று சொல்ல …
டாக்டரை பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி விட்டு … எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு கிளம்பினார்கள் … இனியன் காலில் அடிபட்டிருப்பதால் ஆட்டோவில் வந்திருந்தான் … ரேவதியும் அவனுடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள் … இளமாறன் பைக்கில் வந்திருந்தான் … செந்தமிழை ஆட்டோவில் ஏற்றி விட்டு அவன் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்தான் …
காதலாய் வருவாள் 💞
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் … மீண்டும் நாளைய புதிய நன்னாளில் சந்திக்கலாம் …
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரேவதி அவள் வாழ்வில் ஆதரவு தர வேண்டியவராலேயே வேதனை அடைந்துள்ளால்.
அவளது வலியை சிறிது மறக்க செய்து அரவணைக்க அன்பான அண்ணனின் கரங்கள் இருந்துள்ளது.
தமிழ் வாழ்வில் அவளது துயரம் என்னவென்று வெளியில் சொல்ல? மனதால் அன்பு செலுத்த ஆள் இல்லை என்றா அழ முடியும்? அப்படியே சொன்னாலும், “இதெல்லாம் ஒரு பிரச்சினையா?” என்ற பதில் தான் கிடைக்கும்.
உன் கனவு நிறைவேற உறுதுணையா இருந்தவளுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து கொடுக்க போறியா?🙄
இதுவரைக்கும் ஒடச்சதெல்லாம் பத்தாதா? இன்னும் என்ன பைத்தியக்காரத்தனம் செய்ய காத்திருக்கானோ!
அதான இன்னும் என்னெல்லாம் இந்த மாறன் பண்ண காத்திருக்கானோ 😜😜😜
கருத்துக்களுக்கு நன்றி சகி …
நல்ல அப்பாதான் ரேவதிக்கு கிடைச்சிருக்கார்.
கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை மீது அக்கறை இல்லாதவன்.
இவங்க ரெண்டு பேரும் எப்ப சரியாவார்களோ தெரியல
எப்பவும் அழுகையும், சண்டையுமா தான் இருக்கு
ரேவதிக்கு இருப்பவன் அப்பனே இல்லை …
புயலுக்கு பின் அமைதியும் … சண்டைக்கு பின் சமாதானங்களும் வரும் சகி …
கருத்துகளுக்கு மிக்க நன்றி சகி